விமர்சனம் : பீ.ஜையை விமர்சிப்பதில் தீவிரமாக இருக்கும் நீங்கள் தர்கா, தரீக்கா சடங்குகளை எதிர்ப்பதில் தீவிரம் காட்டுவதில்லை, சமீபத்தில் ஒரு மவ்லவி ஸலவாத்து நாரியா பற்றி ஆதரித்துச் சொன்னதை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதாக உங்கள் மீது ததஜவினர் குற்றம் சுமத்துகின்றனரே!

விளக்கம் : இப்படி விமர்சிப்பவர்கள் பிறப்பதற்கு முன்னரே! ஏன்? இவர்கள் வானளாவப் புகழ்ந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை.யை ரப்பாகக் கொண்டு அவர் கூறும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணானக் கருத்துக்களையும் வேதவாக்காகக் கொண்டு, முகல்லிதாகக் கண்மூடிச் செயல்படுகிறார்களே, அதே பீ.ஜை. குருகுல புரோகித மதரஸாக்களில் மீலாது மவ்லூது, ஸலவாத்து நாரியா இன்னும் பல பித்அத்தான ஸலவாத்துகள், ஃகத்தம், ஃபாத்திஹா, புருதா போன்ற இன்னும் பல பித்அத்களை ஓதி அரங்கேற்றிக் கொண்டிருக்கும் காலத்திலேயே 1960களிலேயே நாம் இந்த பெரும் வழிகேடான பித்அத்களை கடுமையாக விமர்சித்தோம் என்பது நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த இக்காளான்களுக்கு எங்கே விளங்கப்போகிறது.

ஸலவாத்து நாரியா என்றாலே நெருப்பு ஸலவாத் என்பதே அதன் பொருள். அதை ஓதுவதைக் கொண்டு நேரடியாக நரகத்திற்குப் போகலாம் என்று அன்றே கூறி இருக்கிறோம். இவர்கள் வானளாவப் புகழும் பீ.ஜை. உட்பட பல மவ்லவிகளும் துண்டு பீடியை ஊதித் தள்ளிக் கொண்டிருக்கும்போதே, நெருப்பை வாய்க்கருகில் கொண்டு வைப்பது கொண்டு நாங்கள் நரக நெருப்பை விழுங்கப் போகிறோம் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் என்று கடுமையாகப் பேசி பெரும்பாலான மக்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும், மிரட்டல்களுக்கும், அடி உதைக்கும் ஆளாகி இருக்கிறோம். இப்படி அன்று தப்லீஃக் கூட்டங்களில் பேசியதால், தப்லீஃக் முக்கியஸ்தர்கள் எனக்குப் பெரும்பாலும் பேச வாய்ப்புக் கொடுப்பதில்லை. கூட்டம் சேராது என அஞ்சினார்கள்! இவற்றை எல்லாம் பெருமையாக மக்களிடம் பரப்பிப் பேர் புகழை விரும்பாததால், இக்கத்துக் குட்டிகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ஸலவாத்து நாரியா மட்டுமல்ல, நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராமல், இப்புரோகித மூட முல்லாக்களின் முன்னோர்கள் கற்பனை செய்து நடைமுறைப்படுத்தியுள்ள, அனைத்து ஸலவாத்துகளும் 33:36 இறைக் கட்டளைப்படி பகிரங்கமான வழிகேடு, நரகில் சேர்க்கும் என்று அந்நஜாத் ஆரம்பிக்கு முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம். இதை 23.11.1984ல் 6வது வெளியீடாக வெளிவந்த “”மீலாது மெளலூது மார்க்கம் சொல்வதென்ன?” என்ற பிரசுரம் உண்மைப்படுத்தும்.

அது மட்டுமா? நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த அசலான அல்லாஹ் ஏற்கும் ஸலவாத்திலேயே, இப்புரோகித முல்லாக்கள் மேலதிகமாகச் சேர்க்கும் ஹழரத், செய்யிதினா, மவ்லானா, முர்´தினா போன்ற இணைப்புகளும் (Extra Fittings) 33:36 இறைக் கட்டளைப்படி பகிரங்க வழிகேடு, 33:66-68, இன்னும் பல வசனங்கள் கூறுவது போல் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு, இந்த மவ்லவிகளும், அவர்களுடைய பக்தகோடிகளும் ஒருவரை ஒருவர் சபித்து, வசை மாரி பொழிவதையும் எடுத்துக்காட்டி அடிக்கடி எச்சரித்து வருகிறோம்.

இந்த தர்கா, மீலாது மவ்லூது, பித்அத்தான ஸலவாத்துகள் போன்ற வழிகேடுகளை வழிகேடுகள்தான் என்று உறுதியாக நாமோ எமக்குப் பின்னர் பீ.ஜையோ முதன் முதலாக எடுத்து வைக்கவில்லை. ஹிஜ்ரி 470ல் பிறந்து 561ல் இறந்த அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்), ஹிஜ்ரி 661ல் பிறந்து 728ல் இறந்த இப்னு தைமிய்யா(ரஹ்), ஹிஜ்ரி 1111ல் பிறந்து 1206ல் இறந்த முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்(ரஹ்) போன்ற பிரபல்ய அறிஞர்களும், மற்றும் பல அறிஞர்களும் கடந்த சுமார் 9 நூற்றாண்டுகளாகக் கடுமையாக எச்சரித்து வரும் பகிரங்க வழிகேடுகள்தான். ஆயினும் ஆயிரத்தில் 999 பேர் நரகவாதிகள் என்ற புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் படியும், 32:13, 11:118,119, 50:30 இன்னும் அக்ஃதர், அக்ஃதர்ஹும் என சுமார் 80 இடங்களில் வரும் பெரும்பான்மையினர் ஏற்கமாட்டார்கள் என்று கருத்தில் வரும் வசனங்கள் இவை அனைத்தும் ஆயிரத்தில் 999 பேர் நரகத்திற்குரியவர்கள் என்றே உறுதிப்படுத்துகின்றன.

தர்கா வழிபாடுகளை மிகமிகக் கடுமையாகக் கண்டித்து ஜீலானி(ரஹ்) எழுதிய நூல்கள் இன்றும் இருக்கும் நிலையிலேயே, இப்புரோகிதர்கள் அவருக்கே தர்கா கட்டி அனாச்சாரங்களை 900 வருடங்களாக செய்து வருவதும், இருட்டில் அவரை ஆயிரம் முறை அழைத்தால் (இருட்டு திக்ர்) அவர் ஆஜராகி உதவி செய்வார் என்ற மூட நம்பிக்கையை வளர்த்து, அவர் பெயரால் மவ்லூது ஓதியும் பாக்கெட்டை நிரப்பும் இம்மவ்லவிகள் எந்தளவு வக்கிரப் புத்தி கொண்டவர்கள்? எனவே கடந்த 1000 வருடங்களாக நீடித்து நிலைத்திருக்கும் தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடுகளில் மூழ்கி இருக்கும் மக்கள் நேர்வழிக்கு வருவது குதிரைக் கொம்பே. அவர்களில் அல்லாஹ் நாடும் 1000ல் 1 என்ற கணக்கில் விரல் விட்டு எண்ணப்படுவோர் வெகு சிலருக்கே 51:55 இறைவாக்குக் கூறுவது போல் மேற்படி குர்ஆன் வசனங்கள் பலனளிக்கும்.
இப்போது சிந்திப்பவர்களின் சிந்தனைக்கு வரவேண்டியது, மே 2004ல் 11 வருடங்களுக்கு முன்னர் புரோகிதர் பீ.ஜையால் 7:71, 12:40, 53:23 நேரடியாகச் சொல்லும் இறைவாக்குகளை நிராகரித்து (காஃபிராகி) சுயமாக, அவரே ஏகத்துவம் 2008 மார்ச் பக்கம் 4ல் கூறியிருப்பது போல் “”அண்மைக் காலத்தில் ஓர் இயக்கத்தை உருவாக்கி அதை அடையாளப்படுத்த அடித்தளமாக அமைந்தது கடற்கரையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாடுதான்” என்று எழுதி இருப்பதே ததஜவிற்கும் இஸ்லாத்திற்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை என்பதை உறுதிப்படுத்த போதுமானதாகும்.

ஆம்! அற்பமான உலகை நோக்கமாகக் கொண்டு கற்பனை செய்த பெயர்-பித்அத்தான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரால் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தாகச் செயல்படும் இவர்களுக்குத் தங்களின் இயக்கத்தில் இந்த அளவுப் போதையும், வெறியும் இருந்தால், 1000 வருடங்களுக்கு முன்னர் அன்றைய புரோகிதர்களால் அதே மேற்படி குர்ஆன் வசனங்களை நிராகரித்து (காஃபிராகி) சுயமாக அற்பமான உலகை நோக்கமாகக் கொண்டு கற்பனை செய்த பெயர், பித்அத்தான சுன்னத் வல்ஜமாஅத் என்ற பெயரால் பித்அத் வல்ஜமாஅத்தாகச் செயல்படும் மத்ஹபினருக்கு எந்தளவு போதையும், வெறியும் இருக்கும் என்பதைச் சிந்தித்துப்பார்க்க வேண்டும்.

நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களே குர்ஆன், ஹதீஃதில் அணுவளவும் ஆதாரமே இல்லாத நிலையில் பீ.ஜையின் சுய கற்பனையில் முளைத்த கொடிய ´ஷிர்க்கான ததஜவில் இந்தளவு போதையும், வெறியும் கொண்டு தறுதலைத் தனமாக தமிழகமெங்கும் நடக்கும் போது, 1000 வருடங்களாகச் செயல்பட்டு வரும் பித்அத் ஜமாஅத்தினரின் பிடிவாதப் போக்கை எளிதில் மாற்ற முடியுமா? சிந்தியுங்கள்!

உலகம் அழியும் வரை தர்கா, தரீக்கா, மத்ஹபு, புரோகிதர்களின் ஆதிக்கம் இருக்கத்தான் செய்யும். மக்களில் மிகப் பெரும்பாலோர் அவர்கள் பின்னால்தான் செல்வார்கள் நரகை நோக்கி. அவர்களில் ஆயிரத்தில் ஒருவர் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனையை ஏற்று நேர்வழிக்கு வரலாம். இன்ஷா அல்லாஹ்.
ததஜவினர் குறிப்பிடும் தர்கா, தரீக்கா, ஸலவாத்து நாரியா போன்ற பித்அத்தான வழிகேடுகள் பற்றி இன்று உலகம் முழுவதும் புரோகிதர்களிலேயே பல பிரிவினர் கடுமையாகத் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் தான் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளும்-பீற்றிக்கொள்ளும் ததஜ என்ற வழிகெட்டப் பிரிவு.

இந்த அனைத்துப் பிரிவினரின் அசல் நோக்கம் ஆயிரத்தில் 999 பேர் இருக்கிறார்களே அவர்களில் ஒரு கணிசமான தொகையினரைத் தங்கள் தங்கள் பின்னால் அணி வகுக்கச் செய்ய வேண்டும், அதன் மூலம் கூட்டத்தைக் காட்டி உலகியல் ஆதாயங்களை அடைய வேண்டும் என்பதே. அதனால்தான் 7:71, 12:40, 53:23 இறைவாக்குகளைக் கண்டு கொள்ளாமல் அவற்றை நிராகரித்து (2:39 இறைவாக்குப்படி குஃப்ரிலாகி) ஆளாளுக்குத் தனித்தனிப் பிரிவுப் பெயர்களைக் கற்பனை செய்து தங்களுக்குச் சூட்டிக் கொண்டு அவற்றைப் பிரபல்யப்படுத்துகிறார்கள்.

22:78ல் அல்லாஹ் நமக்கு “”முஸ்லிமீன்” என்று பெயரிட்டுள்ளதாகக் கூறுகிறான். நபிமார்கள் செய்த முழுமையான மார்க்கப் பணியை ஒருவர் செய்தாலும், தன்னை முஸ்லிம்களில் உள்ளவன் என்றே சொல்ல 41:33 இறைவாக்கு வழிகட்டுகிறது. 2:208 இறைவாக்கு நம்மை இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடக் கட்டளையிடுகிறது. 3:102 இறைவாக்கு எந்தளவு பயபக்தியுடன் நடக்க வேண்டுமோ அந்தளவு பயபக்தியுடன் நடக்கும்படியும், முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம் என்று கட்டளையிடுகிறது. 3:103 வசனம் நீங்கள் அனைவரும் பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடக்கக் கட்டளையிடுகிறது.

இப்றாஹீம்(அலை) அவர்கள் தம் மக்களுக்கு முஸ்லிம்களாக அன்றி மரணிக்க வேண்டாம் என்று கட்டளையிட்டதை 2:132 இறைவாக்குக் கூறுகிறது. நபிமார்கள் அனைவரும் தங்களை “”மினல் முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று பிரகடனப்புத்தியதை 2:131, 132, 10:72,84, 7:126, 5:44,111, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இவை அல்லாமல் “”முஸ்லிமீன்” சில திரிபுகளில் சுமார் 46 இடங்களில் இடம் பெற்றுள்ளது.

இவ்வளவு தெளிவாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக குர்ஆன் கூறிக் கொண்டிருந்தும் 2:39 இறைவாக்குக் கூறுவது போல் அவற்றை நிராகரித்துச் சுயமாகக் கற்பனை செய்து தனித்தனிப் பெயர் சூட்டி மகிழ்பவர்கள், அதைப் பிரபல்யப்படுத்தத் துடிப்பவர்களின் நாளை மறுமையின் நிலை என்ன? இவர்கள் இவ்வுலகிற்காக மறுமையை விற்பவர்கள்தானே? மூசா(அலை) தன்னை முஸ்லிம்களிலுள்ளவன் என்று பிரகடனப்படுத்தினார். அவரைப் பொய்யாகப் பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, தாங்கள் முஸ்லிம்களிலுள்ளவர்கள் என்பதை நிராகரித்து யூதர்கள் என்றும் அதிலும் பல பிரிவுப் பெயர்களைச் சூட்டிக்கொண்டு அற்பமான உலகைத் தேடுகிறார்கள். அதன் முடிவு நாளை மறுமையில் தெரியும்!

ஈசா(அலை) தன்னை “”முஸ்லிம்களிலுள்ளவன்” என்று பிரகடனப்படுத்தினார். அவரைப் பின்பற்றுவதாகப் பொய்யாகக் கூறிக்கொண்டு, தாங்கள் முஸ்லிம்களிலுள்ளவர்கள் என்பதை நிராகரித்து கிறித்தவர்கள் என்றும் அதிலும் பலப் பிரிவுகளாகப் பிரிந்து அற்பமான உலகைத் தேடுகிறார்கள். அதன் முடிவு நாளை மறுமையில் தெரியும்!
அதே வரிசையில்தான் மிகப் பெரும்பாலான முஸ்லிம்கள் மேலே நாம் குறிப்பிட்டுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து குஃப்ரிலாகி ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தான “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐயும், (புகாரீ(ஆ) மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம்(ஆ) இமாரா 3/4553, 4554, திர்மிதி (அ) ஃபிதன் 57, இப்னுமாஜா(அ)ஃபிதன் 2/3979, தயாலிசி(அ) 1/443) முஸ்லிம்களில் உள்ளவர்கள் (மினல் முஸ்லிமீன்) என்பதையும் நிராகரித்து விட்டு, மேலும் 7:71, 12:40, 53:23 இறைவாக்குகளையும் நிராகரித்து இவர்களாகச் சுயமாக கற்பனை செய்து சூட்டிக்கொண்டு, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அதன் மூலம் உலகியல் ஆதாயங்களை அடைய முற்படும் இந்த அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் நாளைய நிலை குர்ஆன் 2:39 இறைவாக்குக் கூறும் நரகம் தான் என்பதில் உண்மையான முஃமின்களுக்கு ஐயம் இருக்க முடியுமா?

இதிலும் மற்ற அனைத்துப் பிரிவினரும் ஒன்று இஜ்மா, கியாஸ் என்றோ, முன்சென்ற இமாம்கள் (கலஃபிகள்) குர்ஆன், ஹதீஃதிலிருந்து விளங்கிச் சொன்னது என்றோ, கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள் விளங்கிச் சொன்னது (ஸலஃபிகள்) என்றோ தங்கள் தங்கள் பிரிவுகளை நியாயப்படுத்துகிறார்கள். அதற்கு மாறாக ததஜ பிரிவினர் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று வாயளவில் சொல்லிக் கொண்டு,குர்ஆன், ஹதீஃதில் இல்லாத குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரண்பட்ட ´ஷிர்க்கான தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத், அதிலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்றெல்லாம் பிதற்றித் திரிவது, மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் ஆகக் கேடுகெட்ட பிரிவு அதாவது தறுதலை ஜமாஅத் இவர்கள்தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா? சிந்தியுங்கள்!

ததஜவினர் தர்கா, தரீக்கா ஸலவாத்து நாரியா போன்ற ´ஷிர்க்,குஃப்ர், பித்அத் அநாச்சாரங்களைக் கடுமையாகக் கண்டித்து வருவது அந்த மக்களை 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழிக்குக் கொண்டு வரும் தூய நோக்கத்தோடு அல்ல. இது காலம் வரை முன் சென்ற இமாம்களை தக்லீது செய்வதன் மூலம் நரகை நிரப்ப இருக்கும் ஆயிரத்தில் 999 பேரில் கணிசமானவர்களை பீ.ஜையை தக்லீது செய்ய வைக்கும் மிகக் கெட்ட நோக்கத்துடன்தான்.

இதுகாலம் வரை தக்லீதில் மூழ்கி இருந்த மிகமிகப் பெருங்கொண்ட மக்களில் ஒரு கூட்டத்தை முன்னைய தக்லீதை விட ஆகக் கேடுகெட்ட தக்லீதில் மூழ்கடிக்கும் பெரும் முயற்சியிலேயே ததஜவினரும், அதன் இமாமும் அயராது உழைத்து வருகின்றனர். அந்த அடிப்படையில்தான் ஸலவாத்து நாரியாவை விமர்சிப்பதுடன், அதை நாம் கண்டு கொள்வதில்லை எனத் தம் பக்தகோடிகளின் காதில் பூ சுற்றுகின்றனர். பாவம் பக்தகோடிகள். நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் குறிப்பாக பீ.ஜையை சபித்து ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற இறைவாக்குகளை படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் உணர முடியும்.

ஆக தர்கா, தரீக்கா, பித்அத்தான ஸலவாத்துகள் இவற்றைப் பல பிரிவினர் கடந்த ஆயிரம் ஆண்டுகளாகக் கடுமையாக விமர்சித்து அவற்றின் வழிகேடுகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். புதிதாக ததஜவினர் அவற்றைக் கண்டிப்பதாகப் பீற்றிக் கொள்ள வேண்டியதில்லை. பல பிரிவினர் 21:92,93, 23:52-56, 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 இறைவாக்குகளை நிராகரித்து 2:39 இறைவாக்குப்படி காஃபிராகி நரகம் புகக்கூடிய ஆயிரத்தில் 999 பேரில் ஒரு கூட்டத்தை தங்கள் தங்கள் பிரிவில் சேர்க்க முற்படுகிறார்களே அல்லாமல், அவர்களில் எப்பிரிவிவினரும் 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழிக்கு வரத்தயாரில்லை. அந்த நேர்வழி வரும் நல்ல எண்ணம் அவர்களுக்கு இருந்தால் தங்கள் தங்கள் வழிகெட்டப் பிரிவுகளை தவ்பா செய்து விட்டு 3:103 இறைக்கட்டைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டும் கூற முன்வந்து விடுவார்கள். அப்படி வராதவரை அவர்கள் வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்!

பிரிவுப் பெயர்களை ஆயிரம் தான் அறிவுக்குப் பொருந்தும் காரணங்களைக் கூறி நியாயப்படுத்தினாலும் அவை வழிகேடுகள்தான், நரகில் கொண்டு சேர்க்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை. பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்துபவர்கள் பகிரங்க வழிகேடர்கள், பெரும் மூடர்கள் என்பதை, உலில் அல்பாப்-அறிஞர்கள் என்று கூறும் 2:179,197,269, 3:7,190, 5:100, 12:111, 13:19, 14:52, 38:29,43, 39:9,18,21, 40:54, 65:10 இந்த இறைவாக்குகள் அனைத்தையும் பெரும் முயற்சியாக (ஜிஹாத் 29:69) நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும். குர்ஆனின் அடிப்படையான (உம்முல் கிதாப் 3:7) முஹ்க்கமாத் வசனங்களுக்கு எவ்விதச் சுய மேல் விளக்கமும் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பவர்கள் மட்டுமே அறிவுடையவர்கள். முஹ்க்கமாத் வசனங்களுக்கு அறிஞர்கள், பேரறிஞர்கள்,அல்லாமாக்கள், இமாம்கள் என கலஃபிகள் பேராலோ, கலீஃபாக்கள், நபிதோழர்கள், தாபியீன்கள் என ஸலஃபிகள் பேராலோ சுயவிளக்கங்கள் மேல் விளக்கங்களை எடுத்து நடப்பவர்கள் மூடர்கள், வழிகேடர்கள் என்பதை எளிதாக விளங்கலாம்.

கீழ்மட்ட தர்கா தரீக்கா மவ்லவிகளிலிருந்து, ஆக மேல் மட்ட அறிஞர்கள் எனப் பீற்றும் ஸலஃபிகள் மற்றும் தவ்ஹீத் மவ்லவிகள் அனைவரும் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? அவாம்களான சாதாரண மக்களுக்கு குர்ஆன் விளங்காது. குர்ஆன் வசனங்களை மவ்லவிகளாகிய அவர்கள் விளக்கித்தான் அவர்களால் அதாவது அவாம்களால் புரிய முடியும் என்பதே இம்மவ்லவிகளின் அடிப்படை வாதம். நேரடியாகச் சொல்வதாக இருந்தால் அல்லாஹ் அல்குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் மனிதர்களுக்காகத் தெள்ளத் தெளிவாக குர்ஆனை விளக்கி இருக்கிறேன் என்று கூறுவது தவறு. அந்த ஆற்றல் அல்லாஹ்வுக்கு இல்லை. அதாவது குர்ஆனை அவாம்களுக்கு விளக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இல்லை. (நவூதுபில்லாஹ்) அந்தப் பெரும் ஆற்றல் ஆலிம்களாகிய எங்களுக்குத்தான் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்கிறார்கள். இவர்கள் மூடர்களிலேயே பெரும் மூடர்களா? இல்லையா? அபூஜஹீலின் வாரிசுகளா? இல்லையா? ஃபிர்அவ்னின் வாரிசுகளா? இல்லையா? நம்ரூதின் வாரிசுகா? இல்லையா? முன் சென்ற அந்தந்தக் காலத்து மூடர்களான மதகுருமார்களின் வாரிசுகளா? இல்லையா? இன்று உலகில் காணப்படும் எண்ணற்ற மதங்களின் மதகுருமார்களின் அடிச்சுவற்றைப் பின்பற்றும் கேடிலும் கேடுகெட்டவர்கள் முஸ்லிம் மதகுருமார்கள் என்பதில் குர்ஆன், ஹதீஃதை நேரடியாகத் தன்னம்பிக்கையுடன் படித்து விளங்குகிறவர்களுக்குச் சந்தேகம் இருக்க முடியுமா? சிந்தித்து முடிவெடுங்கள்!

ஒவ்வொரு நபிக்குப் பின்னரும், அச்சமூகத்தில் எப்படி இந்த மதகுருமார்கள் திருட்டுத்தனமாக, சட்டவிரோதமாகப் புகுந்து கொண்டு அச்சமூகத்தை பித்அத், குஃப்ர், ´ஷிர்க்கில் மூழ்கடித்து தாஃகூத்களாக -மனித ஷைத்தான்களாக, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்பட்டு, நரகத்தை நிரப்ப ஷைத்தானுக்குத் துணை போனார்களோ, அதே வரிசையில்தான் ஒட்டுமொத்த முஸ்லிம் மதகுருமார்களும் முஸ்லிம் சமுதாயத்தை 21:92, 23:52 இறைக் கட்டளையையும் இன்னும் பல குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து 2:39 வசனம் சொல்வது போல் நிரந்தர நரகத்தில் கொண்டு சேர்க்கும், கொடிய செயலான எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரித்து அழிந்துபடும் அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைந்து வருகிறார்கள். 1450 வருடங்களுக்கு முன்னர் இப்றாஹீம்(அலை), இஸ்மாயீல்(அலை) விட்டுச் சென்ற ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை அன்றைய தாருந் நத்வா உலமாக்கள் என்ற மதகுருமார்கள் எப்படி எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரித்து 3:103 இறைவாக்குச் சொல்வது போல் ஒருவருக்கொருவர் கடும் பகைவர்களாக்கி நரக விளிம்பில் நிற்க வைத்திருந்தார்களோ, அதே போல் இன்றைய முஸ்லிம் மதகுருமார்கள் முஸ்லிம் சமுதாயத்தை எண்ணற்றப் பிரிவுகளாக்கி, கடும் பகைவர்களாக்கி நரக விளிம்பில் நிற்க வைத்திருக்கிறார்கள்.

அன்று இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் அன்றைய உலமாக்கள் என்று பெருமை பேசிய அபூஜஹீலையும் தாருந்நத்வா ஆலிம்களையும் வடிகட்டிய மூடர்கள் என்று அடையாளம் காட்டி, அம் மூடர்களின் வசீகர, சூன்ய, உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்க பெரும்பாடு பட்டார்களோ, அதே போன்றதொரு கடும் முயற்சி இன்றையக் காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அப்படிப்பட்டதொரு கடும் முயற்சியைத்தான் அந்நஜாத் கடந்த 30 வருடங்களாக செய்து வருகிறது. ஆம்! ஒவ்வொரு நபிக்குப் பின்னரும் அந்நபியின் சமூகத்தில் இம்மதகுருமார்கள் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு அச்சமூகத்தை பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற நரகில் புகுத்தும் கொடுஞ் செயல்களில் மூழ்கடித்து அச்சமூகத்தை நரகின் விளிம்பில் நிற்க வைத்திருக்கும் போது, அடுத்ததாக ஒரு நபிவந்து, அம்மதகுருமார்களின் உடும்புப் பிடியிலிருந்து மக்களை, விடுவிக்க எப்படிப்பட்டக் கடும் முயற்சிகளைச் செய்தார்களோ அதே கடும் முயற்சியைத்தான் அந்நஜாத் செய்து வருகிறது.

ஆனால் ஒரு வித்தியாசம். இறுதித் தூதருக்கு இறுதி நெறிநூல் குர்ஆன் அருளப்பட்டு முழுமை பெற்று உலகம் அழியும் வரை அதுதான் நெறிநூல் என்று பதிந்து பாதுகாக்கப்பட்டிருப்பது போல் (பார்க்க : 5:3, 3:19,85, 15:9) முன்னைய நபிமார்களுக்கு அருளப்பட்டவை முழுமை பெறாததால் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. அதனால் இறுதி நபிக்கு முன்னர் வந்த நபிமார்கள், ரசூல்மார்கள் அனைவரும் நேர்வழிச் செய்தியை இறைவனிடமிருந்து நேரடியாக வஹி மூலம் பெறும் கட்டாயத்தில் இருந்தார்கள். வேறு வழி இல்லவே இல்லை! அதனால் ­ஷரீஅத் இல்லாத நபிமார்கள், ஷரீஅத்துடைய ரசூல்மார்கள் தொடர்ந்து வரும் கட்டாயம் இருந்தது.

அதற்கு மாறாக இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறுதியாக இறக்கியருளப் பட்ட இறுதி நெறிநூல் குர்ஆன் முழுமை பெற்று, பதிந்து பாதுகாக்கப்பட்டு, அது கூறும் முஸ்லிம்களில் உள்ளவர்கள் பின்பற்றும் இஸ்லாம் மார்க்கம் மட்டுமே இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும், மதகுருமார்கள் கற்பனை செய்துள்ள பிரிவுப் பெயர்களைச் சரிகண்டு அதன்படி நடப்பவர்கள் நாளை மறுமையில் பெரும் நட்டமடைவார்கள் என்று இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உறுதியாக, தெளிவாக, நேரடியாக அறிவிக்கிறதை 5:3, 3:19,85, 15:9 வசனங்களை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் நிச்சயம் விளங்க முடியும்.

அல்குர்ஆனுக்குப் பிறகு இறைவனிடமிருந்து புதிய சட்டங்களை (ஷரீஅத்) கொண்டு வரும் ஒரு ரசூலோ, புதிதாக இறைவனிடமிருந்து வஹீ மூலம் செய்தி பெற்றுத் தரும் ஒரு நபியோ வரவேண்டிய தேவையோ, அவசியமோ இல்லவே இல்லை. எனவே இறுதி முத்திரைத் தூதரான முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பின்னர் இந்த உம்மத்தில் எவனொருவன் தன்னை நபி என்றோ, ரசூல் என்றோ வாதிடுவானால் அவன் கடைந்தெடுத்த பொய்யன், அயோக்கியன், வழிகேடன் என்பதில் குர்ஆனை உள்ளது உள்ளபடி படித்து விளங்கியவன், ஒருபோதும் மறுக்கமாட்டான். 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 இறைக் கட்டளைகளை நிராகரித்து அப்படிப்பட்ட பொய்யர்கள் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் சுய விளக்கம் கொடுப்பதை அப்படியே வேதவாக்காகக் கொண்டு நம்பிச் செயல்படுகிறவர்கள் நாளை நரகை நிரப்பும் மதகுருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் 1000ல் 999 பேர், என்ற பெருங்கூட்டத்தில் தான் ஐக்கியமாவார்கள். என்னதான் அதி அற்புதமாக நேரடியாக குர்ஆன் வசனங்களையே எடுத்துக்காட்டினாலும் 1000ல் 999 பேர் பிரிவினைவாதிகளான இம்மதகுருமார்கள் பின்னால் தான் செல்வார்கள். இவ்வுலகில் இம்மதகுருமார்களின் காட்டில் தான் மழை என்பதில் சந்தேகமே இல்லை. நாளை மறுமையிலோ இம்மதகுருமார்களின், அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் 1000ல் 999 பேரின் நிலையோ மிகவும் பரிதாபம். இதனை 32:13, 11:118,119, 12:106, 25:30, 50:30 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற வசனங்களைப் படித்துப் பார்க்கும் ஒவ்வொருவரும் விளங்க முடியும். அதிலும் 34:31,32,33, 40:47,48 இறைவாக்குகள் பெருமையடிக்கும் இம்மதகுருமார்களையே குறிக்கின்றன.

நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கும் இன்றைய மக்களுக்கு மத்தியில் 1450 வருடங்களுக்கு முன்னர் இறங்கி முழுமை பெற்ற குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத் இவற்றில் அணுவளவும் கூடுதல் குறைவு இல்லாமல் அப்படியே உள்ளது உள்ளபடி எடுத்து வைக்கிறது அந்நஜாத், எனவே நபி என்றோ, ரசூல் என்று வாதிடுவதற்கு கடுகளவும் தேவையே இல்லை என்பதைத் திட்டமாக அறிவிக்கிறோம்.
அல்லாஹ் பெயரிட்டு (22:78) வழிகாட்டிய (3:102,103, 41:33) நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அல்லாத, 21:92,93, 23:52-56, 3:103,105, 6:153,159, 30:32, 41:13,14 இறைவாக்குகளை நிராகரித்து 2:39 இறைவாக்குச் சொல்வது போல் குஃப்ரிலாகி எண்ணற்றப் பிரிவுப் பெயர்களை சரிகண்டு, அப்பெயர்களைப் பிரபல்யப்படுத்தி, மார்க்கப் பணி புரியும் முஸ்லிம் மதகுருமார்கள் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் பற்றிப் பிரசாரம் செய்கிறார்கள் என்றால், மக்களை 6:153 இறைவாக்குச் சொல்லும் நேர்வழிக்கு கொண்டு வரும் நன்னோக்கத்துடன் அல்லவே அல்ல. ஆயிரத்தில் நரகம் புகும் 999 பேரில் ஒரு கூட்டத்தைத் தங்கள் அணியில் சேர்க்கும் கெட்ட நோக்கமே. அற்பமான உலகியல் ஆதாயமே நோக்கம். இந்த நோக்கத்துடன் பல பிரிவினர்கள் தர்கா, தரீக்கா, சலவாத்து நாரியா போன்ற வழிகேடுகளை உலகம் முழுவதும் கடந்த 1000 வருடங்களாகக் கண்டித்துப் பிரசாரம் தொடர்ந்து செய்து வருகின்றனர். அவற்றின் ஒரு கூட்டமே வழிகெட்ட ததஜ.

பிரிவினைகளை நியாயப்படுத்தி ஆதத்தின் சந்ததிகளை நரகை நோக்கி நடைபோட வைக்கம் இம்மதகுருமார்களை அடையாளம் காட்டி மக்களை அவர்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிக்கும் கடும் முயற்சியை, அதாவது அனைத்து நபிமார்களும் செய்த இந்த கடும் முயற்சியை கடந்த 1000 வருடங்களாக உலகின் எந்த மூலையிலும் யாரும் செய்ததாக, செய்வதாக எமக்குத் தெரியவில்லை. அதனால் அந்நஜாத் அதில் முழுக்க முழுக்கக் கவனம் செலுத்துகிறது!

பிரிவினைவாதிகள் நரகை நிரப்ப இருக்கும் பெருங்கொண்ட மக்களைக் கவரும் எண்ணத்துடன் செயல்படுத்தும் செயல்பாடுகளில் அந்நஜாத் முக்கிய கவனம் செலுத்தாதது, அதன் அசல் இலட்சியத்தில் தொய்வு ஏற்படாதிருக்கவே ஆகும். உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு, குறைந்தபட்சம் பேர் புகழுக்காகச் செயல்படும் எப்பிரிவினரும் ஆயிரத்தில் 999 பேர் வெறுத்து ஒரேயயாரு நபர் விரும்பும் நபிமார் கள் செய்த புரோகித ஒழிப்புப் பிரசாரத்தைச் செய்ய ஒருபோதும் முன்வரமாட்டார்கள்.

எனவே அந்நஜாத் அந்தப் பேராபத்தான,கடும் முயற்சியை அல்லாஹ் மீதே முழு நம்பிக்கை வைத்து இறுதி நெறிநூல் குர்ஆன் வசனங்களைக் காட்டியே நிலைநாட்டி வருகிறது. ஆயினும் புகாரீ 3348, 4741, முஸ்லிம் 3739 ஹதீஃத்கள் கூறுவதுபோல் 1000ல் ஒரேயொரு நபரே குர்ஆனில் காணப்படும் வசனங்களை ஏற்று நேர்வழிக்கு வருவார்கள். ஆயினும் சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், இப்படி ஒவ்வொன்றாக ஒரு கணிசமான எண்ணிக்கையினர் சேர்ந்தால், அவர்களால் மட்டுமே உலகில் பெரியயதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதுவும் இக்காலக் கட்டத்தில் இவ்வுலகிற்கு அப்படியொரு மறுமலர்ச்சி வருவது, அல்லாஹ்வின் நாட்டத்தில் இருந்தால் மட்டுமே அது நடக்கும். (பார்க்க : 3:139, 24:55)

அப்படியொரு மாற்றம் அல்லாஹ்வின் நாட்டத்தில் இல்லை என்றால் அது நடக்காது. பல நபிமார்களின் முயற்சி பற்றிய செய்திகள் குர்ஆனில் இருப்பது இதையே உண்மைப் படுத்துகிறது. ஆயினும் சில நபிமார்கள் தன்னந்தனியே சுவர்க்கம் போவது போல் (புகாரீ 5705, 5752) இம்முயற்சியில் தூய எண்ணத்துடன் (இஃலாஸ்) செயல்படுகிறவர்கள் சுவர்க்கம் நுழைவது உறுதி. இது குர்ஆன் கூறும் உத்திரவாதமாகும். அல்லாஹ்வே போதுமானவன்.

Previous post:

Next post: