இறைநேசர்களுக்கு அச்சமுமில்லை! துக்கமுமில்லை!!

in 2018 ஏப்ரல்

இறைநேசர்களுக்கு அச்சமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன்:10:62

ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பி. வளர்வதற்கு காரணம் இயக்க வெறியர்களே! பெயர் தாங்கி இயக்க முஸ்லிம்களே!!

தேவை இல்லாத ஒரு குழப்பத்தை இந்த முஸ்லிம் இயக்க வெறியர்கள் உருவாக்க நினைக்கிறார்கள். 2 எம்.பி. சீட்டு இருந்தவனை இன்று நாட்டையே ஆளும் அளவிற்கு ஆக்கியது இந்த முஸ்லிம் இயக்கவாதிகள் தான். அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல்தான். எதிர்ப்பில்தான் எதுவும் வளர்ச்சியடையும் என்ற உண்மை தெரியாதா?

ஆர்.எஸ்.எஸ். பீ.ஜே.பிகாரர்களை எதிர்ப்பதற்கு என்ன அவசியம் வந்தது இந்த இயக்க வெறியர்களுக்கு. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லையா அல்லாஹ்வின் மார்க்கத்தை அவன் பாதுகாக்க மாட்டானா? எந்த மார்க்க அடிப்படையில் இவர்கள் இந்த செயலை செய்கிறார்கள்?

இறைத்தூதர் காட்டித்தராத ஒரு செயலை முஸ்லிம்களை செய்ய வைத்து அரசியல் லாபம் அடைய துடிக்கிறார்கள் இந்த முஸ்லிம் இயக்க தலைவர்கள்.

முஸ்லிம்களே! உங்களுக்கு அல்லாஹ் வின் சாபம் இறங்குமுன் அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்படுங்கள். நாத்திக சிந்தனை உடையவர்கள் உருவாக்கிய ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியலை கைவிட்டு விட்டு பொறுமை காத்திருங்கள், அல்லாஹ்விடத்தில் முறையிடுங்கள், ஒன்றுபடுங்கள், அல்லாஹ்வின் உதவி முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

அவர்கள் நம்பிக்கை கொண்டு (இறை) அச்சத்துடன் இருப்பார்கள். அல்குர்ஆன்: 10:63

அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நற்செய்தி உண்டு. அல்லாஹ்வின் வார்த்தைகளில் எவ்வித மாற்றம் இல்லை, இதுவே மகத்தான வெற்றியாகும். அல்குர்ஆன் : 10:64

“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததை தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர்கூறும். முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக. அல்குர்ஆன் : 9:51

ஈமான் கொண்டவர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும். அல்குர்ஆன் :10:103

முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும். அல்குர்ஆன் : 30:47

நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளில் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான். அல்குர்ஆன் : 22:38

இவ்வளவு வாக்குறுதிகளுக்கு மாறாக அல்லாஹ்வின் கட்டளைகளை புறக்கணிப்பவன் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும். 

நீங்கள் முஸ்லிமா இருக்கிறீர்களா? இல்லையா?

ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் போன்ற அல்லாஹ் அனுமதிக்காதவற்றை செய்பவன் நிச்சயமாக முஸ்லிமாக இருக்க முடியாது? நயவஞ்சக தன்மை கொண்ட பெயர் தாங்கி முஸ்லிம்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் யூகங்களைத் தவிர, (வேறெதையும் பின்பற்றவில்லை. யூகங்கள் சத்தியத்திலிருந்து எதையும் தருவதில்லை. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன்:10:36

Previous post:

Next post: