Feb 05 2010
ஏனிந்த தடம் புரளல்?
Filed under 2010 பிப்ரவரி by அந்நஜாத்
ஏனிந்த தடம் புரளல்?
புரோகிதமற்ற, பிரிவு, பிளவுகள் அற்ற ஒன்றுபட்ட சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் “முஸ்லிம் சமுதாயம்” என்ற எமது ஏகத்துவ நிலையை ஏற்று எம்முடன் இணை ந்துப் பணியாற்ற ஒப்புக் கொண்டு வந்தவர்கள்தான் பொய்யன் பீ.ஜையும், புரட்டன் எஸ்.கே.யும். 15 மாதங்கள் மட்டுமே எம்முடன் இணைந்து மார்க்கப் பணி புரிந்து விட்டு, அரபு நாட்டினரின் ஆசை வார்த்தையில் மயங்கி, நம்மிடமிருந்து வெளியேறி அவர்களின் வழிகாட்டல்படி தனிப்பிரிவு “ஜாக்” அமைப்புக் கண்டனர். “ஜாக்” என்பது “ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என்பதின் சுருக்கமாகும். அதாவது குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுவோர் என்ற அடிப்படையில் பீ.ஜை.யும், எஸ்.கேயும் இணைந்து கற்பனை செய்து வைத்துக் கொண்ட பிரிவுப் பெயர் இது. அதுவும் முதலில் “ஆக்”-”அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ்” என்று கற்பனை செய்தவர்கள் அதில் ஒன்றிணைந்து ஒரே தலைமையில் செயல்படும் கருத்து இல்லை என விளங்கிய பின்னர் “ஜாக்” -”ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்” என மாற்றிக் கொண்டனர். மனிதக் கற்பனையில் பிறக்கும் பெயர்களின் நிலை இதுதான்.![]()
நாங்கள்”"அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்” என மார்தட்டிக் கொள்பவர்களிடம் எப்படி நபி(ஸல்) அவர்களின் அசலான ஸுன்னத்துகள் இல்லாமல், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அதாவது ஹிஜ்ரி 11 க்குப்பின் புரோகிதர்கள் தங்களின் புரோகிதத் தொழிலுக்காக கற்பனை செய்த பித்அத்கள்-புதியவைகள் ஸுன்னத் எனக் கூறி அப்பாவி மக்கள் ஏமாற்றுவது போல், குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என “ஜாக்”ஐ கற்பனை செய்த இவர்கள், அதற்கு மாறாக முன் சென்ற நல்லடியார்களின் வழிகாட்டல்படி மார்க்கத்தை விளங்க வேண்டும் என சரடு விடுகிறார்கள். அவர்கள் ஸுன்னத் வல் ஜமாஅத் என வாயால் கூறிக் கொண்டு செயல்களில் “பித்அத் வல் ஜமாஅத்” என செயல்பட்டு தங்களை நம்பி தங்கள் பின்னால் வருகிறவர்கள் நரகிற்கு இட்டுச் செல்வது போல், இவர்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயால் சொல்லிக் கொண்டு செயலளவில் 33:36,66,67,68, இறைக் கட்டளைகளுக்கு முரணாக முன் சென்றோரை தக்லீது செய்யச் சொல்லி தங்கள் பின்னால் வருகிறவர்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள். இதோ அவர்களின் வழி கெட்ட அறிவுரை:
“நமக்கு முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள் என்ன விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள் என்று ஆய்வு செய்து பார்ப்பது அவசியமாகும். காரணம் அவர்கள் நம்மை விட மார்க்க அறிவில் சிறந்து விளங்கிய வர்கள். நம்மை விட அதிகம் இந்த மார்க்கத்திற்காகப் பாடுபட்டவர்கள். எனவே அவர்கள் வேண்டுமென்றே இந்த மார்க்கத் திற்கு எதிராகச் செயல்பட்டிருக்கமாட்டார்கள் என்று நம்ப வேண்டும். மார்க்கத் திற்கு அந்த நல்லோர்கள் கொடுக்காத ஒரு விeக்கம் நமது மனதில் தோன்றுமானால், அது ஒரு வேளை சாத்தானின் சதியாகக் கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் பார்க்க வேண்டும்” அல்ஜன்னத் டிசம்பர் 2009 பக்கம் 48-ல் “ஜாக்’ தலைவர் எஸ்.கே. அன்புள்ள கொள்கைச் சகோதரனுக்கு… என்று எழுதியுள்e தலைப்பின்கீழ் இடம் பெற்றுள்ள வரிகள் இவை. தன்னுடைய இந்தக் கூற்றுக்கு எஸ்.கே. கொடுத்துள்ள குர்ஆன் வசனம் இதோ.
“”எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோரைப் போன்றவரா? (அல்குர்ஆன் 47:14)
புரட்டன் எஸ்.கே. எழுதியுள்ள இந்த “”டயலாக்” புதிதல்ல; காலம் காலமாக மத்ஹபினரும், தரீக்காவினரும் இமாம்கள் பற்றி கோரஸாகப் பாடி வரும் டயலாக் தான். அவர்கள் முன்சென்ற இமாம்களின் பெயர்களை வலிய இவர்களாக இழுத்து மக்களை வழிகெடுத்தார்கள்; வழிகெடுத்து வருகிறார்கள். புதிய “ஜாக்” மத்ஹபைக் கண்ட எஸ்.கே. அரபு நாட்டில் “ஸலஃபி” பிரிவுக் கொள்கையை நிலைநாட்டிய புரோகிதர்களை “முன்னர் வாழ்ந்த கல்வியாளர்கள்” என அடைமொழியிட்டு அவரை நம்பியுள்ள அப்பாவிகளை வழி கெடுக்க முற்பட்டுள்ளார்.
எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 இறைவாக்கே தெளிவாகத் திட்டமாக “”இறைவனின் தெளிவான பாதை” அதைப் பின்பற்றுங்கள் என்று கூறி இருக்க, இவரோ அதற்கு மாறாக “”முன் சென்ற கல்வியாளர்களின் பாதையப் பற்றிப் பிடியுங்கள்” என்கிறார். அல்குர்ஆன் 2:134, 141 இறைவாக்குகள் முன் சென்றவர்கள் நல்லடியார்களாக இருந்தாலும் அவர்கள் சென்று போனவர்கள்; அவர்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்படாது; உங்களைப் பற்றித்தான் கேட்கப்படும் என்று நெத்தியடியாகக் கூறிக் கொண்டிருந்தாலும், மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட இப்புரோகிதர்களின் கண்களில் இந்த எச்சரிக்கை படவே படாது.
அல்குர்ஆன் 33:21,36 இறைக் கட்டளைகளும் அவர்களை விழிப்படையச் செய்யா. இதோ அந்த இறைவாக்குகள்:
எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்கவேண்டிய அழகான உதாரணம் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி நடந்து) அல்லாஹ்வை அதிகமாக நினைவு செய்து கொண்டிருப்பார்கள்.(33:21)
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் யாதொரு விஷயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அவ்விஷயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு நம்பிக்கையளரான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விஷயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள். (33:36)
அல்லாஹ்வே இப்படிப்பட்டவர்களுக்கு இருதயங்கள் இருந்தும் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; கண்கள் இருந்தும் பார்க்க மாட்டார்கள்; காதுகள் இருந்தும் கேட்க மாட்டார்கள் என்று 7:179-ல் கூறி இருக்க, நாம் எப்படி மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டு தங்கள் உள்ளத்தை கற்பாறைகள் போல் கடினமாக்கிக் கொண்டவர்களைத் தட்டி எழுப்ப முடியும்? (பார்க்க 5:13) ஒரு போதும் முடியாது. எஸ்.கே. எடுத்தெழுதியுள்ள 47:14 குர்ஆன் வசனமே “எவனுடைய (ஜாக், ததஜ போன்ற) செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப்பட்டுள்ளதோ, இன்னும் எவர்கள் (கூலி வாங்கி) தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனரோ அவர்கள் அல்லாஹ் கொடுத்த நேர்வழியில் நடை போடுவது ஒரு போதும் சாத்தியமில்லை என்று மண்டையில் சம்மட்டியால் அடிப்பது போல் அடித்துக் கூறுகிறது.
புரோகிதர் எஸ்.கே.யை நம்பி அவரது தவறான கொள்கையை ஏற்று “ஜாக்” என்ற 1987-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிளவு ஜமாஅத்திலும், புரோகிதர் பீ.ஜை.யை நம்பி அவரது தவறன கொள்கையை ஏற்று “ததஜ’ என்ற 2005-ல் புதிதாக கற்பனை செய்யப்பட்ட பிரிவு-பிளவு ஜமாஅத்திலும் இருப்பதின் மூலம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் எங்கள் கூற்றையும் ஏற்காதீர்கள்.
அல்லாஹ்வின் இறுதி வழிகாட்டல் நூல் அல்குர்ஆனின் 2:134, 141, 5:3, 3:19, 85, 7:3, 33:21,36,66,67,68, 59:7, 3:102,103,105, 6:153,159, 7:175-179 30:32, 42:13,14, 21:92,93, 23:52, 53,54,55,56, 49:14,16, 42:21, 20:123-129, 25:30 இறைவாக்குகளை மனிதர்களில் யாருடைய சுய விளக்கத்தையும் போட்டு மூளையைக் குழப்பாமல், சுயமாகப் படித்துச் சிந்தித்து விளங்க முற்படுங்கள். அல்லாஹ்வே மார்க்கத்தை தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டதாக அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான். அதற்கு மேலும் மனிதர்களின் விளக்கத்தை ஏற்பவர்கள் அல்லாஹ்வைவிட இந்த மனிதர்கள் தங்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று நம்புகிறார்கள் என்பது தான் அதன் பொருளாகும். அல்லாஹ்வை விட ஆற்றல் மிக்கவர்களாக மனிதர்களை நம்புகிறவர்களை விட கொடிய ஷிர்க்கில்-இணைவைப்பில் வேறு யாரும் இருக்க முடியுமா? சிந்தித்து விளங்குங்கள். இல்லை என்றால் முடிவு….? 33:66,67,68 இறைவாக்குகள் கூறுகின்றன. நேரடியாகப் படித்து விளங்குங்கள். புரோகிதர்களின் பிடியிலிருந்து விடுபடுங்கள். வெற்றி பெறுங்கள்!
Comments Off