ஐயமும்! தெளிவும்!
ஐயம் : அல்லாஹ் மனிதர்களிடம் இறுதித் தீர்ப்பு நாள் வரை பேசவே மாட்டானா? அறியத் தாருங்கள். ஆத்தூர் சுல்தான்ஜீ
தெளிவு : இறுதி நாள் வரை மட்டுமல்ல, எந்தவொரு நபிமார்களிடமும் கூட அல்லாஹ் நேரிடையாக பேசவில்லை. மனிதரிடத்தில் வஹீ மூலமாகவோ, திரைக்கு அப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தான் விரும்பியதை அறிவிப்பதன் மூலமோ தவிர வேறு வழிகளில் எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்த வன், ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
இறைத்தூதர்கள் அல்லாதவரிடமும் அல்லாஹ் பேசியிருக்கிறான். யாரிடம் என்றால் மூஸா நபி(ஸல்) அவர்களின் தாயா ரிடம் மற்றும் ஈஸா நபி(ஸல்) அவர்களின் தாயாரிடமும் பேசியிருக்கிறான்.
அவரை (குழந்தையை) பேழையில் (வைத்து நைல்) நதியில் போட்டுவிடும். பின் னர், அந்த நதி அதைக் கரையிலே சேர்த்து விடும். அங்கே எனக்குப் பகைவனும் அவ ருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக் கொள்வான் (எனப் பணித்தோம்) மேலும், (மூஸாவே) நீர் என் கண்காணிப் பில் வளர்க்கப்படுவதற்காக உம்மீது அன்பைப் பொழிந்தேன். (20:39)
நாம் மூஸாவின் தாயாருக்கு “அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக! அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால் அவரை ஆற்றில் போட்டுவிடு; அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம். நிச்சயமாக நாம் அவரை உன் னிடம் மீளவைப்போம். இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்‘ என்று அறிவித்தோம் (28:7)
வானவர்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின் றான்; உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியி ருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண் கள் யாவரையும் விட (மேன்மையாக) உம் மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். (என்றும்)
மர்யமே! இறைவனுக்கு நீர் பணி வீராக! ஸஜ்தா செய்வீராக! இன்னும் ருகூஉ செய்வோருடன் நீரும் ருகூஉ செய்வீராக! என்றும் கூறினர். (3:42, 43)
அல்லாஹ் இறுதி தீர்ப்பு நாள் வரை இனி யாரிடமும் பேசமாட்டான். ஏனெனில் “”இன்றைய தினம் இஸ்லாம் மார்க்கத்தை நிறைவு செய்துவிட்டேன்” (5:3) என்று அறி வித்து விட்டான். நபித்துவமும், சகலவித மான வஹியும் நின்றுவிட்டன. இறைதூதர் அல்லாதவர்களிடம் அல்லாஹ் பேசியது எல்லாம் நபி (ஸல்) அவர்கள் வருகைக்கு முன்பே தவிர இனி கிடையாது என்பதற்கு 5:3 வசனமே சான்று.
அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை. மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை? என்று இவர்களுக்கு முன்னர் இருந்தவர்க ளும் இப்படியே “இவர்களின் சொற்களைப் போலவே தான் கூறினார்கள். இவர்களின் உள்ளங்கள் (அவர்களுடைய உள்ளங்களுக்கு) ஒப்பாகிவிட்டன. உறுதியுடைய மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம். (2:118)
ஐயம் : குர்ஆன் அடிப்படையில் ஆதம் பூமியின் பிரதிநிதியா? முதல் மனிதரா?= ஆத்தூர் சுல்தான்ஜீ
தெளிவு : ஆதம் என்றால் முதல்/ஆரம்பம் என்று அர்த்தம் குர்ஆனில் தன்னுடைய பிரதிநிதியை படைக்க போகிறேன் என்று அல்லாஹ் வானவர்களிடம் கூறினான். பார்க்க வசனம் : 2:30
ஆக ஆதம் அவர்கள் முதல் மனிதரா கவும், பூமியின் முதல் பிரதிநிதியாகவும் இருந்தார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.