1987 ஜுன்

 காயல் இப்னுஷேக் தற்காலத்தில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களையும், இறைத்தூதர்களையும் சிறுகதையின் மூலம் சீண்டுவது ஒரு வழக்கமாகி வருகிறது. அண்மையில் நமது நபி(ஸல்) அவர்களை பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘டெக்கான் ஹெரால்டு’ எனும் பத்திரிவை இழிவாக எழுதி, பெரும் கலவரமும், உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டு, பின்னர் அப்பத்திரிக்கையின் ஆசிரியர் மன்னிப்புக் கேட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.

{ 0 comments }

 மவ்லவி S. கமாலுத்தீன் – மதனீ நபிவழியில் இடைச்செருகல்கள் ஹிஜ்ரி 40-ம் ஆண்டு வரை நபிவழி அறிவிப்புகளில் எந்த இடைச் செருகல்களும் இடம் பெறவில்லை. நபித் தோழர்கள் பொய்யான ஹதீஸ்களை நுழைப்பதை விட்டும் தூய்மையானவர்களாக இருந்தார்கள். ஹதீஸ்களில் எந்தவித கையாடல்களும் 40 ம் ஆண்டு வரை இடம் பெறவில்லை. அரசியல் நோக்கங்களுக்காகவோ, அல்லது சமூகத்தில் ஏற்பட்ட பிரிவினைகளுக்கு ஆதாரமாகவோ யாரும் நபி வழியைப் பயன்படுத்தவில்லை.

{ 0 comments }

K.M.H. அபூ அப்துல்லாஹ் (நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும் ஒருவன் தன்னை “முஸ்லிம்” என்று சொல்லிக் கொள்ள விரும்புவானேயல்லாமல் “அஹ்ல சுன்னத் – வல் – ஜமாஅத்” என்று அழைத்துக் கொள்ள விரும்ப மாட்டான். காரணம் நபி(ஸல்) அவ்வாறுற அழைத்துக் கொள்ளக் கற்றுத்தரவில்லை. ஆயினும் “அஹ்ல சுன்னத் வல் ஜமாஅத்” என்று முஸ்லிம்களை ஒரு சாரார் குழப்பி வருவதால் அந்த அடிப்படையிலும் அதற்குச் சொந்தக்காரர்கள் குர்ஆன், ஹதீதுபடி நடப்பவர்களே என்பதை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்)

{ 0 comments }

  ஐயம்: நான் 19 வயதிலிருந்து தொழுது வருகின்றேன், எத்தனை வயதிலிருந்து தொழுகை கடமை ஆகின்றது. தொழாமல் விடுபட்ட ‘களா’ தொழுகைகளை எப்படி நிறைவேற்றுவது?

{ 0 comments }

அபூமுஹம்மத்  ஆண்களின் ஆடைகள்  மனிதன் இயல்பிலேயே தனது மர்ம உறுப்புகளை மறைத்து வாழ்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். இதனால் தான் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும், மதங்களுக்கு அப்பாற்பட்ட நாத்திகர்களும் ஆடைகள் அணிந்து தங்கள் உடலின் பாகங்களை மறைத்து கொள்வதை நாம் காண்கிறோம். இது மனித இயல்பு என்பதை திருக்குர்ஆனும் நமக்கு எடுத்தோதுகின்றது,

{ 0 comments }

மவ்லவி P.S. அலாவுத்தீன் திருமறை வழியிலும், நபிமொழி நெறியிலும் வாழுதல் கேள்வி: அல்லாஹ் எதற்காக நமக்குத் திருக்குர்ஆன் அருளினான்?

{ 0 comments }

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்! (நபிமொழி) நூல் : புகாரி, அஹ்மது மர்மஸ்தானத்தைத் தொட்டால் ஒளூ நீங்குமா? ஒளூவை நீக்குமா? நீக்காதா? என்ற கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள விஷயங்களில் மர்மஸ்தானத்தைத் தொடுவதும் ஒன்றாகும். இதுபற்றி முரண்பட்டதாகத் தோன்றுகின்ற இரண்டு ஹதீஸ்கள் அறிவிக்கப்படுவதே கருத்து வேறுபாடு தோன்றக் காரணமாகும்.

{ 0 comments }

இப்னு மர்யம் புர்தாவின் தவறுகள் இனி ‘புர்தா’வில் உள்ள தவறுகளைக் காண்போம். ஃப இன்னமின் ஜுதிகத் துன்யா வழர்ரதஹா வமின் உலூமிக இல்முல் லவ்ஹி வல்கலமி இது புர்தாவில் வருகின்ற வரிகள். மூன்று முறை ஓதப்படுகின்ற கவிதைகளில் இந்த வரிகளும் இடம் பெற்றுள்ளன. இந்தக் கவிதையின் கருத்து திரக்குர்ஆனுடன் நேரடியாக மோதுகின்ற நச்சுக் கருத்தாகும். ‘பர்தா’ ஓதக்கூடாது என்று முடிவெடுக்க இந்த இரண்டு வரிகளே போதுமாகும். அவ்வளவு மோசமான கருத்தை இந்த வரிகள் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் […]

{ 0 comments }

  மர்ஹும் “நபி(ஸல்) அவர்கள் எட்டு ரக்அத்கள் தான் தொழுதுள்ளனர்” 20 ரக்அத்கள் தொழுததாகக் கூறுவது ஆதாரமற்றது” என்று கு.குரல் ஒப்புக் கொண்டதை நாம் கூட்டிக்காட்டி இருந்தோம். உமர்(ரழி) அவர்கள் கட்டளையிட்டது 11 ரக்அத்கள் பற்றித்தான். 20 ரக்அத்கள் தொழ வைக்கும்படி அவர்கள் கட்டளையிடவுமில்லை. செய்யவுமில்லை என்பதைச் சென்ற இதழ்களில் நாம் சுட்டிக்காட்டினோம். இனி கு.குரலின் கேள்விகள் சிலவற்றைப் பார்ப்போம். “உமர்(ரழி) அவர்கள் 20 தொழச் சொன்னபோது, மஹர் விஷயமாகத் தட்டிக் கேட்டது போல் ஒருவருமே ஏன் […]

{ 0 comments }

  “ஷஹீதாகும் பாக்கியத்தை ஏற்படுத்திக் தர ஜ.உ. சபையினர் முயற்சிக்கிறார்கள்” என்று எழுதி இருந்தீர்கள். முஸ்லிம்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காரணமாக உயிர் துறப்பதை நீங்கள் வரவேற்கிறீர்களா? இது தற்கொலைக்குச் சமம் அல்லவா? மு.முஹம்மது நஜீர் , P.B. 2672, புருனை.

{ 0 comments }

அந்நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாதஇதழ் ஜுன் 1987 – ஷவ்வால் 1407 ************************************ ஈமான் கொண்டவர்களே! நீங்கள் எல்லோருமே சேர்ந்து ஒன்றாக வெளியே செல்வது கூடாது. ஆனால் அவர்களில் ஒவ்வொரு வர்க்கத்தாரிலிருந்தும் ஒரு சிறிய கூட்டத்தார் சன்மார்க்க (ஞானத்தைக்) கற்றுக் கொள்வதற்காகவும் (வெளியேறி சென்ற அவர்கள்) (பின்னே தங்கியவர்களிடம்) திரும்பி வந்தால் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும் புறப்பட வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களைத் தீமையினின்றும்) பாதுகாத்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 9 : 122) *********************************** வேஷம் […]

{ 0 comments }