அக்கரையில் அநியாயக்காரர்கள்!

in 2012 டிசம்பர்

கமால்

பொதுவாக அநியாயக்காரர்கள் பொது நலனில் அக்கறையில்லாதவர்களாகவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எந்தப் பதவி தந்து எவ்வளவு கெளரவப்படுத்தினாலும், அதனை துஷ்பிரயோகம் செய்வதிலேயே அவர்கள் குறியாக இருப்பார்கள். ஆம்! இதில் அரசியல்வாதிகளும் சரி; அரசு அதிகாரிகளும் சரி; ஆன்மீகவாதிகளும் சரி; படித்தவர்-பாமரர் யாராக இருந்தாலும் சரி.

இதில் தனக்குக் கீழுள்ள நிலையில் உள்ளவர்களையும், எதிர்நிலையில் உள்ளவர்களையும் கேவலப்படுத்துவதில் ஒருவித அலாதி இன்பத்துடன் செயல் படுவார்கள். அக்கரையில் இருந்து கொண்டு இக்கரையில் உள்ளவர்களைப் புழுதி வாரி தூற்றுவதில் அவர்களுக்குச் சுகம் உண்டு. அந்த வகையில் தான் முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக கருதும் நபி(ஸல்) அவர்களைக் கேலிச் சித்திரமாகவும், கேலிக்குரிய நாயகனாகவும் சித்த ரித்துத் திரைப்படம் எடுத்து தங்களது வயிற்றெரிச்சலை அடக்கிக் கொள்ள முயற்சித்ததுமாகும்.

செப்டம்பர், 11 என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் விமானத்தால் இடிக்கப்பட்ட சம்பவம்தான். சம்பவம் நடந்த உடனேயே தகவல் பரவிக் கொண்டிருக்கிறது எப்படி என்றால் பின்லேடனின் அல்கய்தா அமைப்பால் இக்கொடூர சம்பவம் நடப்பதாக; பொதுவாகவே ஒரு வீடு பற்றி எரிகிறது என்றால் பற்றி எரிகிற சம்பவம்தான் முதலில் வெளியாகும்; பிறகு எந்த சதிகாரர்களால் வீடு எரிக்கப்பட்டது, ஏன், எப்படி போன்ற கார ணங்கள் வெளி வரும். தீப்பற்றி எரிகிற சமாச்சாரத் திற்கு மட்டுமல்ல, கொலை, கொள்ளை போன்ற மர்ம, கொடூர நிகழ்வுகள் யாவற்றுக்கும் இதே நிலை தான்; அத்திப் பூத்தால் போல ஏதாவது சில சம்பவங் களில் மட்டும் உடனடியாக தகவல்கள் வெளியாகும்.

அப்படி அல்கய்தா அமைப்பினரால் மேற்படி கட்டடம் இடிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிறபோது அல் ஜஸிரா டிவியில் ஒசாமா பின்லேடன் தோன்றி உரையாற்றினார். அதிலே இச்சம்பவத்திற்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை; எனவே இதை நாங்கள் செய்யவில்லை. அதே சமயம் செய்தவர்களைப் பாராட்டுகிறேன் என்பதாகப் பேசியிருந்தார். இதில் யாரும் உடன்படவில்லை என்பது வேறு விஷயம். இதிலே ஒன்றை எல்லாரும் புரிந்து கொள்ளக் கடமைப்படுகிறோம். அதாவது நான் செய்யவில்லை-செய்தவனைப் பாராட்டுகிறேன் என்று தைரியமாக சொல்பவர்-நான் தான் செய்தேன் என்று சொல்வதற்கு எவ்வளவு நேரமாகும்; செய்யவில்லை அதனால் ஒப்புக் கொள்ள வில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அதிபராக இருப்பவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் ஏதேனும் சில நாடுகளைத் துண்டாடி வேட்டையாட முனைவது வழக்கம். அதற்குச் சரித்திரத்தில் பல சான்றுகள் உண்டு. அந்த வகையில் ஜார்ஜ் W.புஷ் ஆட்சிக் காலத்தில் முதலில் ஆப்கானை குறி வைத்தார்கள். ஆப்கான்மீது திடீரென்று படையெடுத்தால் மற்ற நாடுகள் கேள்வி கேட்பார்கள்; கேட்டால் பதில் சொல்வதற்காகவே முன்கூட்டியே திட்டமிட்டு இப்படி ஒரு மாபாதகச் செயலை, அமெரிக்க புஷ் அரசாங்கமே முன் நின்று அரங்கேற்றி விட்டு பழியை சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஒசாமா பின் லேடனையும் அவர் சார்ந்த அல்கய்தா அமைப்பையும் அது சார்ந்த ஆப்கான் மீதும் படையெடுத்து கொன்று குவித்தால் மற்ற ஏழை நாடுகள் பணக்கார அமெரிக்காவை கேள்வி கேட்க மாட்டார்களல்லவா? அதனால் இப்படி ஒரு நாடகத்தை நடத்திக்காட்டி தன் ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே இரட்டைக் கோபுர இடிப்புச் சம்பவத்தை லைவ் டெலிகாஸ்ட்டாக CNN போன்ற செய்தி சேனல்களில் காட்டினார்கள். இதனால் பாமரர்களுக்கும் சிந்தனை எழாதா என்று வெட்கமில்லாத ஏகாதி பத்திய அமெரிக்காவை ஒற்றுமை சிஞ்சிற்றுமில்லாத முஸ்லிம் நாடுகள் கூட கேள்வி கேட்கவில்லை.

சகல நாடுகள் வேடிக்கை பார்க்க மாபாதக அமெரிக்கப் போர்க் கப்பல்களும் போர் விமானங்களும் புடைசூழ அப்பாவி முஸ்லிம்கள் ஆப்கானில் கொன்று குவிக்கப்பட்டார்கள். இதனால்-ஒரே கல்லில் இரண்டு மாங்காய்? ஆப்கானை சுக்கு நூறாக்குவது, மற்றொன்று இஸ்லாம் பற்றித் தவறான அவதூறுகளை அள்ளி வீசி இஸ்லாத்தை இல்லாமல்(?) ஆக்குவது என்ற திட்டத்தை அரங்கேற்ற முயற்சி.
ஆனால் நடந்தது என்ன?

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை(ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள்; ஆனால், நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும்-அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (9:32)

ஆம் நடந்ததோ எதிர்மறைவான விளைவாக, இஸ்லாத்தை வேரோடு பிடுங்கி எறிய(?) நினைத்த வர்களுக்கு மரண அடி காத்திருந்தது. 11/9க்குப் பிறகு இஸ்லாம் மேலும் வேரூன்றப்பட்டது. குர்ஆன் ஆங்கில மொழியாக்கப் பிரதிகள் முந்தய சரித்திரங்களை விடப் பன்மடங்காக விற்றுத் தீர்ந்தன. கொடுங்கோலன் புஷ்ஷின் ஆட்சியும் புஷ்-ஆகிவிட்டது. எவ்வளவு கேவலமாக முஸ்லிம்களைச் சித்தரித்துக் காட்ட முயற்சித்தாலும் இஸ்லாம் அவர்களின் மதங்களை விட வேகமாக பரவி வருவதை அவர்களால் ஒத்துக் கொள்ளத்தான் முடிந்தது. ஒத்துக் கொண்டவர்கள் சும்மா இருப்பார்களா? அடுத்த படியாக எந்த சரடு விடலாம், எப்படி விடலாம் என்று யோசித்தார்கள். முஹம்மது நபியை கண்ணியப்படுத்துகிறோம் என்று அவருக்கே(?) (நவூதுபில்லாஹ்) சிலை வைக்க முயற்சிக்கலானார்கள். அதை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் புறக்கணித்தார்கள்.

அடுத்தபடியாக, கேலிச் சித்திரங்களை அவ்வப்போது வெளியிடுவதும், குர்ஆன் பிரதிகளை எரிப்பதுமாக அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடப்பதும் அதற்கு சில முஸ்லிம் நாடுகள் கண்டனம் தெரிவிப்பதும் தொடர்கால நிகழ்வுகள். இதை மேலும் விவரிக்க வேண்டிய தில்லை. அதன் தொடர்ச்சியாக இப்போது இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களைக் கேவலமாகச் சித்தரித்து ஒரு படம் கூட இல்லை ஒரு டிரைலர்.

நபியைக் கேவலப்படுத்த முனைவது இன்று நேற்றல்ல:
நபி(ஸல்) பிறந்தது முதல் நபித்துவம் அடைந்த வரையில் அவர்களை யாரும் கேவலப் படுத்தவு மில்லை, கேவலப்படுத்துமளவுக்கு அவர்கள் நடக்க வுமில்லை. என்றைக்கு அவர்கள் நபித்துவம் பெற் றார்களோ அந்த நாள் முதல் அவர்களது இறப்புக் குப் பின் இன்று வரையிலும் எதிரிகளில் சிலரால் மட்டும் இழித்தும் பழித்தும் பேசப்படுகிறார்கள். இழிபழிக்கு ஆளான நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தினான். கண்ணியப் படுத்துவான். ஒவ்வொரு முஸ்லிமும் ஸலவாத் மூலம் ஒவ்வொரு தொழுகையிலும் கண்ணியப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாளை கியாம நாளிலும் கண்ணியமே அவருக்குக் கிடைக்கப் பெறும் பெரும் பேறாக இருக்கும்.

நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்க ளிடம் ஒரு செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர், நீங்கள் செய்தவைப் பற்றி நீங்களே கைசேதப்படுபவர் களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6)

இதில் மீடியாக்களின் பங்கு:
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண் டாட்டம் என்று சொல்வார்களே அதுபோல் இந்த மீடியாக்கள் முஸ்லிம்களைப் பற்றி என்ன பிரச்சினை வரும்-அதை எப்படி மேலும் பெரிதாக்கலாம் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதும் கண்கூடு. உதாரணமாக பா.ஜ.க. மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருந்த போது பாராளு மன்றத் தாக்குதல்(?) என்று புரளியை கிளப்பிவிட்டு முஸ்லிம்களை வேட்டையாட முயற்சி செய்தார்கள். அதில் நேரடியாகச் சம்பந்தப்படாத ஒரு முஸ்லிமை குற்றவாளி எனச் சித்தரித்து தூக்கில் போட வேண்டும் என்று இன்று வரையிலும் கூக்குர லிட்டு வருகிறார்கள். இந்த பா.ஜ.க. ஆட்சிக்கு முன் ஆட்சி செய்த (மூன்றாவது அணி) காலத்தில் இப்படி பாராளுமன்றத் தாக்குதல் உண்மையிலேயே நடந்திருந்தால் இந்த மீடியாக்கள் என்ன எழுதி இருப்பார்களென்றால் கேவலம் நாட்டின் பாராளுமன்றத்தையே காப்பாற்ற வக்கற்றவர்கள் நாட்டை, நாட்டு மக்களை எப்படி காப்பாற்றப் போகிறார்கள் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் அப்போது ஆளுகின்ற இந்துத்வா ஆட்சிக்கும், அது நடத்திய போலி நாடகத்திற்கும் ஜால்ரா அடித்து தூக்கிப் பிடித்தது இந்த மீடியாக்கள்தான்.

ஏன் இதைப் புரளி என்று சொல்கிறோமென்றால் ஒரு தாக்குதலின் போது ஒரு சாதாரண மனிதருக்கோ, ஒரு எம்.பி.க்கோ, ஒரு மந்திரிக்கோ, ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கோ எந்த உயிரிழப்பு மில்லை. ஏன் ஒரு கீறலும் கூட விழவில்லை. ஆனால் பாராளுமன்றத்தை தாக்க முயற்சித்த தாக ஒருவருக்கு தூக்குத் தண்டனை வரை போய் வழக்கை அவசர அவசரமாக முடிக்க முயற்சி என்றால் இது யாரால்? என்று சிந்திக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

இப்போது புரிகிறதா? இந்த அமெரிக்க ஏகாதி பத்தியம் செய்த செப்டம்பர் 11, 2002 சம்பவத்திற்கும் இந்த இந்துத்துவ சக்திகள் செய்த பாராளுமன்றத் தாக்குதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று. யாரையாவது பழிதீர்க்க, எப்படியாவது பழி சுமத்தி தங்களது அரிப்பைத் தணித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஏதாவது ஒரு பிரச்சனையால் ஸ்தம்பிக்கப்படும்போது உடனே மீடியாக்களில் ஒரு செய்தி வெளியாகும். அது என்னவென்றால் மும்பையை தகர்க்க சதி, டெல்லியைத் தகர்க்க சதி, முக்கிய நகரங்கள் மீது குறி என்றெல்லாம் அவிழ்த்து விடுவார்கள். உடனே பாராளுமன்றப் பிரச்சனை திசை திருப்பப்படும். இந்த புருடாக்கள் ஃபிளாஷ் நியூஸ்களாக மாறிவிடும். இவை இந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தொடர்கின்றன.
பொதுவாகவே மழையே பெய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். உடனே இந்த மீடியாக்கள், காய்ந்த விவசாய நிலப்பகுதிகளைப் படம் பிடித்துக் காட்டி பருவமழைப் பொய்த்து விட்டது என்று அங்கலாய்ப்பார்கள்; பிறகு 2 நாள் பெரிய மழை பெய்யும். உடனே இரண்டு நாள் மழைக்கே நகரங்கள் தாங்க வில்லை. தண்ணீர் குளம் போல் தேங்கி விட்டது, வீதிகளில், வீடுகளில் தண்ணீர் புகுந்து விட்டதாக படம் பிடித்துக் காட்டுவார்கள். இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? மழை பெய்ய வேண்டுமா? வேண்டாமா? ஒரு பக்கம் மக்கள் தொகை பெருகி வருவதாகப் பக்கம் பக்கமாக செய்திகள்; அதனால் விளையும் மாபா தகங்கள் என்றெல்லாம் வரும். அதே சமயம் சாலை விபத்துக்களில் இத்தனை சதவிகிதம் பேர் இறக்கிறார்கள்; ஒவ்வொரு நோயிலும் ஆண்டுக்கு இத்தனை சதவிகிதம் பேர் பலியாகிறார்கள் எனச் செய்திகள்.

ஆக மீடியாக்கள், பேனை பேரீச்சம் பழமாக்கினாலும் பரவாயில்லை; அதற்கு மாற்றாக பேரீச்சம்பழத் தோட்டமாக மாற்றிச் செய்திகளை பூதாகரமாக்குவது கண்கூடு. அந்த மீடியாக்களின் அடுத்த அவதாரம் சினிமா. அந்த சினிமாவில் தான் இப்போது இப்படி இறுதி நபியைப் பற்றிக் கேவல மாகச் சித்தரித்துப் படம் தயாரித்து இறுதி நபியின் கண்ணியத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்கிறார்கள். இதுவெல்லாம் வேறு எதற்காகவு மில்லை. இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் எவ்வளவு கேவலமாகச் சித்தரித்து செய்தி கள் பரப்பினாலும், கேலிச் சித்திரங்கள் வரைந்தாலும், குறும்படம், நெடும்படங்கள் எடுத்தாலும் இஸ்லாம் வேகமாக வளர்ந்து வருகின்றதே; மில்லியன், பில்லியன் டாலர் கணக்கில் பணங்காசுகளை அழித்து கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப முயற்சி செய்தாலும், பைசா செலவில்லாமல் முஸ்லிம்களாக பெரும்பான்மையோர் மாறி வருகிறார்களே என்கின்ற வயிற்றெரிச்சலின் வெளிப்பாடுதானே தவிர வேறில்லை. 2002, செப்டம்பர் 11க்குப் பிறகு இஸ்லாத்தின் தாக்கம் அமெரிக்காவை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தாக்கியது போல் 2012ல் இந்த குறும்படமும் இறைவன் நாடினால், இறுதி நபியைப் பற்றி, அவர்களின் கண்ணியத்தைப் பற்றி, அவர்களின் அரசாட்சியைப் பற்றி, அவர்களின் சீர்மிகு வாழ்க்கையைப் பற்றி இதுநாள் வரையிலும் தெரியாமல் இருப்பவர்களும், இனி அதையும் தான் தெரிந்துகொள்வோமே என்று பார்க்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதை நாம் உணர முடிகிறது.

இது நாள் வரைக்கும் சொல்ல முடியாத வரலாறுகளை, சான்றுகளை முஸ்லிம்கள் மாற்றாரிடம் பரப்ப இது வழிகோலும் என்ற நம்பிக்கை மேகங்கள் சூழ்கின்றன. இறைவனின் அருள் மழையால், அக்கரையில் உள்ளவர்கள் இந்த அக்கறையான சூழ்நிலைக்கு வித்திட்டமையால் மேலும் லட்சக்கணக்கானோர் இஸ்லாத்தைப் பற்றி, பேணி வாழும் நற்பாக்கியம் கிடைக்கும். அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. (ஆமீன்) மேலும் முஸ்லிம்களில் பலர் இதுபோன்ற பிரச்சனைகளின் சீசனில் மட்டும் அல்ல, எல்லா சீசனிலும் இன உணர்வோடு மட்டுமல்லாமல், ஈமானிய உணர்வுடனும் தங்களது செயல்களைச் சுய பரி சோதனை செய்து அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்த முஸ்லிம்களாக வாழ முயற்சிக்க வேண்டும். வெறுமனே கூட்டம் சேர்ப்பதற்காகக் கூடும் போராட்டங்களில் மட்டும் தங்களின் தலை யைக் காட்டிப் பொதுமக்களின் வீண் பேச்சுக்கு ஆளாக வேண்டாம்.

ஏனென்றால், நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்(ஜல்)வை, அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள் (3:102) என்பது நெறி காட்டும் மொழி.

மொழி வழி வாழ்வதே முஸ்லிமின் கதியாக இருக்க வேண்டும். அப்படி வாழ்வதினால் எந்தச் சதியையும் முஸ்லிம் என்பவன் செய்ய மாட்டான் என்பதை பொது மக்கள் அறிய முற்படுவார்கள். எந்தச் சதியை முஸ்லிம் செய்தான் என்று எந்த ஊடகம் ஊதிப் பெரிதாக்கினாலும் நம்புபவர்களாக யாரும் இருக்க மாட்டார்கள். இந்த நிலை உருவாக வேண்டும். எந்தச் சமுதாயமும் தன் நிலையைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ்வும் அவர்களின் நிலையை மாற்றுவது இல்லை! (பார்க்க : 13:11) என்பது இறைவன் வாக்கு. இனி மேலாவது சிந்திப்போம் – சீர்பெறுவோம்-சிறப்பான வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்போம்.

Previous post:

Next post: