மாண்புமிகு முதல்வரின் முக்கிய கவனத்திற்கு!

in 2010 மார்ச்,தலையங்கம்

  மாண்புமிகு முதல்வரின் முக்கிய கவனத்திற்கு!

மாண்புமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்களே! நல்வாழ்த்துகள்!
உங்களுக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்தே நீங்கள் தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ் மொழிக்கும் மிக நீண்டகாலமாகப் பெருந் தொண்டாற்றி வருவதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. அந்த அளவு ஓய்வுக்கு ஓய்வு கொடுத்து விட்டு அருந்தொண்டாற்றி வருகிறீர்கள். கடந்த சுமார் 70 ஆண்டுகளாக மக்கள் சேவையிலும் 50 ஆண்டுகளாக சட்டமன்ற சேவையிலும் உங்களைப்போல் வேறு யாரும் தொண்டாற்றி இருக்க முடியாது. நீண்ட வயது உங்களுக்கு அப்படியயாரு வாய்ப்பைக் கொடுத்துள்ளது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை வெற்றிகரமாக முடிக்க மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறீர்கள். “ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் ஆணைப்படி ஏழைகளுக்காகப் பெரும் அளவில் பணியாற்றி வருகிறீர்கள்.

ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, மலிவு விலையில் சமையல் பொருட்கள், இலவச கேஸ் அடுப்பு, சிலிண்டர், இலவச தொலைக்காட்சிப் பெட்டி, மாணவ மாணவியருக்கு இலவச சைக்கிள், நோட், புத்தகங்கள், இலவச வீடுகள், வீட்டு மனைப் பட்டாக்கள், இலவச உயிர் காப்பீட்டுத் திட்டம் என உங்களின் ஏழைகளுக்கான உதவித் திட்டங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன.

தமிழுக்காகவும் பெரும் சேவைகள் செய்து தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளீர்கள். இதற்காகக் கடினமான உழைப்பை மேற்கொண்டீர்கள். உங்களின் நீண்ட சேவைக்காக தமிழக மக்கள், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் உங்களை இன்று வாயாரப் புகழ்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பரிசுகள், பட்டங்கள், விருதுகள், கிரீடங்கள், கோல்கள் என புகழ் மழையில் நனைந்து வருகிறீர்கள். அனைவருக்கும் மகிழ்ச்சி தான்.
ஆனாலும் இந்தப் பெரும் புகழ் தமிழுள்ள காலமெல்லாம், தமிழ் மக்கள் உள்ள காலமெல்லாம் மங்காமல் நீடிக்க வேண்டுமே என ஆசையுறுகிறேன். அதற்கு மாறாக இன்றைய தமிழக நிலை மிகமிக வேதனைத் தரத் தக்கதாக இருக்கிறது. இன்று ஊடகங்களில் மிக மிக அதிகமாக வரும் செய்திகள் கொலை, கொள்ளை, கற்பழித்துக் கொலை, போதையால் விபத்துகள் மூலம் பெரும் உயிர்ச்சேதம், லஞ்சம், ஊழல், ஏமாற்று, மோசடி, வன்முறை, தீவிரவாதம் இப்படி மனதை வாட்டும் துர்ச்செய்திகளே பெருகி வருகின்றன. நீங்கள் வாலிபராக இருந்த காலத்தில் ஊடகங்களில் இப்படிப்பட்ட செய்திகள் அதிகமாக வந்தனவா? இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

அப்படியானால் மனதை வாட்டும், மனித குலத்தைப் பெரும் துன்பத்தில் சிக்க வைக்கும் இப்படிப்பட்ட துன்ப நிகழ்வுகள் நாயளாரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகி வரும் காரணம் என்ன?

கலைஞர் ஐயா அவர்களே இதை நீங்கள் நிதானமாகச் சிந்திப்பீர்களானால் காரணம் உங்களுக்கே புரியும். மிக நீண்ட காலமாக, வாலிபர்களுக்கு குடி என்றால் என்ன என்று தெரியாதிருந்த 1972ல் நீங்கள்தான் மது விலக்கை நீக்கி தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப் படுத்தினீர்கள். அதற்கு அப்போது நீங்கள் சொன்ன காரணம் அப்பாவி ஏழைகள் கள்ளச் சாராயம் சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. கள்ளச் சாராயத்தால் ஏற்படும் சாவைத் தடுக்கவே மதுவிலக்கை நீக்கினேன் என்று மக்களுக்கு சமாதானம் சொன்னீர்கள். நீங்கள் தமிழக மக்களுக்குக் குடிக்க அனுமதி கொடுத்தீர்கள். அம்மா அரசோ, மது வியாபாரத்தை தானே தொடங்கி (டாஸ்மாக்) வைத்தது. மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மது வியாபாரத்தை பல்லாயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்று காரணம் கூறி தொடர்ந்து வருகிறீர்கள்.

விளைவு! எந்தக் கள்ளச் சாராயம் கொண்டு அப்பாவி ஏழைகள் செத்து மடிகிறார்கள் என காரணம் கூறி மது விலக்கை நீக்கினீர்களோ, அந்தக் காரணம் உண்மையாயிற்றா? அப்பாவி ஏழைகள் உயிர் பாதுகாக்கப்பட்டதா? இல்லையே! இப்போது கள்ளச் சாராயத்தினாலும், நீங்கள் வியாபாரமாக்கும் நல்லச் சாராயத்தாலும் (டாஸ்மாக்) அப்பாவி ஏழைகள் தினம், தினம் செத்து மடிகிறார்கள். ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விதவைகளாகிறார்கள்; பல்லாயிரம் சிறு குழந்தைகள் அனாதைகளாக ஆகிறார்கள். அன்று கள்ளச் சாராயத்தால் செத்து மடிந்தவர்களை விட அதிகமாக நல்ல சாராயத்தால் செத்து மடிகிறார்கள். குடித்துவிட்டு போதை தலைக்கேறி வீதிகளில் வீழ்ந்து கிடப்போரை கணக்கெடுக்கச் சொல்லுங்கள். கணக்குத் தெரிய வரும்.

கலைஞர் ஐயா அவர்களே ஒரு புள்ளி விபரத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மதுவிலக்கை அமுல் படுத்தி குடிப்பவர்களுக்கு மரண தண்டனையையே விதித்தாலும் 10% மக்களை குடிப்பதிலிருந்து யாராலும் தடுக்க முடியாது. அதேபோல் சாராயம் தெருவெல்லாம் வழிந்து ஓடும்படிச் செய்தாலும் 10% மக்கள் நிச்சயம் குடிக்க மாட்டார்கள். அதற்கு மாறாக 80% மக்கள் மதுவிலக்கு அமுலில் இருந்தால் குடிக்க மாட்டார்கள். குடிப்பதை அரசு அனுமதித்தால் குடிப்பார்கள். இதுதான் எதார்த்த நிலை. சதவிகிதத்தில் சிறிது மாறுபடலாம். ஐயா அவர்களே நீங்கள் 10% மக்களை காப்பதாகச் சொல்லி 80% மக்களை குடிகாரர்கள் ஆக்கி இருக்கிறீர்கள். கேடுகெட்ட கூத்தாடிகளின் சினிமாவால் இன்று 10 வயது பாலகர்கள் முதல் புகை, குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடிமைப்பட்டு வருகிறார்கள்.

அப்படியானால் மனதை வாட்டும், மனித குலத்தைப் பெரும் துன்பத்தில் சிக்க வைக்கும் இப்படிப்பட்ட துன்ப நிகழ்வுகள் நாயளாரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பெருகி வரும் காரணம் என்ன?

கலைஞர் ஐயா அவர்களே இதை நீங்கள் நிதானமாகச் சிந்திப்பீர்களானால் காரணம் உங்களுக்கே புரியும். மிக நீண்ட காலமாக, வாலிபர்களுக்கு குடி என்றால் என்ன என்று தெரியாதிருந்த 1972ல் நீங்கள்தான் மது விலக்கை நீக்கி தமிழக மக்களில் பெரும்பாலோருக்கு குடிப்பழக்கத்தை அறிமுகப்படுத்தினீர்கள். அதற்கு அப்போது நீங்கள் சொன்ன காரணம் அப்பாவி ஏழைகள் கள்ளச் சாராயம் சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. கள்ளச் சாராயத்தால் ஏற்படும் சாவைத் தடுக்கவே மதுவிலக்கை நீக்கினேன் என்று மக்களுக்கு சமாதானம் சொன்னீர்கள். நீங்கள் தமிழக மக்களுக்குக் குடிக்க அனுமதி கொடுத்தீர்கள். அம்மா அரசோ, மது வியாபாரத்தை தானே தொடங்கி (டாஸ்மாக்) வைத்தது. மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த மது வியாபாரத்தை பல்லாயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகிறது என்று காரணம் கூறி தொடர்ந்து வருகிறீர்கள்.

விளைவு! எந்தக் கள்ளச் சாராயம் கொண்டு அப்பாவி ஏழைகள் செத்து மடிகிறார்கள் என காரணம் கூறி மது விலக்கை நீக்கினீர்களோ, அந்தக் காரணம் உண்மையாயிற்றா? அப்பாவி ஏழைகள் உயிர் பாதுகாக்கப்பட்டதா? இல்லையே! இப்போது கள்ளச் சாராயத்தினாலும், நீங்கள் வியாபாரமாக்கும் நல்லச் சாராயத்தாலும் (டாஸ்மாக்) அப்பாவி ஏழைகள் தினம், தினம் செத்து மடிகிறார்கள்.

ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விதவைகளாகிறார்கள்; பல்லாயிரம் சிறு குழந்தைகள் அனாதைகளாக ஆகிறார்கள். அன்று கள்ளச் சாராயத்தால் செத்து மடிந்தவர்களை விட அதிகமாக நல்ல சாராயத்தால் செத்து மடிகிறார்கள். குடித்துவிட்டு போதை தலைக்கேறி வீதிகளில் வீழ்ந்து கிடப்போரை கணக்கெடுக்கச் சொல்லுங்கள். கணக்குத் தெரிய வரும்.

கலைஞர் ஐயா அவர்களே ஒரு புள்ளி விபரத்தைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மதுவிலக்கை அமுல்படுத்தி குடிப்பவர்களுக்கு மரண தண்டனையையே விதித்தாலும் 10% மக்களை குடிப்பதிலிருந்து யாராலும் தடுக்க முடியாது. அதேபோல் சாராயம் தெருவெல்லாம் வழிந்து ஓடும்படிச் செய்தாலும் 10% மக்கள் நிச்சயம் குடிக்க மாட்டார்கள். அதற்கு மாறாக 80% மக்கள் மதுவிலக்கு அமுலில் இருந்தால் குடிக்க மாட்டார்கள். குடிப்பதை அரசு அனுமதித்தால் குடிப்பார்கள். இதுதான் எதார்த்த நிலை. சதவிகிதத்தில் சிறிது மாறுபடலாம். ஐயா அவர்களே நீங்கள் 10% மக்களை காப்பதாகச் சொல்லி 80% மக்களை குடிகாரர்கள் ஆக்கி இருக்கிறீர்கள். கேடுகெட்ட கூத்தாடிகளின் சினிமாவால் இன்று 10 வயது பாலகர்கள் முதல் புகை, குடிக்கு அடிமையாகி வருகிறார்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அடிமைப்பட்டு வருகிறார்கள்.

கெல்லாம் வழிவகுக்கும் முகத்தை மூடும் காட்டு மிராண்டிச் சட்டத்தை, முகத்தில் தான் அழகிருக்கிறது என்று இவர்களாகச் சொல்லிக் கொண்டு நடைமுறைப்படுத்துவதால், நடிகைகள் விபச்சாரத்தில் சிக்கி, அந்த முகமூடி பர்தாவை அணிந்து கொண்டு நீதிமன்றம் வரும் மக்களை ஏமாற்றும் காட்சியை அடிக்கடி பார்த்து வருகிறோம்.

முன்னாள் நடிகர்களாக இருந்த, முஸ்லிம் அல்லாத நடிகர்கள் மூட முல்லாக்களின் போதனைகளைக் கேட்டு அல்ல, நேரடியாக இறைவனின் இறுதி வாழ்க்கை வழிகாட்டி-நெறிநூல் அல்குர்ஆனை படித்து விளங்கி, இறைவன் காட்டும் வழியே நேர்வழி, மனிதர்கள் காட்டுவது கோணல் வழிகளே என உறுதி கொண்டு, இஸ்லாத்தைத் தழுவியவர்கள், சினிமா துறையை விட்டு வெளிவந்து இப்போது கடின ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நடிப்புத் துறையைக் கைவிட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், நடிப்புத் துறையில் ஒழுக்கம் பேண முடியாது. முன்னர் இவ்வுலக வாழ்க்கைதான் அசல் வாழ்க்கை என்ற மூட நம்பிக்கையில் வாழ்ந்ததால், அனுபவி ராஜா அனுபவி என்ற தோரணையில் சகலகலா வல்லவனாக, மன்மத ராஜாவாக வாழ முடிந்தது. இறுதி வாழ்க்கை வழிகாட்டி நூல் அல்குர்ஆனை பொருள் விளங்கி படித்த பின்னர் தான், இவ்வுலக வாழ்க்கை அழிந்து விடும் மிக அற்பமான வாழ்க்கை. மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது இது வாழ்க்கையே அல்ல. எனவே இவ்வுலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து மறு உலக வாழ்க்கையை நட்டப்படுத்துகிறவனை விட பெரும் மூடன், அறிவு கெட்டவன் இருக்க முடியாது என்று விeங்கிக் கொண்டதால் வளமான வாழ்வைத் தரும் நடிப்பு வாழ்க்கையை விட வறுமை நிறைந்த கடின வாழ்க்கையே மேல் என்றுதான் நடிப்புத் துறையிலிருந்து வெளியேறினேன் என்று மனம் விட்டுச் சொல்கிறார்கள்.

நடிப்புத் துறை வளமான வாழ்க்கையைக் கொடுத்தாலும், அதைவிட மானங்கெட்ட வாழ்க்கை பிரிதொன்று இருக்க முடியாது என்பதை மறுமையை உறுதியாக நம்பி இறையச்சத்துடன் வாழ்பவர்களே விளங்க முடியும். மூட முல்லாக்களைக் கண்மூடிப் பின்பற்றும், அவர்களின் உள்ளங்களில் இறை நம்பிக்கை நுழையவில்லை என 49:14 அல்குர்ஆன் வசனம் கூறுவது போல் மார்க்கம் அறியா பெயர் தாங்கி முஸ்லிம்கள் அறிய முடியாது.

நடிப்புத் துறையில் இடம் பெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், பொறுப்பற்ற, நிம்மதியற்ற வாழ்க்கை, கை நிறைய பணம் கோடி கோடியாக இருந்தாலும் நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலை. இவை அனைத்தையும் கலைஞர் ஐயா அவர்களே என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த நிலையில் தேனீர் கடைகளைப் போல் மதுக் கடைகளை (டாஸ்மாக்) சந்து பொந்துகளிலும், சுமார் 4,5 மீட்டர் தொலை அளவிலும் அடுத்தடுத்து அரசே நடத்தி வருவதும், சினிமா துறைக்கு அரசு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து விரசங்கள் நிறைந்த ஆபாசங்களே, அசிங்கங்களே, ஒழுக்கச் சீர்கேடுகளே வளர்ப்பதற்கு துணை போவதும் எதிர்கால தமிழகத்தையும், தமிழக மக்களையும் பெரும் சீரழிவில் கொண்டு சேர்த்து விடும் என உணர்த்தக் கடமைப்பட்டுள்ளேன்.

கெல்லாம் வழிவகுக்கும் முகத்தை மூடும் காட்டு மிராண்டிச் சட்டத்தை, முகத்தில் தான் அழகிருக்கிறது என்று இவர்களாகச் சொல்லிக் கொண்டு நடைமுறைப்படுத்துவதால், நடிகைகள் விபச்சாரத்தில் சிக்கி, அந்த முகமூடி பர்தாவை அணிந்து கொண்டு நீதிமன்றம் வரும் மக்களை ஏமாற்றும் காட்சியை அடிக்கடி பார்த்து வருகிறோம்.

முன்னாள் நடிகர்களாக இருந்த, முஸ்லிம் அல்லாத நடிகர்கள் மூட முல்லாக்களின் போதனைகளைக் கேட்டு அல்ல, நேரடியாக இறைவனின் இறுதி வாழ்க்கை வழிகாட்டி-நெறிநூல் அல்குர்ஆனை படித்து விளங்கி, இறைவன் காட்டும் வழியே நேர்வழி, மனிதர்கள் காட்டுவது கோணல் வழிகளே என உறுதி கொண்டு, இஸ்லாத்தைத் தழுவியவர்கள், சினிமா துறையை விட்டு வெளிவந்து இப்போது கடின ஏழ்மை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஏன் நடிப்புத் துறையைக் கைவிட்டீர்கள் என்று அவர்களிடம் கேட்டால், நடிப்புத் துறையில் ஒழுக்கம் பேண முடியாது. முன்னர் இவ்வுலக வாழ்க்கைதான் அசல் வாழ்க்கை என்ற மூட நம்பிக்கையில் வாழ்ந்ததால், அனுபவி ராஜா அனுபவி என்ற தோரணையில் சகலகலா வல்லவனாக, மன்மத ராஜாவாக வாழ முடிந்தது. இறுதி வாழ்க்கை வழிகாட்டி நூல் அல்குர்ஆனை பொருள் விளங்கி படித்த பின்னர் தான், இவ்வுலக வாழ்க்கை அழிந்து விடும் மிக அற்பமான வாழ்க்கை. மறுமை வாழ்க்கையோடு ஒப்பிடும் போது இது வாழ்க்கையே அல்ல. எனவே இவ்வுலக வாழ்க்கை யைத் தேர்ந்தெடுத்து மறு உலக வாழ்க்கையை நட்டப்படுத்துகிறவனை விட பெரும் மூடன், அறிவு கெட்டவன் இருக்க முடியாது என்று விளங்கிக் கொண்டதால் வளமான வாழ்வைத் தரும் நடிப்பு வாழ்க்கையை விட வறுமை நிறைந்த கடின வாழ்க்கையே மேல் என்றுதான் நடிப்புத் துறை யிலிருந்து வெளியேறினேன் என்று மனம் விட்டுச் சொல்கிறார்கள்.

நடிப்புத் துறை வளமான வாழ்க்கையைக் கொடுத்தாலும், அதைவிட மானங்கெட்ட வாழ்க்கை பிரிதொன்று இருக்க முடியாது என்பதை மறுமையை உறுதியாக நம்பி இறையச்சத்துடன் வாழ்பவர்கள் விளங்க முடியும். மூட முல்லாக்களைக் கண்மூடிப் பின்பற்றும், அவர்களின் உள்ளங்களில் இறை நம்பிக்கை நுழையவில்லை என 49:14 அல்குர்ஆன் வசனம் கூறுவது போல் மார்க்கம் அறியா பெயர் தாங்கி முஸ்லிம்கள் அறிய முடியாது.

நடிப்புத் துறையில் இடம் பெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், பொறுப்பற்ற, நிம்மதியற்ற வாழ்க்கை, கை நிறைய பணம் கோடி கோடியாக இருந்தாலும் நிம்மதி இழந்து தற்கொலை செய்து கொள்ளும் பரிதாப நிலை. இவை அனைத்தையும் கலைஞர் ஐயா அவர்களே என்னை விட நீங்கள் நன்கு அறிவீர்கள்.

இந்த நிலையில் தேனீர் கடைகளைப் போல் மதுக் கடைகள் (டாஸ்மாக்) சந்து பொந்துகளிலும், சுமார் 4,5 மீட்டர் தொலை அளவிலும் அடுத்தடுத்து அரசே நடத்தி வருவதும், சினிமா துறைக்கு அரசு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து விரசங்கள் நிறைந்த ஆபாசங்களே, அசிங்கங்களே, ஒழுக்கச் சீர்கேடுகளை வளர்ப்பதற்கு துணை போவதும் எதிர்கால தமிழகத்தையும், தமிழக மக்களையும் பெரும் சீரழிவில் கொண்டு சேர்த்து விடும் என உணர்த்தக் கடமைப்பட்டுள்ளேன்   

இன்றோ தமிழக மக்கள் உங்களைப் புகழோ புகழ் என புகழ்ந்து தள்ளுகிறார்கள். இந்தப் புகழ்ச்சிகளில் சில உங்களிடம் ஆதாயம் பெற வஞ்சகப் புகழ்ச்சியாகக் கூட இருக்கலாம். அதற்கு மாறாக வருங்கால தமிழக மக்கள் கடுமையான வார்த்தைகளால் உங்களை மனம் வெந்து இகழ்ந்துரைக்கும் சூழ்நிலைகள் ஏற்படலாம். அந்த இகழ்ந்துரை உண்மையில் மனம் வெதும்பி, உள்ளங்கொதித்து வெளிவரும் சொற்களாகவே இருக்கும். தமிழகத்தில் பெரும் பெரும் செல்வந்தர்கள் பலவித சூழ்ச்சிகளைக் கையாண்டு மேலும் மேலும் கோடி கோடியாக பணத்தை கொள்ளை அடிக்க முடிகிறது. ஆனால் நடுத்தர மக்களின், வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் ஏழை மக்களின் நிலையோ மிகமிகப் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் உழைத்துப் பெறும் அற்பக் காசையும் குடி, சினிமா என அழித்து விடுகிறார்கள். வாழவேண்டிய இளம் வயதில் அவர்களது குடும்பங்களோ எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளாகி அவதிப்படுகிறார்கள்.

பெரும்பாலும் ஏழை மக்களின் குடும்பத்தை வதைத்துப் பெறும் பணமே டாஸ்மாக் மூலம் அரசுக்குப் பல்லாயிரம் கோடியாகக் குவிகிறது. அப்பணத்தைக் கொண்டு நீங்கள் இலவசங்களை அள்ளி இறைக்கிறீர்கள். குடிக்கு அடிமையாகும் ஏழைகளில் பலர் கடும் நோய்க்கு ஆளாகி இறக்க நேரிடுகிறது. அவர்களது மனைவிகள் விதவைகளாகி, பிள்ளைகள் அனாதைகளாகி நடுத்தெருவுக்கு வந்து விடுகின்றனர். அவர்களின் கண்கள் வடிக்கும் கண்ணீரும், உள்ளக் குமுறலும்! எதை உணர்த்துகிறது? “”ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற அண்ணாவின் விருப்பம் நிறைவேறுமா?

குடி உடலையும், வீட்டையும், நாட்டையும் கெடுக்கும் என முழக்கமிட்டுக் கொண்டே அரசு மதுக் கடைகளை நடத்துவது நீதியா? தர்மமா? ஏழைகளை சிரிக்க வைக்கும் செயலா? அழ வைக்கும் செயலா? அனைத்துத் துறைகளிலும் தொழிலாளர்கள் பற்றாக் குறை மிகக் கடுமையாக இருக்கிறது. அந்த அளவு தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் பெருகிவிட்டன என நினைக்கிறீர் களா? அதுதான் இல்லை! குடித்துவிட்டு போதை தலைக்கேறி சோம்பேறிகளாக வீழ்ந்து கிடக்கின்றனர் தொழிலாளர்கள்.

கலைஞர் ஐயா அவர்களே தயவு செய்து டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் இழுத்து மூட அன்புடன் வேண்டுகிறேன். சமூக சிரழிவுகளை ஏற்படுத்தும் சினிமா துறைக்கு அள்ளிக் கொடுப்பதை நிறுத்தி விட்டு, கணவன், மனைவி, பிள்ளைகள் அனைவரும் ஒருங்கே உட்கார்ந்து பார்க்கக் கூசும் ஆபாசப் படங்களுக்குத் தடை விதிக்கத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். கலை, பொழுதுபோக்கு என்ற பெயரால் மக்கள் மாக்க ளாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தக் கோருகிறேன். வெள்ளித் திரைக்கும், சின்னத் திரைக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்துங்கள். இவை அனைத்தும் எனது பணிவான அன்பு நிறைந்த வேண்டு கோள்கள்.

3% புரோகித பூசாரிகள் மகிழ்ந்து வாழ 97% பொதுமக்கள் மூட பக்தியால், கடின உழைப்பால் பெறும் பொருளை இழந்து அப்புரோகிதர்களுக்கு அடிமைப்பட்டு வாழ வேண்டுமா? என்ற பரந்த நோக்கத்தில் புரோகித பூசாரிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்குப் பதிலாக, எண்ணற்ற பொய்க் கடவுள்களை அழித்தொழிப்பதற்கு மாறாக, அகிலங்களை எல்லாம் அடக்கி ஆளும் ஓரிறைவனை மறுத்து “கடவுளை மற; மனிதனை நினை” என்று பெரியார் அறிவுரை கூறினார். ஓரிறைவனை மறுத்து, மறுமையை மறந்து உலக வாழ்க்கை ஒன்றுதான் வாழ்க்கை, அடுத்து மரணித்து மண்ணோடு மண்ணாகப் போய் விடுவோம். அதனால் இவ்வுலக வாழ்க்கையை எந்த அளவு அனுபவிக்க முடியுமோ அந்த அளவு எப்பாடு பட்டும், வரம்பு மீறியும் அனுபவித்து விடுவோம் என்ற மிகத் தவறான எண்ணத்தில் இறைவனையும், மறுமையையும் மறுக்கும் மக்கள் இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் நிலை இது தான். ஒரு சிலர் விதிவிலக்காக ஒழுக்கம், மனித நேயம் பேணலாம்.

இப்போது நாம் சிந்திப்போம். சின்னத் திரை வெள்ளித்திரையில் ஈடுபடும் சுமார் 3% நடிகர் நடிகைகளின் சொகுசு வாழ்க்கைக்காக 97% பொது மக்களை, புரோகிதர்கள் மூடப்பக்தியில் மூழ்கச் செய்து அவர்களின் பொருள்களை கொள்ளை அடிப்பது போல், இந்த நடிகர் நடிகைகள் பொதுமக்களை சிற்றின்பத்தில் மூழ்கச் செய்து அவர்களின் பொருள்களை கோடி கோடியாகக் கொள்ளை அடிக்க அனுமதிக்கலாமா? மக்கள் நடிகர், நடிகைகளுக்கு அடிமைப்பட்டு வாழ அனுமதிக்கலாமா? இதைப் பொழுதுபோக்கு, கலை என்றால், பொது மக்கள் மெய் மறந்து மன அமைதி பெறுகிறார்கள் என்றால், புரோகிதர்கள் போதிப்பது மூட நம்பிக்கையாக இருந்தாலும், பொய்க் கடவுள்கள் வணக்கமாக இருந்தாலும், மக்கள் அது கொண்டு மெய்மறந்து மன அமைதி பெறத்தானே செய்கிறார்கள். மக்களை ஏமாற்றத் தானே மூடபக்தி நிறைந்த படங்களை எடுக்கிறார்கள். நாத்திகச் சிந்தனையுடையவர்களும் பணத்திற்காக மூட நம்பிக்கைகள் நிறைந்த படங்களை எடுக்கத்தானே செய்கிறார்கள். நாத்திகம் பேசி பலன் என்ன?

எடுக்கத்தானே செய்கிறார்கள். நாத்திகம் பேசி பலன் என்ன? அழிந்துபடும் இவ்வுலகை வரம்பு மீறி அனுபவிக்க மூட நம்பிக்கைகளை வளர்க்கும் புரோகிதர்கள் போல், நடிப்புத் துறையினரும் வெள்ளித்திரை, சின்னத் திரைகளில் மூட நம்பிக்கை களோடு சிற்றின்ப, காம உணர்வுகளையும் தூண்டுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

பணம் கோடிகோடியாகக் கிடைக்கும் என்றால் மனிதர்கள் எப்படிப்பட்ட பாதகமான, அநீதமான, அக்கிரமமான செயல்களையும் செய்யத் துணிந்து விடுவார்கள். இறைவனோ, மறுமையோ, தங்களின் அக்கிரமச் செயல்களுக்கு தண்டனையோ இல்லை என்ற மூடநம்பிக்கையால் இந்த அசாத்தியத் துணிவு அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்களின் இப்படிப்பட்ட அநீதமான அதர்மமான செயல்பாடுகளைக் கண்காணித்து அவற்றைத் தடுத்து மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பதுதான் ஆட்சியாளர்களின் கடமை. அதற்கு மாறாக பணம் கோடி கோடியாகக் கிடைக்கிறது என்பதற்காக மதுக்கடைகளை அரசே நடத்தியும், குடி, கூத்து, கூத்தியாள் என கொட்டம் அடிக்கும் சினிமா துறைக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தும் அவை அமோக வeர்ச்சி பெற நீதியையும், தர்மத்தையும் நிலை நாட்டக் கடமைப்பட்ட அரசே முன் வரலாமா? பிறவிச் சிந்தனையாளரான கலைஞர் ஐயா அவர்களே சிந்திக்க வேண்டுகிறேன்.

இனி வரும் ஆட்சியாளர்கள் உங்களின் இந்த செயல்களை முன்மாதிரியாகக் கொண்டு பணத்தைத் திரட்டுவதையே பிரதானக் குறிக்கோளாகக் கொண்டு குடி, கூத்து என்பதுடன் கூத்தியாள், சூது என விபச்சார விடுதிகளையும், சூதாட்ட விடுதி களையும் பட்டி, தொட்டி, சந்து பொந்துகளில் எல்லாம் இப்போது மதுக் கடைகள் நிறைந்து காணப்படுவது போல் நிறைக்க முற்பட்டால் அதன் விளைவு எப்படி இருக்கும்? அதற்கு முன்னோடியாக கலைஞர் ஐயா இருக்கலாமா?

மாண்புமிகு முதல்வர், முத்தமிழ்க் காவலர், செம்மொழிச் சிற்பி, பிறவிச் சிந்தனையளர், ஏழைகளின் காப்பாளர் என தமிழக மக்கள் இப்போது உங்களைப் போற்றிப் புகழ்வது போல், தமிழர்கள் வாழுங்காலமெல்லாம், உலகம் இருக்கும் வரை அந்தப் புகழாரங்கள் நீடிக்க வேண்டும் என்ற பேராசையில் இக்கருத்துக்களை உங்களின் மேலான சிந்தனைக்குக் கொண்டு வந்துள்ளேன். வருங்கால தமிழ் மக்கள் அளவில்லா துன்பங்கள், துயரங்கள் காரணமாக வேதனையின் உச்சியில், அழிவின் விளிம்பில் நின்று கொண்டு, அவர்களின் இந்த ஆபத்தான நிலைக்கு, கலைஞர் ஐயா அவர்களே நீங்கள் தான் காரணம் என உங்கள் மீது வசைமாரி பொழியக் கூடாது, இகழ்ந்துரைக்கும் நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலேயே எனது உள்ளத்தில் எழுந்த வேதனைகளை நெஞ்சு பொறுக்காமல் எழுத்தில் வடித்துள்ளேன். இந்த ஆபாச, அசிங்க நிலை மேலும் நீடித்தால் தமிழக மக்கள் ஒழுக்கக் கேட்டில் முன்னிலை பெற்று மக்கள் ஒழுக்கக் கேட்டில் முன்னிலை பெற்று அதனால் உங்களுக்கு வேண்டாதவர்கள் கண்ணதாசனின் “வனவாசம்” நூலையும், உங்களின் நதிமூலம், ரிஷிமூலம், இளமைப் பருவ நிலைகளைச் சித்தரித்தும் மீண்டும் அச்சடித்து தமிழக மக்களிடையே பரப்பி விடுவார்களோ என அஞ்சுகிறேன். எனது இந்த எழுத்துக்களின் மூலம் உங்கள் உள்ளம் புண்பட்டால் தயைகூர்ந்து என்னை மன்னித்து அருளும்படி மெத்தப் பணிவுடன் வேண்டுகிறேன்.

கலைஞர் ஐயா அவர்களே, இவ்வுலக வாழ்க்கை சீராக, செம்மையாக அமைய மனிதச் சட்டங்கள் ஒருபோதும் உதவாது; மனித குலத்தை நேர்வழியில் இட்டுச் செல்வது நாங்கள்தான் என மார்தட்டும் வாழ்க்கை நெறியையே தங்களின் பிழைக்கும் வழியாக ஆக்கிக் கொண்ட மதப் புரோகிதர்களின் வழிகாட்டலும் உதவாது. பரீட்சை எழுதும் மாணவனிடமே கேள்விகள் தயாரிக்கச் சொன்னால், குற்றவாளியிடமே தீர்ப்பு அளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்தால், அவை எப்படிப்பட்ட கேடுகளை விளைவிக்குமோ அவற்றைவிட மிகமிக மோசமான கேடுகளை விளைவிக்கும் மனிதனுக்காக மனிதனே ஏற்படுத்தும் சட்ட திட்டங்கள்.

புரோகிதர்களால் கற்பனை செய்யப்பட்ட பொய்க் கடவுள்கள் அனைத்தையும் புறந்தள்ளி, அவற்றைக் கற்பித்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் புரோகித வர்க்கத்தினரை மக்களுக்கு அடையாளம் காட்டி, அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, அவர்களின் சட்ட திட்டங்களை தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அகில உலகையும், அவற்றிலுள்ளவற்றையும் படைத்து, உணவளித்து வரும் இணை, துணை எதுவுமே இல்லாத ஏகன், அந்த ஒரே ஒரு இறைவன் மனிதனுக்காகக் கொடுத்துள்ள வாழ்க்கை நெறியை – அல்குர்ஆனை ஏற்று அதன்படி மக்களை நடத்திச் சென்றால் மட்டுமே அது நல்லாட்சியாக அமையும். இவ்வையகம் இழந்து தவிக்கும் அமைதி சாந்தி சமாதானம் சுபீட்சம் வeம் அனைத்தும் மீண்டும் தழைத்தோங்கும். இந்த மறுக்க முடியாத உண்மையை ஆட்சியாளராகிய உங்களின் மேலான கவனத்திற்கும், ஆழிய சிந்தனைக்கும் கொண்டு வரும் கடமை, உங்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் குடி மகனாகிய எனக்கு இருக்கிறதால் அக்கடமையை நிறை வேற்றும் ஆவலில் இவற்றைத் தீட்டியுள்ளேன். எனது கடமையை நிறைவேற்றி விட்டேன்.

கலைஞர் ஐயா அவர்களே! நீங்கள் ஏற்பீர்களோ, மறுப்பீர்களோ அது உங்களைச் சார்ந்தது. ஆனால் நீங்கள் ஏற்றாலும், மறுத்தாலும் நாம் நிச்சயம் தன்னந் தனியனான ஏகன் இறைவன் முன்னால் நிற்கத்தான் போகிறோம். அப்போது இவை அனைத்தையும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து விட்டேன் என்பதற்கு நீங்கள் சாட்சி சொன்னால் போதும். நன்றி. நல்வாழ்த்துகள்.

இப்படிக்கு,
உங்கள் நலன் நாடும் குடிமகன்,
அபூ அப்தில்லாஹ்
 

Previous post:

Next post: