ஐயமும்! தெளிவும்!!

in 2022 பிப்ரவரி

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : நாமெல்லாம் ஐந்து வேளை தொழுகிறோம் சரிதான். ஆனால் எங்கள் ஊரில் சிலர் ஐந்து வேளை தொழுங்கள் என்று குர்ஆனில் சொல்லப்படவில்லையே! ஏன்? என்று கேட்கிறார்கள். நானும் குர்ஆனில் விளக்கங்களை எல்லாம் தேடிப் பார்த்தும் கூட ஐந்து வேளை தொழுகுங்கள் என்று சொல்லக் கூடிய சொல் இல்லை. விளக்கம் தாருங்கள்!   A.K.M.B. செங்கை.

தெளிவு : ஜகாத் 2டி சதவீதம் கொடுக்க வேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. தினசரி ஐவேளை தொழவேண்டும் என்றும் குர்ஆனில் இல்லை. ஏன்? இஸ்லாத்தில் மூலக் கலிமாவான லாஇலா இல்லல்லாஹ் முஹம்aமது ரசூலுல்லாஹ் என்பதும் குர்ஆனில் இல்லை. எனவே இவையனைத்தையும் நாம் விரும்பியவாறு செய்யலாமா? இதனை ஒரு வாதத்திற்காக உங்கள் முன் வைத்தோம். குர்ஆனில் தெளிவில்லாத இதுபோன்ற விஷயங்களுக்கு ரசூல்(ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறை (ஹதீத்) தெளிவு பகர் கிறது. இதனையே அல்லாஹ்வை வணங்குங்கள். அவனது தூதரைப் பின்பிற்றுங்கள் என்று அல்லாஹ் திருகுர்ஆனில் திருப்பித் திருப்பி கூறுகிறான்.

அனைத்திற்கும் மேலாக, நபி(ஸல்) அவர்கள் இவ்வுலகிற்கு வந்து தொழுகை யைக் கடமையாக்கியது முதல் இன்று வரை எவரும் இதுபோன்ற ஒரு சர்ச்சையை உருவாக்கியதில்லை. அண்மையில் மேலை நாட்டவர்களின் முயற்சியால் அஹ்லுல் குர்ஆன் என்ற பெயரில் ஒருசிலர் இச்சர்ச்சையை உருவாக்கியுள்ளனர். இது அவர்களது அறியாமையைத் தெளிவுபடுத்துகிறது. தினசரி ஐவேளை தொழுகை உண்டு என்பதை பற்பல உண்மையான ஹதீத்களால் நிரூபிக்கப்பட்ட உண்மை, நிலவி வரும் உண்மை. இச்சர்ச்சையை உருவாக்குபவர்கள் ஹதீத்களை மறுப்பவர்களாக இருந்தால் எம்முடன் நேரில் வாதிட அழைத்து வாருங்கள். அவர்களிடம் எந்த அளவிற்கு அறியாமையும் அவர்களது கொள்கைக்கு ஏற்ப மொழி பெயர்க்கப்பட்ட குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் உள்ள தவறுகளையும் உங்கள் முன்பே நிரூபித்துக் காட்டுகிறோம். இது நேரில் நாம் கண்ட உண்மையாகும். அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழிகாட்டப் போதுமானவன்.

ஐயம் : குளிர் காலத்தில் இரவில் ஸ்கலிதமாகி விடுகிறது. தண்ணீர் கொண்டு குளித்தால் காய்ச்சல் வரலாம். 4:29 வசனத்தின்படியும் அம்ருபின் அல்ஆஸ்(ரழி) அறிவிக்கும் (ரஹ்மது அபூதாவூது) ஹதீத்படி தயம்மம் செய்து கொண்டால் போதுமா? விளக்கம் தரவும். (குளிர் பிரதேசங்களில் வசிக்கும் எங்களுக்கு இந்த கேள்வி மிக முக்கியமானது. தாமதம் இல்லாமல் பதில் தாருங்கள்.   கமாலுத்தீன்

