1996 நவம்பர் – டிசம்பர்

அபூ ஃபாத்திமா     அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்( மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்க) கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின் வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை)  அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.”  (அல்குர்ஆன் 42:21)

எம்.பி.ரபீக் அஹ்மத்     உலகில் பிரபலமாக இருக்கும் மதங்கள் ஐந்து.     1.கிறிஸ்துவ மதம் 2. இஸ்லாமிய மார்க்கம் 3.யூத மதம் 4. இந்து மதம் 5. புத்த மதம்

“மைல் கற்கள்”    ஷஹீத் செய்யித் குதுப்     இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை  அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான்.

மர்ஹூம்     (ஒரு  முஸ்லிம், இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போது. ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுவதும் ‘முஸாபஹா’ செய்வதும் நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்திய நடைமுறையாகும். நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான முஸ்லிம்கள் இரண்டு கைகளாலும், மிகவும் சிறுபான்மையினர் ஒரு கையாலும், ‘முஸாபஹா’ செய்து வருகின்றனர். “இதில் சரியான முறை எது?”

இஸ்லாம் ஒரு பூரணப்படுத்தப்பட்ட மார்க்கம் மவ்லவி P.M.S.காசிமிய்யி, மன்யகரடிக்குளி, ஸ்ரீலங்கா     வல்ல அல்லாஹ்,  இம்மை, மறுமை ஆகிய இரண்டிற்கும் பயன்தரக் கூடியவற்றை, தனது தூதர் நபி(ஸல்) அவர்கள் மூலமாக அவை குறித்து நமக்குக் கூறாமலும், பாவம் தரக்கூடிய அனைத்துக் கெடுதிகளை விட்டும் நம்மை எச்சரிக்கை செய்யாமலும், இஸ்லாமிய மார்க்கத்தைப் பூரணப்படுத்தவில்லை.

  மஹ்மூத் அல்ஹஸன், கோட்டார் நாங்கள் , எங்கள் முன்னோர்களைப் பின்பற்றுகிறோம் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன், ஹதீஸையும் ஒப்புக் கொள்கிறோம். நீங்கள் “முன்னோர்களைப் பின்பற்றக் கூடாது” என்று சொல்கிறீர்கள்! என்று அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட குர்ஆன் ஹதீஸ்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறீர்களே! இது முரண் இல்லையா?”

K.M.H.     நபி ஆதம்(அலை) தொடுத்து இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை தொடர்ந்து சுமார் 1 1/4 லட்சம் நபிமார்கள், செய்து வந்த தூய பணியான  அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் பணி, இந்த உம்மத்தின் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் சார்ந்ததாக, இறைவனால் ஆக்கப்பட்டுள்ளது. சுமார் 1 1/4லட்சம் நபிமார்கள் செய்த பணியைக் கோடிக்கணக்கான தனது உம்மத்தவர்கள் செய்யும். நிலையில் அவர்களைத தயார் செய்துவிட்டு நபி(ஸல்) அவர்கள் சென்றிருக்கிறார்கள்.

   இஸ்லாத்தில் இடையில் புகுந்து கொண்ட இடைத்தரகர்களான – புரோகிதர்களான மவ்லவிகள் முன்னோர்களின் பெயரால் புகுத்தியுள்ள  மூட நம்பிக்கைகள், அனாச்சாரங்கள் இவற்றில் ஆழ்ந்து கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை சுய சிந்தனையாளர்களாக மாற்றும் பெரும் முயற்சியில் விஷயம் தெரிந்த ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் அயராது பாடுபடுவது நீங்காத கடமையாக இருக்கிறது.