புரோகிதத்தின் மூலதனம் கூட்டு துஆ!!

in 2009 நவம்பர்

 புரோகிதத்தின் மூலதனம் கூட்டு துஆ!!
கூட்டு துஆ இல்லையேல் புரோகிதம் இல்லை!!

S. முஹம்மது ரஃபீக், பழனி.

அன்பான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்றைய இஸ்லாமிய மக்களிடத்தில் பித் அத்தான காரியங்கள் மலிந்து கிடக்கின்றன. இந்த பித்அத்தான காரியங்கள். நடைபெற முக்கிய காரணம் புரோகிதர்கள்:  புரோகிதர்களின் மூலதனம் கூட்டு துஆவே, பித்அத்தை ஒழிக்க வேண்டும்; புரோகிதத்தை ஒழிக்க வேண்டும் என எண்ணுபவர்கள் முதலில் செய்ய வேண்டியது கூட்டு துஆவை ஒழிப்ப தற்குப் பாடுபட வேண்டும். கூட்டு துஆ என்கிற நபி(ஸல்) அவர்களின் வழிமுறையில் இல்லாத நூதன துஆவை ஓதுவதற்கு ஒருவர் மதரஸாவில் படித்து பட்டம் பெற வேண்டிய தில்லை. சில அரபி வாசகங்களை தெரிந்து வைத்திருந்தாலே போதும். சில அரபி வாசகங்களைத் தெரிந்து வைத்திருப்பவர்கள். சில திரு குர்ஆன் அத்தியாயங்களை மனனம் செய்வதன் மூலமும், கூட்டு துஆவைத் தெரிந்து வைத்திருப்பதின் மூலமும் ஒருவர் பள்ளிவாசல்களில் இமாமாகவோ முஅத் தினாகவோ பணியில் சேர்ந்து விடலாம். மேலும் மரணித்த வீடுகளிலும், மார்க்கத்திற்கு முரணான, பித்அத்தான தலைப்பாக்கட்டு, வளைகாப்பு, நிச்சயதார்த்தம், 3ம் நாள், 7ம் நாள், 40ம் நாள், வருடாந்திர நினைவு நாள், கடை திறப்பு, வீடு திறப்பு, சுன்னத் எனும் கத்னா, பூப்பு நீராட்டு, குழந்தை பிறந்த 40ம் நாள், திருமணமான 40ம் நாள். தர்ஹா வில், கப்ரஸ்தானில் இப்படி எங்கெங்கெல்லாம் முஸ்லிம்கள் ஒன்று கூடுகிறார்களோ, அங் கெல்லாம் கூட்டு துஆவே முக்கிய தேவையாக இருக்கிறது. மேலும் உலமாக்கள் என்று சொல்லக்கூடிய புரோகிதர்களுக்கு திரு விழாவாகவும், வருமானம் அதிகம் தரக்கூடிய நாட்களாகவும் இருக்கக்கூடிய பராஅத், மிஃராஜ், ரமழான் 27ம் நாள், ஆஷூரா, மௌலூது போன்றவற்றிற்கும் ஆணிவேர், கூட்டு துஆவே, மிகப்பெரிய புரோகிதர்கள் நீண்ட துஆவும், குறைவாக ஓதியவர்கள் குறைந்த துஆவும் ஓதி அவரவர்களுக்கு தகுந்தாற்போல மக்களிடம் பொருளாதாரத்தை கொள்ளையடிக்கிறார்கள். இந்த வைபவங்களில் கூட்டு துஆ மட்டும் இல்லையென்றால் என்னவாகும் என்று யோசித்துப் பார்க்கும்போது இந்த சடங்குகளின் வீரியம் குறைந்து புரோகிதர்களின் மதிப்பும் மரியாதையும் தரைமட்ட மாகிவிடும். சடங்குகளை புரோகிதர்களே எதிர்ப்பார்கள். மேலும் மக்கள் தன்னுடைய தேவைகளை தனது ரப்பிடம் மட்டுமே கேட்க முயற்சி யாவது செய்வார்கள் என்பதை மறுக்க முடியாது. அதே போல் ஒவ்வொரு கடமையான தொழுகைகளிலும் தன்னுடைய தேவைகளை அல்லாஹ் (ஜல்)விடமே கேட்க வேண்டும். மொத்தமாக துஆ கேட்பது இறைத்தூதர ;(ஸல்) அவர்களின் வழிமுறையல்ல என்பதையும் மக்களிடத்தில் எடுத்துக் கூற வேண்டும்.

* கூட்டு துஆவின் மூலம் முஸ்லிம்கள் தனது ரப்பிடம் நெருங்குவது தடுக்கப்படுகிறது.
* அல்லாஹ்வுக்கு அரபிதான் தெரியும் எனவே அரபியில் தான் கேட்க வேண்டும் என்கிற மடமை ஏற்படுகிறது.
* ஒருவர் தனது தாய் தந்தைக்காகவும், உறவினர்களுக்காகவும், இறந்தவர்களின் நன்மைக்காகவும், தனது இறைவனிடம் பிரார்த் திப்பதற்கு கூலிக்கு ஆள் வைப்பதற்கு கூட்டு துஆவே காரணம்.
* கடமையான தொழுகைகளில் 2வது, 3வது ரக்அத்களில் சேருபவர்கள் விடுபட்ட தொழுகையை தொழும்போது சப்தமிட்டு, துஆ ஓதுவது தொழுகைக்கு இடையூறு ஏற்படுகிறது.
* ஒவ்வொருவரும் இறைவனிடம் எவ்வாறு பிரார்த்திப்பது என்பதைக் கற்க வேண்டும். கற்றுக் கொடுக்க வேண்டும்.
* பெரும்பாலான மக்கள் புரோகிதர்களை நாடுவதே அரபி துஆக்களுக்காகத்தான்.
* கூட்டு துஆவை மக்கள் கைவிட்டு விட்டால் புரோகிதர்களே மற்ற பித்அத்களை ஒழித்து விடுவார்கள். ஏனென்றால் (அவர்களுக்கு வருமானம் இல்லாத காரணத்தால்)
* ஒவ்வொருவரும் தனது இறைவனை நேரடியாக அணுக வேண்டும். புரோக்கர்கள் அல்லாஹ்வுக்கு தேவையில்லை. எந்த குறிப்பிட்ட மொழியும் தேவையில்லை. தனக்கு என்ன தெரியுமோ, அதன் மூலம் என்ன கேட ;கிறோம் என்பதை உணர்ந்து கேட்பதையே அல்லாஹ் விரும்புகிறான்.

அல்லாஹ்(ஜல்) தனது அல்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
உங்கள் இறைவனிடம் பணிவாகவும், அந் தரங்கமாகவும், பிரார்த்தனை செய்யுங்கள். வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 7:55

என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவரே பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும் என்னையே நம்பட்டும் அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 2:188

அல்லாஹ்(ஜல்)வும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கட்டித்தந்த வழிகளைப் படிக்காமல், நடைமுறைப்படுத்தாமல் இருந்த காரணத்தினால் நம்மை சைத்தான் ஆக்கிரமித்தான். புரோகிதர்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே அன்பிற்குரிய சகோதரர்களே அல்குர்ஆனையும், இறைத்தூதர்(ஸல்) அவர ;களின் வழிமுறையையும் கடைபிடித்து புரோகித மாயையிலிருந்து விடுபடுவோம் அல்லாஹ் போதுமானவன். வஸ்ஸலாம்.

Previous post:

Next post: