2011 ஜுன்

பெங்களூர் M.S.கமாலுத்தீன் அமைதியின் ஆட்சியின் கீழ் பூமி இருந்த காலம் அது. நிசப்தமே நிரம்பியிருந்தது; மனிதர்களின் வருக்கைக்குப் பிறகு சலசலப்பும் சண் டையும் ஆரம்பித்தன. ஷைத்தானின் சகோதரர்கள் இப்பூமியிலிருந்து அமைதியை அப்புறப் படுத்திட இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இம் முயற்சியை முழுமையாக முறியடித்து இப்பூமியில் மீண்டும் அமைதியின் ஆட்சியை கொண்டு வர ஏக இறைவன் கொடுத்த வழி முறையே “”அமைதி மார்க்கம் இஸ்லாம்”

  அபூ அப்தில்லாஹ் ஷைத்தானின் சபதம் ஆதித் தந்தை ஆதம்(அலை) படைக்கப்பட்டு, மலக்குகளுக்கும் அவர்களுக்குமிடையே போட்டி நடந்தது. அதில் மலக்குகளும், ஜின் இனத்தைச் சேர்ந்த (18:50) இப்லீசும் தோல்வி அடைந்தனர். அதன் காரணமாக மலக்குகளையும், இப்லீசையும் ஆதமுக்குச் சிரம் பணிய அல்லாஹ் கட்ட ளையிட்டான். மலக்குகள் அடிபணிந்தனர். இப்லீஸ் அடிபணிய மறுத்ததோடு ஆணவம் பேசி, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி ஷைத்தான் ஆனான்; நரகவாதியானான்.

அ.ப.அகமது, புதுக்கோட்டை அந்தக் காலத்தில் இந்திய அரசியலில் முஸ்லிம் லீக் என்ற கட்சி ஜொலித்தது. கால ஓட்டத்தில் காணாமல் கரைந்து போய்விட்டது. சிலர் அந்த பேரியக்கத்தை இன்று சின்னக் கடைகளாக நடத்தி வருகிறார்கள். பின்னா ளில் தமிழ் முஸ்லிம்கள் மத்தியில் உணர்வு களை தூண்டி பழனி பாபா அரசியல் நடத்தி னார். ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிர்வினை அரசியல் பண்ண எண்ணியதாலோ என்னவோ, அறிவு பூர்வ அரசியலை விட்டுவிட்டு இனவெறி அரசியலைத்தான் அவரால் தமிழகத்துக்கு தர முடிந்தது. அவரின் மறைவுக்குப் […]