அந்நஜாத்

முஸ்லிம்களே! முஸ்லிம்களாக மட்டுமே வாழுங்கள்!!
முஸ்லிம்களே! முஸ்லிம்களாக மட்டுமே வாழுங்கள்!!

வெளியீடு : 10   (24-7-1985)

பல்சமயச் சிந்தனை
பல்சமயச் சிந்தனை

காலம்: 30-10-1984   இடம்: தூய சின்னப்பர் இறையியல் கல்லூரி  (St. Paul’s Seminary)

ஏற்பாடு:  பல்சமய உரையாடற் குழு

பொருள்: சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதங்கள்

உரையாளர்: K.M.H அபூ அப்தில்லாஹ் (ஷாஹுல் ஹமீது)

வஹ்ஹாபி
வஹ்ஹாபி

வெளியீடு : 15   (4-4-1986)

“தர்ஹா”
“தர்ஹா”

வெளியீடு : 8   (15-3-1985)

முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள்
முஸ்லிம்களே! நபி(ஸல்) அவர்களையே பின்பற்றுங்கள்

வெளியீடு : 11   (18-8-1985)

மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன?
மீலாது, மவ்லிது, மார்க்கம் சொல்வதென்ன?

வெளியீடு : 6   (23-11-1984)

பொதுமக்களின் சிந்தனைக்கு!
பொதுமக்களின் சிந்தனைக்கு!

அணுகுவோம்! ஆராய்வோம்!! தெளிவோம்!!! தேர்வோம்!!!!
அணுகுவோம்! ஆராய்வோம்!! தெளிவோம்!!! தேர்வோம்!!!!

வெளியீடு : 7   (1-3-1985)

அன அவ்வலுல் முஸ்லிமீன்
அன அவ்வலுல் முஸ்லிமீன்   மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி.

* அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல!

* அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல!

* அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல!

* அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல!

* அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல!

* அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல!

மேல் எழுதப்பட்ட வார்த்தைகளை தொழுகையின் போதோ அல்லது அல்லா ஹுவை நினைவு கூறும்போதோ படிக்க (ஓத) முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது! ஆனால் நிச்சயமாக “”அன அவ்வலுல் முஸ்லிமீன்” என்று சொல்லியே ஆக வேண்டும்.

ஏன் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக் காக நின்றுவிட்டால்,

“”வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி சத்திய மார்க்கத்தை விரும் பியவனாக என் முகத்தை திருப்பி விட்டேன். மேலும் நான் முஸ்லிம்களில் ஒருவன். எங்கள் இரட்சகனே! நீயே அரசன்! வணக்கத்திற் குரியவன் உன்னைத் தவிர வேறு யாரு மில்லை. நீயே என்னுடைய இரட்சகன்! நான் உன்னுடைய அடிமை! என்று இறுதி வரை ஓதுவார்கள் என அலீ இப்னு அபீதாலீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

மேல்கண்ட நபி மொழியைப் போன்று, நான் முஸ்லிம்களில் ஒருவன் என்றும், நான் முஸ்லிம்களில் முதன்மையானவன் (“அன அவ்வலுல் முஸ்லிமீன்”) என்றும் இன்னும் ஒரு சில துஆக்களே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

மேலும் இபுராஹீம் அலைஹி ஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்போது முஸ்லிம் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் சொல்லவில்லை.

இப்றாஹீம் நபி அவர்களுடைய வார்த்தைகள் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன்

சத்திய வழிகாட்டல் நூல் வழியாக சொல்லும் போது,

எங்கள் இறைவனே! எங்களிருவரையும் முஸ்லிமானவர்களாக நீ ஆக்கிடுவாயாக! எங்கள் சந்ததியலிருந்தும் முஸ்லிம் சமுதாயத்தை (ஆக்கிடுவாயாக!) (அல்குர்ஆன் 2:128)

என்று இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் புரோகித மவ்லவிகள்(?) பின்னால் கண்மூடிச் சென்று அவர்களின் ஷைத்தானியக் கற்பனையில் உருவான அமைப்புகளான சுன்னத் வல்ஜமாத், ஜாக், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தப்லீஃ ஜமாஅத் இன்னும் பல பல பெயர்களில் செயல்பட்டு கொண்டு நாங்கள் தான் அசல் இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லி மார்தட்டுகிறார்கள். அப்படிப்பட்ட இயக்கவாதிகள் பெருமையோடு மார்தட்ட வேண்டாம். அவர்கள் தங்களுடைய அறிவை குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு தட்டி எழுப்பி அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு என்ன (அமைப்பை) பெயரைச் சூட்டினான் என்பதையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அமைப்பில் இருக்கும்படி கட்டளையிட்டார்கள் என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக அருள்கூறும் சத்திய நெறிநூலில் சொல்லும்போது

மேலும் தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அவரை இவ்வுலகில் திட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்.

மேலும் அவருடைய இறைவன் அவருக்கு “”நீர் முஸ்லிமாக ஆகிவிடும்” என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் இறைவனுக்கு நான் (முற்றிலும்) வழிபட்டேன்” என்று அவர் கூறினார்.

மேலும், இதனையே (இறைத்தூதர்) இப்றாஹீம் தம் மக்களுக்கு இறுதி உபதேசம் செய்தார்; இன்னும், யாஃகூபும் (தம் மக்களு க்கு இறுதி உபதேசம் செய்தார்;) என்னுடைய மக்களை, நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை உங்களுக்காகத் தேர்ந்தெடுத் துள்ளான்; எனவே நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி ஒருபோதும் மரணிக்க வேண்டாம்.

அல்லது, யாஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களி டம் “”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு உங்கள் இறைவனை, உங்கள் மூதாதையர் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனாகய ஒரே இறைவனையே வணங்கு வோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 2:130,131,132,133)

மேல்கண்ட சத்திய நெறிநூல் வசனம் 2:130 என்ன சொல்லுகிறது? அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக இந்த சமுதாயத்தை பார்த்து கேள்வி தொடுக்கும்போது “”தன்னைத் தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அப்படி என்றால் இஸ்லாம் என்ற போர்வையில், மார்க்கத்தை மதமாக்கி, பொருளாதார சம்பாத்தியத்திற்காக வியாபாரமாக்கி மக்களை மாக்களாக்கி, “உம்மத்தன் வாஹிதாவை” ஒரே சமுதாயத்தை பல அமைப்புகளாக பிரித்து முழுக்க, முழுக்க ஷைத்தானிய வழியைப் பின்பற்றும் புரோகித மவ்லவிகளும்(?) அவர்கçள அப்படியே பின்பற்றும் இயக்கவாதிகளும் மடையர்களே! மடையர்கள் என்ற வார்த்தையை நாம் சொல்லவில்லை; நம் எல்லோரையும் படைத்த அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான் என்பதை அறிவுள்ளவர்கள், சிந்திக்கவே செய்வார்கள்; சிந்திப்பார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ என்ற அமைப்பை தவிர, மனித கற்பனையால் உருவான அமைப்புகள் எல்லாம் வழிகேடே என்று சொல்லி இருக்க! இந்தப் புரோகித மவ்லவிகளும்(?) அவர்களைப் பின்பற்றுபவர்களும் “ஜமாஅத் அல் முஸ்லிமீனும்’ ஒரு பிரிவுப் பெயர் தானே? என்ற அறிவில்லாத கேள்வியையும் கேட்கிறார்கள். இவர்களின் மடத்தனமான கேள்விக்கு அல்குர்ஆன் 2:130 சிறந்த பதிலை தந்து கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு முஸ்லிம் தன்னை “முஸ்லிமீன்” என்றே அல்லாஹு ரப்புல் ஆலமீன் முன் சொல்ல முடியும்.

அன அவ்வலுல் முஸ்லிமீன், அன முஸ்லிமீன் என்பதைத் தவிர வேறு எந்த அமைப்புகளின் பெயரையும் சொல்லவே முடியாது என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான் (22:78). இதற்கான சிறந்த அழகான விளக்கமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்”. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைஃபத்துல் யமான் (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டபோது:

நீர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஐயும் அதன் “இமாம்”ஐயும் பற்றிக் கொள்வீராக என்றே சொன்னார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்வார்களா? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்காக, புரோகித மவ்லவிகள் சொல்வதை அப்படியே கேட்டு வழிகேட்டில் சென்று அபூ ஜாஹிலியாக்கள் விடுக்கும் அழைப்பை ஏற்று நரகத்தின் விளிம்புக்கு செல்ல வழிதேடுகிறார்களா? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் 6.12.2009-ல் சென்னை மட்டும் அல்ல தமிழகத்தின் மற்ற மாவட்ட தலை நகரங்களிலும் வினோதங்கள் அரங்கேறின என்பது நாம் யாவரும் அறிந்ததே, இதில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு அமைப்பினர்க்கும் தனித்தனியாக நேரங்கள் குறிப்பிட்டு காவல்துறை அனுமதியளித்துள்ளது. இந்தச் செய்தி எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது.

உதாரணத்திற்கு காலை 10.00 - 11 .00 மணிவரை சுன்னத்துல் ஜமாஅத் பேரவைக்கு ஆர்ப்பாட்டம் அல்லது மனித சங்கிலிக்கு அனுமதி 11.00 – 12.00 வரை உலமா பேரவைக்கு அனுமதி 12.00 -1.00 TNTJ க்கு அனுமதி 1.00 – 2 .00 இஸ்லாமிய ஜனநாயக பேரவைக்கு அனுமதி 3.00 – 4.00 மணி வரை மற்றும் அதற்கு மேலும் இது போன்ற மனித கற்பனையில் உருவான இஸ்லாமிய அமைப்புகளுக்கு அனுமதி என்று பட்டியலே வெளியான கேலிக் கூத்து இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

அன்று அபுல் ஹிக்கம் என்று சொல்லக் கூடிய அபூஜஹீல் தாருந்நத்வாவை வைத்துக் கொண்டு பெருமை அடித்தான். இன்று இந்த புரோகித மவ்லவிகள்(?) தங்கள் தங்கள் அமைப்புகளை வைத்து பெருமையடித்து கொண்டு, இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்திற்கு பெரும் களங்கத்தையும் நடுநிலை முஸ்லிம்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த புரோகித ஸனது பட்டத்துக்கு (நாளை மறுமையில் பட்டம் விடவும் பிரயோஜனப்படாத) சொந்தக்காரர்களான மவ்லவிகளை(?) பின்பற்றும்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை, இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வழிகாட்டவில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்திய நெறி நூல் வழியாக சொல்லும்போது அவர்கள் எத்தகையோரென்றால் உம்மீ (எழுதப்படிக் கத் தெரியாத) நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுவார்கள். (அல்குரான் 7:157)

ஆதலால் அல்லாஹுவையும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் கட்டளையிட்டப்படி அப்படியே, பின்பற்றுபவர்கள் தான் “”அவ்வலுல் முஸ்லிமீன்” ஆவார்கள். அவர்கள் இயக்கவாதிகள், அவ்வலுல் சுன்னத் வல்ஜமா அத்தீன், தவ்ஹீதியீன் நஜாத்தீன், ஜாக்கீன், விடியல் வெள்ளியீன், தப்லீஃ ஜமாஅத்யீன் ஆகவே முடியாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து செயல்பட முன்வர வேண்டும். அதற்கு அல்லாஹ்வும் அருள் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.

தனித்துச் செயல்படுவதும் வழிகேடே
விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்:1999 மார்ச் அல்முபீனில் “”அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில், அமீரை மீறினால் என்ற குறுந் தலைப்பில்,மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வற்புறுத்தப்பட்டுள்ளதை மேற்கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. இது தலைவன் தொண்டனிடையே ஏற்படும் சாதாரண உறவு முறை அல்ல; விரும்பினால் கட்டுப்பட்டுவிட்டு விரும்பாத போது வெளியேறி விடும் கட்சித் தலைமை போன்றதுமல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டு விலகக் கூடாது. விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்தியாக வேண்டும்.

அமீருக்குக் கட்டுப்படுவதை அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அமீரா? பலர் இருக்க முடியுமா? ஒரே ஒருவர்தான் என்றால் அந்த ஒருவர் யார்? நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்? அல்லது மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் அந்த அமீர்கள் யார்? இதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அமீர்களையும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவது தான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன. பிரச்சாரமும் செய்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகிறான். அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப்பட்டு ஒற்றுமை கலைக்கப்படுவதைக் கண்டு தடுமாறுகிறான்.

முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக் கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும் போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகிறது. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுறக் கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிப் போகிறான்.

ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்கு கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும். தெளிவு பிறக்கும் இன்ஷா அல்லாஹ். (அல்முபீன் மார்ச் 99. பக். 6,7)

இப்படி பீ.ஜை. தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதன் எதார்த்த நிலை என்ன?

அப்துர்ரஹ்மான், திருச்சி.

விளக்கம்: இப்படியயாரு அசத்தலான பீடிகையைப் போட்டு தனது பக்தர்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் விட்டு 51 பக்கங்களை வீணடித்து ஆட்சி அதிகாரம் உள்ள அமீர் இருந்தால்தான் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட முடியும். ஆட்சி அதிகாரம் இல்லாதவரை சமுதாய ஒற்றுமை சாத்தியமே இல்லை. அல்லாஹ் 21:92,93 மற்றும் 23:52-56-ல் வலியுறுத்தி இருப்பது சாத்தியமில்லை; ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய சித்தாந்தம் ஆட்சி அதிகாரம் இல்லாத அமீரைக் கொண்டு நடைமுறைச் சாத்தியமில்லை. ஆக உலகளாவிய முஸ்லிம்கள் ஒன்று பட வழியே இல்லை என்று பொய்யன் பீ.ஜை. ஃபத்வா-மார்க்கத் தீர்ப்பு கொடுத்து விட்டார்.

அதை அப்படியே நம்பி ஏற்ற ஒரு கூட்டம் ஆட்சி அதிகாரம் உள்ள “கிலாஃபத்’ ஏற்பட்டால் தான் சமுதாயம் ஒன்றுபடும்; சமுதாயப் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி, 24:55-ல் அல்லாஹ் நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் உண்மை முஸ்லிம்கள் ஆனால் மட்டுமே முன்பிருந்தோருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தது போல் உங்களுக்கும் கொடுப்போம் என்று கூறி இருக்கும் நிலையில், அல்லாஹ் கொடுப்பதாகச் சொல்லும் ஆட்சி அதிகாரத்தை இவர்கள் தட்டிப் பறிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வழிகேட்டிற்கும் பொய்யன் பீ.ஜை.யே காரணகர்த்தா!

இப்போது பீ.ஜை.யின் வழிகேட்டிற்கும், அவரது பக்தர்களின் வழிகேட்டிற்குமுள்ள அடிப்படைக் காரணத்தைப் பார்ப்போம்.

இவர்கள் கற்பனை செய்து இவர்களாக அமைத்துக் கொண்ட குட்டி, குட்டி இயக்கங்களுக்கு மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் தலைவர்கள் இருப்பது சாத்தியம் என்றால், அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய பேரியக்கமான ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு மாநிலம் தோறும், மாவட்டங்கள் தோறும், வட்டங்கள் தோறும், ஊர்கள் தோறும் துணை அமீர்கள் இருப்பது சாத்தியமா? சாத்திய மில்லையா? பொய்யன் பீ.ஜை. எழுதி இருப்பது போல் இஸ்லாமிய அடிப்படையில் நூற்றுக் கணக்கான இயக்கங்கள் எப்படி இருக்க முடியும்? இஸ்லாமிய அடிப்படையில் ஒரே ஒரு பேரியக்கம் மட்டுமே இருக்க முடியும். நூற்றுக் கணக்கான அல்ல; இஸ்லாமிய அடிப்படையில் இரண்டு இயக்கங்கள் கூட இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இருந்தால் அவற்றில் ஒரேயொரு இயக்கம் மட்டுமே இஸ்லாமிய அடிப்படையில் இருக்க முடியும் (பார்க்க 21:92; 23:52)

நூற்றுக்கணக்கான இயக்கங்களில் ஒன்று கூட இஸ்லாமிய அடிப்படையில் இல்லாமலிருக்க வாய்ப்பு உண்டே அல்லாமல், அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையில் இருக்க ஒருபோதும் வாய்ப்பே இல்லை. இது பொய்யன் பீ.ஜையின் முதல் உளறல். இரண்டாவது உளறல் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்ளனர்; பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? என்பதாகும்.

ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் ஒரே அணியில் ஒரே அமீரின் கீழ் ஒன்றுபட்டிருப்பார்களா? பத்து பிரிவுகளாகப் பத்து அமீரின் கீழ் இருப்பார்களா? இந்தப் பத்துப் பிரிவினரும் சாட்சாத் பொய்யன் பீ.ஜை.யின் கற்பனையில் உருவானவர்களை. ஒவ்வொரு பிரிவு இயக்கத்தையும் கற்பனை செய்து உருவாக்கி விட்டு, அங்கு தனது ஆளுமைக்கு, அதிகாரத்திற்கு இடமில்லை என்றதும், மரத்துக்கு மரம் குரங்கு தாவுவது போல் தாவி புதுப்புது இயக்கங்களைத் தோற்றுவித்தவர், தோற்றுவிப்பவர் அவரே. அதனால் தான் ஒரே கொள்கை கோட்பாடு என பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல இவர்களின் பிரிவு இயக்கங்களுக்கு குர்ஆனோ, ஹதீஸோ காரணமல்ல; 2:213, 3:19, 42:14, 45:17 ஆகிய இடங்களில் அல்லாஹ் கூறுவதுபோல் பொய்யன் பீ.ஜைக்கு ஏற்பட்ட பொறாமையும், சுயநலமும், பேர் புகழில் பேராசையும், அற்பமான இவ்வுலக வாழ்க்கையில் அதீத ஆசையுமே காரணமாகும். (பார்க்க 7:175-179)ஒரே கொள்கை கோட்பாடுள்ளவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாகப் பிரிந்ததற்கு பீ.ஜை. அல்லாமல் வேறு யாரும் பிரதான காரணகர்த்தாக்கள் அல்ல. நாளை மறுமையில் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கப் போகிறவர் பொய்யன் பீ.ஜை. தான்.

21:92, 23:52 இறைவாக்குகள் கூறுவது போல் முஸ்லிம் சமுதாயம் வேற்றுமையில்லாத ஒன்றுபட்டு ஓரணியில் இருக்கும் ஒரே சமுதாயம் தான். 21:93, 23:53,54,55,56 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை மறுமையில் நரகை அடைபவர்கள் ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவார்கள். அவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டுள்ள பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள்.

அல்லாஹ்வே 21:93, 23:53 இறைவாக்குகளில் இந்தச் சமுதாயம் பல பிரிவுகளாகச் சிதறுவார்கள் என்று கூறி இருக்கும்போது சமுதாய ஒற்றுமை எப்படி சாத்தியமாகும் எனக் கூறி சிந்திக்கத் துணியாத மக்களை மயக்கி ஏமாற்றுவார்கள். ஆம்! உண்மை தான்!! நாளை மறுமையில் நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் (பார்க்க 32:13, 11:118, 119) சமுதாயத் தைப் பிளவுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களில் 11:119 இறைவாக்கு கூறுவது போல் அல்லாஹ் அருள்புரிந்த மிகச் சிலர் எப்படி நடக்க வேண்டும் என்பதே நம்முன் உள்ள விவகாரம். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் புக விரும்பும் நல்லடியார்கள் எப்படி நடக்க வேண்டும்? இதற்கும் இறுதி நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், இன்று முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருப்பவர்களை விட மிகமிகக் கேடுகெட்டவர்கள், உளப்பூர்வமாக நம்பிக்கை கொள்ளாமல் உதட்டளவில் நம்பிக்கை கொண்டதாக நடித்துக் கொண்டு குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருந்த நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தார்கள். 49:14-ல் ஈமான்-இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாதவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று தமது சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள அல்லாஹ் கட்டளை இடுகிறான். இப்படி இன்றைய முஸ்லிம்களை விட மிகமிக கேடுகெட்டவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று இந்தச் சமுதாயத்தை ஒரே சமுதாயமாக அரவணைத்துச் செல்வதின் மூலம் நபி(ஸல்) நமக்கு அழகிய நடைமுறையைக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

33:21,36, 59:7 இறைக் கட்டளைகள்படி நபி (ஸல்) அவர்களின் இந்த அழகிய முன்மாதிரியை ஏற்று, இறைக் கட்டளைகளையும், நபி வழியையும் நிராகரித்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி பல கோணல் வழிகளில் செல்லும் முஸ்லிம்களையும், அவர்களின் இறுதித் தீர்ப்பை அல்லாஹ்வே நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பதை ஏற்று (பார்க்க 2:210, 6:58, 10:11,19,54,11:110, 14:22, 19:39, 39:69,75, 41:45, 42:14, 21) இவ்வுலகில் அவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாகவே ஏற்று அரவணைத்துச் செல்வதன் மூலம் சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். யாருக்கும் குஃப்ர், ´ர்க் ஃபத்வா-தீர்ப்பு கொடுக்க முற்படக்கூடாது. யார் பின்னாலும் நின்று தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கக் கூடாது. இப்படி தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம் என்பதை விளங்கி நடப்பவர்களை ஆலிம்களாக-அறிஞர்களாக இருக்க முடியும்.

இணை வைத்த நிலையில் இறந்து போன மூதாதையர் பற்றி ஃபிர்அவ்ன் மூஸா(அலை) அவர்களிடம் கேட்கிறான். அவர்கள் இறந்து போனவர்கள். தவறை உணர்ந்து தவ்பா செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை; அவர்களைப் பர்றியே மூஸா (அலை) சொன்னதை 20:51,52 தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“”அப்படியயன்றால் முன் சென்ற தலைமுறையினரின் நிலை என்ன?” என்று ஃபிர்அவ்ன் கேட்டான். “”இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார். (20:51,52) இணைவைத்த நிலையில் இறந்து போனவர்கள் பற்றியே ஒரு நபி, அவர்கள் காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று கூறத் துணியவில்லை. இன்றைய ஆலிம்களுக்கு(?) இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஒரு நபிக்கே இல்லாத அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக இந்தப் புரோகிதர்கள் நினைத்துச் செயல்படுகிறார்களா? இன்னும் பாருங்கள்!

உஹதுடைய யுத்த களத்தில் இறைவனின் இறுதித் தூதரை குறைஷ்கள் மிகமிகத் துன்புறுத்தி விட்டார்கள். ­ஹீதாக்கப் பட்டார்கள். குறைஷ்களால் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. நபி தோழர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது (பார்க்க 3:144). இந்த நிலையில் நபி(ஸல்) வேதனையைத் தாங்க இயலாது, அவர்களில் சிலரைக் குறிப்பிட்டு அவர்களை அல்லாஹ்வின் கருணையிலிருந்து நீக்குமாறு பிரார்த்தித் தார்கள். அதைக் கண்டித்து அல்லாஹ் இறக்கிய இறைவாக்கைப் பாருங்கள். ”

“”(நபியே!) உமக்கு இவ்விடயத்தில் எந்தவித அதிகாரமும் இல்லை. அவன் அவர்களை மன்னித்தும் விடலாம்; அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” அல்குர்ஆன்: 3:128 புகாரீ. 4559.

அல்லாஹ்வின் இறுதித்தூதரை மிகக் கடுமையாக எதிர்த்த, அன்று நிராகரிக்கும் காஃபிர்களாக இருந்த குறைஷ்களைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாகப் பிரார்த்தித்ததையே அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தர்கா, தரீக்கா, மத்ஹபு என்றும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வரமுடியும் என்றும் தவறான வழிகளில் செல்லும் முஸ்லிம்களுக்கும், குர்ஆன் மட்டும் போதும் என தவறான வழியில் செல்பவர்களுக்கும் ´ர்க், குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்த முடியுமா? அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லாத அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாக நம்பிச் செயல்படும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. எண்ணற்ற இறை எச்சரிக்கைகளை நிராகரிக்கும் ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும்.

தம் முன்னாலேயே தங்களை நபி என வாதிட்டவர்களுக்கே நபி(ஸல்) குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை. இந்த நிலையில் இப்புரோகிதர்களுக்கு இத்துணிச்சல் எங்கிருந்து வந்தது?

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததையே நிராகரித்து கடுமையாக எச்சரித்திருக்கும் நிலையில், இந்த மூட முல்லாக்கள் 42:21 அல்லாஹ் கடிந்து கூறுவது போல் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தை-அல்லாஹ்வே மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில் தங்கள் கைகளில் எடுத்து குஃப்ர் ஃபத்வா கொடுப்பவர்கள் வடிகட்டின ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் சந்தேகமுண்டா?

தவறான வழிகளில் செல்பவர்களுக்கு அவர்களின் வழிகேடுகளை குர்ஆன், ஹதீஸ்கள் கொண்டு எச்சரிப்பதோடு நிறுத்திக்கொண்டு, குஃப்ர் ஃப்தவா கொடுக்காமல், அவர்கள் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் அனைவரையும் இவ்வுலகில் முஸ்லிம்களாக ஏற்று சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் முஸ்லிம்கள் மட்டுமே ஆலிம்களாக-நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியும்.

ஆனால் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் சமுதாய ஒற்றுமையை நஞ்சென வெறுப்பார்கள். காரணம் அது அவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடும். எனவே சமுதாயத்தை மேலும் மேலும் பிளவுபடுத்தி அவர்கள் அற்ப உலக ஆதாயம் அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். 1987க்குப் பிறகு சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது ஒலி வேகத்தைத் தொட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் அது ஒளி வேகத்தைத் தொடும். சமுதாயம் எண்ணற்றக் குழுக்களாகப் பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு விடும். இப்பூவுலகில் முஸ்லிம்களை விட ஒரு கேடுகெட்ட சமுதாயம் பிரிதொன்று இல்லை என்ற நிலையே ஏற்படும்.

இதைத் தடுப்பதற்குள்ள ஒரே வழி, வேறு வழியே இல்லை; அது முஸ்லிம்கள் மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகும். அவர்கள் பின்னால் முஸ்லிம் சமுதாயம் செல்வது 7:3, 33:36,66,67,68, 59:7, 42:21 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களின்படி நாளை மறுமையில் ஷிர்க், குஃப்ர், பித்அத் குற்றங்களுக்கு ஆளாகி நரகில் கொண்டு சேர்த்துவிடும். முஸ்லிம்களே எச்சரிக்கை. ஆனால் இவர்கள் அனைவரையும் இவ்வுலகில் 49:14, 2:8-20 இறைக் கட்டளைகள்படி முஸ்லிம்களாக ஏற்று ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை கட்டிக் காப்பதே நபி வழியாகும்; நேர்வழியாகும். அத்தகைய முஸ்லிம்களே நபி வழி நடப்பவர்கள், வெற்றியாளர்கள். மவ்லவிகள், ஆலிம்கள், அரபிமொழி கற்றவர்கள், மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள், மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள் என அகந்தை, ஆணவம், கர்வம், பொறாமை அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடும் புரோகிதர்கள் பின்னால் செல்பவர்கள் மாபெரும் நட்டவாளிகள் என்பதை நாளை மறுமையில் தெரிந்து கொள்வார்கள்.

புரோகிதனும் பொய்யனுமாகிய பீ.ஜை.யின் மூளையற்ற பேச்சை வேதவாக்காக(?) ஏற்று இஸ்லாம், முஸ்லிம் என செயல்பட்டால் போதும் என நம்பிச் செயல்படுகிறவர்களும் முகல்லிதுகளே. அல்லாஹ் “முஸ்லிம்’ என பெயரிடவில்லை. “முஸ்லிமீன்”- முஸ்லிம்கள் என ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கே பெயரிட்டுள்ளான். 41:33 இன்னும் தெளிவாக நபிமார்களின் பிரசார பணியைச் செய்பவர்களே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

இயக்கமே இல்லாமல் தனித்துச் செயல்படுவதும் வழிகேடே. ஜாஹிலியா காலத்து மரணத்தையே சந்திக்க நேரிடும் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் பிரிவு ஜமாஅத்தும் அல்ல; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்தும் அல்ல. அபூ அப்தில்லாஹ்வுக்கு அதில் கடுகளவும் உரிமை இல்லை. முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிப்படையில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத் அதுவேயாகும். நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் “முஸ்லிம்கள்” என்ற பெயருடன் (22:78-முஸ்லிமீன்) ஜமாஅத்துல் முஸ்லிமீனின் இருப்பது கொண்டே வெற்றியடைய முடியும். இதற்கே எண்ணற்ற குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. ஹிஜ்ரி 11க்குப் பிறகு அதாவது நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மனிதக் கற்பனையில் உருவான ஜமாஅத்துகள் அனைத்தும் பித்அத்களே-வழிகேடுகளே-நரகில் கொண்டு சேர்ப்பவையே. இது 7:3, 33:36,66, 67,68 அல்குர்ஆனின் நேரடியான கட்டளைகள் படியும், பித்அத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையின் படியும் உறுதி செய்யப்பட்ட பேருண்மையாகும். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக..

விமர்சனம் : சிலர் மஹல்லா தலைவர்களான முத்தவல்லிகளை அமீர்களாக ஏற்றுச் செயல்படலாம் என்றும், சிலர் பள்ளி இமாம்களை அமீர்களாக ஏற்றுச் செயல்படலாம் என்றும் கூறகிறார்கள். குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் இது சரியா? இப்ராஹீம், திருச்சி.

விளக்கம்: சிலர் அந்தந்த மஹல்லா தலைவர் களை அமீராக ஏற்றுச் செயல்படுங்கள் என்றும், சிலர் அந்தந்த மஹல்லா பள்ளி இமாமை அமீராக ஏற்றுச் செயல்படுங்கள் என்றும் அறிவுரை கூறுவது உண்மைதான். குர்ஆன், ஹதீஸ் வரையறைக்குள் அவர்கள் செயல்பட்டால் நிச்சயம் அவர்களை அமீராக ஏற்று அவர்களின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எமக்கும் இல்லை.

ஆனால் பள்ளிகளில் இமாம்கள், முத்தவல்லிகள் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரிவிலேயே இருக்கிறார்கள். தில்க்கல் பிர்க்கா- அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் விலகிவிடுங்கள்; வெளியேறி விடுங்கள்; என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களை விட்டும் விலகும் கட்டாயத்திலேயே உண்மையான நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும் பள்ளி இமாம்கள் கூலிக்கு தொழ வைப்பவர்களாகவே இருக்கிறார்கள். 36:21 இறைக் கட்டளை கூலி வாங்கும் அவர்கள் நேர்வழியில் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே நேர்வழி நடக்க விரும்பும் ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளன் இன்றிருக்கும் மஹல்லா முத்தவல்லியையோ, பள்ளி இமாமையோ அமீராக ஏற்று அவர்களின் கீழ் செயல்பட முடியாது. அது ஒரு போதும் நேர்வழியாக இருக்காது.

ஆக ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் இயக்கமே வேண்டாம் என்று தனியாகச் செயல்படுவதும் நேர்வழி இல்லை; நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் மனிதக் கற்பனையில் உருவான பிரிவு-மத்ஹப்-இயக்கத் தலைவர்களை அமீராக ஏற்று அவர்களின் கீழ் செயல்படுவதும் நேர்வழி இல்லை. அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 59:7, 21:92,93, 23:52,53,54,55,56, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து 2:38,39 இறைவாக்குகள் கூறுவதுபோல் குஃப்ரிலாகி நாளை மறுமையில் நரகம் புகச் செய்யும் கொடிய பாவமான செயல்கள் என்பதை அறிந்து அந்த நிலையிலிருந்து தவ்பா செய்து மீள வேண்டும்.

ஈடேற்றத்திற்கு, மறுமை வெற்றிக்குரிய ஒரே வழி அல்லாஹ்வின் எண்ணற்ற கட்டளைகள் படியும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் மற்றும் கட்டளைப்படி தத்தம் பகுதிகளில் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற உலகளாவிய பேரியக்கத்தில் தங்களுக்குள் ஓர் அமீரைத் தெரிவு செய்து அவரின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒற்றுமையாகச் செயல்பட ஒவ்வொரு பகுதியினரும் தயாராகி விட்டால், இப்படித் தயாரான அனைத்துப் பகுதியினரும் ஒன்றிணைந்து ஓர் அமீரை தங்களுக்குள் தெரிவு செய்து செயல்படத் தயாராகி விட முடியும். இப்படித்தான் முஸ்லிம்களுக்குள் ஒரே தலைமை ஏற்பட்டு 3:103 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

அதற்கு மாறாக, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ம் ஒரு பிரிவு ஜமாஅத்துதான், அபூ அப்தில்லாஹ் வின் ஜமாஅத் என பொய்யன் பீ.ஜை.யின் அறிவீனமான கூற்றை வேதவாக்காக(?) ஏற்று “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஜமாஅத்தை வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், ஷைத்தானின் தவறான உபதேசத்தால் அதில் மயங்கி, அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பார்த்து நிராகரித்த ஆதம்(அலை) அவர்களின், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கிய தவறான வழியை நேர்வழியாகக் கருதி செயல்படுகிறவர்களாக மட்டுமே இருக்க முடியும். இதையும் வல்லமை மிக்க அல்லாஹ் 17:41, 25:30, 41:17போன்ற இறைவாக்குகளில் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறான்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி

விளக்கம்: எண்ணற்ற சகோதரர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான சிந்தனைக்கு அடிமைப் பட்டிருப்பதால் அதை விரிவாக விளக்குவது நமக்கு அவசியமாக இருக்கிறது. ஓர் அமீரின் கீழ் இயக்கமாக செயல்படுவது வழிகேடு; குர்ஆன், ஹதீஸுக்கு முரணானது என்ற நச்சுக் கருத்தால், பொய்யன் பீ.ஜை.யின் தொடர் உபதேசத்தால் பலர் மூளை சலவைச் செய்யப்பட்டுள்ளனர். அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்படச் சொல்கிறார். அமீர் என்றால் ஆட்சி அதிகாரமுள்ளவராக இருக்க வேண்டும் போன்ற நச்சுக் கருத்துக்களை அவையாகும். இவை இரண்டுமே ஹிமாலயத் தவறுகளாகும்.

அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று என்றுமே சொன்னதில்லை. அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற உலகளாவிய பேரியக்கம் இருக்கும் நிலையில், ஜாக், ததஜ, இதஜ போன்ற மனிதக் கற்பனைகளில் உருவான ஒரு குறிப்பிட்ட எல்லைக் குட்பட்ட குட்டி, குட்டி இயக்கங்களில் செயல் படாதீர்கள். அப்படிப்பட்ட குட்டி குட்டி இயக் கங்களான பிரிவுகளை விட்டும் வெளியேறி விடுங்கள் என நபி(ஸல்) கட்டளையிட்டு ள்ளதையே (தில்க்கல் பிர்க்கா) மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கிறோம். இதைப் பொய்யன் பீ.ஜை.யும் அந்நஜாத் ஆகஸ்ட் 1986 பக்கம் 12-ல் ஒரு விமர்சகர் “உங்கள் இயக்கம்” என்று விமர்சித்ததை மறுத்து “எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு எழுதியவர்தான்.

1986-ல் அப்படி எழுதியவர்தான் 1987லிலே பல பல்ட்டிகள் அடித்து புதிதாக “ஜாக்’ மனிதக் கற்பனை இயக்கத்தை உருவாக்கியவர் இன்று 2010 வரை பல மனிதக் கற்பனை இயக்கங்கள் உருவாகக் காரணகர்த்தாவாக இருந்து வருகிறார். அந்தப் பொய்யன் “ஜமாஅத்துல் முஸ்லி மீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்; அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்து தான் என்று கூறி வருவதை பல சகோதரர்களும் கண்மூடி ஏற்று, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு, இஸ்லாம், முஸ்லிம் என ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்பட வேண்டும் என வழிகேட்டில் செல்கிறார்கள். ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்படுவதும் வழிகேடு, மனிதக் கற்பனைகளில் உருவான பிரிவு ஜமாஅத்துகளில் செயல்படுவதும் வழிகேடு என்று குர்ஆன் ஹதீஸ் கூறுவதையே எடுத்துத் தருகிறோம்.

அல்குர்ஆன், “முஸ்லிம்’ எனத் தனித்துச் செயல்படச் சொல்லவில்லை. “முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன், முஸ்லிம் ஜமாஅத்தில் உள்ளவன் என்று கூறவே கட்டளையிடுகிறது. இந்த உண்மையை 3:102,103, 6:163, 10:72, 90, 22:78, 27:91, 39:12, 41:33, 46:15, 51:36 போன்ற இறைவாக்குகளை நடுநிலையோடு நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். இந்த இறைக்கட்டளைகள் அனைத்தும் முஸ்லிம் களில் ஒருவனாக அதாவது ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்தில் ஒருவனாக இருந்து செயல்படக் கட்டளையிடுகின்றனவே அல்லாமல் தனித்து “முஸ்லிம்’ என்ற நிலையில் செயல்படக் கட்டளையிடவில்லை என்பதை விளங்க முடியும்.

பொய்யன் பீ.ஜை. 1987-ல் நம்மைவிட்டுப் பிரிந்து சென்று “ஜாக்’ பிரிவு ஜமாஅத்தை அமைத்துச் செயல்படும் போது அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண், வழிகேடு என நாம் எழுதும்போது, “ஜாக்’ வழிகேடு அல்ல; நேர்வழி என நிலை நாட்ட நம்மோடு நான்கு அமர்வுகளில் விவாதித்தார். அந்த அமர்வுகளில் அல்குர் ஆன் நேரடிக் கருத்தை மறுத்து சுய விளக்கங்கள் கொடுத்து தனது வழிகேட்டை நேர்வழி என நிலை நாட்ட முற்பட்டார். “”ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன்” என்ற 22:78-ன் அர்த்தத்தை அனர்த்தமாக்கினார். பிறை பற்றிய ஹதீஸில் “­ஹிதூ’ என்ற அரபி பதத்தை சாட்சி சொன்னார்கள் என்று கூறாமல் கூறினார்கள், சொன்னார்கள் என்று இருட்டடிப்புச் செய்தது போல், இங்கும் “உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்” என்பதை உங்களை முஸ்லிம்கள் என சொன்னான்-கூறினான் என இருட்டடிப்புச் செய்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு பெயரிட்டான் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டு முஸ்லிம்கள் என்பதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். முஸ்லிம்கள் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்களின் கூட்டமைப்பு என்றும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என விதண்டாவாதம் செய்தார். உடனே நாம் உங்களின் பெயர் என்ன என்று கேட்டோம். உடனே ஜைனுல் ஆபிதீன் என்றார். ஏன் உங்கள் பெயரை தமிழில் மொழி பெயர்க்காமல் அரபியிலேயே சொல்கிறீர்கள் என்று கேட்டோம். பீ.ஜை. திகைத்துப் போய் அது பெயர் என்றார். உடனேயே உங்கள் பெற்றோர் உங்களுக்கு சூட்டிய பெயரைத் தமிழில் சொல்லக் கூடாது; அல்லாஹ் இந்த சமுதாயத்திற்குச் சூட்டிய “முஸ்லிமீன்” என்ற பெயரை தமிழ்ப்படுத்த வேண்டும் என வாதிடுகிறீர்களே! இது உங்களுக்கே சரியாகத் தெரிகிறதா? என்று கேட்டோம்.

இப்படிப் பல விதண்டாவாதங்களைச் செய்து தோற்றுப் போய் இறுதியில் “ஜாக்’ எனப் பெயரிட்டுள்ளது தவறுதான்; இனி எங்கள் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் “ஜாக்’ என வெளியிடமாட்டோம். அமீரிடமும் (றீ.லு.) இதுபற்றிச் சொல்லிவிட்டு அடுத்த அமர்வில் இறுதி முடிவு எடுப்போம் என்று சொல்லிச் சென்றவர்தான் கடந்த 22 வருடங்களாக வருகிறார். இப்படி அவர் சொல்லும்போது சகோதரர் ஹாமித் பக்ரியும் அவருடன் இருந்தார். அவரே சாட்சி.

அல்லாஹ் சூட்டிய பெயரான “” முஸ்லிமீன்” “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பெயர் அல்லாத வேறு பெயர் இல்லை; கூடாது என்று 1988-ல் ஒப்புக்கொண்டவர் தான் கடந்த 22 வருடங்களில் பல பிரிவுப் பெயர்கள் ஏற்பட காரணமா யிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்யனின் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”-ம் ஒரு பிரிவுப் பெயர்தான்; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக முடியும்; மற்றவர்கள் அமீர் என்று சொல்வது பித்தலாட்டம் என்ற மூளையற்ற முழக்கத்தை அப்படியே வேதவாக்காக (?) ஏற்றுக் கொண்டு பிரசுரம் வெளியிட்ட சகோதரர் போன்றவர்கள் இப்படிக் கூறித்திரிவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

4:59 இறைவாக்கில் “வஅத்தீவுர் ரசூல வ உலில் அம்ரி மின்கும்” என்று இணைத்துக் கூறி இருப்பதே சமுதாய ஒற்றமையைக் கட்டிக் காக்க அமீருக்கு வழிப்படுவது அல்லாஹ்வின் கட்டளை;-கண்டிப்பாக எடுத்து நடப்பது கடமை என்பதை உணர்த்துகிறது. மேலும் இக்கட்டளையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் இதோ!

காய்ந்த திராட்சை போன்ற தலையை யுடைய அபிசீனிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக இருந்தாலும், நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள். கட்டுப்படுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அனஸ்(ரழி), புகாரீ.

அல்லாஹ்வின் நெறிநூலின்படி உங்களை வழி நடத்திச் செல்லும், கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவருக்கு செவிசாயுங்கள். கட்டுப் படுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். உம்முல் ஹுசைன்(ரழி) முஸ்லிம்.

பாவமான காரியத்தை ஏவாதவரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்கு செவிசாய்த்து கட்டுப்படுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ கட்டுப்படுவதோ கூடாது அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

அமீருக்குக் கட்டுப்படுபவர் அல்லாஹ்வுக்கே கட்டப்பட்டவராவார் என்பது நபி மொழி. புகாரீ.

எங்களது விருப்பிலும் வெறுப்பிலும் எங்களது கஷ்டமான சூழ்நிலையிலும் இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் அமீருக்கு செவிசாய்ப்போம்-கட்டுப்படுவோம் என்றும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாதவரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போடமாட்டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உடன்படிக்கை செய்தோம்.

உப்பாதாபின் சாமித்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

யார் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் யார் அமீரை விட்டு ஒரு சான் அளவு வெளியேறிவிட்டாலும் அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுவார் என இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ.

பொய்யன் பீ.ஜை.யின் சுய விளக்கத்தைப் புறக்கணித்துவிட்டு நடுநிலையோடு 4:59 இறைவாக்கையும் மேலே எழுதப்பட்டுள்ள ஹதீஸ்களையும் படித்து விளங்குகிறவர்கள் 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தாலும் ஆட்சி அதிகாரம் இல்லாத அமீராக இருந்தாலும் மார்க்கத்திற்கு உட்பட்டு அவருக்கு வழிப்பட்டு நடப்பது கட்டாயக் கடமை என்பதை விளங்க முடியும்.

ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தால் மட்டும் அவருக்கு வழிப்படவேண்டும் என்ற பீ.ஜை.யின் சுய விளக்கம் சரி என்றால், குர்ஆனும், ஹதீஸ்களும் அந்த அமீருக்கு வழிப்படுவதை இந்த அளவு வலியுறுத்தத் தேவையே இல்லை. காரணம் அமீரது ஆட்சி அதிகாரத்திலுள்ள படைகளே அவர்களை பாவமான காரியங்களிலும் வழிப்பட வைத்து விடும். இந்த எச்சரிக்கைகள் தேவையே இல்லை.

இந்த எச்சரிக்கைகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் இல்லாத எண்ணற்ற நபிமார்களின் தலைமையில் நல்லடியார்கள் ஒன்றுபட்டிருந்தது போல், நபி (ஸல்) அவர்களின் ஆட்சி அதிகாரம் இல்லாத மக்கா வாழ்க்கையின் போது அவர்களின் தலைமையில் ஒன்றுபட்டிருந்தது போல், ஆட்சி அதிகாரம் இல்லாத அமீர்களுக்கு வழிப்பட்டு நடப்பதையே குறிப்பிட்டுக் கூறுகின்றன. நல்லாட்சி நடைபெறுவதற்கு மட்டுமே சமூக ஒற்றுமை என்ற பொய்யன் பீ.ஜை.யின் சுயக் கூற்று பெருந்தவறு. எந்த நிலையிலும் சமூக ஒற்றுமை மிகமிகப் பிரதானம் என்பதே குர்ஆன், ஹதீஸ் கட்டளை.

இதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. மூவர் பயணத்தில் புறப்பட்டாலும் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அபூதாவூது)

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) கூறினார்கள். இதை அபூ சலமா நாஃபிவு இடம் கூறியபோது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார். (அபூதாவூது)

மூவர் கொண்ட ஒரு பிரயாணக் குழுவில் அமீராக இருப்பவரிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமா? இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வளவு தெளிவாக இருக்கும் நபிவழியை மறுக்கும் நோக்கத்துடன் பொய்யன் பீ.ஜை. இதற்குக் கொடுக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?

பிரயாணத்தில் தனியாகத் தொழுது விடாமல் அம்மூவரில் ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்றே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள் என்பதே அவரது மூளையற்ற சுய விளக்கம். பிரயாணத்தில் ஜும்ஆவும் கடமையில்லை. ஜமாஅத்தாகத் தொழுவதும் கடமையில்லை. நான்கு ரகாஅத்துகளை இரண்டாகச் சுருக்கியும், ளுஹர் அஸர் இரண்டையும் 2+2=4 என சேர்த்தும், மஃறிபு இஷா இரண்டையும் 3+2=5 என சேர்த்தும் தொழுவதற்குக் கட்டளையிட்ட நபி(ஸல்), பிரயாணத்தில் தனித்துத் தொழுது விடாமல் ஒருவர் இமாமத் செய்யட்டும் என கட்டளையிட்டிருப்பார்களா? என்ற அற்பமான அறிவும் பொய்யன் பீ.ஜைக்கு இல்லை. இதில் இன்னும் பெரிய அறிவீனம்! மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய வேண்டுமாம். இதைவிட அறிவீனம் உண்டா? மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். மூவரோ இருவரோ நிச்சயமாக இமாமத் செய்ய முடியாது. ஆயிரம் பேர் இருந்தாலும் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். இந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பிரயாணத்தில் மூவரில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளதாக நபி(ஸல்) மீது அப்பட்டமான ஒரு பெரும் பொய்யைக் கூறக்கூடியவர், என்மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்ளட்டும் என்ற பல நபிதோழர்கள் மூலம் அறிவிக்கப்படும் மிகமிக ஆதாரபூர்வமான நபியின் எச்சரிக்கைப்படி தன்னுடைய இருப் பிடத்தை எங்கே தேடிக் கொள்ள நேரிடும் என்பதை அறிய முடியாத மூடரை அறிஞராக ஏற்றிருப்பவர்கள் சுயசிந்தனையுடையவர்களாக இருக்க முடியுமா? (பார்க்க புகாரீ 1291)

பிரயாணத்தில்தான் மூவராக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்படாத ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி முரண்பட நேரிடும். உதாரணமாக ஒருவர் பேருந்தில் செல்லலாம் என்பார்; மற்றொருவர் தொடர் வண்டியில் செல்லலாம் என்பார்; மூன்றாமவர் தனியாக சொகுசுந்தில் செல்லலாம் என்பார். இதில் எது ஒன்றும் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லை. இங்குதான் ஒற்றுமை குலையாமல் ஒன்றுபட்டிருக்க ஓர் அமீர் தேவைப்படுகிறார். இதுவே நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும். எந்த நோக்கத்திற்காக என்ன பணிக்காக ஒருவர் அமீராகத் தெரிவு செய்யப்படுகிறாரோ, அந்தப் பணிக்கான அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. இதையே 4:59 இறைவாக்கு “அதிகாரம் வகிப்பவர்” எனக் கூறுகிறது.

மற்றபடி ஆட்சி அதிகாரம் உள்ளவர் மட்டுமே அமீராக முடியும் என்பது பொய்யன் பீ.ஜை.யின் குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட சுய கருத்தேயாகும். மேலும் இந்த 4:59 இறைவாக்கின் பிற்பகுதி அமீருக்கு வழிப்படுவதெல்லாம் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டு மட்டுமே; மார்க்க முரணான ஒரு உத்திரவை அமீர் கட்டளையிடுவாரானால் அதற்கு வழிப் படுவது கூடாது என்பதையும் தெளிவாக வலியுறுத்துகிறது. குர்ஆன் வசனமோ, ஆதாரபூர்வமான ஹதீசோ எடுத்துக் காட்டப் பட்டால், “சமீஃனா வ அதஃனா” “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்” என்று உடனடியாக அமீராக இருந்தாலும், அவரை அமீராக ஏற்று செயல்படுகிறவர்களாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் கட்டளைக்கு வழிப்பட வேண்டும். அதற்கு மாறாக பொய்யன் பீ.ஜை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சில குர்ஆன் வசனங்கள் இவர்களுக்கு சாதகமாக இருந்தால் போதுமா? என்று தெனாவட்டாக எழுதியதுபோல், இந்தச் சகோதரரும் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐயும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து …..” என தெனா வட்டாக எழுதியுள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு அல்குர்ஆன் 17:41 கூறுவது போல்,

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைப் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்¼ளாம். எனினும் (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை. (17:41) என்று, தவறான வழியில் செல்பவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது. ஆதம்(அலை) அவர்களை ஷைத்தான் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய வைத்தது போல், இவர்களையும் ஷைத்தானின் ஏஜண்டுகளான பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை நிராகரிக்கச் செய்கிறார்கள்.

நடுநிலையோடு குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் படித்து விளங்குகிறவர்கள் தனித்துச் செயல்படுவதும் தவறு; வழிகேடு; ஜமாஅத்தாகத்தான் செயல் பட வேண்டும்; அதுவும் நபி(ஸல்) நடைமுறைப் படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீனில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தங்களுக்குள் ஓர் அமீரை தெரிவு செய்து அவரின் கீழ் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாகச் செயல் பட வேண்டும் என்பதை விளங்க முடியும்.

அப்படி ஒரு ஜமாஅத் இப்போது இருக்கிறதா? இல்லையே! என இப்புரோகிதர் திசை திருப்புகிறார். 25 வருடங்களுக்கு முன்னர் ஹனஃபி தொழுகை, ஷாஃபி தொழுகை என்று தான் தொழுது கொண்டிருந்தோம். நபி வழித் தொழுகை அன்று இருக்கவில்லை. நடைமுறையில் இல்லாமல் இப்புரோகிதர்களால் மறைக்கப்பட்டிருந்தது. இன்று நபிவழித் தொழுகையை எப்படி ஹயாத்தாக்கி இருக்கிறோம்? இதேபோல் தான் நபிவழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒன்றுபட்ட ஜமாஅத்தை இப்புரோகிதர்கள் பல பிரிவு ஜமாஅத்துகளை கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இல்லாமலாக்கி மறைத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நபியின் வருகையின் போதும் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது நடைமுறையில் இல்லாமலிருந்தது. பல கடவுள்கள் வணக்கமே காணப்பட்டது. பல கடவுள்கள் வணக்கம் பெரும் தவறு; ஓரிறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று நபிமார்கள் போதித்தவுடன் பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கடவுளை மட்டும் வணங்குவது இன்று நடை முறையில் இல்லையே! நம்முன்னோர்களிடமும் இப்படிக் கேள்விப்பட்டதில்லையே (7:70,11:62,87,14:10, 28:36) என்று கூறியே நபிமார்களை நிராகரித்தார்கள். அந்த அளவு இப்புரோகிதர்கள் ஷைத்தானின் துணையுடன் ஆதத்தின் சந்ததிகளை ஓரிறை வணக்கத்தை விட்டு, பல கடவுள்கள் வணக்கத்தில் தடம் புரளச் செய்திருந்தார்கள். அதே போல் தான் புரோகிதனான பொய்யன் பீ.ஜை. நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு முஸ்லிம் மதப் புரோகிதர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் பேரியக்கத்தை விட்டு மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள், அமைப்புகள் போன்ற எண்ணற்றப் பிரிவுகளில் தடம் புரளச் செய்துள்ளனர். நபிவழித் தொழுகையை ஹயாதாக்கியது போல் நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐயும் இப்போது ஹயாத்தாக்கி முஸ்லிம் சமுதாயத்தை ஓரணியில் ஒன்று திரட்ட முடியாதா?

கேவலம்! இவர்களாகக் கற்பனை செய்து உருவாக்கிக் கொண்ட குட்டி, குட்டி இயக்கத்தின் பெயரால் கிளைத் தலைவர், வட்டத் தலைவர், மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என உப தலைவர்களை அமைத்துக் கொண்டு, அந்தக் குட்டி குட்டி இயக்கத் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயல்பட முடிகிறதென்றால், அது சாத்தியம் என்றால், உலகளாவிய பேரியக்கமான, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, நபி (ஸல்)யால் நடைமுறைப்படுத்திக் காட்டப்பட்ட “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ல் நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என உப அமீர்களைத் தெரிவு செய்து செயல்பட முடியாதா? ஆனால் ஒரு வித்தியாசம். இவர்களது கற்பனையில் உருவான புதிய இயக்கங்களில் முதலில் இயக்கத் தலைவர் அதன் பின்னரே, மாநில, மாவட்ட, வட்ட, ஊர் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்புரோகிதர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ள ஜமாஅத்துல் முஸ்லிமீனில் குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அந்தந்த ஊர்களில், ஓர் அமீரின் கீழ் கட்டுப்பட்டு செயல்படும் ஜமாஅத்கள் உருவாகிய பின்னர் வட்டம், மாவட்டம், மாநிலம் என அமீர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் இருக்கிறோம்.

இந்த முயற்சி சரிவராது, நிறைவேறாது, கடினமான பணி என ஷைத்தான் பயமுறுத்துவான். ஆவதும், ஆவாததும் நம் கையில் இல்லை; அல்லாஹ் கையில் இருக்கிறது. நமது கடமை முயற்சி செய்வது மட்டும்தான் என்பதை விளங்கி முழு மூச்சாகச் செயல்பட்டால், நிச்சயம் அதற்குரிய பலன் உண்டு. எத்தனையோ நபிமார்கள் பின்பற்றுகிறவர்கள் ஒருவர்கூட இல்லாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் நுழைவார்கள் என ஹதீஸ்கள் வாயிலாக நாம் அறியும் போது நமக்கென்ன தயக்கம்? முழுமூச்சாக முயல்வோம். முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம்.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட கூலிக்கு மாரடிக்கும் இப்புரோகிதர்களை விட்டும் மக்களை விடுவித்து விட்டால், மக்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து சிந்தித்து விளங்க ஆரம்பித்துவிட்டால் அது சாத்தியமாகலாம். ஒவ்வொரு நபியும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். இறைவனின் இறுதி இறைத் தூதரும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களான தாருந்நத்வா உலமாக்களிடமிருந்தும், அவர்களின் தலைவனான அவர்களால் மதிப்புடன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அபூ ஜஹீலிடமிருந்தும் மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். அப்புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் சத்தியத்தை ஏற்று அதன்படி நடக்க முன் வந்தார்கள்.

இந்த நபிவழியைப் பின்பற்றித்தான் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இன்றைய ஜமாஅத்துல் உலமா மற்றும் அதைச் சார்ந்தவர்களையும், நாங்கள் தான் அரபி மொழி கற்ற ஆலிம்கள், எங்களுக்கே மார்க்கம் விளங்கும், மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசும் அபூ ஜஹீல் வாரிசுகளைக் கடுமையாகச் சாடி அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி வருகிறோம். பெருமை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்ற உண்மையை அறியாது ஆணவம் பேசி, அணுவத்தனை ஆணவம் பேசுபவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்ற நபியவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? ஜாஹில்களாக இருக்க முடியுமா? என முடிவுக்கு வாருங்கள்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!
விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விளக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி.

விளக்கம்: பொய்யன் பீ.ஜை.யால் இப்படியொரு தவறான கருத்து விதைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் எந்த ஜமாஅத்திலும் இல்லை; இஸ்லாம், முஸ்லிம் என்ற நிலையிலேயே செயல்பட வேண்டும் என்று சிலர் கூறி வருவதால், இதைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. பிரசுரம் வெளியிட்ட சகோதரர் அந்நஜாத்தை நுனிப் புல் மேயாமல் முழுக்கவனத்துடன் படித்து வந்தால் இப்படியொரு அபத்தமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். 1986 லிருந்து இன்று வரை ஒரு சந்தர்ப்பத்தில் கூட நான் கூறுவதுதான் நேர்வழி; என்னைப் பின்பற்றுகிறவர்கள் தான் நேர்வழியில் இருக்கிறார்கள். எனது ஜமாஅத்து தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒருபோதும் நான் கூறியதில்லை. அப்படி ஒரு வழிகெட்ட போதனையை நான் கூறி இருந்தால், ஷைத்தானின் துணையுடன் ஒரு பெருங்கூட்டத்தை என்னாலும் சேர்த்திருக்க முடியும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சூட்டிய பெயர் “முஸ்லிமீன்”, நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” முஸ்லிம்கள் அனைவரும் அதில் போய் இணைய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறேன். ஆயினும் 17:41ல் அல்லாஹ் கூறுவதுபோல் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களுக்கு இது வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.

பீ.ஜை. அந்நஜாத்தின் ஆசிரியராக இருந்த பதினைந்து(15) மாதங்களிலும் “”அந்நஜாத்தையும் தக்லீது செய்யாதீர்கள்; குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து அதன்படி நடங்கள்” என்று பின் அட்டையில் வெளியிட மறுத்து வந்தார். ஆனல் நான் அந்நஜாத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றதிலிருந்து அந்நஜாத்தைக் கண்டிப்பாக தக்லீது செய்யாதீர்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைப் பார்த்தே எடுத்து நடங்கள் என்று தொடர்ந்து எழுதி வருவதும் சகோதரரின் கண்களில் படவில்லை போலும்.

“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்ய வேண்டும் என சில சகோதரர்கள் வற்புறுத்திய போதும், மற்ற இயக்கத்தினரைப் போல் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ நாம் பதிவு செய்து சொந்தம் கொண்டாட முடியாது. அது முஸ்லிம்கள் அனைவருக்குமாக அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனது இறுதித்தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் என்று நான் தெளிவுபடுத்திய பின்னரும், ஒரு சிலர் அதை ஏற்காமல் நம்மை விட்டுப் பிரிந்து சென்று அவர்களாக “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்து கொண்டு, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ரிஜிஸ்ட்டர்ட் ஜமாஅத் என்று செயல்பட்டு, பின்னர் அது காணாமல் போனதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார்.

அப்போது வேறு சில சகோதரரர்கள் நீங்கள் தான் முதலில் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று ஆரம்பித்தீர்கள். எனவே அவர்களை எதிர்த்து வழக்குத் தொடருங்கள் என வற்புறுத்திய சமயத்திலும், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” நான் ஆரம்பித்த ஜமாஅத் அல்ல; இறுதி இறைத்தூதர் முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற ஜமாஅத். எனக்கு உரிமை இல்லாத “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ உரிமை கோரி நான் வழக்குத் தொடர முடியாது என்று கூறி மறுத்துவிட்டதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார் போலும். ”தக்லீத் வலையை கிழித்தெறிவோம்” என முழக்கமிடும் சகோதரர் பொய்யன் உதிர்த்தவற்றை அப்படியே தக்லீது செய்வதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்தான் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்துதான் என்று வாந்தியெடுத்ததை அப்படியே விழுங்கியவராக முகல்லிதாக சகோதரர் இப்படி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.

அதுபோல் “அமீர்” என்பவர் ஆட்சி அதிகாரம் உள்ளவர் என்று உளறியதையும் அப்படியே தக்லீது செய்து தக்லீது மறுப்புப் பிரசுரம் வெளியிட்டுள்ளார். அவருக்கும் அவரைப் போன்ற அறிவீனமான சிந்தனையுடையவர்களுக்கும் விளக்கம் கொடுப்பது நமது கடமை என்பதால் அதைத் தெளிவு படுத்துகிறோம்.

அல்குர்ஆன் அந்நிசா 4:59 இறைக் கட்டளை “அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; அவனது தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவருக்கும் வழிப்படுங்கள்” எனத் தெளிவாக நேரடியாகக் கட்டளையிடுகிறது. உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு 2:285, 4:46-ன் பிற்பகுதி, 5:7, 24:51-ல் காணப்படும் எச்சரிக்கைப்படி “கேட்டோம். வழிப்பட்டோம்” என்று அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். பொய்யனும், அவரை தக்லீது செய்கிறவர்களுமே 2:93, 4:46 முற்பகுதியில் காணப்படுவது போல், சுய விளக்கம் கூறி கேட்டோம் மாறு செய்வோம்” என்று செயல் பட முடியும்.

இந்த அடிப்படையில் தான் அந்த பொய்யன் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக முடியும் எனப் பிதற்றுகிறார். சகோதரரும் அதை அப்படியே ஏற்று வெளிப்படுத்தியுள்ளார். மற்றபடி சிறிது சிந்தித்தாலும் அல்லாஹ்வால் அவனது தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆட்சி அதிகாரம் இருந்ததா? விரல்விட்டும் எண்ணும் அளவில் ஒரு சிலருக்கு மட்டும்தானே ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டது. அப்படியானால் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படாத பெரும்பாலான நபிமார்கள் தங்களின் சமூகத்திற்குத் தலைமை தாங்கவில்லையா? அமீராக இருக்கவில்லையா? அவர்களை நபியாக ஏற்றவர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லையா? சில நபிமார்கள் பின்னால் வெகுசிலர் தானே அணி வகுத்தார்கள். அவர்களை அல்லாஹ் நேர்வழி நடப்பவர்களாக ஏற்கவில்லையா? என்று சிந்தித்தாலும், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த 13 வருடங்களாக ஆட்சி அதிகாரம் இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். அப்போது நபி தோழர்கள் அவர்களை அமீராக ஏற்று ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருக்க வில்லையா? என்று சிந்தித்தாலும் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக இருக்க முடியும் என்ற வாதம் எந்த அளவு அடி முட்டாள்த்தனமான வாதம் என்பதை விளங்க முடியும்.

இந்த பொய்யன் போன்றோர் தான் 49:16-ல் அல்லாஹ் குத்திக்காட்டுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்பட்டு 4:59-ல் அல்லாஹ் அதிகாரம் பெற்றவர்-அமீர் என்று சொல்லியிருப்பதை திரித்து வளைத்து ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீர்கள் என பிதற்ற முடியும். அப்படி மூளையில்லாமல் பிதற்றி 42:21 அல்லாஹ்வின் எச்சரிக்கைப்படி அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகும் கொடிய ஷிர்க்குடைய, அல்லாஹ் மன்னிக்காத பெரும் குற்றத்தைச் செய்ய முடியும். இதற்கு சகோதரரும் துணை போயிருப்பது தான் நமக்கு வேதனையளிக்கிறது. 1999 மார்ச் அல்முமீனில் பொய்யன் பீ.ஜை.யின் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையிலுள்ள அபத்தங்களையும், உளறல்களையும் 2008 மே அந்நஜாத் இதழில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். அந்த இதழை சகோதரர் முறையாக-கவனமாகப் படித்து விளங்கி இருந்தால் இப்படி ஒரு அறிவீனமான கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். அந்த இதழிலும் அதன் 3-ம் பக்கத்தில் அந்நஜாத்தில் உள்ளதை மட்டும் படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனில் பார்க்காமல் விடுவதால், இரண்டு தவறுகள் ஏற்பட்ட வாய்ப்புண்டு. ஒன்று அந்நஜாத், அபூ அப்தில்லாஹ் என்று தனி மனித வழிபாட்டிற்கு அது வழிவகுக்கும்; அல்லது இரண்டாவது அல்குர்ஆனின் வசனங்களையும் மனிதக் கருத்தாக எண்ணி புறக்கணிக்கும் நிலை (பார்க்க 25:30) உருவாகும். இரண்டுமே பெரும் ஆபத்தை விளைவிப்பவையே! அல்குர் ஆனுடன் நேரடித் தொடர்பை அவசியம் ஏற்படுத்திக் கொள்வோமாக! என்று தெளிவாக எழுதியுள்ளோம். இந்த நிலையில் சகோதரர் தனது அறிவை யாரிடம் கடன் கொடுத்தார்?

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!
நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

அபூ அப்தில்லாஹ்

ஜனவரி தொடர் : 9

உண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையை-சத்தியத்தை – நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகச் சரியாக அறிந்து அந்த நேர்வழியில் நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.

வணங்கி வழிபடும் சிலையும் கல்லுதான், மிதிபடும் படியும் கல்லுதான். கல்லை தெய்வமாக கற்பிப்பவன் முட்டாள், அயோக்கியன்; கல்லை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று முழக்கமிட்டு வரும் நீங்கள், சீர்திருத்தவாதிகளாக நம்பியவர்களுக்கு சிலைகள் வடித்து மாலை மரியாதை செய்து வழிபட்டு வருவது எவ்வகையைச் சார்ந்தது என்று கூறுவீர்களா? இக்கற்சிலைகள் தான் இன்னும் ஐய்யாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகளாக புரோகிதர்களால் உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளங்க முடியாத நீங்கள், உங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்வது சரியா? இப்படி ஞாபகார்த்தமாக, மரியாதை நிமித்தம் வடிக்கப்பட்ட பல கற்சிலைகள் தான் இன்று சாமி சிலைகளாகி வணங்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதை அல்குர்ஆனின் நூஹ் (நோவா) 71:23 இறைவாக்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரீயில் பதிவான செய்தியில் நூஹ் இறைத்தூதரின் இனத்தவரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள்-நல்லவர்கள் இறந்தபோது ஷைத்தான் “இவர்கள் இருந்த இடங்களில் ஒவ்வொரு சிலையை நட்டு அதற்கு அவர்களின் பெயரிடுங்கள் என்று அவர்களின் இனத்தவர்களைத் தூண்டினான். அவர்களும் அவ்விதமே செய்தனர். ஆனால் அக்காலை அவற்றிற்கு மாலை மரியாதை செய்யப்பட்டதே தவிர அவை வணங்கப்படவில்லை. அக்காலத்தவர் இறந்து விட்ட பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் மறைந்து அக்கற்சிலைகள் தெய்வங்களாக வணங்கி வழிபடக் காரணமாயின.

இதே நிலையில்தான் இன்றைய போலி பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர் என்று கூறினால் அதில் தவறு உண்டா? அன்று நோவா இறைத்தூதரின் இனத்தவர்களை ஷைத்தான் வழி கெடுத்தது போல், இன்று இந்தப் போலி பகுத்தறிவாளர்களை ஷைத்தான் வழிகெடுக்கிறான் என்று கூறினால் அது தவறா?

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோர் மறைந்து அரை நூற்றாண்டு கழியு முன்னே இதய தெய்வம், கண்கண்ட தெய்வம் என்று அவர்களின் உருவச் சிலைகள் இன்று தெய்வ அந்தஸ்து பெற்று மக்கள் வணங்கி, வழிபடுவதையும் பார்க்க முடிகிறது. ஆம்! 1431 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக விளக்கிய ஒரு பெரும் வழிகேட்டை தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்பவர்களின் பகுத்தறிவின் லட்சணத்தை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள். அதற்கு மாறாக இறைவனின் இறுதித் தூதர் மறைந்து இன்றைக்கு 1420 ஆண்டுகள் ஆகியும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரின் சிலை இருக்கிறதா? அல்லது உலகின் எந்த மூலை முடுக்கிலாவது அவரது சிலை இருந்து காட்ட முடியுமா? அவரைப் போல் சொன்னதை செய்தவரையும், செய்ததைச் சொன்னவரையும் காட்ட முடியுமா? அவரால் சொல்லப்படாமல், செய்து காட்டப்படாமல் விடப்பட்ட ஓர் அற்ப சீர்திருத்தத்தையும் அதன் பின்னர் வேறு எந்த பெரியராவது, அறிஞராவது சுட்டிக்காட்டி செய்ததை இப்போலி பகுத்தறிவுவாதிகளால் காட்ட முடியுமா? நிச்சயமாகக் காட்ட முடியாது. அந்த சீர்திருத்தச் செம்மல் தான் ஐம்புலன்களுக்கு அடைபடாத, அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் தன்னந்தனியனான, இணை துணை இல்லாத ஓரிறைவன் இருக்கிறான் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

அது மட்டுமா? நான் அந்த இறைவனின் அடிமையும் தூதரும் ஆவேன் என்றே கூறினார்கள். அவருக்கு முன்னாலும் ஆதம், நோவா, ஏப்ரஹாம், ஜாகப், ஜோசஃப், மோஸஸ், ஜீஸஸ் போன்ற எண்ணற்ற இறைத் தூதர்கள், ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஓரிறைவன் இருக்கிறான். நாங்கள் அந்த இறைவனின் அடிமைகளும் தூதர்களும் ஆவோம் என்றே கூறினார்கள். அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும். அவனுக்கு இணை துணை இல்லை என அக்கால மக்களுக்குப் போதித்தார்கள்.

அப்படிப்பட்ட மனிதப் புனிதர்களை, ஜாம்பவான்களை ஏற்று அவர்களின் போதனைப்படி நடப்பது பகுத்தறிவா? அல்லது அவர்களது அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் இவற்றிற்கு ஏணி வைத்தாலும் எட்டாத அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் அனைத்திலும் குறைபாடுடையவர்கள் ஐம்புலன்களுக்குள் அடைபடும் பொருள்கள் மட்டுமே உள் பொருள், ஐம்புலன்களுக்கு எட்டாதவை இல்பொருள் என்று விளங்காது புரியாது சொன்னவர்களை நம்பி அதன்படி நடப்பது பகுத்தறிவா? சொல்லுங்கள்.

ஆயினும் போலிப் பகுத்தறிவளர்களாகிய நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள அந்தப் பெரியார்களைக் குறை சொல்ல முடியாது. அதற்கு முழுமுதல் காரணம் இறைவனின் இறுதித் தூதரின் மறைவுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் புகுந்துகொண்ட முஸ்லிம் மத குருமார் களேயாகும். காரணம் மனிதன் என்று படைக்கப்பட்டானோ, பல்கிப் பெருகினானோ அவர்களுக்கிடையில் வந்து ஓரிறைவனையே வணங்கி வழிபட வேண்டும், அவனது கட்டளைகள்படியே நடக்க வேண்டும் என்று போதித்த இறைத் தூதர் மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே பல கடவுள்கள் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுக்கும் புரோகிதர்கள் மக்களிடையே புகுந்து அந்த இறைத் தூதர் போதித்த ஓரிறைக் கொள்கையை திரித்து வளைத்து பல தெய்வக் கொள்கையாகப் புனைந்து மக்களை வழி கெடுத்தார்கள். ஷைத்தானும் அவனது சபதப்படி அப்புரோகிதர்களுக்கு துணையாக நின்று அவன் புகும் நரகிற்கு ஆள் சேர்த்தான். மக்களின் பெருங்கூட்டம் அப்புரோகிதர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள்.

அடுத்து ஓர் இறைத் தூதர் வந்து மீண்டும் ஓரிறைவனைப் பற்றிய சத்தியத்தை-நேர் வழியைப் போதிப்பார்கள். அப்போது வழி கேட்டில் சென்று கொண்டிருப்பவர்களில் ஒரு சிறு கூட்டம் நேர்வழிக்கு வரும். இப்படி பல்லாயிரம் இறைத் தூதர்கள் காலத்திற்குக் காலம் வந்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு ஓரிறைவனைப் பற்றியும், நேர்வழி பற்றியும் போதித்தார்கள். இப்படிக் காலத்திற்கு காலம் ஒரு சிறு கூட்டம் நேர் வழிக்கு வருவதும் அந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் இப்புரோகிதர்களின் தூண்டுதலால் அதில் பெருங்கூட்டம் மீண்டும் வழிகேட்டில் செல்வதும் தொடர்ந்தது, தொடர்கிறது.

இப்படித்தான் எண்ணற்ற மதங்கள் உலகில் தோன்றின. ஓரிறைவனுக்கு மாறாக பல கடவுள்கள் வழிபாட்டை போதிக்கும் அம்மதங்களை கற்பனை செய்து போதித்தவர்கள் கடவுளின் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் புரோகிதத் தொழிலே இவ்வழிகேட்டிற்குக் காரணமாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் வளர்ச்சி சுமார் 21 வயதளவில் பூர்த்தி அடைந்து அது இறக்கும் வரை அந்நிலை நீடிப்பது போல், இறைத்தூதர் ஆதத்தின் காலத்தில் குழந்தைப் பருவமாக இருந்த நேர்வழி- இஸ்லாம் இறுதி இறைத் தூதரோடு வளர்ச்சி முற்றுப் பெற்று உலகம் அழியும் வரை அதுவே சாந்தி மார்க்கமாக இருக்கிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19, 83,84,85, 42:13 வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் முன்னைய சமுதாயங்களை, கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள் எப்படி வழி கெடுத்தார்களோ அதே போல் நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களிடையேயும் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் இப் புரோகிதர்கள் சட்ட விரோதமாக, திருட்டுத் தனமாகப் புகுந்து கொண்டு மக்களை வழி கெடுத்து வருகிறார்கள்.

நமது இந்திய நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களிடம் காணப்படும் அனைத்துவகை வழிகேடுகள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றை அரபி பதங்களைச் சொல்லி முஸ்லிம்களிடையே அரங்கேற்றி வருகிறார்கள் முஸ்லிம் மதப்புரோகிதர்கள். நமது நாட்டு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர், உயர் ஜாதி மக்களால் தாழ்த்தப்பட்டவர்களாக, இழிஜாதிகளாக, தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என நாயிலும் கேடாக மதிக்கப்பட்ட மக்கள், அந்த இன இழிவைப் போக்கிக் கொள்ள முஸ்லிம்களாக ஆனவர்கள். அல்குர்ஆன் 49:14-ல் இறைவன் கூறுவதுபோல், இறை நம்பிக்கை உள்ளத்தில் புகாத நிலையில் முஸ்லிம்களானவர்கள். அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. எனவே அவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கும்போது வணக்க வழிபாடுகளாக கடைபிடித்து வந்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள் அனைத்தையும் அரபி பெயர்களுடனும், அல்ஃபாத்திஹா என்று வழிகேட்டில் இட்டுச் செல்லும், அரபியில் பித்அத் என்ற இறைத்தூதர் காட்டித்தராத, நரகிற்கு இட்டுச் செல்லும் புதியவற்றை அரங்கேற்றி வருகிறார்கள்.

வயிற்றுப் பிழைப்பைக் குறியாகக் கொண்ட முஸ்லிம் மதப் புரோகிதர்களும், இச்சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் அவர்களுக்கு கொழுத்த வருமானம் கிடைப்பதால் அவர்களே முன் நின்று இவ்வழி கேட்டுச் சடங்குகளை அரங்கேற்றி வருகிறார்கள். நீங்கள் பெரியார்களாக, அறிஞர்களாக மதிக்கும் அறிஞர்களும் இந்த மூட நம்பிக்கைகளையும், மூட சடங்கு சம்பிரதாயங்களையும், அநாச்சாரங்களையும் பார்த்தே இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்ற மூட நம்பிக்கைகள் கொண்டதே, மக்களை வெறி கொள்ளச் செய்யும் அபின் போன்றதே என்ற தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

மேலும் அனைத்து மக்களுக்குமாக இஸ்லாம் என்ற இறைவன் கொடுத்த வாழ்க்கை நெறி பற்றி நாத்திகத்தைப் போதித்த அறிஞர்கள் தவறான எண்ணம் கொள்ள முஸ்லிம் மதப் புரோகிதர்கள் இன்னும் என்னென்ன தந்திரங்களைக் கடை பிடித்து வருகிறார்கள் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்
ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்

இஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்ள நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொருவனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும். எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கையிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.

ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்ளதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்குவது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி) நூல்: புகாரி 5/4826, 6/6181.

அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல்லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1:பத்ஹுல் பாரி)

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி(ஸல்) அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!

அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாளர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட் டார்களா?

சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!

சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! அறிவிப்பாளர்: முகீரா(ரழி) புகாரி: 1291

ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை:

ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி(ஸல்) அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹி…) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?

அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், நான் ஷவ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்.

………..நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வளவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரழி) கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.

எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டுவோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.

ஏனிந்த தடம் புரளல்?
ஏனிந்த தடம் புரளல்?

புரோகிதமற்ற, பிரிவு, பிளவுகள் அற்ற ஒன்றுபட்ட சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் “முஸ்லிம் சமுதாயம்” என்ற எமது ஏகத்துவ நிலையை ஏற்று எம்முடன் இணை ந்துப் பணியாற்ற ஒப்புக் கொண்டு வந்தவர்கள்தான் பொய்யன் பீ.ஜையும், புரட்டன் எஸ்.கே.யும். 15 மாதங்கள் மட்டுமே எம்முடன் இணைந்து மார்க்கப் பணி புரிந்து விட்டு, அரபு நாட்டினரின் ஆசை வார்த்தையில் மயங்கி, நம்மிடமிருந்து வெளியேறி அவர்களின் வழிகாட்டல்படி தனிப்பிரிவு “ஜாக்” அமைப்புக் கண்டனர். “ஜாக்” என்பது “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என்பதின் சுருக்கமாகும். அதாவது குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என்ற அடிப்படையில் பீ.ஜை.யும், எஸ்.கேயும் இணைந்து கற்பனை செய்து வைத்துக் கொண்ட பிரிவுப் பெயர் இது. அதுவும் முதலில் “ஆக்”-”அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்” என்று கற்பனை செய்தவர்கள் அதில் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் செயல்படும் கருத்து இல்லை என விளங்கிய பின்னர் “ஜாக்” -”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என மாற்றிக் கொண்டனர். மனிதக் கற்பனையில் பிறக்கும் பெயர்களின் நிலை இதுதான்.

நாங்கள்”"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்” என மார்தட்டிக் கொள்பவர்களிடம் எப்படி நபி(ஸல்) அவர்களின் அசலான ஸுன்னத்துகள் இல்லாமல், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அதாவது ஹிஜ்ரி 11 க்குப்பின் புரோகிதர்கள் தங்களின் புரோகிதத் தொழிலுக்காக கற்பனை செய்த பித்அத்கள்-புதியவைகள் ஸுன்னத் எனக் கூறி அப்பாவி மக்கள் ஏமாற்றுவது போல், குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என “ஜாக்”ஐ கற்பனை செய்த இவர்கள், அதற்கு மாறாக முன் சென்ற நல்லடியார்களின் வழிகாட்டல்படி மார்க்கத்தை விளங்க வேண்டும் என சரடு விடுகிறார்கள். அவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் என வாயால் கூறிக் கொண்டு செயல்களில் “பித்அத் வல் ஜமாஅத்” என செயல்பட்டு தங்களை நம்பி தங்கள் பின்னால் வருகிறவர்கள் நரகிற்கு இட்டுச் செல்வது போல், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயால் சொல்லிக் கொண்டு செயலளவில் 33:36,66,67,68, இறைக் கட்டளைகளுக்கு முரணாக முன் சென்றோரை தக்லீது செய்யச் சொல்லி தங்கள் பின்னால் வருகிறவர்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள். இதோ அவர்களின் வழி கெட்ட அறிவுரை:

“நமக்கு முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள் என்ன விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள் என்று ஆய்வு செய்து பார்ப்பது அவசியமாகும். காரணம் அவர்கள் நம்மை விட மார்க்க அறிவில் சிறந்து விளங்கிய வர்கள். நம்மை விட அதிகம் இந்த மார்க்கத்திற்காகப் பாடுபட்டவர்கள். எனவே அவர்கள் வேண்டுமென்றே இந்த மார்க்கத் திற்கு எதிராகச் செயல்பட்டிருக்கமாட்டார்கள் என்று நம்ப வேண்டும். மார்க்கத் திற்கு அந்த நல்லோர்கள் கொடுக்காத ஒரு விeக்கம் நமது மனதில் தோன்றுமானால், அது ஒரு வேளை சாத்தானின் சதியாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும்” அல்ஜன்னத் டிசம்பர் 2009 பக்கம் 48-ல் “ஜாக்’ தலைவர் எஸ்.கே. அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு… என்று எழுதியுள்e தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள வரிகள் இவை. தன்னுடைய இந்தக் கூற்றுக்கு எஸ்.கே. கொடுத்துள்ள குர்ஆன் வசனம் இதோ.

“”எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோரைப் போன்றவரா? (அல்குர்ஆன் 47:14)

புரட்டன் எஸ்.கே. எழுதியுள்ள இந்த “”டயலாக்” புதிதல்ல; காலம் காலமாக மத்ஹபினரும், தரீக்காவினரும் இமாம்கள் பற்றி கோரஸாகப் பாடி வரும் டயலாக் தான். அவர்கள் முன்சென்ற இமாம்களின் பெயர்களை வலிய இவர்களாக இழுத்து மக்களை வழிகெடுத்தார்கள்; வழிகெடுத்து வருகிறார்கள். புதிய “ஜாக்” மத்ஹபைக் கண்ட எஸ்.கே. அரபு நாட்டில் “ஸலஃபி” பிரிவுக் கொள்கையை நிலைநாட்டிய புரோகிதர்களை “முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள்” என அடைமொழியிட்டு அவரை நம்பியுள்ள அப்பாவிகளை வழி கெடுக்க முற்பட்டுள்ளார்.

எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 இறைவாக்கே தெளிவாகத் திட்டமாக “”இறைவனின் தெளிவான பாதை” அதைப் பின்பற்றுங்கள் என்று கூறி இருக்க, இவரோ அதற்கு மாறாக “”முன் சென்ற கல்வியாளர்களின் பாதையப் பற்றிப் பிடியுங்கள்” என்கிறார். அல்குர்ஆன் 2:134, 141 இறைவாக்குகள் முன் சென்றவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்கள் சென்று போனவர்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்படாது; உங்களைப் பற்றித்தான் கேட்கப்படும் என்று நெத்தியடியாகக் கூறிக் கொண்டிருந்தாலும், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இப்புரோகிதர்களின் கண்களில் இந்த எச்சரிக்கை படவே படாது.

அல்குர்ஆன் 33:21,36 இறைக் கட்டளைகளும் அவர்களை விழிப்படையச் செய்யா. இதோ அந்த இறைவாக்குகள்:

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.(33:21)

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (33:36)

அல்லாஹ்வே இப்படிப்பட்டவர்களுக்கு இருதயங்கள் இருந்தும் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; கண்கள் இருந்தும் பார்க்க மாட்டார்கள்; காதுகள் இருந்தும் கேட்க மாட்டார்கள் என்று 7:179-ல் கூறி இருக்க, நாம் எப்படி மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு தங்கள் உள்ளத்தை கற்பாறைகள் போல் கடினமாக்கிக் கொண்டவர்களைத் தட்டி எழுப்ப முடியும்? (பார்க்க 5:13) ஒரு போதும் முடியாது. எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 குர்ஆன் வசனமே “எவனுடைய (ஜாக், ததஜ போன்ற) செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் (கூலி வாங்கி) தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனரோ அவர்கள் அல்லாஹ் கொடுத்த நேர்வழியில் நடை போடுவது ஒரு போதும் சாத்தியமில்லை என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் அடித்துக் கூறுகிறது.

புரோகிதர் எஸ்.கே.யை நம்பி அவரது தவறான கொள்கையை ஏற்று “ஜாக்” என்ற 1987-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிளவு ஜமாஅத்திலும், புரோகிதர் பீ.ஜை.யை நம்பி அவரது தவறன கொள்கையை ஏற்று “ததஜ’ என்ற 2005-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிளவு ஜமாஅத்திலும் இருப்பதின் மூலம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் எங்கள் கூற்றையும் ஏற்காதீர்கள்.

அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 2:134, 141, 5:3, 3:19, 85, 7:3, 33:21,36,66,67,68, 59:7, 3:102,103,105, 6:153,159, 7:175-179 30:32, 42:13,14, 21:92,93, 23:52, 53,54,55,56, 49:14,16, 42:21, 20:123-129, 25:30 இறைவாக்குகளை மனிதர்களில் யாருடைய சுய விளக்கத்தையும் போட்டு மூளையைக் குழப்பாமல், சுயமாகப் படித்துச் சிந்தித்து விளங்க முற்படுங்கள். அல்லாஹ்வே மார்க்கத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டதாக அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். அதற்கு மேலும் மனிதர்களின் விளக்கத்தை ஏற்பவர்கள் அல்லாஹ்வைவிட இந்த மனிதர்கள் தங்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று நம்புகிறார்கள் என்பது தான் அதன் பொருளாகும். அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களாக மனிதர்களை நம்புகிறவர்களை விட கொடிய ஷிர்க்கில்-இணைவைப்பில் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தித்து விளங்குங்கள். இல்லை என்றால் முடிவு….? 33:66,67,68 இறைவாக்குகள் கூறுகின்றன. நேரடியாகப் படித்து விளங்குங்கள். புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். வெற்றி பெறுங்கள்!

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

ஜனவரி தொடர் : 6

ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கங்களில் இருப்பவர்கள் நேரடியாகப்

படித்து சிந்தித்து உணர்ந்து அதன்படி நடக்க வேண்டிய இறைவாக்குகள்!

அப்போது நபி(ஸல்) அவர்கள், “”மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத் தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்த நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதல் செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. (ஸஹீஹுல் புகாரி-ஹதீஸ் இலக்கம்:3)

ஏற்கனவே பைபிள் வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து துரத்தப்பட்டு மதீனா செல்வார்கள் என்ற சம்பவத்தை முன் அறிவிப்பு செய்திருந்தது. “வரகா’ வும் இதனையே இங்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் முன் அறிவிப்புச் செய்கிறார் கள். இதன் பின் முஹம்மது என்ற மனிதன் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் கள்” என அல்லாஹ் அறிவித்துள்ளான் என்று சொல்கிறார் என்ற செய்தி மக்களிடையே செல்கின்றது. இச் செய்தி இஸ்மாயீல் (அலை) இறைத் தூதராக வந்த பின் நீண்ட காலம் தூதர்கள் வராத மக்கா அரபியருக்கு, “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை” என்ற வார்த்தை புதியவையாக இருக்கும்; தமது மூதாதையர் காட்டிய பல தெய்வக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்கும். ஆனால் வேத அறிவு பெற்ற சமுதாய அறிஞர்களுக்கு இந்த வசனங்கள் புதியவைகள் அல்ல. அவதானியுங்கள்.

“யா இக் இத் முஸ்திஇ”

பொருள்: வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே” (ரிக் : 6:45:16)

“”நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தா” (உபாகமம்: 6:4)

“”நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.” (ஏசாயா:-46:9)

“”எல்லா படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயக்கி வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால், அந்த ஏக இறைவனிடம் மட்டும் சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும். (பக்வத் கீதா:18:61,62)

பிசாசு, இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும், அவைகளின் மகிமைகளையும் அவருக்குக் காண்பித்து “”நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்!” என்று சொன்னான்.

அப்போது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே!” என்றார். (மத்தேயு :4:8-10)

முன்னைய வேதங்களில் எல்லாம் ஒரே இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. மூஸா(அலை) அவர்களும் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் என வலியுறுத்தினார்; ஈசா(அலை) அவர்களும் இதனையே வலியுறுத்தினர்; இதே போல் அரேபியாவில் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இதனையே வலியுறுத்தினார்கள். ஹுதை பியா உடன்படிக்கைக்குப் பின் மக்காவி லிருந்து ஒரு வியாபாரக் கூட்டம் சிரியா சென்றது. அதற்கு குறைஷ்களின் தலைவரான அபூஸுஃப்யான் தலைமை தாங்கிச் சென்றார். அவர் ரோமாபுரி மன்னன் யஹர்குலிஸைச் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றி ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த உரையாடலில் இருந்து, வேதக்காரர்கள் எந்த அளவு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை அறியலாம். அந்த உரையாடலை உற்றுக் கவனியுங்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்:

(குறை´களின் தலைவன்) அபூ ஸுஃப் யானிடத்திலும் குறை´ காஃபிர்களிடத்திலும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைப்பியா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்தார்கள். அச்சமயத்தில் (குறை´களில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டுக்குப் போயிருந்தார்கள். அந்தக் குறை´ வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ ஸுஃப்யானை (ரோமாபுரி மன்னர்) யஹர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர் அபூ ஸுஃப்யானிடம் வந்து சேர்ந்தார். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தமது அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தமது மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரச் சொன்னார்.

அபூ ஸுஃப்யான் இது குறித்துக் கூறும் போது, (எங்களிடம்) மன்னர் தம்மை இறைவனின் உறவினர் யார்? எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். பின்னர் தமது மொழி பெயர்ப்பாளரிடம், நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ ஸுஃப்யானாகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறிவிட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல் என ஆணையிட் டார். நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்லிவிடுவார்க¼ளா என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, உங்களில் அவரது குலம் எத்தகையது? அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். அவரைப் பின்பற்றுவோர் அம்மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா? என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். அவரைப் பின்பற்று வோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா? என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். அவரது மார்க் கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப் தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்ற னரா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்றார். நான் இல்லை என்றேன். அவர் வாக்கு மீறியது உண்டா? என்றார். (இது வரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவர்களுடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளேளாம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு நபி(ஸல்)மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கிறீர்களா? எனக் கேட்டார். ஆம் என்றேன். அவருடன் நீங்கள் நடத்திய போரில் முடிவுகள் எவ்வாறிருந்தன? என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன். அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்? என்று கேட்டார். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்: அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறிவந்தவற்றையயல்லாம் விட்டுவிடுங்கள் என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கியிருத்தல் போன்ற பண்புகளை ஏவுகிறார் என்றேன்.

மன்னர் தமது மொழிபெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது: “அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர்தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித்தான் அவர்களின் சமூகத்திலுள்e உயர் குலத்தில் தான் அனுப்பப்பட்டுள்ளார் கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப் பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின் பற்றித்தான் இவரும் செய்கிறார் என்று நான் கூறியிருப்பேன். இவரது முன்னோர்களின் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோர்களின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகிதத்துண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்று கின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரை பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்று கின்றவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும்வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்து விட்ட இறைநம்பிக்கையின் எழில் (உறுதியானது).

அவர் (எப்போதேனும்) வாக்கு மீறிய துண்டா? என உம்மிடம் நான் கேட்ட போது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத் தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீறமாட் டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக் கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகுவிரைவில்) தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தான் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந் தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரது பாதங்களைக் கழுவி விடுவேன்.

புஸ்ராவின ஆளுநர் மூலம் யஹர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹியா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுனர் அதனை மன்னனிடம் ஒப்படைத்தார். மன்னர் அக்கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அக்கடிதத்தை வரும் இதழில் பார்ப்போம்.

ஐயமும்! தெளிவும்!!
ஐயமும்! தெளிவும்!

கேள்வி : 1. நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் சிலர் அழைத்து வருகிறார்களே. இது சரியா? 33:5 குர்ஆன் வசனம் அப்படி அழைக்கக் கூடாது என்று கூறுகிறதே. விளக்கம் தரவும்.

2. 33:37-வது வசனம் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது? குறிப்பாக என்ன அருள் புரியப்பட்டிருக்கிறது?

3. 33:37-வது வசனம், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் வெளியாக்க இருந்த எதையோ மனதில் மறைத்திருப்பதாகக் கூறுகிறது. அது என்ன?

4. சுவீகாரப் பிள்ளைகளுக்கு வளர்த்த வரின் சொத்தில் பங்கு கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

அனைத்திற்கும் விளக்கம் தரவும். லு.ஃபாத்திமா, அல்கோபர், KSA

பதில் : One in four! ஒரே கேள்வியில் 4 உட் கேள்விகள்!

தாங்கள் கூறும் 33:5-வது இறை வசனத்தை கவனிக்கும் முன்பாக, 33:4-வது இறை வசனத்தை கவனிக்கவும்.

அல்குர்ஆன் 33:4 “எந்த மனிதனின் உளளேயும் அல்லாஹ் 2 இருதயங்களை உண்டாக்கவில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் கூறுவதனால், அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விட மாட்டான். (அவ்வாறே) உங்கள் சுவீகாரப் பிள்ளைகளை (எடுத்து வளர்க்கும் பிள்ளைகளை) உங்களுடைய புதல்வர்களாக ஆக்கி விடமாட்டான். இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.”

இந்த இறைவசனம் “எடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கeது புதல்வர்களாகி விட முடியாது’ என்ற சட்டத்தை விதியாக்குகிறது.

இப்போது தாங்கள் கூறியுள்ள 33:5வது வசனத்தைக் காண்போம். “”(எனவே) நீங்கள் (எடுத்து வeர்க்கும்) அவர்களை, அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்கçeச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையயன்றால், அவர்கள் உங்களுக்கு மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இதுபற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்”.

33:5வது இறைவசனம், “எடுத்து வeர்க்கும் பிள்çeகçe அவர்களின் தந்தையர்களின் பெயர்கçeச் சொல்லி அழைக்குமாறு கட்டளையிடுகிறது.

நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் கூறுவது சரியா என்பது தங்களின் வினா. ஆனால் 33:5வது வசனமோ, எடுத்து வளர்க்கும் பிள்çeகçeப் பற்றிக் கூறுகிறது. ஒரு விஷயத்திற்கு, மற்றொரு விஷயத்திலிருந்து சட்டம் எடுக்க முடியாது. ஏனெனில் மாதவிடாய்க் காலங்களில் விடுபட்டிருந்த தொழுகைகçe, தொழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் “மாதவிடாய்க் காலங்களில் விடுபட்டிருந்த நோன்பை நோற்க வேண்டும் என்று, தான் கூறியதாகவும், (விடு பட்டிருந்த தொழுகையை தொழவேண்டும் என்று கூறியதில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்து காட்டியது சிறந்த உதாரணம் ஆகும்.

“மனைவியை ளிஹார் (மனைவியைத் தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதால், மனைவி தாயாகி விடமாட்டாள்” என்றும், “”…. இவையயல்லாம் உங்களுடைய வாய்களால் சொல்லும் வெறும் வார்த்தைகள்” என்று 33:4வது இறைவசனம் கூறுகிறது. அதே போல மரியாதையின் காரணமாகவோ, அல்லது நாட்டுப்பழக்கத்தின் காரணமாகவோ -நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் கூறுவது, தங்களைப் பெற்று வeர்க்கும் “தாய்-தந்தையர்’ என்ற எண்ணத்தில் கூறப்படுவதில்லை. அவைகள் வாய்களால் சொல்லும் வெறும் வார்த்தைகள்!

இவற்றாலும், மேலும் “உங்களை எல்லா நன்மைகளையும் கொண்டும் ஏவி இருக்கிறேன். எல்லாத் தீமைகçe விட்டும் தடுத்து இருக்கிறேன்” என்றும், மார்க்கத்தில் சொல்லப் படாதவைகள் உங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ஆகும் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இதை சலுகையாக எடுத்துக் கொண்டு நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் அழைக்கும் வழக்கம் தவறானது அல்ல என்ற முடிவிற்கு வர முடிகிறது. ஆனால் அவர்களை வேண்டுமென்றே “அப்பா’ “அம்மா’ எனக் கூறக் கூடாது என்பதையும் 33:5 இறுதி வசனங்கள் அறிவுறுத்துகின்றன.

தங்களது அடுத்த 3 வினாக்களும் 33:37 இறை வசனம் குறித்து இருப்பதால், அவ் வசனத்தைக் காண்போம்.

அல்குர்ஆன் 33:37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்புரிந்து நீரும் அருள் புரிந்து, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே தடுத்து வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன். ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர், நாம் அவளை உமக்கு மனம் செய்வித்தோம்; ஏனென்றால், முஃமின்களால் (எடுத்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வeர்த்த)வர்கள் அப் பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருந்திருக்க கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்” வளர்த்தவர்-வளர்ப்புப் பிள்ளைகளுக்குத் தந்தையாக முடியாது என்பதை அல்லாஹ் வேறு விதமாகக் கூறியிருக்கின்ற இந்த 33:37வது இறைவசனத் தில் தாங்கள் தொடுத்துள்e வினாக்களுக்கு, விடை காண, சம்பவம் ஒன்றை நினைவூட்டுகிறோம். அதன் பின் தங்களுக்கு விடை கிடைத்துவிடும். அச்சம்பவம், ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையான “பத்ஹுல் பாரிஷியில் இடம் பெற்றுள்ளது. அதன் சுருக்கம் கீழே தரப்பட்டுள்eது. இது வெறும் சம்பவம் அல்ல! சம்பவத்திற்கு ஆதாரமாக இடை இடையே ஆயத்துகளும், ஹதீஸ்களும் கட்டத்தில் காட்டப்பட்டுள்ளன.

சம்பவம்: நபி(ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு முன்பே, ஜைது (ரழி) (நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை இவர்) அவர்களைத் தமது வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமைக் காலத்தில் வeர்ப்பு மகனை சொந்த மகனாகவே கருதினர். எனவே வளர்ப்பவரின் பெயருடன் இணைத்து, “இன்னார் மகன்’ என்றே அவரை அழைத்து வந்தனர். அந்த வழக்கப்படி, ஜைதை “முஹம் மதின் புதல்வர் ஜைது’ என்றே மக்கள் அழைத்து வந்தனர். வeர்ப்பவரின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வந்து விடுவது அப்போது நடைமுறையில் இருந்த பழக்கம். குர்ஆனின் 33:5வது வசனம் இறக்கி அருள் செய்யப்படும் வரை இந்த பழக்கம் நீடித்திருந்தது.

ஹதீஸ் எண்: 4782 ரஅக. அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரீ.

“”வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தையின் பெயருடன் சேர்த்தே அழையுங்கள்; இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” என்ற 33:5வது வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்ட அவர்களின் வளர்ப்பு மகன் “ஜைத் பின் ஹாரிஸா (ரழி)’ அவர்களை, “ஜைத் பின் முஹம்மத்’ என்றே அழைத்து வந்தோம். (இதே அறிவிப்பாளரின் அறிவிப்பில் இதே ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

சம்பவம் தொடர்கிறது: ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் அத்தை உமாமா பின்த் அப்துல் முத்தலீப் அவர்களுடைய புதல்வி. (அதாவது மாமி மகள்). ஜைனபை ஜைது(ரழி) அவர்களுக்கு மணமுடிக்க நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஜைனபிற்கு ஆரம்பத்தில் இத்திருமணத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் ஏற்பாடுதான் இது என்று தெரிந்த பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். திருமணம் நடந்தேறியது.

எதிர்காலத்தில் ஜைனப் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக ஆவார் என்று நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிப்புச் செய்தான். வeர்ப்பு மகனைப் பெற்ற மகன் போல் கருதும் அக்காலத்தில், வளர்ப்பு மகனான ஜைதுடைய மனைவியை, அவர் விவாகரத்து செய்த பின் தான் மணப்பதை எதிர்த்து மக்கள் வீண் விவகாரங்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என அஞ்சி, இதை வெளியே சொல்ல நபி(ஸல்) அவர்கள் பயந்தார்கள்.

இந்த நிலையில் ஜைனப்-ஜைது இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒருமுறை ஜைது (ரழி) அவர்கள்,

நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜைனபின் நாவு ரொம்பவும் நீள்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விட விரும்புகிறேன்’ என்று முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,

“”…அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்! உம் மனைவியை உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்..” என்று அறிவுரை கூறினார்கள். (அல்குர்ஆன் 33:37)

நாட்கள் நகர்ந்தன; என்றாலும் ஜைன பிற்கும்-ஜைதுக்கும் மனக்கசப்பு நீடித்துக் கொண்டிருந்தது. வeர்ப்பு மகனை சொந்த மகனாகக் கருதி செயல்பட்டுக் கொண்டிருந்த அறியாமைக் கால மரபுகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிலேயே அதற்கான முன்மாதிரியை ஏற்படுத்தி அருள் புரிந்தான். ஜைனபை ஜைது விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபி(ஸல்) அவர்களுக்கு ஜைனப் (ரழி) அவர்கçe அல்லாஹ்வே மணமுடித்து வைத்தான். (33:37)

தனது மகனின் மனைவியையே -அதாவது- மருகளையே, முஹம்மது மணந்து கொண்டது போல அறியாமைக் கால வழக்கப்படி மக்கள் பேச ஆரம்பித்தனர். இதையும், அல்லாஹ் 33:40வது வசனத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான்.

“”முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராக வும், நபிமார்களுக்கெல்லாம் இறுதியாகவும் (முத்திரையாகவும்) இருக்கின்றார். மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கு அறிந்தவன்” – (அல்குர்ஆன் 33:40)

அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) பணிகளில் உதவி செய்து, அவர்களுக்கு நெருக்கமாக இருந்து வந்த ஜைது(ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஜைனபை மணமுடித்த பின்பும், நபி(ஸல்) அவர்களுடன் நெருக்கமாகவே இருந்தார். இஸ்லாத்தில் விபச்சாரம் ஹராமாக்கப் பட்டிருப்பதால், அதை எந்த முஃமினும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. ஆனால், ஜைதுக்கும் ஜைனபுக்கும் அவர்களைப் பற்றிய நினைவுகள் தொடராமலிருக்க வேண்டுமே! ஜைது செய்த விவாகரத்து அதற்குப் போதுமானதாக இருந்தாலும், அல்லாஹ் இந்த சிக்கலை மிக அழகாகக் கையாண்டிருப்பதை 33:6வது இறைவசனத்தில் பாருங்கள்.

“இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கிறார். இன்னும் அவருடைய மனைவியர் அவர் களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்..”

அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் அழகாக பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான்.

ஆக நபி(ஸல்) அவர்களுக்கும் ஜைனப்(ரழி) அவர்களுக்கும் நடந்தேறிய திருமணம் மற்ற சம்பவங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடால் அவன் நாட்டத்தை நிறைவேற்றியதையும், மற்றும் தங்களின் 2,3,4வது கேள்வி களுக்கு 33:37வது இறைவசனம் விடையளித்திருப்பதையும் இப்போது பார்வையிடுங்கள்.

“எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து, அவர் மீது (நபியே! நீரும் அருள்புரிந்தீரோ….” என்று அல்லாஹ் (33:37ல்) குறிப்பிடுவது ஜைது பின் ஹாரிஸா(ரழி) அவர்களைத்தான். அல்லாஹ்வின் நாட்டப்படி அடிமையாயிருந்த ஜைதை நபி(ஸல்) அவர்கள் விடுதலை செய்த சம்பவத் தைத்தான் “அருள்’ என்று குறிப்பிடுகிறான். மேலும், ஜைனப்(ரழி) அவர்கள்தான் எதிர் காலத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவி என்று அல்லாஹ் அறிவிப்புச் செய்திருந்தும், அதை நபி(ஸல்) அவர்கள் மனதில் மறைத்து வைத்துக் கொண்டு ஜைது(ரழி) அவர்களிடம் அல்லாஹ் வுக்கு பயந்து நீர் உம் மனைவியை உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்..”(33:7) என்று கூறியதையே, நபி(ஸல்) அவர்கள் மனதில் மறைத்து வைத்திருந்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மேலும் அல்லாஹ்வின் நாட்டப்படியான திருமணம் என்பதை 33:37ல் “… ஜைது விவாக விலக்கு செய்து விட்ட பின்னர், நாம் அவளை (நபியே) உமக்கு மணம் செய்வித்தோம்…” என்ற வசனத்திலிருந்து அறியமுடிகிறது. மேலும், இப் படிப்பட்ட திருமணங்களுக்குத் தடை இல்லை என்பதை 33:37ல் “…ஏனென்றால், முஃமின்களால் வeர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்து செய்து விட்டால், (வளர்த்த) அவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்கு இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டçeயாகும்” என்று அல்லாஹ் உறுதிபடக் கூறுகிறான்.

“அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையே முழு குர்ஆனாக இருந்தது” என்று கூறிய அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தமது கணவர் குறித்து பெருமிதம் கொண்டு கூறிய ஹதீஸை கவனியுங்கள்.

“வஹீ வந்ததில் நபி(ஸல்) அவர்கள் எதையாவது மறைத்திருக்க நேர்ந்திருந்தால் இந்த 33:37வது வசனத்தை மறைத்திருப்பார்கள். ஆனால் அதையும் வெளிப்படுத்தி விட்டார்கள்.” அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நூல்: திர்மிதீ.

தங்களது 4வதுவினா : எடுத்து வளர்த்த பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

தந்தையின் சொத்தில் தங்களுக்கு சேர வேண்டிய பங்கிலிருந்து பிரித்துக் கொடுக்க பெற்ற பிள்ளைகள் விரும்புவார்களா? இன்றைய உலகில் பணத்தாசை பிடித்த வெறியர்களைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது. தனக்கு கிடைக்க வேண்டிய பங்கிலிருந்து தன்னுடன் பிறக்காத வளர்ப்பு மகனுக்குக் கொடுப்பதை, பாத்தியத்தை உள்ளவர்கள் விட்டுக் கொடுப்பார்களா? உரிமையாளர்களின் உரிமையை இழக்கச் செய்ய நமக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படிச் செய்தால், பிறரின் உரிமையில் தலையிடுவதாகாதா? நியாயமா? இன்றைய உலகில் அப்படிச் செயல்பட்டால், வெட்டு-குத்து என்று செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

உரிமை உள்ளவர்களில் பலர் வeர்ப்பு மகனுக்குக் கொடுக்க விரும்பினால் கூட, பிரச்சனை பூதாகரமாக ஆகி விடுவதற்கு உரிமை உள்eவர்களில் ஒருவர் எதிர்த்தால் கூட போதுமே. உரிமை உள்ள பெண் பிள்ளைகள் ஒருக்கால் விட்டுக் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் கணவன்மார்களில் எவராவது ஒருவர் மனைவியைத் தூண்டிவிட்டால் போதும் பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும்.

பிள்ளைகளை எடுத்து வeர்க்கும் குடும்பங்களிலெல்லாம், இப்படியாக பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தால், எந்த பிள்ளையையும் எடுத்து வளர்க்கக் கூடாது என்ற தவறான முடிவிற்கு மக்கள் வந்து விடுவார்கள். அந்த பிள்ளைகளும் கவனிப்பாரற்றுப் போய் விடு வார்கள். இந்த நிலை ஏற்பட்டு விட்டால், அப் பிள்ளைகளின் வாழ்க்கை நிலை என்ன? எல்லாம் அறிந்த அல்லாஹ் அவன் நாட்டப்படி விதியாக்கியதில் குறை இருக்க முடியாது என்பதில் முஃமின்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொள்ளவேண்டும்.

வளர்த்த பிளளைகளுக்கு பங்கு கொடுத்திருக்கலாம் என்பது தங்கeது வாதமாக இப்போதும் இருக்குமேயானால், நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த பிள்ளைகள் யார்? தாய்-பிள்ளை என்ற மேலான உறவை மதிக்காமல், வறுமை யின் காரணமாக இறை நம்பிக்கையின்றி விற்கப்பட்டவர்கள்; அல்லது உறவினருக்கோ, சினேகி தனுக்கோ, அறியாதவருக்கோ கூட குழந்தை இல்லை என்று பெற்றோரால் விலை பேசப்பட்டு விற்கப் பட்டவர்கள்; அல்லது தகாத உறவின் மூலம் குழந்தையைப் பெற்ற தாயால் குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் வீசி எறியப்பட்டவர்கள். கொடுமை அல்லவா இது? இந்தக் குழந்தைகளுக்கு உடனடித் தேவை சொத்து சுகங்களில் உரிமையோ, பங்கோ அல்ல. மாறாக, தன்னையும் ஒரு மனிதப் பிறவியாக மதித்து, தன்மீது பச்சாதப்பட்டு, தன்னை எடுத்து வeர்த்து உடனடியாகப் போ´க்கக் கூடிய ஒரு நல்ல மனிதர்தான் உடனடித் தேவை. ஆனால் வளர்ந்து ஆளான பின், தன்னையும் மனிதன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்திய அந்த நல்ல மனிதனுக்கு நன்றி செலுத்தாமல், அவரது சொத்தில் பங்கு கேட்பதும், அதற்காக அவர் பெற்றெடுத்த பிள்ளைகளிடம் சரிசமர் நிகராக சண்டை இடுவதும் தம்மை வeர்த்தவருக்கு செய்யும் துரோகம் அல்லவா?

ஆயினும் வளர்ப்புத் தந்தை உயிரோடிருக்கும்போது வளர்ப்பு மகனுக்குத் தனது சொத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அவர் இறந்த பின் வாரிசு என்ற அடிப்படையில் உரிமை கோருவதையே இஸ்லாம் தடுத்துள்ளது. மேலும் கருணைமிக்க அல்லாஹ் “பாகப் பிரிவினை செய்யும்போது, உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால், அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்” என்று 4:8வது வசனத்தில் மனிதர்களுக்கு அறிவுரை பகர்கின்றான்.

எனவே, நமது குறைமதியைக் கொண்டு, நுண்ணறிவாளனான அல்லாஹ்வின் வல்லமையில் குறைகாணாதிருப்போமாக.

“”……இறைவா! நாங்கள் செவியேற்றோம், (கட்டçeகளுக்குக்) கீழ்ப்படிந்தோம்; உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்…” என்று தூதர் (ஸல்) அவர்களும் முஃமின்களும் நம்பிக் கைக் கொண்டிருப்பதாக 2:285வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொண்டு செயல்படுவோமாக.

இ-மெயில் தகவல்!

புனித குர்ஆனில், ஒரு சில வார்த்தைகளும் -அவற்றின் எதிர்வார்த்தைகளும் அல்லது அவற்றைச் சார்ந்துள்ள வேறுசில வார்த்தை களும் சம அளவு எண்ணிக்கையில் அமைந் திருப்பதாக டாக்டர் தாரிக் அல் ஸ்வைதன் என்பவர் கண்டறிந்துள்ளார். ஆச்சரியப் படத்தக்க இந்த அரிய செய்திகளை எமக்கு வந்த இ-மெயில் தகவல் ஒன்றில் கண்டோம். இவற்றைத் தவிர வேறு தகவல்களையும் தந்துள்ளார்.

வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அவைகளை இங்கே இடம்பெறச் செய்துள்ளோம். படித்து வியப்படைவீர்களாக.

வார்த்தை குர்ஆனில் இடம் பெற்றுள்ள  எண்ணிக்கை

மனிதன் 24

துன்யா 115

(உலக வாழ்க்கை)

மலக்குகள் 88

வாழ்க்கை 145

நன்மை 50

மக்கள் 50

இப்லீஸ் 11

சோதனை 75

செலவிடுதல் 73

வழி தவறியவர்கள்17

முஸ்லிமீன் 41

தங்கம் 08

மந்திரவித்தை 60

ஜகாத் 32

மனம் 49

நாவு 25

ஒதுங்கிவிடு 08

வெளிப்படையாகப் பேசுதல் 18

கஷ்டம் 114

முஹம்மது 04

வார்த்தை குர்ஆனில் இடம் பெற்றுள்ள எண்ணிக்கை

மற்றும் சில வார்த்தைகள் குர்ஆனில் இடம் பெற்றுள்ள எண்ணிக்கைகçeயும் பார்த்து, இன்னும் ஆச்சரியம் அடைவோம்.

தொழுகை : 5 இடங்கள்

(5 வேளை தொழுகை கடமை)

மாதம் : 12 இடங்கள் (12 மாதங்களே

எல்லா மொழிகளிலும் உள்ளன)

நாள் : 365 இடங்கள் (365 நாட்கள் ஒரு வருடம் ஆகும்)

அடுத்துள்ள தகவல்களையும் கவனியுங்கள்.

கடல் : 32 இடங்கள், நிலம்: 13 இடங்கள்

கடலும் நிலமும் : 45 இடங்கள் (32+13)

கடல் : 32/45மீ யீ 100% = 71.11111111%

நிலம் : 13/45மீ யீ 100% = 28.88888889%

கடல் +நிலம் = 100.00%

நீர் 71.111%, நிலம் 28.889% என்ற கணக்கில் பூமி அமைந்துள்ளதாக இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆச்சரியங்கள் குர்ஆனில் இருப்பது எவ்வாறு? மனிதக் கரங்களால் குர்ஆன் எழுதப்பட்டதல்ல என்பதற்கான சான்றுகள் பலவற்றுள் இதுவும் ஒரு சான்றாகும்.

இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இவைகளைக் கற்றுக் கொடுத்தது யார்? இதற்கான விடை மனதில் சர்வ சாதாரணமாக இன்னேரம் தோன்றி யிருக்க வேண்டுமே!

ஆம்! சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வே இவைகளை

எழுதப்படிக்கத் தெரியாத தம் தூதருக்கு கற்பித்தான்.

புனித குர்ஆன் இதைத்தான் போதிக்கிறது.

குர்ஆனை கற்போம் கற்பிப்போம் குர்ஆனை அறிவோம் அறிமுகப்படுத்துவோம்

குர்ஆனை செயல்படுத்துவோம் செயல்படுத்த ஏவுவோம்.

அந்நஜாத் பிப்ரவரி2010
ஏனிந்த தடம் புரளல்?

ரோகிதமற்ற, பிரிவு, பிளவுகள் அற்ற ஒன்றுபட்ட சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் “”முஸ்லிம் சமுதாயம்” என்ற எமது ஏகத்துவ நிலையை ஏற்று எம்முடன் இணை ந்துப் பணியாற்ற ஒப்புக் கொண்டு வந்தவர்கள்தான் பொய்யன் பீ.ஜையும், புரட்டன் எஸ்.கே.யும். 15 மாதங்கள் மட்டுமே எம்முடன் இணைந்து மார்க்கப் பணி புரிந்து விட்டு, அரபு நாட்டினரின் ஆசை வார்த்தையில் மயங்கி, நம்மிடமிருந்து வெளியேறி அவர்களின் வழிகாட்டல்படி தனிப்பிரிவு “”ஜாக்” அமைப்புக் கண்டனர். “ஜாக்” என்பது “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என்பதின் சுருக்கமாகும். அதாவது குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என்ற அடிப்படையில் பீ.ஜை.யும், எஸ்.கேயும் இணைந்து கற்பனை செய்து வைத்துக் கொண்ட பிரிவுப் பெயர் இது. அதுவும் முதலில் “ஆக்”-”அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்” என்று கற்பனை செய்தவர்கள் அதில் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் செயல்படும் கருத்து இல்லை என விளங்கிய பின்னர் “ஜாக்” -”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என மாற்றிக் கொண்டனர். மனிதக் கற்பனையில் பிறக்கும் பெயர்களின் நிலை இதுதான்.

நாங்கள்”"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்” என மார்தட்டிக் கொள்பவர்களிடம் எப்படி நபி(ஸல்) அவர்களின் அசலான ஸுன்னத்துகள் இல்லாமல், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அதாவது ஹிஜ்ரி 11 க்குப்பின் புரோகிதர்கள் தங்களின் புரோகிதத் தொழிலுக்காக கற்பனை செய்த பித்அத்கள்-புதியவைகள் ஸுன்னத் எனக் கூறி அப்பாவி மக்கள் ஏமாற்றுவது போல், குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என “ஜாக்”ஐ கற்பனை செய்த இவர்கள், அதற்கு மாறாக முன் சென்ற நல்லடியார்களின் வழிகாட்டல்படி மார்க்கத்தை விளங்க வேண்டும் என சரடு விடுகிறார்கள். அவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் என வாயால் கூறிக் கொண்டு செயல்களில் “பித்அத் வல் ஜமாஅத்” என செயல்பட்டு தங்களை நம்பி தங்கள் பின்னால் வருகிறவர்கள் நரகிற்கு இட்டுச் செல்வது போல், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயால் சொல்லிக் கொண்டு செயலளவில் 33:36,66,67,68, இறைக் கட்டளைகளுக்கு முரணாக முன் சென்றோரை தக்லீது செய்யச் சொல்லி தங்கள் பின்னால் வருகிறவர்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள். இதோ அவர்களின் வழி கெட்ட அறிவுரை:

“”நமக்கு முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள் என்ன விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள் என்று ஆய்வு செய்து பார்ப்பது அவசியமாகும். காரணம் அவர்கள் நம்மை விட மார்க்க அறிவில் சிறந்து விளங்கிய வர்கள். நம்மை விட அதிகம் இந்த மார்க்கத்திற்காகப் பாடுபட்டவர்கள். எனவே அவர்கள் வேண்டுமென்றே இந்த மார்க்கத் திற்கு எதிராகச் செயல்பட்டிருக்கமாட்டார்கள் என்று நம்ப வேண்டும். மார்க்கத் திற்கு அந்த நல்லோர்கள் கொடுக்காத ஒரு விeக்கம் நமது மனதில் தோன்றுமானால், அது ஒரு வேளை சாத்தானின் சதியாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும்” அல்ஜன்னத் டிசம்பர் 2009 பக்கம் 48-ல் “ஜாக்’ தலைவர் எஸ்.கே. அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு… என்று எழுதியுள்e தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள வரிகள் இவை. தன்னுடைய இந்தக் கூற்றுக்கு எஸ்.கே. கொடுத்துள்ள குர்ஆன் வசனம் இதோ.

“”எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோரைப் போன்றவரா? (அல்குர்ஆன் 47:14)

புரட்டன் எஸ்.கே. எழுதியுள்e இந்த “”டயலாக்” புதிதல்ல; காலம் காலமாக மத்ஹபி னரும், தரீக்காவினரும் இமாம்கள் பற்றி கோரஸாகப் பாடி வரும் டயலாக் தான். அவர்கள் முன்சென்ற இமாம்களின் பெயர்களை வலிய இவர்களாக இழுத்து மக்களை வழிகெடுத்தார்கள்; வழிகெடுத்து வருகிறார்கள். புதிய “ஜாக்” மத்ஹபைக் கண்ட எஸ்.கே. அரபு நாட்டில் “ஸலஃபி” பிரிவுக் கொள்கையை நிலைநாட்டிய புரோகிதர்கçe “முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள்” என அடைமொழியிட்டு அவரை நம்பியுள்ள அப்பாவிகளை வழி கெடுக்க முற்பட்டுள்ளார்.

எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 இறைவாக்கே தெளிவாகத் திட்டமாக “”இறைவனின் தெளிவான பாதை” அதைப் பின் பற்றுங்கள் என்று கூறி இருக்க, இவரோ அதற்கு மாறாக “”முன் சென்ற கல்வியாளர்களின் பாதையப் பற்றிப் பிடியுங்கள்” என்கிறார். அல்குர்ஆன் 2:134, 141 இறைவாக்குகள் முன் சென்றவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்கள் சென்று போனவர்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்படாது; உங்களைப் பற்றித்தான் கேட்கப் படும் என்று நெத்தியடியாகக் கூறிக் கொண்டிருந்தாலும், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இப்புரோகிதர்களின் கண்களில் இந்த எச்சரிக்கை படவே படாது.

அல்குர்ஆன் 33:21,36 இறைக் கட்டளைகளும் அவர்களை விழிப்படையச் செய்யா. இதோ அந்த இறைவாக்குகள்:

எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாçeயும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.(33:21)

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (33:36)

அல்லாஹ்வே இப்படிப்பட்டவர்களுக்கு இருதயங்கள் இருந்தும் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; கண்கள் இருந்தும் பார்க்க மாட்டார்கள்; காதுகள் இருந்தும் கேட்க மாட்டார்கள் என்று 7:179-ல் கூறி இருக்க, நாம் எப்படி மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு தங்கள் உள்ளத்தை கற்பாறைகள் போல் கடினமாக்கிக் கொண்டவர்களைத் தட்டி எழுப்ப முடியும்? (பார்க்க 5:13) ஒரு போதும் முடியாது. எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 குர்ஆன் வசனமே “எவனுடைய (ஜாக், ததஜ போன்ற) செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்eதோ, இன்னும் எவர்கள் (கூலி வாங்கி) தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனரோ அவர்கள் அல்லாஹ் கொடுத்த நேர்வழியில் நடை போடுவது ஒரு போதும் சாத்தியமில்லை என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் அடித்துக் கூறுகிறது.

புரோகிதர் எஸ்.கே.யை நம்பி அவரது தவறான கொள்கையை ஏற்று “ஜாக்” என்ற 1987-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிeவு ஜமாஅத்திலும், புரோகிதர் பீ.ஜை.யை நம்பி அவரது தவறன கொள்கையை ஏற்று “ததஜ’ என்ற 2005-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிeவு ஜமாஅத்திலும் இருப்பதின் மூலம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் எங்கள் கூற்றையும் ஏற்காதீர்கள்.

அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 2:134, 141, 5:3, 3:19, 85, 7:3, 33:21,36,66,67,68, 59:7, 3:102,103,105, 6:153,159, 7:175-179 30:32, 42:13,14, 21:92,93, 23:52, 53,54,55,56, 49:14,16, 42:21, 20:123-129, 25:30 இறைவாக்குகளை மனிதர்களில் யாருடைய சுய விeக்கத்தையும் போட்டு மூளையைக் குழப்பாமல், சுயமாகப் படித்துச் சிந்தித்து விளங்க முற்படுங்கள். அல்லாஹ்வே மார்க்கத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டதாக அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். அதற்கு மேலும் மனிதர்களின் விளக்கத்தை ஏற்பவர்கள் அல்லாஹ்வைவிட இந்த மனிதர்கள் தங்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று நம்புகிறார்கள் என்பது தான் அதன் பொருளாகும். அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களாக மனிதர்களை நம்புகிறவர்களை விட கொடிய ஷிர்க்கில்-இணைவைப்பில் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தித்து விளங்குங்கள். இல்லை என்றால் முடிவு….? 33:66,67,68 இறைவாக்குகள் கூறுகின்றன. நேரடியாகப் படித்து விளங்குங்கள். புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். வெற்றி பெறுங்கள்!

ஓரிறைக் கொள்கையை தகர்க்கும் ஒடுக்கத்து புதன்

ஸ்லாமிய ஹிஜ்ரா நாள்காட்டியில் ஸஃபர் மாதத்தில் அன்றைய அரபு மக்கள் வணிக நோக்கத்திற்காக சிரியா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனவே தான் இம்மாதத்திற்கு ஸஃபர்-பயணம் என்ற பெயர் வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. இம்மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அந்த மாதம் (ஸஃபர்) பீடை மாதம் என்ற நம்பிக்கை தமிழக முஸ்லிம்களில் சிலரிடம் இருந்து வருகின்றது. இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி நம்புவதற்கும், அதன் அடிப்படையில் செயல்படுவதற்கும் அனுமதி உண்டா? என்று அல்குர்ஆன் நபிவழி அடிப்படையில் நாம் ஆய்வு செய்வதற்கு முன், இது ஒரு மூட நம்பிக்கை தான் என்பதற்குரிய வேறு சில காரணங்கçeப் பார்ப்போம்.

ஒரு நேரம், ஒரு நாள், ஒரு மாதம் எல்லோருக்கும் நன்மை செய்யக்கூடியது என்று நம்புவதும், அல்லது எல்லோருக்கும் கெடுதி செய்யக்கூடியது என்று நம்புவதும், இறைவன் ஏற்படுத்தியுள்e நியதிக்கு மாற்றமானதாகும். ஒருவருக்கு மிகவும் நன்மைகள் வந்தடைந்த நாள், இன்னொரு வனுக்கு கேடுகள் வந்தடைந்த நாளாக இருப்பதைத் தான் நடைமுறையில் நாம் காண முடிகிறது. ஒரு நாளில் ஒருவருக்கு அழகான குழந்தை பிறந்திருக்கும்; அவருக்குப் பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் அதே நாளில் மரணமடைந்திருப்பார். நல்லநாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் நல்லவையே நடக்க வேண்டும்; கெட்ட நாள் என்று ஒன்று இருக்குமானால் உலக மக்கள் அனைவருக்கும் அந்த நாளில் கெட்டவை மட்டுமே சம்பவிக்க வேண்டும். எந்த நாளாக இருந்தாலும் அதில் சிலருக்கு நல்லவை ஏற்படுவதும், சிலருக்கு கெட்டவை ஏற்படுவதும் தான் நடைமுறை உண்மை. இதைப் புரிந்து கொள்ள பெரிய ஆதாரம் தேவையில்லை. தங்கள் வாழ்க்கை யிலேயே அனைவரும் அனுபவரீதியாக உணர முடியும்.

ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் நோய் வாய்ப் பட்டதினால் அந்த மாதமே பீடை மாதம் என்றால், ஸஃபர் மாதத்தில் நபியவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத் பயணம் மகத்தான வெற்றியை ஏற்படுத்தியுள்eதே. அந்த பயணத்திற்குப் பின்பு தான், இஸ்லாம் தனக்கென ஒரு நாட்டையே நிறுவ முடிந்தது; சிந்திக்க தெரிந்தவர்களுக்கு இவை போதுமானதாகும். இதே ஸஃபர் மாதத்தின் இறுதி புதன்கிழமையில் தான் நபியவர்கள் குணமடைந்து குளித்தார்களாம். அதனால் நாமும் ஒடுக்கத்துப் புதன் அன்று குளித்து நமது முஸீபத்துக்களை நீக்க வேண்டுமாம். இந்த மூட நம்பிக்கையின் பெயரால் பல மடமைகள் நடக்கின்றன. அதாவது அன்றைய தினம் கடல், குளம், ஏரி, அருவி போன்ற நீர்நிலைகளில் குளிப்பது, பனை ஓலை, பீங்கான் தட்டுகளில் ஏதேதோ எழுதி கரைத்துக் குடிப்பது போன்ற நடவடிக்கைகள் இஸ்லாத்திற்கு நேர் எதிரானதாகும். அந்த நளை பீடை நாள் என்று ஒதுக்கு வது அல்லாஹ்வுக்கு இணை வைப்பதான செயலாகும்.

அல்லாஹ் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதமின் மகன் என்னை வருத்தப்படுத்துகிறான். (அதாவது) காலத்தை அவன் திட்டுகிறான். ஆனால் நானோ காலமாக இருக்கிறேன். காலத்தின் அனைத்து அதிகார மும் என் கைவசமே உள்ளது. இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச் செய்கிறேன். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரழி) நூல்: புகாரி 5/4826, 6/6181.

அறியாமைக் கால அரபு மக்கள் எது நடந்தாலும் அதைக் காலத்துடன் இணைத்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலம்-தான் அவரை அழித்து விட்டது; மோசமான காலம்; நாசமான காலம் என்றெல் லாம் அறியாமைக்கால மக்கள் பேசி வந்தனர். காலம் என்பது சம்பவங்கள் நிகழும் ஒரு நேரமே தவிர, அதற்கு ஆக்குகின்ற, அழிக்கின்ற ஆற்றல் எதுவும் கிடையாது. இரவு பகல் மாற்றமே காலமாகும். அப்படியிருக்க, ஒருவர் காலத்தை சபிக்கின்றார் என்றால், காலமாற்றத்தை உருவாக்கும், ஆக்கத்தையும், அழிவையும் ஏற்படுத்தும் அல்லாஹ்வையே அவர் சபிக்கின்றார் என்று அர்த்தம். அல்லாஹ்வை அவர் சபிப்பதன் மூலம் அல்லாஹ்வுக்கு எந்த தீங்கையும் அவர் ஏற்படுத்திட முடியாது என்றாலும், அல்லாஹ்வின் கோபத்திற்கு அவர் ஆளாகித் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார். எனவே தான் அல்லாஹ் நானே காலமாக இருக்கிறேன், அதாவது கால மாற்றத்தை ஏற்படுத்துகின்றவன் என்கிறான். (1:பத்ஹுல் பாரி)

ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் பாதுகாவலன் என்று (நபியே) கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ்வின் விதியை மாற்றக் கூடிய ஆற்றல் கடல், குளம், ஏரி, அருவிகளில் குளிப்பது, மற்றும் ஓலை, தட்டுகளில் எழுதி கரைத்துக் குடிப்பது இவற்றில் இருப்பதாக நம்புவது ஷிர்க் (இணை வைத்தல்) ஆகும். குறிப்பிட்ட தினத்தில் முஸீபத்து இறங்கினாலோ, அவற்றின் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்றிருந்தாலோ நபி(ஸல்) அவர்களை விட வேறு யார் அதை அறிவித்துத் தர முடியும்? ஏனெனில் (இறை நம்பிக்கையாளர்கள்) உங்களிலிருந்து ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கிறார். நீங்கள் துன்பப்படுவது அவருக்கு மிக்க வருத்தத்தை ஏற்படுத்தும். மேலும் அவர் உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். இறைநம்பிக்கையளர்கள் மீது கருணையும் இரக்கமும் உடையவர் என்று அல்லாஹ் தனது நெறி நூலாகிய அல்குர்ஆனில் தவ்பா என்ற 9வது அத்தியாயத்தில் 128வது வசனத்தில் கூறுவதை சிந்திப்பீர்களாக!

அகில உலகத்திற்கு அருட்கொடையாக அனுப்பப்பட்டவர், நம்பிக்கையாளர்கள் மீது இரக்கமுடையவர், நம்பிக்கையாeர்கள் துன்பப்படுவதை சகிக்காதவர் இந்த நாளின் முஸீபத்தை பற்றி அறிவிக்காமல் சென்றுவிட் டார்களா?

சின்ன நகஸு(சு), பெரிய நகஸு(சு) என்றெல்லாம் கணித்து மக்களுக்குத் தொண்டு(?) செய்கிறோம் என்று கூறுகின்றவர்களும், பால்கிதாபு, மோர்கிதாபு என்று சொல்லி மக்களை மடமையிலேயே நீடித்திருக்க வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளவர்களும் கொஞ்சம் சிந்திப்பீர்களாக!

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தெளிவு படுத்தியுள்ளார்கள்: என்மீது சொல்லப்படும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது சொல்லப்படும் பொய்யைப் போன்ற தன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்!

சொல்லப்படும் பொய்யைப் போன்றதன்று, யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்! அறிவிப்பாளர்: முகீரா(ரழி) புகாரி: 1291

ஒடுக்கத்துப் புதனுக்கு சொல்லபப்படுகின்ற காரணமே முதலில் சரியில்லை:

ஸஃபர் மாதத்தின் இறுதியில் குளித்து நபி(ஸல்) அவர்கள் குணமடைந்தது பூரண குணமல்லவே, அதற்கு இருவாரங்கள் கழித்து அவர்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டனரே! (இன்னாலில்லாஹி…) சரியான அறிவிப்பின் படி வியாழக்கிழமை அன்று குளித்து விட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று மக்களுக்கு நீண்ட பிரசங்கம் (ஜும்ஆ) செய்தார்கள் என்று தானே உள்ளது (ஆதாரம்: அல்பிதாயா, வன்னி ஹாயா) இந்த அடிப்படையில் ஓடுக்கத்து வியாழன் என்றெல்லவா சொல்ல வேண்டும்?

அன்றைய அரபு மக்கள் ஷவ்வால் மாதத்தை பீடை மாதமாகக் கருதி இருந்தனர். அந்த நாளில் எந்த நல்ல காரியங்களையும் நடத்தாது இருந்தனர். மடமை எண்ணத்தை தகர்த்தெறியும் வகையில் அறிவுப் பேரொளி அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள், நான் வ்வாலில் தான் திருமண முடிக்கப்பட்டேன். ஷவ்வாலில் தான் என் இல்லறத்தைத் துவங்கினேன். நபி(ஸல்) அவர்களுக்கு என்னை விட உகந்த மனைவியாக யார் இருந்தார்கள்? என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம், அஹ்மத்.

………..நீங்கள் பீடை மாதம் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்ற ஷவ்வாலில் திருமணம் முடித்த நான் எவ்வeவு மகிழ்வோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரழி) கேட்டது இன்று ஸஃபர் மாதத்தை பீடையாகக் கருதுவோருக்கு பொருந்தாதா? சிந்தியுங்கள்!

இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் இந்த ஒடுக்கத்து புதனில் புதைந்து இருக்கின்றன. இக்கேள்விகள் அனைத்தும் சாதாரணமானவை அல்ல; இறை நம்பிக்கையா? இறை நிராகரிப்பா (குஃப்ரா)? என்பதை எடை போடும் ஜீவாதார மான கேள்விகள்.

எனவே ஒடுக்கத்து புதனை ஓரங்கட்டு வோம்; அதன் நிழலில் கூட நிற்க மாட்டோம் என சபதம் ஏற்போம். அல்லாஹ் போதுமானவன்.

நாத்திகர்களுக்கு ஒரு நீண்ட பகிரங்கக் கடிதம்!

அபூ அப்தில்லாஹ்

ஜனவரி தொடர் : 9

ண்மை இதழ் ஆசிரியர் திரு. கி.வீரமணி அவர்களே, அந்நஜாத்திற்குப் பதிலடி என மூட நம்பிக்கைகளைப் பகுத்தறிவு என கிறுக்கியுள்ள திரு.ந.வெற்றியழகன் அவர்களே உண்மையை-சத்தியத்தை – நேர்வழியை உள்ளது உள்ளபடி மிகச் சரியாக அறிந்து அந்த நேர்வழியில் நடப்பவர்களுக்கே இறுதி வெற்றி என நான் நல்வாழ்த்துக் கூறி ஆரம்பிக்கிறேன்.

வணங்கி வழிபடும் சிலையும் கல்லுதான், மிதிபடும் படியும் கல்லுதான். கல்லை தெய்வமாக கற்பிப்பவன் முட்டாள், அயோக்கியன்; கல்லை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று முழக்கமிட்டு வரும் நீங்கள், சீர்திருத்தவாதிகளாக நம்பியவர்களுக்கு சிலைகள் வடித்து மாலை மரியாதை செய்து வழிபட்டு வருவது எவ்வகையைச் சார்ந்தது என்று கூறுவீர்களா? இக்கற்சிலைகள் தான் இன்னும் ஐய்யாயிரம், பத்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் சாமி சிலைகளாக புரோகிதர்களால் உருமாற்றம் பெறுகின்றன என்பதை விளங்க முடியாத நீங்கள், உங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்வது சரியா? இப்படி ஞாபகார்த்தமாக, மரியாதை நிமித்தம் வடிக்கப்பட்ட பல கற்சிலைகள் தான் இன்று சாமி சிலைகளாகி வணங்கப்பட்டு வருகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள். இதை அல்குர்ஆனின் நூஹ் (நோவா) 71:23 இறைவாக்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் விளக்கமாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரீயில் பதிவான செய்தியில் நூஹ் இறைத்தூதரின் இனத்தவரில் வாழ்ந்து மறைந்த பெரியார்கள்-நல்லவர்கள் இறந்தபோது ஷைத்தான் “இவர்கள் இருந்த இடங்களில் ஒவ்வொரு சிலையை நட்டு அதற்கு அவர்களின் பெயரிடுங்கள் என்று அவர்களின் இனத்தவர்களைத் தூண்டினான். அவர்களும் அவ்விதமே செய்தனர்.

ஆனால் அக்காலை அவற்றிற்கு மாலை மரியாதை செய்யப்பட்டதே தவிர அவை வணங்கப்படவில்லை. அக்காலத்தவர் இறந்து விட்ட பின்னர் அவர்கள் பற்றிய விபரங்கள் மறைந்து அக்கற்சிலைகள் தெய்வங்களாக வணங்கி வழிபடக் காரணமாயின.

இதே நிலையில்தான் இன்றைய போலி பகுத்தறிவாளர்கள் இருக்கின்றனர் என்று கூறினால் அதில் தவறு உண்டா? அன்று நோவா இறைத்தூதரின் இனத்தவர்களை ஷைத்தான் வழி கெடுத்தது போல், இன்று இந்தப் போலி பகுத்தறிவாளர்களை ஷைத்தான் வழிகெடுக்கிறான் என்று கூறினால் அது தவறா?

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்றோர் மறைந்து அரை நூற்றாண்டு கழியு முன்னே இதய தெய்வம், கண்கண்ட தெய்வம் என்று அவர்களின் உருவச் சிலைகள் இன்று தெய்வ அந்தஸ்து பெற்று மக்கள் வணங்கி, வழிபடுவதையும் பார்க்க முடிகிறது. ஆம்! 1431 ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவாக விளக்கிய ஒரு பெரும் வழிகேட்டை தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்பவர்களின் பகுத்தறிவின் லட்சணத்தை இப்படி வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அதற்கு மாறாக இறைவனின் இறுதித் தூதர் மறைந்து இன்றைக்கு 1420 ஆண்டுகள் ஆகியும் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவரின் சிலை இருக்கிறதா? அல்லது உலகின் எந்த மூலை முடுக்கிலாவது அவரது சிலை இருந்து காட்ட முடியுமா? அவரைப் போல் சொன்னதை செய்தவரையும், செய்ததைச் சொன்னவரையும் காட்ட முடியுமா? அவரால் சொல்லப்படாமல், செய்து காட்டப்படாமல் விடப்பட்ட ஓர் அற்ப சீர்திருத்தத்தையும் அதன் பின்னர் வேறு எந்த பெரிய ராவது, அறிஞராவது சுட்டிக்காட்டி செய்ததை இப்போலி பகுத்தறிவுவாதிகளால் காட்ட முடியுமா? நிச்சயமாகக் காட்ட முடியாது. அந்த சீர்திருத்தச் செம்மல் தான் ஐம்புலன்களுக்கு அடைபடாத, அகில உலகங்களையும் படைத்து நிர்வகித்து வரும் தன்னந்தனியனான, இணை துணை இல்லாத ஓரிறைவன் இருக்கிறான் என்று மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

dஅது மட்டுமா? நான் அந்த இறைவனின் அடிமையும் தூதரும் ஆவேன் என்றே கூறினார்கள். அவருக்கு முன்னாலும் ஆதம், நோவா, ஏப்ரஹாம், ஜாகப், ஜோசஃப், மோஸஸ், ஜீஸஸ் போன்ற எண்ணற்ற இறைத் தூதர்கள், ஐம்புலன்களுக்குள் அடைபடாத ஓரிறைவன் இருக்கிறான். நாங்கள் அந்த இறைவனின் அடிமைகளும் தூதர்களும் ஆவோம் என்றே கூறினார்கள். அவனை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும். அவனுக்கு இணை துணை இல்லை என அக்கால மக்களுக்குப் போதித்தார்கள்.

அப்படிப்பட்ட மனிதப் புனிதர்களை, ஜாம்பவான்களை ஏற்று அவர்களின் போதனைப்படி நடப்பது பகுத்தறிவா? அல் லது அவர்களது அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் இவற்றிற்கு ஏணி வைத்தாலும் எட்டாத அறிவு, ஆற்றல், செயல்பாடுகள் அனைத்திலும் குறைபாடுடையவர்கள் ஐம்புலன்களுக்குள் அடைபடும் பொருள்கள் மட்டுமே உள் பொருள், ஐம்புலன்களுக்கு எட்டாதவை இல்பொருள் என்று விளங்காது புரியாது சொன்னவர்களை நம்பி அதன்படி நடப்பது பகுத்தறிவா? சொல்லுங்கள்.

ஆயினும் போலிப் பகுத்தறிவளர்களாகிய நீங்கள் நம்பிக்கை வைத்துள்e அந்தப் பெரியார்களைக் குறை சொல்ல முடியாது. அதற்கு முழுமுதல் காரணம் இறைவனின் இறுதித் தூதரின் மறைவுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக முஸ்லிம் சமுதாயத்திலும் புகுந்துகொண்ட முஸ்லிம் மத குருமார் களேயாகும். காரணம் மனிதன் என்று படைக்கப்பட்டானோ, பல்கிப் பெருகினானோ அவர்களுக்கிடையில் வந்து ஓரிறைவனையே வணங்கி வழிபட வேண்டும், அவனது கட்டளைகள்படியே நடக்க வேண்டும் என்று போதித்த இறைத் தூதர் மறைந்த மிகக் குறுகிய காலத்திலேயே பல கடவுள்கள் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுக்கும் புரோகிதர்கள் மக்களிடையே புகுந்து அந்த இறைத் தூதர் போதித்த ஓரிறைக் கொள்கையை திரித்து வளைத்து பல தெய்வக் கொள்கையாகப் புனைந்து மக்களை வழி கெடுத்தார்கள். ஷைத்தானும் அவனது சபதப்படி அப்புரோகிதர்களுக்கு துணையாக நின்று அவன் புகும் நரகிற்கு ஆள் சேர்த்தான். மக்களின் பெருங்கூட்டம் அப்புரோகிதர்கள் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள்.

அடுத்து ஓர் இறைத் தூதர் வந்து மீண்டும் ஓரிறைவனைப் பற்றிய சத்தியத்தை-நேர் வழியைப் போதிப்பார்கள். அப்போது வழி கேட்டில் சென்று கொண்டிருப்பவர்களில் ஒரு சிறு கூட்டம் நேர்வழிக்கு வரும். இப்படி பல்லாயிரம் இறைத் தூதர்கள் காலத்திற்குக் காலம் வந்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்கு ஓரிறைவனைப் பற்றியும், நேர்வழி பற்றியும் போதித்தார்கள். இப்படிக் காலத்திற்கு காலம் ஒரு சிறு கூட்டம் நேர் வழிக்கு வருவதும் அந்த இறைத் தூதர்களுக்குப் பின்னால் இப்புரோகிதர்களின் தூண்டுதலால் அதில் பெருங்கூட்டம் மீண்டும் வழிகேட்டில் செல்வதும் தொடர்ந்தது, தொடர்கிறது.

இப்படித்தான் எண்ணற்ற மதங்கள் உலகில் தோன்றின. ஓரிறைவனுக்கு மாறாக பல கடவுள்கள் வழிபாட்டை போதிக்கும் அம்மதங்களை கற்பனை செய்து போதித்தவர்கள் கடவுளின் பெயரால் மக்களை மயக்கி வழிகெடுத்து அதன் மூலம் வயிறு வளர்க்கும் புரோகிதத் தொழிலே இவ்வழிகேட்டிற்குக் காரணமாக இருக்கிறது. பிறந்த குழந்தையின் வளர்ச்சி சுமார் 21 வயதளவில் பூர்த்தி அடைந்து அது இறக்கும் வரை அந்நிலை நீடிப்பது போல், இறைத்தூதர் ஆதத்தின் காலத்தில் குழந்தைப் பருவமாக இருந்த நேர்வழி- இஸ்லாம் இறுதி இறைத் தூதரோடு வeர்ச்சி முற்றுப் பெற்று உலகம் அழியும் வரை அதுவே சாந்தி மார்க்கமாக இருக்கிறது. இந்த உண்மையை அல்குர்ஆன் 5:3, 3:19, 83,84,85, 42:13 வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் முன்னைய சமுதாயங்களை, கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்தும் புரோகிதர்கள் எப்படி வழி கெடுத்தார்களோ அதே போல் நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களிடையேயும் கடவுள் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் இப் புரோகிதர்கள் சட்ட விரோதமாக, திருட்டுத் தனமாகப் புகுந்து கொண்டு மக்களை வழி கெடுத்து வருகிறார்கள்.

நமது இந்திய நாட்டில் பெரும்பான்மையினராக இருக்கும் ஹிந்துக்களிடம் காணப்படும் அனைத்துவகை வழிகேடுகள், மூடநம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இவற்றை அரபி பதங்களைச் சொல்லி முஸ்லிம்களிடையே அரங்கேற்றி வருகிறார்கள் முஸ்லிம் மதப்புரோகிதர்கள்.

நமது நாட்டு முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர், உயர் ஜாதி மக்களால் தாழ்த்தப்பட்டவர்களாக, இழிஜாதிகளாக, தொட்டால் தீட்டு, பட்டால் தீட்டு என நாயிலும் கேடாக மதிக்கப்பட்ட மக்கள், அந்த இன இழிவைப் போக்கிக் கொள்ள முஸ்லிம்களாக ஆனவர்கள். அல்குர்ஆன் 49:14-ல் இறைவன் கூறுவதுபோல், இறை நம்பிக்கை உள்ளத்தில் புகாத நிலையில் முஸ்லிம்களானவர்கள். அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல் மனம் மாறவில்லை. எனவே அவர்கள் ஹிந்து மதத்தில் இருக்கும்போது வணக்க வழிபாடுகளாக கடைபிடித்து வந்த மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அநாச்சாரங்கள் அனைத்தையும் அரபி பெயர்களுடனும், அல்ஃபாத்திஹா என்று வழிகேட்டில் இட்டுச் செல்லும், அரபியில் பித்அத் என்ற இறைத்தூதர் காட்டித்தராத, நரகிற்கு இட்டுச் செல்லும் புதியவற்றை அரங்கேற்றி வருகிறார்கள். வயிற்றுப் பிழைப்பைக் குறியாகக் கொண்ட முஸ்லிம் மதப் புரோகிதர்களும், இச்சடங்கு சம்பிரதாயங்கள் மூலம் அவர்களுக்கு கொழுத்த வருமானம் கிடைப் பதால் அவர்களே முன் நின்று இவ்வழி கேட்டுச் சடங்குகளை அரங்கேற்றி வருகிறார்கள். நீங்கள் பெரியார்களாக, அறிஞர்களாக மதிக்கும் அறிஞர்களும் இந்த மூட நம்பிக்கைகளையும், மூட சடங்கு சம்பிரதாயங்களையும், அநாச்சாரங்களையும் பார்த்தே இஸ்லாமும் மற்ற மதங்களைப் போன்ற மூட நம்பிக்கைகள் கொண்டதே, மக்களை வெறி கொள்eச் செய்யும் அபின் போன்றதே என்ற தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

மேலும் அனைத்து மக்களுக்குமாக இஸ்லாம் என்ற இறைவன் கொடுத்த வாழ்க்கை நெறி பற்றி நாத்திகத்தைப் போதித்த அறிஞர்கள் தவறான எண்ணம் கொள்ள முஸ்லிம் மதப் புரோகிதர்கள் இன்னும் என்னென்ன தந்திரங்களைக் கடை பிடித்து வருகிறார்கள் என்பதை அடுத்துப் பார்ப்போம்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம்: “ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து அந்த இமாம் நான்தான், என்னைப் பின்பற்றுபவர்கள்தான் அந்த ஜமாஅத் என்று கூறி தக்லீத் செய்ய வைக்கும் அபூ அப்துல்லாஹ் என்ற அமீரை ……… அவர் விரிக்கும் தக்லீத் வலைகளை கிழித் தெறிந்து இஸ்லாம், முஸ்லீம் என்ற நிலையிலேயே செயல்படுவோம்” என்று ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகி இருக்கிறதே! இதற்கு என்ன விeக்கம்? ஈசா, பெட்டவாய்த்தளை, கமால், திருச்சி.

விeக்கம்: பொய்யன் பீ.ஜை.யால் இப்படியொரு தவறான கருத்து விதைக்கப்பட்டிருப்பதால், நாங்கள் எந்த ஜமாஅத்திலும் இல்லை; இஸ்லாம், முஸ்லிம் என்ற நிலையிலேயே செயல்பட வேண்டும் என்று சிலர் கூறி வருவதால், இதைத் தெளிவுபடுத்தும் கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. பிரசுரம் வெளியிட்ட சகோதரர் அந்நஜாத்தை நுனிப் புல் மேயாமல் முழுக்கவனத்துடன் படித்து வந்தால் இப்படியயாரு அபத்தமான ஒரு கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். 1986 லிருந்து இன்று வரை ஒரு சந்தர்ப்பத்தில் கூட நான் கூறுவதுதான் நேர்வழி; என்னைப் பின்பற்றுகிறவர்கள் தான் நேர்வழியில் இருக்கிறார்கள். எனது ஜமாஅத்து தான் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று ஒருபோதும் நான் கூறிய தில்லை. அப்படி ஒரு வழிகெட்ட போதனையை நான் கூறி இருந்தால், ஷைத்தானின் துணையுடன் ஒரு பெருங்கூட்டத்தை என்னாலும் சேர்த்திருக்க முடியும். அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சூட்டிய பெயர் “முஸ்லிமீன்”, நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” முஸ்லிம்கள் அனைவரும் அதில் போய் இணைய வேண்டும் என்றே வலியுறுத்தி வருகிறேன். ஆயினும் 17:41ல் அல்லாஹ் கூறுவதுபோல் ஷைத்தானின் தூண்டுதலால் அவர்களுக்கு இது வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.

பீ.ஜை. அந்நஜாத்தின் ஆசிரியராக இருந்த பதினைந்து(15) மாதங்களிலும் “”அந்நஜாத்தையும் தக்லீது செய்யாதீர்கள்; குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் பார்த்து அதன்படி நடங்கள்” என்று பின் அட்டையில் வெளியிட மறுத்து வந்தார். ஆனல் நான் அந்நஜாத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றதிலிருந்து அந்நஜாத்தைக் கண்டிப்பாக தக்லீது செய்யாதீர்கள். குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களைப் பார்த்தே எடுத்து நடங்கள் என்று தொடர்ந்து எழுதி வருவதும் சகோதரரின் கண்களில் படவில்லை போலும்.

“”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்ய வேண்டும் என சில சகோதரர்கள் வற்புறுத்திய போதும், மற்ற இயக்கத்தினரைப் போல் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ நாம் பதிவு செய்து சொந்தம் கொண்டாட முடியாது. அது முஸ்லிம்கள் அனைவருக்குமாக அல்லாஹ்வின் கட்டçeப்படி அவனது இறுதித்தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் என்று நான் தெளிவுபடுத்திய பின்னரும், ஒரு சிலர் அதை ஏற்காமல் நம்மை விட்டுப் பிரிந்து சென்று அவர்களாக “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அரசில் பதிவு செய்து கொண்டு, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ரிஜிஸ்ட்டர்ட் ஜமாஅத் என்று செயல்பட்டு, பின்னர் அது காணாமல் போனதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார்.

அப்போது வேறு சில சகோதரரர்கள் நீங்கள் தான் முதலில் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று ஆரம்பித்தீர்கள். எனவே அவர்க எதிர்த்து வழக்குத் தொடருங்கள் என வற்புறுத்திய சமயத்திலும், “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” நான் ஆரம்பித்த ஜமாஅத் அல்ல; இறுதி இறைத்தூதர் முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்ற ஜமாஅத். எனக்கு உரிமை இல்லாத “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐ உரிமை கோரி நான் வழக்குத் தொடர முடியாது என்று கூறி மறுத்துவிட்டதையும் சகோதரர் அறியாமல் இருக்கிறார் போலும். ”தக்லீத் வலையை கிழித்தெறிவோம்” என முழக்கமிடும் சகோதரர் பொய்யன் உதிர்த்தவற்றை அப்படியே தக்லீது செய்வதுதான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அவர்தான் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்துதான் என்று வாந்தியெடுத்ததை அப்படியே விழுங்கியவராக முகல்லிதாக சகோதரர் இப்படி ஒரு பிரசுரத்தை வெளியிட்டுள்ளார்.

அதுபோல் “அமீர்” என்பவர் ஆட்சி அதிகாரம் உள்ளவர் என்று உeறியதையும் அப்படியே தக்லீது செய்து தக்லீது மறுப்புப் பிரசுரம் வெளியிட்டுள்ளார். அவருக்கும் அவரைப் போன்ற அறிவீனமான சிந்தனையுடையவர்களுக்கும் விeக்கம் கொடுப்பது நமது கடமை என்பதால் அதைத் தெளிவு படுத்துகிறோம்.

அல்குர்ஆன் அந்நிசா 4:59 இறைக் கட்டளை “அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; அவனது தூதருக்கும், உங்களில் அதிகாரம் வகிப்பவருக் கும் வழிப்படுங்கள்” எனத் தெளிவாக நேரடியாகக் கட்டçeயிடுகிறது. உண்மையான இறை நம்பிக்கையாeர்கள் அல்லாஹ்வின் இந்த கட்டளைக்கு 2:285, 4:46-ன் பிற்பகுதி, 5:7, 24:51-ல் காணப்படும் எச்சரிக்கைப்படி “கேட்டோம். வழிப்பட்டோம்” என்று அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். பொய்யனும், அவரை தக்லீது செய்கிறவர்களுமே 2:93, 4:46 முற்பகுதியில் காணப்படுவது போல், சுய விளக்கம் கூறி கேட்டோம் மாறு செய்வோம்” என்று செயல் பட முடியும்.

இந்த அடிப்படையில் தான் அந்த பொய்யன் ஆட்சி அதிகாரம் உள்eவர்கள் மட்டுமே அமீராக முடியும் எனப் பிதற்றுகிறார். சகோதரரும் அதை அப்படியே ஏற்று வெளிப்படுத்தியுள்ளார். மற்றபடி சிறிது சிந்தித்தாலும் அல்லா ஹ்வால் அவனது தூதர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆட்சி அதிகாரம் இருந்ததா? விரல்விட்டும் எண்ணும் அeவில் ஒரு சிலருக்கு மட்டும்தானே ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டது. அப்படியானால் ஆட்சி அதிகாரம் கொடுக்கப்படாத பெரும்பாலான நபிமார்கள் தங்களின் சமூகத்திற்குத் தலைமை தாங்கவில்லையா? அமீராக இருக்கவில்லையா? அவர்களை நபியாக ஏற்றவர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவில்லையா? சில நபிமார்கள் பின்னால் வெகுசிலர் தானே அணி வகுத்தார்கள். அவர்களை அல்லாஹ் நேர்வழி நடப்பவர்களாக ஏற்கவில்லையா? என்று சிந்தித்தாலும், நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த 13 வருடங்களாக ஆட்சி அதிகாரம் இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். அப்போது நபி தோழர்கள் அவர்களை அமீராக ஏற்று ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருக்க வில்லையா? என்று சிந்தித்தாலும் ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக இருக்க முடியும் என்ற வாதம் எந்த அளவு அடி முட்டாள்த்தனமான வாதம் என்பதை விளங்க முடியும்.

இந்த பொய்யன் போன்றோர் தான் 49:16-ல் அல்லாஹ் குத்திக்காட்டுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்க முற்பட்டு 4:59-ல் அல்லாஹ் அதிகாரம் பெற்றவர்-அமீர் என்று சொல்லியிருப்பதை திரித்து வளைத்து ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீர்கள் என பிதற்ற முடியும். அப்படி மூளையில்லாமல் பிதற்றி 42:21 அல்லாஹ்வின் எச்சரிக்கைப்படி அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகும் கொடிய ஷிர்க்குடைய, அல்லாஹ் மன்னிக்காத பெரும் குற்றத்தைச் செய்ய முடியும். இதற்கு சகோதரரும் துணை போயிருப்பது தான் நமக்கு வேதனையளிக்கிறது. 1999 மார்ச் அல்முமீனில் பொய்யன் பீ.ஜை.யின் “அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையிலுள்ள அபத்தங்களையும், உளறல்களையும் 2008 மே அந்நஜாத் இதழில் தெளிவாக விளக்கி இருக்கிறோம். அந்த இதழை சகோதரர் முறையாக-கவனமாகப் படித்து விளங்கி இருந்தால் இப்படி ஒரு அறிவீனமான கருத்தை வெளியிட்டிருக்க மாட்டார். அந்த இதழிலும் அதன் 3-ம் பக்கத்தில் அந்நஜாத்தில் உள்ளதை மட்டும் படித்துவிட்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை அல்குர்ஆனில் பார்க்காமல் விடுவதால், இரண்டு தவறுகள் ஏற்பட்ட வாய்ப்புண்டு. ஒன்று அந்நஜாத், அபூ அப்தில்லாஹ் என்று தனி மனித வழிபாட்டிற்கு அது வழிவகுக்கும்; அல்லது இரண்டாவது அல்குர்ஆனின் வசனங்களையும் மனிதக் கருத்தாக எண்ணி புறக்கணிக்கும் நிலை (பார்க்க 25:30) உருவாகும். இரண்டுமே பெரும் ஆபத்தை விளைவிப்பவையே! அல்குர் ஆனுடன் நேரடித் தொடர்பை அவசியம் ஏற்படுத்திக் கொள்வோமாக! என்று தெளிவாக எழுதியுள்ளோம். இந்த நிலையில் சகோதரர் தனது அறிவை யாரிடம் கடன் கொடுத்தார்?

விமர்சனம் : குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்று ஒப்புக்கொண்டு மத்ஹபுகளை விட்டு வெளியேறிய பல சகோதரர்கள் எந்த இயக்கத்திலும் சேராமல், எந்த அமீருக்கும் வழிப்படாமல் தனித்துச் செயல்படுவதே நேர் வழி என எண்ணிச் செயல்படுகிறார்கள். இது சரியா? அப்துல்லாஹ், திருச்சி

விeக்கம்: எண்ணற்ற சகோதரர்கள் இப்படிப்பட்ட அறிவீனமான சிந்தனைக்கு அடிமைப் பட்டிருப்பதால் அதை விரிவாக விeக்குவது நமக்கு அவசியமாக இருக்கிறது. ஓர் அமீரின் கீழ் இயக்கமாக செயல்படுவது வழிகேடு; குர்ஆன், ஹதீஸுக்கு முரணானது என்ற நச்சுக் கருத்தால், பொய்யன் பீ.ஜை.யின் தொடர் உபதேசத்தால் பலர் மூçe சலவைச் செய்யப்பட்டுள்eனர். அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்படச் சொல்கிறார். அமீர் என்றால் ஆட்சி அதிகாரமுள்ளவராக இருக்க வேண்டும் போன்ற நச்சுக் கருத்துக்களை அவையாகும். இவை இரண்டுமே ஹிமாலயத் தவறுகளாகும்.

அபூ அப்தில்லாஹ் இயக்கமே இல்லாமல் செயல்பட வேண்டும் என்று என்றுமே சொன்னதில்லை. அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற உலகளாவிய பேரியக்கம் இருக்கும் நிலையில், ஜாக், ததஜ, இதஜ போன்ற மனிதக் கற்பனைகளில் உருவான ஒரு குறிப்பிட்ட எல்லைக் குட்பட்ட குட்டி, குட்டி இயக்கங்களில் செயல் படாதீர்கள். அப்படிப்பட்ட குட்டி குட்டி இயக் கங்களான பிரிவுகçe விட்டும் வெளியேறி விடுங்கள் என நபி(ஸல்) கட்டளையிட்டு ள்eதையே (தில்க்கல் பிர்க்கா) மீண்டும் மீண்டும் எடுத்து வைக்கிறோம். இதைப் பொய்யன் பீ.ஜை.யும் அந்நஜாத் ஆகஸ்ட் 1986 பக்கம் 12-ல் ஒரு விமர்சகர் “உங்கள் இயக்கம்” என்று விமர்சித்ததை மறுத்து “எங்களுக்கென்று இஸ்லாத்தைத் தவிர வேறு இயக்கம் இல்லை” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டு எழுதியவர்தான்.

1986-ல் அப்படி எழுதியவர்தான் 1987லிலே பல பல்ட்டிகள் அடித்து புதிதாக “ஜாக்’ மனிதக் கற்பனை இயக்கத்தை உருவாக்கியவர் இன்று 2010 வரை பல மனிதக் கற்பனை இயக்கங்கள் உருவாகக் காரணகர்த்தாவாக இருந்து வருகிறார். அந்தப் பொய்யன் “ஜமாஅத்துல் முஸ்லி மீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்; அதுவும் ஒரு பிரிவு ஜமாஅத்து தான் என்று கூறி வருவதை பல சகோதரர்களும் கண்மூடி ஏற்று, நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி விட்டுச் சென்ற “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐ அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என்று கூறிக் கொண்டு, இஸ்லாம், முஸ்லிம் என ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்பட வேண்டும் என வழிகேட்டில் செல்கிறார்கள். ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இல்லாமல் தனியாகச் செயல்படுவதும் வழிகேடு, மனிதக் கற்பனைகளில் உருவான பிரிவு ஜமாஅத்துகளில் செயல்படுவதும் வழிகேடு என்று குர்ஆன் ஹதீஸ் கூறுவதையே எடுத்துத் தருகிறோம்.

அல்குர்ஆன், “முஸ்லிம்’ எனத் தனித்துச் செயல்படச் சொல்லவில்லை. “முஸ்லிமீன்” முஸ்லிம்களில் உள்ளவன், முஸ்லிம் ஜமாஅத்தில் உள்ளவன் என்று கூறவே கட்டளையிடுகிறது. இந்த உண்மையை 3:102,103, 6:163, 10:72, 90, 22:78, 27:91, 39:12, 41:33, 46:15, 51:36 போன்ற இறைவாக்குகளை நடுநிலையோடு நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் உணர முடியும். இந்த இறைக்கட்டளைகள் அனைத்தும் முஸ்லிம் களில் ஒருவனாக அதாவது ஒன்றுபட்ட முஸ்லிம் ஜமாஅத்தில் ஒருவனாக இருந்து செயல்படக் கட்டளையிடுகின்றனவே அல்லாமல் தனித்து “முஸ்லிம்’ என்ற நிலையில் செயல்படக் கட்டçeயிடவில்லை என்பதை விளங்க முடியும்.

பொய்யன் பீ.ஜை. 1987-ல் நம்மைவிட்டுப் பிரிந்து சென்று “ஜாக்’ பிரிவு ஜமாஅத்தை அமைத்துச் செயல்படும் போது அது குர்ஆன், ஹதீஸுக்கு முரண், வழிகேடு என நாம் எழுதும்போது, “ஜாக்’ வழிகேடு அல்ல; நேர்வழி என நிலை நாட்ட நம்மோடு நான்கு அமர்வுகளில் விவாதித்தார். அந்த அமர்வுகளில் அல்குர் ஆன் நேரடிக் கருத்தை மறுத்து சுய விeக்கங்கள் கொடுத்து தனது வழிகேட்டை நேர்வழி என நிலை நாட்ட முற்பட்டார். “”ஹுவ சம்மாக்கு முல் முஸ்லிமீன்” என்ற 22:78-ன் அர்த்தத்தை அனர்த்தமாக்கினார். பிறை பற்றிய ஹதீஸில் “­ஹிதூ’ என்ற அரபி பதத்தை சாட்சி சொன் னார்கள் என்று கூறாமல் கூறினார்கள், சொன்னார்கள் என்று இருட்டடிப்புச் செய்தது போல், இங்கும் “உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான்” என்பதை உங்களை முஸ்லிம்கள் என சொன்னான்-கூறினான் என இருட்டடிப்புச் செய்தார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு பெயரிட்டான் என்பதை ஒப்புக்கொண்டுவிட்டு முஸ்லிம்கள் என்பதை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். முஸ்லிம்கள் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும், ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பதை முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பவர்களின் கூட்டமைப்பு என்றும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என விதண்டாவாதம் செய்தார். உடனே நாம் உங்களின் பெயர் என்ன என்று கேட்டோம். உடனே ஜைனுல் ஆபிதீன் என்றார். ஏன் உங்கள் பெயரை தமிழில் மொழி பெயர்க்காமல் அரபியிலேயே சொல்கிறீர்கள் என்று கேட்டோம். பீ.ஜை. திகைத்துப் போய் அது பெயர் என்றார். உடனேயே உங்கள் பெற்றோர் உங்களுக்கு சூட்டிய பெயரைத் தமிழில் சொல்லக் கூடாது; அல்லாஹ் இந்த சமுதாயத்திற்குச் சூட்டிய “முஸ்லிமீன்” என்ற பெயரை தமிழ்ப்படுத்த வேண்டும் என வாதிடுகிறீர்களே! இது உங்களுக்கே சரியாகத் தெரிகிறதா? என்று கேட்டோம்.

இப்படிப் பல விதண்டாவாதங்கçeச் செய்து தோற்றுப் போய் இறுதியில் “ஜாக்’ எனப் பெயரிட்டுள்eது தவறுதான்; இனி எங்கள் கூட்டங்களிலும், பத்திரிகைகளிலும் “ஜாக்’ என வெளியிடமாட்டோம். அமீரிடமும் (றீ.லு.) இதுபற்றிச் சொல்லிவிட்டு அடுத்த அமர்வில் இறுதி முடிவு எடுப்போம் என்று சொல்லிச் சென்றவர்தான் கடந்த 22 வருடங்களாக வருகிறார். இப்படி அவர் சொல்லும்போது சகோதரர் ஹாமித் பக்ரியும் அவருடன் இருந்தார். அவரே சாட்சி.

அல்லாஹ் சூட்டிய பெயரான “” முஸ்லிமீன்” “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பெயர் அல்லாத வேறு பெயர் இல்லை; கூடாது என்று 1988-ல் ஒப்புக்கொண்டவர் தான் கடந்த 22 வருடங் களில் பல பிரிவுப் பெயர்கள் ஏற்பட காரணமா யிருக்கிறார். அப்படிப்பட்ட பொய்யனின் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”-ம் ஒரு பிரிவுப் பெயர்தான்; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத், ஆட்சி அதிகாரம் உள்ளவர்கள் மட்டுமே அமீராக முடியும்; மற்றவர்கள் அமீர் என்று சொல்வது பித்தலாட்டம் என்ற மூளையற்ற முழக்கத்தை அப்படியே வேதவாக்காக (?) ஏற்றுக் கொண்டு பிரசுரம் வெளியிட்ட சகோதரர் போன்றவர்கள் இப்படிக் கூறித்திரிவது ஒன்றும் ஆச்சரியமான விடயமல்ல.

4:59 இறைவாக்கில் “வஅத்தீவுர் ரசூல வ உலில் அம்ரி மின்கும்” என்று இணைத்துக் கூறி இருப்பதே சமுதாய ஒற்றமையைக் கட்டிக் காக்க அமீருக்கு வழிப்படுவது அல்லாஹ்வின் கட்டளை;-கண்டிப்பாக எடுத்து நடப்பது கடமை என்பதை உணர்த்துகிறது. மேலும் இக்கட்டளையை வலியுறுத்தும் ஹதீஸ்கள் இதோ!

காய்ந்த திராட்சை போன்ற தலையை யுடைய அபிசீனிய நாட்டுக்காரர் உங்களுக்கு அமீராக இருந்தாலும், நீங்கள் அவருக்குச் செவிசாயுங்கள். கட்டுப்படுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள். அனஸ்(ரழி), புகாரீ.

அல்லாஹ்வின் நெறிநூலின்படி உங்களை வழி நடத்திச் செல்லும், கருத்த, உடல் ஊனமுற்ற ஓர் அடிமை உங்களுக்கு அமீராக இருந்தாலும் அவருக்கு செவிசாயுங்கள். கட்டுப் படுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். உம்முல் ஹுசைன்(ரழி) முஸ்லிம்.

பாவமான காரியத்தை ஏவாதவரை தான் விரும்பியவற்றிலும், விரும்பாதவற்றிலும் அமீருக்கு செவிசாய்த்து கட்டுப்படுவது முஸ்லிமான ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். அவர் பாவத்தை ஏவினால் செவிசாய்ப்பதோ கட்டுப்படுவதோ கூடாது அப்துல்லாஹ்பின் அம்ர்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

அமீருக்குக் கட்டுப்படுபவர் அல்லாஹ்வுக்கே கட்டப்பட்டவராவார் என்பது நபி மொழி. புகாரீ.

எங்கeது விருப்பிலும் வெறுப்பிலும் எங்க eது கஷ்டமான சூழ்நிலையிலும் இலகுவான சூழ்நிலையிலும் எங்கள் மீது பாரபட்சம் காட்டும் நிலையிலும் நாங்கள் அமீருக்கு செவிசாய்ப்போம்-கட்டுப்படுவோம் என்றும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவாகத் தெரியும் இறை நிராகரிப்பைக் காணாதவரை அதிகாரம் உடையவர்களிடம் போட்டி போடமாட் டோம் எனவும் நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் உடன்படிக்கை செய்தோம்.

உப்பாதாபின் சாமித்(ரழி) புகாரீ, முஸ்லிம்.

யார் தனது அமீரிடம் எதையேனும் கண்டு வெறுப்படைவாரானால் அவர் சகித்துக் கொள்வாராக! ஏனெனில் யார் அமீரை விட்டு ஒரு சான் அளவு வெளியேறிவிட்டாலும் அவர் அறியாமைக்கால மரணத்தைத் தழுவுவார் என இறைத் தூதர் (ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) புகாரீ.

பொய்யன் பீ.ஜை.யின் சுய விளக்கத்தைப் புறக்கணித்துவிட்டு நடுநிலையோடு 4:59 இறைவாக்கையும் மேலே எழுதப்பட்டுள்ள ஹதீஸ்களையும் படித்து விளங்குகிறவர்கள் 21:92, 23:52 இறைக் கட்டளைப்படி சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தாலும் ஆட்சி அதிகாரம் இல்லாத அமீராக இருந்தாலும் மார்க்கத்திற்கு உட்பட்டு அவருக்கு வழிப்பட்டு நடப்பது கட்டாயக் கடமை என்பதை விளங்க முடியும்.

ஆட்சி அதிகாரம் உள்ள அமீராக இருந்தால் மட்டும் அவருக்கு வழிப்படவேண்டும் என்ற பீ.ஜை.யின் சுய விeக்கம் சரி என்றால், குர்ஆனும், ஹதீஸ்களும் அந்த அமீருக்கு வழிப்படுவதை இந்த அளவு வலியுறுத்தத் தேவையே இல்லை. காரணம் அமீரது ஆட்சி அதிகாரத்திலுள்ள படைகளே அவர்களை பாவமான காரியங்களிலும் வழிப்பட வைத்து விடும். இந்த எச்சரிக்கைகள் தேவையே இல்லை.

இந்த எச்சரிக்கைகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் இல்லாத எண்ணற்ற நபிமார்களின் தலைமையில் நல்லடியார்கள் ஒன்றுபட்டிருந்தது போல், நபி (ஸல்) அவர்களின் ஆட்சி அதிகாரம் இல்லாத மக்கா வாழ்க்கையின் போது அவர்களின் தலைமையில் ஒன்றுபட்டிருந்தது போல், ஆட்சி அதிகாரம் இல்லாத அமீர்களுக்கு வழிப்பட்டு நடப்பதையே குறிப்பிட்டுக் கூறுகின்றன. நல்லாட்சி நடைபெறுவதற்கு மட்டுமே சமூக ஒற்றுமை என்ற பொய்யன் பீ.ஜை.யின் சுயக் கூற்று பெருந்தவறு. எந்த நிலையிலும் சமூக ஒற்றுமை மிகமிகப் பிரதானம் என்பதே குர்ஆன், ஹதீஸ் கட்டளை.

இதைக் கீழ்வரும் ஹதீஸ்கள் உறுதிப்படுத்துகின்றன. மூவர் பயணத்தில் புறப்பட்டாலும் அவர்கள் தம்மில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அபூதாவூது)

ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) கூறினார்கள். இதை அபூ சலமா நாஃபிவு இடம் கூறியபோது நீங்கள் எங்கள் அமீராக இருங்கள் என்று நாஃபிவு கூறினார். (அபூதாவூது)

மூவர் கொண்ட ஒரு பிரயாணக் குழுவில் அமீராக இருப்பவரிடம் ஆட்சி அதிகாரம் இருக்குமா? இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. இவ்வளவு தெளிவாக இருக்கும் நபிவழியை மறுக்கும் நோக்கத்துடன் பொய்யன் பீ.ஜை. இதற்குக் கொடுக்கும் சுய விளக்கம் என்ன தெரியுமா?

பிரயாணத்தில் தனியாகத் தொழுது விடாமல் அம்மூவரில் ஒருவர் இமாமத் செய்ய வேண்டும் என்றே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள் என்பதே அவரது மூளையற்ற சுய விளக்கம். பிரயாணத்தில் ஜும்ஆவும் கடமையில்லை. ஜமாஅத்தாகத் தொழுவதும் கடமையில்லை. நான்கு ரகாஅத்துகளை இரண்டாகச் சுருக்கியும், ளுஹர் அஸர் இரண்டையும் 2+2=4 என சேர்த்தும், மஃறிபு இஷா இரண்டையும் 3+2=5 என சேர்த்தும் தொழுவதற்குக் கட்டளையிட்ட நபி(ஸல்), பிரயாணத்தில் தனித்துத் தொழுது விடாமல் ஒருவர் இமாமத் செய்யட்டும் என கட்டçeயிட்டிருப்பார்களா? என்ற அற்பமான அறிவும் பொய்யன் பீ.ஜைக்கு இல்லை. இதில் இன்னும் பெரிய அறிவீனம்! மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய வேண்டுமாம். இதைவிட அறிவீனம் உண்டா? மூவரில் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். மூவரோ இருவரோ நிச்சயமாக இமாமத் செய்ய முடியாது. ஆயிரம் பேர் இருந்தாலும் ஒருவர்தான் இமாமத் செய்ய முடியும். இந்த அடிப்படை அறிவும் இல்லாமல் பிரயாணத்தில் மூவரில் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) கட்டçeயிட்டுள்ளதாக நபி(ஸல்) மீது அப்பட்டமான ஒரு பெரும் பொய்யைக் கூறக்கூடியவர், என்மீது பொய்யை இட்டுக் கட்டிக் கூறுபவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகத்தில் தேடிக் கொள்eட்டும் என்ற பல நபிதோழர்கள் மூலம் அறிவிக்கப்படும் மிகமிக ஆதாரபூர்வமான நபியின் எச்சரிக்கைப்படி தன்னுடைய இருப் பிடத்தை எங்கே தேடிக் கொள்ள நேரிடும் என்பதை அறிய முடியாத மூடரை அறிஞராக ஏற்றிருப்பவர்கள் சுயசிந்தனையுடையவர்களாக இருக்க முடியுமா? (பார்க்க புகாரீ 1291)

பிரயாணத்தில்தான் மூவராக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்படாத ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி முரண்பட நேரிடும். உதாரணமாக ஒருவர் பேருந்தில் செல்லலாம் என்பார்; மற்றொருவர் தொடர் வண்டியில் செல்லலாம் என்பார்; மூன்றாமவர் தனியாக சொகுசுந்தில் செல்லலாம் என்பார். இதில் எது ஒன்றும் குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரண் இல்லை. இங்குதான் ஒற்றுமை குலையாமல் ஒன்றுபட்டிருக்க ஓர் அமீர் தேவைப்படுகிறார். இதுவே நபி(ஸல்) அவர்களின் கட்டளையாகும். எந்த நோக்கத்திற்காக என்ன பணிக்காக ஒருவர் அமீராகத் தெரிவு செய்யப்படுகிறாரோ, அந்தப் பணிக்கான அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்படுகிறது. இதையே 4:59 இறைவாக்கு “அதிகாரம் வகிப்பவர்” எனக் கூறுகிறது.

மற்றபடி ஆட்சி அதிகாரம் உள்eவர் மட்டுமே அமீராக முடியும் என்பது பொய்யன் பீ.ஜை.யின் குர்ஆன், ஹதீசுக்கு முரண்பட்ட சுய கருத்தேயாகும். மேலும் இந்த 4:59 இறைவாக்கின் பிற்பகுதி அமீருக்கு வழிப்படுவதெல்லாம் குர்ஆன், ஹதீசுக்கு உட்பட்டு மட்டுமே; மார்க்க முரணான ஒரு உத்திரவை அமீர் கட்டளையிடுவாரானால் அதற்கு வழிப் படுவது கூடாது என்பதையும் தெளிவாக வலியுறுத்துகிறது. குர்ஆன் வசனமோ, ஆதாரபூர்வமான ஹதீசோ எடுத்துக் காட்டப் பட்டால், “சமீஃனா வ அதஃனா” “செவிமடுத்தோம் வழிப்பட்டோம்” என்று உடனடியாக அமீராக இருந்தாலும், அவரை அமீராக ஏற்று செயல்படுகிறவர்களாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஸ் கட்டளைக்கு வழிப்பட வேண்டும். அதற்கு மாறாக பொய்யன் பீ.ஜை. ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு சில குர்ஆன் வசனங்கள் இவர்களுக்கு சாதகமாக இருந்தால் போதுமா? என்று தெனாவட்டாக எழுதியதுபோல், இந்தச் சகோதரரும் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ஐயும் அதன் இமாமையும் பின்பற்றுங்கள் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்து …..” என தெனா வட்டாக எழுதியுள்ளார். இப்படிப்பட்டவர்களுக்கு அல்குர்ஆன் 17:41 கூறுவது போல்,

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைப் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விeக்கங்கçeக் கூறியுள்¼ளாம். எனினும் (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை. (17:41) என்று, தவறான வழியில் செல்பவர்களுக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது. ஆதம்(அலை) அவர்களை ஷைத்தான் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய வைத்தது போல், இவர்கçeயும் ஷைத்தானின் ஏஜண்டுகளான பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள் சுய விளக்கம் கொடுத்து ஏமாற்றி அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளை நிராகரிக்கச் செய்கிறார்கள்.

நடுநிலையோடு குர்ஆன் வசனங்களையும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களையும் படித்து விeங்குகிறவர்கள் தனித்துச் செயல்படுவதும் தவறு; வழிகேடு; ஜமாஅத்தாகத்தான் செயல் பட வேண்டும்; அதுவும் நபி(ஸல்) நடைமுறைப் படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீனில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தங்களுக்குள் ஓர் அமீரை தெரிவு செய்து அவரின் கீழ் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாகச் செயல் பட வேண்டும் என்பதை விeங்க முடியும்.

அப்படி ஒரு ஜமாஅத் இப்போது இருக்கிறதா? இல்லையே! என இப்புரோகிதர் திசை திருப்புகிறார். 25 வருடங்களுக்கு முன்னர் ஹனஃபி தொழுகை, ஷாஃபி தொழுகை என்று தான் தொழுது கொண்டிருந்தோம். நபி வழித் தொழுகை அன்று இருக்கவில்லை. நடைமுறையில் இல்லாமல் இப்புரோகிதர்களால் மறைக் கப்பட்டிருந்தது. இன்று நபிவழித் தொழுகையை எப்படி ஹயாத்தாக்கி இருக்கிறோம்? இதேபோல் தான் நபிவழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற ஒன்றுபட்ட ஜமாஅத்தை இப்புரோகிதர்கள் பல பிரிவு ஜமாஅத்துகளை கற்பனை செய்து நடைமுறைப்படுத்தி இல்லாமலாக்கி மறைத்து வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு நபியின் வருகையின் போதும் அல்லாஹ்வை மட்டும் வணங்குவது நடைமுறையில் இல்லாமலிருந்தது. பல கடவுள்கள் வணக்கமே காணப்பட்டது. பல கடவுள்கள் வணக்கம் பெரும் தவறு; ஓரிறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று நபிமார்கள் போதித்தவுடன் பல கடவுள்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கடவுளை மட்டும் வணங்குவது இன்று நடை முறையில் இல்லையே! நம்முன்னோர்களிடமும் இப்படிக் கேள்விப்பட்டதில்லையே (7:70,11:62,87,14:10, 28:36) என்று கூறியே நபிமார்களை நிராகரித்தார்கள். அந்த அளவு இப்புரோகிதர்கள் ஷைத்தானின் துணையுடன் ஆதத்தின் சந்ததிகளை ஓரிறை வணக்கத்தை விட்டு, பல கடவுள்கள் வணக்கத்தில் தடம் புரளச் செய்திருந்தார்கள். அதே போல் தான் புரோகிதனான பொய்யன் பீ.ஜை. நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” எங்கே இருக்கிறது என்று கேட்கும் அளவுக்கு முஸ்லிம் மதப் புரோகிதர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் பேரியக்கத்தை விட்டு மத்ஹபு, தரீக்கா, இயக்கங்கள், அமைப்புகள் போன்ற எண்ணற்றப் பிரிவுகளில் தடம் புரளச் செய்துள்ளனர். நபிவழித் தொழுகையை ஹயாதாக்கியது போல் நபி வழியான “ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ஐயும் இப்போது ஹயாத்தாக்கி முஸ்லிம் சமுதாயத்தை ஓரணியில் ஒன்று திரட்ட முடியாதா?

கேவலம்! இவர்களாகக் கற்பனை செய்து உருவாக்கிக் கொண்ட குட்டி, குட்டி இயக்கத்தின் பெயரால் கிçeத் தலைவர், வட்டத் தலைவர், மாவட்டத் தலைவர், மாநிலத் தலைவர் என உப தலைவர்களை அமைத்துக் கொண்டு, அந்தக் குட்டி குட்டி இயக்கத் தலைமைக்குக் கட்டுப்பட்டு செயல்பட முடிகிறதென்றால், அது சாத்தியம் என்றால், உலகளாவிய பேரியக்க மான, அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட, நபி (ஸல்)யால் நடைமுறைப்படுத்திக் காட்டப் பட்ட “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்”ல் நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், ஊர் என உப அமீர்களைத் தெரிவு செய்து செயல்பட முடியாதா? ஆனால் ஒரு வித்தியாசம். இவர்கeது கற்பனையில் உருவான புதிய இயக்கங்களில் முதலில் இயக்கத் தலைவர் அதன் பின்னரே, மாநில, மாவட்ட, வட்ட, ஊர் தலைவர்கள் நியமிக்கப்படுவார்கள். இப்புரோ கிதர்களால் இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்e ஜமாஅத்துல் முஸ்லிமீனில் குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு அந்தந்த ஊர்களில், ஓர் அமீரின் கீழ் கட்டுப்பட்டு செயல்படும் ஜமாஅத்கள் உருவாகிய பின்னர் வட்டம், மாவட்டம், மாநிலம் என அமீர்கள் தெரிவு செய்யப்படும் நிலையில் இருக்கிறோம்.

இந்த முயற்சி சரிவராது, நிறைவேறாது, கடினமான பணி என ஷைத்தான் பயமுறுத்துவான். ஆவதும், ஆவாததும் நம் கையில் இல்லை; அல்லாஹ் கையில் இருக்கிறது. நமது கடமை முயற்சி செய்வது மட்டும்தான் என்பதை விeங்கி முழு மூச்சாகச் செயல்பட்டால், நிச்சயம் அதற்குரிய பலன் உண்டு. எத்தனையோ நபிமார்கள் பின்பற்றுகிறவர்கள் ஒருவர்கூட இல்லாமல் தன்னந்தனியாக சுவர்க்கம் நுழைவார்கள் என ஹதீஸ்கள் வாயிலாக நாம் அறியும் போது நமக்கென்ன தயக்கம்? முழுமூச்சாக முயல்வோம். முடிவை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விடுவோம்.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட கூலிக்கு மாரடிக்கும் இப்புரோகிதர்களை விட்டும் மக்கçe விடுவித்து விட்டால், மக்கள் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து சிந்தித்து விளங்க ஆரம்பித்துவிட்டால் அது சாத்தியமாகலாம். ஒவ்வொரு நபியும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களின் வசீகர, உடும்புப் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். இறைவனின் இறுதி இறைத் தூதரும் அவர்கள் காலத்துப் புரோகிதர்களான தாருந்நத்வா உலமாக்களிடமிருந்தும், அவர்களின் தலைவனான அவர்களால் மதிப்புடன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என அழைக்கப்பட்ட அபூ ஜஹீலிடமிருந்தும் மக்களை விடுவிக்கவே பெரும் பாடுபட்டார்கள். அப்புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபட்டவர்க¼e சத்தியத்தை ஏற்று அதன்படி நடக்க முன் வந்தார்கள்.

இந்த நபிவழியைப் பின்பற்றித்தான் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டுள்ள இன்றைய ஜமாஅத்துல் உலமா மற்றும் அதைச் சார்ந்தவர்களையும், நாங்கள் தான் அரபி மொழி கற்ற ஆலிம்கள், எங்களுக்கே மார்க்கம் விளங்கும், மார்க்கத்தை மக்களுக்கு விளக்கும் அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசும் அபூ ஜஹீல் வாரிசுகளைக் கடுமையாகச் சாடி அவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டி வருகிறோம். பெருமை அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்ற உண்மையை அறியாது ஆணவம் பேசி, அணுவத்தனை ஆணவம் பேசுபவனும் சுவர்க்கம் நுழைய முடியாது என்ற நபியவர்களின் கடுமையான எச்சரிக்கையைப் புறக்கணிக்கும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? ஜாஹில்களாக இருக்க முடியுமா? என முடிவுக்கு வாருங்கள்.

விமர்சனம் : சிலர் மஹல்லா தலைவர்களான முத்தவல்லிகளை அமீர்களாக ஏற்றுச் செயல் பலாம் என்றும், சிலர் பள்ளி இமாம்களை அமீர்களாக ஏற்றுச் செயல்படலாம் என்றும் கூறகிறார்கள். குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் இது சரியா? இப்ராஹீம், திருச்சி.

விeக்கம்: சிலர் அந்தந்த மஹல்லா தலைவர் கçe அமீராக ஏற்றுச் செயல்படுங்கள் என்றும், சிலர் அந்தந்த மஹல்லா பள்ளி இமாமை அமீராக ஏற்றுச் செயல்படுங்கள் என்றும் அறிவுரை கூறுவது உண்மைதான். குர்ஆன், ஹதீஸ் வரையறைக்குள் அவர்கள் செயல்பட்டால் நிச்சயம் அவர்களை அமீராக ஏற்று அவர்களின் கீழ் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து எமக்கும் இல்லை.

ஆனால் பள்ளிகளில் இமாம்கள், முத்தவல்லிகள் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மனிதர்களால் கற்பனை செய்யப்பட்ட ஏதாவது ஒரு பிரிவிலேயே இருக்கிறார்கள். தில்க்கல் பிர்க்கா- அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் விலகிவிடுங்கள்; வெளியேறி விடுங்கள்; என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளைப்படி அவர்களை விட்டும் விலகும் கட்டாயத்திலேயே உண்மையான நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மேலும் பள்ளி இமாம்கள் கூலிக்கு தொழ வைப்பவர் களாகவே இருக்கிறார்கள். 36:21 இறைக் கட்டளை கூலி வாங்கும் அவர்கள் நேர்வழியில் இல்லை என்பதை உறுதிப்படுத்து கிறது. எனவே நேர்வழி நடக்க விரும்பும் ஓர் உண்மையான இறை நம்பிக்கையாளன் இன்றிருக்கும் மஹல்லா முத்தவல்லியையோ, பள்ளி இமாமையோ அமீராக ஏற்று அவர்களின் கீழ் செயல்பட முடியாது. அது ஒரு போதும் நேர்வழியாக இருக்காது.

ஆக ஒவ்வொரு முஸ்லிமான ஆணும், பெண்ணும் இயக்கமே வேண்டாம் என்று தனியாகச் செயல்படுவதும் நேர்வழி இல்லை; நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் மனிதக் கற்பனையில் உருவான பிரிவு-மத்ஹப்-இயக்கத் தலைவர்கçe அமீராக ஏற்று அவர்களின் கீழ் செயல்படுவதும் நேர்வழி இல்லை. அல்குர்ஆன் 7:3, 33:36,66,67,68, 59:7, 21:92,93, 23:52,53,54,55,56, 3:102,103,105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து 2:38,39 இறைவாக்குகள் கூறுவதுபோல் குஃப்ரிலாகி நாளை மறுமையில் நரகம் புகச் செய்யும் கொடிய பாவமான செயல்கள் என்பதை அறிந்து அந்த நிலையிலிருந்து தவ்பா செய்து மீள வேண்டும்.

ஈடேற்றத்திற்கு, மறுமை வெற்றிக்குரிய ஒரே வழி அல்லாஹ்வின் எண்ணற்ற கட்டçeகள் படியும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டல் மற்றும் கட்டளைப்படி தத்தம் பகுதிகளில் “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற உலகளாவிய பேரியக்கத்தில் தங்களுக்குள் ஓர் அமீரைத் தெரிவு செய்து அவரின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு செயல்படவேண்டும். 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒற்றுமையாகச் செயல்பட ஒவ்வொரு பகுதியினரும் தயாராகி விட்டால், இப்படித் தயாரான அனைத்துப் பகுதியினரும் ஒன்றி ணைந்து ஓர் அமீரை தங்களுக்குள் தெரிவு செய்து செயல்படத் தயாராகி விட முடியும். இப்படித்தான் முஸ்லிம்களுக்குள் ஒரே தலைமை ஏற்பட்டு 3:103 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் சூழ்நிலை உருவாகும்.

அதற்கு மாறாக, “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” ம் ஒரு பிரிவு ஜமாஅத்துதான், அபூ அப்தில்லாஹ் வின் ஜமாஅத் என பொய்யன் பீ.ஜை.யின் அறிவீனமான கூற்றை வேதவாக்காக(?) ஏற்று “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஜமாஅத்தை வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், ஷைத்தானின் தவறான உபதேசத்தால் அதில் மயங்கி, அல்லாஹ்வின் நேரடிக் கட்டளையை வெறுப்புக் கண்ணோட்டத்துடன் பார்த்து நிராகரித்த ஆதம்(அலை) அவர்களின், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக்கிய தவறான வழியை நேர்வழியாகக் கருதி செயல்படுகிறவர்களாக மட்டுமே இருக்க முடியும். இதையும் வல்லமை மிக்க அல்லாஹ் 17:41, 25:30, 41:17போன்ற இறைவாக்குகளில் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறான்.

விமர்சனம்:1999 மார்ச் அல்முபீனில் “”அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில், அமீரை மீறினால் என்ற குறுந் தலைப்பில்,

மேலும் அமீருக்குக் கட்டுப்படுவது வணக்க வழிபாடுகள் போல் வற்புறுத்தப்பட்டுள்ளதை மேற் கண்ட சான்றுகள் சந்தேகத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகின்றன. இது தலைவன் தொண்டனிடையே ஏற்படும் சாதாரண உறவு முறை அல்ல; விரும்பினால் கட்டுப்பட்டுவிட்டு விரும்பாத போது வெளியேறி விடும் கட்சித் தலைமை போன்றதுமல்ல. மாறாக அமீரிடம் எத்தகைய குறைபாடுகளைக் கண்டாலும் அவரை விட்டு விலகக் கூடாது. விலகுவது பாவம் என்ற அளவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இது விஷயத்தில் கூடுதலான ஆய்வையும் கவனத்தையும் நாம் செலுத்தியாக வேண்டும்.

அமீருக்குக் கட்டுப்படுவதை அறிந்து வைத் திருக்கும் நாம் நமது அமீர் யார் என்பதை முதலில் அறிந்து கொள்e வேண்டும். உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஒரே ஒரு அமீரா? பலர் இருக்க முடியுமா? ஒரே ஒருவர்தான் என்றால் அந்த ஒருவர் யார்? நாடுகள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் முஸ்லிம்களின் அமீர் யார்? அல்லது மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் அமீர்கள் இருக்கலாம் என்றால் அந்த அமீர்கள் யார்? இதை எப்படித் தீர்மானிப்பது?

ஒரு மாநிலத்தில் நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இஸ்லாமிய அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிக் கொண்டு அமீர்கçeயும் ஏற்படுத்தியுள்ளன. ஒவ்வொரு இயக்கமும் தத்தமது அமீருக்குக் கட்டுப்படுவது தான் மார்க்கக் கடமை எனக் கருதுகின்றன. பிரச்சாரமும் செய்கின்றன.

இன்னும் சொல்வதென்றால் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்eனர். பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? அமீருக்குக் கட்டுப்பட்டு நடக்க ஆசைப்படுபவன் இந்தக் கேள்விகளால் குழம்பிப் போகிறான். அமீர்கள் என்ற பெயரில் மக்கள் பிரிக்கப் பட்டு ஒற்றுமை கலைக்கப்படுவதைக் கண்டு தடுமாறுகிறான்.

முஸ்லிம்களை ஓரணியில் ஒன்று திரட்டிக் கட்டுக் கோப்பைக் காப்பதுதான் அமீருக்குக் கட்டுப்படுமாறு இஸ்லாம் கூறுவதற்கு முக்கியக் காரணம். இதை ஒவ்வொரு முஸ்லிமுடைய மனசாட்சியும் ஒப்புக் கொள்கிறது. ஆனால் நடைமுறையில் உள்ளது என்ன? ஏராளமான அமீர்கள் உருவாகும் போது சமுதாயம் ஏராளமான பிரிவுகளாக மாறுகிறது. அமீருக்குக் கட்டுப்படுதல் என்ற சித்தாந்தம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதால் ஒற்றுமைக்குப் பதிலாக வேற்றுமை ஏற்படுவதைக் கண்ணுறக் கூடிய ஒரு உண்மை முஸ்லிம் குழம்பிப் போகிறான்.

ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய ஒரு சித்தாந்தம் ஒருபோதும் வேற்றுமையை ஏற்படுத்தாது என்ற உணர்வோடு அமீருக்கு கட்டுப்படுதலை நாம் ஆய்வு செய்தால் குழப்பங்கள் விலகும். தெளிவு பிறக்கும் இன்ஷா அல்லாஹ். (அல்முபீன் மார்ச் 99. பக். 6,7)

இப்படி பீ.ஜை. தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதன் எதார்த்த நிலை என்ன?

அப்துர்ரஹ்மான், திருச்சி.

விeக்கம்: இப்படியயாரு அசத்தலான பீடிகையைப் போட்டு தனது பக்தர்களை மயக்கத்திலும் குழப்பத்திலும் விட்டு 51 பக்கங்கçe வீணடித்து ஆட்சி அதிகாரம் உள்ள அமீர் இருந்தால்தான் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட முடியும். ஆட்சி அதிகாரம் இல்லாதவரை சமுதாய ஒற்றுமை சாத்தியமே இல்லை. அல்லாஹ் 21:92,93 மற்றும் 23:52-56-ல் வலியுறுத்தி இருப்பது சாத்திய மில்லை; ஒற்றுமை ஏற்படுத்துவதற்காக இஸ்லாம் வழங்கிய சித்தாந்தம் ஆட்சி அதிகாரம் இல் லாத அமீரைக் கொண்டு நடைமுறைச் சாத்தியமில்லை. ஆக உலகளாவிய முஸ்லிம்கள் ஒன்று பட வழியே இல்லை என்று பொய்யன் பீ.ஜை. ஃபத்வா-மார்க்கத் தீர்ப்பு கொடுத்து விட்டார்.

அதை அப்படியே நம்பி ஏற்ற ஒரு கூட்டம் ஆட்சி அதிகாரம் உள்e “கிலாஃபத்’ ஏற்பட்டால் தான் சமுதாயம் ஒன்றுபடும்; சமுதாயப் பிரச்சினைகள் தீரும் எனக் கூறி, 24:55-ல் அல்லாஹ் நீங்கள் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கும் உண்மை முஸ்லிம்கள் ஆனால் மட்டுமே முன்பிருந்தோருக்கு ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்தது போல் உங்களுக்கும் கொடுப்போம் என்று கூறி இருக்கும் நிலையில், அல்லாஹ் கொடுப்பதாகச் சொல்லும் ஆட்சி அதிகாரத்தை இவர்கள் தட்டிப் பறிக்கப் புறப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வழிகேட்டிற்கும் பொய்யன் பீ.ஜை.யே காரணகர்த்தா!

இப்போது பீ.ஜை.யின் வழிகேட்டிற்கும், அவரது பக்தர்களின் வழிகேட்டிற்குமுள்ள அடிப்படைக் காரணத்தைப் பார்ப்போம்.

இவர்கள் கற்பனை செய்து இவர்களாக அமைத்துக் கொண்ட குட்டி, குட்டி இயக்கங்களுக்கு மாநிலம் தோறும், ஊர்கள் தோறும் தலைவர்கள் இருப்பது சாத்தியம் என்றால், அல்லாஹ் கட்டளையிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய பேரியக்கமான ஜமாஅத்துல் முஸ்லிமீனுக்கு மாநிலம் தோறும், மாவட்டங்கள் தோறும், வட்டங்கள் தோறும், ஊர்கள் தோறும் துணை அமீர்கள் இருப்பது சாத்தியமா? சாத்திய மில்லையா? பொய்யன் பீ.ஜை. எழுதி இருப்பது போல் இஸ்லாமிய அடிப்படையில் நூற்றுக் கணக்கான இயக்கங்கள் எப்படி இருக்க முடியும்? இஸ்லாமிய அடிப்படையில் ஒரே ஒரு பேரியக்கம் மட்டுமே இருக்க முடியும். நூற்றுக் கணக்கான அல்ல; இஸ்லாமிய அடிப்படையில் இரண்டு இயக்கங்கள் கூட இருக்க முடியாது. நூற்றுக்கணக்கான இயக்கங்கள் இருந்தால் அவற்றில் ஒரேயயாரு இயக்கம் மட்டுமே இஸ்லாமிய அடிப்படையில் இருக்க முடியும் (பார்க்க 21:92; 23:52)

நூற்றுக்கணக்கான இயக்கங்களில் ஒன்று கூட இஸ்லாமிய அடிப்படையில் இல்லாம லிருக்க வாய்ப்பு உண்டே அல்லாமல், அனைத்தும் இஸ்லாமிய அடிப்படையில் இருக்க ஒருபோதும் வாய்ப்பே இல்லை. இது பொய்யன் பீ.ஜையின் முதல் உளறல். இரண்டாவது உeறல் ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாக உள்eனர்; பத்துக்கும் மேற்பட்ட அமீர்களும் உள்ளனர். இவர்களில் யாருக்குக் கட்டுப்படுவது? என்பதாகும்.

ஒரே கொள்கை கோட்பாடுடையவர்கள் ஒரே அணியில் ஒரே அமீரின் கீழ் ஒன்றுபட்டிருப்பார்களா? பத்து பிரிவுகளாகப் பத்து அமீரின் கீழ் இருப்பார்களா? இந்தப் பத்துப் பிரிவினரும் சாட்சாத் பொய்யன் பீ.ஜை.யின் கற்பனையில் உருவானவர்களை. ஒவ்வொரு பிரிவு இயக்கத் தையும் கற்பனை செய்து உருவாக்கி விட்டு, அங்கு தனது ஆளுமைக்கு, அதிகாரத்திற்கு இடமில்லை என்றதும், மரத்துக்கு மரம் குரங்கு தாவுவது போல் தாவி புதுப்புது இயக்கங்கçeத் தோற்றுவித்தவர், தோற்றுவிப்பவர் அவரே. அதனால் தான் ஒரே கொள்கை கோட்பாடு என பிதற்றியுள்ளார். அது மட்டுமல்ல இவர்களின் பிரிவு இயக்கங்களுக்கு குர்ஆனோ, ஹதீஸோ காரணமல்ல; 2:213, 3:19, 42:14, 45:17 ஆகிய இடங்களில் அல்லாஹ் கூறுவதுபோல் பொய்யன் பீ.ஜைக்கு ஏற்பட்ட பொறாமையும், சுயநலமும், பேர் புகழில் பேராசையும், அற்ப மான இவ்வுலக வாழ்க்கையில் அதீத ஆசையுமே காரணமாகும். (பார்க்க 7:175-179)ஒரே கொள்கை கோட்பாடுள்eவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்களாகப் பிரிந்ததற்கு பீ.ஜை. அல்லாமல் வேறு யாரும் பிரதான காரணகர்த்தாக் கள் அல்ல. நாçe மறுமையில் இதற்காக குற்றவாளிக் கூண்டில் நிற்கப் போகிறவர் பொய்யன் பீ.ஜை. தான்.

21:92, 23:52 இறைவாக்குகள் கூறுவது போல் முஸ்லிம் சமுதாயம் வேற்றுமையில்லாத ஒன்றுபட்டு ஓரணியில் இருக்கும் ஒரே சமுதாயம் தான். 21:93, 23:53,54,55,56 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை மறுமையில் நரகை அடைபவர்க¼e ஒன்று பட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்துவார்கள். அவர்கள் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாக, தொழிலாகக் கொண்டுள்ள பொய்யன் பீ.ஜை. போன்ற புரோகிதர்கள்.

அல்லாஹ்வே 21:93, 23:53 இறைவாக்குகளில் இந்தச் சமுதாயம் பல பிரிவுகளாகச் சிதறுவார் கள் என்று கூறி இருக்கும்போது சமுதாய ஒற்றுமை எப்படி சாத்தியமாகும் எனக் கூறி சிந்திக்கத் துணியாத மக்களை மயக்கி ஏமாற்றுவார்கள். ஆம்! உண்மை தான்!! நாளை மறுமையில் நரகை நிரப்பும் பெருங்கொண்ட கூட்டம் (பார்க்க 32:13, 11:118, 119) சமுதாயத் தைப் பிeவுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.

அவர்களில் 11:119 இறைவாக்கு கூறுவது போல் அல்லாஹ் அருள்புரிந்த மிகச் சிலர் எப்படி நடக்க வேண்டும் என்பதே நம்முன் உள்e விவகாரம். அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் புக விரும்பும் நல்லடியார்கள் எப்படி நடக்க வேண்டும்? இதற்கும் இறுதி நபி(ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், இன்று முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டு ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருப்பவர்களை விட மிகமிகக் கேடுகெட்டவர்கள், உளப்பூர்வமாக நம்பிக்கை கொள்ளாமல் உதட்டளவில் நம்பிக்கை கொண்டதாக நடித்துக் கொண்டு குறைஷ் காஃபிர்களுடன் சேர்ந்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருந்த நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்தார்கள். 49:14-ல் ஈமான்-இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாதவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று தமது சமுதாயத்தில் இணைத்துக் கொள்ள அல்லாஹ் கட்டளை இடுகிறான். இப்படி இன்றைய முஸ்லிம்களை விட மிகமிக கேடுகெட்டவர்களையும் முஸ்லிம்களாக ஏற்று இந்தச் சமுதாயத்தை ஒரே சமுதாயமாக அரவணைத்துச் செல்வதின் மூலம் நபி(ஸல்) நமக்கு அழகிய நடைமுறையைக் காட்டிச் சென்றுள்ளார்கள்.

33:21,36, 59:7 இறைக் கட்டளைகள்படி நபி (ஸல்) அவர்களின் இந்த அழகிய முன்மாதிரியை ஏற்று, இறைக் கட்டçeகçeயும், நபி வழியையும் நிராகரித்து ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி பல கோணல் வழிகளில் செல்லும் முஸ்லிம்களை0யும், அவர்களின் இறுதித் தீர்ப்பை அல்லாஹ்வே நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருப்பதை ஏற்று (பார்க்க 2:210, 6:58, 10:11,19,54,11:110, 14:22, 19:39, 39:69,75, 41:45, 42:14, 21) இவ்வுலகில் அவர்கள் அனைவரையும் முஸ்லிம்களாகவே ஏற்று அரவணைத்துச் செல்வதன் மூலம் சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும். யாருக்கும் குஃப்ர், ´ர்க் ஃபத்வா-தீர்ப்பு கொடுக்க முற்படக்கூடாது. யார் பின்னாலும் நின்று தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுக்கக் கூடாது. இப்படி தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனி அதிகாரம் என்பதை விeங்கி நடப்பவர்களை ஆலிம்களாக-அறிஞர்களாக இருக்க முடியும்.

இணை வைத்த நிலையில் இறந்து போன மூதாதையர் பற்றி ஃபிர்அவ்ன் மூஸா(அலை) அவர்களிடம் கேட்கிறான். அவர்கள் இறந்து போனவர்கள். தவறை உணர்ந்து தவ்பா செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை; அவர்களைப் பர்றியே மூஸா (அலை) சொன்னதை 20:51,52 தெளிவாகக் குறிப்பிடுகிறது.

“”அப்படியயன்றால் முன் சென்ற தலைமுறை யினரின் நிலை என்ன?” என்று ஃபிர்அவ்ன் கேட்டான். “”இது பற்றிய அறிவு என்னுடைய இறைவனிடம் (பதிவுப்) புத்தகத்தில் இருக்கிறது; என் இறைவன் தவறுவதுமில்லை; மறப்பதுமில்லை” என்று (மூஸா பதில்) சொன்னார். (20:51,52) இணைவைத்த நிலையில் இறந்து போனவர்கள் பற்றியே ஒரு நபி, அவர்கள் காஃபிர்கள், முஷ்ரிக்குகள் என்று கூறத் துணியவில்லை. இன்றைய ஆலிம்களுக்கு(?) இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஒரு நபிக்கே இல்லாத அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கும் தனி அதிகாரம் தங்களுக்கு இருப்பதாக இந்தப் புரோகிதர்கள் நினைத்துச் செயல்படுகிறார்களா? இன்னும் பாருங்கள்!

உஹதுடைய யுத்த களத்தில் இறைவனின் இறுதித் தூதரை குறைஷ்கள் மிகமிகத் துன்புறுத்தி விட்டார்கள். ­ஹீதாக்கப் பட்டார்கள். குறைஷ்களால் கொல்லப்பட்டார்கள் என்றெல்லாம் செய்தி பரவியது. நபி தோழர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டது (பார்க்க 3:144). இந்த நிலையில் நபி(ஸல்) வேதனையைத் தாங்க இயலாது, அவர்களில் சிலரைக் குறிப்பிட்டு அவர்களை அல்லாஹ்வின் கருணையிலிருந்து நீக்குமாறு பிரார்த்தித் தார்கள். அதைக் கண்டித்து அல்லாஹ் இறக்கிய இறைவாக்கைப் பாருங்கள். ”

“”(நபியே!) உமக்கு இவ்விடயத்தில் எந்தவித அதிகாரமும் இல்லை. அவன் அவர்களை மன் னித்தும் விடலாம்; அல்லது அவர்களை வேதனைப் படுத்தலாம். நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்களே!” அல்குர்ஆன்: 3:128 புகாரீ. 4559.

அல்லாஹ்வின் இறுதித்தூதரை மிகக் கடுமையாக எதிர்த்த, அன்று நிராகரிக்கும் காஃபிர்களாக இருந்த குறைஷ்கçeப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாகப் பிரார்த்தித்ததையே அல்லாஹ் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் இன்று தர்கா, தரீக்கா, மத்ஹபு என்றும், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வரமுடியும் என்றும் தவறான வழிகளில் செல்லும் முஸ்லிம்களுக்கும், குர்ஆன் மட்டும் போதும் என தவறான வழியில் செல்பவர்களுக் கும் ´ர்க், குஃப்ர் ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிeவுபடுத்த முடியுமா? அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே இல்லாத அதிகாரம் இவர்களுக்கு இருப்பதாக நம்பிச் செயல்படும் இவர்கள் ஆலிம்களாக இருக்க முடியுமா? நிச்சயமாக இருக்க முடியாது. எண்ணற்ற இறை எச்சரிக்கைகளை நிராகரிக்கும் ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும்.

தம் முன்னாலேயே தங்களை நபி என வாதிட்டவர்களுக்கே நபி(ஸல்) குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுக்கத் துணியவில்லை. இந்த நிலையில் இப்புரோகிதர்களுக்கு இத்துணிச்சல் எங்கிருந்து வந்தது?

நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த் தித்ததையே நிராகரித்து கடுமையாக எச்சரித்திருக்கும் நிலையில், இந்த மூட முல்லாக்கள் 42:21 அல்லாஹ் கடிந்து கூறுவது போல் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தை-அல்லாஹ்வே மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில் தங்கள் கைகளில் எடுத்து குஃப்ர் ஃபத்வா கொடுப்பவர்கள் வடிகட்டின ஜாஹில்களாக மட்டுமே இருக்க முடியும் என்பதில் சந்தேகமுண்டா?

தவறான வழிகளில் செல்பவர்களுக்கு அவர்களின் வழிகேடுகளை குர்ஆன், ஹதீஸ்கள் கொண்டு எச்சரிப்பதோடு நிறுத்திக்கொண்டு, குஃப்ர் ஃப்தவா கொடுக்காமல், அவர்கள் பற்றிய தீர்ப்பை அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் அனைவரையும் இவ்வுலகில் முஸ்லிம்களாக ஏற்று சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்கும் முஸ்லிம்கள் மட்டுமே ஆலிம்களாக-நபிமார்களின் வாரிசுகளாக இருக்க முடியும்.

ஆனால் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட புரோகிதர்கள் சமுதாய ஒற்றுமையை நஞ்சென வெறுப்பார்கள். காரணம் அது அவர்களின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போட்டு விடும். எனவே சமுதாயத்தை மேலும் மேலும் பிeவுபடுத்தி அவர்கள் அற்ப உலக ஆதாயம் அடைவதிலேயே குறியாக இருப்பார்கள். 1987க்குப் பிறகு சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது ஒலி வேகத்தைத் தொட்டுள்ளது. இன்னும் சிறிது காலத்தில் அது ஒளி வேகத்தைத் தொடும். சமுதாயம் எண்ணற்றக் குழுக்களாகப் பிரிந்து சின்னாப்பின்னப்பட்டு விடும். இப்பூவுலகில் முஸ்லிம்கçe விட ஒரு கேடுகெட்ட சமுதாயம் பிரிதொன்று இல்லை என்ற நிலையே ஏற்படும்.

இதைத் தடுப்பதற்குள்ள ஒரே வழி, வேறு வழியே இல்லை; அது முஸ்லிம்கள் மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்e புரோகிதர்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதாகும். அவர்கள் பின்னால் முஸ்லிம் சமுதாயம் செல்வது 7:3, 33:36,66,67,68, 59:7, 42:21 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களின்படி நாளை மறுமையில் ஷிர்க், குஃப்ர், பித்அத் குற்றங்களுக்கு ஆளாகி நரகில் கொண்டு சேர்த்துவிடும். முஸ்லிம்களே எச்சரிக்கை. ஆனால் இவர்கள் அனைவரையும் இவ்வுலகில் 49:14, 2:8-20 இறைக் கட்டளைகள்படி முஸ்லிம்களாக ஏற்று ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தை கட்டிக் காப்பதே நபி வழியாகும்; நேர்வழியாகும். அத்தகைய முஸ்லிம்களே நபி வழி நடப்பவர்கள், வெற்றியாளர்கள். மவ்லவிகள், ஆலிம்கள், அரபிமொழி கற்றவர்கள், மார்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள், மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள் என அகந்தை, ஆணவம், கர்வம், பொறாமை அனைத்திற்கும் சொந்தம் கொண்டாடும் புரோகிதர்கள் பின்னால் செல்பவர்கள் மாபெரும் நட்டவாளிகள் என்பதை நாளை மறுமையில் தெரிந்து கொள்வார்கள்.

புரோகிதனும் பொய்யனுமாகிய பீ.ஜை.யின் மூளையற்ற பேச்சை வேதவாக்காக(?) ஏற்று இஸ்லாம், முஸ்லிம் என செயல்பட்டால் போதும் என நம்பிச் செயல்படுகிறவர்களும் முகல்லிதுகளே. அல்லாஹ் “முஸ்லிம்’ என பெயரிடவில்லை. “முஸ்லிமீன்”- முஸ்லிம்கள் என ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்திற்கே பெயரிட்டுள்ளான். 41:33 இன்னும் தெளிவாக நபிமார்களின் பிரசார பணியைச் செய்பவர்களே தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று கூறவே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

இயக்கமே இல்லாமல் தனித்துச் செயல்படுவதும் வழிகேடே. ஜாஹிலியா காலத்து மரணத்தையே சந்திக்க நேரிடும் என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” பொய்யன் பீ.ஜை. சொல்வது போல் பிரிவு ஜமாஅத்தும் அல்ல; அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்தும் அல்ல. அபூ அப்தில்லாஹ்வுக்கு அதில் கடுகeவும் உரிமை இல்லை. முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் அடிப்படையில் நபி(ஸல்) நடைமுறைப்படுத்தி முஸ்லிம்களுக்காக விட்டுச் சென்றுள்ள ஜமாஅத் அதுவேயாகும். நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் “முஸ்லிம்கள்” என்ற பெயருடன் (22:78-முஸ்லிமீன்) ஜமாஅத்துல் முஸ்லிமீனின் இருப்பது கொண்டே வெற்றியடைய முடியும். இதற்கே எண்ணற்ற குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்கள் இருக்கின்றன. ஹிஜ்ரி 11க்குப் பிறகு அதாவது நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு மனிதக் கற்பனையில் உருவான ஜமாஅத்துகள் அனைத்தும் பித்அத்களே-வழிகேடுகளே-நரகில் கொண்டு சேர்ப்பவையே. இது 7:3, 33:36,66, 67,68 அல்குர்ஆனின் நேரடியான கட்டளைகள் படியும், பித்அத் பற்றிய நபி(ஸல்) அவர்களின் கடுமையான எச்சரிக்கையின் படியும் உறுதி செய்யப்பட்ட பேருண்மையாகும். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக..

அன அவ்வலுல் முஸ்லிமீன்

மு.முத்துவாப்பா, நெல்லை, ஏர்வாடி.

* அன அவ்வலுல் சுன்னத் வல் ஜமா அத்தீன் அல்ல!

* அன அவ்வலுல் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தியீன் அல்ல!

* அன அவ்வலுல் நஜாத்தியீன் அல்ல!

* அன அவ்வலுல் ஜாக்கியீன் அல்ல!

* அன அவ்வலுல் தவ்ஹீதீன் அல்ல!

* அன அவ்வலுல் விடியல் வெள்ளியீன் அல்ல!

மேல் எழுதப்பட்ட வார்த்தைகளை தொழுகையின் போதோ அல்லது அல்லா ஹுவை நினைவு கூறும்போதோ படிக்க (ஓத) முடியுமா? நிச்சயமாக முடியவே முடி யாது! ஆனால் நிச்சயமாக “”அன அவ்வலுல் முஸ்லிமீன்” என்று சொல்லியே ஆக வேண்டும்.

ஏன் என்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகைக் காக நின்றுவிட்டால்,

“”வானங்கçeயும், பூமியையும் படைத்தவனை நோக்கி சத்திய மார்க்கத்தை விரும் பியவனாக என் முகத்தை திருப்பி விட்டேன். மேலும் நான் முஸ்லிம்களில் ஒருவன். எங்கள் இரட்சகனே! நீயே அரசன்! வணக்கத்திற் குரியவன் உன்னைத் தவிர வேறு யாரு மில்லை. நீயே என்னுடைய இரட்சகன்! நான் உன்னுடைய அடிமை! என்று இறுதி வரை ஓதுவார்கள் என அலீ இப்னு அபீதாலீப் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: முஸ்லிம்)

மேல்கண்ட நபி மொழியைப் போன்று, நான் முஸ்லிம்களில் ஒருவன் என்றும், நான் முஸ்லிம்களில் முதன்மையானவன் (“அன அவ்வலுல் முஸ்லிமீன்”) என்றும் இன்னும் ஒரு சில துஆக்கçe நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்து இருக்கிறார்கள்.

மேலும் இபுராஹீம் அலைஹி ஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும்போது முஸ்லிம் என்ற வார்த்தையை தவிர வேறு எந்த வார்த்தையையும் சொல்லவில்லை.

இப்றாஹீம் நபி அவர்களுடைய வார்த்தைகள் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன்

சத்திய வழிகாட்டல் நூல் வழியாக சொல்லும் போது,

எங்கள் இறைவனே! எங்களிருவரையும் முஸ்லிமானவர்களாக நீ ஆக்கிடுவாயாக! எங்கள் சந்ததியலிருந்தும் முஸ்லிம் சமுதாயத்தை (ஆக்கிடுவாயாக!) (அல்குர்ஆன் 2:128)

என்று இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். ஆனால் முஸ்லிம்க¼ளா புரோகித மவ்லவிகள்(?) பின்னால் கண்மூடிச் சென்று அவர்களின் ஷைத்தானியக் கற்பனையில் உருவான அமைப்புகளான சுன்னத் வல்ஜமாத், ஜாக், தவ்ஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தப்லீஃ ஜமாஅத் இன்னும் பல பல பெயர்களில் செயல்பட்டு கொண்டு நாங்கள் தான் அசல் இஸ்லாமிய அமைப்புகள் என்று சொல்லி மார்தட்டுகிறார்கள். அப்படிப்பட்ட இயக்கவாதிகள் பெருமையோடு மார்தட்ட வேண்டாம். அவர்கள் தங்களுடைய அறிவை குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு தட்டி எழுப்பி அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு என்ன (அமைப்பை) பெயரைச் சூட்டினான் என்பதையும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த அமைப்பில் இருக்கும்படி கட்டளையிட்டார்கள் என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக அருள்கூறும் சத்திய நெறிநூலில் சொல்லும்போது

மேலும் தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அவரை இவ்வுலகில் திட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம். இன்னும் நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்eவராவார்.

மேலும் அவருடைய இறைவன் அவருக்கு “”நீர் முஸ்லிமாக ஆகிவிடும்” என்று கூறிய போது, “அனைத்துலகங்களின் இறைவனுக்கு நான் (முற்றிலும்) வழிபட்டேன்” என்று அவர் கூறினார்.

மேலும், இதனையே (இறைத்தூதர்) இப்றாஹீம் தம் மக்களுக்கு இறுதி உபதேசம் செய்தார்; இன்னும், யாஃகூபும் (தம் மக்களு க்கு இறுதி உபதேசம் செய்தார்;) என்னுடைய மக்களை, நிச்சயமாக அல்லாஹ் இந்த மார்க்கத்தை உங்களுக்காகத் தேர்ந்தெடுத் துள்ளான்; எனவே நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி ஒருபோதும் மரணிக்க வேண்டாம்.

அல்லது, யாஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களி டம் “”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்? எனக் கேட்டதற்கு உங்கள் இறை வனை, உங்கள் மூதாதையர் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனாகய ஒரே இறைவனையே வணங்கு வோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம் எனக் கூறினார்கள். (அல்குர்ஆன் 2:130,131,132,133)

மேல்கண்ட சத்திய நெறிநூல் வசனம் 2:130 என்ன சொல்லுகிறது? அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டாமா? அல்லாஹு ரப்புல் ஆலமீன் நெத்தியடியாக இந்த சமுதாயத்தை பார்த்து கேள்வி தொடுக்கும்போது “”தன்னைத் தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர தூதர் இபுறாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? அப்படி என்றால் இஸ்லாம் என்ற போர்வையில், மார்க்கத்தை மதமாக்கி, பொருளாதார சம்பாத்தியத்திற்காக வியாபாரமாக்கி மக்களை மாக்களாக்கி, “உம்மத்தன் வாஹிதாவை” ஒரே சமுதாயத்தை பல அமைப்புகளாக பிரித்து முழுக்க, முழுக்க ஷைத்தானிய வழியைப் பின்பற்றும் புரோகித மவ்லவிகளும்(?) அவர்கçe அப்படியே பின்பற்றும் இயக்கவாதிகளும் மடையர்களே! மடையர்கள் என்ற வார்த்தையை நாம் சொல்லவில்லை; நம் எல்லோரையும் படைத்த அல்லாஹு ரப்புல் ஆலமீன் சொல்கிறான் என்பதை அறிவுள்ளவர்கள், சிந்திக்கவே செய்வார்கள்; சிந்திப்பார்களா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்’ என்ற அமைப்பை தவிர, மனித கற்பனையால் உருவான அமைப்புகள் எல்லாம் வழிகேடே என்று சொல்லி இருக்க! இந்தப் புரோகித மவ்லவிகளும்(?) அவர்கçeப் பின்பற்றுபவர்களும் “ஜமாஅத் அல் முஸ்லிமீனும்’ ஒரு பிரிவுப் பெயர் தானே? என்ற அறிவில்லாத கேள்வியையும் கேட்கிறார்கள். இவர்களின் மடத்தனமான கேள்விக்கு அல்குர்ஆன் 2:130 சிறந்த பதிலை தந்து கொண்டிருக்கிறது! ஆகவே ஒரு முஸ்லிம் தன்னை “முஸ்லிமீன்” என்றே அல்லாஹு ரப்புல் ஆலமீன் முன் சொல்ல முடியும்.

அன அவ்வலுல் முஸ்லிமீன், அன முஸ்லிமீன் என்பதைத் தவிர வேறு எந்த அமைப்புகளின் பெயரையும் சொல்லவே முடியாது என்பதையும் அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ் உங்களுக்கு முஸ்லிம்கள் என பெயரிட்டான் (22:78). இதற்கான சிறந்த அழகான விளக்கமே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்”. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைஃபத்துல் யமான் (ரழி) அவர்களுக்கு கட்டளையிட்டபோது:

நீர் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” ஐயும் அதன் “இமாம்”ஐயும் பற்றிக் கொள்வீராக என்றே சொன்னார்கள் என்பதை முஸ்லிம்கள் உணர்வார்களா? இல்லை செவிடன் காதில் ஊதிய சங்காக, புரோகித மவ்லவிகள் சொல்வதை அப்படியே கேட்டு வழிகேட்டில் சென்று அபூ ஜாஹிலியாக்கள் விடுக்கும் அழைப்பை ஏற்று நரகத்தின் விளிம்புக்கு செல்ல வழிதேடுகிறார்களா? சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

கடந்த டிசம்பர் 6.12.2009-ல் சென்னை மட்டும் அல்ல தமிழகத்தின் மற்ற மாவட்ட தலை நகரங்களிலும் வினோதங்கள் அரங்கேறின என்பது நாம் யாவரும் அறிந்ததே, இதில் சென்னையில் மட்டும் ஒவ்வொரு அமைப்பினர்க்கும் தனித்தனியாக நேரங்கள் குறிப்பிட்டு காவல்துறை அனுமதியளித்துள்ளது. இந்தச் செய்தி எல்லா தமிழ் நாளிதழ்களிலும் வெளி வந்துள்ளது.

உதாரணத்திற்கு காலை 10.00 - 11 .00 மணிவரை சுன்னத்துல் ஜமாஅத் பேரவைக்கு ஆர்ப்பாட்டம் அல்லது மனித சங்கிலிக்கு அனுமதி 11.00 – 12.00 வரை உலமா பேரவைக்கு அனுமதி 12.00 -1.00 TNTJ க்கு அனுமதி 1.00 – 2 .00 இஸ்லாமிய ஜனநாயக பேரவைக்கு அனுமதி 3.00 – 4.00 மணி வரை மற்றும் அதற்கு மேலும் இது போன்ற மனித கற்பனையில் உருவான இஸ்லாமிய அமைப்புகளுக்கு அனுமதி என்று பட்டியலே வெளியான கேலிக் கூத்து இவர்களுக்கு வெட்கமாக இல்லையா?

அன்று அபுல் ஹிக்கம் என்று சொல்லக் கூடிய அபூஜஹீல் தாருந்நத்வாவை வைத்துக் கொண்டு பெருமை அடித்தான். இன்று இந்த புரோகித மவ்லவிகள்(?) தங்கள் தங்கள் அமைப்புகளை வைத்து பெருமையடித்து கொண்டு, இந்த சத்திய மார்க்கமான இஸ்லாத்திற்கு பெரும் களங்கத்தையும் நடுநிலை முஸ்லிம்களுக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துகிறார்கள்.

இந்த புரோகித ஸனது பட்டத்துக்கு (நாளை மறுமையில் பட்டம் விடவும் பிரயோஜனப்படாத) சொந்தக்காரர்களான மவ்லவிகளை(?) பின்பற்றும்படி அல்லாஹ்வும் சொல்லவில்லை, இந்த உலகத்தின் அருள்கொடை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் வழிகாட்டவில்லை என்பதை அறிவுள்ள முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் சத்திய நெறி நூல் வழியாக சொல்லும்போது அவர்கள் எத்தகையோரென்றால் உம்மீ (எழுதப்படிக் கத் தெரியாத) நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுவார்கள். (அல்குரான் 7:157)

ஆதலால் அல்லாஹுவையும் அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அவர்கள் கட்டளையிட்டப்படி அப்படியே, பின்பற்றுபவர்கள் தான் “”அவ்வலுல் முஸ்லிமீன்” ஆவார்கள். அவர்கள் இயக்கவாதிகள், அவ்வலுல் சுன்னத் வல்ஜமா அத்தீன், தவ்ஹீதியீன் நஜாத்தீன், ஜாக்கீன், விடியல் வெள்ளியீன், தப்லீஃ ஜமாஅத்யீன் ஆகவே முடியாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் புரிந்து செயல்பட முன்வர வேண்டும். அதற்கு அல்லாஹ்வும் அருள் செய்வானாக! ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன்.

ஜாக், ததஜ, இதஜ போன்ற இயக்கங்களில் இருப்பவர்கள் நேரடியாகப்

படித்து சிந்தித்து உணர்ந்து அதன்படி நடக்க வேண்டிய இறைவாக்குகள்!

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்!

ஜனவரி தொடர் : 6

ப்போது நபி(ஸல்) அவர்கள், “”மக்கள் என்னை வெளியேற்றவா போகிறார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கவர் “ஆம்! நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத் தைக் கொண்டு வந்த எந்த மனிதரும் (மக்களால்) பகைத்துக் கொள்eப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப்படும்) அந்த நாளை நான் அடைந்தால் உமக்குப் பலமான உதவி செய்வேன்” என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் இறந்து விட்டார். இந்த முதல் செய்தியுடன் வஹீ சிறிது காலம் நின்று போயிற்று. (ஸஹீஹுல் புகாரி-ஹதீஸ் இலக்கம்:3)

ஏற்கனவே பைபிள் வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து துரத்தப்பட்டு மதீனா செல்வார்கள் என்ற சம்ப வத்தை முன் அறிவிப்பு செய்திருந்தது. “வரகா’ வும் இதனையே இங்கு முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் முன் அறிவிப்புச் செய்கிறார் கள். இதன் பின் முஹம்மது என்ற மனிதன் “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் கள்” என அல்லாஹ் அறிவித்துள்ளான் என்று சொல்கிறார் என்ற செய்தி மக்களிடையே செல்கின்றது. இச் செய்தி இஸ்மாயீல் (அலை) இறைத் தூதராக வந்த பின் நீண்ட காலம் தூதர்கள் வராத மக்கா அரபியருக்கு, “அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய ஏக நாயன் வேறு யாருமில்லை” என்ற வார்த்தை புதியவையாக இருக்கும்; தமது மூதாதையர் காட்டிய பல தெய்வக் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்கும். ஆனால் வேத அறிவு பெற்ற சமுதாய அறிஞர்களுக்கு இந்த வசனங்கள் புதியவைகள் அல்ல. அவதானியுங்கள்.

“யா இக் இத் முஸ்திஇ”

பொருள்: வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே” (ரிக் : 6:45:16)

“”நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தா” (உபாகமம்: 6:4)

“”நானே தேவன். வேறொருவரும் இல்லை. நானே தேவன். எனக்கு சமானன் இல்லை.” (ஏசாயா:-46:9)

“”எல்லா படைப்பினங்களையும் தனது சுய சக்தியால் இயக்கி வைக்கும் இறைவன் சகல மக்களின் இதயங்களிலும் குடி கொண்டிருக்கிறான். நீ உனது உடலால், மனதால், அறிவால், அந்த ஏக இறைவனிடம் மட்டும் சரணடைய வேண்டும். அவனுடைய அன்பு இருந்தாலே நிரந்தரமான சாந்தியும் சமாதானமும் கிடைக்கும். (பக்வத் கீதா:18:61,62)

பிசாசு, இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும், அவைகளின் மகிமைகளையும் அவருக்குக் காண்பித்து “”நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்!” என்று சொன்னான்.

அப்போது இயேசு, “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்து கொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே!” என்றார். (மத்தேயு :4:8-10)

முன்னைய வேதங்களில் எல்லாம் ஒரே இறைவனையே வணங்கி வழிபட வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது. மூஸா(அலை) அவர்களும் ஓர் இறைவனையே வணங்க வேண்டும் என வலியுறுத்தினார்; ஈசா(அலை) அவர்களும் இதனையே வலியுறுத்தினர்; இதே போல் அரேபியாவில் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களும் இதனையே வலியுறுத்தினார்கள். ஹுதை பியா உடன்படிக்கைக்குப் பின் மக்காவி லிருந்து ஒரு வியாபாரக் கூட்டம் சிரியா சென்றது. அதற்கு குறைஷ்களின் தலைவரான அபூஸுஃப்யான் தலைமை தாங்கிச் சென்றார். அவர் ரோமாபுரி மன்னன் யஹர்குலிஸைச் சந்தித்தார். அவர்கள் இருவருக்கும் இடையில் முஹம்மது நபி(ஸல்) அவர்களைப் பற்றி ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த உரையாடலில் இருந்து, வேதக்காரர்கள் எந்த அளவு முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வருகை பற்றி அறிந்து வைத்திருந்தார்கள் என்பதை அறியலாம். அந்த உரையாடலை உற்றுக் கவனியுங்கள்.

இப்னு அப்பாஸ்(ரழி) கூறினார்கள்:

(குறை´களின் தலைவன்) அபூ ஸுஃப் யானிடத்திலும் குறை´ காஃபிர்களிடத்திலும் நபி(ஸல்) அவர்கள் (ஹுதைப்பியா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்தார்கள். அச்சமயத்தில் (குறை´களில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியா நாட்டுக்குப் போயிருந்தார்கள். அந்தக் குறை´ வணிகக் கூட்டத்தில் ஒருவராகச் சென்றிருந்த அபூ ஸுஃப்யானை (ரோமாபுரி மன்னர்) யஹர்குலிஸ், பைத்துல் முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை அனுப்பினார். அந்தத் தூதர் அபூ ஸுஃப்யானிடம் வந்து சேர்ந்தார். ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தமது அவைக்கு அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தமது மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து வரச் சொன்னார்.

அபூ ஸுஃப்யான் இது குறித்துக் கூறும் போது, (எங்களிடம்) மன்னர் தம்மை இறைவனின் உறவினர் யார்? எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள் என்று ஆணையிட்டார். பின்னர் தமது மொழி பெயர்ப்பாளரிடம், நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ ஸுஃப்யானாகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறிவிட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல் என ஆணையிட் டார். நான் பொய் கூறியதாக இவர்கள் சொல்லிவிடுவார்க¼ளா என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்கçeப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.

பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, உங்களில் அவரது குலம் எத்தகையது? அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா? என்று கேட்டார். இல்லை என்றேன். இவரது முன்னோர்களில் யாராவது மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். அவரைப் பின்பற்றுவோர் அம்மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா? என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். அவரைப் பின்பற்று வோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா? என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். அவரது மார்க் கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப் தியுற்று யாரேனும் மதம் மாறியிருக்கின்ற னரா? என்று கேட்டார். நான் இல்லை என்றேன். அவர் இவ்வாறு வாதிப்பதற்கு முன் அவர் பொய் சொல்லக் கூடியவர் என்று எப்போதாவது நீங்கள் சந்தேகித்ததுண்டா? என்றார். நான் இல்லை என்றேன். அவர் வாக்கு மீறியது உண்டா? என்றார். (இது வரை) இல்லை என்று சொல்லிவிட்டு, நாங்கள் இப்போது அவர்களுடன் ஓர் உடன் படிக்கை செய்துள்ளேளாம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப் போகிறார் என்பது எங்களுக்குத் தெரியாது என்றேன். அப்போதைக்கு நபி(ஸல்)மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையை விட்டால் வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைத்திட எனக்கு வாய்ப்பில்லை! அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கிறீர்களா? எனக் கேட்டார். ஆம் என்றேன். அவருடன் நீங்கள் நடத்திய போரில் முடிவுகள் எவ்வாறிருந்தன? என்றார். எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வந்திருக்கின்றன. சில சமயம் அவர் எங்களை வென்றிருக்கிறார்; சில சமயம் நாங்கள் அவரை வென்றிருக்கிறோம் என்றேன். அவர் உங்களுக்கு என்ன தான் போதிக்கிறார்? என்று கேட்டார். அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்: அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள்; உங்கள் முன்னோர்கள் கூறிவந்தவற்றையயல்லாம் விட்டுவிடுங்கள் என்கிறார். தொழுகை, உண்மை, கற்பு நெறி, உறவினர்களுடன் இணங்கியிருத்தல் போன்ற பண்புகளை ஏவுகிறார் என்றேன்.

மன்னர் தமது மொழிபெயர்ப்பாளரிடம் மொழி பெயர்க்கச் சொன்னதாவது: “அவரது குலத்தைப் பற்றி உம்மிடம் விசாரித்தேன். அதற்கு நீர் உங்களில் அவர் உயர் குலத்தைச் சேர்ந்தவர்தாம் என்று குறிப்பிட்டீர். எல்லா இறைத் தூதர்களும் அப்படித்தான் அவர்களின் சமூகத்திலுள்e உயர் குலத்தில் தான் அனுப்பப்பட்டுள்ளார் கள். உங்களில் யாரேனும் இந்த வாதத்தை இதற்கு முன் செய்ததுண்டா? என்று கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப் பிட்டீர். இவருக்கு முன்னர் யாரேனும் இவ்வாதத்தைச் செய்திருந்தால், முன்னர் செய்யப்பட்டு வந்த ஒரு வாதத்தைப் பின் பற்றித்தான் இவரும் செய்கிறார் என்று நான் கூறியிருப்பேன். இவரது முன்னோர்களின் யாரேனும் மன்னராக இருந்திருக்கிறார்களா என்று உம்மிடம் நான் கேட்டபோது, இல்லை என்று சொன்னீர். இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால், தம் முன்னோர்களின் ஆட்சியை அடைய விரும்பும் ஒரு மனிதர் இவர் என்று சொல்லியிருப்பேன். இவ்வாதத்தைச் செய்வதற்கு முன் அவர் பொய் சொல்வதாக நீங்கள் அவரைச் சந்தேகிதத்துண்டா? என்று உம்மிடம் கேட்டேன். அதற்கு நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். மக்களிடம் பொய் சொல்லத் துணியாத ஒருவர் இறைவன் மீது பொய்யுரைக்கத் துணியமாட்டார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மக்களில் சிறப்பு வாய்ந்தவர்கள் அவரைப் பின்பற்று கின்றனரா? அல்லது சாமானியர்களா? என்று கேட்டேன். சாமானிய மக்கள் தாம் அவரை பின்பற்றுகின்றனர் என்று குறிப்பிட்டீர். அப்படிப்பட்டவர்கள் தாம் இறைத்தூதர்களை (துவக்கத்தில்) பின்பற்றுவோராய் இருந்திருக்கிறார்கள். அவரைப் பின்பற்று கின்றவர்கள் அதிகரிக்கின்றனரா அல்லது குறைகின்றனரா என்றும் உம்மிடம் கேட்டேன். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்று குறிப்பிட்டீர். இறை நம்பிக்கை, நிறைவு பெறும்வரை அப்படித்தான் (வளர்ந்து கொண்டே) இருக்கும். அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரேனும் அம்மார்க்கத்தின் மீது அதிருப்தியடைந்து மதம் மாறி இருக்கின்றனரா? என்று உம்மிடம் கேட்டேன். நீர் இல்லை என்று குறிப்பிட்டீர். அப்படித்தான் இதயத்தில் நுழைந்து விட்ட இறைநம்பிக்கையின் எழில் (உறுதியானது).

அவர் (எப்போதேனும்) வாக்கு மீறிய துண்டா? என உம்மிடம் நான் கேட்ட போது, இல்லை என்றீர். (இறைவனின்) திருத் தூதர்கள் அப்படித்தான் வாக்கு மீறமாட் டார்கள். அவர் உங்களுக்கு எதைக் கட்டளையிடுகிறார்? என்று உம்மிடம் கேட்டேன். அல்லாஹ்வையே வணங்க வேண்டும் என்றும் அவனுக்கு எதனையும் இணையாக் கக் கூடாது என்றும் உங்களுக்கு அவர் ஏவுவதாகவும், சிலை வணக்கங்களிலிருந்து அவர் உங்களைத் தடுப்பதாகவும் தொழுகை, உண்மை, கற்பு நெறி ஆகியவற்றை உங்களுக்கு அவர் ஏவுவதாகவும் நீர் கூறினீர். நீர் சொல்லியது அனைத்தும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார். (இப்படிப்பட்ட) ஓர் இறைத்தூதர் (வெகுவிரைவில்) தோன்றுவார் என்று நான் முன்பே அறிந்திருந்தேன். ஆனால் அவர் (அரபிகளாகிய) உங்களிலிருந்து தான் தோன்றுவார் என்று நான் கருதியிருக்கவில்லை. அவரைச் சென்றடையும் வழியை நான் அறிந்திருந் தால் மிகுந்த சிரமப்பட்டாவது அவரைச் சந்தித்திருப்பேன். (இப்போது) நான் அவரருகே இருந்தால் அவரது பாதங்களைக் கழுவி விடுவேன்.

புஸ்ராவின ஆளுநர் மூலம் யஹர்குலிஸ் மன்னரிடம் கொடுப்பதற்காக திஹியா வசம் நபி(ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய கடிதத்தைத் தம்மிடம் கொடுக்குமாறு மன்னர் ஆணையிட்டார். ஆளுனர் அதனை மன்னனிடம் ஒப்படைத்தார். மன்னர் அக்கடிதத்தைப் படித்துப் பார்த்தார். அக்கடிதத்தை வரும் இதழில் பார்ப்போம்.

ஐயமும்! தெளிவும்!

கேள்வி : 1. நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் சிலர் அழைத்து வருகிறார்களே. இது சரியா? 33:5 குர்ஆன் வசனம் அப்படி அழைக்கக் கூடாது என்று கூறுகிறதே. விளக்கம் தரவும்.

2. 33:37-வது வசனம் யாரைப் பற்றிக் குறிப்பிடுகிறது? குறிப்பாக என்ன அருள் புரியப்பட்டிருக்கிறது?

3. 33:37-வது வசனம், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் வெளியாக்க இருந்த எதையோ மனதில் மறைத்திருப்பதாகக் கூறுகிறது. அது என்ன?

4. சுவீகாரப் பிள்ளைகளுக்கு வளர்த்த வரின் சொத்தில் பங்கு கொடுப்பதில் தவறென்ன இருக்கிறது?

அனைத்திற்கும் விளக்கம் தரவும். லு.ஃபாத்திமா, அல்கோபர், KSA

பதில் : One in four! ஒரே கேள்வியில் 4 உட் கேள்விகள்!

தாங்கள் கூறும் 33:5-வது இறை வசனத்தை கவனிக்கும் முன்பாக, 33:4-வது இறை வசனத்தை கவனிக்கவும்.

அல்குர்ஆன் 33:4 “எந்த மனிதனின் உளளேயும் அல்லாஹ் 2 இருதயங்களை உண்டாக்கவில்லை. உங்கள் மனைவியரில் எவரையும் நீங்கள் ளிஹார் கூறுவதனால், அவர்களை (அல்லாஹ் உண்மையான) உங்கள் தாயாக்கி விட மாட்டான். (அவ்வாறே) உங்கள் சுவீகாரப் பிள்ளைகளை (எடுத்து வளர்க்கும் பிள்ளைகளை) உங்களுடைய புதல்வர்களாக ஆக்கி விடமாட்டான். இவையாவும் உங்களுடைய வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையையே கூறுகிறான்; இன்னும் அவன் நேர்வழியையே காட்டுகிறான்.”

இந்த இறைவசனம் “எடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கeது புதல்வர்களாகி விட முடியாது’ என்ற சட்டத்தை விதியாக்குகிறது.

இப்போது தாங்கள் கூறியுள்ள 33:5வது வசனத்தைக் காண்போம். “”(எனவே) நீங்கள் (எடுத்து வeர்க்கும்) அவர்களை, அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்கçeச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும். ஆனால் அவர்களின் தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையயன்றால், அவர்கள் உங்களுக்கு மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர். (முன்னர்) இதுபற்றி நீங்கள் தவறு செய்திருந்தால், உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் உங்களுடைய இருதயங்கள் வேண்டுமென்றே கூறினால் (உங்கள் மீது குற்றமாகும்); அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், மிக்க கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்”.

33:5வது இறைவசனம், “எடுத்து வeர்க்கும் பிள்çeகçe அவர்களின் தந்தையர்களின் பெயர்கçeச் சொல்லி அழைக்குமாறு கட்டளையிடுகிறது.

நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் கூறுவது சரியா என்பது தங்களின் வினா. ஆனால் 33:5வது வசனமோ, எடுத்து வளர்க்கும் பிள்çeகçeப் பற்றிக் கூறுகிறது. ஒரு விஷயத்திற்கு, மற்றொரு விஷயத்திலிருந்து சட்டம் எடுக்க முடியாது. ஏனெனில் மாதவிடாய்க் காலங்களில் விடுபட்டிருந்த தொழுகைகçe, தொழுது கொண்டிருந்த ஒரு பெண்மணியிடம் “மாதவிடாய்க் காலங்களில் விடுபட்டிருந்த நோன்பை நோற்க வேண்டும் என்று, தான் கூறியதாகவும், (விடு பட்டிருந்த தொழுகையை தொழவேண்டும் என்று கூறியதில்லை)’ என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்து காட்டியது சிறந்த உதாரணம் ஆகும்.

“”மனைவியை ளிஹார் (மனைவியைத் தாய் போன்று இருக்கிறாள் என்று) கூறுவதால், மனைவி தாயாகி விடமாட்டாள்” என்றும், “”…. இவையயல்லாம் உங்களுடைய வாய்களால் சொல்லும் வெறும் வார்த்தைகள்” என்று 33:4வது இறைவசனம் கூறுகிறது. அதே போல மரியாதையின் காரணமாகவோ, அல்லது நாட்டுப்பழக்கத்தின் காரணமாகவோ -நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் கூறுவது, தங்களைப் பெற்று வeர்க்கும் “தாய்-தந்தையர்’ என்ற எண்ணத்தில் கூறப்படுவதில்லை. அவைகள் வாய்களால் சொல்லும் வெறும் வார்த்தைக¼e!

இவற்றாலும், மேலும் “”உங்களை எல்லா நன்மைகளையும் கொண்டும் ஏவி இருக்கிறேன். எல்லாத் தீமைகçe விட்டும் தடுத்து இருக்கிறேன்” என்றும், மார்க்கத்தில் சொல்லப் படாதவைகள் உங்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் ஆகும் என்றும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியிருப்பதால், இதை சலுகையாக எடுத்துக் கொண்டு நண்பர்களின் தந்தையை “அப்பா’ என்றும், தாயை “அம்மா’ என்றும் அழைக்கும் வழக்கம் தவறானது அல்ல என்ற முடிவிற்கு வர முடிகிறது. ஆனால் அவர்களை வேண்டுமென்றே “அப்பா’ “அம்மா’ எனக் கூறக் கூடாது என்பதையும் 33:5 இறுதி வசனங்கள் அறிவுறுத்துகின்றன.

தங்கeது அடுத்த 3 வினாக்களும் 33:37 இறை வசனம் குறித்து இருப்பதால், அவ் வசனத்தைக் காண்போம்.

அல்குர்ஆன் 33:37 (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள்புரிந்து நீரும் அருள் புரிந்து, அவரிடத்தில் நீர்: “அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்கு செய்து விடாமல்) உம்மிடமே தடுத்து வைத்துக் கொள்ளும்” என்று சொன்னபோது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்கு பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன். ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்து விட்ட பின்னர், நாம் அவளை உமக்கு மனம் செய்வித்தோம்; ஏனென்றால், முஃமின்களால் (எடுத்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வeர்த்த)வர்கள் அப் பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருந்திருக்க கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்” வளர்த்தவர்-வளர்ப்புப் பிள்ளைகளுக்குத் தந்தையாக முடியாது என்பதை அல்லாஹ் வேறு விதமாகக் கூறியிருக்கின்ற இந்த 33:37வது இறைவசனத் தில் தாங்கள் தொடுத்துள்e வினாக்களுக்கு, விடை காண, சம்பவம் ஒன்றை நினைவூட்டுகிறோம். அதன் பின் தங்களுக்கு விடை கிடைத்துவிடும். அச்சம்பவம், ஸஹீஹுல் புகாரியின் விரிவுரையான “பத்ஹுல் பாரிஷியில் இடம் பெற்றுள்ளது. அதன் சுருக்கம் கீழே தரப்பட்டுள்eது. இது வெறும் சம்பவம் அல்ல! சம்பவத்திற்கு ஆதாரமாக இடை இடையே ஆயத்துகளும், ஹதீஸ்களும் கட்டத்தில் காட்டப்பட்டுள்eன.

சம்பவம்: நபி(ஸல்) அவர்கள் நபி ஆவதற்கு முன்பே, ஜைது (ரழி) (நபி(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை இவர்) அவர்களைத் தமது வளர்ப்பு மகனாக ஆக்கிக் கொண்டார்கள். அறியாமைக் காலத்தில் வeர்ப்பு மகனை சொந்த மகனாகவே கருதினர். எனவே வளர்ப்பவரின் பெயருடன் இணைத்து, “இன்னார் மகன்’ என்றே அவரை அழைத்து வந்தனர். அந்த வழக்கப்படி, ஜைதை “முஹம் மதின் புதல்வர் ஜைது’ என்றே மக்கள் அழைத்து வந்தனர். வeர்ப்பவரின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வந்து விடுவது அப்போது நடைமுறையில் இருந்த பழக்கம். குர்ஆனின் 33:5வது வசனம் இறக்கி அருள் செய்யப்படும் வரை இந்த பழக்கம் நீடித்திருந்தது.

ஹதீஸ் எண்: 4782 ரஅக. அறிவிப்பாeர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரழி), புகாரீ.

“”வeர்ப்புப் புதல்வர்கçe அவர்களின் சொந்தத் தந்தையின் பெயருடன் சேர்த்தே அழையுங்கள்; இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” என்ற 33:5வது வசனம் அருளப்படும் வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் விடுதலை செய்யப் பட்ட அவர்களின் வளர்ப்பு மகன் “ஜைத் பின் ஹாரிஸா (ரழி)’ அவர்களை, “ஜைத் பின் முஹம்மத்’ என்றே அழைத்து வந்தோம். (இதே அறிவிப்பாeரின் அறிவிப்பில் இதே ஹதீஸ் திர்மிதியிலும் இடம் பெற்றுள்ளது.)

சம்பவம் தொடர்கிறது: ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களின் அத்தை உமாமா பின்த் அப்துல் முத்தலீப் அவர்களுடைய புதல்வி. (அதாவது மாமி மகள்). ஜைனபை ஜைது(ரழி) அவர்களுக்கு மணமுடிக்க நபி(ஸல்) அவர்கள் விரும்பினார்கள். ஜைனபிற்கு ஆரம்பத்தில் இத்திருமணத்தில் உடன்பாடு இல்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களின் ஏற்பாடுதான் இது என்று தெரிந்த பிறகு திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள். திருமணம் நடந்தேறியது.

எதிர்காலத்தில் ஜைனப் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக ஆவார் என்று நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிப்புச் செய்தான். வeர்ப்பு மகனைப் பெற்ற மகன் போல் கருதும் அக்காலத்தில், வளர்ப்பு மகனான ஜைதுடைய மனைவியை, அவர் விவாகரத்து செய்த பின் தான் மணப்பதை எதிர்த்து மக்கள் வீண் விவகாரங்களைக் கட்டவிழ்த்து விடுவார்கள் என அஞ்சி, இதை வெளியே சொல்ல நபி(ஸல்) அவர்கள் பயந்தார்கள்.

இந்த நிலையில் ஜைனப்-ஜைது இருவருக்கும் இடையே அடிக்கடி மனக்கசப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. ஒருமுறை ஜைது (ரழி) அவர்கள்,

நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஜைனபின் நாவு ரொம்பவும் நீள்கிறது. நான் அவரை விவாகரத்து செய்து விட விரும்புகிறேன்’ என்று முறையிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,

“”…அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்! உம் மனைவியை உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்..” என்று அறிவுரை கூறினார்கள். (அல்குர்ஆன் 33:37)

நாட்கள் நகர்ந்தன; என்றாலும் ஜைன பிற்கும்-ஜைதுக்கும் மனக்கசப்பு நீடித்துக் கொண்டிருந்தது. வeர்ப்பு மகனை சொந்த மகனாகக் கருதி செயல்பட்டுக் கொண்டிருந்த அறியாமைக் கால மரபுகளை முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய அல்லாஹ், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையிலேயே அதற்கான முன்மாதிரியை ஏற்படுத்தி அருள் புரிந்தான். ஜைனபை ஜைது விவாகரத்துச் செய்தார். அதன் பிறகு நபி(ஸல்) அவர்களுக்கு ஜைனப் (ரழி) அவர்கçe அல்லாஹ்வே மணமுடித்து வைத்தான். (33:37)

தனது மகனின் மனைவியையே -அதாவது- மருகçeயே, முஹம்மது மணந்து கொண்டது போல அறியாமைக் கால வழக்கப்படி மக்கள் பேச ஆரம்பித்தனர். இதையும், அல்லாஹ் 33:40வது வசனத்தின் மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து விட்டான்.

“”முஹம்மது உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராக வும், நபிமார்களுக்கெல்லாம் இறுதியாகவும் (முத்திரையாகவும்) இருக்கின்றார். மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கு அறிந்தவன்” – (அல்குர்ஆன் 33:40)

அல்லாஹ்வின் தூதரின்(ஸல்) பணிகளில் உதவி செய்து, அவர்களுக்கு நெருக்கமாக இருந்து வந்த ஜைது(ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஜைனபை மணமுடித்த பின்பும், நபி(ஸல்) அவர்களுடன் நெருக்கமாகவே இருந்தார். இஸ்லாத்தில் விபச்சாரம் ஹராமாக்கப் பட்டிருப்பதால், அதை எந்த முஃமினும் நினைத்துக் கூட பார்த்திருக்க முடியாது. ஆனால், ஜைதுக்கும் ஜைனபுக்கும் அவர்களைப் பற்றிய நினைவுகள் தொடராமலிருக்க வேண்டுமே! ஜைது செய்த விவாகரத்து அதற்குப் போதுமானதாக இருந்தாலும், அல்லாஹ் இந்த சிக்கலை மிக அழகாகக் கையாண்டிருப்பதை 33:6வது இறைவசனத்தில் பாருங்கள்.

“”இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கிறார். இன்னும் அவருடைய மனைவியர் அவர் களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்..”

அனைத்தும் அறிந்த நுண்ணறிவாளன் அல்லாஹ் அழகாக பிரச்சனைகçe முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டான்.

ஆக நபி(ஸல்) அவர்களுக்கும் ஜைனப்(ரழி) அவர்களுக்கும் நடந்தேறிய திருமணம் மற்ற சம்பவங்கள் அனைத்தும் அல்லாஹ்வின் ஏற்பாடால் அவன் நாட்டத்தை நிறைவேற்றியதையும், மற்றும் தங்களின் 2,3,4வது கேள்வி களுக்கு 33:37வது இறைவசனம் விடையளித்திருப்பதையும் இப்போது பார்வையிடுங்கள்.

“”எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து, அவர் மீது (நபியே! நீரும் அருள்புரிந்தீரோ….” என்று அல்லாஹ் (33:37ல்) குறிப்பிடுவது ஜைது பின் ஹாரிஸா(ரழி) அவர்களைத்தான். அல்லாஹ்வின் நாட்டப்படி அடிமையாயிருந்த ஜைதை நபி(ஸல்) அவர்கள் விடுதலை செய்த சம்பவத் தைத்தான் “அருள்’ என்று குறிப்பிடுகிறான். மேலும், ஜைனப்(ரழி) அவர்கள்தான் எதிர் காலத்தில் நபி(ஸல்) அவர்களின் மனைவி என்று அல்லாஹ் அறிவிப்புச் செய்திருந்தும், அதை நபி(ஸல்) அவர்கள் மனதில் மறைத்து வைத்துக் கொண்டு ஜைது(ரழி) அவர்களிடம் அல்லாஹ் வுக்கு பயந்து நீர் உம் மனைவியை உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்..”(33:7) என்று கூறியதையே, நபி(ஸல்) அவர்கள் மனதில் மறைத்து வைத்திருந்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

மேலும் அல்லாஹ்வின் நாட்டப்படியான திருமணம் என்பதை 33:37ல் “… ஜைது விவாக விலக்கு செய்து விட்ட பின்னர், நாம் அவளை (நபியே) உமக்கு மணம் செய்வித்தோம்…” என்ற வசனத்திலிருந்து அறியமுடிகிறது. மேலும், இப் படிப்பட்ட திருமணங்களுக்குத் தடை இல்லை என்பதை 33:37ல் “…ஏனென்றால், முஃமின்களால் வeர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்து செய்து விட்டால், (வளர்த்த) அவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் எந்த ஒரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்கு இது நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டçeயாகும்” என்று அல்லாஹ் உறுதிபடக் கூறுகிறான்.

“”அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் வாழ்க்கையே முழு குர்ஆனாக இருந்தது” என்று கூறிய அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தமது கணவர் குறித்து பெருமிதம் கொண்டு கூறிய ஹதீஸை கவனியுங்கள்.

“”வஹீ வந்ததில் நபி(ஸல்) அவர்கள் எதையாவது மறைத்திருக்க நேர்ந்திருந்தால் இந்த 33:37வது வசனத்தை மறைத்திருப்பார்கள். ஆனால் அதையும் வெளிப்படுத்தி விட்டார்கள்.” அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நூல்: திர்மிதீ.

தங்கeது 4வதுவினா : எடுத்து வளர்த்த பிள்ளைகளுக்கு சொத்தில் பங்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

தந்தையின் சொத்தில் தங்களுக்கு சேர வேண்டிய பங்கிலிருந்து பிரித்துக் கொடுக்க பெற்ற பிள்ளைகள் விரும்புவார்களா? இன்றைய உலகில் பணத்தாசை பிடித்த வெறியர்களைத்தான் அதிகமாகக் காணமுடிகிறது. தனக்கு கிடைக்க வேண்டிய பங்கிலிருந்து தன்னுடன் பிறக்காத வeர்ப்பு மகனுக்குக் கொடுப்பதை, பாத்தியத்தை உள்eவர்கள் விட்டுக் கொடுப்பார்களா? உரிமையாளர்களின் உரிமையை இழக்கச் செய்ய நமக்கென்ன அதிகாரம் இருக்கிறது? அப்படிச் செய்தால், பிறரின் உரிமையில் தலையிடுவதாகாதா? நியாயமா? இன்றைய உலகில் அப்படிச் செயல்பட்டால், வெட்டு-குத்து என்று செயல்பட ஆரம்பித்து விடுவார்கள்.

உரிமை உள்eவர்களில் பலர் வeர்ப்பு மகனுக்குக் கொடுக்க விரும்பினால் கூட, பிரச்சனை பூதாகரமாக ஆகி விடுவதற்கு உரிமை உள்eவர்களில் ஒருவர் எதிர்த்தால் கூட போதுமே. உரிமை உள்ள பெண் பிள்ளைகள் ஒருக்கால் விட்டுக் கொடுக்க முன்வந்தாலும், அவர்களின் கணவன்மார்களில் எவராவது ஒருவர் மனைவியைத் தூண்டிவிட்டால் போதும் பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும்.

பிள்ளைகளை எடுத்து வeர்க்கும் குடும்பங்களிலெல்லாம், இப்படியாக பிரச்னைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருந்தால், எந்த பிள்ளையையும் எடுத்து வளர்க்கக் கூடாது என்ற தவறான முடிவிற்கு மக்கள் வந்து விடுவார்கள். அந்த பிள்ளைகளும் கவனிப்பாரற்றுப் போய் விடு வார்கள். இந்த நிலை ஏற்பட்டு விட்டால், அப் பிள்ளைகளின் வாழ்க்கை நிலை என்ன? எல்லாம் அறிந்த அல்லாஹ் அவன் நாட்டப்படி விதியாக்கியதில் குறை இருக்க முடியாது என்பதில் முஃமின்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொள் ளவேண்டும்.

வeர்த்த பிளளைகளுக்கு பங்கு கொடுத்திருக்கலாம் என்பது தங்கeது வாதமாக இப்போதும் இருக்குமேயானால், நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த பிள்ளைகள் யார்? தாய்-பிள்çe என்ற மேலான உறவை மதிக்காமல், வறுமை யின் காரணமாக இறை நம்பிக்கையின்றி விற்கப்பட்டவர்கள்; அல்லது உறவினருக்கோ, சினேகி தனுக்கோ, அறியாதவருக்கோ கூட குழந்தை இல்லை என்று பெற்றோரால் விலை பேசப்பட்டு விற்கப் பட்டவர்கள்; அல்லது தகாத உறவின் மூலம் குழந்தையைப் பெற்ற தாயால் குப்பைத் தொட்டிகளிலும், சாக்கடைகளிலும் வீசி எறியப்பட்டவர்கள். கொடுமை அல்லவா இது? இந்தக் குழந்தைகளுக்கு உடனடித் தேவை சொத்து சுகங்களில் உரிமையோ, பங்கோ அல்ல. மாறாக, தன்னையும் ஒரு மனிதப் பிறவியாக மதித்து, தன்மீது பச்சாதப்பட்டு, தன்னை எடுத்து வeர்த்து உடனடியாகப் போ´க்கக் கூடிய ஒரு நல்ல மனிதர்தான் உடனடித் தேவை. ஆனால் வளர்ந்து ஆளான பின், தன்னையும் மனிதன் என்று உலகிற்கு அறிமுகப்படுத்திய அந்த நல்ல மனிதனுக்கு நன்றி செலுத்தாமல், அவரது சொத்தில் பங்கு கேட்பதும், அதற்காக அவர் பெற்றெடுத்த பிள்ளைகளிடம் சரிசமர் நிகராக சண்டை இடுவதும் தம்மை வeர்த்தவருக்கு செய்யும் துரோகம் அல்லவா?

ஆயினும் வளர்ப்புத் தந்தை உயிரோடிருக்கும்போது வளர்ப்பு மகனுக்குத் தனது சொத்திலிருந்து ஒரு பகுதியைக் கொடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. அவர் இறந்த பின் வாரிசு என்ற அடிப்படையில் உரிமை கோருவதையே இஸ்லாம் தடுத்துள்ளது. மேலும் கருணைமிக்க அல்லாஹ் “பாகப் பிரிவினை செய்யும்போது, உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால், அவர்களுக்கும் அதிலிருந்து வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள்” என்று 4:8வது வசனத்தில் மனிதர்களுக்கு அறிவுரை பகர்கின்றான்.

எனவே, நமது குறைமதியைக் கொண்டு, நுண்ணறிவாளனான அல்லாஹ்வின் வல்லமையில் குறைகாணாதிருப்போமாக.

“”……இறைவா! நாங்கள் செவியேற்றோம், (கட்டçeகளுக்குக்) கீழ்ப்படிந்தோம்; உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்…” என்று தூதர் (ஸல்) அவர்களும் முஃமின்களும் நம்பிக் கைக் கொண்டிருப்பதாக 2:285வது வசனத்தில் அல்லாஹ் குறிப்பிட்டிருப்பதை நினைவில் கொண்டு செயல்படுவோமாக.

இ-மெயில் தகவல்!

னித குர்ஆனில், ஒரு சில வார்த்தைகளும் -அவற்றின் எதிர்வார்த்தைகளும் அல்லது அவற்றைச் சார்ந்துள்ள வேறுசில வார்த்தை களும் சம அeவு எண்ணிக்கையில் அமைந் திருப்பதாக டாக்டர் தாரிக் அல் ஸ்வைதன் என்பவர் கண்டறிந்துள்ளார். ஆச்சரியப் படத்தக்க இந்த அரிய செய்திகçe எமக்கு வந்த இ-மெயில் தகவல் ஒன்றில் கண்டோம். இவற்றைத் தவிர வேறு தகவல்களையும் தந்துள்ளார்.

வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அவைகளை இங்கே இடம்பெறச் செய்துள்ளோம். படித்து வியப்படைவீர்களாக.

வார்த்தை குர்ஆனில் இடம் பெற்றுள்ள  எண்ணிக்கை

மனிதன் 24

துன்யா 115

(உலக வாழ்க்கை)

மலக்குகள் 88

வாழ்க்கை 145

நன்மை 50

மக்கள் 50

இப்லீஸ் 11

சோதனை 75

செலவிடுதல் 73

வழி தவறியவர்கள்17

முஸ்லிமீன் 41

தங்கம் 08

மந்திரவித்தை 60

ஜகாத் 32

மனம் 49

நாவு 25

ஒதுங்கிவிடு 08

வெளிப்படையாகப் பேசுதல் 18

கஷ்டம் 114

முஹம்மது 04

வார்த்தை குர்ஆனில் இடம் பெற்றுள்e எண்ணிக்கை

மற்றும் சில வார்த்தைகள் குர்ஆனில் இடம் பெற்றுள்e எண்ணிக்கைகçeயும் பார்த்து, இன்னும் ஆச்சரியம் அடைவோம்.

தொழுகை : 5 இடங்கள்

(5 வேளை தொழுகை கடமை)

மாதம் : 12 இடங்கள் (12 மாதங்களே

எல்லா மொழிகளிலும் உள்eன)

நாள் : 365 இடங்கள் (365 நாட்கள் ஒரு வருடம் ஆகும்)

அடுத்துள்ள தகவல்களையும் கவனியுங்கள்.

கடல் : 32 இடங்கள், நிலம்: 13 இடங்கள்

கடலும் நிலமும் : 45 இடங்கள் (32+13)

கடல் : 32/45மீ யீ 100% = 71.11111111%

நிலம் : 13/45மீ யீ 100% = 28.88888889%

கடல் +நிலம் = 100.00%

நீர் 71.111%, நிலம் 28.889% என்ற கணக்கில் பூமி அமைந்துள்ளதாக இன்றைய விஞ்ஞானம் நிரூபித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த ஆச்சரியங்கள் குர்ஆனில் இருப்பது எவ்வாறு? மனிதக் கரங்களால் குர்ஆன் எழுதப்பட்டதல்ல என்பதற்கான சான்றுகள் பலவற்றுள் இதுவும் ஒரு சான்றாகும்.

இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இவைகளைக் கற்றுக் கொடுத்தது யார்? இதற்கான விடை மனதில் சர்வ சாதாரணமாக இன்னேரம் தோன்றி யிருக்க வேண்டுமே!

ஆம்! சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்வே இவைகளை

எழுதப்படிக்கத் தெரியாத தம் தூதருக்கு கற்பித்தான்.

புனித குர்ஆன் இதைத்தான் போதிக்கிறது.

குர்ஆனை கற்போம் கற்பிப்போம் குர்ஆனை அறிவோம் அறிமுகப்படுத்துவோம்

குர்ஆனை செயல்படுத்துவோம் செயல்படுத்த ஏவுவோம்.

மார்க்கப் பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா?
மார்க்கப் பணிக்கு கூலி(சம்பளம்) அனுமதிக்கப்பட்டதா? மார்க்கப் பணிக்கு கூலி பற்றி இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆன் என்ன சொல்கிறது என்று முதலில் பார்ப்போம்.

அல்லாஹ் நபிமார்களுக்கு இட்டக் கட்டளை!

மார்க்கத்தைப் பிழைப்பாக – தொழிலாகக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் நபிமார்களுக்கு இட்டக் கட்டளை:

(நபியே!) இவர்கள் அனைவரையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்தினான். ஆகவே, அவர்களுடைய நேரான வழியை நீங்களும் பின்பற்றுங்கள். மேலும் ‘இந்த குர்ஆனை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்லுபதேசமாகும்’ என்று கூறும். (6:90)

(அன்றி) பின்னும் நீங்கள் (என்னைப் புறக்கணித்(து நிராகரித்)தால் (அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால்) நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (மற்றெவரிடமும்) இல்லை. நான் அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நடக்கும்படியாகவே கட்டளையிடப்பட்டுள்ளேன்’ (என்று கூறினார்). (10:72)

இந்த இறைவாக்கை கவனமாகப் படித்துப் பாருங்கள். நீங்கள் (என் அறிவுரையை) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லைளூ எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்திலும்) இல்லை என்ற பாகத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள். மக்களிடம் கூலியை எதிர் பாராமல் மார்க்கத்தை உள்ளது உள்ளபடி சொன்னால் பெரும்பாலான மக்கள் ஏற்கமாட்டார்களே என்ற கவலை நபிமார்களுக்கு இருக்கவில்லை. அந்த அடிப்படையில் தனக்குப்பின் ஒருவர் கூட இல்லாத நிலையில் சில நபிமார்கள் தன்னந்தனியாகச் சுவர்க்கம் புகுவார்கள் என ஹதீஸ்களில் பார்க்கிறோம். அதே சமயம் மக்களிடம் கூலியை எதிர்பார்த்திருந்தால் அப்பெரும்பான்மை யினரின் ஆதரவை நோக்கமாகக் கொண்டு குர்ஆன், ஹதீஸை திரித்துச் சொல்லும் கட்டாயம் ஏற்பட்டிருக்கும் (பார்க்க 17:73,74,75). இப்புரோகிதர்கள் கூலியை மக்களிடம் எதிர்பார்ப்பதாலேயே அவர்களது விருப்பப்படி குர்ஆன், ஹதீஸை திரித்து, வளைத்து, மறைத்துச் சொல்லி வழிகெட்டு நரகிற்கு ஆளாகிறார்கள். அவர்கள் மக்களிடம் பெறும் கூலி – சம்பளமே இப்புரோகிதர்களை அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து நடக்கும் முஸ்லிம்களின் நிலையி லிருந்து வழிகெட வைக்கிறது என்பதை உறுதிப்படுத்த வில்லையா?

‘அன்றி என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். (11:29)

மக்களால் பேரறிஞர்களாக மதிக்கப்பட்டவர்கள் தான் இங்கு அல்லாஹ்வால் மூடர்களாக அடையாளம் காட்டப்படுகிறார்கள்.

என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி என்னை படைத்தவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? (11:51)

(அவர்களை நோக்கி) இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை. ஆயினும் எவன் தன் இறைவனின் வழியில் செல்ல விரும்புகின்றானோ அவன் செல்வதை (நீங்கள் தடை செய்யாமல் இருப்பதை)யே (நான் உங்களிடம்) விரும்புகின்றேன் என்று (நபியே) நீர்; கூறும். (25:57)

(இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை: என்னுடைய கூலி யாவும் உலகத்தாரைப்; படைத்து காப்பாற்றி வளர்ப்பவனிடமே இருக்கின்றன. (26:109)

இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியையும் கேட்கவில்லை என்னுடைய கூலியெல்லாம் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமே இருக்கிறது. (26:127)

இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை. (26:145)

இதற்காக நான் உங்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்கவில்லை. என்னுடைய கூலி யாவும் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்ப்பவனிடமேயன்றி (வேறு யாரிடமும்) இல்லை’. (26:164)

இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லைளூ என்னுடைய கூலியெல்லாம், உலகத்தாரைப் படைத்து வளர்த்து வரும் இறைவனிடமேயன்றி (வேறெவரிடமும்) இல்லை. (26:180)

(நபியே! மேலும்) நீர் கூறும்.. ‘நான் உங்களிடத்தில் யாதொரு கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தமாகட்டும், என்னுடைய கூலி அல்லாவிடமேயன்றி (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்தையும் அறியக்கூடியவனாக இருக்கின்றான். (34:47)

ஆகவே, (நபியே!) நீர்; கூறும்;: (மனிதர்களே) இதனை ஓதிக் காண்பிப்பதற்காக) நான் உங்களிடத்தில யாதொரு கூலியையும் கேட்கவில்லை. (38:86)

நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்த தன்னுடைய (நல்) அடியார்களுக்கு அல்லாஹ் நற்செய்தி கூறுவதும் இதுவே. (நபியே!) நீர் கூறும் இதற்காக நான் யாதொரு கூலியும் கேட்கவில்லை (என்று) ‘உறவினர்களை நேசிப்பதைத் தவிர, எவர் நற்செயல்ளைத் தேடிக் கொள்கின்றாரோ, அவருக்கு நாம் அதில் பின்னும் நன்மையை அதிகரிக்கச் செய்கின்றோம். நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், நன்றியை அங்கீகரிப்ப வனாகவும் இருக்கின்றான். (42:83)

மார்க்கப் பணியில் எப்படிப்பட்டவர்கள் மட்டுமே நேர்வழியில் இருக்க முடியும்?

உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்;களையே நீங்கள் பின்பற்றுங்கள். இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் (யாஸீன் 36:21) இதிலிருந்து மார்க்கப் பணிக்கு கூலி – சம்பளம் வாங்குகிறவர்கள் பின்பற்றப்படுவதற்குத் தகுதியானவர்கள் இல்லை. காரணம் அவர்கள் நேர்வழியில் இல்லை. கூலியை – சம்பளத்தை நோக்கமாகக் கொண்டு கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி மக்களை நரகில் தள்ளுவார்கள் என்பதை விளங்க முடியும்.

மக்களிடம் சம்பளத்தை எதிர்பார்க்கும்போது அதிகமான மக்களைக் கவரும் கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால் அதிகமான மக்கள் நேர்வழிக்கு வரமாட்டார்கள் என்று அல்லாஹ் எண்ணற்ற இடங்களில் கூறியுள்ளான். (பார்க்க 2:243, 6:116, 7:187, 11:17, 12:21,38,40,68,13:1) அவர்கள் கோணல் வழிகளையே விரும்பு வார்கள். அவர்கள் விரும்பும் கோணல் வழிகளை நேர் வழியாகக் காட்டினால்தான் அதிகமானோர் விரும்பி ஏற்பார்கள். எனவே கூலியை எதிர்பார்க்கும் புரோகிதர்கள் நன்கு அறிந்த நிலையில்தான் கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். இதோ அல்குர்ஆனை கூறுகிறது.

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (அல்பகரா 2:42)

எவர்களுக்கு நாம் நெறிநூல்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம்(சொந்த) மக்களை அறிவதைப் போல் (நேர் வழியை) அறிவார்கள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக் கின்றனர். (அல்பகரா 2:146)

எவரும் தம் குழந்தைகளை அறிவதுபோல், நெறிநூல் கொடுக்கப்பட்டவர்கள் (நேர்வழியை) நன்கறிவார்கள். எவர்கள் தமக்குத்தாமே நஷ்டமிழைத்துக் கொண்டார் களோ அவர்கள் தாம் நம்பிக்கைக் கொள்ள மாட்டார்கள். (அன்ஆம் 6:20)

புரோகிதர்கள் மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதே முஸ்லிம் சமுதாயம் கடன் சுமை ஏற்பட்டு பல மூடநம்பிக்கை களிலும், வழிகேட்டில் இட்டுச் செல்லும் வெற்றுச் சடங்குகளை வழிபாடுகளாக எண்ணிச் செய்யும் நிலைக்கு ஆளாகின்றது என்பதை 52:40, 68:46 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

நீர் அவர்களிடம் ஏதாவது கூலி கேட்டு, அதனால் அவர்களுக்கு கடன் சுமை ஏற்பட்டுவிட்டதா? (52:40, 68:46)

சம்பளத்திற்கு மார்க்கப் பணி செய்கிறவர்கள் பல தில்லு முல்லுகளைச் செய்து மக்களை கோணல் வழிகளில் அழைத்துச் சென்று நரகில் தள்ளுகிறார்கள் என்பதைக் கீழ்காணும் இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

அவர்கள் மற்றவர்களை (நேர்வழியாகிய) அதை (கேட்க விடாது) தடுக்கிறார்கள்: இவர்களும் அதைவிட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள், அவர்கள் தங்களைத் தாங்களே நாசமாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் (இதை) புரிந்து கொள்வதில்லை. (அல்அன்ஆம் 6:26)

அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்கின்றனர். இன்னும் அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் காரியங்கள் மிகவும் கெட்டவை. (அத்தவ்பா 9:9)

அவர்கள் எந்த முஃமினின் விஷயத்திலும் உறவையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். மேலும் அவர்கள் வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.(அத்தவ்பா 9:10)

நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக பாதிரிகளி லும், சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் பொருட்களை தவறான முறையில் சாப்பிடுகிறார்கள். மேலும் அல்லாஹ் வின் பாதையை விட்டும்(மக்களை) தடுக்கிறார்கள்.. (அத்தவ்பா 9:34)

அவர்கள் (மனிதர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறார்கள். மேலும் அதில் கோணலையும் உண்டுபண்ண விரும்புகிறார்கள். இவர்கள்தாம் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள். (ஹூது 11:19)

மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அறிவில்லாமல் (பிக்ஹு, சுய கருத்துகள் போன்ற) வீணான செய்திகளை விலைக்கு வாங்கி (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு. (லுக்மான் 31:6)

(மேலும் பார்க்க: 2:41,75,78,79,109 3:78,187,188, 4:44,46, 5:41,62,63, 6:21,25, 11:18)

சம்பளத்திற்கு மார்க்கப். பணி புரியும் புரோகிதர்கள் இந்த அளவு தரங்கெட்ட இழி நிலைக்கு ஆளாவதற்குக் காரணம் ஹராமான உணவு அவர்களின் உள்ளங்களை சுருங்கி இறுகச் செய்து கற்பாறைகள் போல் ஆக்கி விடுவதால் புரோகிதர்களால் சத்தியத்தை – நேர்வழியை உணர முடியாத நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த நிலையையும் அல்லாஹ் அல்குர்ஆனில் கீழ்கண்ட வசனங்களில் சுட்டிக் காட்டுகிறான். 2:74, 5:13, 6:125.

இதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன. அவை கற்பாறைகள் போல் ஆகிவிட்டன…….. (2:74)

அப்பால்(புரோகிதர்களாகிய) அவர்கள் தம் உடன்படிக் கையை முறித்துவிட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம். அவர் களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை) வசனங்களை அவற்றிற்குரிய இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள்……. (5:13)

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவர் களுடைய நெஞ்சை இஸ்லாத்தின்பால் விசாலமாக்குகிறான். யாரை வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான்… (6:125)

அல்லாஹ்வின் எண்ணற்ற நேரடிக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்து முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப் பதால், இப்புரோகிதர்கள் பெரும் பாவிகளாகி விடுவதால் இவர் களுக்கு நேர்வழி பெறும் பாக்கியம் கிட்டவே கிட்டாது. காரணம் பாவிகளுக்கு நாம் ஒருபோதும் நேர்வழி காட்ட மாட்டோம் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் கண்டிப்பாகக் கூறுகிறான்.(பார்க்க: 5:108, 9:24, 80, 61:5, 63:6)

இந்த இடத்தில் இன்னொரு முக்கிய பொருளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் புரோகித மவ்லவிகளை விட மிகப் பெரும் பாவிகளாக நாம் வேறு யாரையும் குர்ஆனுடைய வெளிச்சத்தில் பார்க்க முடியாது. ஒருவன் புரோகிதத் தொழில் செய்யாமல், இதர ஹராமான பொருள்கள் அனைத்தையும் சாப்பிடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணமாக, அவன் வட்டி, பன்றிக்கறி, செத்தது, இரத்தம், அனாதைகள் சொத்து, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, விபச்சாரம், குடி என அல்குர்ஆனில் ஹராமாக்கப் பட்ட அனைத்து வகை மூலம் சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனைப் பொருத்தமட்டிலும் அல்குர்ஆனிலுள்ள சுமார் 43 இடங்களில் அல்லாஹ் தடுத்துள்ள வற்றில் ஈடுபடுகிறான். அதற்கு மேலும் அவன் தனக்குத்தானே தீங்கிழைத்து தன்னுடைய மறுமை வாழ்க்கையை நட்டப் படுத்தி நரகில் வீழ்கிறான். மேலும் சிலரின் இவ்வுலக வாழ்க்கையில் மட்டும் நட்டத்தை உண்டாக்குகிறானே அல்லாமல் அவர்களில் ஒருவருடைய மறு உலக வாழ்க்கையையும் நட்டப்படுத்தி அவர்களை நரகில் விழச் செய்வதில்லை.

அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகள் அல்குர்ஆனின் சுமார் ஐம்பதுக்கும்(50) மேற்பட்ட இறைக் கட்டளைகளை நிராகரித்துப் புறக்கணித்துவிட்டு, முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிட்டு, துணிந்து மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருக்கின்றனர். தங்களை நரகத்திற்குரியவர் களாக ஆக்கும் மிகப் பெரும் பாவிகளாக இருப்பதோடு மற்ற மக்களுக்கு இவ்வுலகிலும் பெருந்தீங்குகள், நட்டங்கள் இழைப்பதோடு, அவர்களின் மறு உலக வாழ்க்கையிலும் ஈடு செய்ய முடியாத மாபெரும் நட்டத்தை உண்டாக்கி அவர்களை நரகில் தள்ளக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இப்போது சிந்தியுங்கள்! வானத்தின் கீழ் இவர்களை விட கேடுகெட்ட படைப்புகள் இருக்க முடியுமா? படைப்புகளிலேயே மிகமிக இழிவானவர்கள், கேடுகெட்டவர்கள் இவர்களே. இதை நாம் சொல்லவில்லை. இறைவனுடைய அத்தாட்சிகளைப் பெற்றிருந்தும் இப்புரோகித மவ்லவிகள் அவற்றை நழுவவிட்டு விட்டு, சம்பளம் என்ற அற்ப உலக ஆதாயத்தைக் குறிக் கோளாகக் கொண்டு அவற்றில் மூழ்கியதால் ஷைத்தான் அவர்களைப் பின் தொடர்கிறான். அதனால் வழி தவறியவர் களாகி விடுகிறார்கள். அல்லாஹ் நாடியிருந்தால், தனது அத்தாட்சி களைக் கொண்டு அவர்களை உயர்த்தி இருப்பான். ஆனால் இப்புரோகிதர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் மார்க்கப் பணிக்காகக் கூலி பெற்று சுவர்க்க வாழ்வை அடைவதைவிட இவ்வுலகிலேயே மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதன் மூலம் இவ்வுலக வாழ்வையே சதம் என மதித்து அவர்களுடைய மன இச்சைகளையே பின்பற்ற ஆரம்பித்து விட்டார்கள். அதனால் அல்லாஹ்வின் பார்வையில் நாயை விட இழிவானவர்களாக கேடுகெட்டவர்களாக ஆகிவிட்டார்கள் என்பதை அல்குர்ஆன் அல் ;அஃராஃப் 7:175 முதல் 179 வரையுள்ள வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அறிந்து கொள்ள முடியும்.

இப்புரோகித மவ்லவிகளின் மார்க்கப் பணிக்குரிய கூலி- சம்பளம் நாளை மறுமையில் இருக்கிறது என்பதை பல இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. இந்த நிலையில் அப்பணிக் காக மக்களிடம் கூலி வாங்குவது 2:188 கண்டித்துக் கூறும் இலஞ்சத்திலேயே சேரும். அரசு அதிகாரிகளுக்கு அவர்களுடைய பணிக்காக அரசு சம்பளம் கொடுக்கிறது. ஆனால் அந்த அரசு அதிகாரிகள் தாங்கள் எந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருக் கிறார்களோ அதே பணிகளை மக்களுக்குச் செய்து கொடுப்பதற்கு அந்த மக்களிடமிருந்தும் பணம் பெறுவது தண்டனைக்குரிய குற்றமா? இல்லையா? லஞ்சம் இல்லையா?

அந்த அதிகாரிகளுக்குத் திறமை இருந்தால், இவ்வுலக அரசுகளிடமிருந்து தப்பலாம். நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? முடியாது. ஆனால் இந்த இலஞ்சம் பெறும் அரசு அதிகாரிகளை விட கேடுகெட்டவர்களாக இருக்கிறார்கள் புரோகித மவ்லவிகள் அரசு அதிகாரிகளோ தங்களைப் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சியாளர்களையே ஏமாற்றுகிறார்கள். ஆனால் இப்புரோகித மவ்லவிகளோ அரசர்களுக்கெல்லாம் பேரரசனான, ஆட்சிகளுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளனான சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வையே ஏமாற்றும் நெஞ்சழுத்தத்தோடு, சர்வசக்தி மிக்க ஆட்சியாளனான அல்லாஹ்வே மார்க்கப் பணக்கு கூலி தானே கொடுப்பதாக வாக்களித்துள்ள நிலையில், இப்புரோகிதர்கள் மக்களிடம் கூலி-சம்பளம் வாங்குவது இலஞ்சங்களிலேயே மாபெரும் இலஞ்சமில்லையா? படைத்த அல்லாஹ்வையே ஏமாற்ற முற்படுவதாக இல்லையா? அல்லாஹ் இவர்;களை விட்டு வைப்பானா? இப்புரோகித மவ்லவிகளுக்காக மாபெரும் தண்டனை காத்திருப்பதில் சந்தேகமுண்டா? சொல்லுங்கள்.

அரசு அதிகாரிகளாவது மக்களின் தேவைகளை முடித்துக் கொடுத்தே லஞ்சம் பெறுகிறார்கள்; அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகளில் பலர் தங்களால் செய்து கொடுக்க முடியாதவற்றை செய்து கொடுப்பதாக மக்களை நம்பச் செய்து அவர்களது பொருள்களை அபகரிக்கிறார்கள்.

இதோ அல்குர்ஆனே கூறுகிறது. படித்துப் பாருங்கள்!

எவர்கள், அல்லாஹ் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து, அதற்குக்கிரயமாக சொற்பத் தெகையைப் பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தவிர வேறெதனையும் உட்கொள்ள வில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்: அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்ளூ அவர் களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்குப் பதிலாக (கடும்) வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? (அல்பகரா 2:174,175)

இதற்குக் காரணம், நிச்சயமாக அல்லாஹ் இந்நெறி நூலை உண்மையுடன் அருள் செய்தான். நிச்சயமாக இன்னும் இந்நெறி நூலில் கருத்து வேறுபாடு கொண்டவர் கள் பெரும் பிளவிலேயே இருக்கின்றனர். (அல்பகரா 2:176)

ஆக, இப்புரோகித மவ்லவிகள் தர்கா, தரீக்கா, மத்ஹபு, மஸ்லக், இயக்கம், கழகம், அமைப்பு என பல்வேறு பிரிவுகளில் பிளவுபட்டுக்கிடப்பதற்கு மார்க்கம் அதாவது குர்ஆனோ, ஹதீஸோ காரணமல்ல. மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே இப்பிளவுகளுக்குக் காரணம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்குகிறதா? இல்லையா? அவர்கள் பல கோணல் வழிகளிலும், வழிகேட்டிலும் நரகிற்குரியவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் இந்த 2:174,175,176 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து விளங்குகிறவர்கள் கண்டிப்பாக உணர முடியும்.

மேலும் ஹதீஸ்களில் என்ன கூறப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்.

இந்தச் சமுதாயத்திற்கு உயர்வும், மதிப்பும் இப்பூமியில் வசதியாக வசிப்பதும் உள்ளது என்று நற்செய்தி கூறுவீராக! அவர்களில் யாரேனும் மறுமைக்குரிய அமலை (செயலை) இவ்வுலகிற்காக (பொருளுக்காக) செய்தால் மறுமையில் அவருக்கு எந்தப் பயனுமில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உபைபின் கஃபு (ரழி) அஹ்மது, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகி.

ஒரு மனிதன் நீண்ட பிரயாணம் செய்து, புழுதி படிந்த வனாக, பரட்டைத் தலையனாக, இரண்டு கைகளையும் உயர்த்தி இறைவா! இறைவா! என்று பிரார்;த்திக்கிறான். ஆனால் அவனது உணவும் ஹராமானதாக உள்ளதுளூ அவன் அருந்திய பானமும் ஹராமானதாக உள்ளது. அவன் அணிந்துள்ள ஆடையும் ஹராமானதாக உள்ளது. இந்த நிலையில் அவனது பிரார்;த்தனை எங்ஙனம் ஏற்றுக் கொள்ளப்படும்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்.

மிகவும் கடுமையான பிரயாண சிரமங்களுக்கிடையில் இருக்கும் ஒரு பிரயாணியின் பிரார்த்தனை அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட எந்தத் தடையும் இல்லை. ஆனால் அவனது உணவு, பானம், ஆடை ஹராமாக இருப்பதால் அந்தப் பிரயாணியின் பிரார்த்தனை நிராகரிக்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாணத்தின் எவ்விதக் கஷ்டத்தையோ, துன்பத்தையோ அனுபவிக்காமல் வீட்டில் சுகமாக இருக்கும் இந்த புரோகித மவ்லவிகளின் உணவு, பானம், உடை, இருப்பிடம் அனைத்தும் ஹராமாக இருக்கும் நிலையில், அவர்கள் அவர்களுக்காகவும், சமுதாய மக்களுக்காகவும் கேட்கும் பிரார்த்தனைகளை அல்லாஹ் அங்கீகரிப்பானா? நிராகரித்து அப்புரோகிதர்களின் முகத்திலேயே தூக்கி எறிவானா? சகோதரர்களே நிதானமாக சிந்தியுங்கள். வழிகேட்டிலிருக்கும் இப்புரோகித மவ்லவிகள் மக்களுக்கு நேர்வழி காட்ட முடியும் என்று நம்புவதைவிட அடிமுட்டாள்த்தனம் வேறொன்று இருக்க முடியுமா?

அதனால்;;தான் முகல்லிது, கைரமுகல்லிது, தவ்ஹீது என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்களையும், பொய்ச் சத்தியங் களையும், அவதூறுகளையும், எவ்;வித சுய கருத்துக்களையும் புகுத்தாமல் குர்ஆன், ஹதீஸை மட்டும் மக்களிடம் எடுத்துச் சொல்பவர்கள் மீது இப்புரோகித மவ்லவிகளால், சுமத்த முடிகிறது. காரணம் அல்லாஹ்வைப் பற்றியோ மறுமையைப் பற்றியோ அச்சம் அவர்களுக்கு சிறிதளவும் இல்லை என்பதே! இன்னும் பாருங்கள் நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைகளை!

குர்ஆனை ஓதுங்கள்! அதன் மூலம் சாப்பிடவோ, பொருள் திரட்டவோ செய்யாதீர்கள். (நபிமொழி, அஹ்மத், தஹாவி, தப்ரானி, இப்னு அசாகிர்)

எவன் குர்ஆனை ஓதுகிறானோ அவன் அல்லாஹ்விடமே கேட்கட்டும். வருங்காலத்தில் குர்ஆனை ஓதிவிட்டு மக்க ளிடமே (கூலி) கேட்பவர்கள் தோன்றுவார்கள்! (நபிமொழி : திர்மிதி, அஹ்மத்)

இப்புரோகித மவ்லவிகளின் கேடுகெட்ட புத்தியை நபி(ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

இப்புரோகித மவ்லவிகளின் முயற்சியினால் சில சீர்திருத்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. அதற்கும் அவர்களின் சுயநலமே காரணமாகும். நேர்வழியை உள்ளது உள்ளபடி நிலைநாட்ட வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு அவர்களது முயற்சிகள் அமைவதில்லை. இந்த முஸ்லிம் சமுதாயத்தினர் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூஃபிஸ புரோகித மவ்லவிகளின் வலையில் சிக்கி தர்கா வணக்க வழிகேடுகளையும், கந்தூரி, மவ்லிது, கத்தம், ஃபாத்திஹா போன்ற வழிகேட்டுச் சடங்குகளையும் வழிபாடுகளாகச் செய்து வந்தனர்ளூ வருகின்றனர்.

இந்த நிலையில் சில புரோகித மவ்லவிகள் அந்த முஸ்லிம் பெருங்கூட்டத்திலிருந்து ஒரு கூட்டத்தை தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரும் கெட்ட நோக்கத்துடன் தர்கா சமாதி சடங்குகளைக் கடுமையாக எதிர்க்கவும், அதே சமயம் அதற்கு வழி வகுக்கும் தரீக்கா, மத்ஹபுகளை ஆதரிக்கும் நிலையை எடுத்தார்கள். இவர்கள் பரேல்வி புரோகித மவ்லவிகளிலிருந்து வேறுபட்டு தேவ்பந்த் புரோகித மவ்லவிகள் என தங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

தர்கா-சமாதிச் சடங்குகளில் மூழ்கி இருப்பவர்கள் பரேல்வி கொள்கையுடையோர் என்றும் தர்கா சடங்குகளை எதிர்க்கும் அதே வேளை தரீக்கா, மத்ஹபுகளை ஆதரிப்போர் தேவ்பந்த் கொள்கையுடையோர் எனவும் அடையாளம் காணப்பட்டனர். இரு சாராரும் புரோகித மவ்லவிகளே!.

அந்த தேவ்பந்த்-தப்லீஃக் கொள்கையில் மூழ்கி இருந்தவர்களிலிருந்து ஒரு கூட்டத்தைப் பிரித்தெடுக்க தரீக்காக்களை எதிர்த்தும் அதே சமயம் மத்ஹபுகளை ஆதரித்தும் ஒரு புரோகித மவ்லவி கூட்டம் கிளம்பியது. அவர்கள் தரீக்காக் களை கடுமையாகச் சாடினாலும் மத்ஹபுகளை ஆதரித்தார்கள். இன்றைய ஜமாஅத்தே இஸ்லாமி புரோகித மவ்லவிகள் இந்த வகையினரே.

அடுத்த ஒரு புரோகித மவ்லவி கூட்டம் கிளம்பியது. அவர்கள் மத்ஹபுகளை எதிர்த்து, அவர்களை முகல்லிதுகளாகவும், தங்களை கைர முகல்லிதுகளாகவும், குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவதாகச் சொல்லிக் கொண்டு, தங்களது பிரிவை மத்ஹபுக்கு மாற்றமாக மஸ்லக் என்று கூறிக்கொண்டு செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் பின்னால் சென்ற கூட்டம் தங்களை அஹ்லஹதீஸ் என்று கூறிக்கொண்டாலும் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள அஹ்லஹதீஸ் புரோகித மவ்லவிகளையே தக்லீது செய்யும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களும் தங்களால் குர்ஆன், ஹதீஸை நேரடியாகப் படித்து விளங்க முடியாது என்ற நம்பிக்கையில் மூழ்கியவர்களே.

இன்னொரு புரோகித மவ்லவி கூட்டம் தங்களை ஸலஃபிகள், ஸலஃபி மின்ஹாஜ் என்று கூறிக்கொண்டு தங்கள் கட்டுப் பாட்டில் ஒரு கூட்டத்தை வைத்துள்ளனர். அவர்கள் கலஃபிகளான பின்னோர்களைத்தான் பின்பற்றக் கூடாது. ஸலஃபிகளான முன்னோர்களைப் பின்பற்றலாம் எனக் கூறி எப்படியும் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் இடைத்தரகர்களை ஏற்படுத்தவே முற்படுகின்றன.

இப்போது தமிழகத்தில் புதிதாக முளைத்துள்ள ததஜ தலைமை புரோகித மவ்லவியோ கலஃபிகளையும் பின்பற்றக் கூடாது: ஸலஃபிகளையும் பின்பற்றக் கூடாது: ஆனால் நான் குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் கொடுக்கும் சுயவிளக்கங்களை தாராளமாகப் பின்பற்றலாம் என்கிறார். இப்படி புரோகித மவ்லவிகளில் ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் பின்னால் ஒரு மக்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்த முற்படுகிறார்களே அல்லாமல் எந்தப் புரோகிதக் கூட்டமும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக குர்ஆன், ஹதீஸ் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து தாராளமாக மார்க்கத்தை விளங்கலாம். அந்த அளவு அல்லாஹ் மார்க்கத்தை எளிதாக்கித் தந்துள்ளான் என்று மக்களிடம் கூறுவதாக இல்லை. அவர்கள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டிருப்பதே இதற்குக் காரணமாகும். தங்களின் தனிப்பட்ட, குடும்ப இவ்வுலக வாழ்க் கையை ஹலாலான வழியில் உழைப்பின் மூலம் நிறைவேற்ற வக்கற்றுப்போய், பொதுமக்களிடம் ஹராமான வழியில் பிச்சை கேட்டு கையேந்தும் இப்புரோகித மவ்லவிகள் மார்க்கத்தை விளங்கிய ஆலிம்களா? அவர்களால் பொதுமக்களுக்கு நேர் வழியைக் காட்ட முடியுமா? குருடன் கண் உள்ளவர்களுக்கு வழிகாட்டினான் என்றால் அதை யாரும் நம்புவார்களா?

மேலும், இந்தப் புரோகித மவ்லவிகள் பின்னால் செல்லும் ஒவ்வொரு கூட்டமும் தாங்கள் நம்பியுள்ள புரோகித மவ்லவிகள் தங்களைப் பேராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளதாக நம்பிக்கை வைத்துள்ளனர். தேவ்பந் கொள்கையுள்ள தப்லீஃக் புரோகித மவ்லவிகள் தங்களை தொழுகை, நோன்பு மற்றும் மார்க்கக் கடமைகளில் பொடுபோக்காக இருந்த நிலையிலிருந்து கரையேற்றி யுள்ளதாக நம்பி, தப்லீஃக் பிரசாரத்தில் ஈடுபடுகிறவர்கள் தப்லீஃக் புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

அதே போல் தரீக்கா வழிகேட்டிலிருந்து விடுபட்டுள்ள மக்கள் கூட்டம், தரீக்காக்களை எதிர்த்துப் பேசும் புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர். மத்ஹபு பிடியிலிருந்து விடுபட்டு ஸலஃபிகளைப் பின்பற்றும் கூட்டம் ஸலஃபி புரோகித மவ்லவிகளை உயிருக்குயிராக நேசித்து அவர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின் றனர். தமிழகத்தில் ததஜ தலைமைப் புரோகித மவ்லவியின் பிரசாரத்தின் காரணமாக தர்கா, தரீக்கா, மத்ஹபு வழிகேடு களிலிருந்து விடுபட்டுள்ள கூட்டம் தங்களை அந்த பேராபத்தி லிருந்து விடுவித்து கரையேற்றிய ததஜ தலைமைப் பூசாரியை தங்களின் ஆபத்பாந்தவனாக நம்பி அவரை உயிருக்குயிராக நேசித்து அவருக்கு அடிமைப்பட்டு அவரது காலடியில் கிடக்கின்றனர்.

இப்படி முஸ்லிம்களில் மிகப் பெருங்கொண்ட கூட்டம் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனரே அல்லாமல், தாங்கள் அல்லாஹ்வின் அடிமை, அவனது கட்டளை களுக்கே முற்றிலும் அடிபணிந்து நடக்க வேண்டும்: இப்புரோகித மவ்லவிகளின் சுய விளக்கங்களைப்;; புறக்கணித்து நேரடியாக குர்ஆன், ஹதீஸைப் படித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும் என்பதை உணர மறுக்கிறார்கள். பெரும் நட்டத்திற்குரியவர்கள். (33:36,66,67,68)

புரோகிதர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் பெருங்கொண்ட கூட்டம்; பலதரப்பட்ட இப்புரோகிதர்கள் பெரும் சேவை செய்து தங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுவதாக எண்ணுவது அவர்களின் வடிகட்டின அறியாமையாகும். அவர்கள் இவர்களை நரகிலிருந்து காப்பாற்றவில்லை. வேறு புரோகிதர்களை தக்லீது செய்த இவர்களை தங்களை தக்லீது செய்யும் நிலைக்கு மாற்றி இருக்கிறார்கள். அவ்வளவுதான் மற்றபடி நேரடியாக குர்ஆன், ஹதீஸ்படி நடக்க தங்களுக்குப் போதிக்கவில்லை என்பதை அறியாதிருக்;கிறார்கள்.

மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட அனைத்துப் பிரிவுகளின் புரோகித மவ்லவிகளும், தங்களின் சுய நலனுக்காக, அற்ப இவ்வுலக ஆதாயத்திற்காக முஸ்லிம் சமுதாயத்தைக் கூறு போட்டு, பிளவுபடுத்தி தங்களை தக்லீது செய்ய வைத்திருப்பதால் அவர்கள்; பெரும் பாவிகளாகவே இருக்கிறார்கள். அவர்களது நிய்யத் – எண்ணம் போல் அவர்களுக்கு உலக ஆதாயம் கிடைத்து விட்டது. (பார்க்க புகாரீ(ர.அ) முதல் பாகம் முதல் ஹதீஸ்) ஆயினும் அவர்கள் பெரும் பாவிகளாக இருப்பதால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்; நரகிற்குரியவர் களாகவே இருக்கிறார்கள் என்பதை பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இப்புரோகிதப் பாவிகளைக் கொண்டும் அல்லாஹ் மார்க்கத்திற்கு வலுவூட்டுகிறான் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கைப்படி (புகாரீ(ர.அ) 3-ம் பாகம் 3062 அறிவிப்பு: அபூஹுரைரா (ரழி) ) அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் (தக்லீது) பெரும்பாலான முஸ்லிம்கள் நம்புவது போல் பாவிகளான புரோகித மவ்லவிகளைக் கொண்டும் மார்க்கத்தில் சில முன்னேற்றங்கள் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. இந்த இடத்தில் வழி கெடுக்கும் ஷைத்தானே அபூ ஹுரைரா(ரழி) அவர்களுக்கு நல்லுபதேசம் செய்தது நினைவு கூரத்தக்கது. (அபூ ஹுரைரா(ரழி) புகாரீ)

எனவே இந்தப் புரோகித மவ்லவிகள் சமுதாயத்திற்கு நல்லதுதானே செய்கிறார்கள் என்று மயங்க வேண்டியதில்லை.

மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடவே கூடாது, கொடிய ஹராம் என பல இறைவாக்குகள் நேரடியாகக் கூறிக் கொண்டிருந்தும், அந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு (2:39) ஹராமான உணவு, பானம், உடை, இருப்பிடம் என அனைத்தையும் தவறான வழியில் அனுபவித்துக் கொண்டு அதுபற்றி எவ்வித சலனமும், வருத்தமும் இல்லாமல் இப்புரோகிதர்கள் செயல்படுவதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதுமட்டுமல்ல அன்று அபூபக்கர்(ரழி) மற்றும் கலீ.ஃபாக்கள் சம்பளம் வாங்கவில்லையா? அன்று கவர்னர்கள் சம்பளம் வாங்கவில்லையா? அதுபோல்தான் நாங்கள் சம்பளம் வாங்குவது என்று தங்களின் ஹராமான செயலை நியாயப்படுத்த முற்படுகின்றனர். கலீஃபாக்களும், கவர்னர்களும் அவர்கள் மீது கடமையில்லாத மக்களின் இ;வ்வுலகத் தேவைகளை நிறைவு செய்து கொடுக்கும் ஆட்சிப் பணியைச் செய்ததற்காக சம்பளம் பெற்றார்களே அல்லாமல், அவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையாக்கப்பட்ட மார்க்கப் பணிக்குச் சம்பளம் பெறவில்லை என்பதை நன்கு அறிந்த நிலையிலேயே இப்புரோகித மவ்லவிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.

அடுத்து மார்க்கப் பணியை முழுநேரப் பணியாகச் செய்வதால் பொருளீட்ட எங்களுக்கு நேரமில்லை என்றும் காரணம் கூறுகிறார்கள். கடமையாக்கப்பட்ட (9:71, 103:1-3, 3:110) மார்க்கப் பணியை முழு நேரம் செய்ய வேண்டியதில்லை. ஒரு இமாம் ஐங்காலம் தொழவைக்க, பிள்ளைகளுக்கு கிளிப்பிள்ளை பாடமாக அர்த்தம் புரியாமல் குர்ஆன் ஓதிக்கொடுக்க அதிகபட்சம் ஒரு நாளையில் ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஆகாது. எஞ்சியுள்ள 19 மணி நேரத்தை எப்படிச் செலவிடுகிறார்கள். மார்க்கப் பிரசாரமும் அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஓரிரு மணி நேரம் மட்டுமே ஆகும். எனவே அவர்கள் முழுநேரப் பணியாளர்கள் என்று கூறி சம்பளம் பெற முற்படுவது பொய்யும் பித்தலாட்டமு மாகும். இப்படி கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணிக்கு கூலி- சம்பளம் வாங்க புரோகித மவ்லவிகள் கூறும் அனைத்துக் காரணங்களும் ஏற்கத்தக்கவை அல்ல.

இமாமத் பணிக்கு குறிப்பிட்ட பள்ளிக்கு நேரம் ஒதுக்கி வர வேண்டியுள்ளது. அதற்காக சம்பளம் வாங்குகிறோம் என்கின்றனர். இமாம்களைவிட முஅத்தின்கள் முன்கூட்டியே நேரம் ஒதுக்கி பள்ளிக்கு வந்து பாங்கு சொல்லும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். இமாம்களோ மற்ற தொழுகையாளிகள் போல் ஜமாஅத் நடக்கும் நேரத்திற்கே ஆஜராகிறார்கள். பெரும்பாலான தொழுகையாளிகள் வந்த பின்னர் இகாமத் கூறும் சமயம் வரும் இமாம்களும் உண்டு. இந்த நிலையில் முஅத்தினுக்கே சம்பளம் கொடுக்க அனுமதி இல்லை என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைப் பாருங்கள்.

முஅத்தினை நியமனம் செய்தால் எந்தவிதமான பிரதி பலனும் (கூலி-சம்பளம்) பெற்றுக் கொள்ளாத ஒருவரை நியமிக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் என்னிடம் இறுதியான உறுதி மொழியாக வாங்கினார்கள் என்று உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரழி) அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது, திர்மிதீ)

தொழுகையாளிகள் வரும் முன்னரே முன்கூட்டியே வந்து பாங்கு சொல்லும் முஅத்தினுக்கே கூலி-சம்பளம் அனுமதி இல்லை எனும்போது, தொழுகையாளிகளுடன் ஒரு தொழுகை யாளியாக வந்து தொழவைக்கும் இமாம் கூலி-சம்பளம் வாங்குவதை மார்க்கம் அனுமதிக்குமா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் ஓர் ஊரில், ஒரு மஹல்லாவில் இருக்கும் முஸ்லிம் களில் சிறந்தவர், அதிகம் குர்ஆன் ஓதத் தெரிந்தவர், தொழுகைச் சட்டங்கள் அறிந்தவர் இமாமத் செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்கிறார்களே அல்லாமல், வெளியூரி லிருந்து இமாமை இறக்குமதி செய்து அவரே தொழ வைக்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடவில்லை என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். கூலியை-சம்பளத்தை எதிர்பார்த்தே இந்த இமாம்கள் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் பின்னால் தொழக் கூடியவர்களுக்குப் பெரும் இடையூறாக பித்அத்தான-பத்துஆவான ரெடிமேட் துஆவை(?) செய்வதில் முனைப்புக் காட்டுகின்றனர்.

மார்க்கப் பணிக்கு கூலி-சம்பளம் வாங்குவதை நியாயப்படுத்தி அவர்கள் வைக்கும் வாதங்கள் அனைத்தும் தரைமட்டமான பின்னர், அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா? கூலி-சம்பளம் இல்லாவிட்டால், மார்க்கப் பணி செய்கிறவர்களும், அவர்களது குடும்பத்தாரும் எப்படி உயிர்; வாழ்வது?: அவர்கள் மண்ணைத் தின்றா உயிர் வாழ்வார்கள்? என்று இப்புரோகித மவ்லவிகளும் அவர்களது பக்தர்களும் கேள்விக் கணை தொடுப்பார்கள்? அவர்களது ஈமான்-நம்பிக்கையின் நிலையைப் பார்த்தீர்களா?

இன்று மார்க்கப் பணிக்கு சம்பளம் வாங்குவதால் ஏற்படும் கெடுதிகளை விவரித்து, அதனால் மார்க்கப் பணிக்கு கூலி கூடாது, என்று எமது சுய கருத்தை-சொந்த அபிப்பிராயத்தை வெளிட்டால் அவர்களின் இக்கேள்வியில் நியாயம் உண்டு. அல்லாஹ் பாதுகாப்பானாக. எமது சுய கருத்துக்களை எந்த நிலையிலும் மார்க்கத்தில் திணிக்க நாம் ஒருபோதும் துணிய மாட்டோம். பெரியாரிய சிந்தனையில் சிக்;கமாட்டோம். மார்க்கப் பணிக்குக் கூலி-சம்பளம் கூடவே கூடாது என்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை அதாவது அல்லாஹ்வின் நேரடிக் கட்டளைகளையே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

இந்த நிலையில் அது நடைமுறை சாத்தியமில்லை என்று இப்புரோகிதர்களும், அவர்களது பக்தர்களும் கூறுவார்களே யானால், அதன் பொருள் என்ன? அல்லாஹ்வின் இக்கட்டளைகள் இக்காலத்திற்குப் பொருந்தாது, செல்லுபடியாகாது என்று அவர்கள் கூறுகிறார்கள் என்பதுதானே அதன் பொருள்? அப்படியானால் அவர்கள் அல்லாஹ் மீதும் மறுமை வாழ்க்கை மீதும் நம்பிக்கை உடையவர்கள்தாமா? ஈமானில்லாதவர்கள் மட்டுமே இப்படிக் கூற முடியும். இறை நம்பிக்கையில் உறுதி உடையவர்கள் இறைக் கட்டளைகள் முக்காலத்திற்கும் நடைமுறை சாத்தியமானவை மனிதன் செயல்படுத்த வேண்டியவை என்றே கூற முடியும். இதற்கு மாற்றமான கருத்து ஓர் உண்மை நம்பிக்கையாளனின் நாவிலிருந்து ஒருபோதும் வராது.

உலகில் தோன்றிய பல்லாயிரக்கணக்கான நபிமார்கள் மக்களிடம் கூலி வாங்காமல்தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். இறுதி நபி(ஸல்) அவர்கள் கூலி வாங்காமல்தான் மார்க்கப் பணி புரிந்தார்கள், நபிதோழர்கள் அனைவரும் கூலி வாங்காமல் தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். ஹிஜ்ரி 400க்கு முன்னால் வாழ்ந்த மார்க்க அறிஞர்கள் மக்களிடம் கூலி வாங்காமல் தான் மார்க்கப் பணி புரிந்தார்கள.; எந்த இமாம்களின் பெயரால் இவர்கள் கற்பனையாக மத்ஹபுகள் அமைத்துக் கொண்டு மக்களை சுரண்டி வாழ்கிறார்களோ அந்த இமாம்கள் கூலி வாங்காமல் தான் மார்க்கப்பணி புரிந்தார்கள். இத்தனைக்கும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் முழுநேரமாக மார்க்கப் பணி புரிந்ததாக இவர்களே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்கள்.

இப்படி நபிமார்கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தப்அதாபியீன்கள், இமாம்கள் அனைவரும் மக்களிடம் கூலி வாங்காமல், மார்க்கப்பணி செய்திருக்கிறார்கள் என்றால், அவர் களுக்கு அது சாத்தியப்பட்டது என்றால், அதற்குக் காரணம் அவர்கள் அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பிச் செயல்பட்டார்கள். அதற்கு மாறாக இப்புரோகித மவ்லவிகளுக்கு அல்லாஹ்மீதும், மறுமைமீதும் உறுதியான நம்பிக்கை இல்லை என்பதுதானே நிதர்சனமான மறுக்க முடியாத உண்மை.

ஆனால் மக்களை ஆட்சி புரிவது எப்படி கடமையாக்கப் பட்ட பணி இல்லையோ அதேபோல் அல்குர்ஆனை, ஹதீஸை எழுதிக்கொடுப்பது, பிற மொழிகளில் மொழி பெயர்த்துக் கொடுப்பது, மார்க்கப் பத்திரிகைகள் நடத்துவது, ஊர்விட்டு ஊர் பணம் செலவழித்துக் கொண்டு போய் பிரசாரம் செய்வது இவை அனைத்தும் கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணி அல்ல. கடமையாக்கப்பட்ட மார்க்கப்பணியை செய்யாவிட்டால் நாளை மறுமையில் கேள்வி உண்டுளூ தண்டணை உண்டு. கடமை அல்லாத உபரி மார்க்கப்பணியை செய்யாவிட்டால் மறுமையில் கேள்வியும் இல்லைளூ தண்டனையும் இல்லை. அப்படிப்பட்ட கடமையாக்கப்படாத உபரி மார்க்கப் பணியை செய்வதற்காக கூலி-சம்பளம் வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை ஏதும் இல்லை.

அன்று நபிமார்கள்மீது கடமையாக்கப்பட்டு அவர்கள் செய்து கொண்டிருந்த மார்க்கப்பணி அனைத்தும், இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபி வருகை இல்லாததால் அவர்களது சமுதாயத்தினராகிய நம்மீது கடமையாக்கப்பட்டு ள்ளது. (3:110, 9:71, 103:1-3) அக்கடமையை முறையாகச் செய்வது கொண்டு மட்டுமே முஸ்லிம்களாகிய நாம், அரபி மொழி தெரிந்தவர், தெரியாதவர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைவரும் வெற்றி பெற முடியும்; மறுமையில் சுவர்க்கம் புக முடியும். அப்பணியை நபிமார்களைப் போல் கூலி வாங்காமல் செய்யத்தவறினால் 103:1 எச்சரிப்பது போல் பெரும் நட்டமேளூ நரகமே! அன்று நபிமார்கள் மீது விதிக்கப்படாத, கடமையாகப் படாத உபரி மார்க்கப் பணிகள் முஸ்லிம் சமுதாயத்தினர் மீதும் விதிக்கப்படவில்லை. கடமையும் இல்லை. அப்படிப்பட்ட பணிகளை ஏன் செய்யவில்லை என்று கேள்வியும் நாளை மறுமையில் அல்லாஹ்வால் கேட்கப்படவும் மாட்டாது. அப்படிப்பட்ட குர்ஆனை, ஹதீஸ்களை எழுதிக் கொடுப்பது, இதர மொழிகளில் மொழி பெயர்த்துக் கொடுப்பது, நூல்கள், தினசரி, வார, மாத இதழ்கள் நடத்துவது, இத்தியாதி, இத்தியாதி உபரி மார்க்கப் பணிகளுக்காக கூலி-சம்பளம் வாங்குவது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதல்ல. இவ்விரு வகை பிரசார பணிக்குமுள்ள வேறுபாட்டை நாம் தெளிவாக விளங்கி அதன்படி நடக்க வேண்டும்.

இந்த விபரங்களைத் தெளிவாகப் புரிந்து கூலிக்கு மாரடிக்கும். அதனால் வழிகேட்டிலிருக்கும் புரோகித மவ்லவிகளின் மாயஜால, வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, தன்னம்பிக்கையுடன் குர்ஆன், ஹதீஸை நமக்குத் தெரிந்த மொழிகளில் நேரடியாகப் பார்த்து விளங்கி அதன்படி நடந்து ஈருலகிலும் வெற்றிவாகை சூடுவோமாக.

மேற்கொண்டு விளக்கம் பெற வீடியோவை கிளிக் செய்யவும் வீடியோ – Video

மழை…மழை….மழை….
மழை…மழை….மழை….[PDF]

விமர்சனங்கள் ! விளக்கங்கள்!!
விமர்சனங்கள் ! விளக்கங்கள்!! [PDF]

இஸ்லாத்தில் வன்முறைக்கு இடமில்லை
இஸ்லாத்தில் வன்முறைக்கு அணுவளவும்  இடமில்லை [PDF]

யூசுஃப் நபியும் இறைச்சட்டமும்
யூசுஃப் நபியும் இறைச்சட்டமும் [PDF]

படிப்பு ஒன்று பட்டம் ஐந்து
படிப்பு ஒன்று பட்டம் ஐந்து [PDF]

செல்வமும், சோதனையும்!
செல்வமும், சோதனையும்! [PDF]

வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?
வேதம் கொடுக்கப்பட்டோர் யார்? [PDF]

அல்லாஹ்வின் பார்வையில் பெரும்பான்மை
அல்லாஹ்வின் பார்வையில் பெரும்பான்மை [PDF]

புரோகித புராணம் பாரீர்
புரோகித புராணம் பாரீர் [PDF]

அல்லாஹ்வைவிட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்?
அல்லாஹ்வைவிட ஆற்றல் மிக்கவர்களா முல்லாக்கள்? [PDF]

அரபிக் கல்லூரிகளை அழிக்கப்போகும் ஆலிம்சாக்கள்
அரபிக் கல்லூரிகளை அழிக்கப்போகும் ஆலிம்சாக்கள் [PDF]