1987 டிசம்பர்

  ஐயம்: தொழுகையின் இருப்பில் அத்தஹிய்யாத் ஓதும்போது “கலிமா விரலை” அசைப்பதற்குரிய ஆதாரங்கள் ஹதீஸ்களில் இருக்கிறதா? விளக்கம் தேவை? A. முகம்மத் தாஸீன், நாகை, M.S. அப்துல் மாலீக், இலங்கை. ஷாஹுல் ஹமீத் , திருச்சி.

{ 0 comments }

  “துடுப்பு” 19-11-1987 அன்று ஒரு அன்னையின் மெளத்து, அளப்பரிய அன்பு கொண்ட அன்னையின் இறப்பு, அவர்களது மக்களை நிலைகுலையச் செய்தது. சொல்லொனா வேதனையடைந்தனர். அனைந்து விட்ட அன்னைக்கு ஆகிரத்தி(மறுமையி)ல் சுவனப்பதவி கிடைக்க நம்மால் என்ன செய்யவியலும் என யோசித்தனர். எதுவும் புலப்படவில்லை. இது போன்ற விஷயத்தில் மார்க்கத் தீர்ப்பு பெற அருகாமையிலுள்ள அரபிக்கல்லூரிக்கு சென்றனர்.

{ 0 comments }

அபூ ஜைனப், சென்னை. இஸ்லாமிய அழைப்புப் பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள வேண்டும்! இஸ்லாமிய அழைப்புப்பணி செய்பவர்கள் தங்களை எப்படி அழைக்க வேண்டும் என்பது பற்றி சர்ச்சை, பிணக்கு மிக வேகமாக நம்மிடையே பரவியுள்ளது வருந்தத்தக்கதே! இவ்விதம் நம்மிடையே ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும், என்பதை அல்லாஹ்வே தனது திருமறையில் கூறுவதைப் பாருங்கள்.

{ 0 comments }

“ஆலிம் – கவிஞர்” தேங்கை ஷர்புத்தீன் மிஸ்பாஹி ஆசிரியர், ஹிதாயத்துல் இஸ்லாம் அரபுப்பள்ளி, 15 – பெரிய மனாராத் தெரு, ஏரல் – 628 301 (சிதம்பரனார் மாவட்டம்) ***********************   நாள்: 7-3-87 அருளன்பு பண்பில் அளவற்ற அல்லாஹ் திருப்பெயர் போற்றித் திறப்பு!

{ 0 comments }

அபூஃபவ்ஜிய்யா மதித்திடுவீர்! மஹான் அப்துல்காதிர் ஜீலானி(ரஹ்) அவர்களை!! போலிகளை வீசிவிட்டு,போதனைகளை எடுத்திடுவீர்!!   (எனது சகோதரர்களே!) குர்ஆனையும், ஹதீஸையும், உங்கள் கண் முன் விரித்து வைத்துக்கொண்டு, அவற்றை ஆழ்ந்து சிந்தித்து, அவ்விரண்டினையும் ஆதாரமாகக் கொண்டே அமல் செய்யுங்கள்!

{ 0 comments }

அந்நஜாத் சிறப்பு நிருபர் அண்மையில் பெரம்பலூரில் நடந்த ஒரு மீலாது விழாவிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. ஒரு முழு நாள் விழா. ஆங்காங்கு சில நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் பத்துக்கும் மேற்பட்ட மெளலானா மெளலவிகளி(?)ன் பெயர்கள் முன்னும், பின்னும் பற்பல பட்டங்களுடன் பொறிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி தான் பொறுப்பேற்றுள்ள பதவிகளையும் அடைப்புக் குறிக்குள் குறிப்பிட்டிருந்தனர். குர்ஆன், ஹதீஸ் போதிக்க வேண்டிய ஆலிம்கள் என்ன பேசுகிறார்கள்! மீலாது விழாவை எப்படி சிறப்பிக்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் சிறிது அவர்கள் சொற்பொழிவை […]

{ 0 comments }

  கிரிட்டிக் அந்நஜாத்தில் தவறு இருப்பதாக எந்த பத்திரிகையில் எழுதப்பட்டாலும், அதை விருப்பு, வெறுப்பு இன்றி ஆய்ந்து சீர்தூக்கிப் பார்த்து, நியாயத்தை எடுத்து வைப்பதே துலாக்கோல் எனும் இப்பகுதியின் நோக்கம். மேலும் தவறு இருந்தால் திருத்திக்கொண்டு, அதை வெளியிடுவதும், இப்பகுதியின் மற்றொரு முக்கிய நோக்கமாகும். குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு நன்றி சொல்ல ‘அந்நஜாத்’ கடமைப்பட்டுள்ளது. குறைகளைச் சுட்டிக் காட்டுவோர், தயை கூர்ந்து சத்தியத்தை நிலைநாட்டும் நன்நோக்குடன் செயல்படுவார்களாக!

{ 0 comments }

  அபூமர்யம் புலவர் பூஸிரி தனது புர்தாவென்னும் புராணத்தில் நபி(ஸல்) அவர்கள் மீது புகழ்பாடும் பாணியில் மக்கள் தஞ்சம் புகுவதற்குத் தகுந்த வல்லவன் அல்லாஹ்தான், என்றிருக்கும் போது அச்சிறப்புத் தன்மை அவனது அடியாரும் தூதருமாகிய நமது நபி(ஸல்) அவர்களுக்கும் உண்டு என்ற கருத்தில், அல்லாஹ்விடம் முறையிடுவது போன்றே, நபி(ஸல்) அவர்களிடம் அவர் முறையிடும் அவல நிலையைப் பாருங்கள்!

{ 0 comments }

அபூ ருகையா நபிவழியே நல்வழி,நாயன் அன்பைப் பெறும் வழி! நபிவழி இன்றேல் நாயன் அன்பில்லை! (இத்திபாவும், இதாஅத்தும்) (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்போராயிருப்பின், என்னைப் பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாக இருக்கிறார்.

{ 0 comments }

அபூ அப்துர்ரஹ்மான் (நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருபை செய்பவனாகவும், இருக்கின்றான். (3:31)

{ 0 comments }

அபூஸலமா கடந்த சில இதழ்களில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த தெளிவான நிலை, நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின், நபி(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரத்தின் பெயரால், ஏற்பட்ட குழப்படிகள், இட்டுக்கட்டுகள், இடைச்செருகல்கள் இவற்றை எல்லாம் சரித்திர ஆதாரங்களைக் கொண்டு பார்த்தோம். ஆனால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்ந்லைகளுக்கிடையிலும், பலவீனமாக, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை இனம்காட்டி, உண்மை ஹதீஸ்களை நம்மளவில் கொண்டு வந்து சேர்க்க பெரும் முயற்சிகள் எடுத்துக் கொண்டவர்களை நாம் நினைவு கூறாமல் இருக்க முடியாது. அவர்கள் செய்த […]

{ 0 comments }

சமூகவியல்: புலவர் செ. ஜஃபர் அலீ, பி்லிட்., கும்பகோணம். “விசுவாசிகள் (யாவரும்) உறுதியாகச் சகோதரர்களே! ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் (ஒழுங்கையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தி) சுமுக நிலையை உண்டாக்குங்கள். மேலும் (இதில்) அல்லாஹ்வுக்குப் பயந்து நடவுங்கள் (இதனால்) அவனுடைய பேரருளைப் பெறலாம்” (அல்குர்ஆன் 49 :10)

{ 0 comments }

  உலகத்திற்கு அனுப்பப்பட்ட எல்லா சமுதாயத்தின் நபிமார்களும், தங்களை முஸ்லிம்கள் என்றே கூறி இருக்க, இஸ்லாத்திலுள்ள இன்றைய சிந்தனையாளர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தங்களை முஸலிம்கள் என்று அழைத்துக் கொள்ள திருப்தி கொள்ளாமல் தங்களுக்கென்று சமுதாயத்தில், தனிப்பெயரைக் கொண்டு அழைத்துக் கொள்கிறார்களே? இதன் காரணம் என்ன? B. ஷஹாபுதீன், திருச்சி -10.

{ 0 comments }

  1987 நவம்பர் நஜாத் VERY SUPER , தனக்கென ஒரு முத்திரையை பொறித்துள்ளது, நவம்பர் நஜாத் ஆழந்த கருத்துக்கள் – அறிவுலகம் ஏற்றுக் கொள்பவை – காலக் கண்ணாடி – கருவூலப் பெட்டகம், துணிந்த செயலாற்றல் – வாழ்க! வெல்க! தொடர்க! நஜாத் நின்று விடாது! நஜாத் வென்று விடும்! நஜாத்துக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுள்ளான். 

{ 0 comments }

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானீர்ரஹீம் அந் நஜாத் இஸ்லாமிய இலட்சிய மாத இதழ் டிசம்பர், 1987 – ரபீவுல் ஆகீர் 1408 ***************************** அன்பு நிறைந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்!) நஜாத் என்று தோன்றியதோ, அன்றே “ஸலபி” விவகாரமும் தொடங்கி விட்டது. “ஸலபி” எக்காரணத்தை முன்னிட்டும் நஜாத்தில் நுழையாது, என்ற உறுதி மொழியுடனேயே, நஜாத்தை உங்களிடையே வலம் வரச் செய்தோம்.

{ 0 comments }