அறிந்து கொள்வோம்!

in 2023 அக்டோபர்

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்

1. மற்ற நபிமார்களுக்கு அனுமதிக்காததை நபி(ஸல்) அவர்களுக்கு அனுமதித்ததாக நபி(ஸல்) அவர்கள்  கூறியது  என்ன?

பூமி முழுவதும் சுத்தமாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டது. ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரழி), புகாரி:335

2. யாருடைய செயலால் தயம்மம் வசனம் இறக்கப்பட்டது?

ஆயிஷா(ரழி) தொலைந்து போன கழுத்தானிக்கான செயலுக்காக. உர்வா என்ற அறிவிப்பாளர். புகாரி : 336

3. திருமணம் செய்ய சக்தி பெறாதோர் எதைச் செய்ய நபி(ஸல்) அவர்கள் கூறி னார்கள்?

நோன்பு நோற்க கூறினார்கள். அல்கமாபின் கைப்(ரஹ்) முஸ்லிம் : 2710

4. தானத்தை திரும்பப் பெறுபவரை எதோடு ஒப்பிட்டு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

நாய்க்கு நிகரானவர் என்று கூறினார்கள். உமர் பின் கத்தாப்(ரழி) முஸ்லிம் : 3313

5. கண்ணியம் என்பது எதைப் போன்றது என நபி(ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

இறைவனுடைய கீழாடைப் போன்றது. அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம்:5114

6. நபி(ஸல்) அவர்களால் தடுக்கப்பட்ட வியாபார  முறைகள்  என்ன?

தொடுமுறை வியாபாரம் (முலாமஸா), எறிமுறை வியாபாரம் (முனாபதா). அபூசயீத் அல்குத்ரீ(ரழி), முஸ்லிம் : 3032

7. அப்ரார்கள் (நல்லவர்கள்) இருக்கும் சொர்க்கம்  எது?

நயீம்.   அல்குர்ஆன் 83:22

8. தெளிவான மதுவின் முத்திரை எதுவாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்?

கஸ்தூரியாகும்.   அல்குர்ஆன் 83:26

9. தஸ்னீம்  என்றால்  என்ன?

இனிய  நீர்ச்சுனை.   அல்குர்ஆன் 83:28

10. இம்ரானின் புதல்வி என யாரை அல்லாஹ்  கூறுகிறான்?

மர்யம் (அலை)   அல்குர்ஆன் : 66:12

11. ஸாபியீன்கள் என்றால் யார் என அல்லாஹ்  கூறுகிறான்?

பல தெய்வ வழிபாட்டை விட்டுவிட்டு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்.  அல்குர்ஆன் : 2:62

12. இறைவனை நிராகரிப்பவரின் செயல்களுக்கு எதனை அல்லாஹ் ஒப்பிட்டுக் கூறுகிறான்?

சாம்பலை.   அல்குர்ஆன் 14:18

13. நிஃமத் என்பது என்ன என்று அல்லாஹ் கூறுகிறான்?

அருள்.      அல்குர்ஆன் 14:28

14. நரகவாசிகளின் ஆடைகள் எப்படி இருக்கும் என அல்லாஹ் கூறுகிறான்?

தாரினால்  ஆன  ஆடை.  அல்குர்ஆன் 14:50

15. சத்தியங்களை முறிப்பவர்களை எதனுடன்  அல்லாஹ்  ஒப்பிடுகிறான்?

உறுதியான நூலை நூற்றபின் துண்டு துண்டாக ஆக்கியவனைப்  போன்று.  அல்குர்ஆன் : 16:92

16. காஃபாவில் தொழுதால் எத்தனை மடங்கு நன்மை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? 

1000 மடங்கு.    புகாரி : 1190

17. சொர்க்கத்தின் பூங்கா என்றழைக்கப் படும் பகுதி எங்கு இருப்பதாக நபி (ஸல்)  அவர்கள்  கூறினார்கள்?

மதீனா மஸ்ஜித் மிம்பருக்கும் என்னுடைய வீட்டிற்கும்  இடையில்.        புகாரி : 1195, 1196

18. இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு எதை நினைவுபடுத்த நபி(ஸல்) அவர்கள்  கூறினார்கள்?

லா  இலாஹ  இல்லல்லாஹ்        முஸ்லிம் : 1672

19. துறவறம் பூணுவதை நபி(ஸல்) அவர்கள் என்ன  செய்தார்கள்?

தடை  செய்தார்கள்.   முஸ்லிம்: 2715

20. லிஆன்  என்றால்  என்ன?

சாப  அழைப்புப்  பிரமாணம்.  முஸ்லிம் : 2985

Previous post:

Next post: