ஐயம் : 55:29 வசனத்தில் “”வானங்களிலும் பூமியில் உள்ளோர் (அனைவரும் தங்களுக்கு வேண்டியதை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் காரியத்திலேயே இருக்கிறான்” என்று அல்லாஹ் கூறுகிறான். உண்மையில் காபிர்கள் அல்லாஹ்வை இறைவனாக ஏற்கவில்லை; எப்படி அவர்கள் அல்லாஹ்விடம் கேட்பதாக கூற முடியும்? விளக்கமாக பதில் சொல்லவும்.
அஜ்மல், வாணியம்பாடி

தெளிவு : இறைவேதத்தை தாங்கள் கவனமாக படிக்கிறீர்கள் என்பது தெரிகிறது. சிறந்த வினாவை கேட்டு இருக்கிறீர்கள்.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்காதவர்கள், அல்லாஹ்விடம் கேட்க மாட்டார்கள்; மாறாக, அவர்கள் யாரை வணங்குகிறார்களோ அவர்களிடமோ அல்லது அவைகளிடமோ தான் கேட்பார்கள். அப்படி என்றால், ஒருவன் தான் இறைவன் என்ற நிலையில், அவர்கள் செய்த பிரார்த்தனையின் நிலை என்ன? இறைவன் அல்லாதவைகளிடம் கேட்டதால் அந்த பிரார்த்தனை கேட்டவருக்கு பலனளிக்காதா? அப்படி தெரியவில்லை. ஏனெனில், இறைவன் அல்லாதவைகளிடம் கேட்பவர்களுக்கும் சில சமயங்களில் பிரார்த்தனை பலன் அளித்திருப்பதை எப்படி பலன் கிடைத்தது? யார் கொடுத்தார்கள்? சிந்தித்துப் பார்த்தால்? உண்மை விளங்கும்! உண்மையில் யார் இறைவனோ அவனைத் தானே அந்த பிரார்த்தனை சென்றடைய வேண்டும்? புரியவில்லையா?

எல்லாவற்றையும் அறிந்த ஒரே உண்மையான இறைவனிடம் மார்க்க பேதமின்றி அனைவரது பிரார்த்தனைகளும் போய் சேர்கின்றன. “”ராங் அட்ரஸ்-ரைட் டெலிவரி- “(WRONG ADDRESS-RIGHT DELIVERY)” அதாவது தவறான விலாசம்-சரியான பட்டுவாடா. இன்னும் புரியவில்லையா?

நீங்கள் ஒரு விலாசத்தில் வசிக்கிறீர்கள். அந்த வீட்டை காலி செய்து விட்டு அடுத்த வீதியில் உள்ள வேறு வீட்டுக்கு மாறி விடுகிறீர்கள். உங்களது பழைய விலாசத்துக்கு ஒரு கடிதம் வருகிறது. பழைய வீட்டில் நீங்கள் இருந்ததை தெரிந்த போஸ்ட்மேன், அடுத்த தெருவில் இருக்கும் உங்களைத் தேடி வந்து உங்களுக்கு வந்த, அந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கிறார். அதேபோலத்தான் மனிதர்கள் யாரிடம் பிரார்த்தித்தாலும், போய் சேர வேண்டியது ஒரே இறைவனிடம் தானே அவனிடம் போய் சேர்ந்தும் விடுகிறது. இதை நாம் கண்களால் கண்டோமா? இல்லை. பிறகு? உண்மையில் இறைவன் யார்? சிந்திக்க வேண்டும் அல்லவா?

“”(இறக்காமல்) என்றென்றம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை.” (2:255) என்றும்.
அகில உலகத்தையும் படைத்து பரிபா லித்து பரிபக்குவப்படுத்துவனாகிய அல்லாஹ் வுக்கு புகழ் அனைத்தும். (1:1) என்றும்.

…எல்லாவற்றிற்கும் அவனே இறைவனாக இருக்கிறான் .(6:164) என்றும் இன்னும் பற்பல வசனங்களும், அல்லாஹ், தான் உண்மையில் எல்லா உலகங்களுக்கும் இறைவன் என்று அறிவிக்கிறான்.

எனவே எல்லோருடைய தேவைகளும் பிரார்த்தனைகளும் உண்மையான ஒரே இறை வனான அல்லாஹ்விடம் போய் சேர்ந்து விடு கின்றன. எனவே தான் ஒவ்வொரு நாளிலும் அவன் அந்த காரியத்திலேயே (ஈடுபட்டு) இருக் கிறான் என்று தாங்கள் தெரிவித்த 55:29 வசனத் தில் தொடர்ந்து அறிவிக்கிறான். விளக்கமான பதிலை கேட்டுள்ள தாங்கள், கூடுதல் விளக்கங் களுக்கு இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் இடம் பெறும் “”சிந்தனை செய் மனமே!” என்ற ஆக்கத் தொடரைப் படியுங்கள்.

Previous post:

Next post: