எச்சரிக்கை

அபூஃபவ்ஜிய்யா மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!!   (எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!

{ 0 comments }

  அபூமர்யம் புலவர் பூஸிரி தனது புர்தாவென்னும் புராணத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது புகழ்பாடும் பாணியில் மக்கள் தஞ்சம் புகுவதற்குத் தகுந்த வல்லவன் அல்லாஹ்தான், என்றிருக்கும் போது அச்சிறப்புத் தன்மை அவனது அடியாரும் தூதருமாகிய நமது நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தில், அல்லாஹ்விடம் முறையிடுவது போன்றே, நபி(ஸல்) அவர்களிடம் அவர் முறையிடும் அவல நிலையைப் பாருங்கள்!

{ 0 comments }

அபூமர்யம் அந்நஜாத்’ செப்டம்பர்’87 இதழில், புர்தாவிலுள்ள ‘லவ்ஹுல் மஹ்ஃபூழி’லுள்ள ஞானம், உங்களள் ஞானங்களின் ஒரு பகுதியே எனும் கவிதையடியை, ஹதீஸ்களின் வெளிச்சத்தில், அலசி ஆராய்தோம். அதில், குறிப்பாக அன்னை ஆயிஸா(ரழி) அவர்களைப் பற்றிய அவதூறு சம்பவத்திலிருந்து, அந்தக் கவியடி முழுமையாக ஹதீஸ்களுக்கு முரண்பட்டிருப்பதைக் கண்டோம்.

{ 0 comments }

அபூமர்யம் சென்ற ஆகஸ்ட் இதழில் புர்தாவிலுள்ள “மேலும் லவ்ஹுல் மஹ்ஃபூமிலுள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு பகுதியே” என்னும் கவிதையின் அடியை திருக்குர்ஆனின் அடிப்படையில் அலசிப் பார்த்து, அது முற்றாக அல்குர்ஆனுக்கு முரண்பட்டிருப்பதையறிந்தோம், இதோ இப்பொழுது அதை ஹதீஸுகளின் அடிப்படையில் அலசிப் பார்ப்போம்.

{ 0 comments }

  A. முஹம்மது அலி, M.A., திருச்சி-4. தனி மனிதன் வாழ்விலிருந்து, குடும்பம், சமுதாயம், ஊர், நாடு, உலகம் என அனைவரின் வாழ்விலும் இரண்டறக் கலந்து உறவாடி வருவது காசு, பணம் என்ற பொருட் செல்வங்களாகும். அவரவரிடமுள்ள பொருட் செல்வத்தினால் அவனுக்கு, குடும்பத்திற்கு, சமுதாயத்திற்கு, ஊருக்கு, நாட்டிற்கு சிறப்பு ஏற்படுவதாக உலகியல் ரீதியாக கணிக்கப்படுகிறது. பொருட் செல்வத்தின் ஆதாரத்தில் தனி மனிதன் முன்னேற்றம் முதல் உலக முன்னேற்றம் வரை கணிக்கின்றனர்.

{ 0 comments }

அபூ மர்யம் சென்ற ஜூன், ஜூலை மாத இதழ்களில் புர்தாவில் நிச்சயமாக இவ்வுலகமும், மறு உலகமும் (நபியே!) உங்களின் நன்கொடைதான் மேலும் லவ்ஹுல் மஹ்பூழில் உள்ள ஞானம் உங்கள் ஞானங்களில் ஒரு சிறுபகுதிதான் என்னும் கவிதை அடியின் முற்பகுதியை குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் அலசிப் பார்க்கும் பொழுது முற்றாக அவ்விரண்டிற்கும் அப்பாற்பட்ட நிலையில் அவர் பாடியுள்ளார் என்பதை வாசகர்களுக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.

{ 0 comments }

இப்னு மர்யம் “இவ்வுலகமும், மறு உலகமும் நபியே! உங்கள் அருட்கொடைதான்” என்று பூசிரி பாடியிருப்பதை திருக்குர்ஆன் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்தோம். “இவ்வுலகம் அல்லாஹ்வின் அருட்கொடைதான்” என்பதைக் கண்டோம். இனி ஹதீஸ்களின் வெளிச்சத்தில் இதை நாம் ஆராய்வோம்.

{ 0 comments }

இப்னு மர்யம் புர்தாவின் தவறுகள் இனி ‘புர்தா’வில் உள்ள தவறுகளைக் காண்போம். ஃப இன்னமின் ஜுதிகத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக இல்முல் லவ்ஹி வல்கலமி இது புர்தாவில் வருகின்ற வரிகள். மூன்று முறை ஓதப்படுகின்ற கவிதைகளில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதையின் கருத்து திரக்குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற நச்சுக் கருத்தாகும். ‘பர்தா’ ஓதக்கூடாது என்று முடிவெடுக்க இந்த இரண்டு வரிகளே போதுமாகும். அவ்வளவு மோசமான கருத்தை இந்த வரிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் […]

{ 0 comments }

P. ஜைனுல் ஆபிதீன் இறந்தவர்களுக்கு கபுருகளுக்கு பெண்கள் ஜியாரத்து செய்ய செல்லக்கூடாது என்று மவ்லவிகளிடையே கருத்தொற்றுமை இருந்து வந்தது. சமீப காலமாக “பரேல்வி” கொள்கையுடைய சில மவ்லவிகள் “பெண்கள் ஜியாரத்து செய்ய அனுமதி உண்டு” என்று கூறத் துவங்கியுள்ளனர். அதற்கு ஆதாரமாக ஒரு சில ஹதீஸ்களை எடுத்து வைத்து அதில் தங்கள் சொந்த அபிப்பிராயங்களையும் கலந்து நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

{ 0 comments }

  இப்னு மர்யம் “மவ்லிது” மறுக்கப்படுவது கவிதை  என்பதற்காக அல்ல” என்பதை இதுவரை நாம் கண்டோம். வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது.

{ 0 comments }

  இப்னு மர்யம் உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.

{ 0 comments }

இப்னு மர்யம் “சீறா” என்ற புராணம் பாடிய உமறு என்பவரின் கனவில் நபி(ஸல்) அவர்கள் தோன்றி, அவரது புராணத்திற்கு அங்கீகாரம் அளித்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரண்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய “சீறாவுக்கு” ஒரு போதும் நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். மாதிரிக்கு “சீறா”வின் சில கருத்துக்களைக் காண்போம்.

{ 0 comments }

இப்னு மர்யம்   நபி(ஸல்) அவர்கள் கவி பாடினார்களா? நபி(ஸல்) அவர்கள் சில கவிதைகள் பாடியதாக ஒரு சில அறிவிப்புகளில் காணப்படுவதை அடிப்படையாகக் கொண்டு நபி(ஸல்) அவர்களுக்குக் கவிதைப் பாடத் தெரியும். கவித்திறமை அவர்களுக்கு உண்டு என்று சிலர் தவறாகக் கருதுகின்றனர். இப்படிக் கருதிக் கொண்டு பல பொய்யான கதைகளையும் உருவாக்கி விட்டனர்.

{ 0 comments }

K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி இன்று இஸ்லாமின சமுதாயத்தின் பெரும் பகுதியினர் ‘தக்லீத்’ என்ற பெயரில் மரியதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்றுவதாக நம்பிக்கைக் கொண்டு, குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முரணானவற்றையும் மார்க்கமாகக் கருதிச் செயல்பட்டுக் கொண்டு வழி தவறிச் செல்வதால் , ‘தக்லீத்’ தைப் பற்றிய விவரங்களை இக்கட்டுரையில் ஆராய்வோம்.

{ 0 comments }

  இப்னு மர்யம் இரண்டாவது ஆதாரம் கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை. மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.

{ 0 comments }

முகம்மது அலி, M.A., ஸலவாத்’ சொல்வதனால் ஏற்படக் கூடிய சிறப்புகளையும், ஸலவாத்தின் பொருளையும், அதன் காரணத்தையும், நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ‘ஸலவாத்’ எவை? பிற்காலத்தில் உருவாக்கப்பட்டட ‘ஸலவாத்’ எவை? என்பதையும் இதுவரை நாம் பார்த்தோம்.

{ 0 comments }

முகம்மது அலி, M.A., “ஸலவாத்துன்னாரிய்யா” என்பது நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்தது அல்ல, மிகவும் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்டது என்பதைச் சென்ற இதழில் கண்டோம். அது எவ்வளவு நல்ல கருத்தை உள்ளடக்கி இருந்தாலும், “பித்-அத்” -பிற்காலத்தில் உருவாக்கப்பட்டது – என்ற காரணத்தினாலேயே அது ஸலவாத்தாக ஆக முடியாது என்பதையும் சென்ற இதழில் பார்த்தோம். அதன் பொருளை நாம் கவனித்தாலும் மார்க்கம் அனுமதிக்கின்ற விதத்தில் அமைந்திருக்கவில்லை என்பதை இந்த இதழில் காண்போம்.

{ 0 comments }

 இப்னு மர்யம். தவறான ஐயமும் தக்க விளக்கமும் “மவ்லிது ஓதலாம், ஓத வேண்டும்” என்று கூறுபுவர்களின் முதல் ஆதாரமான முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கை குர்ஆனின் தெளிவான வசனங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்பும் தங்கள் மனோ இச்சையை சிலர் விடுவதற்குத் தயாராக இல்லை. மாறாக அதை எப்படியேனும் நியாயப்படுத்திட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர்.

{ 0 comments }

இப்னு மர்யம். மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.

{ 0 comments }

முகம்மது அலி. M.A., திருச்சி. இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம். “ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

{ 0 comments }