Archive for February, 2008

இஸ்லாமிய வழியில் கிறித்துவ பாதிரியார்கள்

Posted by அந்நஜாத் on Feb 25 2008

  A. முஹம்மது அலி, M.A., திருச்சி -4. திருமணம், குடும்ப வாழ்வு, இல்லற இன்பம் போன்றவற்றிற்கு, இஸ்லாம் அளித்திருக்கும் சிறப்பை, வேறு எந்த மதமும் தரவில்லையென்பது யாவரும் அறிந்ததே. “திருமணம் எனது வழிமுறை, திருமணம் புரியாதவன் என்னைச் சார்ந்தவனல்ல.” அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக்(ரழி) ஆதாரம் : முஸ்லிம், புகாரி.

One response so far

மீண்டும் தராவீஹ் -5

Posted by அந்நஜாத் on Feb 25 2008

  மீண்டும் தராவீஹ் என்ற தலைப்பில் , கடந்த மார்ச், ஏப்ரல், மே, ஜூன் ஆகிய ‘அந்நஜாத்’ இதழ்களில், ‘குர்ஆனின் குர’லில் வெளிவந்த தராவீஹ் பற்றிய தவறான விளக்கங்களை விரிவாகப் பார்த்தோம். அதில், நபி(ஸல்) அவர்கள் ரமழான் இரவில் தொழுதது 8+3 ரகஅத்கள் தான் இரண்டு நபித் தோழர்கட்கு உத்திரவிட்டது 8+3 ரகஅத்கள் தான் என்றும், உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் தொழுதது 20+3 ரகஅத்கள், அதை, உமர்(ரழி) அவர்கள் அங்கீகரித்தார்கள் என்பதற்கு ஆதாரம் எதுவும் தரப்படவில்லை [...]

Comments Off

நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்!! தொடர்-3

Posted by அபூ அப்துல்லாஹ் on Feb 25 2008

  K.M.H. இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.

Comments Off

அஹ்மதி(காதியானி)களின் ஆகாசப் புளுகு!

Posted by அந்நஜாத் on Feb 25 2008

1987 ஜூலை ‘அந்நஜாத்’ இதழில் வெளியான , ஆதம(அலை) மூஸா(அலை) விவாதம் சம்பந்தப்பட்ட ஹதீது கட்டுக்கதை என்று மேலப்பாளையம் ஜமாலுதீன் என்பவர், அந்நஜாத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதம் அர்த்தமற்ற பிதற்றலாகவும், ஈமானில்லாதவர்களின் வாதமாகவும் இருந்தால், அதைக் குப்பைக் கூடையில் எறிந்து விட்டோம். (இந்தக் கேள்வி நாஸ்திகர்களிடமிருந்து வந்திருந்தால் மதிப்புக் கொடுத்து விளக்கம் கொடுக்க முற்பட்டிருப்போம்) ஆனால் அக்கடிதத்தை காதியானிகள், தங்கள் சமாதான வழியில் வெளியிட்டிருப்பதால், காதியானிகளின் கொள்கையும் அதுதான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஊர்ஜிதமாகின்றது.

2 responses so far

இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை!

Posted by அந்நஜாத் on Feb 25 2008

அபூஃபாத்திமா (“ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயம் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் முரண்பட்ட கருத்துக்களை தீர்த்து வைப்பதற்காக, அவர்களுடன் உண்மையுடைய வேதத்தை இறக்கி வைத்தான், எனினும் அவ்வேதம் கொடுக்கப்பட்டவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை, காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்கள் மாறுபட்டு, புறக்கணித்து விட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் [...]

Comments Off

விமர்சனங்கள் விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 25 2008

“அந் நஜாத்” செப்டம்பர்’87 இதழில், ‘தக்லீது ஒர் ஆய்வு’ என்ற கட்டுரையில் ‘இத்திபா’ என்பதற்கு, விளங்கிப் பின்பற்றல் என்று எழுதியிருந்தீர்கள். ஆனால் அதே கட்டுரையில், 7:3 வசனத்திலுள்ள ‘வலா தத்திபிவு’ என்ற பதமும், 2:170 வசனத்திலுள்ள ‘தத்திபிவு’ என்ற பதமும், ‘இத்திபா’ என்ற மூலத்திலிருந்து வந்தது தானே? அப்படியானால் விளங்கிப் பின்பற்றுவோம் என்றும் பொருள் கொள்ள இடமேற்படுகிறதே? P.M. முஹம்மது இபுராஹிம், நாகர்கோவில்.

Comments Off

தலையங்கம்

Posted by அந்நஜாத் on Feb 25 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அந்நஜாத் இலட்சிய இஸ்லாமிய மாத இதழ் அக்டோபர், 1987 – ஸபர், 1408 ********************************** அடியோடு நாசப்படுத்தும் அபாயமான நோய்! நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன்னுள்ள சமுதாயத்தவரின் வியாதியானது உங்களிடத்திலும் மெல்ல மெல்ல வந்து கொண்டிருக்கிறது. (அதுதான்) பொறாமையும், வெறுப்புணர்ச்சியுமாகும். இ(வ் வியாதியானது)து அடியோடு களைந்து விடக் கூடியதாகும். நான் உரோமங்களை களைந்து விடும் என்று கூறவில்லை. எனினும் அது உங்களின் சன்மார்க்கத்தின் பண்பாட்டையே களைந்து (நாசப்படுத்தி) விடும் என எச்சரிக்கிறேன். ஜுபைர்(ரழி) (அஹ்மத், [...]

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 21 2008

ஜூலை 87 இதழில் வெளியான “முஸ்லிம் எதிர்ப்பு மூளைச் சலவையே” என்னும் கட்டுரையில், குஸ்வந்தசிங்கின் எழுத்துக்கள் இஸ்லாத்திற்கு முரணானவை. அவை அந்நஜாத்தில் இடம் பெறலாமா? அரசு பொறுப்பில் இருப்பவர்கள் மாற்று மத மக்களுக்கு உபகாரங்கள் செய்வது, அவர்களுக்கு மத வழிபாட்டுச் சுதந்திரம் கொடுப்பது, அந்த வகைக்குப் பொருளுதவி செய்வது இவை அனைத்தும் தீமைக்குத் துணை போவதாக இருக்கிறதே? (விமர்சனத்தின் சுருக்கம்) – A. அஹமது ஜலாலுதீன், மதுரை.

Comments Off

குர்ஆனில் முரண்பாடில்லை!

Posted by அந்நஜாத் on Feb 21 2008

அறிவுப்போட்டி -2 முடிவு: 1987 மார்ச் இதழின் 52-ம் பக்கம் வெளியான குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2, மற்றும் 1987 ஏப்ரல் இதழின் 14ம் பக்கம் வெளியானன சகோதரர் சீனிவாசன் கடிதம், அதே இதழின் 15-ம் பக்கத்திலுள்ள, குர்ஆனில் முரண்பாடா? பகுதி 2. ஒரு திருத்தம். இவை அனைத்தையும் பார்வையிட்டுப் பல சகோதரர்கள் தங்கள் தங்கள் விளக்கங்களை அந்நஜாத்திற்கு அனுப்பி இருந்தார்கள் . அவை அனைத்தையும் ஆசிரியர் குழு பரிசீலனை செய்தது. பரிசு பெறும் அளவிற்கு முழுமையான [...]

Comments Off

நபிவழித் தொகுப்பு வரலாறு தொடர் – 9.

Posted by அந்நஜாத் on Feb 19 2008

  அபூஅஸ்மா மாதங்களின் பெயரால் இடைச்செருகல்கள் : சென்ற ஆகஸ்ட் இதழில் மத்ஹபுகளின் பெயரால் இடைச் செருகல்கள் நுழைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இதோ புனிதமிகு முஹர்ரம் மாதம் வந்திருக்கிறது. இம்மாதத்தின் புனிதத்தைக் கூட பார்க்காமல், சில புண்ணியவான்கள் (?) புழுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருப்பதைப் பார்ப்போம்.

Comments Off

ஐயமும் தெளிவும்!

Posted by அந்நஜாத் on Feb 19 2008

  ஐயம் : குர்ஆனை ஒளுவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? M. முஹம்மத் அல்தாஃப் – திருச்சி. தெளிவு : அல்லாஹ் திருக்குர்ஆனில் கீழ்க்காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகின்றான். “நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில்(அது) இருக்கிறது.”

Comments Off

ஓதுவோம் வாருங்கள்! தொடர் -16

Posted by அந்நஜாத் on Feb 19 2008

அபூமர்யம் சென்ற ஆகஸ்ட் இதழில் புர்தாவிலுள்ள “மேலும் லவ்ஹுல் மஹ்ஃபூமிலுள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு பகுதியே” என்னும் கவிதையின் அடியை திருக்குர்ஆனின் அடிப்படையில் அலசிப் பார்த்து, அது முற்றாக அல்குர்ஆனுக்கு முரண்பட்டிருப்பதையறிந்தோம், இதோ இப்பொழுது அதை ஹதீஸுகளின் அடிப்படையில் அலசிப் பார்ப்போம்.

Comments Off

நபிவழியில் நம் தொழுகை தொடர் – 10

Posted by அந்நஜாத் on Feb 19 2008

அபூ அப்துர் ரஹ்மான் ”என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் அன்றி உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். ” (3: 31) என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். அறிவிப்பவர் : மாலிக் பின் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள் : புகாரீ, அஹ்மத்

Comments Off

குர்ஆனை விளங்குவது யார்? தொடர்-3

Posted by இப்னு ஹத்தாது on Feb 19 2008

  இப்னு ஹத்தாது சென்ற ஆகஸ்ட் இதழில் அல்குர்ஆன் 3:7 வசனத்தின் தமிழ்மொழி பெயர்ப்பையும், இந்த வசனம் பற்றி ஹதீது நூல்களில் பதிவாகியுள்ள ஒரு ஹதீதின் தழிழ் மொழிப் பெயர்ப்பையும் பார்த்தோம்.

Comments Off

“தக்லீது” – ஓர் ஆய்வு!

Posted by அந்நஜாத் on Feb 18 2008

அபூஃபாத்திமா இன்றைய சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் “தக்லீது” செய்யாதீர்கள். “தக்லீது” குர்ஆனுக்கும், ஹதீதுகளுக்கும் முழுக்க, முழுக்க முரணனாதாகும், என்று சொன்னவுடன், தக்லீது செய்யக் கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது, மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீதுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது, மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக் கூடாது. அந் நஜாத்தைப் பார்ப்பதும் கூடாது, காரணம் இவை எல்லாம் தக்லீது ஆகும் என்று உடனே சொல்லி [...]

Comments Off

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்!! தொடர்-2

Posted by அபூ அப்துல்லாஹ் on Feb 18 2008

  K.M.H. அபூ அப்துல்லாஹ் நாஸ்திக நண்பர்கள் “இறைவனைக் காட்டுங்கள்; கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம்” என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர், அதிசமான ஒரு காட்சியையோ, ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன், அதனையே தெய்வமாகவோ, தெய்வாம்சம் பெற்றதாகவோ, ஏற்றுக்கொள்ளும் மனநிலையைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால் உண்மையான இறைவன், இந்த மனிதனது பார்வையிலோ, புலன்களின் உய்த்துணர்விலோ வர முடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயமாக இறைவனாக இருக்க [...]

Comments Off

பொருளியல்: எல்லாம் உனக்காக! நீ மறுமைக்காக!!

Posted by அந்நஜாத் on Feb 18 2008

  A. முஹம்மது அலி, M.A., திருச்சி-4. தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.

Comments Off

சமூகவியல்: உங்களில் ஒரு கூட்டம்! தொடர்-3

Posted by அந்நஜாத் on Feb 18 2008

  புலவர் செ. ஜஃபர் அலி, பி.லிட்., கும்பகோணம் மனிதகள் – ஒன்று முதல் ஐயறிவுகளைப் பெற்றுள்ள உயிர்களிடத்தினின்றும் முற்றிலும் மாறுபட்டவனாக விளங்குகிறான். எதனையும் பகுத்துணரும் பக்குவத்தைப் பெற்றவனாகவும் திகழ்கின்றான். எது நன்மையான செயல்? எது தீமையான செயல்? என்பதில் அவனுக்குப் படிப்படியாகத் தெளிவும் ஏற்பட்டு விடுகின்றது.

Comments Off

தலையங்கம்

Posted by அந்நஜாத் on Feb 18 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ் செப்டம்பர் 1987 முஹர்ரம் 1408 மார்க்கத்தில் பிரிவுகள் இல்லை! (ஆரம்பத்தில்) மனிதர்கள் ஓரே கூட்டத்தினராகவே இருந்தனர். அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகாவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும், நபிமார்களை அனுப்பி வைத்தான்; அத்துடன் மனிதர்களுக்கிடையே ஏற்படும் விகற்பங்களைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்களும், அத்தாட்சிகளும் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை, பகை ஆகியவற்றின் காரணமாக [...]

Comments Off

ஐயமும் தெளிவும்

Posted by அந்நஜாத் on Feb 17 2008

ஐயம் : வெங்காயம், பூண்டு இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று சொல்கிறார்கள். ஷரீஅத் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது? P.M. நாகூர் மீரான், பத்ராவதி.

Comments Off

நபி வழியில் நம் தொழுகை தொடர் -9

Posted by அந்நஜாத் on Feb 17 2008

அபூ அப்துர்ரஹ்மான் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள். நூல்கள் : புகாரி, அஹ்மத். கால் உறைகளின் மீது மஸ்ஹு செய்தல்: அல்குர்ஆன் 5 : 6 வது திருவசனத்தில் ஓளூவைப் பற்றி அல்லாஹ் கட்டளை இடும்போது, “அன்றி நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும், மலம் ஜலம் கழித்துவிட்டு வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு) கொண்டிருந்தாலும், (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால், [...]

Comments Off

ஓதுவோம் வாருங்கள் தொடர் – 13

Posted by அந்நஜாத் on Feb 17 2008

அபூ மர்யம் சென்ற ஜூன், ஜூலை மாத இதழ்களில் புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை வாசகர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Comments Off

குர்ஆனை விளங்குவது யார்? தொடர் -2

Posted by இப்னு ஹத்தாது on Feb 17 2008

இப்னு ஹத்தாது அல்குர்ஆனின் 62:2 வசனப்படி எழுத்தறிவில்லாத மக்களும் குர்ஆனை எளிதாகப் புரிந்து கொள்ளும் நிலையில் குர்ஆன் இறக்கப் பட்டது என்பதைச் சென்ற இதழில் பார்த்தோம். அடுத்து வரும் 62:3 வசனம் இதனை இன்னும் உறுதிப் படுத்துகின்றது.

Comments Off

மார்க்கக் கல்வி பற்றி இறைவனின் கூற்றும்! இறுதித் தூதரின் எச்சரிக்கையும்!!

Posted by அந்நஜாத் on Feb 17 2008

  அபூ உவைஸ் எந்தக் கல்வி கற்க வேண்டும், எந்தக் கல்வி கற்கக்கூடாது, என்று மார்க்கத்தில் எத்தகைய கட்டுப்பாடும் இல்லை. இறை நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய கல்வியைக் கற்கவேண்டும். இறைவசனம் – இறைத் தூதர்(ஸல்) அவர்கள் விதித்த மார்க்க வரம்பை மீறாத தன்மையுடைய கல்வியைக் கற்க வேண்டும், மார்க்கத்திற்கு முரணாக எக்கல்வியாலும், அதனைக் கற்கக்கூடாது.

Comments Off

நாஸ்திக நண்பர்களே! நாசத்தைத் தவிர்ப்பீர்-தொடர் 1

Posted by அபூ அப்துல்லாஹ் on Feb 16 2008

K.M.H. அபூஅப்துல்லாஹ் இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம். ஒரு கூட்டம் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் கூட்டம். வாழ்க்கை வாழ்வதற்கே, ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம். தம் மனம் சரி காண்பதையே வாழ்க்கையாகக் கருதி வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்து பின் மண்ணோடு மண்ணாக ஆகிவிடுவோம். அதன்பின் ஒரு வாழ்க்கை இல்லை என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்.

Comments Off

நபிவழித் தொகுப்பு வரலாறு – தொடர் 8

Posted by அந்நஜாத் on Feb 16 2008

  S. கமாலுத்தீன் மதனீ கதைகளின் பெயரால் இடைச்செருகல்கள் பொய்யான ஹதீஸ்களைப் புணைந்து கூறுவதில் கதை சொல்லக்கூடியவர்களும் இடம் பெற்றிருந்தனர். பள்ளிவாசல்களில் அமர்ந்து கதை சொல்லும் பழக்கம் ஆரம்பக் கால முதலே இருந்து வந்துள்ளது. கதை சொல்வதில் திறமை பெற்றவர்கள் பலர் இருந்து வந்துள்ளனர். இவர்களில் ‘தமீமுத்தாரி’ என்பாரும் ஒருவராவார். இவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் பள்ளிவாசலில் கதை சொல்ல அனுமதி கேட்டபோது உமர்(ரழி) அவர்கள் மறுத்து விட்டார்கள். “அம்ர் பின் ஸர்ரார்’ என்பவர் ‘அப்துல்லாஹ் பின் [...]

Comments Off

இம்மை வாழ்வு! -2

Posted by அந்நஜாத் on Feb 16 2008

புலவர் செ. ஜஃபர் அலீ பி.லிட்., கும்பகோணம். சமூகவியல் உலகில் பிறந்த மனிதர் எல்லாருக்கும் இம்மை வாழ்வும் உண்டு. மறுமை வாழ்வும் உண்டு, இம்மையை விட மறுமையே மிக உயர்ந்ததாகும் என எல்லாம் வல்ல அல்லாஹ் பல இடங்களில் திருமறையிலே தெளிவுபடுத்திக் காட்டுகின்றான்.

Comments Off

இஸ்லாமிய கொள்கை விளக்கம்-11

Posted by அந்நஜாத் on Feb 16 2008

மவ்லவி P.S. அலாவுத்தீன் மன்பஈ அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை “இறைவா! நான் உனது அடியான்! உமது அடியானின் மகன்! உனது அடியாளின் மகன்! எனது நெற்றி மயிர் உன் கைவசமிருக்கிறது! என்னில் உனது உத்தரவுகளே நடைமுறையாகின்றன! உனது விதியில் நேர்மையை உள்ளது! உனக்கு நீயே சூட்டிக்கொண்ட அல்லது உனது திருவேதத்தில் நீ அருளிய, அல்லது உன் படைப்புகளில் யாருக்கேனும் நீ கற்றுத்தந்த, அல்லது உன்னிடமிருக்கின்ற மறைவானவற்றைப் பற்றிய ஞானத்தில் நீ தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்ற உனக்குரிய உனக்குரிய திருநாமங்கள் மூலமும், [...]

Comments Off

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

Posted by அந்நஜாத் on Feb 16 2008

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஆகஸ்ட் 1987 – துல்ஹஜ் 1407 ************************** (முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள், என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்றுவிடாதீர்கள், எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள்தாம். (அல்குர்ஆன் 5:44) எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கட்டளைப்படி தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களே!) (அல்குர்ஆன் 5:45) ************************* சென்ற ஜூலை இதழில் கிறிஸ்தவர்களிடம் முஸ்லிம்கள் திருமணம் [...]

Comments Off

குர்ஆனை விளங்குவது யார்?

Posted by இப்னு ஹத்தாது on Feb 05 2008

  இப்னு ஹத்தாது (ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன், அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்க முடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக்கொள்ள முயலவேண்டும். இக்கட்டுரையைக் காரணம் காட்டி, “அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை” என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி , மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறிடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் அடைவதைத் தெளிவுபடுத்தி, சமத்துவ [...]

Comments Off

Older Entries »