குர்ஆனில் முரண்பாடா? – பகுதி 2

in 1987 ஏப்ரல்,அல்குர்ஆன்

  • ஒரு திருத்தம்.

சென்ற இதழில் குர்ஆனில் முரண்பாடா? பகுதி-2 ல் ஒரு பகுதி திருத்தம் செய்து கொள்ளும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

1. பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள்தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலாத்தாருக்கெல்லாம் ரப்பானவன்! என்று (நபியே!) கூறுவீராக. (41 :9)

2. அவனே, அதன் மேலிருந்து உணரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும் அதன் உணவுகளைக் கேட்போருக்குச் சமமாக (அமைய நான்கு நாட்களில் நிர்ணயித்தான். (41 : 10)

3. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும், நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள், என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (41 : 11)

4. ஆகவே இரண்டு நாட்களில் அவற்றை எழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான். ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான். இன்னும் உலகத்துக்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம். இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம். இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய கட்டளையாகும்.(41 : 12)

5. நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்து அர்ஷின் மீது தன் ஆட்சியை நிலை நாட்டினான். (7 : 54)

(மற்றும் 11 : 7, 50, 38 வசனங்களையும் பார்க்க!)

6. (அன்றி அவனே வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றியே படைத்தான் அவன் எதை (ப்படைக்கக் கருதி) முடிவு செய்தாலும் ‘ஆகுக!’ எனக் கூறிய மாத்திரத்தில் அது ஆகி விடுகிறது. (2 : 117)

(மற்றும் 6 : 73, 16 : 40, 36 : 82, 40 : 68 -ல் பார்க்க)

இந்த வசனங்களைப் பார்க்கும் போது ஒரு தெளிவின்மையே காணப்படுகின்றது. வானங்களையும், பூமியையும் (அல்குர்ஆன் 50 : 30-ன்படி) அதற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைக்க இறைவன் எடுத்துக் கொண்ட கால அளவு என்ன?

எட்டு நாட்களா?

ஆறு நாட்களா?

நினைத்த மாத்திரத்திலா?

இதற்கான விளக்கத்தை அனுப்புவதற்கான கால அளவை 20-5-87 க்குள் சரியான விடைகளை எழுதி அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பிரசுரமாகும் விளக்கம் எழுதியவருக்கு ஓராண்டு “அந்நஜாத்” வழங்கப்படும்.

அந்நஜாத்: ஏப்ரல், 1987 – ஷாஃபான், 1407

Previous post:

Next post: