Posted by அந்நஜாத் on Sep 30 2009
உறுதிமொழியை காப்பாற்றுகிறவர் யார்? சாந்தி மார்க்கம் இஸ்லாத்தில் நுழைபவர் எந்த இடைத்தரகரோ, மதகுருவோ கிளிப்பிள்ளை பாடமாகச் சொல்லித் தருவதை உளப்பூர்வமாக அறியாமல் நாவால் மட்டும் மொழியாமல், சுயமாகத் திட்டமாக விளங்கி, உணர்ந்து மனதார ஏற்று உறுதியாகச் சொல்லும் உறுதிமொழி ‘திடனாக இறைவனே இல்லை அல்லாஹ்வைத் தவிர என நான் உறுதி கூறுகிறேன்” இன்னும் திடனாக முஹம்மது அல்லாஹ்வின் அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார் என நான் உறுதி கூறுகிறேன்” என்பதுதான். இதுவே ஏற்கத்தக்கது.
Posted by அந்நஜாத் on Sep 30 2009
அல்லாஹ்வின் மார்க்கம் முஸ்லிம்களை பிரிக்குமா? எது உண்மை ஜமாஅத்?
Posted by அந்நஜாத் on Sep 30 2009
சத்தியக் குரல்!…. அபூ முஹம்மது நஜ்ம், ஏர்வாடி(நெல்லை) … அசத்தியக் குரலாக மாறுவது ஏன்? சத்தியக்குரல் ஒருபோதும் மரணமாகாது! ஆனால் மதப்புரோகிதர்களான மவ்லானா, மவ்லவிகள், அல்லமாக்கள், முஃப்திகளால் மரணமாக்கப்படுகிறது என்பதே உண்மையிலும் உண்மை! ஆனாலும் சத்தியக்குரல்! நிலைத்து நிற்கும்” அதற்கு அழிவு என்பதே கிடையாது என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவன் தன் சத்திய நெறிநூல் அல்குர்ஆன் வழியாக ஓங்கி ஒலிக்கும் சத்தியக்குரல்! ஒவ்வொருவருடைய உள்ளக்கதவையும், அறிவுக் கண்களையும் திறக்க வேண்டும் என்பதே அந்-நஜாத் மாத இதழுடைய [...]
Posted by அந்நஜாத் on Sep 30 2009
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம், விஞ்ஞானம் இஸ்லாத்திற்கு எதிரானதல்ல! தலைப்பிறை கணக்கு ஓர் அறிமுகம் முதல் பிறையா? மூன்றாம் பிறையா?
Posted by அந்நஜாத் on Sep 30 2009
ஐயமும்! தெளிவும்!! ஐயம்: தப்லீஃக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள். பிரிவு இருக்கக்கூடாது என்று சொல்லும் நீங்கள் இந்த பிரிவை ஏன் ஏற்படுத்தினீர்கள்? தப்லீக் கில் இருந்தே நீங்கள் நேர்வழிபடுத்தி இருக்கலாமே! S.முகைதீன், ஜின்னாநகர் 3வதுதெரு, புளியங்குடி
Posted by அந்நஜாத் on Sep 30 2009
விமர்சனங்கள்! விளக்கங்கள்!! விமர்சனம்: தலைப்பிறையைக் கண்ணால் பார்க்கும் கட்டாயம் இன்று இல்லை. கணினி கணக்கீட்டின் மூலம் துல்லியமாகக் கிடைக்கும் தகவலைப் பார்த்து ரமழான் நோன்பை ஆரம்பிக்கலாம்” நோன்பைத் துறந்து பெருநாள் கொண்டாடலாம்” ஷவ்வால் முதல் நாளில் ரமழான் நோன்பை நோற்பது ஹறாம் என்று கூறி, அதில் பிடிவாதமாக இருக்கும் நீங்கள் பெருநாள் தொழுகை மற்றும் கொண்டாடுவதற்காக சமுதாயத்தைப் பிளவுபடுத்த வேண்டாம் என்று கூறுவது, நீங்களே உங்க ளுக்கு முரண்படுவதாக சிலர் கூறுகின்றனர். மேலும் அப்படிக் கூறும் நீங்கள் [...]
Posted by அந்நஜாத் on Sep 29 2009
நபிகால இஸ்லாமிய ஒற்றுமை! ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம். முஹிப்புல் இஸ்லாம்
Posted by அந்நஜாத் on Sep 13 2009
ஏகத்துவம் ஏட்டின் ஏளன நிலை அபூ அப்தில்லாஹ் ஏகத்துவம் ஆகஸ்ட் 2009 இதழ் பக்கம் 39-ல் “மார்க்கம் மாறாத” என்ற கட்டுரையையும், பக்கம் 53-ல் “பிறை ஒரு விளக்கம்” என்ற அறிவிப்பையும் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் அவர்களது இரட்டை வேட போக்கைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரிப்பார்கள். அதே இதழ் பக்கம் 55-ல் “ஜாக்கின் இரட்டை வேடம்” என ஜாக் பிரிவினரை நையாண்டி செய்திருப்பதை விட நையாண்டிக்கு ஆளாகி நிற்கிறார்கள் இவர்கள்.
Posted by அந்நஜாத் on Sep 13 2009
2009 ஆகஸ்ட் 15, 16-ல் நடந்த ஒற்றுமை முயற்சி! அல்லாஹ்வின் கருணைகொண்டு, பெரம்பலூர் துறைமங்கலம் J.K.மஹாலில் 2009 ஆகஸ்ட் 15,16 சனி, ஞாயிறில் ஓர் ஒற்றுமை முயற்சி இடம் பெற்றது. சமுதாயத்தின் அனைத் துத்தரப்பினருக்கும், அனைத்துப் பிரிவினருக்கும் அந்நஜாத் 2009 ஜூலை, ஆகஸ்ட் இதழ்கள் மூலம் பகிரங்க அழைப்பும், தனித் தனிக் கடிதங்கள் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டது.
Posted by அந்நஜாத் on Sep 13 2009
ரமழான்-ஷவ்வல் 1430 அந்நஜாத் செப்டம்பர் 2009 ரமழான் – ஈத் சிந்தனை! ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர் ஆன் இறக்கியருளப்பட்டது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறானே தவிர, உங்களுக்கு [...]
Posted by அந்நஜாத் on Sep 13 2009
விமர்சனமும்! விளக்கமும்!! விமர்சனங்கள்: அல்குர்ஆன் 39:17 வசனத்திற்கு அனைத்து குர்ஆன் மொழியாக்கங்களிலும் “தாஃகூத்” என்ற அரபி பதத்திற்கு ஷைத்தான் என மொழி பெயர்த்திருக்க நீங்கள் ஆகஸ்ட் 15,16-ல் பெரம்பலூர் J.K. மஹாலில் இடம் பெற்ற ஒற்றுமை முயற்சி சம்பந்தப்பட்ட பிரசுரத்தில் தாஃகூத்களான புரோகிதர்கள் என உங்கள் மனோ இச்சையின்படி மொழி பெயர்த்திருக்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுகிறேன். ஒப்புக்கொள்கிறீர்களா? இப்றாஹீம், திருச்சி.
Posted by அந்நஜாத் on Sep 10 2009
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும் ஜூலை 2009 தொடர் : 3 எனவே மனித இனத்தின் ஆதிபிதாக்களை நிர்வாணமாக்கி மானபங்கப்படுத்திய இப்லீஸின் வழியை விட்டு நீங்கி, இறைவனின் இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய அல்குர்ஆனின் நேர்வழியில் செல்வது அவசியமாகும். தொடர்ந்து இப்லீஸ் மேற்கொள்ளும் சப்தத்தையும், ஆதமையும், ஹவ்வாவையும் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்ய வைக்க இப்லீஸ் மேற்கொள்ளும் சதியையும் அவதானியுங்கள்.
Posted by அந்நஜாத் on Sep 10 2009
ஐயமும்! தெளிவும்!! ஐயம் : இறந்துபோன மகான்களும், வலிமார்களும் உயிருடன் அவர்கள் இருந்த போது எப்படி இருந்தார்களோ, அப்படித் தான் இறந்த பிறகும் இருப்பார்களாமே? உண்மையா? – R.K. அப்துல் ரஷீத், கும்பகோணம்.
Posted by அந்நஜாத் on Sep 09 2009
காதியானிகளின் ஆகாசப்புளுகு-1. ஈஸா(அலை) மரணித்துவிட்டார்கள். உண்மை நிலை : ஈஸா(அலை) அவர்கள் மரணிக்கவில்லை! ஆயினும் மரணிப்பவர்களே!
Posted by அந்நஜாத் on Sep 07 2009
இதுதான் புரோகிதம்! அல்லாஹ் அன்றே இட்ட ‘முஸ்லிம்’ என்ற பெயர் அல்லாத வேறு பெயர்களில் நேர்வழி நடக்கும் முஸ்லிம்கள் செயல்பட முடியாது என்பதற்குத் தெள்ளத் தெளிவான, பல நூல்களில் பதிவாகி இருக்கும் ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்றை அந்நஜாத் 93 மார்ச் இதழ் பக்கம் 38-ல் அரபி மூலத்துடன் வெளியிட்டிருந்தோம். அந்த ஹதீஸ் ஆதாரமற்றது என்று கூற வழியில்லாமல் ஹதீஸை திரித்து எழுதிவிட்டு, நாம் ஒரு முடிவை முன்னரே எடுத்து கொண்டு அதற்கேற்ப ஹதீஸின் தமிழாக்கத்தை வளைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர். [...]
Posted by அந்நஜாத் on Sep 03 2009
ஜகாத் ஒருமுறை கொடுத்தால் போதுமா? Part 1 – 13