நாஸ்திக நண்பர்களே! நாசத்தை தவிர்ப்பீர்!! தொடர்-3

in 1987 அக்டோபர்,பொதுவானவை

  K.M.H.

இறைவன் ஒருவன் இருப்பானேயாகில் இந்த உலகில் நடக்கிற பஞ்சமா பாதங்களை எவ்வாறு சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும், தீமைகள் நடக்கக் கண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும் போது, இறைவன் எப்படி கண்டுங் காணாதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது, நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக்கூடிய பெரிய சந்தேகம்; ஏன் இது அவர்களின் வாதமும்கூட.

நாஸ்திக உள்ளங்களில் இந்த எண்ணம் மேலோங்கி இருப்பதற்குக் காரணம்: அவர்கள் சிந்தனைகள் அனைத்தும் இந்த உலகைப் பற்றி மட்டும் அமைந்து இருப்பதேயாகும். அவர்களுக்கு இந்த உலகம் மிகவும் பெரிய ஒன்றாகவும், அதில் இடம் பெறும் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும் இருக்கின்றன. மனித இயல்பும் அதுவே. ஒன்றைப் பற்றிய தாழ்ந்த எண்ணம் எப்பொழுது மனித உள்ளத்தில் ஏற்படுமென்றால், அதைவிட உயாந்த ஒன்றை அறியும் போதுதான். ஒரு உதாரணம்: கரும்பலகையில் சுமாரான ஒரு பெரிய கோடு வரையப்பட்டிருக்கிறது. அந்த ஒரு கோட்டை மட்டும் பார்க்கும்போது நம் கண்களுக்கும் பெரிதாகக் தெரிகிறது. ஆனால் அந்தக் கோட்டுக்குப் பக்கத்திலே, அதைவிட உயர்ந்த ஒன்றை அறியும் போதுதான். ஒரு உதாரணம்: கரும்பலகையில் சுமாரான ஒரு பெரிய கோடு வரையப்பட்டிருக்கிறது. அந்த ஒரு கோட்டை மட்டும் பார்க்கும்போது நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிந்த அந்தக்கோடு, சிறியதொரு கோடாக ஆகிவிடகிறது. சுறுக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்பு நோக்கிப் பார்க்கும்போது தான், சிறியதும் பெரியதும் அவசியமானதும் சாதாரணமானதும் நமக்கு எளிதில் புரிகின்றது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு, அதைப்பற்றி மட்டுமே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு அந்த ஒன்று மட்டுமே பெரிதாகவும், பிரமாதமாகவும் தெரியும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே நாஸ்திக நண்பர்கள் இந்த உலகம் ஒன்றை மட்டுமே பெரிதாகவும் பிரமாதமாகவும் தெரியும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே நாஸ்திக நண்பர்கள் இந்த உலகம் ஒன்றை மட்டுமே நம்பி, அதைப்பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருப்பதால், அதுவே வாழ்க்கையின் அனைத்து லட்சியமும் என்று எண்ணுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மரணத்திற்கு பின்னால் உள்ள வாழ்க்கை- மறுவுலகம் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதன் காரணமாக, மனித இயல்பின் படி, அவர்களின் சிந்தனை அவ்வாறே அமைந்திருக்கும். உலக காரியம் ஒவ்வொன்றும் மிகவும் பாரதூரமானதாகவும் அவற்றில் சில நியாயமற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றும்.

வயிற்றில் ஒரு பெரிய கட்டி; அதை அறுவை சிசிச்சை செய்து குணப்படுத்த வைத்தியர் முற்படுகிறார். வயிற்றைக் கீறியே, கட்டியை அகற்றி, குணப்படுத்த வேண்டும் என்பது வைத்தியருக்கும் விஷயம் அறிந்தவர்களுக்கும் நியாயம் என்று படுகிறது. விஷயம் அறியாதோருக்கு, வயிற்றைக் கீறும் செயல் மிகப்பெரும் கொடுமையாகத் தோன்றும். காரணம்: முன்னவர்கள் பின் விளைவை விளங்கியிருக்கிறார்கள். பின்னவாகள் பின் விளைவை விளங்கியிருக்கிறார்கள்; பின்னவர்கள் பின் விளைவை விளங்கிடாதவர்களாக – அறியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. மேற்காட்டிய உதாரணத்தில் பின்னவர்களாக நாஸ்திக நண்பர்கள் இருப்பதால், உலகில் நடைபெறும் பல சம்பவங்கள் நியாயமற்றவைகளாக அவர்களுக்குத் தோன்றுகின்றன.

மரணத்திற்குப் பின்னுள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி வேண்டுமானால், நாஸ்திகர்கள் நன்கு விளங்கிக் கொண்டபின் சிந்தித்துக் கொள்ளட்டும். இப்போது இங்கே அவர்களும் மறுக்க முடியாத சில மாபெரும் உண்மைகளை, அவர்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு விருந்தாகத் தருகிறோம்.

நாஸ்திகர்கள் மிகவும் பெரிதாக எண்ணியிருக்கும் இந்த உலகம்(பூமி), சூரியக் கோள்களிலேயே மிகச் சிறிய ஒன்றாகும். அண்டவெளியில் காணப்படும் இன்னும் பெரும் பெரும் கோள்களுக்கு முன்னால் இந்த பூமி எம்மாத்திரம்? பூமி தன்னைத் தானே சுற்றிவர ஒரு நாள் ஆகிறது. ஏனைய சில கிரகங்களோ தன்னைத் தானே ஒருமுறை சுற்றிவர எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணித்துக் கூறுகிறார்கள். விஞ்ஞான உலகம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணற்ற பெரிய கோளங்கள் இருந்தாலும், அவைகளுள் இந்த பூமியைத் தவிர வேறு எந்தக் கோளத்திலும் மனித சஞ்சாரம் இருப்பதாக இதுகாறும் எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியென்றால் மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரும்கோளங்கள் இயங்க வேண்டியதன் அவசியம் என்ன? இதை நாஸ்திக நண்பர்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நடுநிலையோடு சிந்திக்கிறவர்களுக்கு , மனித வாழ்வு மரணத்தோடு முற்றுப் பெறுவதில்லை; உலகில் தோன்றி, நெறிமிக்க நிறைவாழ்வு வாழ்ந்த இறை தூதர்கள் சொல்லிக் சென்றது போல், மரணத்திற்குப் பின்னால்தான் மனிதனுடைய உண்மையான வாழ்வே ஆரம்பமாகிறது என்பது எளிதில் புரியும். அப்போதுதான் இன்று உலகில், நியாயமானது , நியாயமற்றது என்று சொல்லப்படுபவற்றை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியும். காரணம், நியாயமானவை என்று சொல்லப்படுபவனவற்றை எடுத்து நடப்பவர்கள், இவ்வுலக வாழ்வில் பெரும்பாலும் வறுமை, கஷ்டம், துன்பம் ஆகியவற்றை அனுபவிப்பதையே பார்க்கிறோம். இதற்கு நேர்மாற்றமாக நியாயமற்றவை என்று கருதப்படுவனவற்றை எடுத்து நடப்பவர்கள் பெரும்பாலும் செல்வச் செழிப்பிலும் சந்தோஷத்திலும் மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். நாஸ்திகர்கள் சொல்வது போல், மரணத்தோடு வாழ்வு முடிவு பெறுகிறதென்றால், இவ்வுலகில் செழிப்பையும், சந்தோசத்தையும் தரும் காரியங்கள் நியாயமானவையாகவும், வறுமை, கஷ்டம், துன்பம் தரும் காரியங்கள் நியாயமற்றவையாகவும் மக்களால் கருதப்படவேண்டும். நிலைமை அவ்வாறில்லை என்று நாஸ்திகர்களும் ஏற்றுக் கொள்வார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனிதச் செயல்களின் விளைவுகள் இவ்வுலகத்தோடு முற்றுப் பெறுவதில்லை. அவை மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்றன என்பதைத் தெளிவாகத் தெரிய முடிகிறது. நற்செயல் புரிபவன், இவ்வுலகில் வறுமை, கஷ்டம், துன்பம் – இவற்றில் கிடந்து உழன்ற போதிலும், மறுமை வாழ்வில் அவன் புரிந்த நற்செயல் – நியாயமான செயல்களுக்குரிய நல்ல பலனை காண்பது உறுதி. அதேபோல், நியாயமற்ற செயல்களைப் புரிபவன் இவ்வுலகில், செல்வச் செழிப்பு கொழிக்க இன்பம் அனுபவித்து வாழ்ந்த போதிலும், மறுமை வாழ்வில், அவன் புரிந்த நியாயமற்ற செல்களுக்குரிய தண்டனையை பெற்றே தீர்வான். இந்த நிலை இருக்குமானால் தான் இன்று உலகில் நியாயமான செயல்கள், நியாயமற்ற செயல்கள் என்று தரம் பிரித்து வைத்திருப்பதில் நியாயம் இருக்க முடியும். மனிதனுடைய செயல்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிப்பதென்று ஒரு நாளை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். அதனால்தான் பரீட்சா வாழ்வு நடத்தும் மனிதன், உடனுக்குடன் உரிய விசாரணை, தீர்ப்பு, தண்டனை வழங்கப்படாது விடப்பட்டிருக்கிறான்.

மாணவர்கள் பரீட்சை எழுதுகிறார்கள். பல மாணவர்கள் தவறான விடை எழுதவே செய்கிறார்கள். பரீட்சை எழுதும் மண்டப மேலதிகாரிக்கு விடை தவறு என்று தெரிந்தாலும், தவறாக எழுதும் அந்த மாணவனை உடனே கூப்பிட்டு, தவறை திருத்தவோ அல்லது தண்டிப்பதோ இல்லை. அப்படி உடனே திருத்த அல்லது தண்டிக்க முற்பட்டால், அந்த பரீட்சையே அர்த்தமற்றதாகவும் அனாவசியமாகவும் ஆகிவிடுகிறதல்லவா? எனவே தான் தவறாக விடை எழுதுவது தெரிந்தாலும்கூட, தெரிந்த மாத்திரத்தில் திருத்தாது – தண்டிக்காது விட்டு விடைத் தாளை திருத்துவதற்கென்றே குறிக்கப்பட்ட நேரத்தில் – நாளில் திருத்தி, வெற்றி பெற்றவர்கள், பெறாதவர்கள் என்று தரம் பிரிக்கப்படுகிறார்கள். இதில் இன்னொரு உண்மையும் அடங்கியிருக்கிறது. வெற்றிபெற்ற மாணவன், பரீட்சையை எண்ணி, தனது ஆனை, அபிலாஷைகளையெல்லாம் அடக்கிக்கொண்டு, பரீட்சைக்கானவற்றை சேகரிப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருந்திருக்கிறான். வேறு விதமாகச் சொன்னால், அவன் கஷ்ட – துன்ப வாழ்வை அனுபவித்திருக்கிறான். தோல்வி கண்ட மாணவன் கதையோ நேர்மாறானது …. அவன் பரீட்சையை அலட்சியம் செய்து, பரீசைக்கானவற்றை சேகரிக்காது அதாவது கஷ்டம், துன்பம் அனுபவிக்காது, சிரமம் இல்லாத சந்தோஷ வாழ்வு வாழ்ந்தான். வெற்றிபெற்றவன் இப்போது பேரானந்தத்தை – பெருவாழ்வை அடையவும் அனுபவிக்கவும் அவனின் வெற்றி காரணமாகிறது. தோல்வி கண்டவன் கஷ்டம், துன்பம் , வறுமைப்பட்டு வாடும் நிலைக்கு , அவனின் நியாயமற்ற செயல் காரணமாகிறது.

இதுபோன்ற மனித வாழ்வு பரீட்சா வாழ்வாக அமைந்திருக்கிறது. மனிதர்கள் செய்யும் அடாத கொடும் செயல்களை எல்லாம் இறைவன் கண்டும், உடன் தண்டனை வழங்காது, தீர்ப்பு நாள் வரும்வரை அவர்களை விட்டு வைத்திருக்கிறான்; தவறு கண்ட மாத்திரத்தில், உடனுக்குடன் தண்டனை வழங்குவதாக இருந்தால், பரீட்சா வாழ்வான இவ்வுலக வாழ்வு அர்த்தமற்றதாக, அனாவசியமாக ஆகிவிடும். இப்பொது நாஸ்திக நண்பர்கள், உலகில் நடக்கிற அக்கிரமங்களை எல்லாம் -பஞ்சமா பாதகங்களை எல்லாம், இறைவன் ஏன் பார்த்துக் கொண்டு, உடனடியான தண்டனை வழங்காது விடடு வைத்திருக்கிறான் என்பதை புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறோம். – வளரும்

***************************

குர்ஆனைக் கற்க முந்துங்கள் !

அபூஸயீதுல் குத்ரீ(ரழி) அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.

உலக ஆதாயந்தேடி குர்ஆனைக் கற்றவர்கள் அதைக் கற்பதற்கு முன்பே, நீங்கள் குர்ஆனைக் கற்று அதன் மூலம் அல்லாஹ்விடம் சுவர்க்கத்தையடைய முற்பட்டு விடுங்கள். ஏனெனில், குர்ஆனைக் கற்போரில் மூன்று பிரிவினர் உண்டு.

1. பெருமைக்காகக் கற்பவர்

2. பிழைப்பிற்காகக் கற்பவர்

3. அல்லாஹ்விற்காகக் கற்பவர் (அஹமத்)

அந்நஜாத்: அக்டோபர், 1987 – ஸஃபர், 1407

Previous post:

Next post: