இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

in 2025 மார்ச்

அன்றும்! இன்றும்!! என்றும்!!! ஓரிறைக்கு மாறு செய்தும்,

இறை வரம்புகளை உடைத்தும், பெரும் துரோகத்திற்குப் பெயர் போன யூதர்கள்!

எஸ்.எம்.அமீர், நிந்தாவூர், இலங்கை.

2025  பிப்ரவரி  மாத  தொடர்ச்சி

இறை அத்தாட்சிகளைத் தெளிவான இட்டுக்கட்டப்பட்ட பொய்யும், சூனியமுமின்றி, வேறில்லை  என்றார்கள்.

அப்போது அவர் தமது கைத்தடியைக் கீழே போட்டார். உடனே அது உண்மையான பாம்பாக ஆனது. மேலும் அவர் தமது கையை சட்டைப் பையிலிருந்து வெளியே எடுத்தார். அப்போது அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாகத் தென்பட்டது. அப்போதுஇவர் தேர்ந்த சூனியக்காரராக உள்ளார். உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்ற இவர் எண்ணுகிறார். என்ன கட்டளையிடப் போகிறீர்கள்?” என்று ஃபிர்அவ்னின் சமுதாயப் பிரமுகர்கள் கூறினர். (7:107-110) இவ்வாறே: பார்க்கும் வகையில் நமது சான்றுகள் அவர்களிடம் வந்தபோதுஇது தெளிவான சூனியம்என்று அவர்கள் கூறினர்.   (27:13) 

மேலும்; மூஸாவை நமது சான்றுகளுடனும், தெளிவான அத்தாட்சிகளுடனும் ஃபிர்அவ்ன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். “பெரும் பொய்யரான சூனியக்காரர்என்று  அவர்கள்  கூறினர்.  (40:24)

தெளிவான ஒன்பது சான்றுகளை மூஸாவுக்கு வழங்கினோம். அவர்களிடம் அவர் வந்தபோது (நடந்ததை) இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! “மூஸாவே! உம்மை சூனியம் செய்யப்பட்ட வராகவே நான் கருதுகிறேன்என்று அப்போது அவரிடம் ஃபிர்அவ்ன்  கூறினான்.  (17:101)

மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். “இவர் சூனியக் காரரோ, பைத்தியக்காரரோஎனக் கூறினான்.   (51:39)

மூஸா அவர்களிடம் நமது தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தபோது இது இட்டுக்கட்டப்பட்ட சூனியம் தவிர வேறில்லை. இது பற்றி முன்னோர்களான எங்களது மூதாதையரிடம் நாங்கள் கேள்விப்படவில்லை என்றனர்.  (28:36)

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) அல்லாஹ்வின் தூதராவேன். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹ்மத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்என்று மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவூட்டுவீராக! அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தபோது “”இது தெளிவான சூனியம்எனக் கூறினர்.  (61:6)

இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! (சூனியக்காரர்களைத்) திரட்டி வருவோரைப் பல ஊர்களுக்கும் அனுப்புவீராக! அவர்கள்தேர்ந்த சூனியக்காரர்கள்ஒவ்வொருவரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்என்றும்(ஃபிர்அவ்னிடம்) கூறினர். (7:112) 

மேலும், “இவ்விருவரும் சூனியக்காரர்கள். தமது சூனியத்தின் மூலம் உங்களை உங்களது பூமியிலிருந்து வெளியேற்ற எண்ணுகின்றனர். சிறந்த உங்கள் வழிமுறையை அழிக்கவும் நினைக்கின்றனர்எனக் கூறினர்.  (20:63)  

மேலும் ஃபிர்அவ்ன்; “இவர் திறமைமிக்க சூனியக்காரர்என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான். (26:34)

அவர்களிடம் உண்மை வந்தபோதுஇது சூனியம், இதை நாங்கள் மறுப்பவர்கள்எனக் கூறினர். (43:30)

சூனியக்காரரே! உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதி பற்றி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! நாங்கள் நேர்வழி பெறுவோம்என்று அவர்கள் கூறினர். (43:49)

தனது சூனியத்தின் மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?” (என்றும் கேட்டான்).  (26:35)

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்குச் சூனியத்தைக் கற்று தந்த உங்களது குருவாவார். எனவே உங்களை மாறுகால் மாறுகை வெட்டி, உங்களைப் பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாகத் தண்டிப்பவரும். நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்து கொள்வீர்கள்கள்என்று அவன் கூறினான். (20:71)

நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்என்று அவன் கூறினான்.  (26:49)

மூஸாவே! உமது சூனியத்தால்; எங்கள் பூமியிலிருந்து எங்களை வெளியேற்ற எங்களிடம் வந்துள்ளீரா?” என்று அவன் கேட்டான்.  (20:57)

மேலும், “இது போன்ற ஒரு சூனியத்தை நாமும் உம்மிடம் செய்து காட்டுவோம். எமக்கும் உமக்குமிடையே (போட்டி நடத்திட) பொதுவான இடத்தில் ஒரு நேரத்தை நிர்ணயிப்பீராக! அதை நாமும் நீரும் மீறாதிருப்போம்” (என்றும்)  கூறினான்.  (20:58)

நம்மிடமிருந்து அவர்களுக்கு உண்மை வந்தபோதுஇது தெளிவான சூனியம்என்றனர்.   (10:76)

இது தெளிவான சூனியம் தவிர வேறில்லைஎன்று இவர்கள் கூறுகின்றனர். (37:15)

உண்மை உங்களிடம் வந்திருக்கும்போது அதைச் சூனியம் என்று கூறுகிறீர்களா? சூனியக்காரர்கள்; வெற்றிபெற மாட்டார்கள்என்று  மூஸா  கூறினார். (10:77)

திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் என்னிடம் கொண்டுவாருங்கள்!” என்று ஃபிர்அவ்ன் கூறினான்.   (10:79)

சூனியக்காரர்கள் வந்தவுடன்போடுவதைப் போடுங்கள்!” என்று மூஸா அவர்களிடம் கூறினார்.  (10:80)

இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடமும் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ,  சூனியக்காரர்,  என்றோ  கூறாமல்  இருந்ததில்லை.    (51:52)

நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோதுமூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்றது இவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கக்கூடாதா?” எனக் கூறுகின்றனர். இதற்கு முன் மூஸாவுக்கு கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? “இரண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் சூனியங்களேஎன்று கூறுகின்றனர். “அனைத்தையும் நாங்கள் மறுக்கிறோம்எனவும் கூறுகின்றனர்.  (28:48)

தவ்ராத் இறைநூலில் எழுதப்பட்ட ஓர் ஏடாக அருளப் பெற்றதைப் போன்று நீங்களும் வானத்திலிருந்து ஒரு இறைநூலை கொண்டுவர வேண்டும்  என்றார்கள்:

(நபியே!) நீர் ஒரு இறைநூலை விண்ணிலிருந்து அவர்கள் மீது இறக்கிக் கொண்டுவர வேண்டும் என வேதக்காரர்கள் உம்மிடம் கேட்கின்றனர். இதைவிட மிகப் பெரிய ஒன்றை மூஸாவிடம் அவர்கள் கேட்டுள்ளார்கள். (ஆம்) “எங்களுக்கு அல்லாஹ்வை நேரில் காட்டுவீராக!” என்றார்கள். (4:153) யூதர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் மூஸா(அலை) அவர்களுக்குத்தவ்ராத்இறைநூல் எழுதப்பட்ட ஓர் ஏடாக அருளப்பெற்றதைப் போன்று நீங்களும் வானத்திலிருந்து ஒரு இறைநூலை இறக்கிக் கொண்டுவர வேண்டும் என கோரினார்கள். அப்போதுதான் இந்த வசனம் அருளப் பெற்றதாகும். (சுத்தீ(ரஹ்), கத்தாதா(ரஹ்), இப்னு ஜுரைஜ்(ரஹ்), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர் : 2:782,783)

அல்லாஹ் அருளிய இறுதி இறைநூலை நம்ப மாட்டோம்  என்றார்கள் :

அல்லாஹ் அருளிய இறைநூலை நம்புங்கள்!” என்று அவர்களிடம் சொல்லப்பட்டால்எங்களுக்கு அருளப்பட்டதையே நம்புவோம்என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்குப் பிறகுள்ள (இவ்வேதத்)தை மறுக்கின்றனர். ஆனால் அது உண்மையான இறை நூலாகும் அவர்களிடம் இருப்பதை இது உண்மைப்படுத்துவதாகவும் இருக்கிறது. “நீங்கள் (உங்களுக்கு அருளப்பெற்றதை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டிருந்தால் இதற்கு முன்னர் அல்லாஹ்வின் நபிமார்களை ஏன் கொலை செய்தீர்கள்?” என்று (நபியே!) கேட்பீராக!  (2:91)

யூதர்கள் உள்ளிட்டஇறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய வேதத்தை நம்புங்கள் அதை உண்மை என ஏற்றுப் பின்பற்றி நடவுங்கள்என்று சொல்லப்பட்டால் எங்களுக்கு அருளப்பெற்ற தவ்ராத்தையும், இன்ஜீலையும், நாங்கள் நம்பி னாலே போதும். வேறு எதையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள். தங்களது இறை நூலுக்குப் பின்னால் அருளப்பெற்ற இறுதி நெறிநூலான குர்ஆனை  அவர்கள்  ஏற்க  மறுக்கின்றார்கள்.

மார்க்கத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்கள்:

தங்களிடம் இறைநூலைப் பற்றிய ஞானம் வரும்வரை அவர்கள் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவை தொடர்பாக அவர்களிடையே மறுமை நாளில் உம்முடைய இறைவன் தீர்ப்பு வழங்குவான். (10:93) கருத்து வேறுபாடு கொள்ளவேண்டிய தேவையே இல்லாத அளவுக்கு அல்லாஹ் தனது நெறிநூலில் தெளிவுபடுத்தியிருந்தான். ஆனாலும் இஸ்ரவேலர்களிடம் வேத அறிவு வந்த பிறகே ஒவ்வொரு பிரச்சினைகளிலும் கருத்து வேறுபாடு கொள்ளத் தொடங்கினார்கள். இதன் காரணமாக,

யூதர்கள் எழுபத்தோரு பிரிவுகளாகப் பிரிந்து போனார்கள்:

யூதர்கள் எழுபத்தோரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி), திர்மிதி, ஹாக்கிம்)

முஹம்மதே மூஸாவுக்குப் பின்னர்அல்லாஹ் எந்த மனிதருக்கும் எந்தவித வேதவாக்கும் அருளியதாக எங்களுக்குத் தெரியவில்லை என்றார்கள்: யூதர்களானசுகைன்மற்றும்அதீபின் ஸைத்ஆகிய இருவர்முஹம்மதே மூஸாவுக்குப் பின்னர் அல்லாஹ் எந்த மனிதருக்கும் எந்தவித வேதவாக்கும் அருளியதாக எங்களுக்குத் தெரியவில்லைஎன்றார்கள். அப்போதுதான் 4:163-165) ஆகிய வசனங்களை அல்லாஹ் அருளினான். (4:163-165, இப்னு அப்பாஸ்(ரழி), தஃப்ஸீர் தபரீ, இப்னு கஸீர்: 2:825.826)

இறுதித் தூதரான முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்களது நபிமார்களிடமிருந்து தெளிவாக அறிந்து வைத்திருந்த காரணத்தால் நபியவர்கள் மதீனா வரும்போது அவர்களை முதன்முதலில் ஏற்பவர்களாகத் தாம் ஆகிவிடவேண்டும் என்பதற்காக யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிப்து, பாலஸ்தீன் போன்ற பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து மதீனா மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வந்து குடியேறினார்கள். ஆனாலும் அவர்களது வாரிசுகளோ இறைத் தூதர் என்று தெளிவாக அறிந்திருந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.   (2:146, 7:157, 48:29, 61:6)

Previous post:

Next post: