Posted by அந்நஜாத் on Mar 27 2008
அபூஃபவ்ஜிய்யா மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!! (எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!
Posted by அந்நஜாத் on Mar 27 2008
அபூமர்யம் புலவர் பூஸிரி தனது புர்தாவென்னும் புராணத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது புகழ்பாடும் பாணியில் மக்கள் தஞ்சம் புகுவதற்குத் தகுந்த வல்லவன் அல்லாஹ்தான், என்றிருக்கும் போது அச்சிறப்புத் தன்மை அவனது அடியாரும் தூதருமாகிய நமது நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தில், அல்லாஹ்விடம் முறையிடுவது போன்றே, நபி(ஸல்) அவர்களிடம் அவர் முறையிடும் அவல நிலையைப் பாருங்கள்!
Posted by அந்நஜாத் on Mar 06 2008
அபூமர்யம் அந்நஜாத்’ செப்டம்பர்’87 இதழில், புர்தாவிலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூழி’லுள்ள ஞானம், உங்களள் ஞானங்களின் ஒரு பகுதியே எனும் கவிதையடியை, ஹதீஸ்களின் வெளிச்சத்தில், அலசி ஆராய்தோம். அதில், குறிப்பாக அன்னை ஆயிஸா(ரழி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்திலிருந்து, அந்தக் கவியடி முழுமையாக ஹதீஸ்களுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டோம்.
Posted by அந்நஜாத் on Feb 19 2008
அபூமர்யம் சென்ற ஆகஸ்ட் இதழில் புர்தாவிலுள்ள “மேலும் லவ்ஹுல் மஹ்ஃபூமிலுள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு பகுதியே” என்னும் கவிதையின் அடியை திருக்குர்ஆனின் அடிப்படையில் அலசிப் பார்த்து, அது முற்றாக அல்குர்ஆனுக்கு முரண்பட்டிருப்பதையறிந்தோம், இதோ இப்பொழுது அதை ஹதீஸுகளின் அடிப்படையில் அலசிப் பார்ப்போம்.
Posted by அந்நஜாத் on Feb 18 2008
A. முஹம்மது அலி, M.A., திருச்சி-4. தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.
Posted by அந்நஜாத் on Feb 17 2008
அபூ மர்யம் சென்ற ஜூன், ஜூலை மாத இதழ்களில் புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை வாசகர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
Posted by அந்நஜாத் on Jan 28 2008
இப்னு மர்யம் “இவ்வுலகமும், மறு உலகமும் நபியே! உங்கள் அருட்கொடைதான்” என்று பூசிரி பாடியிருப்பதை திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்தோம். “இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடைதான்” என்பதைக் கண்டோம். இனி ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதை நாம் ஆராய்வோம்.
Posted by அந்நஜாத் on Jan 19 2008
இப்னு மர்யம் புர்தாவின் தவறுகள் இனி ‘புர்தா’வில் உள்ள தவறுகளைக் காண்போம். ஃப இன்னமின் ஜுதிகத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக இல்முல் லவ்ஹி வல்கலமி இது புர்தாவில் வருகின்ற வரிகள். மூன்று முறை ஓதப்படுகின்ற கவிதைகளில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதையின் கருத்து திரக்குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற நச்சுக் கருத்தாகும். ‘பர்தா’ ஓதக்கூடாது என்று முடிவெடுக்க இந்த இரண்டு வரிகளே போதுமாகும். அவ்வளவு மோசமான கருத்தை இந்த வரிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் [...]
Posted by அந்நஜாத் on Jan 16 2008
P. ஜைனுல் ஆபிதீன் இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.
Posted by அந்நஜாத் on Jan 15 2008
இப்னு மர்யம் “மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது.
Posted by அந்நஜாத் on Jan 07 2008
இப்னு மர்யம் உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.
Posted by அந்நஜாத் on Dec 23 2007
இப்னு மர்யம் “சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.
Posted by அந்நஜாத் on Dec 21 2007
இப்னு மர்யம் நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா? நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.
Posted by அபூ அப்துல்லாஹ் on Dec 20 2007
K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.
Posted by அந்நஜாத் on Dec 17 2007
இப்னு மர்யம் இரண்டாவது ஆதாரம் கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை. மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.
Posted by அந்நஜாத் on Dec 14 2007
முகம்மது அலி, M.A., ஸலவாத்’ சொல்வதனால் ஏற்படக் கூடிய சிறப்புகளையும், ஸலவாத்தின் பொருளையும், அதன் காரணத்தையும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ‘ஸலவாத்’ எவை? பிற்காலத்தில் உருவாக்கப்பட்டட ‘ஸலவாத்’ எவை? என்பதையும் இதுவரை நாம் பார்த்தோம்.
Posted by அந்நஜாத் on Dec 08 2007
முகம்மது அலி, M.A., “ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.
Posted by அந்நஜாத் on Dec 07 2007
இப்னு மர்யம். தவறான ஐயமும் தக்க விளக்கமும் “மவ்லிது ஓதலாம், ஓத வேண்டும்” என்று கூறுபுவர்களின் முதல் ஆதாரமான முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கை குர்ஆனின் தெளிவான வசனங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்பும் தங்கள் மனோ இச்சையை சிலர் விடுவதற்குத் தயாராக இல்லை. மாறாக அதை எப்படியேனும் நியாயப்படுத்திட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர்.
Posted by அந்நஜாத் on Nov 25 2007
இப்னு மர்யம். மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.
Posted by அந்நஜாத் on Nov 23 2007
முகம்மது அலி. M.A., திருச்சி. இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம். “ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.
Posted by அந்நஜாத் on Nov 23 2007
ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.
Posted by அந்நஜாத் on Nov 23 2007
மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ‘ஷபாஅத்’ என்னும் பரிநந்துரை செய்பவர்களாகவும், ‘மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.
Posted by அந்நஜாத் on Nov 23 2007
தொண்டியான் (டாக்டர் ஹமீத் நைனார், மதுரை. K.M. அப்துல் ஹமீது திருக்களாச்சேரி, தாஜ்மஹால் தேயிலைக் கம்பெனி, மயிலாடுதுறை. மவ்லவி. ஹாஜா ஜுபைர்தீன் மன்பஈ, இருமேனி. ஜஹபர் சாதிக், S.P. பட்டினம். முஹம்மது ஷஹீத், அம்மாபட்டினம், டாக்டர் S. முஹம்மது பாரூக் ஆகியோர் நண்டு பற்றிப் பல்வேறு கருத்துக்களை எழுதியுள்ளனர். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கமாக இந்த சிறிய கட்டுரை)
Posted by அந்நஜாத் on Nov 11 2007
இப்னு மர்யம் நமது முன்னோர்கள் “பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று [...]
Posted by அந்நஜாத் on Nov 11 2007
முகம்மது அலி M.A., ஓரிறைக் கொள்கையை நிலைநாட்டிட அனுப்பப்பட்ட நபிமார்கள், பல்வேறு சோதனைகளைத் தாங்கி, ஒரு சில மக்களை நேர்வழியின்பால் கொண்டு வந்தனர். அவ்வாறு நேர்வழி அடைந்த மக்கள், தாங்கள் நேர்வழி அடையக் காரணமாக இருந்த நபிமார்களின் மீது பேரன்பு கொண்டிருந்தனர். அந்த அன்பு நாளடைவில் பக்தியாக உருமாறியது. தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாக அந்த நபிமார்கள் சித்தரிக்கப்பட்டனர். அதன் காரணமாய்த் தங்கள் தேவைகளை அந்தக் ‘காலம் சென்ற நபிமார்களிடமே’ கேட்கத் தலைப்பட்டனர். சுருங்கச் சொல்வதென்றால் “அந்த நபிமார்கள் [...]
Posted by அந்நஜாத் on Nov 11 2007
இப்னு எஹ்யா, சங்கரன் பந்தல் ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்திலும் இறைவனை நெருங்கி அருளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது. ஆனால், அல்லாஹ்வை நெருங்குவதற்கான வழிமுறைகள் என்ன? அவனிடம் உதவி தேட வேண்டிய முறைகள் யாவை? என்பதில் தான் இந்த முஸ்லிம் சமுதாயம் பல வேற்றுமைக் கருத்துக்களைத் தன்னுள் கொண்டு பலவாறாகப் பிரிந்து கிடக்கிறது. குழப்பத்தைத் தீர்க்க வேண்டியவர்களே குழம்பிப் போய் நிற்கின்றனர். தெளிவு படுத்த வேண்டியவர்களே தெளிவின்றி நிற்கின்றனர். அப்படியானால் இஸ்லாம் மார்க்கம் ஒரு [...]
Posted by அந்நஜாத் on Nov 08 2007
(முஹம்மது அலி, M.A., திருச்சி) நபி(ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்திற்காகப் பாடுபட்டதற்காகவும், அவர்களின் மூலமாகவே அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான் என்பதற்காகவும், நாம் அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அதன் அடிப்படையில் அவர்களுக்காக நாமும் துஆச் செய்கிறோம். அதுவே ஸலவாத் எனப்படும். என்று சென்ற இதழில் கண்டோம். ஸலவாத் சொல்வதால் ஏற்படும் பயன்களையும், அதன் சிறப்பையும் நாம் காண்போம். “யார் என்மீது ஸலவாத் சொல்கிறானோ, அதன் காரணமாக அல்லாஹ் அவனுக்குப் பத்து மடங்கு அருள்புரிகிறான்” என்று நபி(ஸல்) [...]
Posted by அந்நஜாத் on Nov 08 2007
புலவர் செ. ஜஃபர் அலி., பி.லிட்., அல் -அமீன் மெட்ரிகுலேஷன் பள்ளி, கும்பகோணம். “அவிசுவாசிகள் நம்மை விட்டு விட்டு நம்முடைய நல்லடியார்களை (வலீமார்களை) தங்களுக்குப் பாதுபாவலராக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக அவர்களை வரவேற்க ஜஹன்னம் (நரகம்) தயாராயுள்ளது.” (அல்குர்ஆன் 18 : 102) மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் ‘தர்கா’ மாயைகளில் விழுவார்களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?
Posted by அந்நஜாத் on Oct 30 2007
மர்ஹும் “ஒரு இறைநேசர், தன்னை இறைநேசர் என்று கருதக் கூடாது என்பதற்காக திருடனாகக் காட்டிக் கொண்டார். இறைநேசர்கள் இப்படி எல்லாம் நடப்பார்கள்” என்பதாக ஒரு பெரிய ஹஜ்ரத் பயான் செய்தார். இதற்கு ஆதாரம் ஏதுமுண்டா? என்று நண்பரொருவர் கடிதம் எழுதி இருந்தார். அவருக்கும் மற்றவர்களுக்கும் தெளிவு படுத்திட இதனை எழுதுகிறேன். ஆம்! இப்படிப்பட்ட திருடர்கள் இன்று சமுதாயத்தில் மலிந்துவிட்டனர். கடந்த காலத்திலும் இப்படிப்பட்டோர் இருந்தே வந்துள்ளனர். ஷெய்குகள், பெரியோர்கள் என்று கூறி மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்போர், [...]