அத்வானியின் அலறலின் ரகசியம் என்ன?

in 2008 டிசம்பர்,பொதுவானவை

அத்வானியின் அலறலின் ரகசியம் என்ன?

பா.ஜ.க.வால் இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அத்வானி. நாட்டின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் நீதியையும், நியாயத்தையும், தர்மத்தையும் கட்டிக்காக்கும் மனவலிமையும் உறுதியுமிக்கவராக இருக்க வேண்டும். இந்த உயர் ஒழுக்கம் அத்வானியிடம் இருக்கிறதா? என்பதே கேள்வி.

பாபர் மஸ்ஜித் இடிப்பு விவாகரத்தில் திட்டம் தீட்டியவர். ர(த்)தயாத்திரை என நாடு முழுவதும் கரசேவகர்களை ஒன்று திரட்டியவர். பாபர் மஸ்ஜிதை இடிக்கும் நேரத்தில் பக்கத்திலிருந்து கொண்டே கரசேவகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தவர் என்பது நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த உண்மை.

உண்மையில் பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவர். ஆனால் ஆட்சித் துறைகளில் பல நீதிதுறையினரில் சிலரும் காவி மனம் படைத்தவர்களாக இருப்பதால். அத்வானி அவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அத்வானி இப்போது மாலோகான் குண்டு வெடிப்பில் R.S.S. அமைப்புகளில் ஒன்றைச்சேர்ந்த சந்நியாஸினி, ஒருத்தி உரிய ஆதாரங்களுடன் சிக்கி காவல் துறையினரின் விசாரணையில் இருக்கிறார். இந்த நிலையில் காவல் துறையினர் அவளைத் துன்புறுத்துவதாக ஊடகங்கள் மூலம் செய்திகள் பரப்பியும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து போராடியும் அலறியும் வருகிறார் அத்வானி.

இதுவரை முஸ்லிம்களில் எக்குற்றமும் செய்யாத பல அப்பாவி ஆண்களும், பெண்களும் கொல்லப்பட்டும். துன்புறுத்தப்பட்டும், உயிர் ஆபத்தே ஏற்படும் வகைியல் சித்திரவதை செய்யப்பட்டும் உள்ள நிலை அவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த அத்வானி, ஊடகங்களுக்கு முஸ்லிம் தீவிரவாதி, இஸ்லாமிய தீவிரவாதம் என செய்திகளைக் கொடுத்துக் கொண்டிருந்த அத்வானி. இப்போது காவிவெறி கொண்ட ஒரு பெண், காவல்துறை விசாரணையில் சிக்கியவுடன் இவ்வாறு அலறுவது ஏன்? இப்படிப்பட்ட ஓரவஞ்சனையுள்ள, ஹிந்து வெறிகொண்ட அத்வானி நாட்டின் பிரதமரானால் நாடு என்னவாகும்? இந்திய நாடு சுடுகாடாகாதா? மக்கள் சிந்திக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு கொடுமை இழைக்கப்படும்போது கண்டு ரசித்த அத்வானி, பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர். ஆட்சியிலுள்ள காங்கிரஸ் கூட்டணியிலும் காவி மனம் படைத்தவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் குண்டு வெடிப்பு இடம்பெறும் போதும் ஏதாவதொரு முஸ்லிம் அமைப்பின் பெயரைச் சொல்லி இஸ்லாமிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள் என ஊடகங்களுக்கு செயதிகள் கொடுத்து மகிழ்ந்து, முஸ்லிம் சமூகத்தைக் கொச்சைப் படுத்திய உள்துறை மந்திரி. இப்போது ஓர் இந்து வெறிப்பெண் காவல்துறையில் சிக்கி விசாரணை நடக்கும் போது இப்படி ஒரு சில சம்பவங்களைக் கொண்டு ஒரு சமூகத்தைக் கொச்சைப் படுத்துவது சரியல்ல என்று அழுது வடிந்ததாக செய்தி. இது எதைக் காட்டுகிறது? இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கூட்டணியிலும் மந்திரிகளிலும், அரசு அதிகாரிகளிலும் உளவுத் துறை காவல்துறை அதிகாரிகளிலும் காவிவெறி கொண்டவர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பதைக் காட்டவில்லையா?

இதை உணர்ந்த பிரதமர் சமீபத்தில் உளவுத்துறை மீதும். காவல்துறை மீதும் அவர்கள் தங்கள் பணிகளை முறையாகச் செய்யவில்லை என்று குற்றப்படுத்தியதை நாடு அறியும். மதம், சாதி, இனம் சாராத, மனிதநேயம் படைத்த அதிகாரிகளைக் கொண்டு, நாட்டில் நடந்தேறியுள்ள குண்டு வெடிப்புகள், நாசகார வேலைகள் இவை பற்றி முறையாகப் புலன் விசாரணை செய்யப்பட்டால் இவற்றில் பெரும்பாலானவை R.S.S. மற்றும் அதன் கிளை அமைப்புகளின் கைங்கர்யம். இவற்றில் பலவற்றை பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி நன்கு அறிவார். அந்த அச்சத்தில்தான் அதாவது சந்நியாஸினியின் வாக்குமூலத்தில் சிக்கும் சிலரின் வாக்குமூலத்தில் தானும் காட்டிக் கொடுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் காவல்துறை விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடன், சந்நியாசினி பெண் துன்புறுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி பரப்புகிறார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் குண்டு வெடிப்புகளால் இந்தியாவில் முஸ்லிம்கள், கெட்டப் பெயரை அடைவதைத் தவிர வேறு எந்த லாபமும் இல்லை. ஆட்சியைப் பிடிக்கவும் அவர்களால் முடியாது. மேலும் ஒரே நாளில் பல இடங்களில் குண்டுகள் வைக்க காவல் துறையினரில் சிலரின், இராணுவத்துறையில் சிலரின் ஒத்துழைப்பும் கிடைக்காது. எனவே முஸ்லிம்களுக்கு அது சாத்தியமேயில்லை.

காவித்துறையினரே இப்படிப்பட்ட காவல்துறை, இராணுவத்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நாடெங்கும் குண்டுகளை வைத்துவிட்டு அந்தப் பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, ஹிந்து மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சியில் அமர வாய்ப்புண்டு. எனவே காவி மனம் கொண்டவர்களே நாட்டில் குண்டு வெடிப்புகளை றடத்தி வருகின்றனர் என்று முன்பு குற்றப்படுத்தினோம். அது இப்போது உண்மையாகி வருகிறது. மாலோகான் குண்டுவெடிப்பில் V.H.P. தலைவர் தொக்கடியாவுக்கு தொடர்பு இருப்பதாக புலன் விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ் கட்சி, தங்கள் கட்சியிலிருந்தும், வெளியிலிருந்தும் வரும் நெருக்குதல்கள், பயமுறுத்தல்கள்,ஆதிக்க சக்திகளின், பெரும், பெரும் தனவந்தர்களின் ஆசை வார்த்தைகளில் சிக்கி, நீதித்துறையில் உள்ள சில நீதிபதிகளின் காவி வெறி சிந்தனைக்கு உடன்பட்டு புலன் விசாரணையின் சரியான போக்கை திசை திருப்பி அதை முனை மழுங்கச் செய்யக்கூடாது. நடுவண் அரசு தனது விஷேச பலனாய்வுத் துறையையும் (CBCID) களத்தில் இறக்கி முறையாகவும், நேர்மையாகவும் நடுநிலையோடும் புலன் விசாரணையைத் தொடர்ந்தால் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் அத்வானி முதல் R.S.S.ன் பல முக்கிய பிரமுகர்கள் வரை இக்குண்டு வெடிப்புகளுக்கு மூளையாக இருந்து செயல்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வரும். அவர்களின் போலி ஜனநாயக முகத்திரை கிழியும். அவர்களது இட்லரின் பாஸிச முகமும், ஆரிய காவி முகமும் வெளிப்படும் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிவாகை சூட அது பெரிய வாய்ப்பாக அமையும்.

Previous post:

Next post: