அமல்களின் சிறப்புகள்….

in 2018 மார்ச்

அமல்களின் சிறப்புகள்….
ஒரு திறனாய்வு!
தொடர் : 34
M.. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் தமிழாக்கமும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட்,

திண்டுக்கல். பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரி 1357 எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை. கடந்த இரண்டு இதழ்களில் திக்ரைப் பற்றி ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இன்ஷா அல்லாஹ் இந்த இதழிலும் தொடர்கிறது. எப்படி, எப்போது திக்ர் செய்ய வேண்டும் என்ற இறை வசனங்களுக்கு மாற்றமாகவும், சஹீஹான வேறு ஹதீஃத் களை இவர்கள் செய்யும் திக்ருக்கு ஆதார மாகக் காட்டி, தங்களின் திக்ர் சபைகளில் நடைபெறும் திக்ருகளை நியாயப்படுத்த செய்திருக்கும் தில்லுமுல்லுகள் பற்றியும் சென்ற இரண்டு தொடர்களில் பார்த்தோம். இதனை அதனடிப்படையாகக் கொண்டு ஏனைய மவ்லூது, ராதீபு சபைகளிலும் நடைபெறும் குர்ஆன் ஹதீஃதுக்கு மாற்றமாக நடைபெற்று வரும் திக்ருகளைப் பற்றியும் பார்த்தோம். இன்ஷா அல்லாஹ் அடுத்ததை இப்பொழுது பார்ப்போம். குர்ஆன் வசனங்களில், ஹதீஃத்களில் தில்லுமுல்லு செய்திருப்பதை எவரேனும் விமர்சித்து விட்டால், தமது சாயம் வெளுத்து விடும் என்பதை ஜாக்கிரதையாக நினைவில் வைத்து, அப்படிப்பட்ட சமயத்தில் தம் மீதும் தமது ஆதரவாளர்கள் மீதும் கறைபடிந்து விடும் என்பதை முன் கூட்டியே கணக்கச்சிதமாய் கணித்து, அதனை சமாளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று திட்டத்தை (அமல்களின் சிறப்பு) அசி புத்தகம் தெரிவிப்பதைப் பாருங்கள்.

திட்டம் என்னவென்றால், தங்களை நேர்மையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் அவர்கள் மீது பிறர் வேண்டுமென்றே பழி சுமத்துவது போல பாசாங்கு காட்டிக் கொண்டு தமக்கு ஆதரவு தேடும் ஈனச் செயலை அப்புத்தகம் செய்கிறது. அது மட்டுமில்லாமல், அவர்கள் மட்டும்தான் அல்லாஹ்விடம் உயரிய அந்தஸ்தை அடையப் போவதாகவும், அவர்களை விமர்சிப்பவர்கள் எவரும் கெட்டதைத் தான் சம்பாதிப்பார்கள் என்றொரு தீர்ப்பைக் கூட தெரிவிக்கிறது அப்புத்தகம். இதன் மூலமாக தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ்தான் என்பதை இப்புத்தகம் மறுப்பதைக் காண முடிகிறது. சுமத்தப்படும் பழியை எப்படி எதிர் கொண்டு ஆறுதல் அடைவது என்பதை தப்புக் கணக்குப் போட்டு, தப்பாட்டமும் ஆடி ஆதரவாளர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது இப்புத்தகம். அதனை இப்போது காண்போம். பக்கம் : 376ல் கூறப்பட்டுள்ள விஷயமாவது இன்று “”கான்காஹ்” என்னும் திக்ரு டைய திருச்சபைகளில் அமர்ந்திருப்பவர்களின் மீது பலவிதமான பழிகள் சுமத்தப் படுகின்றன.

நாலாபுறங்களிலிருந்தும் அவர்கள் பரிகசிக்கப்படுகின்றனர். இன்று அவர் களை, மனம் விரும்பியவாறு குறை கூறிக் கொள்ளட்டும். இன்று பழைய பாய்களின் மீது அமர்ந்திருக்கும் அவர்கள், கண் திறக்கும் மறுமை நாளில், முத்து மேடைகளிலும் மரகத மாளிகைகளிலும் வீற்றிருக்கும் பொழுது அவர்கள் எதனை சம்பாதித்துக் கொண்டார்கள்? அவர்களைப் பார்த்து பரிகாசம் செய்தவர்கள், ஏசிப் பேசியவர்கள் எதனை சம்பாதித்துக் கொண்டார்கள்? என்ற உண்மை நிலை தெரிந்து விடும் என்கிறது அசி புத்தகம். அது மட்டும் அல்லாமல், “”புழுதி அடங் கிய பின் நீ ஏறி இருந்தது குதிரையா? கழுதையா?” என்பதை விரைவில் கண்டு கொள்வாய் என்பது ஓர் அரபிப் பாடலாகும் என்று மேற்கோள் காட்டி ஆதரவாளர்களுக்கு ஆதரவு தந்து தேற்றுகிறது இப்புத்தகம். இன்று ஏசிப் பேசப்படுகின்ற அந்த திக்ரு டைய திருச்சபைகளுக்கு அல்லாஹ்வின் சமூகத்தில் எந்த அளவு மதிப்பிருக்கிறது என்பதை அதன் சிறப்புகளைப் பற்றி கூறும் ஹதீஃத்களின் மூலம் தெரிய வருகிறது என எழுதி வைத்திருக்கிறது அப்புத்தகம்.

எமது ஆய்வு : “”புழுதி அடங்கிய பின் நீ ஏறி இருந்தது குதிரையா? கழுதையா? என்பதை விரை வில் கண்டுகொள்வாய்” என்பது ஓர் அரபிப் பாடலாகும் என்று எழுதப்பட்டு இருக்கிறது. மூளைச்சலவை செய்யப்பட்ட ஆதாரவாளர்களும், சிந்தனை செய்யாத மனிதர்களும்தான் இந்த எழுத்துக்களுக்கு ஆதரவு தருவார்கள். சிந்திக்கும் மனிதர்கள் என்ன நினைப்பார்கள் தெரியுமா? கவிதைக்கு வக்காலத்து வாங்கும் அவர்கள் 26:224 இறை வசனத்தை பார்க்கட்டும். “”கவிஞர்கள் எத்தகையோர் என்றால், அவர்களை வழிகேடர்கள் தான் பின்பற்றுகிறார்கள்” என்று அல்லாஹ் கூறிய அறிவுரை இவர்களுக்கு போதுமானதாய் இல்லை. “”புழுதி அடங்கிய பிறகே ஏறியிருந்தது குதிரையா, கழுதையா என்று தெரியும்” எனக் கூறிய கவிஞரும், அதைப் படித்து எந்த சிந்தனையும் செய்யாமல் அக் கவிதையை வைத்து பிறருக்கு உபதேசம் செய்ய முன்வந்திருக்கும் அசி ஆசிரியரும், சிந்திக்கத் தெரியாத ஜந்துக்களோ என நிச்சயமாக நினைப்பார்கள். ஏனென்றால், “”குதிரை ஓட ஆரம்பித்த பிறகுதானே புழுதி உண்டாகும், ஏறும் முன்பு புழுதி இருக்காதே. எனவே ஏறும்போதே அது குதிரையா, கழுதையா என பார்த்துவிட்டு ஏறி இருக்க வேண்டியதுதானே?” என்று நினைப்பார்கள் அல்லவா? இந்த புத்தகம் முழுதும் இதுபோன்ற கவிதைகளை மேற்கோள்காட்டியுள்ளது. பாரசீகத்தில் இப்படி ஒரு கவிஞரும், இப் படிப்பட்ட கவிதையும் இருக்கிறதா, இல்லையா? என்பது அல்லாஹ்வுக்குத்தான் தெரியும்.

ஒருவேளை அசி ஆசிரியரின் பல டூப்புகளில் இந்த கவிதைகள் எல்லாம் அவரது சொந்த சரக்கோ, என்னவோ? உள்ளூர் மாடு விலை போகாது என நினைத்து பாரசீக கவிதை என்கிறாரோ? அதுவும் அல்லாஹ்வுக்குத்தான் தெரியும். ஒன்று மட்டும் நிச்சயம், கவிதையை எழுதியவரும், இந்த வீணாய் போன கவிதைகளுக்கு வக்காலத்து வாங்கி பிறருக்கு உபதேசம் செய்ய முன் வந்தவரும் குடி போதையில் இருந்திருப்பார்களோ என்றே சிந்திக்கத் தெரிந்த மனிதன் நிச்சயமாக நினைப்பான். ஏனென்றால் ஏறப் போகும் வாகனம், குதிரையா, கழுதையா என ஏறப்போகும் முன்பே புழுதி ஏற்பட்டி ருக்காத நிலையில் பார்க்காமல் ஏறியவர் கள் யாராக இருக்க முடியும்? போதையில் இருப்பவர்கள் தானே கழுதையை குதிரை யாக நினைத்து ஏறி இருப்பார்கள். மேலும், தாம் ஏறி இருந்தது கழுதையா, குதிரையா என்று ஏறிய பிறகு கண்டுபிடிக்க முயல்பவர் ஏறும்போது சுயநினைவை இழந்த குடிகார னாகத்தானே இருக்க முடியும். நீங்கள் செய்யும் கூட்டு திக்ர் மார்க்கத் தில் இல்லை எனக் கூறுபவர்கள், “”உங்களை கேலி செய்கிறார்கள்” என்று கூறி திசை திருப்ப முயல்கிறார், மேலும் “”திக்ர் மஜ்லிஸில் உள்ளவர்கள் மறுமையில் உயரிய அந்தஸ்துக்களை அடைவார்கள்” என்றும் கூறிவிட்டு, அதோடில்லாமல் “”பரிகாசம் செய்தவர்கள், ஏசிப் பேசியவர்கள் எதனை சம்பாதித்துக் கொண்டார்கள்? என்ற உண்மை நிலை (மறுமையில்) தெரிந்து விடும் என்று, மிரட்டும் தொனியில் எச்சரிக்கையும் செய்கிறது அப்புத்தகம். அசி ஆசிரியரே! மறுமையில் இறைவன் உங்களுடைய திக்ரு சபைகளுக்கு தர இருக்கின்ற தீர்ப்பை இப்போதே தாங்கள் எழுதிக் கொள்கிறீர்களே! தீர்ப்பு நாளின் அதிபதி அல்லாஹ் ஒருவன்தான் என்பதை மறுத்து விட்டீர்களா? அல்லது அந்த இறை வசனத்தை மறந்து விட்டீர்களா? உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. மார்க்கத்தில் இல்லாத அமல்களை புதிதாக நுழைத்து, அப்பாவிகளை வழிகெடுத்து விட்ட உங்களுக்கான தீர்ப்பு என்னவென்று இறைவசனங்களும் ஒவ்வொரு ஜூம்மா நாள் அன்று மிம்பரிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்ற, சென்ற தொடரில் காண்பித்துள்ள, ஹதீஃதும் உங்களுக்கு படிப்பினை தரவில்லையா?

அடுத்த வேடிக்கை பக்கம் 377ல் கூறப்பட்டுள்ளது : “”அல்லாஹ்வை திக்ரு செய்யப்படும் வீடுகள் விளக்குகளைப் போல், வானிலுள் ளவர்களுக்கு மின்னுகின்றன” என்று பிரபல் யமான பெரியார் புழைல் இப்னு இயாழ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். ஆய்வு : “”பிரபல்யமான பெரியார் புழைல் இப்னு இயாழ்” (பெயர் காமெடியாக இருக் கிறது) என்று கூறுவதைப் பார்த்தால் ஊர் உலகத்திற்கே அவரைத் தெரியும் போல் தெரிகிறது. உங்களில் எவருக்காவது அவரைத் தெரிந்து இருக்கிறதா என்று மக்களிடம் வினா எழுப்பினால் “”இல்லை” என்றே பதிலளிப்பார்கள். அந்த அளவுக்கு இந்த பெரியார் “”பெயர் போனவர்” (?) இவரெல்லாம் பிரபல்யம் ஆனவராம். திக்ர் செய்பவர்களின் வீடுகள் வானவர்களுக்கு விளக்குகள் மின்னுவதைப் போல தெரிந்தது என்று கூறும் “”அசி” ஆசிரியரே! உங்களிடம் சில கேள்விகள். வானவர்களுக்கு தெரிந்தது இந்த பிரபல பெரியாருக்கு எப்படி தெரிந்தது? மலக்கு கள் இந்த பெரியாரிடம் வந்து சொன்னார் களா? சிரிப்புத்தான் வருகிறது. அந்தப் பெரி யாரை பிரபலமானவர் என்று கூறுகிறீரே! அவர் எதில் பிரபல்யமானவர்? பொய் சொல்லுவதிலா? அல்லது அப்பெரியார் தாங்கள் உருவாக்கிய கற்பனைப் பாத்திர மாக இருந்தால், பொய் சொன்னவர் தாங்க ளாகத்தான் இருக்க முடியும் அல்லவா? ஏன் இப்படி? அல்லாஹ் தன் ஞானத்திலிருந்து அவனது கிருபையைக் கொண்டு உலக மாந்தருக்கு அருளிய சத்தியமார்க்கம் இருக்கும்போது தனியான ரூட் ஒன்றை ஏன் போட்டுத்தந்தீர்கள்? (இன்ஷா அல்லாஹ் தொடரும்….)

 

Previous post:

Next post: