">

“”நாம் எமது 77 வயதை கடந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை ஆண்டுகள் வல்லமை மிக்க அல்லாஹ் எம்மை இப்பூமியின் மேற்பரப்பில் நடமாட அனுமதிக்கிறானோ? யாம் அறியோம்! ஆயினும் எமக்குப் பின்னரும் அந்நஜாத் “”குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரங்கள்; மனிதர்களில் எவரது சுய கருத்தும் ஒருபோதும் மார்க்கம் ஆகாது” என்ற நேர்வழிக் கருத்தில் உறுதியாக நின்று நிலைத்து வெளிவர வேண்டும் என்பதே ஒரே குறிக்கோள். அல்லாஹ் அருள் புரிவானாக.” மேலே உள்ள வாசகம், “”அந்நஜாத்” பத்திரிகை ஆசிரியர் […]

மீரான், துபை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற கிருபையுடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். 1. சகாப்தங்கள் மறைவதில்லை. 2. தொடங்கிய சகாப்தங்கள் கியாமத் நாள் வரை தொடர்ந்து கொண்டேயிருக்கும். 3. இறுதித் தூதர் ரசூல்(ஸல்) அவர்கள் தொடங்கிய ஏகத்துவப் பணியை கியாமத் நாள் வரை வல்ல அல்லாஹ் யார் மூலமாவது தொடர்ந்து கொண்டேயிருப்பான். நம் தமிழ்நாட்டில் புரையோடிக் கிடந்த ´ஷிர்க், பித்அத், தனி நபர் வழிபாடு, புரோகிதம் இவைகளுக்கு எதிராக வல்ல அல்லாஹ் நமக்களித்த வாழ்க்கைத் […]

தங்கத் தமிழகத்தில் இனிய இஸ்லாமிய இலட்சிய இதழ்கள் என்ற பெயரோடு பல பவனி வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இன்னொரு பத்திரிக்கையா? அதுவும் மார்க்கத்தைப் போதிப்பதற்கென்று மதரஸாவில் ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் இருக்க கடிகாரக்கடைகாரனும், செருப்புக்கடைக்காரனும், பிளாஸ்டிக் கடைக்காரனும், மார்க்கத்தைப் போதிக்கிறோம் என்று கிளம்புவதா? இஸ்லாமிய பத்திரிகை நடத்துவதா? 7 வருடங்கள் கஷ்டப்பட்டு ஓதிப்பட்டம் பெற்ற மெளலவிகள் பிழைப்பில் மண்ணைப் போடுவதா? என்ற அர்த்தமற்ற சந்தேகங்கள் எமது முதல் இதழுக்குப்பின் கிளப்பப்பட்டு, அப்பாவி முஸ்லிம்கள் குழப்பத்தில் ஆழ்த்தப்பட்டிருக்கிறார்கள். […]

 (Plasma Cannon Ball Shooting Star) அல்லாஹ் படைத்த படைபினங்களுக்குள் சிறப்புக்குரிய படைப்பாக மனு,ஜின், மலக்குகள் உள்ளனர். மனிதனை களி மண்ணிலும், ஜின்களை கொழுந்து விட்டெரியும் தீச்சுவாலையிலும் மலக்குகளை ஒளியாலும் அல்லாஹ் படைத்தான். மனிதர்களைப் படைப்பதற்குப் முன்பே மலக்குமார்களையும், ஜின்களையும் அல்லாஹ் படைத்து விட்டான். காய்ந்த களி மண்ணிலிருந்து, (அதாவது) பிசுபிசுப்பான கறுப்புக் களிமண்(ணாக இருந்து காய்ந்து விட்ட மண்)ணிலிருந்து நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைப் படைத்தோம்.   அதற்கு முன் நாம் (ஆதி) ஜின்னைத் தகிக்கும் […]

பாத்திமா மைந்தன் தொழுகை சமத்துவத் தொட்டிலாக மட்டுமல்ல, மருந்தில்லா மருத்துவமாகவும் திகழ்கிறது. நமது ஆரோக்கிய வாழ்வுக்குத் தொழுகை ஒரு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குகிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அனைத்தும் இயந்திர மயமாகிவிட்டன. இதனால் அதிக இயக்கம் இல்லாத இயந்திர வாழ்க்கையை நாம் நடத்தி வருகிறோம்.நமது உடல் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். தூங்கும்போது மட்டுமே முழு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். உண்பது, உட்காருவது, படுப்பது என்ற நிலையில் வாழ்க்கையை நகர்த்தினால் உடல்நலம் கெடும். உடல் எடை கூடும். […]

– மண்டபம் M. அப்துல்காதிர் கடந்த 31 ஆண்டுகள் பல இன்னல்கள் இடையூறு கள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து சத்தியத்தை எடுத்துரைத்து மார்க்கப் பணி யில் வெளி வந்ததுதான் அந்நஜாத் எனும் இலட்சிய மாத இதழ். இஸ்லாத்தில் அணுவின் முனை அளவும் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை. புரோகிதம் ஒழிய வேண்டும். மனித நேயம் வளர வேண்டும் என்ற உறுதியான கோட்பாடுடன் துவங்கப்பட்ட இந்த இதழ்…. திசை மாறாத கொள்கை குன்றாகவே கடைசி மூச்சு வரை இருந்து […]

சொர்க்க தோழி மாத இதழ் ஆசிரியர் சா.அப்துர்ரஹீம் தமிழக முஸ்லிம்களிடையே புரையோடிக் கிடந்த மூட நம்பிக்கைகளையும், அனாச்சாரங்களையும் முதன் முதலாக எடுத்துச் சொல்லி எச்சரித்தவர். ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள் என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருந்தபோது, குர்ஆனாகிய அல்லாஹ்வுடைய கயிற்றை எல்லோரும் ஒற்றுமையாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று ஆதாரத்துடன் விளக்கியவர். அவதூறுகளையும், எதிர்ப்பு களையும் காலடியில் போட்டு மிதித்தவர். குர்ஆனும், நபிவழியும் மட்டும்தான் இஸ்லாம் என்று முப்பது வருடங்களாக ஓங்கி ஒலித்தவர். சமாதி வழிபாடும், […]

பஷீர் அஹமது 1. நாம் ஒவ்வொருவரும் மார்க்க கல்வியை கற்று ஆலிமாக மாற வேண்டும். 2. சம்பளம், கூலி வாங்காமல் மார்க்க பணி செய்ய வேண்டும். 3. நமக்கு தெரிந்த மொழியிலாவது அன்றாடம் அல்குர்ஆனை வாசிக்க வேண்டும். 4. எந்த இயக்கத்திலும், சங்கத்திலும் சேராமல், எந்த மஹல்லாவில் வசிக்கி றோமோ அந்த மஹல்லாவையே தமது ஜமாஅத்தாக ஏற்க வேண்டும். 5. கலிமா சொன்ன எல்லா முஸ்லிம்களையும் சக முஸ்லிம் சகோதர, சகோதரிகளாக கருத வேண்டும். மார்க்கத்தை பிழையாக […]

ஐயம் : இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹஜ் செய்ய இருக்கிறேன். (என்னுடன் என் மனைவியும் வருகிறார்) ஊரில் உள்ளபோது என் குடும்பத்திற்கு ஒரு குர்பானிதான் கொடுப்பது வழக்கம்; நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி தான். ஹஜ் காலத்தில் நானும் என் மனைவியும் தனி தனியே குர்பானி கொடுக்க வேண்டுமா? ஒரு குர்பானி கொடுத்தால் போதுமா? வாசகர், போன் மூலம். தெளிவு: ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்கள் கணவன் மனைவியாக இருந்தா லும் தனித்தனியாக […]

விமர்சனம் : புரோகிதர் ஒருவர் அந்நஜாத் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ் அவர்களின் ஜனாஸா தொழுகையில், சுன்னத்தை பேணும் முஸ்லிம்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கூறினார் அதற்கு அவர் கூறிய குற்றச்சாட்டு களும், அதற்கு நம் விளக்கமும். விளக்கம் : முதல் குற்றச்சாட்டு : “அவர் ஒரு பித்அத்வாதி” (மார்க்கத்தில் இல்லாத நூதன அனாச்சாரங்களை செய்தவர் பித்அத்வாதியாக கருதப்படுவார்) காலமெல்லாம் பித்அத்களை மார்க்கமாக, மக்களிடம் அறிமுகம் செய்த புரோகிதர்களை அடையாளம் காட்டியதால் அவரும் “”பித்அத்”வாதியாக சேர்க்கப்பட்டார் போல் தெரிகிறது. […]

அபூ அப்தில்லாஹ் மதகுருமார்களின் ஆதிக்கம்: ஆதி மனிதன் ஆதத்திலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் தோன்றியுள்ளனவோ அந்த அத்தனை மதங்களிலும், இஸ்லாமிய மதம் உட்பட மதகுருமார்களின்-மதபோதகர்களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. அனைத்து மதங்களையும் பின்பற்றும் அனைத்து மக்களும் இந்த மதகுருமார்களை கடவுளுக்கு மிகமிக நெருக்கமானவர்கள்; அவர்களின் ஆதரவு இல்லாமல் கடவுளின் பொருத்தமோ, மோட்சம் என்ற சுவர்க்கமோ அடைய முடியாது என்று உறுதியாக நம்புகிறார்கள். இந்த மதகுருமார்களை கடவுளின் அவதாரமாகவே நம்புகின்றனர். அவர்களை சந்நிதானம், காட் ஃபாதர், காட் […]

 N.அலி, கல்லிடைக்குறிச்சி. பில்லி, சூனியம் ஒரு பித்தலாட்டம் என்ற நூலில் 2:102ம் வசனத்தின் நேரடிப் பொருள் பல குர்ஆன் வசனங்களுக்கு (பார்க்க 10:77, 7:118-120, 20:69, 52:13,14,15) முரண்படுகிறது என்று கூறி இலக்கணப்படி மாற்றுப் பொருள் கொடுக்க இடமிருக்கிறது என்றும் அவ்வாறு பொருளும் செய்து வரிக்கு வரி விளக்கம் கொடுத்திருக்கிறார் அந்நூலின் ஆசிரியர் பீ.ஜை. அவர் என்ன காரணம் கூறி மாற்றுப் பொருள் கொடுத்தாரோ அதே காரணங்கள் இவருடைய மொழிப் பெயர்ப்பிலும் நிறைந்து காணப்படுகின்றன. அதாவது முரண்பாடுகள். […]

ஹஜ் பெருநாளன்று பிராணிகளை அறுத்துப் பலியிடுவதே குர்பானி என்று சொல்லப்படுகிறது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் இதனைச் செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான். “உமது இறைவனுக்காக தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப் பலியிடுவீராக!” (அல்குர்ஆன் 108 :2) என்று அல்லாஹ் கூறுகிறான். “ஹஜ் பெருநாள் தினத்தில், அறுத்துப் பலியிடுவதை விடச் சிறந்த அமலை ஒருவன் செய்துவிட முடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம் அல்லாஹ்விடம் […]