அருளாளன் அன்பாளன் இறைவனின் பெயரால்….. ஒடுக்கப்பட்டோரின் உரிமைப் பேரணியா? மாநாடா? எதார்த்தம் என்ன? ததஜவினர் 2010 ஜூலை 4-ல் சென்னைத் தீவுத்திடலில் ஒடுக்கப்பட்டோரின் பேரணி என்றும் மாநாடு என்றும் பல மாதங்களாக அறிவிப்புச் செய்து வருகிறார்கள். கவுன்ட்டவுன் நடத்தி வருகிறார்கள்.
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? தொடர்-5 அரபி இலக்கண இலக்கியம் அவசியமா? அதற்கு முன்பு, அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய பாண்டித்யம் அவசியமே இல்லை. எனவே மார்க்கத்தை விளங்கிக் கொள்ள அவை அவசியமென்று ஒருசாரார் கூறி வருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். காரணம்: முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் (Theoretically) நடைமுறை (Practically) […]
M.S. கமாலுத்தீன், பெங்களூர். எல்லாம் வல்ல அல்லாஹ்(ஜல்) இந்த உலகத்தில் எத்தனையோ கோடி மனித சமுதாயங்களை படைத்திருக்கிறான். தன் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தவர்களை கண்ணியப்படுத்தியிருக்கிறான். வரம்பு மீறியவர்களை அழித்திருக்கிறான். ஆனால் உலக இறுதிநாள் வரை நடுநிலையான சிறந்த சமுதாய மக்கள் என்று திருகுர்ஆனில் புகழ்ந்து சொல்கிற சமுதாயம் நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி வருகிற முஸ்லிம் சமுதாயம்தான்.
குறிப்பு : குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பொருள் அறிந்து படித்து விளங்க முற்பட முன்னர் எழுதப்பட்ட கடிதமாகும் இது. 33 ஆண்டுகளுக்கு முன்னர் ஹஜ்ரத்ஜீக்கு எழுதப்பட்ட கடிதம் ஹிஜ்ரி 10.2.1398 பெருமதிப்புக்குரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் உயர் சமூகத்திற்கு, ஷாஹுல் ஹமீது (அபூ அப்தில்லாஹ்) பணிவுடன் எழுதியது. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நலம். நலமே நாட்டம்.
மறுபதிப்பு : கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் தப்லீஃக் பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே: இந்தப் பணி மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும் யாரும் மறுக்கமாட்டார்கள்.
ஐயமும்! தெளிவும்!! மனைவியை ‘தலாக்’ என்றோ ‘முத்தலாக்’ என்றோ கூறிய பின்னர் மீண்டும் சேர்த்துக்கொள்வது கூடுமா? [PDF]
ஐயமும்! தெளிவும்!! சுவர்க்கவாசி ஆண்களுக்கு ஹூருல்யின் என்ற கண்ணழகிகள் உண்டென்றால் சுவர்க்கவாசியான பெண்களின் நிலை என்ன?[PDF]
பாவ மன்னிப்பு : மூமின்களே! நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! நீங்கள் (மறுமையில்) வெற்றி பெறலாம். (அல்குர்ஆன் 24:31) தினமும் எழுபது தடவைக்கும் அதிகமாக அல்லாஹ்விடம் நான் பாவமன்னிப்புத் தேடுகிறேன்” என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி
ஜமாஅத் அல் முஸ்லிமீன் ஏன்? எதற்கு?[PDF]
குருகுலக் கல்வி! இப்னு ஹத்தாது அல்ஜன்னத் மார்ச் 2010 கடைசிப் பக்கத்தில் “அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு” என்ற பெயரால் இடம் பெற்றுள்ள வரிகள் இவை: எழுதியவர் அதன் ஆசிரியர் மற்றும் ஜாக் அமீர் சகோ. எஸ். கமாலுத்தீன்.
நல்ல ஆட்சியாளர்கள் கிடைக்க வேண்டுமெனில்…! ஜே.ஜாபர் சித்திக், கம்பம். ஏக இறைவனாகிய அல்லாஹ் இந்த மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து உயிர் ஜீவராசிகளுக்கு பல அருட்கொடைகளை வழங்கி ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவை நிர்ணயித்துள்ளான். கருணையுள்ள இறைவன் மனித இனத்திற்கு பகுத்தறிவு மற்றும் வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு திறன்களை அருட்கொடையாக வழங்கி கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
ஐயமும்! தெளிவும்!! ஒருவர் குர்ஆனை அவர் மொழியில் விளங்கி அமல் செய்கிறார். ஆனால் அரபி மொழியில் ஓதத்தெரியாது. இதற்கு தண்டனை உண்டா?[PDF]
தொடர் : 11 நபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள் தொகுப்பு : ஏ. முஹம்மது அலி, M.A.,M. Phil.,
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: 39:17,18 இறைக் கட்டளைகள்படி யார் சொன்னாலும், எழுதினாலும் அதைக் கேட்டு, பார்த்து அதில் அழகானதை எடுத்து நடங்கள் என்று கூறும் நீங்கள் வாழ் உரிமை மாநாடு, ஒடுக்கப்பட்டோரின் உரிமை மாநாடு போன்ற கூட்டங்களை மறுத்துப் பேசுகிறீர்களே! இது உங்களுக்கு நீங்களே முரண்படுவதாக இல்லையா? அப்துல்லாஹ், திருச்சி.
எம்.பி. ரபீக் அஹ்மத் உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றனவோ, அத்தனை மதங்களையும், அதன் போதகர்களையும் பெயர்கள் குறிப்பிட்டு வரிசையாக பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த போதகர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கவனியுங்கள்.அதில் எத்தனை பேர் அப்பழுக்கற்ற தூய்மையான வாழ்வை வாழ்ந்தார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஒரு சிலர் தான் தேறுவார்கள். அந்த ஒரு சிலரின் பெயர்கள் வருமாறு:
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்! ஏப்ரல் தொடர் : 8 MTM.முஜீபுதீன், இலங்கை
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்! ஏப்ரல் தொடர் : 11
அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே! அபூ அப்தில்லாஹ் அகிலங்கள் அனைத்தையும் அவற்றிலுள்ள வற்றையும், ஜின் மனிதப் படைப்புகளைச் சோதனைக்காகப் படைத்து, உணவளித்து, நிர்வகித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே புகழ் அனைத்தும். இந்தப் பேருண்மைகளை அந்த இறைவனின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் 1:1-7, 62:14, 67:1-3, 51:55-58, 8:26, 16:72, 30:40, 40:64, 22:28. 20:132, 6:151, 17:31, 34:24, 35:3, 67:21, 29:60, 5:114, 2:60 போன்ற எண்ணற்ற இறை வாக்குகளை நேரடியாகப் […]
மீண்டும் வெள்ளையனுக்கு அடிமையாகும் இந்தியா! நீண்ட காலமாக நமது இந்திய நாட்டை ஹிந்து, முஸ்லிம் மன்னர்கள் ஆண்டு வந்ததாக வரலாறு. வியாபாரம் செய்யும் நோக்கத்துடன் இந்தியா வந்த வெள்ளையன் இங்குள்ள கனிம வளங்கள், நீராதாரம், மனிதவளம் இவை அனைத்தையும் பார்த்துப் பொறாமைப்பட்டு, இந்தியாவை தனது அடிமை நாடாக்கத் திட்ட மிட்டான். சூழ்ச்சி செய்தான். அவனது சூழ்ச்சிக்கு மேல் ஜாதியினரில் பலர் இரையாகினர். இந்திய ஆட்சியாளர்களைக் காட்டிக் கொடுத்து இந்தியாவை வெள்ளையருக்கு அடிமைப் படுத்தினர். அவனிடம் கையூட்டுப் பெற்றனர்.
ஐயமும்! தெளிவும்!! சுவனத்தில் அண்ணலாருடன் இருக்க விரும்பிய தோழரை நோக்கி அதிகமாக தொழுது வருவீராக! என்று நபி(ஸல்) கூறியது எந்தத் தொழுகையை? [PDF]