1987 ஏப்ரல்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் கூறுவதை மறுக்கவில்லை! நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறைப்படி ஸலவாத் சொல்லச் சொல்கிறோம். ஸஹாபாக்களை நாங்கள் குறை கூறவில்லை! இந்த உம்மத்துகளிலேயே அவர்கள் தான் சிறந்தவர்கள் என்கிறோம்.

{ 0 comments }

இப்னு ஹத்தாது. திருச்சியில் நடைபெற்ற ஜ.உ. மாநாட்டில் விசேஷமாக வெளியிடப்பட்ட ‘ஷரீஅத்’ மலர் 50-ம் பக்கத்தில் “முஜ்தஹிதும் உலூம் அரபிக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் எழுதிய கட்டுரையில், 4:83 குர்ஆன் வசனத்திற்கு கொடுத்துள்ள மொழி பெயர்ப்பைக் கீழே அப்படியே கொடுத்துள்ளோம். இஸ்லாமிய சகோதரர்களே நீங்களே ஒப்பிட்டுப் பார்த்து குர்ஆனைப் புரட்டுவது யார்? குழப்பவாதிகள் யார் என்ற முடிவுக்கு வாருங்கள்.

{ 0 comments }

மவ்லவி. அபூசுமைய்யா மிஸ்பாகி திருக்குர்ஆனை எளிதில் புரிந்து கொள்வதற்காகவும், வாசகர்களின் குறிப்புக்காகவும் இத் தொடரில் திருக்குர்ஆனில் கூறப்படும் பல்வேறு விஷயங்களை அட்டவணைப் படுத்தித் தருகிறோம்.

{ 0 comments }

வாசகர் விமர்சனம் பகுதியில் இடம் பெறும் கேள்விகள் நீங்களே உருவாக்கிக் கொள்பவை என்று சில மவ்லவிகள் கூறுகிறார்கள். குறிப்பாக சென்ற இதழில் முதன் முதலில் இடம் பெற்றிருந்த அந்தமான் வாசகரின் கேள்வி திட்டமிட்டுத் தயாரிக்கப்பட்டது என்று சில மவ்லவிகள் அபிப்பிராயம் தெரிவிக்கிறார்கள். இவ்வளவு ஆழமான கேள்விகளை எல்லாம் பாமரர்கள் கேட்க முடியாது என்று காரணமும் கூறுகிறார்கள். – மவ்லவி நூர் முஹம்மது, பணைக்குளம், மதுரை.

{ 0 comments }

மவ்லவி S. கமாலுத்தீன் மதனீ நபிக்குப்பின் நபித்தோழர்களின் நிலை நபி வழியைப் பரப்பவதின் சிறப்பையும் , அதன் அவசியத்தையும் சென்ற இதழ்களில் நாம் அறிந்திருக்கிறோம். “என்னுடைய பேச்சை செவியுற்று அதை மனனம் செய்து பாதுகாத்து, அதை செவியுற்றது போன்று பிறருக்குச் சொல்லக்கூடியவனுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக! எனது செய்தி எத்திவைக்கப்படுகின்ற எத்தனையோ பேர் எத்திவைப்பவரைவிட சிறந்தவராக இருக்கின்றனர்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுதாவுத்,திர்மிதீ)

{ 0 comments }

அந்நஜாத்துக்கு எதிராக ஜ.உ. சபை ஒரு மாநாடு நடத்தியதை நீங்கள் அறிவீர்கள்! அந்த மாநாட்டில் பல தீர்மானங்களும் (?) நிறைவேற்றியுள்ளனர். அந்த மாநாட்டில் இ.யூ.மு. லீக்கின் தமிழ் நாட்டுத் தலைவர் கலந்து கொண்டு நம்மைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். “ஏனோ இந்த நஜீஸ் எனக்கு இன்னும் வரவில்லை” என்று அந்நஜாத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

{ 0 comments }

 மவ்லவி P.S. அலாவுத்தீன், கேள்வி: அல்லாஹ்விடம் ஒன்றை வேண்டுவதற்கு யாராவது ஒரு மனிதரின் இடைத்தரகு தேவையா? பதில்: இறைவனிடம் கையேந்துவதற்கு யாரையும் துணைச் சாதனமாகவோ இடைத்தரகராகவோ ஆக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில

{ 0 comments }

K.M.H. அபூஅப்தில்லாஹ் கடந்த மார்ச் 87, 14, 15 தேதிகளில் திருச்சியில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா மாநாட்டில் 16 தீர்மானங்களில் 11 -வது தீர்மானம் மிகவும் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. விபரமறியாத குழந்தைப் பருவத்தில் விளையாடும் போது கோபம் வந்துவிட்டால், “நான் கொடுத்த பழத்தைத் தா, கடலையைத்தா” என்று தின்று முடித்த பின் குழந்தைகள் கேட்கும் சம்பவத்தை நமக்கு ஞாபகப்படுத்துகின்றது. அந்த தீர்மானம் வருமாறு.

{ 0 comments }

  இப்னு மர்யம் உமறுப் புலவரின் சீறாவுக்கு மட்டுமல்ல. இன்னும் பல கவிதைகளுக்கும் கூட நபி(ஸல்) அவர்கள் அங்கீகாரம் வழங்கியதாக கதைகள் பல உண்டு. அவற்றில் உள்ள தவறுகளை நியாயப்படுத்தி உயர்ந்த அந்தஸ்தில் வைத்து மக்கள் போற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இப்படிக் கதைகள் விடப்படுகின்றன.

{ 0 comments }

  அந்நஜாத்தையும், அதனால் ஏற்பட்டுள்ள எழுச்சியையும் காணப்பொறுக்காத ஒரு கூட்டம் “ஷரீஅத் மாநாடு” என்ற பெயரில் மாநாடு ஒன்று நடத்தினார்கள்.

{ 0 comments }

ஒரு திருத்தம். சென்ற இதழில் குர்ஆனில் முரண்பாடா? பகுதி-2 ல் ஒரு பகுதி திருத்தம் செய்து கொள்ளும்படி வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம். 1. பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள்தானா ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலாத்தாருக்கெல்லாம் ரப்பானவன்! என்று (நபியே!) கூறுவீராக. (41 :9)

{ 0 comments }

அன்புடையீர் வணக்கம். அந்நஜாத் மார்ச் 1987 இதழ் (1-12) -ல் “குர்ஆனில் முரண்பாடு இல்லை” என்ற முகம்மது முஸ்தபா அவர்களின் விளக்கம் அருமையாகவே இருந்தது. ஆயினும், எனது எடுத்துக்காட்டுகளில் உள்ள “உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இந்த நிராகரிப்போர் கவனிக்க வேண்டாமா?” (அல்குர்ஆன் 21:30) என்ற ஆயத்து அவரின் விளக்கத்தில் எடுத்தாளப்படவில்லை. “உயிருள்ள ஒவ்வொன்றையும்” என்பதில் மனிதன் முதல் அனைத்து உயிர்களும் அடங்கும். (அதாவது மரம் செடி கொடிகளும் கூட) என்று கருதுகிறேன். அவரின் விளக்கப்படி […]

{ 0 comments }

அபூமுஹம்மத் வண்ண ஆடைகள் இஸ்லாம் அனுமதிக்காத உடைகளைப் பற்றி இனி காண்போம். முதலில் எந்தெந்த நிறங்களில் உடை அணியலாம்? எந்தெந்த நிறங்களில் அணியக் கூடாது? என்ற பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். நபி(ஸல்) அவர்களும், அவர்களின் அன்புத் தோழர்களும் பல்வேறு வண்ணங்களில் உடை அணிந்திருப்பதை நாம் அறிய முடிகின்றது. ஒரு சில நிறங்களில் ஆடை அணிவதை மட்டுமே நபி(ஸல்) அவர்கள் தடுத்திருக்கின்றார்கள்.

{ 0 comments }

‘மிஸ்பாஹி’ உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் மீது (நோன்பு) கடமையாக்கப்பட்டது போல் நீங்கள் இறையச்சம் உடையவர்களாக ஆவதற்காக வேண்டி உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது” (அல்குர்ஆன் 2 : 183)

{ 0 comments }

“அந்நஜாத்”திற்கு எதிராக திருச்சியில் நீங்கள் மாநாடு ஒன்று நடத்தினீர்கள். அதில் சவால்களும் விட்டு பேசியிருக்கிறீர்கள். நீங்கள் சட்ட நூல்கள் என்று ஒப்புக் கொள்கின்ற – மதரஸாக்களில் போதிக்கின்ற சில நூல்களில் உள்ள தவறுகளை நாம் நவம்பர் “அந்நஜாத்” இதழில் எழுதியிருந்ததை மறுக்கும் விதமாகவே சவால் விட்டிருக்கிறீர்கள். பொதுமக்கள் மத்தியில் நாங்கள் பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருக்கிறீர்கள்.

{ 0 comments }

சென்ற இதழில் “நபி(ஸல்) அவர்கள் தொழுதது எட்டு ரக்அத்கள்” என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமின்றி குர்ஆனின் குரல் ஒப்பக்கொண்டதை நாம் எடுத்துக் காட்டி இருந்தோம். “இருபது ரக்அத்களுக்கு, “நபி(ஸல்) அவர்கள் செய்ததாக “எவ்வித ஆதாரமும் இல்லை” என்பதை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளதையும் அவர்களின் பத்திரிகையிலிருந்தே எடுத்துக் காட்டி இருந்தோம். 

{ 0 comments }

“உலக மக்களின் மிகப் பெரும்பாலோர் மத்ஹபுகளை ஏற்பவர்களாக உள்ளனர்” என்று பலரும் இதுவரை கூறி வந்துள்ளனர். மத்ஹபுகள் வேண்டாம் என்போர் மிகசும் குறைவானவர்கள் என்றும் அவர்கள் கூறிவந்துள்ளனர். அவர்களுக்கு சரியான பதிலடி தரும் விதமாக ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பின்வருமாறு திருச்சி மாநாட்டில் குறிப்பிட்டார்கள்.

{ 0 comments }

அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் ஏப்ரல் 1987  –  ஷஃபான் 1407 உள்ளே நுழையுமுன்……… அன்புச் சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் திருக்குர்ஆனின் போதனைகளையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கும் உயர் நோக்கத்துடன் துவக்கப்பட்ட “அந்நஜாத்” இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

{ 0 comments }