1993 மே

இதுதான் புரோகிதம்! அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். […]

ஹனபிகள் இதனை மறுக்க முடியுமா? “ஹம்துல்லாஹ் ஜமாலி” இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாழ 75 சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளும் ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நாம் நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி […]

சாடல் போக்கு தேவையா? அந்நஜாத் அழகிய, நளினமான உபதேசங்களை விட்டு, குற்றம் குறைகளை நாசுக்காக எடுத்துக் காட்டுவதை விட்டு சாடல் போக்கைக் கடைபிடிக்கிறது. இதனால் வாசகர்கள் முகம் சுளிக்கிறார்கள். காணும் சகோதரர்கள் எல்லாம் இதையே குறையாகச் சொல்லுகிறார்கள். இந்த சாடல் போக்கு மட்டுமில்லை என்றால் அதிகமான மக்கள் அந்நஜாத்தைப் படிப்பார்கள். அந்நஜாத் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சிந்தனைத்திறன் மிக்கவர்கள் பலர் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமும்! தெளிவும்! ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக்கலாமா? குர்ஆன், ஹதீஸ் வழியில் விளக்கம் தருக!. R.ஹபீப் முஹம்மது, துபாய்.

குர்ஆனின் நற்போதனைகள்

புரோகிதர்களைப் புரிந்து கொள்ளுங்கள் ஆதத்தின் சந்ததிகளை கூறு போட்டுச் சுரண்டுவதற்கென்றே உள்ளவர்கள் புரோகிதர்கள். அற்ப உலக ஆதாரங்களுக்காக மக்களை மதவெறியைக் கொண்டு தூண்டி, ஒரு சாரார் இன்னொரு சாராருடன் காலங்காலமாக சண்டையிட வைத்து அதில் குளிர் காய்பவர்கள் புரோகிதர்கள். இதற்கு பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பின் வெளியான சங்கராச்சாரியாரின் அறிக்கை போதுமான சான்றாகும்.

  அந்நஜாத் 1993 மே