அல்லாஹ்வுக்கு எது பிடிக்கும்?

in 2023 அக்டோபர்

அல்லாஹ்வுக்கு எது பிடிக்கும்?

அய்யம்பேட்டை  நஜ்முதீன்

மகனுக்கு இது பிடிக்கும்! மகளுக்கு அது பிடிக்கும்! கணவருக்கு இது பிடிக்கும்! மனைவிக்கு அது பிடிக்கும்! தந்தைக்கு இது பிடிக்கும்! தாய்க்கு  அது  பிடிக்கும்!

இதுபோன்ற வார்த்தைகளை வாழ்க்கையில் பலரும், பல நேரங்களில் சொல்வதை கேட்டு இருப்போம்; ஏன் நாமே கூட சொல்லியிருப் போம்,  பிடித்ததை  செய்தும்  இருப்போம்.

இது  எதனால்?

நாம் நேசிக்க கூடியவர்களின் அன்பு இன்னும் அதிகமாக கிடைக்க வேண்டும் என்பதே ஆகும். இந்த அன்பிற்காக நாடு விட்டு நாடு, ஊரு விட்டு ஊரு மற்றும் காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை ஓயாது உழைத்து பாடுபடுவது என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பதாலே.

இதில் தவறேதுமில்லை. மார்க்கம் அனுமதித்ததும் ஆகும். ஆனால் இந்த நேசம் தொடர்ந்து நீடிக்கின்றதா என்றால் இல்லை. அல்லது சில நேசங்கள்  நடிப்பாகவும்  இருக்கின்றது.

சின்ன, சின்ன விசயங்களுக்காக கூட அன்பை முறித்து ஆயுள் முழுவதும் பேசாமல் இருப்பவர்களும்  உண்டு.

அது மட்டுமல்ல ஒரு அடி இடத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல் தலைமுறை, தலைமுறையாக கோர்ட் வாசலில் நின்றவர் களும்,  நிற்பவர்களும்  உண்டு.

இன்னும்  சிலர்  இருக்கின்றார்கள்; 

நீ செய்தால் நான் செய்வேன்  என்பதாக. ஆக இந்த அன்பு எல்லாம் நிலையானதா என்றால் இல்லை. மாறக் கூடியது, மாறிக்  கொண்டேயிருக்கும்.

பிள்ளைகளுக்காக  கணவனை  இழந்த  தாய்மார்கள்   உண்டு. 

தாய்க்காக  மனைவியை  இழந்த  கணவன்மார்கள்  உண்டு.

மனைவிக்காக  சொந்த பந்தங்களை  இழந்தவர்களும்  உண்டு.

ஆக இவைகள் எல்லாம் நிலையானது அல்ல. வெறும் கையோடு வந்தோம், வெறும் கையோடு போகப்போகிறோம். இது தெரிந்தும் அல்லாஹ்வை விட இவர்கள் மீது அதிக  அன்பாக  இருக்கிறோம்.

அதன் விளைவு : “அல்லாஹ்வுக்கு எது பிடிக்கும்என்பது மறந்து போனது. ஆனால் அல்லாஹ் என்ன சொல்கின்றான் என்றால், “உங்களின் மக்கள் செல்வமோ, பொருட் செல்வமோ நம்மிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவை  அல்ல.

எவர் நம்பிக்கை கொண்டு நற்செயலைச் செய்கின்றார்களோ அத்தகையோருக்கு அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு கூலி உண்டு. மேலும் அவர்கள் சுவனத்தின் உன்னதமான மாளிகையில்  நிம்மதியுடன்  இருப்பார்கள்.   அல்குர்ஆன் 34:37

மேலும் பார்க்க : 31:33

அடுத்து இவ்வுலக வாழ்க்கை எப்படி என்பதையும்  கூறுகிறான்.

மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி, உண்மையானதாகும் ஆகவே இவ்வுலக வாழ்க்கையில் நீங்கள் ஏமாந்து விட வேண்டாம்.   அல்குர்ஆன் 35:5

அடுத்து இந்த பூமியில் நாம் நேசித்தவர்களை விட சிறந்த நண்பர்களுடனும் நல்லோர் களுடனும் இருக்க வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்  என்பதையும்  கூறுகிறான்.

அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்களுடனும், உண்மையா ளர்களுடனும், உயிர் தியாகிகளுடனும் மற்றும் நல்லோர்களுடன் இருப்பார்கள். இவர்களே மிகச்  சிறந்த  நண்பர்கள்  ஆவார்கள்.

இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்த அருளாகும்.”   அல்குர்ஆன் 4:69,70

நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான்.   அல்குர்ஆன் 3:31

Previous post:

Next post: