ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2013 செப்டம்பர்

ஆகஸ்டு 2013 தொடர்ச்சி…..
MTM. முஜீபுதீன், இலங்கை

பராஉ பின் ஆஸிப் (ரழி) அவர்கள் கூறியதாவது:-
இணைவைப்போரை அன்றைய (உஹதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி(ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹத் மலைக் கண வாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர்(ரழி) அவர்களைத் தலைவராக நியமித்து, ‘(எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்;; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம்” என்று கூறினார்கள். நாங்கள் அவர்களைக் (களத்தில்) சந்தித்த போது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடி விட்டனர். பெண்களெல்லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது, (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், ‘(நமக்கே வெற்றி!) போர்ச்; செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம் வாருங்கள்)” என்று கூறலாயினர்.

அப்போது அப்துல்லாஹ்பின் ஜுபைர்(ரழி) அவர்கள் தம் சகாக்களை நோக்கி, என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘இந்த இடத்தை விட்டும் எந்தச் சூழ்நிலையிலும் நகராதீர்கள்” என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். எனவே, போர்ச் செல்வங்களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்” என்று சொன்னார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்து விட்ட னர். அவர்கள் மறுத்துவிடவே எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு திசை மாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர். (அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்பியான் முன்வந்து ‘(உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கிறாரா?” என்று பல முறை கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவருக்கு பதிலளிக்க வேண்டாம்” என்று தனது தோழர்களிடம் கூறினார்கள். மீண்டும், ‘உங்கள் கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன்(அபூபக்ர்) இருக்கிறாரா”? என்று கேட்டார். அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களுக்கு நீங்கள் பதில் தர வேண்டாம்” என்று கூறிவிட்டார்கள்.

பிறகு, ‘கூட்டத்தில் கத்தாபின் மகன்(உமர்) இருக்கிறாரா?” என்று கேட்டுவிட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) ‘இவர்களெல்லாம் கொல்லப்பட்டு விட்டார்கள்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அரைகூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள்” என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர்(ரழி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், ‘தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்குக் கவலை தரும் செய்தியைத்தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான்” என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூ சுஃப்யான், ‘(கடவுள்) ஹ{பலே! உன் கட்சி மேலோங்கி விட்டது” என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அவர்களுக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். ‘(அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று மக்கள் கேட்டனர். ‘அல்லாஹ்வே மிக உயர்ந்த வன்; மிக மகத்துவமிக்கவன்” என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது). அபூசுஃப்யான், ‘எங்களுக்குத்தான் ‘உஸ்ஸா” (எனும் தெய்வம்) இருக்கின்றது. உங்களிடம் ‘உஸ்ஸா’ இல்லையே” என்று கூறினார். அப்போது, நபி(ஸல்) அவர் கள், ‘அவர்களுக்குப் பதிலளியுங்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘நாங்கள் என்ன (பதில்) சொல்வது?” என்று வினவ நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படி ஒரு) உதவியாளன் இல்லையே!” என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தார்கள்). ‘இந்த (உஹதுடைய) நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்குப் பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத்துன்பத்தை அளிக்கவும் செய்யாது” என்று அபூ சுஃப்யான் கூறினார். (புகாரி : 4043)

உஹதுப் போரின் நிலை பற்றி அல்குர்ஆனின்:3: 121ம், 122ம், 128ம், 139–143வரை, 153-155ம் வசனங்கள் விளக்குகின்றன. அதுபோல் உஹதுப் போர் பற்றி புகாரி 4041-4083ம் ஹதீஸ்கள் விளக்குகின்றன. இவை எதிலும் நபி(ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மதம் மாற்றுவதற்கு யுத்தம் புரிந்ததாக இல்லை. பல தெய்வக் கொள்கை உடையவர்களே, இஸ்லாத்தையும், நபி(ஸல்) அவர்களையும் அழிப்பதற்காக போர் தொடுத்துள்ளனர். இதுவே உண்மையாகும். எல்லாப் போர்களும் அக்காலங்களில் நிகழ்ந்த பலவகையான காரணங்களினால் ஏற்பட்டவைகள் ஆகும்.

உதாரணமாக:
ரஜீஉ போர்:-
இது உஹது போருக்குப்பின் நடைபெற்றதாகும். அக் காலத்தில் வாழ்ந்த இரு அரப் குலத்தினர் இஸ்லாத்தை அறிய உதவும்படி வேண்டிக் கொண்டதற்கிணங்க பத்துப் பேர் கொண்ட ஒரு குழுவை அனுப்பி வைத்த போது அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து கொலை செய்ததினால் இடம் பெற்ற போராகும். அதுவும் இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்காக மேற்கொண்ட போர் அல்ல.

அகழி போர் :-
பனூ சுலைம் என்ற யூத குலத்தினருடன் சேர்ந்து குறைஷி நிராகரிப்பாளர்கள் பத்தாயிரம் பேருடன் படை திரட்டி வந்த போது மதீனா நகரைச் சுற்றி ஆழமான அகழி தோண்டி முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காக மேற்கொண்ட தற்காப்பு யுத்தமாகும். இதுவும் மதமாற்றம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட தல்ல. இந்த முற்றுகை 20 நாட்கள் வரை நீடித்தது. பின் எதிரிகள் திரும்பினர். இரு பகுதியிலும் சிலர் இறந்தனர். இது ஹிஜ்ரி-4ல் இடம் பெற்றதாகும். இது பற்றிய செய்திகளை புகாரி இலக்கம் 4097 முதல் 4115 வரையுள்ள ஹதீஸ்களில் காணலாம். நபி(ஸல்) அவர்கள் இப்போரின் பின் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா(ரழி) அவர்கள் கூறியதாவது :-
(அகழ் போரின் போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக் கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, ‘இறைவா! அல்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படையெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். (புகாரி :- 4115)

நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையை அவதானிக்கும் போது அறிய முடிவது யாதெனில், முஸ்லிம்களை அழிக்க மக்காவில் இருந்து 447 கி. மீட்டர் தாண்டி மதீனாவுக்கு குறைஷி நிராகரிப்பாளர்கள் படை திரட்டி வந்தார்கள் என்பதாகும்.

பனு குறைழா குலத்தினருடன் போர் :-
பனு குறைழா குலத்தினர் நபி(ஸல்) அவர்களுடன் போர் மறுப்பு ஒப்பந்தம் செய்திருந்தனர். அதனை மீறி குறைஷி நிராகரிப்பாளர்களுடன் சேர்ந்து அகழ் போரில் முஸ்லிம்களுக்கெதிராக போர் செய்தனர். இதனால் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய ஹிஜ்ரி- 5ம் ஆண்டு அவர்களுக்கெதிராக போர் நிகழந்தது. இதுவும் மதமாற்றம் செய்வதற்காக நடந்த போர் அல்ல. அவதானிக்குக.
புகாரி:- 4117 ஹதீஸ்

‘தாத்துர் ரிக்காஉ” போர். :-
இரு குலத்தினர் முஸ்லிம்களுக்கு எதிராக போர் செய்ய அல்லது தாக்க இருப்பதை அறிந்து அவர்களை எதிர் கொள்ளச் சென்ற நபி(ஸல்) அவர்களின் ஏழாவது போர் இதுவாகும். இப்போரின் போதே நபி(ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையைத் தொழுதார்கள். ஆனால் சண்டை நடைபெறவில்லை. ஆகவே இதுவும் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு நடந்த போர் அல்ல.
(பார்க்கவும் :- புகாரி : 4125 முதல் 4137)

குஸாஆ குலத்தின் பனூ முஸ்தலிக் போர்: (முரைசீஉ போர்)
இக்குலத்தினர் 700பேர் கொண்ட படைதிரட்டி வந்த போது நபி(ஸல்) அவர்கள் தலைமையில் மதீனாவில் இருந்து முரைசீஉ என்ற இடத்திற்குச் சென்று எதிரிகளைத் தடுப்பதற்காக மேற்கொண்ட போர் ஆகும். இப்போரில் இருந்து திரும்பும் போதே அன்னை ஆயிஷா ரலி) அவர்கள் மீது அவதூறு சுமத்தும் சம்பவம் நடந்தது. பார்க்கவும் :- (புகாரி : 4138, 4139)

ஹுதைபிய்யா போர் அல்லது உறுதிப் பிரமாணம் :
ஹிஜ்ரி 6-ம் ஆண்டு துல்கஅதா மாதம் நபி(ஸல்) அவர்களும், 1500 நபி தோழர்களும் ‘உம்ரா’ செயவதற்காக மக்கா நோக்கிப் பயணித்த போது மக்கா நிராகரிப்பாளர்களினால் தடுக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் ஹுதைபிய்யா என்னும் இடத்தில் தங்கினார்கள். அங்கு மக்கா நிராகரிப்பாளர்களுக்கும் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அவ் ஒப்பந்தம் முஸ்லிம்களுக்கு பாதகமானது போல் இருந்தது. இந்த ஒப்பந்தமே ஹுதைபிய்யா உடன்படிக்கை ஆகும். இந்த ஒப்பந்தத்தில் பின்வரும் பாதகமான அம்சங்கள் முஸ்லிம்கள் சார்பாக இருந்தும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சமாதானம் கருதி ஏற்றுக் கொண்டார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி ‘இவ்வாண்டு முஸ்லிம்கள் உம்ரா செய்யாது திரும்பிப் போய்விட வேண்டும். அடுத்த ஆண்டு வந்து 3 நாட்களில் உம்ராவை முடித்துக் கொள்ள வேண்டும்.

போராயுதங்கள் எதனையும் உடன் எடுத்து வரலாகாது. மக்காவிலிருந்து யாரேனும் மதீனா வந்தால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்பிவிட வேண்டும். ஆனால் மதினாவிலிருந்து எவரும் மக்கா வந்தால் திருப்பி அனுப்ப மாட்டோம்.” என்பன போன்ற முஸ்லிம்களுக்குப் பாதகமான அம்சங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. அப்படி இருந்தும் நபி(ஸல்) அவர்கள் ஒப்பந்தத்தினை ஏற்றார்கள். பின்பு இது முஸ்லிம்களுக்கு மக்கா வெற்றிக்கு சாதகமாக அமைந்தது. மக்காவில் முஸ்லிம்களுக்கு கொடுமைகள் நிகழ்ந்தாலும் மக்காவில் முஸ்லிம்களின் தொகை அதிகரிக்க உதவியாக இருந்தது. இங்கும் முஸ்லிம்களுக்குத் துன்பங்களை ஏற்படுத்திய வர்கள் குறைஷி நிராகரிப்பாளர்களே ஆவர். அவதானிக்கவும்: (புகாரி : 4147- 4190 வரை)

‘தாத்துல் கரத்” போர்:-
இது ஹிஜ்ரி 6ம் ஆண்டு ரபீஉல் அவ்வல் மாதம் நடந்த போர். இப்னு அபீதர்(ரழி) அவர்களைக் கொலை செய்து விட்டு, அவரின் துணைவியையும், நபி(ஸல்) அவர்களின் ஒட்டகங்களையும் கடத்திச் சென்றவர்களுடன் இடம் பெற்ற போர் ஆகும். அவதானிக்கவும்:
(புகாரி – 4194)

கைபர் போர் :-
மதீனாவுக்கும் ஷாமுக்கும் இடையில் 96 மைல் தொலை வில் கைபர் இருக்கின்றது. இங்கு வாழ்ந்த யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மக்கா குறைஷி நிராகரிப்பாளர்களுக்குப் போர் செய்ய உதவி செய்தபடியும், முஸ்லிம்களுக்குப் பல வழிகளிலும் தொல்லை கொடுத்தபடியும் இருந்தனர். இதைத் தடுப்பதற்காக ஹிஜ்ரி-7ம் ஆண்டு முஹர்ரம் மாதம் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 1500க்கும் அதிகமான முஸ்லிம்களுடன் சென்று மேற்கொண்ட போராகும். இந்த யுத்தத்தில் முஸ்லிம்களில் 15 பேரும் யூதரில் 93 பேரும் உயிரிழந்தனர். அந்த யுத்தத்தின் பின்பே யூதரின் விஷமங்கள் குறைந்தது. இந்த யுத்தமும் யூதர்களை மதமாற்றம் செய்வதற்கு நடந்த யுத்தம் அல்ல. அவதானிக்கவும்:-
(புகாரி-4195 முதல் 4248வரை)

i~த் பின் ஹாரிஸா போர் :-
முஸ்லிம்களின் வணிகக் குழுவைத் தாக்கிக் கொள்ளையிட்டதற்கெதிராக மேற்கொண்ட யுத்தம்.
(புகாரி:- 4250)
ஷாம் நாட்டில் நடைபெற்ற ‘மூத்தா” போர்:-
முஸ்லிம்களின் தூதுவரை ஷாம் நாட்டு ஆளுனர் கொலை செய்ததற்கு எதிராக நிகழ்ந்த போர் ஆகும். இது ஹிஜ்ரி-8ம் ஆண்டு ஜுமாதுல் ஊலா மாதம் ரோமர்களான பைஸாந்தியர்களுடன் நடந்த போர். இதில் நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புபடி, நபி(ஸல்) நியமித்து அனுப்பிய படைத் தளபதிகளான ஸைத் பின் ஹாரிஸா(ரழி), ஜஅஃபர் பின் அபீதாலிப்(ரழி), அப்துல் லாஹ் பின் ரவாஹா(ரழி) ஆகியோர் மரணமடைய பின் காலித் பின் வலீத்(ரழி) அவர்களின் தலைமையில் மூத்தா போர் வெற்றி கொள்ளப்பட்டது. இந்த போரில் எதிரிகளின் படை பெரும் தொகையிலும,; முஸ்லிம்கள் 3000 மட்டுமே இருந்தனர். இச்சம்பவங்கள் நிகழ்ந்த சந்தர்ப்பத்திலேயே மதீனாவில் இருந்த நபி(ஸல்) முஸ்லிம் படைத் தளபதிகளின் இறப்பு பற்றி அல்லாஹ்வினால் அறிவிக்கப்பட்ட செய்தியை நபி(ஸல்) படை மதீனாவை வந்தடைவதற்கு முன் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவதானிக்கவும்:- (புகாரி–4290 முதல் 4268வரை)

மக்கா வெற்றிப் போர் :
இது ஹிஜ்ரி-8ஆம் ஆண்டு ரமழான் மாதம் நடை பெற்ற போர் ஆகும். அன்று பனூபக்ர் குலத்தார் மக்கா குறைஷிகளின் கூட்டணியிலும், பனூ குஸாஆ குலத்தினர் முஸ்லிம்களின் கூட்டணியிலும் இணைந்திருந்தனர். நீர் நிலை தொடர்பாக எழுந்த தகராறினால் பனூ பக்ர் குலத்தினர் பனூ குஸாஆ குலத்தைச் சேர்ந்த ஒருவனைக் கொலை செய்ததினால் தகராறு எழுந்தது. இச்சந்தர்ப்பத்தில் மக்காவிலுள்ள குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்கு மாற்றமாக தமது நட்புக் குழுவான பனூபக்ர் குலத்தாருக்கு ஆயுத உதவியும், அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களின் நட்புக் குழுவுடன் யுத்தம் செய்யவும் முற்பட்டனர். இதனால்ஹுதைபிய்யா ஒப்பந்தம் முறிந்தது. அதை யடுத்து பனூ குஸாஆ குலத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் உதவி கேட்டனர். இதன் காரணமாக முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மக்கா நிராகரிப்பாளருடன் போர் செய்ய 10 ஆயிரம் படையினர்களுடன் சென்று, மக்கா குறைஷி;கைளை வெற்றி கொண்டனர். இந்த யுத்தமும் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு நடை பெற்ற யுத்தமல்ல. இவ்வாறே இஸ்லாமிய யுத்தங்கள் அமைந்தன. இறைநம்பிக்கை என்பது பலவந்தமாக ஏற்படுத்தப்படுவது அல்ல. சுய விருப்பத்தின் அடிப்படையில் சத்தியத்தை அறிந்து கொள்வதனால் ஏற்படும் நம்பிக்கை ஆகும். அவதானிக்கவும் :-
(புகாரி–4275 முதல் 4313வரை)

முஹம்மது நபி(ஸல்) அவர்களினால் 10 ஆயிரம் படைகளுடன் மக்கா வெற்றி கொள்ளப்படுவது பற்றி முன்னைய வேதங்களிலும் முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. அவ தானியுங்கள்:- (உபாகமம் :- 33: 2-3 )
அவர் வல்லமை நிறைந்த வீரராகப்புறப்பட்டு போர் வீரனைப் போன்று உறுதியுடன் ஓங்கி கர்ச்சித்துதம் முடைய எதிரிகளை வெற்றி கொள்வார்.
(ஏசாயா : 42 : 10-13)

முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவுக்கு வந்து மக்கா நகரை வெற்றி கொள்கிறார்கள். கஅபாவைச் சுற்றி இருந்த சிலைகளை அகற்றுகிறார்கள். அவதானியுங்கள் :-

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரழி) அவர்கள் கூறியதாவது :
கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி(ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், ‘சத்தியம் வந்து விட்டது அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்துவிட்டது (இனி) அசத்தியம் மீண்டும் ஒரு முறை பிறக்காது” என்று கூறிக் கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். (புகாரி –4287)

இறைவனுக்கு நிகராக வேறு கடவுள்களைக் கற்பனை செய்து சிலையாக அமைத்து வணங்குவதை, முன்னைய வேத விளக்க நூல்களும் பாவமானதாகவே கூறுகின்றன. அவதானியுங்கள்:-

‘கண்ணால் காண முடியாதது யாரோ, அவனே படைத்த இறைவன். அவனே கண்களுக்கு பார்வை சக்தியைத் தருகிறவன். அவர்கள் வணங்கிக் கொண்டிருக்கும் கண்கொண்டு பார்க்கும் பொருள்கள் யாவும் கடவுள் இல்லை.” (கேனோ உபநி~த் : 1:6)

ஆதி பகவான் உருவத்தை தேவர்களோ, அசுரர்களோ உணர்ந்தவர்கள் அல்ல. (பகவத் கீதை :- 10:14)

எவனொருவன் எல்லாம் அறிந்தவனாகவுள்ளானோ, அவனே மேன்மை, மகிமை, ஆகாயம், நீர், பிரம்மச்சரிய பிரகாசம், அன்னம், பஜனை கிரியை எல்லாம் ஏற்படுத்தியுள்ளான். அவனை ஒன்று என்றோ, இரண்டு என்றோ, மூன்று என்றோ, நான்கு என்றோ, ஐந்து என்றோ, ஆறு என்றோ, ஏழு என்றோ, எட்டு என்றோ, ஒன்பது என்றோ, பத்து என்றோ கூறப்படுவதில்லை. அவன் நிலையான எல்லா வஸ்துக்களையும் பார்க்கின்றான். அவன் அசாதா ரானமானவனும் ஏகனுமாவான். இவையெல்லாம் அவனின் ஏற்பாடாகும்.(அதர்வ வேதம் த்ரியோ த~காண்டம் : 4:4:14-19)

இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை.
(அதர்வண வேதம் :- 32:3)

இந்தியாவில் மக்கள் வைத்துள்ள ஆதி வேதங்களின் விளக்கவுரைகள் சிலை வணக்கம் கூடாது என விளக்கியபடி இருக்கின்றன. ஆனால் ஆசியாவில் அதிகமானவர்கள் அறிவு இருந்தும் சிலை வணக்க வழிபாடுகளையே மேற்கொள்கின்றனர்.

இதே போல் ஐரோப்பா, அவுத்திரேலியா, அமெரிக்கா, ஆபிரிக்காவின் கிழக்கு தெற்கு மேற்கு பகுதி சார்ந்த கண்ட நாடுகளிலும் இறைவனுக்கு அல்லது தேவனுக்கு சிலை வழிபாடு பாவம் என அறிந்தும், அங்கும் சிலை வணக்கம் நடைமுறையில் இருந்தே வருகின்றது. வேத விளக்க நூல் என கிறித்தவர்களால் நம்பப்படும் பைபிள் கூறுவதை அவதானியுங்கள்.

தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை.
(யோவான் : 1:18)

‘மேலே வானிலும்; கீNழு பூமியிலும்; பூமியின் கீழே நீரிலும் உண்டாக்கி இருக்கின்றவைகளுக்கு ஒப்பான ஒரு வடிவத்தையேனும்;; எந்த ஒரு சிலை(விக்கிரகத்தை) யாயினும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவை களை நமஸ்கரிக்கவும்; சேவிக்கவும் வேண்டாம்!’
(பைபிள் யாத்திராகமம் : 20:1-5)

மேலே உள்ள முன்னைய வேத விளக்க நூல்களும் சிலை வணக்கத்தினை எதிர்த்தே வந்துள்ளன. மக்கா வெற்றியின் போது முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாவது :-

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்தபோது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப் படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச்சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத் தூதர்களான) இப்ராஹீம்(அலை), இஸ் மாயீல்(அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப் பட்டன. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின்மீது ஆணையாக! இவ்விருவரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த) வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். பிறகு, கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) கூறினார்கள்; ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள். (புகாரி : 4288)

