1986 டிசம்பர்

(K.M.H. அபூ அப்துல்லாஹ், நிர்வாகி) நாட்டு நடப்பும், நமது நிலையும்! சமீப காலமாக நாடு முழுவதும் நம்மை(நஜாத்தைப்) பற்றி வீண் அவதூறுகளும், பொய்ச் செய்திகளும் பரப்பப்பட்டு வருகின்றன. எங்களது உண்மையான நிலையை, பணியை மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டுள்ளோம். இந்த நோக்கத்தோடு எழுதப்பட்டதே இக்கட்டுரை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ஆதரவு தரும் ஆலிம்களுக்கு எங்கள் உளமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறோம். நடுநிலை ஆலிம்களின் விமர்சனங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

{ 0 comments }

மவ்லவி ஹாபிஸ் அப்துஷ்ஷுகூர் உலவி  இப்படியும் ஒரு பாத்திஹா! நான் ஒரு நண்பரின் அழைப்பை ஏற்று அவர் வீட்டின் விசேஷத்தில் கலந்து கொள்ள அவர் வீடு சென்றேன். பெரும் தலைகளெல்லாம் உள்ளே அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் வருகையை எதிர்ப் பார்த்திருந்தனர். தீடீரென, “என்னப்பா சுருக்கெனப் போய் லெவையைக் கூட்டியா! நேரமாகுது!” என்று ஒரு பெண்ணின் குரல் ஒலிக்க, உடனே அந்த நண்பர் வெளியில் சென்று தாடி, தலைப்பாகை, ஜிப்பாவுடன் கூடிய ஒருவருடன் திரும்புகிறார்.

{ 0 comments }

  இப்னு மர்யம் இரண்டாவது ஆதாரம் கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை. மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.

{ 0 comments }

  மவ்லவி K.M. முஹம்மது இக்பால் மதனீ என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல்கள் : புகாரி, அஹ்மத் பல் துலக்குதல் நபி(ஸல்) அவர்கள், பல் துலக்குவதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கின்றனர். குறிப்பாக ஒளூ செய்யும் போது பல் துலக்குவதை மிகவும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

{ 0 comments }

  மவ்லவி P. ஜைனுல் ஆபிதீன் கேள்வி: சில ரகசிய ஞானத்தை, சிலருக்கு மட்டும் நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக ஹதீஸ் உள்ளதாக முரீது கொடுப்போர் கூறுகின்றனர். உண்மை தானா? அபூரோஸனாரா பேகம், துபை.

{ 0 comments }

  குர்ஆனில் முரண்பாடா? P. சீனிவாசன் என்பவர் BHEL நிறுவனத்தில் பணிபுரியும் சகோதரர். திருக்குர்ஆனைப் படித்து விட்டு, அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களைக் கேட்டுள்ளார். இந்தக் கேள்வியைக் கேட்டவர் முஸ்லிமல்ல, இஸ்லாமியர்கள் குர்ஆனைப் புரிந்து கொள்வதை விட்டு விலகிச் சென்றுள்ள காலத்தில், முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவர் குர்ஆனில் தனக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களைக் கேட்கிறார். நஜாத் வாசகர்கள் திருக்குர்ஆனை ஆராய வேண்டும் என்ற உயர் நோக்கத்தோடு அவற்றிற்கு விளக்கம் தரும் பொறுப்பை வாசகர்களிடமே விடுகிறோம். எவரும் சரியான விளக்கம் […]

{ 0 comments }

மர்ஹும் “தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸாத் தொழலாம்” என்று குர்ஆனின் குரல் எந்தவித ஆதாரங்களுமின்றி எழுதி இருந்தது. ” தற்கொலை செய்து கொண்டவனுக்கு நபி(ஸல்) அவர்கள் “ஜனாஸாத் தொழ மறுத்து விட்டனர்” என்று முஸ்லிம், அஹ்மத், அபூதாவூது, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவனுக்கு ஜனாஸா தொழக் கூடாது என்று நாம் எழுதியிருந்தோம்.

{ 0 comments }

  மவ்லவி P.S. அலாவுத்தீன். பெரிய இணை கற்பிக்கும் பாவத்தின் பல்வேறு வகைகள் கேள்வி: இறந்தவர்களையும், நம் புலனுணர்வுகளுக்கு எட்டாத உயிருள்ளவர்களையும் நம்மைக் காப்பாற்றும்படி அழைக்கலாமா?

{ 0 comments }

  அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.   ஹிஜ்ரி ஐந்தாம் நூற்றாண்டில் இஸ்லாமிய உலகம் கண்ட மாபெரும் சீர்திருத்தவாதி அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அவர்கள். இஸ்லாமிய உலகில் மற்ற எவரது பெயராலும் கட்டிவிடப்பட்டுள்ள கதைகளை விட, , இவர்கள் பெயரால் தான் அதிகமாக பொய்யான கதைகள் உலவுகின்றன . இறைவனுக்கு இணை வைக்கக்கூடிய – தகாத – சொற்களைக் கூட அவர்கள் சொன்னதாகத் துணிந்து பொய்ப்பிரச்சாரமும் செய்யப்படுகின்றது.

{ 0 comments }

  “முஸ்லிம் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள்!” என்று சிலர் பிரச்சாரம் செய்கின்ற சூழ்நிலையில் நஜாத்தை ஒரு முஸ்லிம் அச்சகத்தில் அச்சிடாதது ஏன்? A. முஹம்மது பிலால், சீருடையார்புரம்.

{ 0 comments }

நாம் சென்ற இதழில் பிக்ஹு நூல்களில் இருந்து எடுத்து எழுதியவை அந்த நூல்களில் அந்தப் பக்கங்களில் காணப்படவில்லை என்று சிலர் எழுதுகின்றனர். அந்த நூல்கள் பல நாடுகளில் பல பதிப்புகள் வந்துள்ளன. ஒரு நாட்டுப் பதிப்புக்கும் இன்னொரு நாட்டுப் பதிப்புக்கும் பல பக்கங்களில் வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக ஒரு பதிப்பில் 170 ஆம் பக்கத்தில் உள்ள விஷயம் இன்னொரு பதிப்பில் 240 ஆம் பக்கத்தில் உள்ளது. புத்தகங்களின் அளவு, அதில் சோக்கப்படும் அடிக்குறிப்பு ஆகியவை பொறுத்து பக்கங்கள் மாறுபடலாம். […]

{ 0 comments }

பீ.ஜே. மண் கேட்ட படலம்! அல்லாஹ், ஆதம் (அலை) அவர்களைப் படைக்க எண்ணிய போது, ஜிப்ரில்(அலை) அவர்களைப் பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணிக்கிறான். ஜிப்ரில்(அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்டபோது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரில்(அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில்(அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராபீலை அனுப்பியபோது, அவரும் வெறுங் கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல்மவ்தை அல்லஹ் அனுப்ப, […]

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந்நஜாத் இலட்சிய மாத இதழ் டிசம்பர் 1986  – ராபிவுல் ஆகிர் 1407 ******************************* உள்ளே நுழையுமுன்… அஸ்ஸலாமு அலைக்கும்! “நஜாத்” என்று வெளிவந்து கொண்டிருந்த நம் இதழ் “அந்நஜாத்” என்று மாற்றப்பட்ட காரணம் என்ன? என்று பல வாசகர்கள் கேள்விகள் எழுப்புகின்றனர். நாம் விண்ணப்பித்து இருந்த பெயர்களில் அல்லாஹ்வின் பேரருளால் “அந் நஜாத்” என்ற பெயருக்குத்தான் அரசின் அனுமதி கிடைத்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்) இது தான் “நஜாத்” -‘அந்நஜாத்’ தாக மாறியதற்குரிய காரணம். நஜாத் என்றாலும் […]

{ 0 comments }