ஐயமும்! தெளிவும்!!

ஐயம்: குர்ஆனை ஒளூவில்லாமல் தொடுவது கூடுமா, கூடாதா? ஆ.முஹம்மத் அல்தாஃப்-திருச்சி.
தெளிவு: அல்லாஹ் திருகுர்ஆனில் கீழ் காணும் திருவசனங்களில் பின்வருமாறு கூறுகிறான்.

‘நிச்சயமாக இது மிகவும் கண்ணியம் வாய்ந்த குர்ஆனாகும். பாதுகாக்கப்பட்ட ஏட்டில் (அது) இருக்கிறது’

‘பரிசுத்தமானவர்களைத் தவிர (வேறெ வரும்) அதனைத் தொடமாட்டார்கள்.’

(56:77, 78,79)

நபி(ஸல்) அவர்கள் யமன் வாசிகளுக்கு எழுதிய கடிதமொன்றில் ‘குர்ஆனைப் பரிசுத்த மானவரன்றி, மற்றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதியுள்ளார்கள்.

அறிவிப்பவர்:அபூபக்ருபின் முஹம்மதுபின் அம்ரு பின் ஹஜ்மு(ரழி) நூல்கள்: நஸயீ, பைஹகீ, தாரகுத்னி

மேற்காணும் ஆயத்தில் அதைத் தொட மாட்டார்கள் எனும் வாசகமிருக்கிறது. அதை என்று சொல்லப்பட்டிருப்பது, ‘பாதுகாக்கப்பட் ஏட்டை’ என்பதுதான் பொருள் என்று இப்னு அப்பாஸ்(ரழி) ஷுஅபி, லஹ்ஹாக், ஜைதுபின் அலி, முஅய்யிதுபில்லாஹ், தாவூத், இப்னு ஹஜ்மு, ஹம்மாதுபின் சுலைமான் ஆகிய திருகுர்ஆன் விரிவுரையாளர்கள் வியாக்;யானம் செய்வதுடன் ஒளூ இல்லாதவர் குர்ஆனைத் தொடுவது ஆகும் என்றும் கூறுகிறார்கள்.

காரணம், மேற்காணும் திருவசனங்களில் 77வது வசனத்தில் குர்ஆனையும், 78வது வச னத்தில் பாதுகாக்கப்பட்ட ஏட்டையும் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதால் அதை என்னும் வாசகம் பாதுகாக்கப்பட்ட ஏட்டைத்தான் குறி ப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

அடுத்து, நபி(ஸல்) அவர்கள் எழுதிய கடி தத்தில், ‘குர்ஆனைப் பரிசுத்தமானவரன்றி மற் றெவரும் தொடமாட்டார்’ என்று எழுதி யிருப்பதால், நபி(ஸல்) அவர்களே பாதுகாக் கப்பட்ட ஏட்டை என்று பொருட்கொள்ளாது குர்ஆனை என்று தானே பொருள் கொண்டி ருக்கிறார்கள் எனலாம்.

அப்படி என்றால் அவர்கள் தொட’வேண் டாம்’ என்று கூறாது, ‘தொடமாட்டார்’ என்று தானே சொல்லியிருக்கிறார்கள். அவ்வாறி ருக்க தொடமாட்டார் என்னும் வார்த்தைக்கு தொட வேண்டாம் என்று பொருள் கொள்வது எங்கனம் பொருந்தும்?

அவ்வாறே ஒரு வாதத்திற்காக அதை ஏற் றுக்கொண்டாலும், அவர்களின் அந்த வாசகம் குர்;ஆனைப் பரிசுத்தமானவர்தான் தொட வேண்டும் என்பதைப் பொதுவாகக் காட்டுகி றதே தவிர ஒளூவில்லாதவர் அதைத் தொடக் கூடாது என்று குறிப்பிட்டுக் காட்டுவதாக அது அமைந்திருக்கவில்லை.

ஏனெனில் பரிசுத்தமானவர் என்ற வார் த்தை பல கருத்துக்களைக் கொண்ட பொதுச் சொல்லாக அமைந்திருக்கிறது. அதற்கு (1) ஒளூ செய்து சுத்தமானவர்ளூ (2) கையை மட் டும் கழுவி சுத்தமானவர் (3) குளித்து சுத்தமா னவர் (4) ஷிர்க் (இணைவைத்தல்) என்னும் அசுத்தத்தை அகற்றி முஸ்லிம் என்ற வகை யில் சுத்தமானவர் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் கொள்ள இடமிருப்பதால் ஒளூ செய்து பரிசுத்தமானவர் என்றும் மட்டும் பொருள் கொள்வதற்கு தக்க ஆதாரம் குர்ஆ னிலோ, ஹதீஸிலோ இருந்ததாக வேண்டும். அவ்வாறிருப்பதாகத் தெரியவில்லை. அல்லா ஹ்வும், அவனது ரசூலும் பொதுவாகச் சொல் லியிருக்கும் ஒரு வார்த்தைக்கு, அவனோ அல்லது அவனது ரசூலோ அதற்கு குறிப் பிட்டு விளக்கம் தராதிருக்கும்பொழுது, தக்க ஆதாரமின்றி அதற்கு இதுதான் விளக்கம் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கு யாருக்கு அதிகாரமிருக்கிறது. ஒருவருக்கும் அதிகாரமில்லை.

ஆகவே மேற்காணும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே ஒருவர் ஒளூயி ல்லாது குர்ஆனைத் தொட்டால், அவ்வாறு அவர் தொடுவதைத்தடுப்பதற்கு, மார்க்க ரீதியாக நம்மிடம் எவ்வித ஆதாரமும் கிடையாது.

************************************


ஐயம்: பஜ்ரு தொழுகைக்கு முன் உள்ள சுன்னத் இரண்டு ரகாஅத்களையும் அவசியம் தொழ வேண்டுமா?முஹம்மது ரபி, ஊ.N.பாளையம்.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள்(சுன்னத்) நஃபிலான தொழுகைகளில் அனைத்தைப் பார்க்கினும் பஜ்ருடைய இரண்டு ரகாஅத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள் ளார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்.

பஜ்ருக்கு முன்னால் தொழும் இரண்டு ரகாஅத்துகளும், எனக்கு அகில உலகத்தை விட மிகவும் விருப்பமுடையவையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அஹ்மத்

கைஸ் பின் உமர்(ரழி) அவர்கள் கூறுகி றார்கள், நான் சுப்ஹூ தொழச் சென்றேன். நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழ வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவர்க ளோடு சேர்ந்து பர்ழைத் தொழுதுவிட்டு, பின்னர் நான் தொழாதிருந்த பஜ்ருடைய சுன்னத் இரண்டு ரகாஅத்துகளையும் எழுந்து தொழுதேன். அவ்வழியாகச் சென்றுகொண்டி ருந்த நபி(ஸல்) அவர்கள் என்ன தொழுதீர்? என்று என்னை கேட்க, ‘நான் விடுபட்ட சுன் னத்தைத் தொழுதேன்’ என்று கூறினேன்- அதற்கவர்கள் எதுவும் சொல்லாது போய் விட்டார்கள். அறிவிப்பவர்: கைஸ்பின் உமர்(ரழி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, அஹ்மத்.

மேற்கண்ட ஹதீஸ்களில் பஜ்ருடைய சுன் னத்தின் மகத்துவத்தையும், ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அதில் உடனே சேர்ந்து கொண்டு, பின்னர் விடுபட்ட அந்த சுன்;னத் தைத் தொழ வேண்டும் என்பதையும் காணு கிறோம்.

******************************

ஐயம்: பர்ழான தொழுகை தொழுத அதே இடத்தில் மீண்டும் மற்ற தொழுகைகளைத் தொழுவது சரியா? சிறிது நகர்ந்து நின்றுதான் தொழ வேண்டுமா?

தொழுது முடிந்த பின் சற்று முன்னால் சென்று திரும்பிச் செல்வது பற்றி ஹதீஸில் ஆதாரமுண்டா? யு.முஹம்மத் பிலால், சீருடையார்புரம்.

தெளிவு: இமாமாக உள்ளவர் தொழவைத்த அதே இடத்திலிருந்து சிறிதும் நகராமல் மீண் டும் மற்றத் தொழுகைகளை தொழுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். அறிவிப்பவர்:முகீராபின் ஷுஃபா(ரழி) நூல்: இப்னுமாஜா

மேற்கண்ட ஹதீஸில் இமாமுக்கு மட்டும் தான் அவ்வாறு கூறினார்களே தவிர, பொது வாக அனைவரும் நகர்ந்து நின்று தொழ வேண்டும் என்பதில்லை.

தொழுது முடிந்த பின் சிறிது முன்சென்று திரும்பிச் செல்வதற்கு ஹதீஸில் ஆதாரம் கிடையாது.

******************************

ஐயம்: பயணத்தின் போது எந்தெந்த தொழு கைகளை ஜம்உ (இணைத்து) தொழுகலாம்? மு.ளு. ஹாஜாமைதீன், விருதுநகர்.

தெளிவு: பயணத்தின் போது ளுஹ்ரையும், அஸ்ரையும் அவ்வாறே மஃரிபையும், இஷா வையும் முற்படுத்தியோ, அல்லது பிற்படுத் தியோ தொழலாம்.

நபி(ஸல்) அவர்கள் தபூக் யுத்தத்தின் போது, அவர்களின் பயணத்திற்கு முன் சூரி யன் சாய்ந்து விட்டால், ளுஹ்ருடன் அஸ்ரை முற்படுத்தி தொழுவார்கள்.

சூரியன் சாயுமுன் பிரயாணம் செய்தால் அஸ்ருடன் ளுஹ்ரை பிற்படுத்தி தொழு வார்கள்.

இவ்வாறே அவர்களின் பிரயாணத்திற்கு முன் சூரியன் மறைந்துவிட்டால் மஃரிபுடன் இஷாவை முற்படுத்தி தொழுவார்கள். சூரி யன் மறையுமுன் பிரயாணம் செய்தால் மஃ ரிபை இஷாவுடன் பிற்படுத்தி தொழுவார்கள். அறிவிப்பர்:முஆத்(ரழி) நூல்கள் :அபூதாவூத், திர்மிதி.

மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டுதான் ஜும்உ செய்வதும், அதில் முற்படுத்துவதும் பிற்படுத்துவதும் ஆகும் என்பதை அறிகிறோம்.

*************************************

ஐயம்: அ) கணவன் மனைவியின் ஜனாஸா வையும் மனைவி கணவனின் ஜனாஸாவை யும் குளிப்பாட்டுவது கூடுமா?

ஆ) நபி(ஸல்) அவர்களின் ஜனாஸாவை யும், அன்னை ஆயிஷா(ரழி)அவர்களின் ஜனாஸாவையும் குளிப்பாட்டியவர்கள் யார்?

இ) தல்கீன் ஓதவேண்டுமா?

இப்னு சுல்தான், சிங்கப்பூர்.

தெளிவு : அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ‘நான் எனது காரியத்தில் கால் எடுத்து வைத்துவிட்டால் ஒருபோதும் பின்னடைவதில்லை. நபி(ஸல்) அவர்களின் ஜனாஸாவை அவர்களின் துணைவியாரே யன்றி, மற்றெவரும் குளிப்பாட்டவில்லை.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி)

நூல்: இப்னுமாஜா

நபி(ஸல்) அவர்கள் பகீஉவிலிருந்து வீட் டிற்கு வந்தார்கள். அப்பொழுது நான் தலை வலியின் காரணமாக ‘வரஃஸாஹ்’-‘என் தலையே’! (என் தலையே) என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர்கள் ‘நானும் என் தலையே!’ (என்று கூறுகிறேன்) என்று சொல்லி விட்டு, ஆயிஷாவே! நீர் எனக்கு முன்னரே மரணமாகிவிட்டீரானால் உனக்காக நான் முன்நின்று உன்னைக் குளிப்பாட்டி, கஃபனிட்டு, தொழவைத்து உன்னை நல் லடக்கம் செய்து விட்டால், உமக்கொரு சிர முமிராதே’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:அன்னை ஆயிஷா(ரழி)

நூல்கள்: புகாரி, இப்னுமாஜா

மேற்கண்ட இரண்டு ஹதீஸுகளின் வாயி லாக, முதல் ஹதீஸில் நேரிடையாக மனை வியே தனது கணவரைக் குளிப்பாட்டியத ற்கும், இரண்டாம் ஹதீஸில் நீர் எனக்கு முன் மரணமாகிவிட்டால் நான் முன் நின்று உன் னைக் குளிப்பாட்டி….. என்று நபி (ஸல்) அவர் களே கூறியிருப்பதால் அவ்வாறு கணவன் மனைவியைக் குளிப்பாட்டுவது ஆகும் என்பத ற்கும் ஆதாரம் உண்டு என்பதை அறிகிறோம்.

நபி(ஸல்) அவர்களை அவர்களின் துணை வியரே குளிப்பாட்டியுள்ளார்கள். அன்னை ஆயிஷா(ரழி) அவர்களின் வரலாற்றில் அன்னை அவர்களுக்கு அபூஹுரைரா(ரழி) தொழ வைத்தார்கள் என்பது மட்டும் தான் காணப்படுகிறது. குளிப்பாட்டியவர் பற்றிய விளக்கம் எதுவு மில்லை.

தல்கீன் ஓதுவது பற்றி ஹதீஸின் அடிப் படையில் எவ்வித ஆதாரமும் கிடையாது.

*************************************

ஐயம்: குழந்தை பிறந்தவுடன் அதன் காதில் பாங்கும், இகாமத்தும் ஓதுவது நபி(ஸல்) அவர்களின் முறையா? ஹதீஸுடன் விளக்கவும். ஷர்புத்தீன்-ஆ.மு.கோட்டை.

தெளிவு: பாத்திமா(ரழி) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை பிரசவித்தபோது, நபி(ஸல்) அவர்கள் ஹஸன்(ரழி) அவர்களின் காதில் தொழுகைக்கு கூறப்படும் பாங்கை கூறும் பொழுது நான் பார்த்தேன். அறிவிப்பவர்: அபூ ராஃபிஉ(ரழி) நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்.

மேற்கண்ட அறிவிப்பில் பாங்கு சொல்வது குறித்து மட்டும் கூறப்பட்டிருக்கிறது.

பிறந்த குழந்தையின் வலது காதில் பாங் கும், இடது காதில் இகாமத்தும் கூறும்படி நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள். அறிவிப்பவர்: ஹுஸைன்(ரழி) நூல்: முஸ்னத் அபூயஃலா மூஸிலி

நபி(ஸல்) அவர்களின் சுன்னத் எனக் கொண்டு பாங்கும் இகாமத்தும் பிறந்த குழந்தையின் காதில் சொல்வது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இந்த இரு ஹதீஸ்களின் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு இருப் பதால் இவற்றை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியாது.

Previous post:

Next post: