">

தொடர் -9 K.M.H. அபூ அப்துல்லாஹ். நவம்பர் 88 இதழில், இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விவரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் […]

அருள்மறையை அறிந்துகொள்வாராக! அருண்ஷோரி-2. மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கும் கண்ணியம்

காலத்தையும், பணத்தையும் செலவிட்டு படித்துப் பட்டம் பெற்ற டாக்டரை நம்பி வைத்தியம் செய்து கொள்வதை ஒப்புக்கொள்கிறீர்கள். அதேபோல் பட்டம் பெற்ற தொழில் புரியும் வக்கீலை நம்பி அவரிடம் வழக்குகளை ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். அப்படியானால் காலத்தைச் செலவிட்டு, சிரமப்பட்டுப் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகளை நம்பி மார்க்க காரியங்களை ஒப்படைப்பதை மட்டும் நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள்? சையது முஹம்மது, சென்னை -10

H. அப்துஸ்ஸமது, BE.,MSc.,(Eng) சென்னை,     இங்கே இன்னொரு முக்கிய விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். மேலேக் கூறப்பட்ட மனித இயல்புகளுக்குரிய, நியாயமான – முறையான வரையறைக்குட்பட்ட ஆதிக்கம் அறவே அடங்கி ஒடுக்கப்பட்டு விட்டாலும் இம்மை வாழ்க்கையின் முழு பலனையும் அடைய முடியாது. யோகிகள், சந்நியாசிகள். சூபிகள் இவர்களைப் போல் இம்மை வாழ்க்கையைப் புறக்கணித்து, பற்றற்ற வாழ்க்கையை மேற்க்கொள்வது இஸ்லாத்திற்கு முரணானதாகும்.

குர்ஆனின் நற்போதனைகள்: தொடர் : 6 தொகுப்பு : A. முஹம்மது அலி, M.A., M.PHIL 1.    நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (27:45)

     மக்காச்சுடரில் “ஹலோ மிஸ்டர் அந்நஜாத்” என்ற தொடரில் எழுதி வருவது பற்றி நீங்கள் ஏன் விரிவான விளக்கம் அளிப்பதில்லை?

  அபூ ஃபாத்திமா எல்லாம் வல்ல அல்லாஹ் மனித வர்க்கத்தை ஆதம்-ஹவ்வா(அலை) என்ற ஒரே ஜோடியிலிருந்தே படைத்திருக்கின்றான். மனிதர்கள் அனைவரும் ஒரு தாய்-தந்தை வழியில் வந்தவர்கள். அவர்களது இறைவனும் ஒருவனே. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாழ்க்கை நெறி மார்க்கம்-நேர்வழி ஒன்றே. இறைவனால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் அனைவரும் ஒரே குரலில் அந்த ஒரே கொள்கையை போதித்துள்ளனர். இந்த நிலையில் மனிதரிடையே பற்பல மதங்கள், அந்த பல மதங்களிலும் பற்பல பிரிவுகள்-பிளவுகள்-வேற்றுமைகள். மனிதரில் இந்த பிளவுகளும், பிரிவுகளும் ஏற்பட அடிப்படைக் காரணம் […]

                                    H. அப்துஸ்ஸமது, BE.,M.Sc.,(Eng) சென்னை. இனி மூன்றாவது சாத்தியக்கூறு பற்றி ஆராய்வோம். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்த மேலே குறிப்பிட்ட ஹதீதுகளின் விஷயங்களை அன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவர்களது அதிகாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கத் தக்கவனாகக் கருத வாய்ப்பு இருந்திருக்கலாம்.

தொடர்:34                                 அபூஅப்திர் ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)

விமர்சனம்: 13.3.2011 அன்று மேலப்பாளையத்தில் தமிழக முஸ்லிம்களிலுள்ள அனைத்துப் பிரிவினரும், மதகுருமார்களும், தலைவர்களும் ஒன்றுகூடி காதியானிகள் முஸ்லிம்கள் அல்ல எனத் தீர்மானம் ஏகோபித்து ஒருமனதாக நிறைவேற்றியுள்ளனர். நீங்கள் அவர்களை முஸ்லிம்கள் இல்லை காஃபிர்கள் எனக் கூறக் கூடாது என்கிறீர்கள். ஒட்டுமொத்த ஆலிம் அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயமும் கூறுவதை ஏற்பதா? நீங்கள் மாத்திரம் தனிப்பட்டுக் கூறுவதை ஏற்பதா? அவர்கள் அனைவரையும் விட நீங்கள் அறிவாளியா? அப்துல்லாஹ், திருச்சி.

 Y.முஹம்மது ஹனிஃபா, திருச்சி நபியே! பிறைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “”அவை மனிதர்களுக்கு, காலங்களையும் ஹஜ்ஜையும் குறிப்பிடுபவை” என நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 2:189) உலகெங்கும் 19.03.2011 அன்று மெகா பெளர்ணமி என்று பிரகடனம் செய்து அதை அங்கீகரித்துக் கண்கூடாகக் கண்டு கொண்டிருக்கும்போது உலகின் எல்லா நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், சமூக ஆர்வலர்களும் இந்த பெளர்ணமியால் ஏதாகிலும் மாற்றம் ஏற்படுகிறதா, பூமியின் சுழற்சியில் வானிலையில், கடலலையில், தட்பவெப்பத்தில் மற்றும் இது எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகிறது […]