அந்நஜாத் ஆகஸ்ட்2008

in 2008 ஆகஸ்ட்

 

ரஜபு – ஷஃபான் 1429

ஆகஸ்ட் 2008

 

காலத்தின் கட்டாயம்!

இன்று உலகளாவிய அளவில் அநியாயங்கள், அக்கிரமங்கள், பண்பாட்டுச் சிதைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகளான புகை, குடி, விபச்சாரம்.

சூது, லஞ்சம், கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, ஈவ்டீஸிங் என வெறுக்கப்படவேண்டிய அனைத்துக் கெட்ட செயல்களும் வரவேற்கப்படுகின்றன, வளர்க்க்பபடுகின்றன.

வியாபாரிகளிடம் பொய்,  பித்தலாட்டம், ஏமாற்று, கலப்படம், அளவையில் மோசடி, அடுத்தவனைக் கெடுத்து தான முன்னேற விரும்பல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு உரிமையில்லாதவற்றை முறை தவறி அடைதல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

அரசு அதிகாரிகளிடம் ஒழுக்கக் கேடுகள், பணியில்  முறைகேடுகள், கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை, லஞ்சம், மது, மாது, சூது, கூடாவழிகளில் சொத்து சேர்த்தல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு புற்றீசல்போல் கிளம்பும் அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும் எல்லையே இல்லை.  மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளை நியாயமின்றி சுருட்டுவதிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

ஆட்சியில் அமர்ந்திருப்போரின் அடாவடித்தனங்களுக்கு ஒரு எல்லையே இல்லை. ஆட்சியாளர்களிடமும், அரசியல்வாதிகளிடம் கொள்கை, கோட்பாடு என்று ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. மக்களை ஏமாற்றிச் சுரண்டி கோடிக்கணக்கில் பல தலைமுறைகளுக்குச் சொத்துச் சேர்ப்பதே அவர்களின் அசலான கொள்கை கோட்பாடு; அதற்கு வசதி ஏற்படுத்தித் தரும் கட்சிகளிடையே மரத்திற்து மரம் தாவும் குரங்குபோல் தாவுவதே அவர்களின் நீங்கா லட்சியம்.

ஆளும் கூட்டணி தனது பதவிக் காலத்தைத் தக்கவைத்துக் கொள்ள செய்த முயற்சிகள், குதிரை பேரம், கைமாறியதாகச் சொல்லப்படும் பல கோடிகள், அதற்காக பல்லாயிரம் கோடிகளைக் கொண்டுள்ள குபேரர்களின் தலையீடு – உதவி இவை அனைத்தையும் உன்னிப்பாகக் கவனித்தார்கள் நாடும், நாட்டு மக்களும் எங்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.

ஆம்! நாட்டு மக்கள் இன்று மனிதர்களாக இல்லை; இரண்டு கால் மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இல்லை! இல்லை!! அல்குர்ஆன் 7:179 சொல்வது போல் மிருகங்களைவிட கேடுகெட்ட நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் யார் காரணம் தெரியுமா? நாறை மறுமையில் அல்லாஹ்விடம் யார் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் தெரியுமா? ஆம்! முஸ்லிம்களே இதற்கு முழுப் பொறுப்பு ஏற்கும் நிலையில் இருக்கிறார்கள். ஏன் தெரியுமா? முஸ்லிம்களையே நடுநிலைச் சமுதாயமாக அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான். (பார்க்க 2:143). அது மட்டுமல்ல; நாளை மறுமையில் சாட்சி சொல்லும் சமுதாயமாக முஸ்லிம்களே இருக்கிறார்கள். (பார்க்க 22:78) உலக மக்களுக்கு சத்தியத்தையும், அசத்தியத்தையும் எடுத்துக் கூறி, நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து மக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது (பார்க்க 3:104,110, 103:1-3) . தூய வாழ்க்கை நெறியை – நேர்வழியை தெளிவாக, நேரடியாக எடுத்துக் கூறும் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ன் முஸ்லிம்களின் கைவசமே உள்ளது.

3:103-ல் அல்லாஹ் கட்டளையிட்டிருப்பது போல் முஸ்லிம்கள் அல்குர்ஆஐனப் பற்றிப் பிடித்து அதில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளபடி தாமும் நடந்து,  மற்றவர்களையும் அதன்படி வழிநடத்திச் செல்லக் கடமைப் பட்டிருக்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை உமாசீனம் செய்து புறக்கணித்துவிட்டு, மார்க்கத்தை கொடிய ஹராமான வழியில் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகித மவ்லவிகளை நம்பி, அவர்களின் கற்பனைச் சரக்குகளை இறைவாக்காக நம்பி, வழிகேட்டில் செல்பவர்களின் நடைமுறைகளையே இவர்கள் பின்பற்றும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் அழகிய நடைமுறைகளைப் பார்த்து, அதில் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் சாந்தி மார்க்கத்தின்பால் வருவதற்கு மாறாக, புரோகிதர்களின் துர்போதனைகள் காரணமாகவும், ஷைத்தானின் தூண்டுதலுக்கு அடிமைப்பட்டும் மாற்றார்களின் கோணல் வழிகளால் ஈர்க்கப்பட்டு வழிகேடுகளில் சென்று கொண்டிருக்கிறார்கள் முஸ்லிம்கள்.

அன்று முஸ்லிம்களின் அழகிய நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டு மற்றவர்கள் கூட்டம் கூட்டமாக சாந்தி மார்க்கம் நோக்கி வந்தார்கள். இன்றோ முஸ்லிம்கள் மற்றவர்களின்  வழிகேட்டுச் செயல்களால் ஈர்க்கப்பட்டு, அவற்றிற்கு அரபி பெயர்களைச் சூட்டி அவற்றைச் செய்வது கொண்டு வழிகேட்டில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ஆக உலக மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்கள் அதற்கு மாறாக பின்மாதிரியாகத் திகழ்கிறார்கள். இதற்குக் காரணம் முஸ்லிம்கள், மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டு செயல்படும் புரோகித மவ்லவிகளை தங்களின் வழிகாட்டிகளாக நம்பி அவர்களின் போதனைகளைக் கண்மூடி ஏற்று நடப்பதேயாகும்.

இந்த நிலை மாறவேண்டும், முஸ்லிம்கள் இந்த புரோகித மவ்லவிகளைப் புறக்கணிக்க வேண்டும். நேரடியாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடிக்க வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனில் நேர் வழியை விளக்கிப் பின் எந்தப் புரோகித மவ்லவியின் மேல் விளக்கமும் அவசியமே இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இப்படி ஒவ்வொரு முஸ்லிம் ஆணும், பெண்ணும் செயல்பட முன்வந்துவிட்டால், அல்லாஹ்வின் கட்டளைப்படி உலகிற்கு முன்மாதிரி முஸ்லிம்களாக, வழிகாட்டிகளாக ஆகிவிடுவார்கள். இன்று வீழ்ச்சி நோக்கி சென்றுகொண்டிருக்கும் உலகம் எழுச்சி பெற்று இரண்டு கால் மிருகங்களாக வாழும் மனிதர்கள் மனிதர்களாக வாழ வழி பிறக்கும்.

முஸ்லிம்கள் இன்றைய தங்களின் இழிநிலையை மாற்றிக் கொள்ள முன்வராவிட்டால், அல்லாஹ் முஸ்லிம்களின் நிலையை மாற்றி உயர்த்தப் போவதில்லை. அதற்கு மாறாக பிரிதொரு சமூகத்தை அல்லாஹ் தேர்ந்தெடுப்பான், அவர்கள் இன்றைய முஸ்லிம்கள் போல் இருக்க மாட்டார்கள்.

 “……. எந்த ஒரு சமுதாயமும், தன் நிலையை தானே மாற்றிக் கொள்ளாதவரை, அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை…” (அர்ரஃது 13:11)

“நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனம் தங்கள் மார்க்கத்திலிருந்து மாறிவிட்டால், வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள்…?     (அல்மாயிதா 5:54)

“(சத்தியத்தை நிலைநாட்ட அழைக்கப்பட்டு) நீங்கள் செல்லாவிட்டால், உங்களுக்கு மிகத் துன்புறுத்தும் வேதனையுண்டு. உங்கள் இடத்தில் மற்றவர்களை ஏற்படுத்தி விடுவான்….?   (அத்தவ்பா 9:39)

“…(அவனது கட்டளைகளை) நீங்கள் புறக்கணித்தால், நீங்கள் அல்லாத மக்களை (உங்கள் இடத்தில்) பதிலாகக் கொண்டு வருவான்; பின்னர் உங்களைப் போன்று அவர்கள் இருக்க மாட்டார்கள்.”   (முஹம்மது 47:38)

 

 

*********

    விமர்சனம்! விளக்கம்!!

நாங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் வாழும் ஜமாஅதுல் முஸ்லிமீனைச் சார்ந்தவர்கள்.

   * அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன்

   * முஹம்மது நபி அல்லாஹ்வுடைய இறுதித் தூதர்

  * குர்ஆன், சுன்னா(ஹதீஸ்) மட்டுமே இஸ்லாத்தின் அடிப்படை

   * இதை நிராகரிப்பவன் இஸ்லாத்திற்கு அப்பார்பட்டவன்

       என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் அமைப்புதான்.

ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்

      தமிழ் பேசும் மக்களிடையில் இஸ்லாத்தை அதன் தூயவடிவில் குர்ஆன சுன்னாவின் ஒளியில் எடுத்துச் சொல்லி, அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலை ஒழித்து, ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக தமிழகத்தில் துவங்கப்பட்ட முதல் அமைப்பு இதுவேயாகும்.

    அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் நேசிக்கும் அனைவரும் இந்த ஜமாஅத்துல் முஸ்லிமீனில் இணைந்து இஸ்லாமிய ஒருமைப்பாட்டை நிலைநாட்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

இவண்

ஜம்யிய்யது அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்

தமிழ்நாடு.

    இது ஜாக் ஜமாஅத்தினரின் அல்ஜன்னத் மாத இதழில் இடம்பெற்ற அறிவிப்பாகும்.

    இந்த அறிவிப்பின் மூலம் அவர்கள் நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்ற ஒன்றுபட்ட ஜமாஅத்தான ஜமாஅத் அல் முஸ்லிமீன் பக்கம் அழைக்கிறார்களா? அல்லது 1988-ல் அவர்களின் கற்பனையில் உருவான பிரிவு ஜமாஅத் ஜாக்கின் பால் அழைக்கிறார்களா? புரிய முடியவில்லை. அவர்களின் உண்மையான நோக்கம் என்ன?      சையது இப்றாஹீம், திருச்சி.

விளக்கம் :

நாம் சென்ற இதழில் எழுதியது போல் ததஜவினரைவிட ஜாக்கினர் இறையச்சம் உடையவர்கள். உண்மைகள் அவர்களது உள்ளத்தைத் தொடத்தான் செய்யும். அதன் பிரதிபலிப்புதான் மேற்படி அறிவிப்பு. என’ன இருந்தாலும் சுமார் 20 வருட பாசம் அவர்களுக்கு நெருடலாகத்தானே இருக்கும்.

உதாரணமாக ஒரு பெற்றோரின் பெற்ற மகன் காணாமல் போய்விட்டான். பிள்ளை பாசம் காரணமாக ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்த்து வந்தார்கள். தங்களின் எல்லை மீறிய பாசத்தை அந்த வளர்ப்பு மகன்மீது சொரிந்து வந்தார்கள். இந்த நிலையில் காணாமல்போன பெற்ற மகன் 20 வருடங்களுக்குப் பின் கிடைத்துவிட்டான். அப்போது அந்த பெற்றோரின் மனநிலை எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். நீண்ட 20 வருடங்களாகப் பிரிந்து இருந்ததால் பெற்ற மகன்மீது பாசம் ஏற்பட்டாலும், கடந்த 20 வருடங்களாக வளர்ப்பு மகனுடன் தினசரி இருந்து வந்த நெருக்கம். ஒட்டி உறவாடியதால் ஏற்பட்டுள்ள பாசப் பிணைப்பு உறுதியாகத்தான் இருக்கும்.

கடந்த 20 வருடங்களாக அந்த வளர்ப்பு மகன்மீது சொரிந்த எல்லை மீறிய பாசம் அவர்களை தடுமாற வைக்கத்தான் செய்யும். ஆயினும் வளர்ப்பு மகன் ஒருபோதும் பெற்ற மகன் ஆகமாட்டான்; வாரிசாகவும் மாட்டான் என்பது அல்குர்ஆன் அல்அஹ்ஸாக் 33:40 இறைவாக்கின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலின்படி 1988-லிருந்து வளர்க்கப்பட்ட ஜாக் ஜமாஅத்தில் என்னதான் பற்றும் பாசமும் இருந்தாலும், 1429 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி, நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத் அல் முஸ்லிமீன் நம்முடைய நடைமுறையில் இல்லாமல் காணாமல் போயிருந்து இப்போது நமக்குக் கிடைத்து விட்டதால், அது மட்டுமே அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஜமாஅத் (பார்க்க 3:19, 85) என்ற உண்மையை ஏற்று, அதில் இணைந்து மற்றவர்களையும் அந்த இறைவன் கொடுத்த ஜமாஅத்தில் இணைக்கப்பாடுபடுவதே, நம்முடைய கடமை என்பதை ஜாக் அமீரும், அவரது ஜமாஅத்தில் உள்ளவர்களும் உணர்ந்து அதன்படி நடக்க முன்வரவேண்டும்.

அப்படி ஜாக் அமீர் முன்வந்தால், அனைத்துச் செயல்பாடுகளிலும் அல்குர்ஆன் 33:36படி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு, நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளுக்கு எவ்வித சுயவிளக்கமும் இல்லாமல், உள்ளது உள்ளபடி எடுத்து நடக்க முன்வந்தால், அவரது தலைமையில் அவரை அமீராக ஏற்றுச் செயல்பட நாம் தயாராகவே இருக்கிறோம். 1986-ல் எமது தலைமையில் அவர் செயல்பட்டிருந்தாலும், எமக்கு அமீர்ப பதவியில் ஆசை இல்லை. எமது நிபந்தனை இது மட்டுமே. குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் சுய விளக்கம் கொடுத்து அல்பகரா 2:159 எச்சரிக்கைக்கு முரணாக நடக்க முற்படக் கூடாது என்பது மட்டுமே. குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முரண்பட்ட கருத்தை அமீரே வெளியிட்டாலும் அதற்குக் கட்டுப்படுவது கூடவே கூடாது என்ற அடிப்படையில் அவரின் தலைமையின் கீழ் செயல்பட நாம் தயாராக இருக்கிறோம் என்று உறுதி அளிக்கிறோம்.

*************

தஸ்கியா என்றால் சூஃபிசமாம்! தரீக்காவாதியின் பிதற்றல்

வினாக்களுக்கு பதில் இல்லை. ஆகவே அவற்றைப் பகிரங்கப்படுத்துகிறோம்.

கேப்டன் அமீருத்தீன்

‘அமீர் வில்லா’

26, ஜானகிராம் காலனி,

 அரும்பாக்கம், சென்னனை – 16.

செல் : 9381027061, போன் : 044 – 24752608                                                                                                        நாள் : 11:08:2008

பெறுநர்:

மெளலவி. இனாமுல் ஹுசைன்

முதல்வர் அன்னை பாத்திமா(ரழி) அரபி கல்லூரி

ஹதீபு தெரு, தோப்புத்துறை – 614 809.

தொடர்பு : தோப்புத்துறை சின்னப்பள்ளிவாசலில் கடந்த 06.06.08-ல் ஜும்ஆவுக்கு முன் நீங்கள் செய்த ‘பயான்’

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கடந்த 06.06.08-ல் தோப்புத்துறையில் நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு நான் வந்திருந்தேன். அப்போது சின்னப் பள்ளிவாசலில் ஜும்ஆவுக்கு முன் நீங்கள் செய்த பிரசங்கத்தை கேட்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அதில் எனக்கு எழுந்த சந்தேகங்களை உங்களை நேரில் சந்தித்து கேட்பதற்கு எனக்கு அவகாசமில்லை. ஆகவே, இக்கடிதம் மூலம் அவைகளை கேட்டிருக்கிறேன். பதில் அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் சொற்பொழிவில் ஒரு குர்ஆன் வசனத்தை நீங்கள் ஓதிக்காட்டினீர்கள். அது எந்த வசனம் என்பது நினைவில் இல்லை. ஆயினும் அது தொடர்பாக நீங்கள் கொடுத்த விளக்கம் இதுதான்.

    அல்லாஹ் இந்த வசனத்தின் மூலமாக நபியவர்களுக்கு 4 கட்டளைகள் பிறப்பித்தான். அந்த கட்டளைகள் இறைவன் நபி மூசா(அலை) அவர்களுக்கு பிறப்பித்த 10 கட்டளைகளைப் போன்றது. அவைகளாவன:

    1.    குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டவேண்டும்.

    2.    நபிமார்களின் (சொல், செயல், அங்கீகாரம் முதலிய) ஹதீஸ் பாதுகாக்கப்பட வேண்டும்.

    3.    குர்ஆன் மக்களுக்கு விளக்கப்படவேண்டும்.

    4.    இந்த வசனத்தில் வரும் ‘தஸ்கியா’ என்ற சொல்லுக்கு ‘சூஃபிஸம்’ என்பதே பொருள். அந்த ஆன்மீக பாதை வழியே மக்கள் ‘இறைநெருக்கம்’ அடைய வேண்டும்.

    இறைவனிடமிருந்து மேல்கண்ட 4 கட்டளைகளை பெற்ற நபியவர்கள் அவைகளை நடைமுறைப்படுத்த 4 சகாபாக்களை ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக நியமித்தார்கள். அந்த பணிகளுக்கு முறையாக நியமிக்கப்பட்டவர்கள் கீழ் வருமாறு.

    1.     ஜைத் இபுனு தாபித்(ரழி)

    2.    அபு ஹுரைரா (ரழி)

    3.    அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி)

    4.    அலீ(ரழி)

    மேற்கண்ட கருத்தும் விளக்கமும் தான் நீங்கள் செய்த பயானின் சுருக்கமாகும். இதனை நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். வாதத்திற்காக உங்கள் கருத்தையும் விளக்கத்தையும் ஏற்றுக் கொள்வதாக இருந்தாலும் அதனால் எனக்கு எழும் சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் முறையான பதில் தரும்படி தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

வினாக்கள்:

1. வஹீ’ மூலம் நபியவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் அவ்வப்போது அருளப்பட்டபோது ஜைத் இபுனு தாபித்(ரழி) மட்டும்தான் அதை எழுதும் பணியில் நியமிக்கப்பட்டிருந்தார்களா? அல்லது வேறு பல எழுத்தர்களும் அந்த பணியை செய்தார்களா? வேறு பலரும் இருந்தார்கள் என்றால் அந்த பணியில் ஜைத் இபுனு தாபித்(ரழி)க்கு இருந்த சிறப்பு என்ன?

2. அபு ஹுரைரா(ரழி) ஹதீஸ்களை பாதுகாக்கும் பணிக்காக நபியவர்களால் பிரத்தியேகமாக நியமிக்கப்பட்டதால் மற்ற சகாபாக்கள் – ஆயிஷா(ரழி) உள்பட – அறிவிக்கும் ஹதீதுகள் பலஹீனமானவை’ என்ற நிலைக்கு தள்ளப்படுகிறதே; அது சரிதானா?

3. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) குர்ஆனை விளக்குவதற்காக நியமிக்கப்பட்டதால் அவரால் எழுதப்பட்ட ‘தப்ஸீர்’ எதுவும் இருக்கிறதா? இல்லையென்றால் முழு குர்ஆனையும் அவருடைய விளக்கம் இல்லாமல் நாம் எப்படி விளங்குவது? மேலும் அவர் தமக்கு கொடுத்த பொறுப்பை சரியாக செய்யாமல் விட்டு விட்டார் என்று கூறுகிறீர்களா?

4. ‘தஸ்கியா’ என்னும் குர்ஆன் வசனத்தில் வரும் சொல்லுக்கு ‘சூஃபிஸம்’ என்று தாங்கள் பலமுறை உங்கள் பயானில் பொருள் சொன்னீர்கள். இந்த பொருளும் அதற்கான ஆன்மீக விளக்கமும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் சொல்லிய விளக்கம்தானா? மேலும் நீங்கள் உங்கள் பயானுக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்ட 4 கட்டளைகள் பற்றிய குர்ஆன் வசனத்துக்கு நீங்கள் கூறிய விளக்கமும் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி) கூறியதுதானா? ஆம் என்றால் ஆதாரம் காட்டுங்கள்.

மேல்கண்ட 4-வது வினா எழுவதற்கு நியாயமான காரணம் உண்டு. உங்கள் கருத்துப்படி குர்ஆனுக்கு விளக்கம் சொல்ல நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரழி)யை நியமித்த பிறகு அந்த தகுதி வேறு யாருக்கும் இல்லை என்றாகிறது. அந்த பட்டியலில் நீங்களும், உங்களின் உஸ்தாதும் அடங்குவீர்கள். ஆகவேதான் அந்த கேள்வி.

5. மேலே க்ணட 4 தார்மீக கடமைகளுக்கு தகுதியானவர்களை நியமிக்கும்படி கட்டளையிட்ட வல்ல அல்லாஹ், நபியவர்கள் காலத்திலேயே அரபு தீபகற்பம் முழுவுத் பரவிவிட்ட இஸ்லாமிய சாம்ராஜ்யத்துக்கு அவர்களுக்குப் பின் ஒரு ஆட்சியாளரை – அதாவது கலீபாவை நியமிக்கும்படி கட்டளையிட மறந்து விட்டான் என்று கூறுகிறீர்களா? இல்லை அந்த பூமியை நீங்கள் நபியவர்கள் மீது போடுகிறீர்களா?

6. ‘சூஃபிஸம்’ எனும் ஆன்மீகப் பாதையை மக்களுக்கு போதிக்க நபியவர்களால் அலீ(ரழி) நியமிக்கப்பட்டார்கள் என்று நீங்கள் உங்கள் பயானில் கூறினீர்கள். ஆனால், நபியவர்கள் மரணப்படுக்கையில் கிடந்தபோது ஆட்சியாளராக அவர்களுக்குப்பின் யார் வருவது என்பதை அவர்களிடமே நேரில் கேட்டுவிட துணிந்து அப்பாஸ்(ரழி) அவர்கள் அலீ(ரழி)யை அழைத்தபோது ‘நபியவர்கள் இப்போது என்னை நியமிக்க மறுத்துவிட்டால் பின் எப்போதும் நான் அந்த பதவிக்கு வரமுடியாது’ என்று காரணம் கூறி அழைப்பை அலீ(ரழி) ஏற்க மறுத்தார்கள் என்று ஹதீதும் வரலாறும் கூறுகிறது. இதிலிருந்து அலீ(ரழி)க்கு ‘கிலாபத்’ பதவி ஏற்க விருப்பமிருந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. நபியவர்கள் கொடுத்த ஆன்மீகப் பொறுப்பை தட்டிக்கழித்துவிட்டு அலீ(ரழி) கிலாபத் பதவிக்கு ஆசைப்பட்டார் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

7. நபியவர்கள் மரணித்தபோது அலீ(ரழி) சுமார் 34 வயதுடையவர். நபியவர்களுக்கு பின் அபூபக்கர்(ரழி) 2 ஆண்டுகள், உமர்(ரழி) 11 ஆண்டுகள், உதுமான்(ரழி) 11 ஆண்டுகள் ஆக மூன்று கலீபாக்களின் ஆட்சி 24 ஆண்டுகள் நீடித்தது. ஆக தொடர்ந்து 24 ஆண்டுகள் அலீ(ரழி) அரசியல் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுங்கியே இருந்தார். உங்கள் கருத்துப்படி அந்த காலங்களில் அவர் சூஃபிஸ ஆன்மீகப் பாதைக்கு மக்களை அழைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றே எடுத்துக் கொள்வோம். ஆனால் உதுமான்(ரழி) கொலை செய்யப்பட்டவுடன் அலீ(ரழி) தமது 58-வது வயதில் கிலாபத்துக்கு போட்டி போட்டார் என்பதும் வரலாற்று உண்மை. அவரின் கிலாபத்தை ஏற்க மறுத்த ஆயிஷா(ரழி)யுடனும், முஆவியா(ரழி)யுடனும் அதற்காக அவர் போர்புரியவும் தயங்கவில்லை. ஆன்மீக பக்குவம் நிறைந்த 58-ம் வயதில் ஆன்மீகப் பாதையை துறந்து அரசியல் அதிகாரத்துக்கு போட்டிபோட்ட அலீ(ரழி)யின் செயல் தவறு என்று நீங்கள் கூறுகிறீர்களா?

8. ஒவ்வொரு ‘தரீக்கா’வும் அதாவது ஆன்மீகப் பாதையும் அலீ(ரழி)யுடன் சென்று சேர்வதாகவும் உங்கள் சொற்பொழிவில் கூறினீர்கள். சூஃபிஸ ஆன்மீகப் பாதையை இடையில் கைவிட்டு ‘கிலாபத்’ எனும் அரசியல் சார்ந்த பதவிக்கு போட்டி போட்ட அலீ(ரழி)யின் தரீக்கா ஈடேற்றத்தை கொடுக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

இந்த கேள்விகள் எல்லாம் உங்களுடைய பயானில் நீங்கள் எடுத்த நிலைபாபாடுகளால் எழுகிறதே தவிர அவை எதுவும் எனது சொந்த விருப்பு வெறுப்புகளால் ஏற்பட்டது அல்ல. அப்படியே சகாபா பெருமக்களைப் பற்றிய விமர்சனத்துக்கும் உங்களின் பயானே காரணமாகும் என்பதை தெளிவுபடுத்தி இதனை முடிக்கிறேன். தங்களின் பதிலுடன் பயானில் குறிப்பிட்ட குர்ஆன் வசனத்தையும் எனக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

எஸ்.எச். அமீருத்தீன்

***************

பிரசாரபணி, தொழவைக்க கூலி – சம்பளம்

ஹராமிலும் மிகக் கொடிய ஹராம்! – அபூ அப்தில்லாஹ்

அபூ ஜஹீலின் வாரிசுகள் :

புரோகிதர்கள் நாங்கள்தான் மார்க்கம் கற்றவர்கள் – ஆலிம்கள் – உலமாக்கள் – மவ்லவிகள் – மவ்லானாக்கள் என மார்தட்டிக் கொள்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் போதனைக்கு முரணான மார்க்கத்தைத் தங்களின் பிழைப்பாக – தொழிலாகக் கொண்டுள்ளனர். நாம் இவர்களை அபூ ஜஹீலின் வாரிசுகள்; படைப்புகளிலேயே மிகமிக இழிவானவர்கள் (அத்தீன் 95:5) கால்நடைகளைவிட கேடுகெட்டவர்கள் (அல்அஃராஃப் 7:179) நரகத்திற்குச் சொந்தக்காரர்கள் (அல்பகரா 2:159,161,162) என பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறோம். அவர்களின் வழிகெட்ட போக்கு, இறைவனின் இறுதி வழிகாட்டியான அல்குர்ஆன் வசனங்களைக் கொண்டு சுட்டிக்காட்டப்பட்டால், உடனடியாக அதை ஏற்றுத் தங்களைத் திருத்திக் கொண்டு மக்களிடம் சத்தியத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் மட்டுமே அவர்கள் நரகிலிருந்து விடுதலைப் பெற முடியும் (அல்பகரா 2:160) என்றும் கூறி வருகிறோம்.

மவ்லவிகள் வழிகாட்டிகளா?

ஆனால் முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர், அவர்களில் உலகியல் துறைகளில் பேரறிஞர்களாக இருப்பவர்கள் முதல் கொண்டு,  இந்த ஆலிம்கள் மீது அபார நம்பிக்கைக் கொண்டுள்ளனர். சமுதாயத்தின் களங்கரை விளக்குகள், சமுதாயத்தை தூக்கி நிறுத்துகிறவர்கள்; அவர்கள் இல்லை என்றால் சமுதாயம் மேலும் அழிவுப் பாதையில் சென்று விடும் என்றெல்லாம் கூறி இந்த மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதை நியாயப்படுத்தி வருகின்றனர். இன்று முஸ்லிம்களின், முஸ்லிம் அறிஞர்களின் நிலை எப்படி ஆகிவிட்டதென்றால்,  அல்லாஹ்வும் அவனது தூதரும் சொல்லுவது இவர்களுக்கு மார்க்கமாகத் தெரியவில்லை. நடைமுறை சாத்தியமாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக தங்களின் அறிவில் படுவதையே மார்க்கமாகச் செயல்படுத்தத் துணிகின்றனர். இதைத்தான் நாளை மறுமையில் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் சமுதாயம் அல்குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள் என்று அல்லாஹ்விடம் முறையிட இருக்கிறார்கள். (அல்ஃபுர்கான் 25:30)

மிகக் கொடிய ஹராம்!

இப்போது புரோகிதத் தொழில் என்ற கொடிய ஹராமான தொழில், வட்டித் தொழில், சாராயத் தொழில், விபச்சாரத் தொழில், அநாதைகளின் சொத்தைச் சாப்பிடுதல், பன்றிக்கறி, திருட்டுத் தொழில், கொலை, கொள்ளை, களவு இப்படிப்பட்ட ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் விட மிகமிகக் கொடிய ஹராமாக இருக்கிறது என்பதற்கு அல்குர்ஆன் ஆதாரங்களைப் பட்டியலிடுகிறோம். நடுநிலையோடு படித்து சிந்தித்து விளக்குங்கள்.

பன்றிக்கறி சாப்பிடுவதைத் தடுத்து 2:173, 5:3, 6:145, 16:115 ஆகிய நான்கு இடங்களில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 2:173, 6:145, 16:115 மூன்று இடங்களில் பாவம் செய்யும் எண்ணமின்றி பசிக்கொடுமையால் நிர்பந்திக்கப்பட்டு பன்றிக் கறியை ஒருவன் சாப்பிட்டுவிட்டால் அவன்மீது குற்றமாகாது என சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் இந்த மவ்லவிகள் பன்றி என்று வாயால் சொல்லுவது கூட பாவம்-குற்றம் என்ற அளவில் போதனை செய்கிறார்கள்.

இதைவிட கடுமையான ஹராமாக அநாதைகளின் சொத்தை அநீதமாகச் சாப்பிடுவதைக் குறித்து 2:220, 4:2, 6:152, 17:34 ஆகிய நான்கு இடங்களில் குறிப்பிட்டு அல்லாஹ் எச்சரித்துள்ளான். அடுத்த கடுமையான ஹராமாக இறைவன் 2:275, 276, 278, 279, 3:130, 4:161, 30:39 ஆகிய ஏழு இடங்களில் வட்டி பற்றி எச்சரித்துள்ளான். வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் எழமாட்டார்கள்; அவர்கள் நரகத்தில் என்றென்றும் தங்கி விடுவார்கள் என்றும் கடுமையாக எச்சரித்துள்ளான் அல்லாஹ். அவர்களக்கெதிராக அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டுவிட்டது என்றும் அல்லாஹ் எச்சரித்துள்ளான். பன்றி என்றவுடன் முகம் சுளிப்பவரகள். பள்ளி நிர்வாகிகளிலிருந்து, சில மவ்லவிகள் உட்பட வட்டியைச் சர்வ சாதாரணமாகச் சாப்பிட்டு வருகிறார்கள்.

திருட்டை ஹராமாக்கி 5:38; 12:70 இரண்டு இடங்களிலும், மது, சூதை ஹராமாக்கி 2:219, 5:90,91 மூன்று இடங்களிலும், விபச்சாரத்தை ஹராமாக்கி 4:15,16, 17:32, 24:33, 25:68, 60:12 ஆகிய ஆறு இடங்களிலும், அளத்தல், நிறுத்தல் மோசடி பற்றி 6:152, 7:85, 11:84, 17:35, 55:8,9, 83:1-3 ஆகிய ஒன்பது இடங்களிலும், கொலை பற்றி 2:178,179, 4:92,93 5:32, 6:140, 17:33 ஆக ஏழு இடங்களிலும் அல்குர்ஆனில் கூறி எச்சரிக்கப்பட்டுள்ளது. தடுக்கப்பட்ட ஹராமான இவை அனைத்தையும் ஒன்றிணைத்துப் பார்த்தாலும் மொத்தம் நாற்பத்தி இரண்டு (42) இடங்களில் மட்டுமே காணப்படுகிறது.

 மார்க்கப் பணிக்கு கூலி!

இதற்கு மாறாக மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடாது – ஹராம் என்பது பற்றி 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109, 127, 145, 164, 180, 34:47, 38:86, 42:23 ஆக 13 இறைவாக்குகளில் எச்சரிக்கப்பட்டுள்ளது. “மார்க்கப் பணிக்காக உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விட மேயன்றி உங்களிடம் இல்லை” என்று ஒவ்வொரு நபியையும் அல்லாஹ் உறுதிபட அறிவிக்கச் செய்திருப்பது. மார்க்கப் பணிக்கு கூலி – சம்பளம்  வாங்குவது எவ்வளவு கொடூரமான – கொடிய ஹராம் – குற்றம் என்பதை உணர்த்துகிறது. அவற்றில் 6:90, 25:57, 34:47, 38:86, 42:23 ஆகிய ஐந்து இடங்களில் இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களே இப்படி பறைசாற்றி இருப்பதாக அல்லாஹ் அறிவிக்கிறான்.

மவ்லவி தந்திரம்!

இந்தப் புரோகித மவ்லவிகள் “இது முன்னைய சமுதாயங்களுக்குரியது; எங்களைக் கட்டுப்படுத்தாது” என்று கூறி மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதை விட்டும் தடுக்கும் விதமாக நெத்தியடியாகப் பறைசாற்றப் பட்டுள்ளது. யாஸீன் 36:21-ல் “உங்களிடம் ஒரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” என்று அல்லாஹ் கூறி இருப்பது. அதற்கு மாறாக மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி வாங்குகிறவர்கள் நேர்வழியில் இல்லை. கோணல் வழிகளையே மக்களுக்குப் போதிப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. 52:40, 68:46 ஆகிய இரு இறைவாக்குகளில் “நீர் அவர்களிடம் கூலி கேட்டு, அதனால் அவர்கள் கடன்பட்டு சுமையேற்றப்பட்டிருக்கிறார்களா?” என்று கேட்பதன் மூலம் மார்க்கப் பணிக்கு, தொழவைக்க கூலி – சம்பளம் சமுதாயத்தில் ஷிர்க், பித்அத் அனைத்தும் நுழைய வழி வகுக்கிறது என்பதை உணர்த்துகிறது.

கூலியால், சம்பளத்தால் ஏற்படும் தில்லுமுல்லுகள்:

மார்க்கப் பணிக்கு, இமாமத்துக்கு கூலி-சம்பளம் கூடவே கூடாது என்ற அல்லாஹ்வினதும், அவனது இறுதித் தூதரினதும் தெளிவான – நேரடியான கட்டளைக்கு முற்றிலும் முரணாக, இந்தப் புரோகித மவ்லவிகள் மார்க்கத்தையே பிழைப்பாக – தொழிலாகக் கொண்டதன் காரணமாக எப்படிப்பட்ட தில்லுமுல்லுகளை மனந்துணிந்து செய்யும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கீழ்வரும் 18 இறைவாக்குகள் எச்சரிக்கின்றன.

2:41,79, 3:78, 187, 188, 4:44, 46, 5:41, 6:3, 6:21, 25,26, 9:9,10, 34, 11:18, 19, 31:6,

இந்த இறைவாக்குகளை நிதானமாக நடுநிலையோடு படித்துப் பார்த்தால் புரோகித மவ்லவிகள் எப்படிப்பட்டக் கொடியவர்கள் என்பது நிச்சயம் விளங்கும்.

“எவர்கள் தங்கள் கைகளைக் கொண்டு (கற்பனையாக) எழுதிய நூலை ஒரு சொற்ப கிரயத்தையடைவதற்காக “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததுதான்” என்று கூறுகிறார்களோ அவர்களுக்குக் கேடுதான்; அவர்களுடைய கைகள் எழுதியதனாலும் அவர்களுக்குக் கேடுதான்; அவர்கள் (அதைக் கொண்டு பொருள்) சம்பாதிப்பதாலும் அவர்களுக்குக் கேடுதான்! (அல்பகரா 2:79)

புரோகித மவ்லவிகளின் சுய விளக்கங்கள் அனைத்தும் இந்தப் பட்டியலில் சேர்ந்து நரகைப் பெற்றுத் தருபவையே!

“அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிட்டு (மக்களை) அவனுடைய பாதையில் செல்வதையும் தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்யும் இச்செயல் மிகவும் கெட்டது.”    (அத்தவ்பா 9:9)

கொடூர இழி செயல்!

மார்க்கத்தைப் பிழைப்பாக – தொழிலாகக் கொண்டுள்ள அனைத்து மத்ஹபு, தரீக்கா, இயக்க, ஜாக், ததஜ போன்ற அமைப்புப் புரோகித மவ்லவிகள் மக்களை அல்லாஹ்வின் பாதையாகிய நேர் வழியிலிருந்து தடுத்து கோணல் வழிகளில் இட்டுச் சென்று நரகத்தை நிரப்பக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இது மிகமிக கேடுகெட்ட ஒரு கொடூர இழி செயல் என்பதில் சந்தேகமுண்டா?

மார்க்கத்தைப் பிழைப்பாக – தொழிலாக ஹராமான வழியில் ஆக்கிக் கொண்ட இந்தப் புரோகித மவ்லவிகள் மக்களை வழிகெடுத்து நரகில் கொண்டு தள்ளும் கொடூர செயல்களை அறியாமல் – தெரியாமல் செய்கிறார்கள் என்கிறீர்களா? அதுதான் இல்லை; மிகமிக நன்றாக அறிந்த நிலையில்தான் இக்கொடூர செயல்களைச் செய்து வருகின்றனர் என்பதையும் அல்லாஹ் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். 2:75, 109, 146, 6:20 ஆகிய நான்கு(4) இறைவாக்குகளைப் படித்துப் பாருங்கள். உண்மை புரியும்.

“எவரும் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல், (நெறி) நூல் கொடுக்கப்பட்டவர்கள் (சத்தியத்தை) நன்கறிவார்கள்…..” (அல் அன்ஆம் 6:20)

மார்க்கத்தை, தொழவைப்பதை ஹராமான வழியில் பிழைப்பாக்கிக் கொள்வதன் மூலம் புரோகித மவ்லவிகளின் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் ஹராமாக இருப்பதால் அவர்களின் உள்ளங்கள் இறுதி கற்பாறைகள் போல் ஆகிவிடுகின்றன. எனவே நேர்வழியை அவர்களால் உணர முடியவில்லை; இதையும் அல்லாஹ் 2:74, 5:13 ஆகிய இரு இடங்களில் சுட்டிக் காட்டுகிறான். புரோகித மவ்லவிகள் தங்கள் வயிறுகளில் நரக நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றனர் என்று 2:174-ல் கடுமையாக கண்டிக்கிறான் அல்லாஹ்.

“எவர்கள் (நெறி) நூலில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாகச் சொற்பத் தொகையைப் பெற்றுக் கொள்கின்றனரோ அவர்கள் நிச்சயமாகத் தங்கள் வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கிறார்கள்; அன்றி மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் பேசலும் மாட்டான். அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவுமாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனைதான் உண்டு”. (அல்பகரா 2:174)

இதைவிடக் கடுமையான ஓர் எச்சரிக்கை இந்தப் புரோகித மவ்லவிகளைப் பற்றி பிறிதொன்று இருக்க முடியுமா?

அல்லாஹ் விளக்கிய பின் வேறு விளக்கமா?

மார்க்கம் பற்றி மனிதர்களுக்காக குறிப்பாகப் பாமரர்களுக்காக அல்லாஹ்வும் தெளிவாக நேரடியாக விளக்கி, மேற்கொண்டு ஒரு தூதரையும் மனித வர்க்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்து மனித வர்க்கத்திலிருந்தே தேர்ந்தெடுத்து மார்க்கத்தைத் தெளிவாக நடைமுறைப்படுத்திக் காட்டச் செய்த பின்னரும் இந்த புரோகித மவ்லவிகளின் மேல் விளக்கம் தேவையா? அப்படி அவர்கள் மேல் விளக்கம் கொடுக்கும்போது, இறைவன் கொடுத்த நேர்வழியை மறைத்து, திரித்துப் பல கோணல் வழிகளை கற்பனை செய்வதாகத் தானே இருக்க முடியும். எனவே இந்த புரோகித மவ்லவிகளை அல்லாஹ்வும் சபிக்கிறான், மலக்குகளும் சபிக்கிறார்கள். அனைத்துப் படைப்புகளும் சபிக்கின்றன. இப்படி அல்லாஹ்வினதும், படைப்புகள் அனைத்தினதும் கொடுஞ்சாபத்தைப் பெற்றுக் கொள்ளும் இந்தப் புரோகித மவ்லவிகள் தப்ப முடியுமா? நிரந்தர நரகம் அவர்களுக்காக காத்திருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

“நேர்வழியையும் தெளிவான ஆதாரங்களையும் நாம் இறக்கி, அவற்றை மனிதர்களுக்காக (நெறி) நூலில் தெளிவுபடுத்திய பின்னும், எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கின்றனர்.” (அல்பகரா 2:159)

“எவர்கள் (இறைவாக்குகளை) நிராகரித்துவிட்டு, நிராகரித்த நிலையிலேயே இறந்து விடுகிறார்களோ அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் ஆகிய அனைவரின் சாபங்களும் நிச்சயமாக உண்டாகின்றன.” (அல்பகரா 2:161)

“அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள். அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படவும் மாட்டாது; அவர்கள் (ஓய்வு எழுப்பதற்கு) அவகாசம் கொடுக்கப்படவும் மாட்டார்கள்”. (அல்பகரா 2:162)

அல்லாஹ்வைப் பற்றிய அச்சமும், மறுமை பயமும் இருந்தால் இந்தப் புரோகித மவ்லவிகளி. இந்தக் கடுமையான இறைவனின் எச்சரிக்கையைப் பார்த்த பின்னரும், அவற்றை நிராகரித்துவிட்டு, புரோகிதத்தை ஆதரித்து மார்க்கப் பணி, இமாமத் இவற்றிற்கு கூலி வாங்க முடியுமா?

காலம் தாழ்ந்து விடவில்லை, இப்போதாவது அல்லாஹ்வின் தெளிவான – நேரடியான இக்கட்டளைகளை மதித்து, இதுவரை தாங்கள் செய்து வந்த பெருந்தவறை – கொடிய ஹராமான செயலை விட்டு தெளபா செய்து மீண்டு,  அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி மறைக்காமல், திரிக்காமல், உள்ளது உள்ளபடி சொல்ல முன்வந்தால் அல்லாஹ் அவர்களை மன்னித்துக் கிருபை செய்யக் காத்திருக்கிறான்.

“அவர்களில் எவர்கள் வருந்தி வேதனைப்பட்டு, சீர்திருந்தி, அவற்றில் (மறைத்தவற்றை மனிதர்களுக்கு) தெளிவாக எடுத்துரைக்கின்றனரோ அவர்களை நான் மன்னித்துவிடுவேன். நானோ மிக்க மன்னிப்பவன். நிகரற்ற அன்புடையவன்.” (அல்பகரா 2:160)

 கூலி-சம்பளம் லஞ்சமில்லையா?

அரசுப் பணிகளில் இருந்து, மக்களுக்குப் பணி புரிகிறவர்களுக்கு அரசு சம்பளம், போனஸ் என கொடுக்கிறது. இந்த நிலையில் அரசுப் பணியாளர்கள் தங்களை, மக்கள் அவர்களின் நியாயமான தேவைகளுக்காக அணுகும் பொது மக்களிடம் நியாயமின்றி பெறும் பணத்தை லஞ்சம் என்று கூறுகிறோம். (2:188) இதேபோல் இந்த மவ்லவிகளின் மார்க்கப் பணி, இமாமத் போன்றவற்றிற்கு அல்லாஹ் கூலி – சம்பளம் கொடுக்க வாக்களித்துள்ளான். இந்த நிலையில் இந்தப் புரோகித மவ்லவிகள் இப்பணிகளுக் காக மக்களிடம்  கூலி – சம்பளம் கொடுக்க வாக்களித்துள்ளான். இந்த நிலையில் இந்தப் புரோகித மவ்லவிகள் இப்பணிகளுக்காக மக்களிடம் கூலி – சம்பளம் பெறுவது லஞ்சம் தானே? கொடிய ஹராம்தானே? இதை அவர்களால் மறுக்க முடியுமா?

மேலும் கொடிய ஹராமான வழியில் மார்க்கப்பணிக்குக் கூலி வாங்கும் கேடுகெட்ட நிலை அல்லாஹ்வின் எத்தனை நேரடிக் கட்டளைகளை நிராகரித்து கா_பிராக்கும் செயலை செய்ய வைக்கிறது என்பதைக் கீழ்க்காணும் இறைவாக்குகளைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள். அல்பகரா 2:76, 78, ஆலஇம்ரான் 3:77, அல்மாயிதா 5:62 நான்கு இறைவாக்குகள்.

“அவர்களில் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்பவை மிகத் தீயவை! (அல்மாயிதா 5:62)

ஹராமான வழியில் மார்க்கப்பணிக்கு கூலி வாங்குவது இந்தப் புரோகித மவ்லவிகளை 7:3,55,205, 33:21, 36,66,67,68, 59:7 போன்ற ஒன்பது (9) தெளிவான இறைவாக்குகளை நிராகரித்து இவர்களின் சுய கற்பனைகளை – மார்க்கத்தில் புகுத்தும் நிலைக்கு ஆளாக்குகிறது.

மேலும் கூலிக்கு – சம்பளத்திற்கு மாரடிக்கும் கட்டாயம் காரணமாக அல்லாஹ்வின் தெளிவான – நேரடியான அல்அன்பியா 21:92, மூஃமீனூன் 23:52 கட்டளைகளுக்கு முரணாக ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்திக் கூறுபோடும் அவசியத்திற்கு ஆளாகிறார்கள். அதனால் 3:103, 105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 ஆகிய எட்டு(8) இறைக் கட்டளைகளைப் புறக்கணித்து நிராகரிக்கும் நிலைக்கு இந்த புரோகித மவ்லவிகள் ஆளாகிறார்கள். இதில் மத்ஹபு, தர்கா, தரீக்கா முகல்லிது மவ்லவிகள், அஹ்லஹதீஸ், முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ மவ்லவிகள் என வேறுபாடு இல்லாமல் அனைத்துப் பிரிவு புரோகித மவ்லவிகளும் அல்குர்ஆனின் பல வசனங்களைப் புறக்கணிக்கிறார்கள். பகரா 2:39 இறை எச்சரிக்கைப்படி நரகிற்குரியவர்கள் ஆகிறார்கள்.

அல்குர்ஆனின் நேரழி எச்சரிக்கை!

“நாம் கூறினோம், நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்கி விடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். எவர்கள் என்னுடைய அந்நேர்வழியை (எவ்வித சுய விளக்கமும் இல்லாமல்) பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு யாதொரு பயமுமில்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.”    (அல்பகரா 2:38)

மார்க்கப்பணி, தொழவைக்க கூலி – சம்பளம் வாங்கும் நிர்பந்தம் காரணமாக இறைவாக்குகளுக்கு சுய விளக்கம் கொடுத்து அவற்றை நிராகரிக்கும் குற்றத்திற்கு இந்தப் புரோகித மவ்லவிகள் ஆளாகிறார்கள். அதன் விளைவு:

“எவர்கள் (சுய விளக்கம் மூலம் நேர் வழியை) நிராகரித்து என்னுடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே! அவர்கள் அதில் என்றென்றும் தங்கி விடுவார்கள்”.(அல்பகரா 2:39)

குர்ஆனை புறக்கணிக்கும் மவ்லவிகள்!

ஆக கூலிக்கு – சம்பளத்திற்கு மார்க்கப்பணி, இமாமத் செய்யும் புரோகித மவ்லவிகள், நபி(ஸல்) நாளை மறுமையில் இறைவனிடம் முறையிடுவதற்கு ஏற்ப அல்குர்ஆனைப் புறக்கணித்து – நிராகரித்து ஒதுக்கிவிடும் மிகக் கடுமையான குற்றத்திற்கு ஆளாகிறார்கள்.

“என்னுடைய துக்கமே! (பாவம் செய்யும்படித் தூண்டிய புரோகிதனாகிய) இன்னவனை நான் என்னுடைய நண்பனாக (வழிகாட்டியாக) ஆக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டாமா?”

“நல்லுபதேசம் (அல்குர்ஆன்) என்னிடம் வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் (புரோகிதன்) என்னைத் திருப்பிவிட்டானே! அந்த ஷைத்தான் மனிதனுக்குப் பொரும் சதிகாரனாக இருந்தானே!”

(அச்சமயம் நம்) தூதர் “என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் (புரோகித மவ்லவிகளின் சுய விளக்கத்தை ஏற்று) இந்த அல்குர்ஆனை முற்றிலும் வெறுத்துப் புறக்கணித்துவிட்டார்கள்” என்று கூறுவர்.(அல்புர்கான் 25:28, 29,30)

கூலிக்கு – சம்பளத்திற்கு மார்க்கப்பணி, இமாமத் செய்யும் புரோகித மவ்லவிகளின் சுயநலத்துடன் கூடிய சொந்த விளக்கங்களை ஏற்று நடந்தால், அல்லாஹ் மனிதவர்க்கத்தின் நேர்வழிக்காக இறக்கியருளிய அல்குர்ஆனை வெறுத்துப் புறக்கணிக்கும் ஆபத்தான் – நரகத்திற்கு இட்டுச் செல்லும் கொடிய – மாபதகச் செயலைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் என்பதை இந்த 25:28,29,30 வசனங்கள் நெத்தியடியாக கூறுகின்றன என்பதை இந்தப் புரோகித மவ்லவிகள் மறுக்க முடியுமா?

கழுதை, குரங்கு, பன்றி, நாயிலும் கேடானவர்கள்!

இவ்வளவு தெள்ளத் தெளிவாக நேரடியாக எண்ணற்ற இறைவாக்குகளில் மார்க்கப் பணிக்கு, இமாமத்திற்குக் கூலி வாங்குவது கொடிய ஹராம் என்று திட்டமாகக் கூறப்பட்டிருந்தும், அவற்றைக் கண்டு கொள்ளாமல், நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு சம்பளம் வாங்கிக் கொண்டு மக்களுக்கு உபதேசம் செய்யும் இந்தப் புரோகித மவ்லவிகள் அல்குர்ஆனை சுமக்கும் கழுதைக்கு ஒப்பாவார்கள் என்று அல்ஜும்ஆ 62:5லும், குரங்குகள், பன்றிகள் போன்ற இழிவான படைப்புகள் என்று அல்மாயிதா 5:59, 60லும், நாயினும் கேடுகெட்டவர்கள் என்று அல்அஃராப் 7:175, 176 லும் மிகமிகக் கண்டித்து அல்லாஹ் கூறியுள்ளான். ஆயினும் இந்த எச்சரிக்கைகளை உணரும் அளவில் புரோகித மவ்லவிகளின் உள்ளங்கள் அல்லாஹ் அல்அன்ஆம் 6:125-ல் கூறி இருப்பது போல் விரிவாக்கப்படவில்லை. அதற்கு மாறாக அல்பகரா 2:74 மற்றும் அல்மாயிதா 5:13-ல் அல்லாஹ் கூறி இருப்பது போல் ஹராமான உணவு, உடை, இருப்பிடம் காரணமாக கற்பாறைகள் போல் சுருங்கி, இறுகிக் கடினமாகிவிட்டன. எனவே இந்தப் புரோகித மவ்லவிகள் அல்லாஹ் அல்அஃராஃப் 7:179-ல் கூறி இருப்பது போல் அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தும் உண்மையை உணரமாட்டார்கள். கண்களிலிருந்தும் இறைவனின் ஆதாரங்களைப் பார்க்க மாட்டார்கள், அவர்களுக்குக் காதுகள் இருந்தும் அவற்றைக் கொண்டு இறைவனது நேரான போதனைகளைக் கேட்கமாட்டார்கள். இவர்கள் ஆடு, மாடு போன்ற கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை, அவற்றை விட மிகமிக கேடுகெட்டவர்கள், இழிவானவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

அல்லாஹ்வின் எண்ணற்ற எச்சரிக்கைகளை நிராகரித்துவிட்டு, அல்லாஹ்வுக்காக மறுமையில் கூலியை எதிர்பார்த்துச் செய்யவேண்டிய மார்க்கப் பணி, இமாமத் இவற்றைக் கொண்டு செய்வதால் இப்படியொரு இழிவான, கேடுகெட்ட நிலைக்கு ஆளாகிறார்கள்.

கூலியால் விளையும் கேடுகள்!

இப்படி அல்குர்ஆன் முழுக்க மிகக் கவனமாக நாம் ஆராய்வோமானால், மார்க்கப் பணிக்கு, இமாமத்துக்குக் கூலி – சம்பளம் கூடாது என்றும், அதை மீறி கூலி வாங்குவதால் சமுதாயத்தில் புறையோடும் மூட நம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், ஷைத்தானிய வீண் செலவுகளால் சமுதாயம் சுமையேற்றப்படல், சமுதாயத்தில் வந்து புகுந்து கொள்ளும் ஷிர்க், பித்அத்கள், புரோகித மவ்லவிகள் அப்படிப்பட்ட ஷிர்க், பித்அத்களையே மார்க்கமாகச் சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சிப்பதோடு, அவர்களை நரகில் கொண்டு தள்ளுவது, அதற்காக அப்பட்டமான பொய்கள், அவதூறுகள், அல்லாஹ் மீதே ஆணையிட்டுப் பொய் சத்தியம் செய்தல், எண்ணற்ற தில்லுமுல்லுகள்,  நன்கு அறிந்த நிலையிலேயே வழிகேடுகளை நேர்வழியாகப் போதித்து மக்களை பல கோணல் வழிகளில் இட்டுச் செல்வது, ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்தி பல கூறுகளாக்குவது இப்படி நம்மைப் படைத்த அல்லாஹ் அடுக்கடுக்காக விலாவாரியாக எடுத்துச் சொல்லும் அல்குர்ஆன் வசனங்களைப் பட்டியலிட்டால் அவை நூறையும் தாண்டும். இந்தக் கேடுகெட்ட புரோகித மவ்லவிகளை விட கேடுகெட்ட ஒரு படைப்பு அல்லாஹ்வால் படைக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

அனைத்திலும் கொடிய ஹராம்!

உதாரணமாக ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் பன்றிக்கறி சாப்பிடுகிறான்; வட்டியே சாப்பிடுகிறான்; அநாதைகளின் சொத்தை அநியாயமாகச் சாப்பிடுகிறான். மது, மாது, சூது எனப் பெறப்படும் வருவாயைக் கொண்டு சாப்பிடுகிறான். அளத்தல் நிறுத்தலில் மோசடி செய்து சாப்பிடுகிறான். கொலை, கொள்ளை, களவு, விபச்சாரம், குடி என அனைத்து ஹராமிலும் மூழ்கி இருக்கிறான் என வைத்துக் கொள்வோம். இவை அனைத்தைப் பற்றியும் அல்குர்ஆனில் கண்டித்துக் கூறும் எல்லா இறைவாக்குகளையும் ஒன்று கூட விடுபடாமல் பொறுக்கி எடுத்தாலும் அவை ஐம்பதை(50) தாண்டாது.

அதே சமயம் ஏற்றிப் பெரிதாக மதித்து தங்கள் வழிகாட்டியாக ஏற்றிப் போற்றும் பள்ளி இமாம் வாங்கும் கூலி பற்றி கண்டித்துக் கூறும் இறைவாக்குகளைப் பட்டியலிட்டால் இவை நூறை(100) தாண்டுகிறது. இப்போது நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் மாபெரும் குற்றவாளியாக நிற்கப்போவது யார்? அனைத்து ஹராம்களையும் சாப்பிட்ட முன்னவனா? அல்லது மார்க்கப் பணியை தொழிலாக்கிக் கொண்ட பள்ளி இமாமா? நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள்.

அவன் வழிகெடுகிறானே தவிர மக்களை வழிகெடுக்கவில்லை!

அவனது ஹராம்களையும் சாப்பிட்டு, அனைத்துக் கொடுக்கப்பட்ட செயல்களையும் செய்த முன்னவன் தன்னை நரகவாசியாக்கிக் கொள்ளலாம். இவ்வுலகில் ஒரு சிலருக்குத் துன்பத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களில் எவரது மறு உலக வாழ்க்கையையும் நஷ்டப்படுத்தவில்லை. அவர்களை நரகிற்கு இட்டுச் செல்லவில்லை; கோணல் வழிகளை சத்தியம் – நேர்வழி என மக்களுக்குத் துர்போதனை செய்யவில்லை. இவற்றை இந்தப் புரோகித மவ்லவிகளால் மறுக்க முடியுமா? அது மட்டுமல்ல அவன் செய்யும் அனைத்துப் பாவச் செயல்களையும் நன்மையான செயல்கள்; அவைதான் நேர்வழி என்ற மக்களுக்குப் போதித்து அவர்களை வழிகெடுப்பவனாகவும் அவன் இல்லை.

கூலி – சம்பளம் வாங்கும் இமாமின் நிலை!

அதற்கு மாறாக இமாமத் பணியை கூலிக்கு – சம்பளத்திற்குச் செய்யும் இமாமை எடுத்துக் கொள்ளுங்கள். கேவலம் அற்ப காசுக்காக, அல்லாஹ்வின் தெளிவான நேரடியான 2:159, 161, 162, 9:9 34, 31:6  கட்டளைக்கு முரணாகத் தொழுகையாளிகளின் தொழுகைகளைப் பாழாக்கி எப்படி நரகிற்கு இட்டுச் செல்கிறார் என்று பாருங்கள்.

அல்லாஹ் அல் அஃராஃப் 7:55 மற்றும் 205-ல் துஆ – பிரார்த்தனை, மற்றும் திக்ர் – இறை தியானமும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறான் என்று கவனமாகப் படித்துப் பாருங்கள்.

(நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், (மனதிற்குள்) அந்தரங்கமாகவும்(துஆ) பிரார்த்தனை செய்யுங்கள், வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.   (7:55)

(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனை தியானம் செய்து கொண்டிருப்பீராக! (அவனை) மறந்துவிட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (7:205)

மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கமோ, மதரஸா பக்கமோ ஒதுங்காத, படிப்பறிவு, எழுத்தறிவு (உம்மி) அறவே இல்லாத ஒரு பாமரனின் முன் அவனது காதுகளில் விழும் வண்ணம் இந்த இரண்டு வசனங்களைப் படித்துக் காட்டினால், நிச்சயமாக அல்லாஹ் என்ன சொல்கிறான் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும். அதாவது அல்லாஹ்விடம் (துஆ) பிரார்த்தனை செய்வதாக இருந்தாலும் அவனை தியானம் செய்வதாக இருந்தாலும், பணிவாக உள்ளச்சத்தோடு, மனதிற்குள் மட்டுமே அவற்றைச் செய்ய் வுண்டும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியும். எந்தப் புரோகித முல்லாவும் இதற்கு மேல் சுய விளக்கம் கொடுக்கும் அவசியமே இல்லை.

அதற்கு மேலும் இந்த குர்ஆன் வசனங்களை நடைமுறைப்படுத்திக் காட்ட கடமைப்பட்ட (2:213, 16:44,64) நபி(ஸல்) அவர்கள் தொழுகை கடமையாக்கப்பட்ட பின்னர் அவர்களது இறப்பு வரை 11 ஆண்டுகளாக சுமார் 20 ஆயிரம் தொழுகைகள் தொழுது, இந்த இரண்டு இறைவாக்குகளையும் எவ்வித கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள். அந்த 20 ஆயிரம் தொழுகைகளில் ஒரேயொரு தொழுகையில் கூட இன்று இமாம்கள் செய்வது போல், அதாவது ‘ஸலாம்’ – (தொழுகை முடிவு) கொடுத்தவுடன் முதல் ரகாஅத்தைத் தவறவிட்டதால் பின்னால் எழுந்து தொழும் தொழுகையாளி களுக்கு பெருத்த இடையூறு அளிக்கும் விதமாக, அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைக்கு முரணாக, நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு முரணாகச் சப்தமிட்டு துஆ – பிரார்த்தனை செய்து, பின்னால் இருப்பவர்கள் சப்தமிட்டு கோரஸாக “அமீன'” “அமீன்” என மூச்சு விடும் இடங்களில் எல்லாம் கத்த வைக்கிறார்களே இதன் பொருள் என்ன?

தொழுகை பாழ்!

குளிக்கச் சென்று சேற்றை அள்ளி மேனியில் பூசிக்கொள்வது போல், தொழுது ஸலாம் கொடுத்தார்களோ இல்லையோ, அல்லாஹ்வின் கட்டளைளையயும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையையும் அப்பட்டமாக மீறுவதால், அவர்களின் தொழுகை அவர்களின் முகத்திலேயே எறியப்படும் என்பதை அறியாதவர்களா இந்தப் புரோகித மவ்லவிகள்?

அல் அஹ்ஸாப் 33:36 இறைக் கட்டளை என்ன கூறுகிறது,

அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஒன்றைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அதில் வேறு அபிப்பிராயம் கொள்ள நம்பிக்கையாளரான ஆணுக்கோ, பெண்ணுக்கோ உரிமையே இல்லை. (இப்படி) அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் யாரும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (33:36)

இந்தத் தெளிவான நேரடியான அல்லாஹ்வின் கட்டளையை அறியாதவர்களா இந்தப் புரோகித மவ்லவிகள்?  நன்கு அறிந்த நிலையில் தொழுகையாளிகளின் தொழுகையைப் பாழாக்கும் இந்த அசாத்தியத் துணிச்சல் இவர்களுக்கு எதனால் ஏற்படுகிறது?

தொழவைப்பதற்காக ஹராமாக, அற்பமாக இவ்வுலகில் வாங்கும் கூலி – சம்பளம்தானே இந்த இமாம்களை ஹிமாலயக் குற்றத்தைச் செய்யத் தூண்டுகிறது. சப்தமிட்டு(துஆ) பிரார்த்தனை செய்து வரம்பு மீறுகிறவர்களை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்று நெத்தியடியாக இறைவன் கூறி இருந்தும், தொழுகை முடிந்தவுடன் இந்த இமாம்களை வரம்பு மீறச் செய்யும் செயல் எது? தொழவைக்க ஹராமான கூலியை வாங்குவதால்தானே ஷைத்தான் இவர்களை வரம்பு மீறத் தூண்டுகிறான். தானும் வழிகெட்டு மக்களையும் வழிகெடுக்க வைக்கிறான். இது எவ்வளவு பெரிய தவறு என்பதை இறுகிக் கற்பாறைபோல் கடினமாகிவிட்ட அவர்களின் உள்ளங்களால் உணர முடியவில்லையே! 7:179 இறைக் கட்டளை கூலி – சம்பளம் வாங்கும் இமாம்களுக்குப் பொருந்துமா? பொருந்தாதா?

யார் மாபெரும் குற்றவாளி?

சுமார் ஐம்பது(50) இறைக் கட்டளைகளுக்கு முரணாக அனைத்து ஹராம்களையும் சாப்பிட்டு, தடுக்கப்பட்டக் காரியங்களைச் செய்யும் ஒருவனைவிட மாபெரும் குற்றவாளியாக சுமார் நூறு(100) இறைக் கட்டளைகளுக்கு முரணாக மார்க்கப் பணியை – இமாமத்தை கூலிக்கு – சம்பளத்திற்கு செய்யும் ஒருவன் இருக்கிறான் என்பதை மறுக்க முடியுமா? முன்னவன், தான் வழிகேட்டில் செல்கிறானேயல்லாமல் மற்றவர்களுக்கு வழிகேட்டை நேர்வழியாகப் போதிப்பதில்லை. அந்த வகையிலும் அவன் உயர்ந்தவனாக ஆகிவிடுகிறான். அதற்கு மாறாக மார்க்கப் பணியை -இமாமத்தை கூலிக்கு – சம்பளத்திற்குச் செய்யும் ஒருவன் தான் வழிகெடுவதோடு தன்னை நம்பி தன் பின்னால் வரும் பெருங்கொண்ட மக்களையும் பல கோணல் வழிகளில் இழுத்துச் சென்று நரகில் தள்ளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்படுகிறான் என்பதை இந்தப் புரோகித மவ்லவிகள் மறுக்க முடியுமா? ஹராமான கூலி – சம்பளம் எத்தனைக் கொடிய செயல்களை செய்ய வைக்கிறது என்பதை தூய இறை நம்பிக்கையாளர்கள் மட்டுமே உணர முடியும்.

அதே வரிசையில்தான் இந்தப் புரோகித மவ்லவிகள் 7:205 இறைக் கட்டளைக்கு நேர் முரணாக மக்களை சப்தமிட்டு திக்ர் – இறை தியானம் செய்யவைத்து வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள் பல தரீக்காக்களையும் சூஃபிசத்தின் பெயரால் கற்பனை செய்து, பெருங்கொண்ட மக்களை அதில் மூழ்கச் செய்து, ஷைத்தான் காட்டும் பொய்த் தோற்றங்களை நம்பி ஏமாற வைக்கிறார்கள். வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள். நரகில் தள்ளுகிறார்கள். ஹராமான வழியில் மார்க்கப் பணிக்கு சம்பளம் வாங்குவதே இதற்கும் காரணம் என்பதை மறுக்க முடியுமா?

உலகிற்கு கேடு விளைவிக்கும் மவ்லவிகள்!

இப்படி அல்லாஹ் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்கென்றே இறக்கி அருளிய இறுதி வழிகாட்டும் நூல் அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்களுக்கு முரணாக, அற்ப இவ்வுலக ஆதாயங்களுக்காக புரோகித மவ்லவிகளின் வழிகெட்ட சுய  கற்பனைகளில் உருவானவைதான் தக்லீது, மத்ஹபுகள், தர்கா – சமாதிச் சடங்குகள்,  தரீக்காக்கள், அஹ்லஹதீஸ், முஜாஹித், ஜாக், ததஜ போன்ற இயக்கங்கள், அஹ்ல குர்ஆன், குலாம் அஹ்மத் காதியானி அஹ்மதி, ஸலஃபி போன்ற அமைப்புகள்,  இவை அனைத்துமே ஒன்றுபட்ட ஒரே சமுதாயம் (21:92,  23:52) என்று அல்லாஹ் உறுதிபடக் கூறும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி பல கூறுகளாக்கும் வழிகெட்ட அமைப்புகளே அன்றி நேர்வழி செல்பவை அல்ல. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், அல்குர்ஆனின் எண்ணற்ற எச்சரிக்கைகளை நிராகரித்து – புறந்தள்ளி,  அல்லாஹ்வுக்காக,  மறுமையில் அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்து செய்யக் கடமைப்பட்ட மார்க்கப் பணியை – இமாமத்தை இவ்வுலகில் சம்பளத்திற்காக செய்வதேயாகும். புரோகித மவ்லவிகள் மார்க்கப்பணி – இமாமத் இவற்றைத் தொழிலாக்கி அதையே தங்களின் பிழைப்பாகக் கொண்டிருப்பதால் முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டும் தீங்கிழைக்கவில்லை. அகில உலக அனைத்து மக்களுக்கும் பெரும் தீங்குகளை இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் அல்குர்ஆனில் முஸ்லிம் சமுதாயத்தை நடுநிலைச் சமுதாயம் (அல்பகரா 2:143) சாட்சி சொல்லும் (சமுதாயம் அல்ஹஜ் 22:78) உலக மக்களிடம் நன்மையை ஏவி,  தீமையைத் தடுத்து வழிநடத்திச் செல்லும் சமுதாயம்(ஆல இம்ரான் 3:110) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறி இருக்கிறான். மற்ற மக்களுக்கு நன்மையையும் தீமையையும் தெளிவாக அல்குர்ஆன் ஆதாரங்களைக் கொண்டு விளக்கி,  அவர்களை நேர்வழியில் நடத்திச் செல்வதற்கு மாறாக,  முஸ்லிம்கள் மாற்றார்களின் நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் மற்ற மக்களை வழிநடத்துவதற்கு மாறாக மற்றவர்கள் முஸ்லிம்களை வழிநடத்திச் செல்கிறார்கள்.

முஸ்லிம் சமுதாய நிலை!

“எவர்கள் மாற்றார்களின் நடைமுறைகளைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் அந்த மக்களைச் சேர்ந்தவர்களே; நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல” என்ற நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை முஸ்லிம் சமுதாயம் ஆளாகி நிற்கின்றது.

மற்றவர்கள் இறந்தவர்களை சிலையாக வடித்து நிற்க வைத்து மாலை மரியாதை செய்து வணங்குகிறார்கள் என்றால் முஸ்லிம்கள் இறந்தவர்களை சமாதியில் படுக்க வைத்து மாலை மரியாதை செய்து வணங்குகிறார்கள். மாற்றார்கள் பால் அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் முஸ்லிம்கள் சந்தனம் அபிஷேகம் செய்கிறார்கள். அவர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். அவர்கள் கொடியேற்றுகிறார்கள்; இவர்களும் கொடியேற்றுகிறார்கள்; அவர்கள் தேர், சப்ரம் என வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். இவர்கள் கூடு என்று வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள்; அவர்கள் திருவிழா என நடத்துகிறார்கள்; இவர்கள் கந்தூரி – உரூஸ் என நடத்துகிறார்கள்.

மற்றார்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டவர்களின் சமாதிகளில் செய்யும் அனைத்து வித சடங்குகளையும் முஸ்லிம்கள் கபரஸ்தானில் செய்கிறார்கள்; அவர்கள் இறந்தவர்களின் பெயரால் திதி, கருமாதி, வருடாந்திரச் சடங்குகள் செய்வதுபோல் முஸ்லிம்கள் 3-ம், 7-ம், 40-ம், வருட  ஃபாத்திஹாக்கள் என சடங்குகள் செய்கிறார்கள்.

வழிபாடுகளில் மட்டுமா?

வணக்க வழிபாடுகளில் மட்டுமல்ல; மனித வாழ்வில் அன்றாடம் இடம்பெறும் பிறப்பு, இறப்பு, பெண்கள் பூப்பெய்தல், திருமணம் போன்றவற்றிலும் மாற்றுமத கலாச்சாரங்களை அப்படியே முஸ்லிம்கள் பின்பற்றுகின்றனர். குறிப்பாகத் திருமணத்தில், ஆண், பெண்ணுக்கு மஹர் கொடுத்து திருமணம் முடிப்பதை மார்க்கம் கட்டாயமாக்கி இருக்கும் நிலையில், அதற்கு நேர்முரணாக ஹிந்து கலாச்சாரத்தைப் பின்பற்றி வரதட்சனை, சீர்செனத்தி, திருமண விருந்து என பெண் வீட்டரைப் பிச்சை எடுக்கும் நிலைக்கே முஸ்லிம்கள் ஆளாக்கி வருகிறார்கள். திருமண நிகழ்ச்சிகள்-சடங்குகள் அனைத்தும் அப்படியே ஹிந்து மத கலாச்சாரத்தைப் பின்பற்றியே நடைபெறுகிறது.

ஹிந்து பூசாரிகள் மதத்தின் பெயரால் எப்படிப்பட்ட மூடச் சடங்குகளை அரங்கேற்றுகிறார்களோ அதை அப்படியே அடியொற்றி முஸ்லிம் பூசாரிகளும் முஸ்லிம்களின் திருமணத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆக பிறப்பிலிருந்து இறப்புவரை முஸ்லிம்களின் வாழ்நாளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் மாற்றுமத கலாச்சாரபடியே நடந்தேறி வருகிறது. அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித்தராக அல்ஃபத்திஹா என முழங்கி சில குர்ஆன் வசனங்களை ஓதி அதை இஸ்லாமிய சடங்குபோல் காட்டுவதேயன்றி அவற்றிற்கும் தூய இஸ்லாமிய மார்க்கத்திற்கு அணுவளவும் சம்பந்தமே இல்லை.

அரசியல் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டதா?

அரசியலும் இஸ்லாத்திற்குள் அடங்கியதே. இந்திய ஜனநாயக அரசியலில் வாக்களிப்பது, வேட்பாளர்களாக நிற்பது நிர்பந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதே. அவற்றை தவிர்த்தால் மண்ணின் மைந்தர்கள் என்ற உரிமையை இழந்து நாடற்றவர்கள் போல வாழும் நிலை ஏற்படலாம். அரசுக்கு வரிகள் பல கட்டினாலும், அரசிடமிருந்து பெறவேண்டடிய உரிமைகளைப் பெற முடியாமல் போகும் நிலை ஏற்படும். எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என அல்லாஹ் பல இடங்களில் வாக்களித்துள்ளான்.(2:233, 286, 6:152, 7:42, 23:62)

இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது கூடாது; இறைவனுக்கு இணைவைக்கும் செயல் எனக் கூறும் புரோகித மவ்லவிகளும் உண்டு. சிலர் வாக்களிக்கலாம்;  ஆனால் வேட்பாளராக நிற்பது கூடாது என்பர். முஸ்லிம்கள் வேட்பாளராக நிற்பது கூடாது என்பர், முஸ்லிம்கள் வேட்பாளர்களாக நிற்கக்கூடாது; ஆனால் முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்து பிரசாரம் செய்யலாம் என்பர். உயிரைக் கொடுத்து அவர்களுக்காக வேலை செய்து முஸ்லிம் அல்லாத வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய் வேண்டும் என முழங்குவோரும் உண்டு. அப்பதவியில் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள் அனைத்திற்கும் துணைபோன குற்றத்திற்கு ஆளாக நேரிடுமே என்ற அச்சம் இல்லாதவர்கள். அதே சமயம் அவர்கள், வரதட்சணை வாங்கி நடக்கும் திருமணங்களில் கலந்துகொள்ளக் கூடாது. அது தீமைக்குத் துணை போவதாகும் என உளறுவது வேடிக்கையிலும் வேடிக்கை. கேவலம் அற்ப உலக ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டு இந்தப் புரோகித மவ்லவிகள் இப்படி தங்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவாறு விதவிதமான (ஃபத்வா) தீர்ப்புகளை கற்பனையாகச் சொல்லி வருகிறார்களே அல்லாமல், அல்லாஹ்வின் பொருத்தத்தையோ, மக்களின் ஈருலக நன்மைகளையோ குறிக்கோளாகக் கொண்டு அல்ல.

நிர்பந்த நிலை!

இன்று இந்தியாவில் முஸ்லிம்களுக்கிருக்கக்கூடிய நிர்பந்த நிலையில் வாக்களிப்பதையோ, வேட்பாளராக நிற்பதையோ குற்றமாகச் சொல்ல முடியாது. ஆனால் அவற்றிலும் மற்றவர்களின் நடைமுறைகளை பின்பற்றி முஸ்லிம்கள் அவர்கள் பின்னால் செல்லாமல், தங்களின் அழகிய நடைமுறைகளால் மாற்றாரைக் கவர்ந்து, அவர்களைத் தங்கள் பின்னால் வரச் செய்ய வேண்டும். இன்று இந்தியாவில் எதார்த்தத்தில் ஜனநாயகம் ஆட்சி புரியவில்லை; பணநாயகமே ஆட்சி புரிந்து வருகிறது. அராஜகங்கள், அட்டூழியங்கள் அனைத்தையும் செய்து பணத்தை ஈட்டினால், அப்பணத்தைக் கொண்டே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, மேலும் கோடி கோடியாகப் பணத்தைச் சேர்க்கலாம். இன்றைய ஆட்சியாளர்களின் நிலை இதுதான். நீதி, நியாயம், தர்மம், நேர்மை, எளிமை இவை எதையுமே ஆட்சியாளர் களிடம், அதிகாரிகளிடம் எதிர்பார்க்க முடியாது.

அழகிய முன்மாதிரி!

ஆனால் இதற்கு மாறாக மனித நேயத்துடன் அரசியலில் ஈடுபட முஸ்லிம்கள் முன்வரவேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்யும் நன்னோக்கத்துடன் அரசியலில் ஈடுபடவேண்டும். மக்களுக்குத் தொண்டு செய்ய எம்.எல்.சி., எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகள் முக்கியம் அல்ல. அப்பதவிகள் இல்லாமலும் தொண்டு செய்ய முடியும். அரசியலில் ஈடுபட விரும்பும் முஸ்லிம்கள் தாங்கள் இருக்கும் பகுதிகளில் முதலில் மக்கள் தொண்டு செய்ய ஆரம்பிக்க வேண்டும். தங்களின் தொண்டின் மூலம் அப்பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாக வேண்டும். இவரின் தொண்டால் மக்கள் இவரை நேசிக்க வேண்டும். இவர்தான் தங்களுக்கு எம்.எல்.சி. யாகவோ, எம்.எல்.ஏ.ஆகவோ, எம்.பி.ஆகவோ, வரவேண்டும் என மக்கள் விரும்ப வேண்டும். அந்த மக்கள் வற்புறுத்தி இவரை வேட்பாளராக நிற்க வைக்க வேண்டும். தொகுதி மக்களே இவருக்காக தேர்தல் பணி செய்ய வேண்டும். வெற்றிபெறச் செய்ய வேண்டும். அவரது தன்னலமற்ற மக்கள் சேவை அவருக்கு அப்பதவியைப் பெற்றுத்தர வேண்டும். இது இஸ்லாத்தில் வரவேற்கத்தக்கதே.

இன்றைய வேட்பாளர்களின் நிலை!

ஆனால் இன்று நடைமுறையில் என்ன நடக்கிறது? வேட்பாளர் தொகுதியில் வசிப்பவராகவும் இருக்க மாட்டார். அந்த மக்களுக்கு எவ்விதத் தொண்டும் செய்திருக்க மாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் அத்தொகுதியில் தலையைக் காட்டுவார். காணும் மக்களுக்கெல்லாம் கூழைக்கும்பிடு போடுவார். அங்குள்ள  சிலைகளுக்கெல்லாம் மாலையிட்டு மரியாதையுடன் கும்பிடுவார். கோவில், சர்ச், தர்கா, பள்ளிவாசல் என ஏறி இறங்குவார். அப்போது மட்டுமே. அந்த வேட்பாளருக்கு அங்குள்ள மக்கள் எல்லாம் மக்களாகத் தெரிவார்கள்.

கூலிக்கு ஆட்களைப் பிடித்து மாலைகள் வாங்கிக் கொடுத்து மக்கள் முன் தனக்கு மாலையிடச் செய்து, ஆகா, ஓகோ என புகழச்செய்து தான் மக்களிடம் பெரும் செல்வாக்குப் பெற்றவர் என நடிப்பார். தேர்தல் வேலை செய்கிறவர்களுக்கு பணம் கொடுத்து, சாராயமும் வாங்கிக் கொடுத்து பெருங்கூட்டத்துடன் வீதி வீதியாகச் சென்று வாக்கு வேட்டையாடுவார். தேர்தலுக்கு முதல் நாள் வீடு வீடாக ஏற இறங்கி 500/-,  100/- எனக் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்கி வெற்றி வாகை சூடுவார். அதன் பின்னர் அந்தத் தொகுதிப் பக்கம் அவர் தலைகாட்டுவது அரிதிலும் அரிது. தேர்தல் சமயம் செலவிட்ட பணத்தை வட்டியும் முதலுமாக அதைவிட பன்மடங்காகச் சுருட்டுவதிலேயே குறியாக இருப்பார். இன்றைய வேட்பாளர்களின் நிலை இதுதான்.

ஆனால் வருதப்பட வேண்டியது என்ன தெரியுமா? இன்று இந்திய அரசியல் களத்தில் இறங்கும் முஸ்லிம்கள் குர்ஆன், ஹதீஸ் போதிக்கும் அழகிய நடைமுறைகளைக் கைகழுவி விட்டு, மாற்றார்கள் கடைபிடிக்கும் தேர்தல் அசிங்கங்களையே இவர்களும் பின்பற்றி நடப்பதாகும். இப்படி மாற்றாரின் நடைமுறைகளைப் பின்பற்றி, இறை நம்பிக்கை(ஈமான்) இழந்து நாளை மறுமையில் நரகம் புகுவதைவிட அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே அவர்களுக்கு மிக நல்லதாகும்.

முஸ்லிம் வேட்பாளர் எப்படி நடக்க வேண்டும்?

முஸ்லிம்கள் இன்றைய ஜனநாயக அரசியலில் ஈடுபட விரும்பினால், முதலில் மக்களுக்கு தொண்டு செய்து அதன் மூலம் மக்களுக்கு அறிமுகமாக வேண்டும். அவர்களே விரும்பி இவர்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும். அவர்களே தேர்தல் பணிகளைச் செய்ய வேண்டும். தேர்தல் அல்லாத காலங்களில் மக்கள் சேவைக்காக வீடுவீடாக ஏறி இறங்குகிறவர்கள் தேர்தல் நேரத்தில் வீடுவீடாக ஏறி இறங்கி வாக்கு வேட்டையாடவோ, வாக்குகளை விலைக்கு வாங்கவோ முற்படக்கூடாது, கோவில், சர்ச், தர்கா, பள்ளிவாசல் என ஏறி இறங்கி வாக்குகளைக் கேட்கக் கூடாது. சிலைகளுக்கு, சமாதிகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்து கும்பிடக்கூடாது. பணியாளர்களுக்கு சாராயம் வாங்கிக் கொடுத்து வேலை வாங்கும் கேவல நிலைக்கு ஆளாகக் கூடாது. போலியாக மக்களைக் கவரும் எவ்வித நடிப்பிலும் ஈடுபடக் கூடாது. தொண்டை முறை தவறி தொழிலாக்கியுள்ள மாற்றாரின் அநீதமான தேர்தல் யுக்கிகளைக் கையாளக் கூடாது.

இன, மொழி, ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என பேதம் பாராது மனித நேயத்துடன் சமூகத் தொண்டு செய்து அதன் மூலம் மட்டுமே தொகுதி மக்களுக்கு அறிமுகமாகி, அந்த மக்களே இவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி, வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். இந்த  அழகிய இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்றி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் தாராளமாக அரசியலில் ஈடுபடலாம். தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கலாம். எம்.எல்.சி., எம்.எல்.ஏ., எம்.பி. மந்திரி என மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றுவதை இஸ்லாம் ஒருபோதும் தடுக்காது.

அல்லாஹ்மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம், மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்ய வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒரு முஸ்லிம், மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகளை எடுத்து நடப்பதில் ஒருபோதும் பின்வாங்க முடியாது. ஆனால் போலியான ஒரு முஸ்லிம், மக்களுக்குத் தொண்டு செய்கிறேன் பேர்வழி என கிளம்பி, தொண்டை தொழிலாக்கி அநீதமான முறைகளில் மக்கள் பணத்தைச் சுருட்டவும், பொது மக்களை ஏமாற்றி வஞ்சிக்கவும் முற்பட முடியும். அப்படிப்பட்ட ஏமாற்றுப் பேர்வழிகளுக்கே மேலே கூறப்பட்டுள்ள விதிமுறைகள் வேம்பாகக் கசக்கும். நடைமுறை சாத்தியமில்லை என பிதற்றுவர். அவர்கள் மட்டுமே இஸ்லாம் கூறும் இந்த விதிமுறைகளைப் புறக்கணித்துவிட்டு மாற்றார்களின் அநீதமான, சுயநலமிக்க, மக்களை வஞ்சிக்கும் நடைமுறைகளைப் பின்பற்ற முடியும். அப்படிப்பட்டவர்கள் இன்றைய அரசியலில் ஈடுபடாமல் இருப்பதே அவர்கள் தங்களை மறுமையின் வேதனையிலிருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும்.

புரோகித மவ்லவிகளே காரணம்!

இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் மார்க்க நெறிகளுக்கு முரண்பட்டு நடப்பதற்கும் இந்தப் புரோகித மவ்லவிகளே ஒரு வகையில் காரணமாகிறார்கள். வாக்களிப்பது ஹராம் – ஷிர்க் எனத் தீர்ப்புக் கொடுப்பதும் (ஃபத்வா) ஒரு சில புரோகித மவ்லவிகளே; வாக்களிக்கலாம்;  ஆனால் தேர்தலில் முஸ்லிம்கள் போட்டியிடுவது ஹராம்; ஆனால் தேர்தலில் போட்டியிடுபவர்களை ஆதரித்து உயிரைக் கொடுத்தேனும் வேலை செய்து அவர்களை வெற்றிபெறச் செய்வது நமது கடமை எனத் தீர்ப்பு சொல்லும் புரோகித மவ்லவிகளும் உண்டு. தேர்தலில் ஹராம், ஹலால், ஷிர்க், பித்அத் இப்படி எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. எப்பாடுபட்டாவது அரசியலில் ஈடுபடுவதே இந்திய முஸ்லிம்களுக்கு நன்மை புரோகித மவ்லவிகளும் உண்டு.

இப்படி புரோகித மவ்லவிகளும், அரசியல்வாதிகளும் கூட்டுக் கள்ளன்களாக இருக்கும் நிலையில், தங்கள் மனம்போன போக்கில் மார்க்கச் சட்டம் சொல்லும் காரணம் என்ன? இவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதுதானே? பிழைப்பு நடத்த மக்களின் தயவு தேவை. எனவே மக்களைத் திருப்திப்படுத்த (அல்லாஹ்வை அல்ல) இந்தப் புரோகித மவ்லவிகள் இப்படி எல்லாம் மார்க்கத் தீர்ப்புச் சொல்லும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள்.

அல்லாஹ்வின் மவ்லவிகள்!

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதால் நன்கு அறிந்த நிலையிலேயே (பார்க்க 2:75,109,146, 6:20) நேர்வழிக்குப் பதிலாகக் கோணல் வழிகளை நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்வது கொடிய குற்றம். ஹிமாலயத் தவறு, மாபெரும் ஹராம் என பல குர்ஆன் வசனங்கள் கூறிக் கொண்டிருக்க அவற்றைக் கண்டுகொள்ளாத இந்தப் புரோகித மவ்லவிகள், இதர ஹராமான விஷயங்களில் குர்ஆன், ஹதீஸில் கூறப்படாத, அல்லாஹ்வோ, அவனது தூதரோ விதிக்காத விதிகளை விதித்து (பார்க்க. 9:31, 42:21) அல்லாஹ்வாகவே தங்களை ஆக்கிக் கொள்கிறார்கள்.

வட்டி வாங்குகிறவனின் வீட்டு நிழலில் கூட நிற்கக் கூடாது; வட்டித் தொழில் செய்கிறவனின் அன்பளிப்பைச் சாப்பிடுவதும் ஹராம்; தவணைமுறை வியாபாரமும் வட்டியே! காலம் காலமாக இருந்துவரும் SLM வியாபாரத்தில் ஹலாலான வியாபாரமும், ஹராமான வியாபாரமும் இருப்பதுபோல் MLM, ஷேர் மார்க்கட், மியூச்சுவல் பண்ட் வியாபார முறைகளிலும் ஹராரான வியாபாரமும், இருக்க ஒட்டுமொத்தமாக ஹராம், கோவில், சர்ச் திருவிழாக்களில் போய் ஆகுமான பொருளை விற்பதும் ஹராம்; கோவில், சர்ச் போன்ற இடங்களுக்குச் செல்பவர்களை வாடகைக்காக ஏற்றிச் செல்வதும் ஹராம்; மாற்று மதக்காரர்களின் கருத்துக்களை முஸ்லிம்கள் தங்கள் அச்சகத்தில் கூலிக்கு அச்சிட்டுக் கொடுப்பதும் ஹராம்; பெண்கள் காதுகுத்தி நகை அணிவது ஹராம்; வரதட்சணை திருமணங்களில் கலந்து கொள்வது ஹராம்; இணை வைக்கும் இமாம் பின்னால் நின்று தொழுவது ஹராம் இப்படி எல்லாம் அல்லாஹ்வோ அவனது தூதரோ விதிக்காத பல சட்டங்களை எல்லாம் இவர்களாகக் கற்பனை செய்து தீர்ப்பு (ஃபத்வா) கொடுக்கும் இந்தப் புரோகித மவ்லவிகள். அல்குர்ஆனில் சுமார் 100 இடங்களில், பல கோணங்களில் மார்க்கப் பணிக்குக் 4லி கூடாது-ஹராம்; கூலியால் ஏற்படும் தில்லுமுல்லுகள், வழிகேடுகள், அனைத்தையும் விலாவாரியாக, நெத்தியடியாக அல்லாஹ் நேரடியாக விவரித்திருந்தும் அவற்றை விளங்காமல் இருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன? மார்க்க நடைமுறைகளில், வணக்க வழிபாடுகளில், பொருள் சுட்டும் வியாபாரம், தொழில் முறைகளில் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லாத சட்டங்களை இவர்களாகக் கற்பனை செய்து சொல்வதற்கும் தக்க காரணம் உண்டு. மார்க்கம் பற்றி அல்லாஹ் முஃமினூன் 22:78-ல்,

மார்க்கம் மிக எளிதானது!

இந்த மார்க்கத்தில் அல்லாஹ் உங்களுக்கு யாதொரு கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை” (22:78) என்று  கூறுவதற்கொப்ப மார்க்கம் மிகமிக எளிதாக இருக்கும் நிலையில்,

“அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க  விரும்புகிறானே தவிர கஷ்டத்தை(க்கொடுக்க) விரும்பவில்லை” (22:78) என்று தெளிவாக அறிவித்திருக்கும் நிலையில்,

அன்றி அல்லாஹ்(தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகிறான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான் (4:28) என மனித பலகீனத்தைக் குறிப்பிட்டே அறிவித்திருக்கும் நிலையில் “அல்லாஹ் விதித்ததை நிறைவேற்றுவதில் நபிக்கு எவ்விததை நிறைவேற்றுவதில் நபிக்கு எவ்வித சிரமுமில்லை; இதற்கு முன்னர் அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே…..” (33:38) என்று அல்லாஹ் தெளிவுபடுத்தி இருக்கும் நிலையில்.

நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் சிரமமானதாக ஆக்கிக் கொண்டால், அவரை அது மிகைத்து விடும். எனவே நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடத்தில்) உதவி தேடுங்கள். (அபூ ஹுரைரா(ரழி) புகாரீ:39)

இலகுவாக்குங்கள், சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள்; சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்துவிடாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்.(அனஸ்(ரழி) புகாரீ69)

நபி(ஸல்) அவர்கள் அபூ மூஸா(ரழி) அவர்களையும், முஆத்பின் ஜபல்(ரழி) அவர்களையும் யமனிலுள்ள இரு மாகாணங்களுக்கு சுவர்னர்களாக அனுப்பும்போது அவர்களுக்கு செய்த அறிவுரைகளில் ஒன்று, (மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களை) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றி விடாதீர்கள்.. (அபூ புர்தா(ரஹ்) புகாரீ 4341, 4342) அபூ மூஸா(ரழி) புகாரீ 6124)

 

 

புரோகித தந்திரம் ஏன்?

இவ்வாறு அல்லாஹ்வின் தூதரும் தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கட்டளையிட்டிருக்கும் தெளிவாக நேரடியாகக் கட்டளையிட்டிருக்கும் நிலையில், இந்தப் புரோகித மவ்லவிகள் அல்லாஹ்வும், அவனது தூதரும் விதிக்காததை எல்லாம் விதித்து மார்க்கத்தை ஏன் கடினமாக்குகிறார்கள்? மக்களுக்கு ஏன் சிரமத்தைக் கொடுக்கிறார்கள்? என்று சிந்தித்தால் ஒரு உண்மை பளிச்சென்று தெரியவரும். அந்த உண்மை என்ன தெரியுமா?

மார்க்கம் எளிதாகவும், தெளிவாகவும் இருந்தால் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக மார்க்கத்தை அறிந்து அதன்படி நடக்க முற்பட்டுவிடுவார்கள். இந்தப் புரோகித மவ்லவிகளைத் தேடிப்போக மாட்டார்கள். புரோகிதர்களுக்கு வருமானம் அற்றுப்போய்விடும். புரோகித மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதாலேயே, மார்க்கமல்லாதவற்றை எல்லாம் மார்க்கமாக்கி மக்களை பெரும் சுற்றலில் விட்டு தங்களின் தயவை நாடிவரச் செய்துவிடுகிறார்கள்.

இப்புரோகித மவ்லவிகள் போதிக்கும் மார்கக்ம்(மதம்) கடினமாக இருப்பதால், பொதுமக்கள் அதன்படி நடப்பதைக் கைவிட்டுவிடுகின்றனர். முஸ்லிம்களில் மிகமிக பெரும்பான்மையினர், 99% என்று கூட சொல்லலாம் தொழுகை, நோன்பு, ஜகாத் இவற்றை முறையாகக் கடைபிடிப்பதிலும், ஹலால், ஹராம் பேணி நடப்பதிலும் மிகமிகப் பின்தங்கி இருக்கின்றனர். மார்க்கக் கடமைகள் மிகக் கடினமாக இருப்பதால், தங்களைப் போன்ற சாதாரண மக்களால் அவற்றைக் கடைபிடிக்க முடியும் என்ற மூடநம்பிக்கையில் மூழ்கி, இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு அளவுக்கு மீறிய மரியாதை கொடுத்து, அவர்கள் சொல்லுவது தான் இறைவாக்கு (வேதவாக்கு); அதுவே நேர்வழி என குருட்டுத்தனமாக நம்பிச் செயல்பட முற்படுகின்றனர். இப்புரோகித மவ்லவிகளும் தங்களின் அற்பமான இவ்வுலக வரும்படியைக் குறிக்கோளாகக் கொண்டு மார்க்கமே இல்லாதவற்றை எல்லாம் மார்க்கமாகச் சொல்லி மக்களை வஞ்சித்து வயிறு வளர்ப்பதோடு, அந்த மக்களை நரகில் கொண்டு தள்ளுகின்றனர்.

நாயிலும் கேடாக முஸ்லிம்களின் நிலை!

ஆக, இன்று முஸ்லிம்கள் ஆன்மீகம், அரசியல், இன்ன பிற துறைகள் அனைத்திலும் பின்தங்கி இதர சமூகங்களால் நாயிலும் கேடாக இழிவுபடுத்தப்படுவதற்கு, வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடப்பதற்கு, படைத்த எஜமானன் அல்லாஹ் கொடுத்துள்ள வாழ்க்கை நெறி – அல்குர்ஆனைப் பின்பற்றுவதற்கு மாறாக, மேலே கண்ட அனைத்துத் துறைகளிலும் மாற்றுமதக் கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றி வழிகேட்டில் சென்று நரகில் விழ, இந்தப் புரோகித மவ்லவிகள் மார்க்கத்தை மதமாக்கி, அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதுதான் என்பதை இந்த மவ்லவிகளால் மறுக்க முடியுமா?

மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பவர்கள் பற்றி அல்குர்ஆனின் எச்சரிக்கைகள் பாருங்கள்.

அல்லாஹ்விடம் இதைவிடக் கெட்டதொரு தண்டனை பெற்றவர்களை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ் எவர்களைச் சபித்து, அவர்கள் மீது கோபம் கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குகளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர்களும், ஷைத்தானுக்கு வழிபட்டார்களோ அவர்களும்தான் மிகத் தாழ்ந்த தரத்தினர்; அன்றி நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள் என்று (நபியே!) நீர் கூறும். (அல்மாயிதா 5:60)

நூற்றுக்கும் மேற்பட்ட அல்குர்ஆன் வசனங்களை நிராகரித்து, அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறாக மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட புரோகித மவ்லவிகள் அல்ஜும்ஆ 62:5-ல் தவ்றாத்தை சுமந்துகொண்டு அதன்படி நடக்காத யூத புரோகித மவ்லவிகளை புத்தகங்களைச் சுமக்கும் கழுதைகள் எனக் கடிந்து அல்லாஹ் கூறி இருப்பதுபோல், இந்த முஸ்லிம் மதப் புரோகித மவ்லவிகளும் அல்குர்ஆனை சுமந்துகொண்டு அதன்படி நடக்காததால் புத்தகங்களைச் சுமக்கும் கழுதைகள் என அல்லாஹ் கடிந்து கூறும் நிலையில் இருப்பதை அவர்களால் மறுக்க முடியுமா?

புரோகித மவ்லவிகளின் இழிநிலை!

    மார்க்கதைப் பிழைப்பாகக் கொண்ட புரோகித மவ்லவிகளின் இழிநிலையை இன்னும் பாருங்கள்.

(நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பியுங்கள். அவனுக்கு நாம் நம்முடைய அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். எனினும் அவன் அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே ஷைத்தான் அவனைப் பின் தொடர்ந்து சென்றான்; அவன் வழிதவறிவிட்டான்.

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும் அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன்(சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கின்றது. நீங்கள் அதனைத் துரத்தினாலும் நாக்கை தொங்கவிட்டுக் கொள்கிறது. அதனை (துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக இச்சரித்திரத்தைப் படித்துக் காட்டுங்கள்.(அல்அஃராஃப் 7:175,176)

 

 

மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொள்வதால் அல்குர்ஆனின் நூற்றுக்கு மேற்பட்ட வசனங்களைப் பொய்யாக்கும் நிலைக்கு இந்தப் புரோகித மவ்லவிகள் தள்ளப்படுகிறார்கள். தங்களின் சரீர இச்சைகளையே பின்பற்றுகின்றனர். எனவே பணம் படைத்தவர்களின், பள்ளிகளின், மதரஸாக்களின் நிர்வாகிகளின் முன்னால் இவர்கள் நிற்கும் நிலை ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறதா? இல்லையா?  அல்குர்ஆனையும், ஹதீஸையும் படித்து அவற்றிலுள்ள அத்தாட்சிகள் கிடைக்கப்பெற்றும் அதிலிருந்தும் முற்றிலும் வெளியேறி ஷைத்தானைப் பின்தொடர்ந்து செல்கிறார்களா? இல்லையா? வழி தவறிவிட்டார்களா? இல்லையா? அவர்களும் வழிகெட்டு, மக்களையும் வழிகெடுத்து நாளை மறுமையில் நரகத்தை நிரப்பக் காரணமாக இருப்பது சம்பளத்திற்கு மார்க்கப் பிரசாரம், இமாமத் செய்வதுதானே? சொந்தக் காலில் நின்று சுயமாக உழைத்து ஹலாலான முறையில் தங்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்து கொண்டு மார்க்கப் பணி, இமாமத் இவற்றை அல்லாஹ்வுக்காக மறுமையில் கூலியை எதிர்பார்த்துச் செய்தால் இந்த இழி நிலை ஏற்படுமா? மவ்லவிகளே சொல்லுங்கள்.

(நபியே!) அவர்களின் பெரும்பான்மையினர் பாவத்திற்கும், அநியாயத்திற்கும், விலக்கப்பட்ட பொருள்களை விழுங்குவதற்கும் (மிகத் தீவிரமாக) விரைந்து செல்வதை நீங்கள் காண்பீர்கள்! அவர்கள் செய்பவை மிகத் தீயவை!(அல்மாயிதா 5:62)

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகித மவ்லவிகளுக்கு இந்த 5:62  எச்சரிக்கை எந்த அளவு பொருந்திப் போகிறது என்தைச் சிந்தித்துப் பாருங்கள்.

கூலி வாங்க அனுமதிக்கப்படாதவை!

ஆக, 3:104,110, 9:71, 103:1,2,3 இறைக் கட்டளைகளின்படி தங்கள் மீது கடமையான பிரசாரபணி, இமாமத், அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல் போன்றவற்றிற்கு கூலி-சம்பளம் அறவே கூடாது. இவற்றிற்குரிய கூலி – சம்பளம் அறவே கூடாது. இவற்றிற்குரிய கூலி நாளை மறுமையில் அல்லாஹ்விடம் இருக்கிறது. இவற்றிற்கு கூலி வாங்குவது அரசு சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ள அரசு சம்பளம் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ள அரசு அதிகார்கள், தாங்கள் மக்களுக்கு செய்து கொடுக்கக் கடமைப்பட்டவற்றை  செய்து கொடுப்பதற்காக மக்களிடம் பணம் வாங்குவது எப்படி லஞ்சமோ -ஹராமோ அதேபோல் லஞ்சமேயாகும். முழுக்க முழுக்க ஹராமேயாகும்.

 நபி(ஸல்) வழிகாட்சி இருப்பார்கள்!

முழுநேர மார்க்கப் பணி செய்கிறோம் என்றோ, அதற்காக நேரம் ஒதுக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். இமாமத்திற்கு குறிப்பிட்ட பள்ளிக்கே செல்லவேண்டியுள்ளது. வேறு தொழில் பார்த்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு தொழவைக்க செல்ல முடியாது போன்ற எப்படிப்பட்ட காரணத்தைச் சொல்லியும் ஹராமை ஹலாலாக்க முடியாது. இந்தக் காரணங்கள் அனைத்தும் அன்று நபி(ஸல்) அவர்களது காலத்திலும் இருக்கத்தான் செய்தன. இவை ஹராமை ஹலாலாக்கப் போதிய காரணங்கள் என்றால் அன்றே நபி(ஸல்) அவர்கள் மார்க்கப் பணிக்கு, இமாமத்துக்கு கூலி கொடுப்பதை நடைமுறைப்படுத்தி நமக்கு வழிகாட்டி இருப்பார்கள். அப்படி ஒரேயொரு ஆதாரத்தையும் யாராலும் காட்ட முடியாது. எனவே கடமையான மார்க்கப் பணிகளைச் செய்ய எக்காரணத்தைச் சொல்லியும் கொடிய ஹராமை (தடுக்கப்பட்டது) ஹலாலாக (அனுமதிக்கப்பட்டது) ஆக்கவே முடியாது.

கூலி வாங்க அனுமதிக்கப்பட்டவை!

ஆயினும் தங்கள் மீது கடமையில்லாத அரபி மொழியை கற்றுக் கொடுப்பது, குர்ஆனையும், ஹதீஸ்களையும் மற்ற மொழிகளில் மொழிபெயர்த்துக் கொடுப்பது, குர்ஆனையே கையால் எழுதியோ, அச்சடித்தோ விற்பது, மார்க்க சம்பந்தப்பட்ட நூல்களை தயாரித்து விற்பது, மார்க்கப் பிரசாரத்திற்கு என்று வெளியூர் செல்லும்போது அதற்குரிய பிரயாணச் செலவை வாங்குவது இவை மார்க்கத்தில் தடுக்கப்பட்டவை அல்ல. இவற்றில் எதையுமே செய்யாமல் ஒரு முஸ்லிம் மரணித்தாலும் நாளை மறுமையில் இவற்றை ஏன் செய்யவில்லை என்று விசாரித்து அல்லாஹ் ஒருபோதும் தண்டனை அளிக்கமாட்டான்.

ஆனால் தன்மீது கடமையான,  மறுமையில் கூலியை பெற்றுத்தரும். அவற்றைச் செய்யாவிட்டால் நாளை மறுமையில் அல்லாஹ் விசாரித்து அவற்றிற்காக தண்டனை அளிப்பானோ அப்படிப்பட்ட கடமைகளை கூலிக்காக – சம்பளத்திற்காக  செய்வதை அல்லாஹ் ஹராமாக்கியுள்ளான் என்பதை தெளிவாக முஸ்லிம்கள் அறிந்துகொள்ள கடமைப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக புரோகித மவ்லவிகள் இந்த உண்மையை விளங்கித் திருந்த முன்வரவேண்டும்: இல்லை என்றால் நாளை மறுமையில் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக நேரிடும்; எச்சரிக்கை. அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரும் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி விளங்கி அதன்படி நடக்க அருள் புரிவானாக.

********************

அழிவுப் பாதையின் உச்சக்கட்டத்தில்

                                                                                                                                              இறைப்பிரியன்

மக்களின் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்ட சாதனங்களில் முதன்மையானதாக தொ(ல்)லைக்காட்சி விளங்குகிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. ஆனால் அதன் மூலம் செய்திகள் உள்ளிட்ட உலக – அறிவியல் – அரசியல் விஷயங்களும் அறிந்து கொள்ளலாம் என்றும், மக்கள் மனங்களை பண்படுத்தும் இது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில்தான் தண்டனைக்காக அனுப்பப்பட்டு சிறையில் இருக்கும்போது கைதிகள் கூட T.V. பார்க்கலாம் என்று கருத்து கூறப்பட்டு அது ஆட்சியாளர்களால் அனுமதிக்கப்பட்டும் வருகிறது.

ஆனால் இன்று நடைமுறையில் இந்த தொலைக்காட்சி சேனல்களில் மக்கள் எந்த நிகழ்ச்சிகளை அதிகம் பார்க்கிறார்கள்? எந்த சேனல்கள் பெரும்பாலும் ரசித்து மகிழ்கிறார்கள் என்று பார்த்தால், அறிவியல் – அரசியல் கூடிய செய்திகளை விடவும் நாடகங்கள் எனப்படும் மெகா சீரியல்களும் – திரைப்படங்களும் – ஆடல் பாடல் – கொண்டாட்ட நிகழ்ச்சிகளும் தான் முன்னணி வகிக்கின்றன. யுக முடிவுக் காலம் வருவதை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கும் உலகம் அதை எந்தளவுக்கு வரவேற்றுக் கொண்டிருக்கிறது என்று யாரும் பெரிய ஆராய்ச்சியில் ஈடுபடவேண்டியதில்லை.

ஆம்! இந்த தொலைக்காட்சிகளின் ஜீவ நாடி திரைப்பட உலகம் இதன்மூலம் உருவாக்கப்படும் படங்கள் – நடிகர்கள் – நடிகைகளின் வாழ்க்கை மக்களை எந்தளவுக்கு அழிவுப்பாதைக்கு அழைத்துச் சென்றுக் கொண்டிருக்கிறது? தினமும் செய்தித்தாள்களை புரட்டினால் காதல் ஜோடி ஓட்டம் – காதல் ஜோடி தற்கொலை, கள்ளக்காதலர்களின் காமக் களியாட்டங்கள் – வயது வரம்பு தாண்டி காம வெறிக்கு பலியாகும் மாணவர் – இளைஞர்கள்; பணம் செலவுக்கில்லையென்றால் கொலை – கொள்ளை இதுவெல்லாம் யார் கற்றுத் தந்த பாடம்? சினிமா தவிர வேறு யார் இதை இவ்வளவு (கேவலமாக) – வேகமாக கற்றுத் தரமுடியும். காசிற்காக சினிமாவில் நடிக்கும் இவர்கள் நிஜமாக வாழ்பவர்களுக்கு எதைக் கற்றுத் தரமுடியும்? இதைத்தான் நிஜத்தில் மூட்டை தூக்குபவர்களுக்கு கூலி பத்து ரூபாய் என்றால் மூட்டை தூக்குபவதைப் போல் நடிப்பவர்களுக்கு கூலி கோடி ரூபாய். இவர்களை இனம் காட்ட இவர்களின் வாழ்க்கை – குடும்பத்தைப் பாருங்கள். விரல்விட்டு எண்ணிப் பாருங்கள். எத்தனை நடிகர் – நடிகை கைப்பிடித்த ஒரே கணவன் – மனைவியாக வாழ்ந்திருக்கிறார்கள். எத்தனை நடிகர் – நடிகைகள் லஞ்ச லாவண்யம் பற்றி பேசுபவர்கள் – அதைத் தவறு என்று கூப்பாடு போடுவார்கள் – வெறுமனே தாங்கள் நடிப்பதற்காக லட்சக்கணக்கில் – கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்களே? அதில் எத்தனை பேர் சரியாக வரிகட்டுகிறார்கள். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்கள்(?) கறுப்பு பணம் வாங்காமல் – மது அருந்தாமல் – விபச்சாரம் செய்யாமல் இருப்பவர்கள் யார்? யார்? என்று யாராவது காட்டினால் தெரிந்து கொள்ளலாம். ஆக அழிவுப் பாதையின் திறவுகோலாக அவதரித்துள்ள ஒவ்வொரு மொழியின் – நாட்டின் திரையுலகில் இப்படித்தான் என்பதை யாராவது மறுப்பவர்கள் உண்டா?

திரையுலகம் இப்படி என்றால் சின்னத்திரையுலகம் அழிவுப் பாதையில் ஊன்றுகோளாக உருவெடுத்து விட்டது. ஆபாசங்களை அருவெறுப்பாக கருதாமல் அதை அரங்கேற்றுவதில் ஒவ்வொரு சேனல்களும் நீயா – நானா? என்று போட்டியில் உள்ளன. எத்தனைப் போர்க்குரல்கள் எழுப்பப்பட்டாலும் அதனைக் கண்டு அஞ்சும் மனநிலையில் எந்த T.V. சேனலும் இல்லை. இதனைக் கட்டுப்படுத்தவேண்டிய அரசாங்கம் தமிழில் பேர் வை; உனக்கு வரிச்சலுகை என்கிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கும் – ஒரே ஒரு சணடை காட்சிக்கும் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு வரி வெறும் ஊறுகாய் மாதிரிதான். எல்லா மொழிக்காரர்களும் ஒருவேளை அரசாணை கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் அந்தந்த மொழி வெறி அவரவர்களுக்கு.

அரை குறை ஆடையுடன் என்ன? அதுவும் இல்லாமல் காட்சி தர நான் ரெடி: படம் பிடிக்க – ஒளிபரப்ப யார் ரெடி? என்று சினிமா விபச்சாரிகள் கேட்கின்றனர். சினிமாத் துறையையும் – சின்னத்திரை எனப்படும் T.V.   சேனல்களையும் தாண்டி மக்களை அழிவின் பக்கம் அடைப்பவர்கள் செய்தித்தாள்கள் மூலம் T.V.   க்கு விளம்பரம்; T.V. யை ஒரு முறை பார்ப்பதைவிட செய்தித்தாளை பத்திரப்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்வார்களே! அதற்காக பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் ஒருங்கேப் பெற்றுள்ளன. அதன் மூலம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் – தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. தனித்தனி செய்தியாளர்கள் தேவையில்லை. அப்புறமென்ன தேசிய வார இதழ்- நாளிதழ் – குடும்ப, வார இதழ் என்று A சர்டிபிகேட் இல்லாமல் கவர்ச்சிப் படங்களை சென்சார் செய்யாமல் வெளியிடும் தைரியம் இந்த குடும்ப(?) இதழ்களுக்குச் சாரும். ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வரும் தினப்பத்திரிகைகளை பார்ப்பவர்களுக்குத் தெரியும். கூச்சப்பட வேண்டி நம்மை நெகிழச் செய்யும் படங்கள் – செய்திகள் தான் எத்தனை எத்தனை? யார் கொடுத்தது இந்த குடும்ப – தேசிய சர்டிபிகேட்,

சீர்கெடுக்கும் சேனல்களுக்கு பண மழை பெய்ய வறட்சி ஏதும் இல்லை. பணம் வெள்ளமும் – பணப் புயலும் போங்கள். நல்ல அமோக விளைச்சல். அதை சாகுபடி செய்ய மடையர்களாய் மக்கள். T.V. யில் வியாபாரம் இல்லாத எந்தப் பொருளையும் யாரும் வாங்காத நிலை அளவுக்கு தயிர் சாதத்திலிருந்து ஊறுகாய், பால், பவுடர், ஷேம்பு, சோப்பு, பிளேடு, அரிசி – எண்ணை – மாவு முதலி இரு சக்கர வாகனங்களிலிருந்து 4 சக்கர வாகனங்கள் வரை எந்த விளம்பரத்தை யார்தான் விட்டு வைத்தார்கள்? – சலூன் கடைக்கு மட்டும்தான் விளம்பரம் இல்லை. எல்லாம் T.V.  மயம்; இல்லை இல்லை எல்லாம் T.V.   மாயம்.

இந்த மூன்றைத் தவிர அடுத்ததாய் மக்களை அழிவின்பால் அறைகூவல் விடுவதாக செல்போன்கள் தயாராகிவிட்டன. பாமரர்களையும் விட்டுவைக்காமல் இந்த செல்போன் சூறாவளி செல் நிறுவனங்களால் சலுகை – மலிவு என்ற கோரப்பிடியில் மக்கள் ஆட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். பள்ளி- கல்லூரி காலங்களில் கைக்கடியாரம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரியாமலிருந்த மக்களுக்கு விஞ்ஞானம் – கம்பியூட்டருக்குப்பின் தயாரித்தது தான் செல்ஃபோன். எல்லா தரப்பினரையும் பதம்பார்த்து அழிவின் அடித்தளமாக செல்ஃபூன்கள் விளங்குவதை யாரும் மறுக்க இயலாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் நீலப்படங்களைக் கூட இதில் பார்க்கும் வசதியும் உண்டு.

பெரிதான் கம்ப்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருந்தால் கண் கெட்டுவிடும் என்று சொன்னார்கள் – அதையும் தாண்டி புனிதமாக சிறிதே – சிறிதான் இந்த செல்போன்களில் இன்டர்நெட் இணைப்புடன் – F.M. T.V. தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். அப்படியென்றால் அதையே உற்றுநோக்கி – இயக்குவதாலும் – படம் பார்ப்பதாலும் கண் என்ன  ஆகும் என்று மெய்ஞானம் தான் பதில் சொல்லவேண்டும்.

ஆச்சரியப்பட வேண்டிய விஞ்ஞான விஷயங்கள் ஆபாச அரங்கேற்றங்களால் கைச்சேதப்பட வைக்கின்றன. எவ்வளவு கஷ்டப்பட்டு முதல் தயாரிப்பை ஒருவன் கண்டுப்பிடித்தவுடனேயே அதைப் போன்ற – அதனைவிட பன்மடங்கு வசதிகளுடன் அடுத்தடுத்தவர்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். ஒருவர் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவே செல்போன்கள் தயாரிக்கப்ட்டன. ஆனால் இன்று அதன் நிலையை அதிகம் விவரிக்க வேண்டியதில்லை.

அடுத்தபடியாக காமக் களியாட்டங்கள் அரங்கேறும் இடங்களாக சுற்றலாத்தளங்கள். பார்க்குகள் – பீச்சுகள் இடம் பெறுகின்றன. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை சாதாரண சுற்றுலாத் தளங்களில் எங்கேயாவது ஒரு காதல் ஜோடியை பார்ப்பது அதிசயம்; அதுவும் ஆள் அரவமற்ற ஒதுக்குப் புறங்களில் பயந்து பயந்து பேசிக் கொள்வதை நாம் கண்டோம். ஆனால் இன்றோ சர்வசாதாரணமாக பஸ்களில் – பஸ் நிறுத்தங்களில் ஆரம்பித்து பார்க் – பீச்சுகளில் மற்றும் பொது இடங்களிலும் கூட காதல் – காம லீலைகள ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்து என்று ஆரம்பித்து எழுதக் கூசும் அசிங்கங்கள் நடக்கின்றன. இப்போது நடுநிலையாளர்கள் ஆள் அரவமற்ற இடங்களில் ஒதுங்கிக் கொள்ளும் அவலம் உள்ளது. எனவே இது போன்ற எல்லா அசிங்கங்களுக்கும் மூலகாரணம் சாட்சாத் இந்த சின்னத் திரையும் – திரை உலகமும் தான். இதனைத் தேடி எங்கும் அலைய வேண்டியதில்லை. வீடு தேடி வரும் இந்த சேலை இந்த அழிவை எதிர்பார்க்கும் உலகத்திற்குத் தேவையா? என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

எல்லாரும் எல்லாமும் பெற அன்பு மட்டுமே போதாது நல்லறிவும் வேண்டும். நல்லறிவும் நம் வீடு தேடி வரும்; வீடு தேடி என்ன நல்ல உள்ளங்களை தேடி நாடி வரும்; அழிவே வீடு தேடி வரும்போது அறிவு வீடு தேடி வராதா என்ன? எனவே உள்ளங்களை சுத்தமாக்கிட நற்போதனை சார்ந்த அறிவை வரவேற்பதை ஒவ்வொரு தனிப்பட்ட மனிதவும் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். இந்த உலகை நீக்கமற இயக்கிக்கொண்டிருக்கும் இறைவன் அருளிய மார்க்கத்தில் இறுதித் தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் ஒவ்வொருவரும் நற்பண்புகளை அடைந்திட முயலவேண்டும். இஸ்லாத்தில் இல்லாத மனித நேயம் – சகோதரத்துவம் – மனிதன் மனிதனாக வாழக்கூடிய வழிமுறை வேறெங்கும் இல்லை என்பதை நாம் சொல்லி அல்ல. ஒவ்வொருவரும் படித்து, கேட்டு, உணரவே வலியுறுத்துகிறோம். ஏனெனில் அல்லாஹ்வை அஞ்சக் கூடிய விதத்தில் அஞ்சி முஸ்லிம்களாகவே அன்றி மரணித்து விடாதீர்கள் என்று (3:102) அல்குர்ஆன் கூறுகிறது. அல்குர்ஆனை ஏன் இங்கு விளக்க விளைகிறோம் என்றால் அல்குர்ஆன் கூறுகிறது.இதோ (நபியே) இந்நெறி நூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக; இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக: நிச்சயமாக தொழுகை மனிதரை மானக் கேடானவற்றையும் – தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக இறைவனின் தியானம் (திக்ரு) மிகவும் பெரிதான சக்தியாகும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன் (29:45). நபியவர்கள் சொல்வதை பாருங்கள்.  எவர் தன் இரு தொடைகளுக்கிடையில் இருப்பதையும் காத்துக் கொண்டாரோ அவர் சுவர்க்கம் புகுவார். (ஆதாரம் – புகாரி) மேலும் எவர் அந்நியப் பெண்களிடம் தன் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்கிறாரோ அவர் சுவர்க்கம் புகுவார். எனவே பார்வை ஒன்றே போதுமே என்ற போக்கில் அனைத்துப் பாவங்களுக்கும் பார்வையை முதலீட்டாக்கி நாம் செய்யும் ஒவ்வொரு அடுத்தடுத்த தவறுகளையும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓரினச் சேர்க்கையிலும் – விபச்சாரத்திலும், மதுவிலும் – சூதிலும் இருக்கும் இன்பத்தை விட நரகத்தில் கொடுமை அதிகம் என்பதை பயந்து நற்பேறுகளை அடைய இஸ்லாமே அருமருந்து என்பதை உளப்பூர்வமாக உணர்வுப்பூர்வமாக ஏற்று – இறைவனுக்கு பயந்து இவ்வுலகில் தடுக்கப்பட்ட சிற்றின்பங்களை துறந்து – மறு உலகில் கிடைக்கும் பேரின்பங்களை அடைந்திட எல்லோரும் முன்வர வேண்டும். நல்லதை பார்த்து, நல்லதைக் கேட்டு – நல்லதைப் பேசி, நல்லதையேச் செய்யும் நன்மக்களாக இறைவன் நம்மை ஆக்கி அருள் புரிவானாக. ஏதோ பெயரளவில் முஸ்லிமாக இருந்தோம் – வாழ்ந்தும் – மடிந்தோம் என்றில்லாமல் அல்லாஹ் சொல்வது போல் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து முஸ்லிமாகவே மரணிக்கும் நற்பேற்றை நாம் அடைவோம்.

பொழுது போக்கும் நிகழ்ச்சிகள் என்ற பெயரில் உலாவரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவதை விட நம்மை நாமே பழுது பார்த்துக் கொள்ள ஒவ்வொரு நொடித் துளியையும் பயன்படுத்திக்கொண்டு பண்படுவோம். அதன் மூலம் இன்புறுவோம். உலகில் எல்லாவற்றையும் துறந்து விடச்சொல்லி இறைவன் சொல்லவில்லை. குடும்பம் – வீடு – வாசல் – தர்மம் – ஆட்சி அதிகாரம் அனைத்திலும் என்னதான் விஞ்ஞானங்கள் வந்தாலும் மெய்ஞானத்தால் இஸ்லாம் கூறும் வழிமுறைகளை அறிந்துணர்ந்து நடப்போமானல் எந்த விபரீதங்களையும் இறைவன் அருளால் எதிர்கொள்ள முடியும். இறைவன் போதுமானவன்.

*********************

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : பெண் குழந்தை பிறந்தால் கொலை செய்துவிடும் பழக்கம் அரபியாவில் அப்போது இருந்து வந்ததா?அமானுல்லாஹ், வேடந்தாங்கல்.

தெளிவு : அறியாமை காலத்தில் இருந்த அப்பழக்கத்தை இஸ்லாம் முற்றிலுமாக நீக்கி விட்டது. அப்பழக்கம் இருந்து வந்ததை திருகுர்ஆன் தெளிவுபடுத்துகிறது.

“உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை, அது எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டது என்று விசாரிக்கப்படும் அந்நாளில்……” அல்குர்ஆன் 81:89

மேலும் இறைத்தூதர் அவர்களின் எச்சரிக்கையும் கவனியுங்கள்:

“பெண் குழந்தையை உயிருடன் புதைப்பவன் நரகம் செல்வான்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் எச்சரித்தனர். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத்(ரழி), நூல் : அபூதாவூது.

    அறியாமைக் காலத்தில் நடந்து கொண்டிருந்த இந்த காட்டுமதராண்டித்தனமான மூடப் பழக்கத்திற்கு இஸ்லாம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

ஐயம் : மறுமையில் மனிதர்கள் நிர்வாணமாக இருப்பார்களா?    ஷேக் அப்துல்லாஹ், காரைக்கால்.

தெளிவு :  தங்களின் வினாவிற்கான விடையாக கீழேயுள்ள ஆயத்தையும், ஹதீஸையும் தருகிறோம்.

“மறுமை நாளில் மக்கள் வெறுங்காலுடன், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும்,  ஒன்று சேர்க்கப்படுவார்கள்” என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர். அப்போது ஒரு பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! (அப்படியானால்) நம்மில் சிலர் சிலரின் இன உறுப்பினர்களைப் பார்ப்பார்களே!” என்று வினவினார். அதுகேட்ட நபி(ஸல்) அவர்கள், “இன்னவளே! அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களை கவனிக்க இயலாத  வண்ணம் ஒருவித நிலை ஏற்பட்டுவிடும்” எனக்கூறிவிட்டு.

“அன்று ஒவ்வொரு மனிதனுக்கும், அவனவன் நிலையே போதுமானதாயிருக்கும்” என்ற 80:37வது வசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

ஐயம்: அடியார்களை அல்லாஹ் மன்னித்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் அவனுக்கு இருக்கிறதாமே? அரவாமுதள், திருச்சி.

தெளிவு: எதுவுமே அல்லாஹ்வைக் கட்டுப்படுத்தாது அயனை எவர்தான் நிர்ப்பந்திக்க முடியும்? அவர்களை மன்னிப்பதும் தண்டிப்பதும் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் விருப்பத்தின் பேரில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி.

“…தான் நாடியவரை மன்னிப்பான், தான் நாடியவரை வேதனையும் செய்வான். அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் சக்தியுடையவன்”. அல்குர்ஆன் 2:284

“……. அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற முடியாது. அவனே பயபக்திக்குரியவன். அவனே மன்னிப்பதற்கும் உரிமையுடையவன்”. அல்குர்ஆன் 74:56

“பயப்படுவதற்குரியவனும், மன்னிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான் என்ற 74:56வது வசனத்திற்கு, “நானே பயப்படுவதற்குரியவன்; எனவே எவர் எனக்குப் பயந்து, என்னுடன் எந்தத் தெய்வத்தையும், அவரையும் இணை ஆக்கவில்லையோ அவரை மன்னிப்பதே எனக்கு உரிய தகுதியாகும் என்று அல்லாஹ் கூறுகிறான்” என நபி (ஸல்) அவர்கள் 74:56வது வசனத்திற்கு விளக்கம் அளித்துள்ளதாக அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதி

 

 

எனவே இஸ்லாத்தை ஏற்றபின் இணை வைத்தல் என்ற மாபாவ செயலை செய்யாதிருக்கும் அடியானுக்கு மட்டுமே. இணை வைத்தல் அல்லாத மற்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்க விரும்புகிறான் என்பது தெளிவு இதனை 4:48,116 இறை வசனங்களிலிருந்தும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

“நிச்சயமாக, அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்க மாட்டான்; இதைத்தவிர எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்”. அல்குர்ஆன் 4:48

“நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான்; இது அல்லாததை தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்”. அல்குர்ஆன் 4:116

 

 

எனவே, இணை வைக்காதவர்களின் மற்ற பாவங்களைக்கூட தான் நாடியவர்களுக்குத்தான் மன்னிப்பதாகவே அல்லாஹ் மேற்கண்ட 4:48, 116  வசனங்களில் வாக்களித்துள்ளான். மன்னிப்பதற்கு உரிமையுடையவன் அல்லாஹ்தான் என்ற 74:56 வசனத்தின் மூலம் அந்த பாக்கியம் இணை வைக்காதவர்களுக்கு மட்டும் கிடைக்கும் என்பதை 4:48, 116 வசனங்களும் தெளிவுபடுத்துகிறது. எனவே அல்லாஹ்வுக்கு பயந்து, இணைவைக்காமலிருப்பவர்களின் பாவங்களை மன்னிக்க அல்லாஹ் நாட்டம் கொள்கிறான் என்பதை அறிவோமாக.

அடுத்து இன்று தவ்ஹீதுவாதிகள் என 53:32க்கு முரணாகப் பீற்றிக்கொள்வோர் அல்லாஹ் இணைவைத்தலை மட்டுமே மன்னிக்க மாட்டான். மற்ற  எல்லாப் பாவங்களையும் மன்னித்து விடுவான் என்ற நம்பிக்கையில் பெரும், பெரும் பாவங்களை செய்து வருகின்றனர். – அல்லாஹ்மீதே ஆணையிட்டுப் பொய் சத்தியமும் செய்கின்றனர். இது பெரும் தவறாகும். ஒருவகையில் அல்லாஹ்வை விவரம் கெட்டவன் என்று ஏமாற்றுவதாகும். இப்படி ஏமாற்றுகிறவர்களை அல்லாஹ் எப்படி விரும்பி மன்னிப்பான்?  எனவே அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வார்களாக.

ஐயம் : தொழுகைக்குப் பிறது, தஸ்பீஹ் செய்வதை இடது கையால் செய்ய்லாமா?  ஷேக்தாவூது, திருச்சி.

தெளிவு: “நபி(ஸல்) அவர்கள் தங்களது வலது கரத்தில் தஸ்பீஹ் எண்ணுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்று அப்துல்லாஹ் இப்னு அப்ர்(ரழி) அவர்கள் அறிவிக்கும் செய்தி அபூதாவூத், திர்மிதி, ஹாகிம், பைஹகீ ஆகிய ஹதீஸ் நூல்களில் பதிவாகியுள்ளது.

நபி(ஸல்) அவர்களுக்கு அவர்களின் அனைத்துக் காரியங்களிலும் வலது பாகமே பிரியமானதாக இருந்தது. அவர்களின் பரிசுத்தம் (ஒளூ செய்தல், குளித்தல்) தலை முடி சீவுதல், செருப்பு அணிதல் ஆகியவற்றில் வலது பாகத்தையே விரும்புவார்கள். அறிவிப்பாளர் : ஆயிஷாரழி, நூல்கள் : புகாரீ, முஸ்லீம்

எனவே நபி(ஸல்) அவர்களின் முன்மாதிரியை அழகாகப் பின்பற்றி இடது கரத்தில் தஸ்பீஹ் எண்ணுவதை விட்டு விட்டு, வலது கரத்தில் தஸ்வீஹ் எண்ணுங்கள்.

ஐயம் : திருகுர்ஆனின் 7:172 வசனத்திற்கு அர்த்தம் என்ன? குலாம் ரசூல், அபூதாபி

தெளிவு : அந்த இறை வசனத்தை முதலில் பார்ப்போம்.

“உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களக்கே சாட்சியாக வைத்து, “நான் உங்களுடைய இறைவன் அல்லவா?” என்று கேட்டதற்கு, அவர்கள், “உண்மைதான் தாங்கள் சாட்சி கூறுகிளோம்” என்று கூறியதை (அவர்களுக:கு) நினைவூட்டுவீராக; (ஏனெனில் நினைவூட்டப் படாவிட்டால்) நிச்சயமாக இதை (மறந்து) விட்டு இருந்துவிட்டோம் என்று மறுமையில் நீங்கள் (யாரும்) சொல்லாதிருக்கவே”. அல்குர்ஆன் 7:172

அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்பது உறுதியாகிவிட்ட பின், அப்படிப்பட்ட  அல்லாஹ்வுக்கு எந்த ரூபத்திலாவது இணை வைத்து விட்டால், அப்படி இணை வைத்தவர்கள் நரகை நிச்சயமாக சந்திப்பார்கள் என்பதும் உறுதியாகிவிட்டது. நிலைய இவ்வாறு இருக்க “நீ தான் என் இறைவன் என்பது எனக்குத் தெரியாது. ஆகவே நான் உனக்கு இணை வைத்துவிட்டேன்” என்று மறுமையில் இணை வைத்தவர்கள் நரகை அடையப்போதும் சமயத்தில் சொல்லிவிடக்கூடாது அல்லவா? அதற்கான அழகிய முன்னேற்பாடுதான் இது.

படைத்தவன், படைக்கப்பட்டவனை தான் மட்டுமே இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்து அதற்கு அவனையே சாட்சி கூறவும் வைத்தது அல்லாஹ்வின் அழகிய முன்னேற்பாடல்லவா? இறைவன் என்பதை ஒப்புக்கொள்ளச் செய்து, அதற்கு அவனையே சாட்சி கூறவும் வைத்தது அல்லாஹ்வின் அழகிய முன்னேற்பாடல்லவா? இறைவனைத் தவிர வேறு எவரால் இது சாத்தியமாகும்?

நாம் ஒவ்வொருவரும் இப்படி சாட்சியாக இருக்கிறோம். இது நமது நினைவில் இருக்கிறதா? நிச்சயமாக  இல்லவே இல்லை. எனவே அல்லாஹ்(ஜல்) புனித நெறி நூலின் இந்த 7:172 வசனத்தின் மூலம் இதனை நமக்கு நினைவூட்டி விட்டான். மறுமையில் நாம் இதை மறுக்காமல் இருக்கவே நினைவூட்டுவதாகவும் கூறுகிறான்.

சரி! “அல்லாஹ்தான் இறைவன் என்பது உண்மையே, அதற்கு நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என நாம் அல்லாஹ்விடம் தெரிவித்து, அல்லாஹ் நமக்கு தெரிவித்த பிறகாவது நமது எண்ணத்திரையிலிருந்து நமது நினைவுக்கு அது வருகிறதா? நிச்சயமாக இல்லவே இல்லை.

நினைவுக்கு வராவிட்டாலும், ஈமான் கொண்டுள்ளதில் நம்மை அல்லாஹ்(ஜல்) உறுதியாளர்களாக ஆக்கி வைத்திருப்பதால். அந்த நிகழ்ச்சியை இப்போது நாம் விசுவாசிக்கிறோம். அந்நிகழ்ச்சியில் முழு நம்பிக்கை கொள்கிறோம். இது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் இன்ஷா அல்லாஹ் இதை எப்போதும் நாம் மறுக்க மாட்டோம்.

ஈமானின் உறுதி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது என்ற ஆச்சரியத்தைப் பார்த்தீர்களா?

ஐயம்: நேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வேன். இதை செய்யவில்லை என்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும். எனக்கு விரைவில் திருமணம் ஆக இருக்கிறது. திருமணமானவுடன் மனைவியை ஊரில் விட்டு விட்டு அரபு நாடுகளுக்கு வரலாமா? பெயர் வெளியிட விரும்பாத வெளிநாட்டு வாசகர்.

தெளிவு : “மனிதன் நன்மையைக் கோருவது போலவே தீமையையும் கோருகிறேன். (ஏனெனில்) மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்”. என அல்லாஹ்(ஜல்) பரிசுத்த நெறி நூலின் 17:11 வசனத்தில் தெரிவிக்கிறான். ஹராமான செயல்களில் ஈடுபடும்படி ஆகிவிடும் என்பதற்காக, தங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள் எனத் தெரிகிறது.

“இதைச் செய்ய்வில்லையென்றால், ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்” என தாங்கள் கூறுவதிலிருந்து தங்களின் (Win – Power) மன உறுதியில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனத்தெரிகிறது. ஹராமானதில் ஈடுபட்டுவிடக்கூடாது என்பதற்காக, தங்கள் மேற்கொண்ட வழி மட்டும் ஹலாலானதா என ஒரு விநாடி சிந்தித்துப் பாருங்கள். பொருளீட்டுவதற்காக, வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவன் அது பாவனம் என்பதை உணர்ந்த பின், வீடுகளில் கொள்ளையடிக்க முயல்வானா? உழைத்து பொருளீட்டவே முயல்வான். அது போல சுய இன்பம் தேவைப்பட்ட உடனே, திருமணம் செய்திருக்கலாமே!

“உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கு திருமணம் செய்து வையுங்கள்” என்பது அல்லாஹ்வின் கட்டளை. அல்குர்ஆன் 24:32

“திருமணம் செய்யாதவர்கள் ஒழுக்கம் பேணட்டும்”. அல்குர்ஆன் 24:33

என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கும்போது, தாங்கள் ஒழுக்கத்தைப் பேணாமல் இருந்து விட்டீர்கள்.

அது மட்டுமின்றி, ஹராமானதைத் தடுக்க ஹலாலானதை தேடிக் கொண்டதைப் போலல்லவா நியாயம் கற்பிக்கிறீர்கள். “மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்” எனும் 10:44 ஆம் வசனம் நமக்கு படிப்பினைத் தரவேண்டும்.

“எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அதனை அவர் கண்டு கொள்வார். எவன் ஓர் அணுவளவு பாவம் செய்திருந்தாலும், அதனையும் அவன் (மறுமையில்) கண்டு கொள்வான்”. அல்குர்ஆன் 99:7,8

இந்த இறை வசனங்களின்படி, சுய இன்பம் நன்மையான காரியமாக கணக்கெடுக்கப்படுமா அல்லது பாவமான காரியமாக கணக்கிடப்படுமா? என வினவினால், சாதாரண அறிவுள்ளவன் கூட அதை பாவமான காரியம் என கலபமாகக் கூறிவிடுவான். அமல்களை பதிவு செய்து கொண்டிருக்கும் வானவர்கள் சுய இன்பம் செய்வதை நன்மையில் பதிவாரா? பாவமான பதிவார் என சிந்தித்துப் பாருங்கள்.

காமத்தை மனைவியின் துணையோடு மட்டுமே தணித்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணம் செய்ய வசதியற்றவர்கள் நோன்பு நோற்கட்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது தாங்கள் விரைவில் மணம் முடிக்க இருக்கிறீர்கள்.

“அல்லாஹ் உங்களுக்காக உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்…..”  அல்குர்ஆன் 16:72.

என்ற இறைவசனத்தில் மனைவியரை அல்லாஹ் உங்களுக்காகத் தந்திருப்பதாகக் கூறும்போது, அந்த மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு செல்லும்போது, பிரிந்திருக்கும் கணவனும் ஒழுக்கக்கேட்டை அடையலாம். அப்பிரிவால் மனைவியும் வழி தவறலாம். எனவே ஒருவருக்கொருவர் தத்தமது ஒழுக்கம் மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில், பரஸ்பரம் ஒப்புக்கொள்ள முடியுமேயானால், பிரிவு பாதிப்பை ஏற்படுத்தாது. அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாத இடங்களில், வரம்பு மீறல்கள் நடந்து கொண்டிருப்பதை கேள்விப்பட்டுக் கொண்டுதானிருக்கிறோம். எனவே, பிரிவு கணவன்-மனைவி இருவரில் பரிபூரண சம்மதத்துடுனே அமைய வேண்டும்.

நாங்கள் தேடிக்கொண்ட மாற்று வழி ஹராமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தொழாதவர்கள் சுய இன்பம் செய்தால், அவர்களுக்கு இறையச்சம் இல்லை என்று கூறிவிடலாம். ஆனால் தாங்கள் தொழகிறீர்கள். தங்களது தொழுகையைக் கொண்டு தங்களுக்கு ஒரு பயனும் ஏற்படவில்ல என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியிருப்பதைப் பாருங்கள். சிறந்த தொழுகைக்கான அளவு கோலாக அல்லா1் வர்ணிப்பதைப் பாருங்கள்.

“தொழுகை மானக்கேடானவற்றையும், பாவத்தையும் விட்டும் (மனிதர்களைத் தடுக்கும்)” என்ற 29:45 இறை வசனத்திற்கு பயந்து, “சுய இன்பம்” எனும் மானக் கேடான ஹராமான வழியை உடனே விட்டுவிடுங்கள்.

ஐயம் : ஈதுல் அழுஹா குர்பானிக்கான மிருகங்களை முன்கூட்டியே வாங்கி நன்றாக வளர்த்து கொழுக்க வைத்து குர்பானி கொடுக்க வேண்டுமெனக் கூறுகிறார்களே! பெரும் நகரங்களில் வாழும் நமக்கு இது சாத்திய மற்ற செயலாயிற்றே! இஸ்லாம் கூறும் முறை என்ன?                                        இஸ்மாயீல், திருச்சி.

தெளிவு : அபூ உமாமா பின ஸஹ்ல்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாங்கள் மதீனாவில் குர்பானிக்கான மிருகங்களை கொழுக்க வைத்து அறுப்போம். அங்குள்ள முஸ்லிம்கள் அவ்விதமே செய்தனர் என்ற செய்தி (அஃதர்) புகாரியில் 7V/327ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

இதனடிப்படையில் குர்பானி கொடுக்கப்படும் மிருகங்களை நாமே வளர்த்து கொடுக்க வைத்து அறுக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். ஏற்கக் கூடிய அறிவிப்பாகும். ஆனால் இன்றைய நிலையில் பெரும் நகரங்களில் வாழ்பவர்கள் இவ்விதம் செய்வது சிறிது சிரமமானக் காரியமே.

அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை. (அல்குர்ஆன் 2:233, 286, 6:152, 7:42 23:62) என்ற இறைவசனப்படி இவர்கள் விதி விலக்குக் பெறலாம். மேலும் இவ்விதம் குர்பானி மிருகங்களை கொழுக்க வைத்துக் கொடுப்பது ஒரு உபரியான செயலாகும் என்பதையும் நினைவில் கொள்க. நமக்கொரு வாய்ப்பிருக்குமேயானால் நாமும் வளர்த்து, கொழுக்க வைத்து கொடுக்கலாமே! உபரியான நன்மையைப் பெறலாமே! என்ற நினைவே உயர்வானதல்லவா? அல்லாஹ் உங்களது உள்ள நிலையை அறிந்து அவனது அளப்பெரும் கருணையை அருளப்போதுமானவன்.

ஐயம் : கடல் நீரில் ஒளூச் செய்யலாமா? தொழும்போது தொழும் இடத்தில் நமக்கு முன்பாக மூக்குக் கண்ணாடி, லெட்ட, பை, கர்சீப் ஆகியவைகள் வைப்பது சரியா?                 A.ரசூல்தீன், புரசைவாக்கம், சென்னை.

தெளிவு : கடல் நீரில் தாராளமாக ஒளூ செய்யலாம். ஒளூ செய்யலாம் என்பதற்கான ஹதீஸ் ஆதாரங்களை ஏற்கனவே அந்நஜாத்தில் வெளியிட்டிருக்கிறோம். தாங்கள் கூறிய பொருட்களை தொழும் இடத்தில் நமக்கு முன்பாக நாம் வைத்துக் கொண்டு தொழுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

சமுதாய மறுமலர்ச்சிககு தாராளமாக உதவி நன்மையை கொள்ளை கொள்ளுங்கள்!

மனித சமுதாயம் காட்டாற்று வெள்ளம்போல் படுவேகமாக அழிவின் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது; நரகை நிரப்பப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களான புரோகிதர்களுக்கு அணுவின் முனை அளவும் அனுமதி இல்லை என அல்குர்ஆன் நெத்தியடியாகச் சொல்லிக் கொணடிருக்க, அல்லாஹ்வின் நேரடிக்கட்டளையைப் புறக்கணித்துவிட்டு, சமுதாயம்  ஷைத்தானில் தூண்டுதலால் புரோகிதர்களின் பிடியல் சிக்கி இருப்பதே.

மனித சமுதாயத்தை இப்புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுவிக்காதவரை அதற்கு வெற்றியோ, ஈடேற்றமோ ஒரு போதும் இல்லை. இந்தப் பேருண்மையை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை கொண்டு மட்டுமே தெளிவுபடுத்தி “ஜமாஅத் அல் முஸ்லிமீன்”  என்ற பெயரில் 3000 படிகள் அச்சிட்டு, சில சகோதரர்களின் பொருளுதவி கொண்டு இலவசமாக வெளியிட்டோம். காரணம் மக்கள், மனிதனை மிருகமாக்கும் ஆபாசங்கள், அசிங்கங்கள், காமக் களியாட்டம், காமக் கிளர்ச்சி இவற்றை காங்கி வரும் தினசரி, வார, மாத இதழ்கள் இவற்றைக் காசுகொடுத்து வாங்கிப் படிக்க முன் வருகிறார்களே அல்லாமல், மனிதனை மனிதமாக வாழத் தூண்டும் நூல்களை காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாரில்லை.

ஓசியில் கிடைக்கிறது என்ற நினைப்பிலாவது வாங்கிப் படிப்பதால், அவர்களில் ஓரிருவர் நேர்வழி பெற்றாலும் அது ஒரு கோடி என்ன இந்த உலகைவிட பெருத்த நன்மையைப் பெற்றுத் தருவதாகும். 3000 படிகளும் தீர்ந்துவிட்டன. அவை சமுதாயத்தில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. படிகள் கேட்டு கடிதம், தொலைபேசி மூலம் தகவல்கள்  வருகின்றன.

அந்நூலில் விடுபட்டுள்ள பைஅத், அமீர், கிலாபத் பற்றிய குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன், திருத்தி வலிமைப்படுத்தப்பட்ட நூலாக சுமார் 200 பக்கங்களில் 5000 படிகள் அச்சிட்டு இலவசமாக வெளியிட திட்டமிட்டுள்ளோம். அல்லாஹ் நாடினால், செலலு சுமார் ரூபாய் ஒரு லட்சம் ஆகும். சமுதாய மறுமலர்ச்சியோடு, ஈருலக நன்மைகளையும் கொள்ளை கொள்ள விரும்பும் சகோதர, சகோதரிகள் தாராளமாக இந்த வகைக்குப் பொருளுதவி செய்ய அன்புடன் வேண்டுகிறேன். ஆசிரியர்

 

 

Previous post:

Next post: