அல்லாஹ்வின் அழைப்பும்! இறுதி எச்சரிக்கையும்!!

in 2010 ஏப்ரல்

அல்லாஹ்வின் அழைப்பும்! இறுதி எச்சரிக்கையும்!! சோழபுரம் ஆ.சபீர் அஹ்மத்

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனின் அருளும் ஈடேற்றமும் நபி(ஸல்) அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார் முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டாவதாக!

முஸ்லிம் சமுதாயம் கடந்த காலங்களில், நிகழ்ந்த இன்னல்களையும், சோதனைகளையும் நினைத்து பார்க்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு, தெழில், சம உரிமை, அநீதிக்கு எதிராக தட்டிக் கேட்பது போன்ற இன்ன பிற நிறைய வி­யங்கள் நடக்க இருக்கும் பாதைகளில் முஸ்லிம் சமுதாயம் வெற்றி பெற அதிக கவனம் செலுத்துகிறது; துடிக்கிறது.

ஆக, முஸ்லிம்களுடைய வெற்றிக்கு சுலபமான வழியை அமைத்து கொடுக்கிறோம் என்ற பெயரில் இதைவிட வேறு வழியே இல்லை என இயக்கங்களை உருவாக்கினார்கள். இந்த இயக்கத்தினால் முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வோம் என்று சூளுரைத்து உருவாக்கிய வர்கள் இறுதி வரை ஒற்றுமையாக இருந்தார்களா? இல்லை. சமுதாயத்தை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்று அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் அளித்த போதனையை தூர எறிந்து விட்டு தன் மனோ இச்சைக்கும், சுயலாபம், பேர், புகழ், பெருமைக்கும் அடிமைப்பட்டு இயக்கங்களை உருவாக்கியவர்கள் இன்று பலவாறான பிரிவுகளையும்-பிளவுகளையும் ஏற்படுத்திக் கொண்டு சமு தாயத்தைப் பிளவுபடுத்தி ஷைத்தானிய வெற்றிக்கு சுலபமான வழியை அமைத்து கொடுக்கிறார்கள்.

அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் ஈருலக வாழ்க்கைக்கும் வெற்றி பெற வழிகாட்டிக் கொண்டிருக்க இதைத் தவிர வேறு மாற்று பாதை நிச்சயமாக இல்லை. அல்குர்ஆனையும் நபி(ஸல்) போதனை மட்டுமே ஈருலக முஸ்லிம் சமுதாயத்தின் வெற்றி என்பதை புறக்கணித்து அலட்சியப் படுத்துகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் இது(அல்லாஹ்வின்) நெறிநூல் ஆகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு(இது) நேர்வழி காட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)

முஸ்லிம்களை மத்ஹபு பெயராலும், தரீக்காக்கள், ஸலஃபி, இயக்கங்கள், கழகம் போன்று பலவாறாக பிரித்து தன்னுடைய பிரிவிலேயே நிலைத்து நின்று, பெருமை பேசி, சமுதாயத்தை சீரழிப்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய அன்பான அழைப்பாக இந்த குர்ஆன் என்னுடைய நெறிநூல்; எந்தவிதமான சந்தேகமும் படாதீர்கள்; ஈருலகிலும் எல்லாவற்றிற்கும் உண்மையான வெற்றியை அடைய நேரான வழிகாட்டக் கூடிய போதனை இதில் (குர்ஆன்) இருக்கின்றது. அல்லாஹ்வுடைய கட்டளைக்கு கட்டுப்படாமல் அதற்கு மாறு செய்த முந்திய சமுதாயங்கள் அடைந்த வேதனையை கூறி அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். பின்னர் (அங்கு) வேறு சமுதாயத்தை உண்டாக்கினோம். ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அங்கிருந்து விரைந்து ஓடினார்கள். அவ்வாறு ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுகபோகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள் (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது)

(அதற்கு அவர்கள்) எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம் என்று வருந்திக் கூறினார்கள். அறுவடை செய் யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை. (அல்குர்ஆன் 21:11-15)

அநியாயம் செய்து கொண்டிருந்த அவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர் (அதற்கு முன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்) (அல்குர்ஆன் 11:67,68)

எனவே (தண்டனை) பற்றிய நம் கட்டளை வந்து விட்டபோது, நாம் (அவ்வூரின்) அதன் மேல்த் தட்டை கீழ்த் தட்டாக்கி விட்டோம்; இன்னும் அதன் மீது சுடப்பட்ட செங்கற்களை போல் பொழிய வைத்தோம் . அக்கற்கள் உம் இறைவனிடமிருந்து அடையாளம் இடப் பெற்றிருந்தன. (புரட்டப்பட்ட) அவ்வூர் இந்த அநியாயக்காரர்களுக்கு வெகு தெலைவிலும் இல்லை. (அல்குர்ஆன் 1 1 :82,83)

அல்லாஹ்வினால் அழிக்கப்பட்ட சமுதாயங்கள் அனைவரும் எந்நிலையிலும் இறைக் கட்டளைக்கு மாறு செய்வதிலேயே குறியாக இருந்துள்ளார்கள்.

கொசுவின் இறக்கை அளவு கூட மதிப்பு பெறாத, நிலையில்லாத இந்த உலக சுகத்தை அனுபவிப்பதற்காக நம் சமுதாயத்தவர்கள் மேற்கொள்ளும் முயற்சியில் மிகக் குறைந்த அளவு கூட நிலையான மறுமை வாழ்க்கைக்காக சிந்திக்கத் தயாரா இல்லை. தங்களது சுய லாபத்திற்காக, பேர், புகழ், பணம், செல்வாக்கு, பெருமைக்காக வாழ்க்கை நடத்தும் நம் சமுதாயத்தவர்கள் முன் சென்ற சமுதாயங்கள் அனுபவித்ததை, அவர்களைச் சூழ்ந்த வேதனை களையும், அழிவையும் திடீரென பிடிக்கப் பட்டதையும் கொண்டு படிப்பினை பெற மறந்து விடுகிறார்கள். இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய் தால் வேதனை நிச்சயம் வரும் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அல்லாஹ் கூறுகிறான் நம்பிக்கை கொண்டோர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழையுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் (அல்குர்ஆன் 2:208) நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 3:103)

நிச்சயமாக உங்கள் “உம்மத்து-சமுதாயம்’ (வேற்றுமையே இல்லாத) ஒரே சமுதாயம் தான், மேலும் நானே உங்கள் இறைவன்-ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்-எனக்கு அடிமையாக இருங்கள். (21:92)

இன்னும் நிச்சயமாக உங்கள் “உம்மத்து-சமுதாயம்’ (வேற்றுமையே இல்லாத) ஒரே சமுதாயம்தான், மேலும் நானே உங்கள் இறைவன் எனக்கே நீங்கள் அஞ்சுங்கள். (23:52)

இந்த இறை வசனங்களெல்லாம் நாம் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்டு வாழ வேண்டும், ஒரே மார்க்க்கம், பிரிவினை கிடையாது. பிரிந்து-பிளவுபட்டு வாழ்வது ஷைத்தானுக்கு விருப்பமான செயலாகும். ஒன்றுபட்டு ஒற்று மையுடன் வாழ்வது ஷைத்தானுக்கு பிடிக்காத செயலாகும். நபி(ஸல்) கூறினார்கள் ஒரு முஃமின் மற் றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவன் (என்றும்) ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் உடலைப் போன்றவன் என்றும் கூறினார்கள். (முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்கள் ஆணி அடித்தது போல் ஒரு முஃமின் மற்றொரு முஃமினுடைய தொடர்பை, ஒற்றுமையை பறைசாற்றி இருக்க, ஒரே தலைமையில் ஓரணியில் ஒன்றுபட்டு செயலாற்றுங்கள், இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவீர்கள் என அல்லாஹ்வின் அழைப்பிற்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

பல்வேறு தலைமையின் கீழ் பல பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்ற முஸ்லிம் சமுதாயத் தில் ஒற்றுமையே இல்லாமல் போய்விடுகிறது. அல்லாஹ்வுடைய கட்டளையை உதாசீனப் படுத்துகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, ஸாலிஹான நல்ல அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு வழிபட்ட) முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுகிறாரோ அவரை விட அழகிய சொல் சொல்பவர் யார்? (அல்குர்ஆன் 41:33)

அல்லாஹ் தான் (இதற்கு) முன்னரும், இதிலும் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான். (அல்குர்ஆன்22:78)

நம் சமுதாயத்திற்கு “முஸ்லிம்கள்’ என அல்லாஹ் பெயர் சூட்டி இருக்கிறான். “முஸ்லிம்கள்’ என்று அழைத்துக் கொள்வதை ஆசைப்படுகிறான். “முஸ்லிம்கள்’ என்ற பெயர் அல்லாத நிலையில் மரணமடைய வேண்டாம் என்றும் கட்டளையிடுகிறான். (ஆதாரம்: 2:132. 3:102)

இவ்வாறு ஒற்றுமையின் பக்கம் ஓர் அழகான வழிகாட்டலை அல்லாஹ் போதிக்க, அதை காற்றில் பறக்க விட்டுவிட்டு பிறரிட மிருந்து தங்களை வேறுபடுத்தியே காட்ட வேண்டும் என்ற (கெட்ட) நோக்கத்தோடு தரீக்கா, மத்ஹபு, அஹ்ல ஹதீஸ், முஜாஹித், JAQH, TNTJ, JIH, etc, ஸலபி, இவர்களாக தங்க ளுக்குத் தாங்களே பெயர் சூட்டிக்கொண்டு மகிழ்ச்சி அடைகிறார்களே? இவர்களால் “ஒரே சமுதாயம்’ என்ற ஒற்றுமையை உருவாக்க முடிந்ததா? இல்லை பிளவுகள் அதிகமாகிக் கொண்டே தான் போகிறது. அவரவர்கள் தங்க ளிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடை கிறார்கள். இந்த இடத்தில் 23:52,53 இறை வசனம் இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து, வெறும் வார்த்தைகளாலும், பேனர்களிலும், மாநாடுகள் கூட்டியும் சொல்லிக் கொண்டிருந் தால் முஸ்லிம் சமுதாயம். “ஒரே சமுதாயம்’ என உருவாகி விடுமா? இயக்கங்கள் தான் வளர்ந்ததே தவிர, உண்மையிலேயே சமுதாய ஒற்று மைக்கு கவலைப்படுபவர்களாக இல்லை.

இறைக் கட்டளைகளை ஏற்று நடப்பதால் ஏற்படும் நன்மைகளையும், மாறு செய்தால் ஏற்படும் சோதனைகளையும் படிப்பினையாகக் கொண்டு, நம் அனைவரையும் நேர்வழியின் பால் வழிகாட்டும் குர்ஆனை முழுமையாக உணர்ந்து பிரிவு-பிளவுகளைத் தங்களை வேறுபடுத்தி காட்டும் பெயர்களை, நியாயப்படுத் தாமல் அனைத்தையும் கலைத்துவிட்டு, அல்லாஹ் பெயர் சூட்டிய முஸ்லிம்கள் என்ற நிலையில் நபி(ஸல்) விட்டு சென்ற உம்மத்தன் வாஹிதா என்ற ஒரே சமுதாயமாக எப் பொழுது ஏற்படுத்தி கொள்கிறார்களோ அன்று தான் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றிய வர்களாவோம். ஷைத்தானின் சூழ்ச்சியிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் கட்டளைகளை நேரடியாக அடிபிசகாமல் பின்பற்றக் கூடிய பாக்கியத்தை நம் அனைவரு க்கும்-குறிப்பாக புரோகித முல்லாக்களுக்கும் எல்லாம் வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! ஆமீன்.

Previous post:

Next post: