2022 அக்டோபர்

பாவமும் மன்னிப்புத் தேடுதலு(தவ்பாவு)ம் எம். சையத் முபாரக் நமக்கு வேதனைகளும், துன்பங்களும், கஷ்டங்களும் வருவதற்குக் காரணம் நாம் அல்லாஹ்(ஜல்)வுடைய கட்டளைப்படியும், நபி(ஸல்) அவர்களுடைய வழிமுறைப்படியும் நடக்காது; அதற்கு மாறாக (குர்ஆன், ஹதீத் வழிமுறைகளுக்கு மாறுபட்டு) நடக்கும் காரணத்தினால்தான் என்பதைக் கீழ்க்காணும் வசனங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்; அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து விடுவீர்கள். மேலும், உங்கள் வலிமை குன்றி விடும். (அல்குர்ஆன் 8:46) […]

விமர்சனம்! விளக்கம்!! எம். சையத் முபாரக் விமர்சனம் : அன்புள்ள அந்நஜாத் ஆசிரியர் அவர்களுக்கு முஹம்மது இக்பாலின் அஸ்ஸலாமு அலைக்கும். இம்மாத (செப்டம்பர்) அந்நஜாத் இதழ் கண்டேன். அதில் தலையங்கம் “வழிகேடாய் மாறும் இயக்கங்களும், போலி சமுதாயத் தலைவர்களும்” என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. “திருவை நியூஸ்’ என்ற பெயரில் ஒரு இதழில் எழுதப்பட்டிருந்த செய்தியை வெளியிட்டிருந்தீர்கள். அந்த கட்டுரை உண்மையிலேயே இன்றைய இயக்கங்களின் அதன் தலைவர்களாய் இருப்பவர்களின் நிலையை படம் பிடித்துக் காட்டியிருந்தது. மகிழ்ச்சி! ஆனால் அக்கட்டுரையின் சில […]

சோதனைகளின்போது பொறுமை கொள்ள வேண்டும் அபூ அஸீம், இலங்கை மேலும் சோதனைகளின்போது பொறுமை யும், உறுதியும் வேண்டும்: (நபியே!) உமது குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! நீர் பொறுமையும், உறுதியையும் கொண்டிருப் பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்க வில்லை, ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம், இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத்தான். (20:132) சோதனைகளின்போது அழகிய பொறுமை வேண்டும்: எனவே நீர் அழகிய பொறுமையுடன் (மேலும்) பொறுப்பீராக. (70:5) இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே […]

ஆயிஷா(ரழி) அவர்களின் திருமண வயது என்ன? ஆலிம்களே! நபி(ஸல்) மீது அவதூறு பரப்பாதீர்கள்! அபூ ஹனிபா, புளியங்குடி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்: பல ஹதீஸ் புத்தகங்களில் நபி(ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா(ரழி) அவர்களை வயதிற்கு வராத நிலையில் 8 வயதில் திருமணம் முடித்து பின்னர் அவர்களின் 9 வயதில் இல்லற வாழ்க்கையில் ஈடுபடுத்தினார்கள் என்ற ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமான செய்திகளாக பதியப்பட்டு இருக்கிறது. குறிப்பாக புகாரி 3894, 5133 போன்ற ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. அவற்றில் சில… ஆயிஷா(ரழி) அறிவித்தார் […]

மன அமைதியை ஏற்படுத்தக்கூடிய அருமருந்தாகும்! அமீர், நிந்தாவூர், இலங்கை. பிறகு, விசுவாசங்கொண்டோரே! அத்துக்கத்திற்குப் பின் (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான். உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணிவிட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர். (அதனால்) அவர்கள் கூறினார்கள். இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா? (என்று, அதற்கு) நிச்சயமாக இக் […]

முஸ்லிம் அறிஞர்களின் ஃபத்வா! அபூ அப்தில்லாஹ் முஸ்லிம்கள் அமெரிக்க நாட்டு பொருட்களை வாங்கக்கூடாது என்று மார்க்க அறிஞர்கள் சிலர் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவிப்பு முஸ்லிம்களுக்கு நிறைந்த பலன் அளித்திருப்பதாக முஸ்லிம் பத்திரிக்கைகள் ஆகா, ஓகோ என செய்திகள் வெளியிடுகின்றன. முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் சாபக்கேடு தங்களது விவகாரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளை என்ன? நபி(ஸல்) அவர்களின் நடைமுறை என்ன? என்று முஸ்லிம்கள் பார்ப்பதில்லை. தாங்கள் அறிஞர்களாக மதிப்பவர்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்களோ, அதுதான் வேதவாக்கு என்று […]

இஸ்லாமிய  சமுதாயத்தின் உடனடித் தேவை! முஸ்லிம்களாகிய நாம் எத்தகைய பயங்கரவாத பாஜக சங்கிகளானாலும் சரி! அவர்களது உண்மை சொரூபத்தை உலகறியச் செய்யும்போது அது நியாயமாக இருந்தாலும் நாம் முஸ்லிமாக இருந்துகொண்டு அதை விமர்சிக்கும்போது இயல்பாகவே முஸ்லிம்கள் மீது பகை இருக்கின்ற காரணத்தினால் அதன் விளைவு பயங்கரவாத பாஜகவுக்கே அப்பாவி இந்துக்களின் ஆதரவு அமோகமாகப் பெருகத்தான் செய்யும். அந்த அளவுக்கு ஊடகங்கள் பத்திரிக்கைகள் வாயிலாக இஸ்லாமிய வெறுப்பு சங்கி களால் நாடு முழுவதும் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. எனவே நாம் […]