“எய்ட்ஸ்” AIDS

in 1996 நவம்பர் - டிசம்பர்

M. அமீர்ஜான்

    AIDS என்பதன் விரிவாக்கம்: Acquired Immune deficiceny syndrome என்பதாகும். இந்த நோயின் முக்கிய கரு HIV என்னும் வைரஸ் கிருமியாகும். இரத்தத்தில்  சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள் மற்றும் இன்ன பிற நுண்பொருட்கள் உள்ளன. வெள்ளையணுக்களிலும் இரத்தத்தில் இருக்கும் பிலாஸ்மாவிலும் இம்முனோ குளோவின் எனும் நோய்த தடுப்பு சக்தி உண்டு. நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யூனோ குளோவின் எனும் நோய்த் தடுப்பு சக்தி உண்டு. நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யுனோ குளோபின் நம் உடல் நோய் வாய்ப்படும் போது, இந்த இம்யுனோ குளோபின் நம் உடலுக்கு  நோய் எதிர்ப்பைத் தந்து ஈடு செய்யும். ஆனால் ‘எய்ட்ஸ்’ நோய்க்கு காரணமான இந்த HIV நோய் எதிர்ப்புத் தன்மையை முழுவதுமாக செயலிழக்கச் செய்கிறது. இதன் காரணமாக மனித உடல் நோய்க்கு ஈடு கொடுக்க முடியாமல் சோர்ந்து போய்விடுகிறது. மெல்ல மெல்ல இந்நோய்க்கு ஆளான மனித உடல் மரணவாசலை நோக்கி பயணிக்க தொடங்குகிறது.

    உடலில் படித்தவர் முதல் படிக்காத பாமரர்வரை இந்நோயை அறியாதவர் எவரும் இருக்க  முடியாது. ஏனென்றால் இது ஒரு உயிர்க்  கொல்லி நோயாகும். ஒவ்வொரு நூற்றாண்டிலும் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் பயங்கர கொள்ளை நோய்கள் (பிளேக், மலேரியா, டெங்கு) தோன்றி பயங்கரமான உயிர் சேதத்தை உண்டுபண்ணிவிட்டுச் செல்லும். பிறகு அந்த நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்து மதிப்பில்லா மனித உயிரை அந்தந்த அரசு காப்பாற்ற முயற்சி செய்வது நாம் அறிந்ததே. ஆனால் ்உலகையே கலக்கக் கூடிய இந்த உயிர்ககொல்லி நோய் மருத்துவ நிபுணர்களுக்கே சவால்விடும அளவுக்கு பயங்கரமான நோயாகும். இது வரையில் இந்நோய்க்கு  மருந்து கண்டுபிடிக்கபடாததால் இந்நோய் மக்களிடம் பயங்கர விளம்பரமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    மனிதன் விஞ்ஞான வளர்ச்சியடைய நாகரிக மோகத்தில் மிதக்க ஆரம்பித்து விடுகிறான். உலக இச்சைகளுக்கு அடிமையாகி போதை பழக்கத்திலும், விபச்சாரத்திலும் ஈடுபட்டு பயங்கர பாதாளத்திழல் வீழ்ந்து , ஒழுக்கக்கேட்டினால் தனக்குதானே துன்பத்தையும், தொல்லையையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கிறான். போதையோடு இருக்கக் கூடிய ஒருவன் பொது இடங்களில் வாய் திறந்து பேச இந்திய சட்டத்தில் உரிமை இல்லை என்று விதியே இருக்கிறது. அதே போன்றுதான் விபச்சாரம் விபச்சாரம் என்பது அனைத்து நாட்டவராலும் மக்களாலும் பாவனமான குற்றமான காரியம் என ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மையாகும். அதற்காகத தான் ஒவ்வொரு நாட்டிலும் விபச்சாரத்திற்கு தண்டனை சட்டம் இயற்றியுள்ளனர். தண்டனை வேண்டுமானால் நாட்டுக்கு நாடு மாறுபடலாம். ஆனால், தண்டனை இல்லாமல் இல்லை. ஆனால் சில நாடுகள் மட்டும் இவ்விபச்சார தொழிலுக்கு அங்கீகாரம் அளித்து. குறிப்பிட்ட சில பகுதிகளில் விபச்சார தொழிலை நடத்த அனுமதியளித்தள்ளது. இந்த எய்ட்ஸ் நோய் ஆமை வேகத்தில் சென்று இறுதியாக தானே வெற்றி பெறும் நிலையில் உள்ள இந்த காலத்தில் இந்த மனிதநேயமற்ற ஆட்சியாளர்களை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும். இவர்களுக்கு நல்லறிவைத் தர வேண்டும்.

    அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்ட பில் கிளிண்டன் முதல் தடவை பதவி ஏற்றதும் ராணுவத்தில் ஓரின புணர்ச்சிக்கு அனுமதியளித்தார். அதே நாட்டில் இன்னொரு கேவலமான பேரணி ஒன்று உண்டு. ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடக் கூடிய ஒரு கூட்டத்தார் அமெரிக்க அரசை எதிர்த்து இவர்கள் சங்கமாக பதிவு செய்து கொண்டு அதன்மூலம் சில சிறப்பு சலுகைகளை கேட்டு வெட்ட வெளி வீதியில் வெட்கமில்லாமல் பேரணியாக வந்து போராட்டம் நடத்தினர். இது போன்ற மதியீனர்களுக்குத் தான் அல்லாஹ் தன் அருள்மறை மூலம் சம்மட்டி அடி அடிக்கிறான்.

    மேலும் லூத்தை (அவர் சமுகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்); அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார். உலகில் எவருமே உங்களுக்கு முன்  செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைந்தீர்கள்?

    “மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்புமீறும் சமுகத்தாராகவே இருக்கின்றீர்கள்.” (அல்குர்ஆன் 7:80, 81) என எச்சரித்தார்.

    ஆனால் அவர்கள் அவருடைய நல்லுபதேசத்திற்கு செவி சாய்க்கவில்லை. அல்லாஹ் அவ்வூர்வாசிகளை சுட்ட கற்களைக் கொண்டு அழித்துவிட்டான்.அதனால் அல்லாஹ்வின் கோபத்திற்கும், வேதனைக்கும் அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மதத்திலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்தந்த பருவத்தில் சேர்ந்து வாழ திருமண சட்டத்திட்டங்கள் அவர்கள் முன்னோர்களால் வகுக்கப்பட்டு திருமண முறைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு வழியிருந்தும் ஓரின புணர்ச்சியிலும், விபசாரத்திலும் ஈடுபடுவது மானகேடான செயல் அல்லவா? இந்த இரண்டையும் விட்டு போதை பழக்கத்திலிருந்தும் விலகி விட்டால்  இந்த ‘எய்ட்ஸ்’ நோயை உலகை விட்டு விரட்டி விடலாம். அதற்கும் அல்குர்ஆன் அறிவுரை கூறுகிறது.

    நீங்கள்  விபசாரத்தை நெருங்காதீர்கள்: நிச்சயமாக அது மானகேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)

    (நபியே!) முஃமீன்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு  தெரிந்தவன் .   (அல்குர்ஆன் 24:30)

    இன்னும், முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப்பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரண மாக வெளியில்) தெரியக் கூடியவதைத் தவிர (வேறு எதையும்) வெளிகாட்டலாகாது; இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.   (அல்குர்ஆன் 24:31)

    மேலே உள்ள வசனங்கள் ஒவ்வொரு மனிதனும் ஒழுக்க கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. எனவே  ‘எய்ட்ஸ்’ நோயை ஒழிக்க முதல் கட்டுப்பாடு ஒழுக்கம்தான். அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய காலத்திழல் ஹராமான விபச்சாரத்தை ஒழித்து  அதை ஹலாலான முறையில் பலதார திருமணமாக நடத்திக் காட்டினார்கள். அதற்குப் பின்பும் விபச்சாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு திருமறை சட்டப்படி தண்டனையும் அளித்தார்கள் அச்சட்டத்தை பார்ப்போம்.

    விபச்சாரியும், விபச்சாரனும் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில் அவ்விருவர்மீதும் உங்களுக்கு இறக்கம் ஏற்பட வேண்டாம். இன்னும் அவ்விருவரின் வேதனையையும் மூஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்(அல்குர்ஆன் 24:2) என்று தீர்ப்பை அமல் செய்தால் நாட்டில் விபச்சாரம் பெருக வாய்ப்பு இருக்குமா? ஏனென்றால் வேதனை நேரில் காணும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் விபச்சாரம் செய்ய எண்ணம் தோன்றுமா? உள்ளத்தில் அச்சமேற்பட்டு இத்தீய வழியை நெருங்காமல் இருப்பார்கள்.

    இந்நோய் பெருக மிக முக்கிய காரணம் வரைமுறையற்ற தகாத உடலுறவு, போதைப் பழக்கம், அசுத்தமான முறையில் இரத்ததானம் சுத்தம் செய்யப்படாத ஊசி மூலம் மருந்து ஏற்றல் இவைகள் தான் இது தோன்றும் வழியாகும்.

    இன்று அமெரிக்கா, மத்திய ஆப்பிரிக்கா, தென்கிழக்காசிய போன்ற கண்டங்களில் ‘எய்ட்ஸ்’ அதிகமாய் உள்ளது. தாய்லாந்து நாட்டில் சுற்றலாப்ப பயணிகள் மூலம் இந்நோய் பரவி வருகிறது. பிரேசில் நாட்டில் அதிகமான போதை பழக்கத்தால் இந்நோய் பரவி வருகிறது. இந்தியாவில் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் ‘எய்ட்ஸ்’ அதிகமாக உள்ளது.தமிழ்நாடு.’எய்ட்ஸ்’ கட்டுப்பாடு நிறுவனம் எடுத்த ‘சர்வே’யில் கோயில் நகரம் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை மாநகரில் அதிகமான ‘எய்ட்ஸ்’ நோயாளிகள் உள்ளனர் என்று கூறியுள்ளனர். இது கி.பி.200ல் 20,000 ‘எய்ட்ஸ்’ நோயாளிகள் தமிழ்நாட்டில் இருப்பார்கள் என்று கூறியுள்ளது. இந்நோய் பெண் விவசாய கூலிகளிடமிருந்து லாரி ஓட்டுநர்கள் மூலமாக  அதிகம் பரவியுள்ளது. விபச்சாரியுடன் விபச்சாரம் செய்யும் ஒரு ஆடவனோடு மட்டும் இந்நோய் நின்று விடாது இது  அவன் மூலமாக அவன் மனைவிக்கும், அதனால் பிரசவிக்கும் அந்த ஒரு குற்றமுமிழைக்காத அந்த குழைந்தைக்கும் அந்நோய் பரவிவிடும். ஒரு பாவமுமறியாத குழந்தையும் சிறிது காலத்தில் அவன் மரணித்து பின்பு அவன் மனைவி மரணித்து பிறகு அனாதையாக மரணிக்கும் அவல நிலை ஏற்படும்.

    இதனால் உலக சுகாதார நிறவனம் ‘எய்ட்ஸ்’ கட்டுப்படுத்த பெரும் பணச்செலவை செய்து மருத்துவ நிபுணர் குழுவை ஏற்படுத்தி ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளது. இக்கொள்ளை நோயை மனித சமுதாயத்தை விட்டு விரட்ட புதுப்புது மருத்துவ கண்டுபிடிப்புகளின் மூலம் மருந்துகளை கண்டுபிடித்து இந்நோயை களைய அரும்பாடுபட்டு வருகின்றனர். ஒருவர் எய்ட்ஸ் நோயாளி என்று நாம் தெரிந்து கொண்டால் அவரை வெறுக்கவோ ஒதுக்கவோ. கிண்டல் செய்து வசைப்பாடவோ வேண்டாம். அவர்களுடன் தாராளமாக கூடிப் பழகலாம். அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உண்ணலாம். அதனால்  நமக்கு இந்நோய் பரவி விடாது.  அவர்கள் 2லிருந்து சுமார் 10வருடம் வரைதான் உயிர் வாழ முடியும். ஆதலால், அவர்கள் வாழும் சில காலம் அவர்களை வேதனைப்படுத்தாமல் சந்தோஷமாக வாழ விடுவது உயர்ந்த குணமாகும். ஆதலால் அவர்களுடன் உடலுறவு கொள்வது, அவருடைய இரக்கத்தை உபயோகிப்பது, அவர்கள் பயன்படுத்திய  ஊசியை சுத்தம் செய்யாமல் நாம் பயன்படுத்துவது போன்ற காரணங்களின் மூலம் தான் இந்நோய் பரவ வாய்ப்பிருக்கிறது. ஆதலால் இந்த மேற்கூறிய விஷயங்களில் மட்டும் எச்சரிக்கையாய் இருந்தால் போதுமானது.

மருத்துவ நல்லுபதேசம்

    நோயை வராமல் காப்பவன் அறிஞன்; வந்த நோய்க்கு மருந்தளிப்பவன் மனிதன்; நோய் வந்தும் மருந்தளிக்காதவன் நடைபிணமாவான் என்று ஒரு சிறந்த பழமொழி. ஆதலால் நாமெல்லாம் அறிஞனாக வாழ முயற்சி செய்வோம். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! ஆமீன்! வஸ்ஸலாம்.

Previous post:

Next post: