இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது. அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக […]
இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம், ஏர்வாடி 2002 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1423 ரஜப் மாதத்துடைய 29ஆவது நாள். அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் டெல்லியில் 12 நிமிடமும் லிபியாவில் 22 நிமிடமும் பிறை இருந்தது. எனவே 2002 அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் முதல் தேதியாகும். ஷஃபான் மாதத்தின் 14வது நாள் பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது கீழ்க்கண்ட நாடுகளில் தெரியும்.
தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் புத்தகம் ஆய்வுத் தொடர் : 20 – M.அப்துல் ஹமீது, திருச்சி. “திருக்குர்ஆனின் சிறப்புகள்” எனும் தலைப்பில் சில சூராக்களை (குறிப்பாக யாசீன் சூரா) சிலாகித்து பல விஷயங்களை ‘அமல்களின் சிறப்புகள்” புத்தகம் எழுதியிருக்கிறது. அவற்றில் மிகைப்படுத்தப்பட்டு பல விஷயங்கள் உள்ளன. அப்புத்தக ஆசிரியருக்கு மிகைப்படுத்தப்பட்டவைகள் உறுத்தலாக இருந்திருக்கும் போல் தெரிகிறது. எனவே எழுதுவதை எல்லாம் எழுதிவிட்டு ஒரு சில குறிப்பையும் தருகிறார். ஆசிரியரின் அக் குறிப்பாவது:
விமர்சனம்: மார்ச் 2002 அந்நஜாத் இதழில் வந்த விளக்கங்களுக்கு விமர்சனம்.’ 1. ஷவ்வால் முதல் நாள் பெருநாள் கொண்டாடித்தான் தீரவேண்டும் என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை. 2. அதற்கு மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாட வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் நடைமுறை. அதனால் தான் தொழக்கூடாத மாதவிடாய் பெண்கள், தக்க காரணமின்றி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஈத்கா வருமாறு கட்டளையிட்டார்கள்.
விமர்சனம்: அபூ அப்துல்லாஹ்வும், பி.ஜே.யும் தங்கள் சொந்த ஊகங்களாலும், வாதங்களாலும் தான் மிர்ஸா குலாமை நபி இல்லை என்று சொல்கிறார்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் எதுவும் அவர்கள் சொல்வதில்லை என இங்கு சில காதியானிகள் பிரசாரம் செய்கிறார்கள். உண்மையிலேயே குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லையா? தெளிவுபடுத்தவும்.மிர்ஸா குலாமை நபி என்று சொல்ல காதியானிகள் என்னதான் ஆதாரம் தருகிறார்கள்? அவர்களுடைய போலி முகத்திரையை கொஞ்சம் கிழித்துக் காட்டுங்களேன். அவர்களுடன் அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தியதில் தாங்கள் பெற்ற படிப்பினை என்ன? […]
அபூஃபாத்திமா இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி […]
அனைத்து அகிலங்களையும் படைத்து அணுவளவும் பிசகாது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக நிர்வகித்து வரும் இணை, துணை, இடைத்தரகர் இல்லாத எல்லாம் வல்ல ஏகனான இறைவன், மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பும் போதே தெள்ளத் தெளிவாகக் கட்டளையிட்டே அனுப்பியுள்ளான். அது வருமாறு: “”நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு(ஒரே) நேர் வழி வரும் போது என் வழியைப் பின்பற்றுவோருக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்” எனக் கூறினோம்.(2:38)