தெளிவு : குளிர் பிரதேசத்தில் வாழும் நீங்கள் அதற்கொப்ப வெந்நீர் வைத்துக் கொண்டு குளிப்பது, ஒளூ செய்வது கூடுமே, அந்நிலையிலும் தாங்கள் குளித்தால் தங்களுக்கு உடல் சுகவீனம் ஏற்படும் என்று பயந்தால் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஹதீதின் அடிப்படையில் தயமும் செய்து கொள்வது கூடும். இதனை பொது சட்டமாக எடுத்துக் கொள்வது கூடாது.

குளிர் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை, குளிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை அவரவர்களே தக்வா இறையச்சத்துடன் கணித்து முடிவெடுக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவின் மீதும் அது சுமக்க முடியாத சுமையை சுமத்துவதில்லை. அல்குர்ஆன் 2:286

ஐயம் : “ஆயத்துல் குர்ஸி’ மட்டும் தொழுகையில் “அல்ஹம்து’க்கு பின் ஓதலாமா?  முஹம்மது அதாவுல்லாஹ்

தெளிவு : “ஆயத்துல் குர்ஸி’ என்பது அல்லாஹ்வின் ஏகத்துவத்தை மட்டும் விளக்கும் ஒரு நீண்ட ஆயத்தாகும், தொழுகையில் அல்ஹம்து சூராவுக்குப் பின் இதை மட்டும் ஓதினாலும் போதுமானது.

ஐயம் : கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபிமொழி உள்ளது. (இணை வைக்காத நிலையில்) ஆனால் குர்ஆனில் 2:275வது வசனத்தில் வட்டி வாங்கி தின்பவன் “என்றென்றும்’ நரகில் தங்கிவிடுவா னென்று அல்லாஹ் கூறுகிறான். ஒருவர் எல்லா அமல்களும் செய்கிறார். ஆனால் வட்டி வாங்குவது ஹராம் என்று தெரிந்தும் வட்டி வாங்கி தின்கிறார். இருப்பினும் இணை வைக்காத நிலையில் மரணிக்கிறார். இவருக்கு அல்லாஹ் சுவர்க்கம் கொடுப்பானா? அல்லாஹ் வாக்குறுதி மாறாதவன். மேற்கூறிய ஹதீதையும் குர்ஆன் வசனத்தையும் பார்க்கும்போது சற்று குழப்பமாக உள்ளது. இது குறித்து எங்களிடையே குழப்பமாக உள்ளது. இது குறித்து எங்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதற்கு குர்ஆன் ஹதீத் ஆதாரத்துடன் விளக்கம் தரவும்.   சாகுல் ஹமீது.

தெளிவு : கடுகளவு ஈமான் இருந்தாலும் அவரை நரகிலிருந்து வெளியேற்றி சுவர்க்கத்தில் புகுத்துவேன் என்று அல்லாஹ் கூறியதாக ஹதீதில் இருப்பது உண்மையே. திருகுர்ஆன் 2″275 வசனத்தில் வட்டி வாங்கித் தின்பவன் என்றென்றும் நரகில் தங்கி விடுவானென்று அல்லாஹ் கூறியிருப்பதும் உண்மையே. அல்லாஹ் வாக்குத் தவறாதவன் என்பதும் உண்மையே. மேலே குறிப்பிட்ட இரண்டு மட்டுமல்ல அவனது வாக்குகள். தான் நாடியவர்களை தண்டிப்பான். தான் நாடியவர்களை மன்னிப்பான் 2:281, 3:129,5:18,48:14) இவையும் அவனது தனிப்பிரிவு உரிமையில் வாக்குகளாகும். இந்த உரிமையில் கேள்வி கேட்க எவருக்கும் அதிகாரம் கிடையாது.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்விற்கு எவர் இணை வைக்காமல் மரிக்கிறாரோ அவர் நிச்சயம் சொர்க்கம் புகுவார். இதனை செவியுற்ற நான் அம்மனிதர் திருடியிருந்தாலும், விபச்சாரம் செய்திருந்தாலுமா என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) ஆம்! அவர் திருடியிருந் தாலும் விபச்சாரம் செய்திருந்தாலும், அல்லாஹ் நாடினால் அக்குற்றங்கள் மன்னிக்கப்பட்டு அவர் சொர்க்கம் நுழைவார் என்aறார்கள் என அபூதர்(ரழி) அவர்கள் அறிவிக் கிறார்கள். ஆதாரம், புகாரி 3:329, 4:445, 7:717, 8:285,450,451, 9:579, முஸ்லிம் 1:171, 172, திர்மிதி, முஸ்னத் அஹ்மத்.

தாங்கள் குறிப்பிட்டுள்ள நபர் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் வட்டி வாங்கி உண்டிருப்பாரேயானால் அல்லாஹ் நாடினால் அவரது வட்டி பாவத்தை மன்னித்து சுவர்க்கம் புகுத்தலாம்; அல்லது அவர் செய்த வட்டி பாவத்திற்காக அல்லாஹ் நாடிய காலம் அவருக்கு தண்டனையளித்து விட்டு அவரது உள்ளத்தில் கடுகளவாவது ஈமான் இருந்திருக்குமேயானால் அவரை கடைசியில் சொர்க்கம் புகுத்துவான். ஒரு வேளை அவரது இறை நம்பிக்கையிலேயே நாமறியாத ஆனால் அல்லாஹ் நன்கறிந்த தவறுகள் இருக்குமேயானால் அவர் நிரந்தரமாக நரகத்திலும் இருக்கலாம். இவையனைத்தும் அல்லாஹ்வின் ஏகபோக உரிமையில் உள்ளவை. எனவே இதைப் பற்றி சர்ச்சை செய்யாமல் நரகத்தில் கொடிய தண்டனையை அவருக்கு நினைவூட்டி வட்டி எனும் கொடிய பாவத்திலிருந்து விடுவிக்கச் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் முயற்சிக்கு உதவி புரிவானாக.

ஐயம் : ஒளூ செய்யும்போது பிறருக்கு ஸலாம் கூறலாமா? அல்லது ஸலாமுக்கு பதில் கூறலாமா?  அப்துல்லாஹ்.

தெளிவு : இதற்கு எந்தத் தடையும் இருப்பதாக நம்மால் காண முடியவில்லை.

ஐயம் : ஆண்களும் பெண்களும் அடக்கப்பட்டிருக்கும் போது கப்ருஸ்தானில் ஆண்கள் மட்டும் ஸியாரத்திற்கு அனுமதிக்கப்படுகிறது. அன்னிய ஆண்கள் அடக்கப்பட்ட இடங்களில் பெண்களுக்கு ஸியாரத்திற்கு தடை இருக்கும்பொழுது அன்னியப் பெண்கள் அடக்கப்பட்டிருக்கும் கப்ருஸ் தானில் ஆண்கள் மட்டும் அனுமதிக்கக் காரணம் என்ன? அபூ நபீல், தேங்காய்பட்டணம்

தெளிவு :  ஸியாரத் :  ஸியாரத் என்பதற்கு சந்திப்பது, வருகை புரிவது என பொருள்படும்.

ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலங்களில் கப்ருகளை ஸியாரத் செய்வதை நபி(ஸல்) அவர்கள் ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் தடை செய்திருந்தனர். பின்பு ஆண்களை மட்டும் அனுமதித்து பெண்களுக்கு முற்றாகத் தடை செய்து விட்டனர்.

அதற்கான காரணம் புகாரீ 1283 நபி மொழியில் கப்ருக்கருகில் அழுது புலம்பிக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி(ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள். இச்சம்பவம் பெண்களின் இயற்கையான வரம்பு மீறலை தெளிவாகக் காட்டுகின்ற காரணத்தால் பெண்கள் கப்ருஸ்தான் பக்கமே வருவதைத் தடை செய்கின்றார்கள்.

அதனால்தான் கப்ருகளை ஸியாரத் செய்யும் பெண்களை அல்லாஹ் சபிப்பானாக! என நபி(ஸல்) அவர்கள் சபித்துள் ளனர். மேலும் மரணத்தை நினைவு கூறவும் அங்கே அடக்கப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வதுமே ஸியாரத் எனப்படுவதாகும். ஆண் பெண் ஜனாஸாக்கள் கஃபன் துணிகளால் மூடப்பட்டு அடக்கப்படுவதால் அங்கே எவ்வித பார்வைத் திரையிடல் எதுவும் கிடையாது.

எனவே பெண்கள் கப்ருக்குச் செல்வது இறுதி நாள் வரை ஹராமாகும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட பெண்கள் ஸியாரத் என்ற கட்டுப்பாட்டை நமது TNTJ முல்லாக்கள் உடைத்துவிட்டனர்.

எனவே அன்னிய ஆண்கள் அடக்கப்பட்ட கப்ருஸ்தானாக இருந்தாலும் சரி, பெண்கள் அடக்கஸ்தலமாக இருந்தாலும் சரி, மொத்தத்தில் பெண்கள் மையவாடி சென்று கப்ரு ஸியாரத் செய்வது நபி(ஸல்) அவர்களால் முற்றிலும் தடுக்கப்பட்டதே யாகும்.

ஐயம் : “காத்தமுன்னபி” என்பதற்கு சுய விளக்கம் புது விளக்கம் கொடுக்கும் “காதியானிகள்” மற்றும் குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் “ஹதீஃத் மறுப்பாளர்கள்’ இவர் களை பின்பற்றி தொழலாமா? இவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமா?   அபூ நபீல், தேங்காய்பட்டணம்

தெளிவு : அல்குர்ஆன் 49:14 வசனத்தின் பிரகாரம் உள்ளத்தில் நிராகரிப்பாளர்களாகவும், வெளியில் முஸ்லிம்களாகவும் நடிக்கும் முனாஃபிக்களையே முஸ்லிம்கள் என்று எல்லாம் வல்ல அல்லாஹ் சொல்லச் சொல்கின்றான்.

எனவே முஸ்லிம்கள் எனத் தங்களை தாங்களே கூறும் எவரையும் நாம் முஸ்லிம் என ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

காதியானிகள் குலாம் அஹ்மது என்ப வரை தங்களின் கூடுதல் நபியாக்கிக் கொண்டுள்ளனர்.

ஹனஃபியாக்கள் இமாம் அபூ ஹனீஃபாவை தங்களின் கூடுதல் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு வழிகெட்டுள்ளனர்.

வழிகெட்ட ஹனஃபியாக்களை பின்பற்றி அவர்களின் பள்ளிகளில் நாம் தொழுகின்றோம். அவர்களிடம் திருமண உறவு வைக்கின்றோம். அதேபோன்று காதியானிகளையும் அவ்வாறேதான் பின்பற்றலாம்.

ஆனால் காதியானிகள் நம்மை முஸ்லிமாக ஏற்றுக் கொள்ளாததால் அதாவது அல்லாஹ்வின் அதிகாரத்தை தாங்களே ஏற்றுக்கொள்வதால் அவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்.

தற்கால TNTJ வினரும் இதே கொள்கை உடையவர்கள்தான். எப்படி என்றால் TNTJ மத்ஹபை ஏற்காதவர்கள் பின்னால் TNTJவினர் யாரும் தொழமாட்டார்கள்.

மேற்கண்ட காதியானிகள், அஹ்லுல் குர்ஆன், ஹனஃபியாக்கள் மற்றும் வீஹிவீமூ வினர் ஆகிய இவர்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொண்டுள்ள காரணத்தால் இவர்கள் பின்னால் நின்று தொழுதல் கூடும்.

Previous post:

Next post: