2017 நவம்பர்

ஒரு நவீன காரீஜ்ஜியின் வளர்ச்சியும்… வீழ்ச்சியும்… ஒரு பார்வை! எஸ். ஹலரத்அலி, திருச்சி-7. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு வெடித்துக் கிளம்பிய ஏகத்துவ புரட்சியின் நாயகனாக, இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற முஜ்தஜிதாக, இஸ்லாத்தின் போர்வாளாக, அனாச்சார, மெளடீக சடங்குகளுக்கு சாவு மணி அடித்த புரட்சி புனலாக, பொங்கு வெள்ளமாக காட்சி தந்த அண்ணனின் நிலைமை இன்று, ஊர் சிரித்து ஒடுங்கிப் போக காரணம் என்ன? அல்லாஹ் கூறுகிறான். (நபியே!) நீங்கள் அவர்களுக்கு (பல்ஆம் இப்னு பாஊரா) என்னும் […]

விமர்சனம் : சென்ற செப்டம்பர் 2017இதழில் வெளியாகி இருந்த தலையங்கத்தின் தலைப்பு விளையாட்டை அடிப்படையாகக் கொண்டுள்ளதே! அல்லாஹ் குர்ஆன் “”இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை” என்று குறிப்பிடுகிறான். எனவே, தலையங்கத்தின் தலைப்பு இப்படி “”ஃபிரன்ட்லி மேட்ச்” “FRIENDLY MATCH”” என்று இருப்பது சரியா? (தொலைபேசி மூலம் வாசகர்) விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ள தலையங்கத்தில், அந்நஜாத் இதழில் தவறான கருத்து எதுவும் இருந்தால், தங்களின் விமர்சனத்தை அனுப்புமாறு கேட்டிருந்தோம். குர்ஆன்-ஹதீஃத் அடிப்படையில் நாங்கள் தவறி இருந்தால், […]

  – M.S.D. ஸரஹ் அலி, உடன்குடி இறைவனுக்கு செய்யவேண்டிய வெறும் வணக்க வழிபாடுகளை மட்டும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்காமல், ஒரு நிம்மதியான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து உபதேசங்களையும் வழங்கியுள்ளது. நிம்மதியான, சந்தோஷமான வாழ்விற்கு பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதாரத்தை ஹலாலான முறையில் ஈட்டுவதற்கு உழைப்பதை இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகிறது. உழைப்பின் சிறப்பைப் பற்றி குர்ஆன் கூறுகிறது: “”தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி […]

ஐயம் : இரவு நேரத்தில் துஆ கேட்டால் அல்லாஹ் கொடுப்பான் என்று சொல்கிறார் களே உண்மையா? சபூரா பேகம், தஞ்சை. தெளிவு : இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ நிறைவேற்றித் தரப்படும் என்று ஹதீஃதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஹதீஃதை பார்ப்போம். “”நிச்சயமாக இரவில் ஒரு நேரம் இருக் கிறது. அந்த நேரத்தை எந்த முஸ்லிமாவது அடைந்து, அதில் ஈருலக விஷயங்களிலும் எந்த நன்மையையாவது அல்லாஹ்விடம் பிரார்த்திப்பாராயின் அதனை அவன் அவருக்குக் கொடுத்து விடுகிறான். இதன் […]

 முஹம்மது இஸ்மாயீல், கடையநல்லூர். தவ்ஹீது சகோதரர்கள் மத்தியில் தொழுகையில் அத்தஹிய்யாத்து இருப்பில் விரலை நீட்டுவது நபிவழியா? அல்லது அசைப்பது நபிவழியா? என்ற பிரச்சனை எழுந்துள்ளது. பெரும்பாலான சகோதரர்கள் அந்த ஹிய்யாத்து இருப்பில் விரலை அசைப்பது தான் நபிவழி என்று தவறாக விளங்கி வைத்துள்ளார்கள். மத்ஹபை பின்பற்றி நடப்பவர்கள் எவ்வாறு தங்களுடைய மத்ஹபு அறிஞர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்களோ அது போன்றுதான் தவ்ஹீது அறிஞர்களை தவ்ஹீது சகோதரர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுகின்றார்கள். விரலை அசைப்பது தான் நபிவழி என்று சொல்லக்கூடியவர்கள் வாஇல் […]

  – மண்டபம் M. அப்துல்காதிர் நாகரீகம் எனும் பெயரில் அநாகரிகமான வாழ்க்கை முறையில் மனிதர்கள் இன்று பலர் மாறி வருகின்றனர். உடை விஷயத்திலும், தங்களது அங்கங்கள் விஷயத்திலும் மனிதர்கள் நிலை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பொறுத்தவரையில் மிகவும் கவனமாக வாழவேண்டிய கால கட்டம் இது. எப்படியும் வாழலாம் என்பது அல்ல… இப்படித்தான் வாழவேண்டும் என்று நமக்கு மார்க்கம் கட்டளையிடுகிறது. பெண்களின் வாழ்க்கை தரத்தை வல்ல இறைவன் தன் அருள்மறையாம் குர்ஆன் மூலம் தெளிவுபடுத்துகிறான். தங்கள் அங்கங்களை […]

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல் அமல்களின் சிறப்புகள்… தொடர் : 30 M. அப்துல் ஹமீத் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் : புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம் தலைப்பு : திக்ரின் சிறப்புகள் குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் பக்கம் : 36:364, ஹதீஃத் எண் 10ம் அதன் விளக்கமும். பக்கம் 361, ஹதீஃத் எண் :10 ஹஜ்ரத் அனஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் […]

சையித் முபாரக், நாகை. புகாரி 50 (முதல் பாகம்), முஸ்லிம் 5,7 (முதல் பாகம்) ஆகியவற்றில் இடம் பெற்ற ஹதீஃதை மூன்றுப் பிரிவாகப் பிரித்து, அதன் படிப்பினை களை நாம் பார்ப்போம். 1. இஸ்லாம் : தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் நேரம் நிர்ணயிக்கப்பட்ட கடமைகள். ஒவ்வொன்றையும் அந்தந்த நேரத்தில் நாம் செயல்படுத்திய ஆகவேண்டும். இது தரும் படிப்பினைதான் நேர நிர்வாகம். நேர நிர்வாகத்தை நாம் சரி வர கடைபிடித்தாக வேண்டும் என்பது தான் […]

மர்யம்பீ, குண்டூர்,   1. இறைவன் பெயர் வைத்து அனுப்பிய நபி யார்? ஜகரிய்யா(அலை) அவர்களின் மகன் “”யஹ்யா(அலை)” 19:7 2. மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமை எது? தொழுகை : 4:103 3. கணவன் இறந்துவிட்டால் மனைவி எத்தனை நாட்கள் இத்தா இருக்க வேண்டும்? 4 மாதம் 10 நாட்கள் : 2:234 4. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே உள்ள தடுப்புச் சுவரின் பெயர் என்ன? அல்அஃராப் : 7:46 5. எந்த நபியுடன் […]

தொடர் – 3 தோழர் ஹம்துல்லாஹ் (அக்டோபர் தொடர்ச்சி…) இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையை முதலில் பாருங்கள். அல்குர்ஆன் வசனம் : 2:129ல் “”எங்கள் இரட்சகனே! அவர்களிடையே உன்னுடைய 1) அத்தாட்சிகளை எடுத்துக் காண்பித்து, அவர்களுக்கு 2) நெறிநூலையும், 3) ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் 4) தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைப்பாயாக. நிச்சயமாக நீயே வல்லமைமிக் கோன், பெரும் ஞானமுடையோன்” என இப்ராஹீம் (அலை) அவர்கள் அம்மக்களிடையே அனுப்பப்படும். இறைத்தூதர் செய்ய வேண்டிய பணிகளை […]

தொடர் 4 அபூ அப்தில்லாஹ் அக்டோபர் தொடர்ச்சி…….. அவர்கள் சொல்வது போல், அறிந்தவர்களிடம் கேட்டு அறிவதாக இருந்தால், “”அஹ்லல் இல்மி” என்று இருக்க வேண்டும்; அவர்கள் கூறுவதைக் கண்மூடிப் பின்பற்றுவதாக இருந்தால் “”கல்லிதூ அஹ்லல் இல்மி” என்றே இருக்க வேண்டும். அப்படி இல்லை; மாறாக “”அஹ்ல ஃத்திக்ரி” என்றே இருக்கிறது. “”ஃதிக்ர்’ என்று இந்த இடத்தில் குறிப்பிடுவது 3:58ல் கூறும் இறையறிவிப்புக்களையே குறிக்கும். 16:43, 21:7 குறிப்பிடும் “”உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அனுப்பிய தூதர்கள் […]

முஹிப்புல் இஸ்லாம் அல்லாஹ்வின்  ஒருமை : ஏகன் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநெறி இஸ்லாம். இஸ்லாத்தின் மூலக்கொள்கை அல்லாஹ் வின் ஒருமை, ஏகத்துவம், தவ்ஹீத். அல்லாஹ்வின் ஒருமை அல்லாஹ் அருளியது; மனிதர்களின் கண்டுபிடிப்பல்ல. அல்லாஹ் யார்? எப்படி அவன் ஒருமையான வன்? எவ்வாறு அவனை ஒருமைப்படுத்த வேண்டும்? இவை  போன்றவைகளை ஏகன் அல்லாஹ் மட்டுமே நன்கறிந்தவன். ஒருமை  அல்லாஹ்வின்  தனியுடமை : படைப்பினங்கள் அனைத்தின் படைப்பாளன் ஏகன் அல்லாஹ், அவன் ஒருவனே ஒருமையானவன். படைப்பினங்கள் பன்மையானவை. ஏகன் […]

M. அப்துல் ஹமீத் சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்கு சிந்தனையாளரான, கன்னட எழுத்தாளரும், பிரபல பத்திரிகையாளருமான 55 வயதான பி.கவுரி லங்கேஷ் அவர்கள், இந்து மதத் தின் மனுதர்மத்தையும், ஏற்றத்தாழ்வையும் உருவாக்கிய சாதி அமைப்பையும், பெண்ணை அடிமையாக்கிய சடங்குகளையும் வீரியத் தோடு எதிர்த்து வந்தார். எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்று கர்நாடகக் கோயில்களில் தொடரும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சட்டம் இயற்ற […]