J.ஜாஃபர் சித்திக், கம்பம்.
Arguing or Quarreling for show and not seeking the truth:
“The Prophet (Sal) Said; Whoever argues in support of something that is wrong and he knows it, Allah will angry with him until he stops”. (Book: Sahih al-jami # 6073)
கடந்த டிசம்பர் 2010 அஹமதியா ஜமாஅத்தைச் சார்ந்தவர்களின் “”நபிவழி” (முன்பு சமாதான வழி) என்ற மாதப் பத்திரிக்கையில் பக்கம் 16 முதல் 21 வரை “”நஜாத் பிரிவினர் முஷ்ரிகுகள் இல்லையா? என்ற கட்டுரை முஸ்ஸம்மில் சாஹிபு அவர்களால் எழுதப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரையில் உள்ள விஷமத்தனத்தையும், அவர்களுடைய முரண்பாடுகளையும், அறியாமையையும், மழுப்பல்களையும் சுட்டிக் காட்டுவதே எமது நோக்கம்.
முஸ்ஸம்மில் சாஹிபின் வாதம்:
அல்குர்ஆன் 5:3, 3:19 ஆகிய வசனங்களின்படி இனி இறைவனிடமிருந்து எந்த நபியும் தோன்ற முடியாது என்றால் ஈஸா நபியின் வருகையை அவர் (அந்நஜாத் ஆசிரியர்) எப்படி எதிர்பார்க்கிறார்? இந்த மார்க்கத்தில் புதிதாக சேர்க்க ஒன்றுமே இல்லை என்று எழுதும் அவர்(அந் நஜாத் ஆசிரியர்) ஈஸா நபி அவர்களை எதற்காக எதிர் பார்க்கிறார்? 1431 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமைப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் ஈஸா நபி தன் நபிப் பதவியையும் இழந்து வந்து நிற்க வேண்டிய தேவை என்ன?
எமது விளக்கம் :
அல்குர்ஆனின் வசனங்கள் 5:3, 3:19ன்படி மார்க்கத்தில் புதிதாக சேர்க்க அனுமதி இல்லை என்பது யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்
முஸ்ஸம்மில் சாஹிபு கேட்கும் கேள்விகள்:
ஈஸா நபியின் வருகையை அவர்(அந்நஜாத் ஆசிரியர்) எப்படி எதிர்பார்க்கிறார்?
முழுமைப் படுத்தப்பட்ட மார்க்கத்தில் ஈஸா நபி தன் நபிப் பதவியையும் இழந்து வந்து நிற்க வேண்டிய தேவை என்ன? என்று இரண்டு அறிவுப்பூர்வமான(?) கேள்விகளைக் கேட்டுள்ளார்.
“”வகூலூ கவ்லன் ஸதீதா” (சொல்வதை தெளி வாக-நேரடியாகச் சொல்லுங்கள்) என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்.
சாஹிபு அவர்களே ஈஸா(அலை) அவர்கள் நபியாக வருவார் என்று யார் சொன்னது?
நபிப் பதவியை இழந்து வருவார் என்று யார் சொன்னது? நாங்கள் சொன்னதாக ஆதாரம் தரமுடியுமா? நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை நிதானமாக, நடுநிலையாக கவனிக்கவும். இதோ ஆதாரம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விரைவில் மர்யமின் மைந்தர் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார்(வரவிருக்கிறார்)
அவர் சிலுவையை உடைப்பார்
பன்றியைக் கொல்வார்
ஜிஸ்யா வரியை வாங்க மறுப்பார்….
நூல்: முஸ்லிம். எண். 242(பாடம் 71) அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரழி)
மேலும் இன்னும் சில அறிவிப்புகளில் நீதி வழுவாத் தலைவராக, நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக என்றே மொழிபெயர்ப்பு உள்ளது. அரபி மூலத்தில், ஹகமன் முக்ஸிதா என்றே உள்ளது. சாஹிபு அவர்களே, நீங்கள் சொல்வது போல் நபியுல்லாஹ் என்று இல்லை.
மேலும் இமாம், முக்ஸிதா, ஹகமன் ஆதிலன் என்றே அரபி மூலத்தில் உள்ளது.
இதிலும் சாஹிபு அவர்கள், வார்த்தை ஜாலம் காட்டியுள்ளார். எனவே ஈசா(அலை) அவர்கள் “நீதிவழுவாத் தலைவராக’, நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக, “நீதிவழுவாத் தீர்ப்பாளராக’ வருவார் என்றே நாங்கள் நம்புகிறோம். நபியாகவோ, நபித்தன்மையை இழந்தோ வருவார் என்று நாங்கள் (முஸ்லிம்கள்) நம்பவில்லை. மேலும் ஹதீஸ்கள் 243, 244, 245, 246, 247 (முஸ்லிம்) ஆகியவற்றைப் படியுங்கள். இந்த ஹதீதுகளில் இடம் பெறும் மர்யமின் மைந்தர் உங்களுக்கு இமாமாக இருந்தால் என்ற வாசகத்தின் பொருள் “உங்களுடைய இறைவனின் இறை நெறிநூல் படியும், உங்களுடைய நபியின் வழி முறைப்படியும் உங்களை வழிநடத்திச் செல்வார்” என்றே கருத முடிகிறது.
2. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“”என் சமுதாயத்தாரில் ஒரு பிரிவினர் சத்தியத்திற்கு ஆதரவாகப் போராடிக் கொண்டேயிருப்பார்கள். மறுமை நாள்வரை அவர்கள் மேலோங்கியே நிற்பார்கள். பிறகு மர்யமின் மைந்தர் ஈஸா அவர்கள் வருவார்கள் (இறங்குவார்கள்). அப்போது முஸ்லிம்களின் தலைவர் “”வாருங்கள், வந்து எங்க ளுக்குத் தலைமை தாங்கி தொழுகை நடத்துங்கள் என்று கூறுவார். அதற்கு ஈஸா(அலை) அவர்கள், இல்லை நான் தலைமை தாங்கித் தொழுவிக்க மாட்டேன். உங்களில் சிலர்தாம் மற்ற சிலருக்குத் தலைவராக இருப்பார். இது அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்துள்ள மரியாதையாகும். ஹ.எண்.247(முஸ்லிம்)
அறிவிப்பாளர் : ஆபிர் பின் அப்தில்லாஹ்(ரழி) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர் களிலும் வந்துள்ளது.
இந்த ஆதாரங்களிலிருந்து ஈஸா(அலை) அவர் களுக்கு நாம் எந்தவித இறைத் தன்மையும் இருப்பதாக கருதவில்லை என்பதை காதியானி சாஹிபுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். ஆகையால் கிறித்தவர்களிடம் புரையோடிப்போயிருக்கின்ற ஷிர்க்கான கொள்கை எங்களிடம் இல்லை, மேலும் மேற்சொன்ன ஹதீஸ்களில் ஈஸா இப்னுமரியம் என்றே உள்ளது.
ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் யார்?
அரபி மொழி, உருதுமொழி ஆகியவற்றைக் கரைத்துக் குடித்தவர்களே நாங்கள் என்று தம்பட்டம் அடிப்பது நிச்சயமாக உங்களைப் போன்ற மெளலவி(?) வர்க்கமே.
பெரிய புர்னுஸ் சாஹிபின் மொழியாக்கம் பாருங்கள்:
நாம் (தூதர்களாகிய) அவர்களக்கு உணவு உண்ணாத உடலை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம் வாழ்ந்ததும் இல்லை. (21:8) (காதியானிகளின் தர்ஜமாவில் 21:9)
“”உமக்கு முன்னர் எந்த மனிதருக்கும் நீண்ட நெடுங்காலம் வாழும் வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து அவர்கள் மட்டும் நீண்ட நெடுங்காலம் வாழ்வதா? (21:34) (காதியானிகளின் தர்ஜமாவில் 21:35)
சாஹிபுகள் இந்த இரண்டு ஆயத்துகளுக்கும் விளக்கம் அளிக்கும்போது 21:9வது வசனம் “”இறைத்தூதர்களுக்கான விதிமுறையையும் 21:35வது வசனம் “”மனிதர்களுக்கான விதி முறையையும்” இறைவன் விளக்கியுள்ளான் என்று கூறுகிறார்கள்.
21:8ல்
வமா-And not
ஜஅல்லாஹும் – We made them
ஜஸதன் – bodies
லா- not
யஃகுலூன – that eat
தஆம – the food
வமா- nor
கானூ – they were
ஹாலிதீன்- immortals
21:35_
வமா – And not
ஜஅல்னா – We granted
லிபஷரின் – to any human being
மின் கப்லிக- before you
(அல்) ஹுல்த – immortality
அஃபஇன் – then if
மித்த- you die
ஃபஹும் – then they
(அல்) ஹாபிதூன் – will live forever.
Immortal – என்ற வார்த்தைக்கு ஆங்கில அகராதியில் everlasting imperishable, deathless, என்றும் காணப்படுகின்றன.
மனிதர்களில் இருந்தே இறைவன் பல இறைத் தூதர்களை தேர்ந்தெடுத்திருக்கிறான்.
காதியானிகள் தமிழாக்கம் செய்தது போல் மிக நீண்டகாலம் என்று இருந்தாலும், ஒவ்வொரு இறைத்தூதரும், அவருடைய சமுதாய மக்களும் அல்லாஹ் அவர்களுக்கு விதித்த காலத் தவணை வரை நிச்சயம் வாழ்ந்திருப்பார்கள்.
அதேபோல் இறை நிராகரிப்பாளர்கள், மனிதர்களிலிருந்தா தூதரை இறைவன் தேர்ந்தெடுப்பான் என்ற வினாவிற்கு, அல்குர்ஆனில் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னரும் மனிதர்களையே தூதராகத் தேர்ந்தெடுத்தான் (21:7) என்று அறிவிக்கிறான். மனிதர்கள் என்ற முறையில் உண்ணவும், பிற வாழ்க்கைத் தேவைகளையும் பூர்த்தி செய்யவும் வேண்டும்.
மிக நீண்ட காலம் என்றால் அல்லாஹ் தூதர்களுக்கும் மனிதர்களுக்கும் விதித்துள்ள காலத் தவணை தெரிய வேண்டும் என்று சொல்கிறார்களா? அதனால் ஈஸா(அலை) அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்திருக்க மாட்டார்கள். மரணித்து விட்டார்கள் என்று விதண்டாவாதம் செய்கிறார்கள்.
ஈஸா(அலை) பற்றி அல்குர்ஆன் :
“இன்னும் நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய மர்யமின் குமாரர் ஈஸா மஸீஹை நாங்கள் கொன்று விட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும், (அவர்கள் சபிக்கப் பட்டனர்) அவர்கள்.
அவரைக் கொல்லவுமில்லை – வமா கத்லூஹு
சிலுவையில் அறையவுமில்லை – வமா ஸலபூஹு
ஆனால் அவர்களுக்கு (ஒருவர்) ஒப்பாக்கப் பட்டார். மேலும் இதில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள் அதில் “”சந்தேகத்திலேயே” இருக்கின்றார்கள். வெறும் யூகத்தைப் பின் பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எவ்வித அறிவும் கிடையாது. மேலும் உறுதியாக அவர்கள் அவரை கொல்லவே இல்லை. (4:157)
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான். இன்னும் அல்லாஹ் வல்லமைமிக்கோனாகவும், ஞானமுடை பவனாகவும் இருக்கின்றான். (4:158)
வேதமுடையவர்களில் எவரும் இறப்பதற்கு முன் அவர் மீது நம்பிக்கை கொள்ளாமலிருப்பதில்லை. ஆனால் கியாமத் நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாளராக இருப்பார். (4:159)
சாஹிபுகள் 4:157வது வசனத்தை மொழி யாக்கம் செய்யும்போது வலாகின் ஷிப்பிஹ லஹும் (But (it wasmade) to resemble for them)என்ற வாசகத்தை இருட்டடிப்பு செய்துள் ளனர். (பார்க்க பக்கம்: 230)
சாஹிபுகளின் சந்தேகங்கள்:
ஏனென்றால் சாஹிபுகள் இதற்கு விளக்கம் கொடுக்கும்போது ஒரு இறைத் தூதரை, காஃபிருக்கு ஒப்பாக்குவானா? என்று கேட்கிறார்கள். மேலும் 4:158ல் உள்ள ரஃபஅ என்ற வார்த்தைக்கு பெளதீக உடலுடன் அல்லாஹ் உயர்த்துவானா? என்றும் கேட்கிறார்கள். மேலும் நபியுல்லாஹ் என்ற வார்த்தையும் முஸ்லிமில் 5629வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஃபஅ, தவஃப்பாக்கும் போன்ற வார்த்தை களை எங்கு, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கத் தவறிவிட்டனர். இது தொடர்பாக இன்ஷா அல்லாஹ் கட்டுரை வெளிவிடப்படும்.