சாந்தி நிலையம்

in 2011 ஜுன்,பொதுவானவை

பெங்களூர் M.S.கமாலுத்தீன்

அமைதியின் ஆட்சியின் கீழ் பூமி இருந்த காலம் அது. நிசப்தமே நிரம்பியிருந்தது; மனிதர்களின் வருக்கைக்குப் பிறகு சலசலப்பும் சண் டையும் ஆரம்பித்தன. ஷைத்தானின் சகோதரர்கள் இப்பூமியிலிருந்து அமைதியை அப்புறப் படுத்திட இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இம் முயற்சியை முழுமையாக முறியடித்து இப்பூமியில் மீண்டும் அமைதியின் ஆட்சியை கொண்டு வர ஏக இறைவன் கொடுத்த வழி முறையே “”அமைதி மார்க்கம் இஸ்லாம்”

பல ஆயிரக் கணக்கான ரசூல்மார்களையும், நபிமார்களையும் இறை நெறிநூல்களோடும், தூதுச் செய்திகளோடும், அமைதியின் பக்கமும் உண்மையான ஆண்டவன் பக்கமும் அழைப்பு விட்டார்கள். இது பற்றி இறை நெறிநூல் இயம்புகிறது இப்படி;
“அல்லாஹ்வையே வணங்குங்கள்; ஷைத்தான்க(ளின் அடிச்சுவடுக)ளை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” என்ப(தை மக்களுக்குக் கூறுவ)தற்காக ஒவ்வொரு சமுதாயத்திலும் தூதரைத் திட்டமாக நாம் அனுப்பியுள்ளோம்; எனவே அ(ந்த சமுதாயத்த)வர்களில் அல்லாஹ், நேர் வழியில் செலுத்தியவரும் உண்டு; இன்னும் எவர் மீது வழிகேடு விதியாகிவிட்டதோ அவரும் அவர்களில் உண்டு; ஆகவே பூமியில் நீங்கள் பயணம் செய்து (நம் தூதர் களை) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று? என்பதைக் கவனியுங்கள்” (அல்குர்ஆன்:16:36)

ஷைத்தானின் சகோதரர்கள் அழைப்பை நிராகரித்ததோடு அல்லாமல், இறைத்தூதர்களை கொலை செய்து அட்டூழியங்களை அவிழ்த்து விட்டும் அமைதியை அப்புறப் படுத்தும் வேலையை அட்சரம் பிசகாமல் செய்து வருகிறார்கள். நிறவெறி, மொழிவெறி, இன வெறி என எல்லா உணர்வுகளையும் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த ஆதிக்க சக்திகளால் இப்பூமி அமைதி இழந்து காணப்படுகிறது. அமைதியை விரும்பும் சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் தங்கள் எண்ணத்தில் தோன்றிய திட்டங் களை முன் வைக்கிறார்கள். அவைகள் எல்லாம் தீர்வை விட பிரச்சனையின் தீவிரத்தை அதிகப் படுத்தவே அல்லாமல் தீர்க்க உதவே இல்லை.
யாரெல்லாம் அமைதிக்காகக் குரல் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு விழா எடுத்து விருது கொடுத்தும், வெற்றி என்னவோ எட்டாக் கனியாகவே உள்ளது. முஸ்லிம் அறிஞர் பெருமக்கள் உலக அமைதிக்கு எடுத்து வைக்கும் தீர்வுகளும், முயற்சிகளும் மதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதால் விருதுக்கு பரிசீலிப்பதே இல்லை. இதற்காக அவர்கள் கவலைப் பட்டதும் கிடையாது. இதில் எவரும் சொந்தத் தீர்வை சொன்னது கிடையாது. இறுதி நெறிநூலிலிருந்தும், இறுதித் தூதரின் போத னையிலிருந்தும் சொல்வதால் இறை திருப் தியும், இறுதி நாளின் வெகுமதியுமே விருப்ப முடைய தாக இருக்கிறது. ஒரு வேளை இஸ்லாம் காட்டக் கூடிய தீர்வை ஏற்றுக் கொண்டால் “”பிள்ளையை கில்லிவிட்டு தொட்டிலையும் ஆட் டும் நரித்தனம்” நடைபெறாது என்பதால் என் னவோ, இஸ்லாமிய தீர்வை திரும்பி பார்ப்பதே இல்லை.

திரும்ப திரும்ப தங்கள் முயற்சிக்குத் தோல்வி துணையாக நிற்பதால் தங்கள் கோபத்தை இஸ்லாத்தின் மீது திருப்புகிறார்கள்; அறிவற்ற விமர்சனங்கள் மூலம் தங்கள் அரிப்பைத் தீர்க்க முயற்சிக்கிறார்கள். அதிலும் தொடர் தோல்வி தான். இஸ்லாத்தை மட்டமாகச் சித்தரித்தால் சிவப்புக் கம்பள வரவேற்பு தந்து சிறப்பித்தாலும் இஸ்லாத்தின் சிறப்புக்களை சேதாரப்படுத்த முடியவில்லையே என்ற ஆத்திரம் கண்ணை மறைத்தாலும், ஆர்வத்தை தூண்டுகிறது பொதுமக்களுக்கு இஸ்லாத்தை அறிந்துகொள்ள; விளைவு; குர்ஆன் அதிகமாக விற்பனையாகி வருகிறது. குர்ஆனை வாசித்தவர்கள், இஸ்லாத்தை நேசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலை நாடுகளில் வலுவாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. எதிர்ப்பவர்களே எதிர் பார்க்காத ஒன்று. இந்த வளர்ச்சியை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட “இஸ்லாம் தீவிரவாத மதம்’ என திரும்ப திரும்ப ஊடகங்கள் மூலம் ஒப்பாரி வைத்தாலும் ஷைத்தான்களோடு சதி செய்து பார்த்தாலும், பயங்கரவாதத்தை காட்டி பயமுறுத்தி பார்த்தாலும், உண்மையை ஒழித்துவிட முடியுமா? முடியும் என நினைக்கும் மூடர்களுக்கு இறுதி நெறி நூல் சொல்லும் உறுதியான பதில் இதுதான்.

“”அல்லாஹ்வுடைய (சத்திய மார்க்கமான) ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட அவர்கள் நாடுகின்றனர், நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும், அல்லாஹ் தன்னுடைய ஒளியைப் பூர்த்தியாக்கி வைக்கா மல் இருக்க மாட்டான்” (அல்குர்ஆன் 9:32)

ஆதிகாலம் தொட்டு இன்றைய அறிவியல் காலம் வரை இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை அறிந்து கொண்டே, வசதியானவனையெல்லாம் தன்வசப்படுத்தி அவன் வருமானத்தில் ஒரு பகுதியை வாங்கி, இம்மார்க்கத்தை அழிக்க அணிதிரண்டு செயல்படுபவர்களுக்கு எல்லாம் அயர்ச்சிதான் முடிவாக இருந்தாலும், விடா முயற்சியால் வீராப்பனாக இருக்கிறார்கள்.
நன்மை என நம்புவதால் தொடர்ந்து உதவி செய்கிறார்கள். உண்மையிலேயே இது நன்மையா? இதற்கும் இறுதி நெறிநூலே பதில் சொல்கிறது இப்படி “”நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மக்களைத்) தடுப்பதற்காகத் தங்களுடைய செல்வங்களைச் செலவு செய்கின்றனர்; இனியும் (இவ்வாறே) அதனைச் செலவு செய்வார்கள்; பின்னர் அவர்களின் மீதே அவை கை சேத மாகிவிடும்; பின்னர், அவர்கள் வெற்றி கொள்ளப் படுவார்கள், இன்னும் நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 8:36)

நன்மை இல்லாத காரியத்தில் நரகவாசிகளின் ஈடுபாடு வியப்பாக இருந்தாலும் கசப்பான உண்மையைச் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். உங்கள் முன்னோர்களின் முடிவு என்னவானது? இனம் தெரியாமல் அழிந்து போனதைத் தவிர சாதித்த சரித்திரம் உண்டா? அசத்தியம் ஜெயித்ததாக வரலாறு இல்லை. உங்கள் வசதிக் காக மறந்து விட்டாலும், நினைவுபடுத்துகிறோம்.

இறுதி இறைத் தூதர்(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னபோது, அன்றைய மக்காவில் வசதியாக வாழ்ந்த குறை´ குல இறை மறுப்பாளர்களின் தலைவர் களாகவும் வலம் வந்த ஷைபா, உத்பா, வலீத், அபுஜஹ்ல் போன்றவர்கள் இஸ்லாத்தை இனம் தெரியாமல் அழித்துவிட அபுசுஃப்யான் தலை மையில் ஒரு வியாபாரம் ஆரம்பித்தார்கள். கிடைக்கும் லாபத்தை முழுமையாக அதற்குச் செலவிட முடிவு செய்து சிரியா நாட்டிற்கு நாற்பது பேர் கொண்ட வணிகக் குழு சென்றது. இதை முறியடிக்க நபியவர்கள் முகாமிட்டிருந் தார்கள் வழியில்,
இதையறிந்த வணிகக் குழு, வேறு மார்க்க மாக தப்பிச் சென்றார்கள். அப்படிச் சென்றவர்கள் பெரும் படையோடு திரும்பி வந்தார்கள். ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமழான் மாதம் 17ம் தேதி “பத்ர்’ என்ற இடத்தில் போர் நடந்தது. எதிர்த்து நின்றவர்கள் எல்லாம் இனம் தெரியாமல் அழிக்கப்பட்டார்கள். அன்று முதல் இன்று வரை எதிர்த்தவர்களின் கதி இதுதான். இஸ்லாம் இறை மார்க்கம் என்பதற்கு இதுவும் கூட ஒரு ஆதாரம்.

விருப்பு, வெறுப்பின்றி 8:36 இறைவாக்கை படித்து பாருங்கள். ஏக இறைவன் உங்களுக்கு தந்திருக்கும் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத் துங்கள். அவன் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ள முன்வாருங்கள். இம்மார்க்கத்தை வெறுப்ப தற்கு ஒன்றுமே இல்லை. விரும்புவதற்கு அநேக வி­யங்கள் உண்டு.

அல்லாஹ் எவருக்கு நேர்வழிகாட்ட நாடு கிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தி (னை ஏற்றுக் கொள்வத)ற்காக அவன் விசால மாக்குகிறான்; எவரை அவன் வழிதவறச் செய்ய வேண்டுமென்று நாடுகிறானோ அவருடைய நெஞ்சத்தை வானத்தில் ஏறுகின்றவனைப் போல் சிரமத்துடன் கூடிய நெருக்கமானதாக, ஆக்கிவிடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதவர்களின் மீது வேதனையை அல்லாஹ் ஏற்படுத்துகிறான். இதுவே உம்முடைய இறைவனின் நேரான வழியாகும்; உபதேசம் பெறுகின்ற சமூகத்தினருக்கு (நம்) வசனங்களைத் திட்டமாக நாம் விவரித்துள்ளோம், அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சொர்க்கமாகிய) சாந்தி நிலையம் உண்டு; அவர்கள் செய்து கொண்டிருந்த(நன்மையான)வற்றின் காரணத்தால் அவன் அவர்களுக்குப் பாதுகாவலனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 6:125-127) ஏக இறைவனை எற்றுக்கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையை பின்பற்றுவதன் மூலமே இப்பூமியை சாந்தி நிலையமாக மாற்ற முடியும். இதில் வசிக்கும் மனிதனுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைக்கும். இன்றைய நிலை தொடருமானால் அமைதி அரிதாகிப் போய் விடும். இறுதியில் இஸ்லாமே வெல்லும்.

Previous post:

Next post: