1986 செப்டம்பர்

இப்னு ஹத்தாது ‘ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்’ (அல்குர்ஆன் 22: 78) இப்றாஹீம்(அலை) அவர்களே ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டதாக பல குர்ஆன் தர்ஜுமாக்களிலும், தப்ஸீர்களிலும் காணக் கிடைக்கிறது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோரின் நம்பிக்கையும் இதுவேயாகும். நாமும் நமது “நஜாத்” ஆகஸ்ட் இதழ் 7-ம் பக்கத்தில் ‘தியாகத் திருநாள்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘நமக்கு முஸ்லிம் என பெயரிட்ட நபி இப்றாஹிம்(அலை)’,என்றே குறிப்பிட்டிருந்தோம்.

{ 0 comments }

அபூ அப்துல்லாஹ் ஆகஸ்ட் 1896 இதழில் இட்டுக்கட்டப்பட்ட (மவ்லூஃ) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்யக் கூடாது என்பதற்குரிய ஆதாரங்களைப் பார்த்தோம். ஜுலை இதழில் பலவீனமான (லயீஃய்) ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது கூடாது என்பதை (குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்கள் அடிப்படையில்) பார்த்தோம். பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் 1000 வருடங்களுக்கு முன்பே தெளிவாக அடையாளம் காட்டப்பட்டிருந்தும், இன்றளவும் அவை மக்களால் நிராகரிக்கப்படாமல் போனதற்கு காரணம் என்ன? முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் பெரும்பாலோர் அவைகளை மாாக்கமாக அங்கீகரிக்க என்ன காரணம்? […]

{ 0 comments }

அபூ உபைதுல்லாஹ் என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ, அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! அறிவிப்பவர் : மாலிக் இப்னுல் ஹுவைரிஸ்(ரழி) நூல்கள்: புகாரி, அஹ்மத். நபி(ஸல்) அவர்கள் எப்படித் தொழுதார்களோ, அப்படித்தான் தொழ வேண்டும் என்பது நபி(ஸல்) அவர்களின் மேலான உத்தரவாகும். அவர்களின் தொழுகை முறைக்கு மாற்றமான முறையில் தொழும் தொழுகை உண்மையில் தொழுகையாக இருக்க முடியாது.

{ 0 comments }

சென்ற இதழில், குர்பானி கொடுப்பவர்கள், முடி, நகங்களைக் களையக்கூடாது என்று எழுதி இருந்தீர்கள். மேலும் உமர்(ரழி) உம்ராவுக்குச் செல்லும்போது அவர்களிடம் நபி(ஸல்) தனக்காக துஆ செய்யச் சொன்னதாகவும் எழுதி இருந்தீர்கள்! இந்த இரண்டும் எந்த ஹதீஸ் நூலில் உள்ளன. நீங்கள் ஹதீஸ் என்று எவ்வித ஆதாரமுமின்றி எழுதிவிட்டால் அதை எப்படி ஏற்க இயலும்? -ஆமிர் பில்மஃரூப், பெங்களூர்.

{ 0 comments }

தொண்டி ஜே. கலந்தர் “கூடாது” என்கின்றனர் சிலர். “கூடும்” என்கின்றனர் சிலர். இரண்டு கூட்டத்தினரும் ஆலிம்கள் தான். எதைச் செய்வது? யார் சொல்லைக் கேட்பது? அப்பப்பா…. மண்டையை பிச்சிக்கிறனும் போல இருக்கே! இவர்கள் குழப்புகிற குழப்பத்தில் நாம் இருக்கிற அறிவையும் இழந்து விடுவோம் போல இருக்கே….” என நம்மைப் போன்ற பாமரர்கள் பலர் குழம்பும் நிலை, பொதுவாக எல்லா இடங்களிலும் இல்லாமல் இல்லை. இறைவனின் அருளைப் பெறுவதே நமது இலட்சியமாக இருப்பதால் – இக் குழப்பத்திலேயே கிடந்து […]

{ 0 comments }

மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: பெண்கள் ஜனாஸாத் தொழுகை தொழலாமா? ஜநாஸாத் தொழுகைக்கு பெண்கள் இமாமத் செய்யலாமா? ஆண், பெண் ‘மையித்’தையும், பெண், ஆண் ‘மையித்’தையும் குளிப்பாட்டலாமா? -E. முஹம்மது பஷீர், ஊட்டி.

{ 0 comments }

இவ்வுலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றுவதால், அற்பமான இவ்வுலக சுகத்தைத் தான் இழக்க நேரிடும். ஆனால் மறு உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அழியாத பெரு வாழ்வை, முடிவே இல்லாத பேரின்பத்தை அல்லவா இழக்க நேரிடும்! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

{ 0 comments }

இப்னு மர்யம். மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.

{ 0 comments }

S.N. குத்புதீன் B.A. ஒரு ஒழுக்க சீலர் மீது வீண் பழி. பலவந்தத்தின் உச்சக்கட்டம்! காமவெறி தலைக்கேறிய மன்னர் மனைவியின் பலாத்காரம். நபி யூசுப்(அலை) அவர்களின் சட்டையைப் பின்பக்கம் பிடித்திழுத்துக் கிழித்துவிட்டாள். திடுமென்று அவள் கணவர் அங்கே பிரசன்னமானார். கணவர் அஜீஸின் வரவால் அவள் அதிர்ச்சி அடைந்தாள். “அப்பொழுது, வாசல் பக்கம் அவளுடைய நாயகரை அவ்விருவரும் கண்டனர், (அல்குர்ஆன் 12:25)

{ 0 comments }

முழங்காலுக்கு மேல் தூக்காதே! மதுரை மைதீன் உலவி. நாற்பதாம் நாள் பாத்திஹா. இது பொதுவாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் நடக்கும் ஒரு விசேஷமான நாள். ஆனால் மதுரை மாவட்டத்தில் ஒரு வேடிக்கை. (மற்ற மாவட்டங்களிலும் இருக்கலாம்) தந்தை இறந்த நாற்பதாம் நாள் அன்று மிக விமரிசையாக பாத்திஹா ஓதப்படும். அதற்காக அழைக்கக் கார்டு அச்சடிப்பது முதல் அறுத்துச் சாப்பிட ஆடு வரை தயார் செய்யப்படும். பணம் இல்லையெனில் வட்டிக்காவது கடன் வாங்கி செய்ய வேண்டும் இல்லை என்றால் […]

{ 0 comments }

முகம்மது அலி. M.A., திருச்சி. இதுவரை நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவனால், நமக்கு ஏற்படுகின்ற நன்மைகளையும், அதன் தத்துவங்களையும் கண்டோம். “ஸலவாத்” என்ற பெயரில் புதுப்புது ஸலவாத்கள் உருவாக்கப்பட்டுள்ளதைப் பற்றி ஆராய்வோம்.

{ 0 comments }

ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

{ 0 comments }

மவ்லவி பீ.ஜே. எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது(ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ‘ஷபாஅத்’ என்னும் பரிநந்துரை செய்பவர்களாகவும், ‘மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் இஸ்லாமியர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

{ 0 comments }

அபூ முஹம்மத் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் ஆஷுரா என்று கூறப்படுகின்றது. அந்த நாளை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அதன் சரித்திரப் பின்னனியை நாம் காண்போம். “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது”மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து (பிர்அவ்ன்) அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) […]

{ 0 comments }

தொண்டியான் (டாக்டர் ஹமீத் நைனார், மதுரை. K.M. அப்துல் ஹமீது திருக்களாச்சேரி, தாஜ்மஹால் தேயிலைக் கம்பெனி, மயிலாடுதுறை. மவ்லவி. ஹாஜா ஜுபைர்தீன் மன்பஈ, இருமேனி. ஜஹபர் சாதிக், S.P. பட்டினம். முஹம்மது ஷஹீத், அம்மாபட்டினம், டாக்டர் S. முஹம்மது பாரூக் ஆகியோர் நண்டு பற்றிப் பல்வேறு கருத்துக்களை எழுதியுள்ளனர். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் விளக்கமாக இந்த சிறிய கட்டுரை)

{ 0 comments }

காதியானிகளுக்குப் பகிரங்க அறை கூவல்! காதியானிகள் பத்திரிகையான சமாதான வழி ஆசிரியர் அவர்களை, நாம் நேருக்கு நேர் விவாதத்துக்கு அழைத்த போது “நேரடியாக வேண்டாம்; பத்திரிக்கை மூலமே வைத்துக் கொள்வோம் என்று நழுவினார். தனது பத்திரிக்கையிலும் ஒப்புக்கொண்டார். இப்போதும் அதையே திரும்பவும் கூறுகின்றோம். குர்ஆன், ஸனதுகளுடன் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் – இந்த இரண்டையும் ஆதாரமாகக் கொண்டு, ஈஸா நபி பற்றியும், மஹ்தி(ரஹ்) அவர்கள் பற்றியும், இறுதி நபித்துவம் பற்றியும், மிர்ஸாவைப் பற்றியும் நேரடி விவாதம் நடத்த […]

{ 0 comments }

“மறுமையில் அல்லாஹ் ஈஸா நபியை” மர்யமுடைய மகன் ஈஸாவே என்று அழைக்கவிருப்பதை 5:116 வசனத்தில் குறிப்பிடுகிறான். நபி(ஸல்) அவர்கள் மறுமையில் (தந்தை பெயருடன் சோக்காமல்) “யாமுஹம்மத்” என்று அழைக்கப்பட விருப்பதாக புகாரி ‘தவ்ஹீத்’ பாடத்திலும், முஸ்லிம் ‘ஈமான்’ பாடத்திலும் ஹதீஸ்கள் உள்ளன.

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் 1986 செப்டம்பர் – முஹர்ரம் 1407 ****************************** நபியே! உம(து அழைப்பு)க்கு அவர்கள் பதில் கூறாவிட்டால், நிச்சயமாக அவர்கள் தம் மன இச்சைகளையே பின்பற்றுகிறார்கள் என்று நீர் அறிந்து கொள்ளும்! இன்னும் அல்லாஹ்விடமிருந்து (வந்த) நேர்வழியின்றித் தன் மன இச்சையைப் பின்பற்றுவனை விட வழி கெட்டவன் எவனிருக்க முடியும்? (இத்தகைய) அக்கிரமக்காரர்களுக்கு அல்லாஹ் நிச்சயமாக நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 28:50) நமது உத்தரவு இல்லாமல் ஒரு அமலை […]

{ 0 comments }