அன்று சிலைகளைத் தெய்வங்களாக வைத்து வழிபட்டனர் மக்கா நகரகுறைஷிகள். இவ்வாறான மடமையான சமூகத்தில் ஏக இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் சத்திய இறை மார்க்க போதனை செய்த காரணத்தினாலேயே இவ்வாறான துன்பங்களைச் சந்திக்க வேண்டி இருந்தது. அந்த குறைஷிகளும் தாம் இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கத்தினையே பின்பற்றுவதாகக் கூறினர். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்களின் போதனைகள் சிலை வணக்க வழிபாட்டிற்கு முற்றிலும் மாற்றமானதாகவே இருந்தது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்கிக் காட்டுகின்றது.

இன்னும், நீர் இவர்களுக்கு இப்ராஹீமின் சரிதையையும் ஓதிக் காண்பிப்பீராக! அவர்தம் தந்தையையும், தம் சமூகத்தவரையும் நோக்கி: ‘நீங்கள் எதை வணங்குகிறீர்களோ?”என்று கேட்டபோது, அவர்கள்; ‘நாங்கள் சிலைகளை வணங்குகிறோம்; நாம் அவற்றின் வணக்கத்திலேயே நிலைத்திருக்கிறோம்.” என்று கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்) கூறினார்: ‘நீங்கள் அவற்றை அழைக்கும்போது, (அவை காதுகொடுத்துக்) கேட்கின்றனவா? அல்லது அவை உங்களுக்கு நன்மை செய்கின்றனவா அல்லது தீமை செய்கின்றனவா?” (எனவுங் கேட்டார்). (அப்போது அவர்கள்) ‘இல்லை! எங்கள் மூதாதையர் இவ்வாறே (வழிபாடு) செய்ய நாங்கள் கண்டோம்” என்று கூறினார்கள். அவ்வாறாயின், ‘நீங்கள் எதை வணங்கிக் கொண்டிருந்தீர்கள்? என்பதை நீங்கள் பார்த்தீர்களா?” என்று கூறினார். ‘நீங்களும,; உங்கள் முந்திய மூதாதைகளும் (எதை வணங்கினீர்கள் என்று கவனியுங்கள்).” ‘நிச்சயமாக இவை எனக்கு விரோதிகளே, அகிலங்களின் இறைவனைத் தவிர” (அவனே காப்பவன்). ‘அவனே என்னைப் படைத்தான்;; பின்னும், அவனே எனக்கு நேர்வழி காண்பிக்கிறான்.” ‘அவனே எனக்கு உணவளிக்கின்றான்; அவனே எனக்கு குடிப்பாட்டுகிறான்.” ‘நான் நோயுற்ற காலத்தில், அவனே என்னைக் குணப்படுத்துகிறான்.”

‘மேலும் அவனே என்னை மரிக்கச் செய்கிறான்; பிறகு அவனே என்னை உயிர்ப்பிப்பான். நியாயத் தீர்ப்பு நாளன்று, எனக்காக என் குற்றங்களை மன்னிப்பவன் அவனே என்று நான் ஆதரவு வைக்கிறேன். இறைவனே! நீ எனக்கு ஞானத்தை அளிப்பாயாக் மேலும், ஸாலிஹானவர்களுடன் (நல்லவர்களுடன்) என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின் வருபவர்களில் எனக்கு நீ நற்பெயரை ஏற்படுத்துவாயாக! இன்னும், பாக்கியம் நிறைந்த சுவனபதியின் வாரிஸுக்காரர்களில் (ஒருவனாக) என்னை ஆக்கிவைப்பாயாக!”

‘என் தந்தையாரையும் மன்னிப்பாயாக! நிச்சயமாக, அவர் வழி கெட்டவர்களில் (ஒருவராக) இருக்கிறார்.”
‘இன்னும், (மனிதர்கள் உயிர் கொடுத்து) எழுப்பப்படும் நாளில் என்னை நீ இழிவுக்குள்ளாக்காதிருப்பாயாக!. அந் நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனு மளிக்கமாட்டா. எவரொருவர் பரிசுத்த இருதயத்தை அல்லாஹ்விடம் கொண்டு வருகிறாரோ அவர் (கண்ணியம் அடைவார்). பயபக்தியுடையவர்களுக்கு அருகில் சுவனபதி கொண்டு வரப்படும். வழி தவறியவர்களுக்கு எதிரே நரகம் கொண்டு வரப்படும். இன்னும், அவர்களிடம் கூறப்படும்”: ‘நீங்கள் வணங்கி வழிபட்டவை எங்கே?” என்று. ‘அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை வணங்கினீர்களே! இப்போது) அவை உங்களுக்கு உதவி செய்யுமா?

அல்லது தங்களுக்கு தாங்களேனும் உதவி செய்து கொள்ளுமா?” பின்னர், அவை முகங்குப்புற அ(ந் நரகத்)தில் தள்ளப்படும்;. அவையும் (அவற்றை) வணங்கி வழி தவறிப் போனவர்களும், ‘இப்லீஸின் சேனைகளும், ஆகிய எல்லோரும் (அவ்வாறு தள்ளப் படுவார்கள்.)” அதில் அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு கூறுவார்கள்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, நாம் வெளிப்படையான வழிகேட்டிலேயே இருந்தோம்.” ‘உங்களை நாங்கள் அகிலங்களுக்கெல்லாம் இறைவ னாக இருப்பவனுடன் சரிசமான முள்ளவையாக ஆக்கி வைத்தோமே” (அப்போது) : இந்தக் குற்றவாளிகள் தாம் எங்களை வழி கெடுத்தவர்கள். ஆகவே, எங்களுக்காக பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனுமில்லை. நாங்கள் (உலகத்துக்கு) மீண்டு செல்ல வழி கிடைக்குமாயின், நிச்சயமாக நாங்கள் மூஃமின்களாகி விடுவோம்! (என்றுங் கூறுவார்கள்.) நிச்சயமாக இதிலே ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும் அவர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை. மேலும், நிச்சயமாக உமது இறைவன் யாவரை யும் மிகைத்தோனாகவும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் : 26 : 69-104)

அன்று மக்காவில் வாழ்ந்தகுறைஷி நிராகரிப்பாளர்களும், வேதம் வழங்கப் பெற்ற சிலைகளை வணங்கும் வேதக்காரர்களும் தமது முன்னோர்களைப் பின் தொடர்வதாகக் கூறினர். இறைத் தூதர்களையும் சிலையாக வைத்து வணங்கினர். குறைஷிகள் தாம் இப்ராஹீம் (அலை) அவர்களின் மார்க்கத்தில் இருப்பதாகக் கூறினர். ஆனால் இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலைகளை வணங்கியதற்கு எந்த ஆதாரத்தையும் முன் வைக்கவில்லை. அந்த சமுதாயத்தை நோக்கி அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி அருளி, இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலைகளை வணங்கிய சமுதாயத்திடம் சொன்ன வார்த்தைகளை இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் மனித சமுதாயம் யாவருக்கும் படித்துக்காட்ட வைத்தான். இதன் காரணமாகவே நபி(ஸல்) அவர்களும், நபி;தோழர்களும் தண்டிக்கப்பட்டார்கள்; துன்புறுத்தப்பட்டார்கள். ஏக இறைவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் என்ற கொள்கையை அழிக்க நிராகரிப்பாளர்கள் வாள் ஏந்தி போர் செய்வதற்கும் வந்தனர். இதனால் முஸ்லிம்களும் சத்திய அல்லாஹ்வின் மார்க்கத்தை அழிய விடாது பாதுகாப்பதற்காக தற்பாதுகாப்பு யுத்தத்தில் பங்கு கொள்ள வேண்டி ஏற்பட்டது. அல்லாஹ்வின் பேரருளால் ஏக இறைவனின் அல்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் போதனைகளும் இன்று வரை பாதுகாக்கப் படுகின்றன. இதனால் ஷைத்தானின் நரகிற்கு வழி காட்டும் மதங்களிலிருந்து மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

மேலும் அவதானியுங்கள்; முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்குர்ஆனின் ஒளியின் கீழ் அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் வரலாற்றை பின்வருமாறு மக்காவில் வாழ்ந்த மக்களிடம் விளக்குகிறான். ஆரம்பத்தில் நபித்துவத்தின் முன் இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது தந்தையின் கடவுள்களை ஏற்க மறுக்கிறார். பூமியிலுள்ள பொருட்களை கடவுளாக ஒப்பீடு செய்து பின் அப்போலிக்கடவுள்களை மறுத்துவிடுவதை அவதானியுங்கள்.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்

Previous post:

Next post: