நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்!

in 2013 ஏப்ரல்

இஸ்லாத்தின் பார்வையில்
நன்மை செய்யப் பணித்தல்! தீமையைத் தடுத்தல்!
முஹிப்புல் இஸ்லாம்

நல்லோர் யார்?
ஈமான் கொண்டவர்களில் நல்லவர் யார்? அவர்களுடைய வரைவிலக்கணம் என்ன? நன்மை செய்யப் பணித்து, தீமையைத் தடுப்பவர்களே!
அ. இன்னும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகின்றனர்.
ஆ. நல்லவைப் புரியுமாறு ஏவுகிறார்கள்.
இ. தீமையை விட்டும் தடுக்கிறார்கள்.
ஈ. மேலும் நற்பணிகளில் முனைப்புடன் ஈடுபடுகின்றனர்.
உ. இவர்களே நல்லவர்களில் உள்ளோராவர்.
அல்குர்ஆன் : 3:114

நல்லதைப் பணித்து தீயதைப் தடுப்போர் “தக்வா’ அல்லாஹ்வின் பயபக்தியுடையோராக இருத்தல் அவசியம்.
இவர்கள் எந்த நன்மை செய்தாலும் அது புறக்கணிக்கப்பட மாட்டாது.
பயபக்தியுள்ளவர்களை அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான்.
அல்குர்ஆன்: 3:115

நன்மை செய்யப் பணித்து தீயதைத் தடுப்ப தில் முன்னணி வகித்தவர்கள் நபிமார்கள், இறைத் தூதர்கள். அவர்கள் நெஞ்சங்கள் அல்லாஹ்வின் அச்சத்தில் நிரம்பி இருந்தது மட்டுமின்றி, அங்கங்களும், அங்க அசைவு களும் அல்லாஹ்வின் அச்சத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.

வெறும் நல்லறங்களால் மட்டும் பலன் அடைய முடியாது. அல்லாஹ்வின் அச்சத் தோடு செயல்படும் நல்லறங்கள் மட்டுமே அல்லாஹ்வுக்கு ஏற்புடையது.
அல்லாஹ்வின் பெயரால், அல்லாஹ்வுக்காக, அல்லாஹ் அருளியதைப் பின்பற்றி அல்லாஹ் வுக்கு அஞ்சிய நிலையில் ஆற்றப்படும் நல்லறங்

கள் நன்மை ஈட்டித் தரும். நோக்கம் தவறிய நல்லறங்கள் நன்மை பயக்காது. மாறாக, தண்டனைக்குள்ளாக்கி விடும். நரகில் இட்டுச் செல்லும் மாபாதகமாய் மாறிவிடும்.

பாடமும், படிப்பினையும்:
அல்லாஹ்வின் அச்சத்தோடு நன்மைச் செய் யப் பணித்து தீயதைத் தடுப்பதில் முன்னணி வகுத்த நபிமார்கள், இறைத் தூதர்கள், அல் லாஹ்வை அஞ்சிய நல்லோருக்கு முன் உதார ணங்கள்! அவர்கள் போல் அவர்களுக்குச் சற் றும் சளைக்காத சாதாரண சாமான்யர்கள் சிலர் துவக்கம் முதல் இருந்தே வந்துள்ளனர். அவர் களில் சிலரை அல்குர்ஆன் மானுடத்துக்குப் பாடமும் படிப்பினையுமாக்கியுள்ளது. எமது ஆய்வுகளில் அவசியத்திற்கேற்ப அவ்வப் போது அதைப் பதிவு செய்தே வருகிறோம். அல்ஹம்து லில்லாஹ். அன்பு உள்ளங்கள் அவைகளிலி ருந்து பாடமும் படிப்பினையும் பெறுவது அவசியத்திலும் அவசியம்.

ஆய்வின் நோக்கம்:
இவண், நன்மை செய்யப் பணித்து, தீமை யைத் தடுத்த போது, ஷஹீதான மானுட மூத்த உடன்பிறப்பின் நெஞ்சை உலுக்கும் உண்மை நிகழ்வு மானுட துவக்கத்தில் நிகழ்ந்தது. இந் நிகழ்வை பலரும் பல்வேறு விதமாய் கூட்டியும் குறைத்தும், இல்லாததை இணைத்தும், இருப் பதை இருட்டடித்தும் வருகின்றனர். ஏன்? மானுடம் படிப்பினை பெற்றுவிடக் கூடாது என்பதாலா? பெற வேண்டிய படிப்பினையை முன்னிலைப் படுத்துவதே இவ்வாய்வின் முக்கிய நோக்கம்.

(நபியே!) இனி, ஆதமுடைய இரு புதல்வர்களின் உண்மை வரலாற்றைக் கூடுதல் குறைவின்றி எடுத்துரைப்பீராக…. அல்குர்ஆன் : 5:27
ஆதம்(அலை) புதல்வர்களின் (பில்ஹக்), உண்மை வரலாற்றைப் பொய்யோ, கற்ப னையோ, திரிபோ, கூட்டலோ, குறைத்தலோ,

குழப்பமோ இல்லாமல் உள்ளதை உள்ளபடி தெளிவாக எடுத்துக் காட்டுமாறு நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆணையிட்டுள்ளான்.

பொதுவான இறை ஆணை:
நபி(ஸல்) அவர்களை முன்னிலைப்படுத்தி மானுடம் முழுமைக்கும் அல்லாஹ் பிறப்பித் துள்ள பொதுவான இறை ஆணை. அல்குர்ஆன் விரிவுரையாளர்களும், மற்றவர்களும் இவ்விறை ஆணையைப் பொருட்டாய் மதித்ததாய்த் தெரியவில்லை.

கலப்படம் களைக:
ஆதம்(அலை) புதல்வர்களின் உண்மை வரலாறு, அல்குர்ஆன் 5:27-31லும் வழக்கம் போல் அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் கைவரி சையைக் காட்டாமல் விடுவார்களா? ஆம், காட்டியுள்ளனர். அவற்றை நீக்கிவிட்டு, மிகச் சுருக்கமாய் அவ்வரலாற்று உண்மை ஈண்டு தரப் பட்டுள்ளது. அஸ்ஹாபி அறிஞர்களான இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி) அறிவுப்பு கள் ஆதாரமாய் காட்டப்பட்டுள்ளது.

காபில், ஹாபில் பெயர்கள் தவிர்க்கப்பட்டுள் ளன. காரணம், அப்பெயர்கள் “விவிலியம் பழைய ஏற்பாட்டில்’ இருந்து கொய்யப் பட்டவை! “காயின்’, “காபில்’ ஆகவும், “ஆபேல்’, “ஹாபில்’ ஆகவும் மருவியுள்ளனர்.
(காண்க. ஆதியகாமம்: 4:1-8)

இறைவாக்கு 5:27, ஹாபில், அல்லாஹ்வின் அச்சம் உள்ளவராய் இனங் காட்டப்பட்டுள் ளார். இறைவாக்கு 5:29, காபில் அநியாயக்கார னாய் காட்டப்பட்டுள்ளான். அதை இவ்வாய்வு அப்படியே வழிமொழிகிறது.

இரட்டைக் குழந்தைகள்:
மனித இனத் துவக்கம். ஆதம்(அலை) தம்பதி களுக்கு ஒவ்வொரு பிரசவத்திலும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. முறையே ஒரு ஆண், ஒரு பெண். இவ்விதமே குழந்தைகள் பிறந்து வந்தன.
மனித இன விருத்தியின் தொடக்கமும் அது தான். அதனால், முதல் பிரசவத்தில் பிறந்த ஆணுக்கு, இரண்டாவதில் பிறந்த பெண்ணை யும், இரண்டாவதில் பிறந்த ஆணுக்கு, முதலில் பிறந்த பெண்ணையும் மணமுடித்துக் கொடுப் பது அக்கால இஸ்லாமிய திருமண மரபு.

இப்படி ஒரு பிரசவத்தில் பிறந்தவர்களை, அடுத்த பிரசவத்தில் பிறந்தவர்களோடு ஜோடி மாற்றம் செய்வது அக்கால இஸ்லாமிய திருமண உறவு மரபாகி மனித இனப் பெருக் கம் தொடர்ந்தது. மனித இனம் கணிசமாய்ப் பெருகப் பெருக இத்திருமண உறவு முறையை அல்லாஹ்வும் மாற்றி அமைத்துக் கொண்டே வந்தான்.

மார்க்க வரையறை:
மார்க்கத்தை அல்லாஹ் நிறைவு செய்ய நாடியபோது, திருமண உறவு முறை இதுதான், இப்படித்தான் என வரையறை செய்தான். நிறைவு செய்யப்பட்ட மார்க்கத்தின் இறுதி செய்யப்பட்ட திருமண உறவு முறைப் பட்டியலை அல்குர்ஆன் விரிவாய் விரித்துரைக் கிறது. நபியவர்கள்(ஸல்) வாழ்வியல் அதன் செயல் வடிவாய் மானுடத்துக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்.

வரையறைச் செய்யப்பட்டு நெறிப்படுத்தப் பட்ட திருமண உறவு முறைகளால் மானுடத் தில் ஒழுக்கம் நிலைபெற வேண்டும். அதற் கான முழுமையான அல்லாஹ்வின் வழிக் காட்டலே இஸ்லாமியத் திருமண உறவு நெறி.

நிகழ்ந்ததென்ன?
அல்லாஹ்வின் அச்சமுள்ளவரின் உடன் பிறந்தவள் சற்று அழகில் குறைந்தவள். அநி யாயக்காரனுடன் பிறந்தவள் நல்ல அழகி.

அழகியை மணக்க வேண்டியவர் அல்லாஹ் வின் அச்சம் உள்ளவர்; அழகில் குறைந்தவளை மணக்க வேண்டியவன் அநியாயக்காரன். இது தான் அக்கால இஸ்லாமிய திருமண உறவு நெறி.
அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்பட்ட அல்லாஹ்வின் அச்சமுள்ளவர், அவரது முறைப் பெண் அழகியை மணக்க முன் வந் தார். ஆனால், அநியாயக்காரன் அவன் மணக்க வேண்டிய அழகில் குறைந்தவளை மணக்க மறுத்து விட்டான். மணம் செய்யத் தடுக்கப் பட்ட உடன் பிறந்த அழகியைத்தான் மணப் பெண் என அடம் பிடித்தான். பிரச்சனை முற்றியது. தீர்வென்ன?

அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர் ஆட்டுப் பண்ணைக்கு உரிமையாளர், அநியாயக்காரன்

தானியம் விளைவிப்பவன். அல்லாஹ்வின் அச்சம் உள்ளவர் கொழுத்த ஆட்டை குர்பானி, காணிக்கையாக்கினார். அநியாயக்காரன் சில மட்டரக தானியக் கதிர்களைக் குர்பானிக்காக கொண்டு வந்தான். அல்லாஹ்வின் அச்சமுள்ள வரின் காணிக்கை குர்பானி ஏற்கப்பட்டு அழகியை மணக்க வேண்டியவர் அல்லாஹ் வின் அச்சமுள்ளவரே என்பது உறுதி செய்யப் பட்டது. அநியாயக்காரன் குர்பானி நிராகரிக் கப்பட்டு அழகியை மணக்கத் தடை விதிக்கப் பட்டது.

அநியாயக்காரன் எரிச்சலடைந்தான். அல் லாஹ்வின் அச்சமுள்ளவரைக் கொல்லத் துணிந்து விட்டான். “உன்னைக் கொல்லப் போகின்றேன். என் உடன் பிறந்தவளை உன் னால் மணக்க முடியாது’ என்றான்.
அல்லாஹ்வின் அச்சமுள்ளவர், “அல்லாஹ் வின் அச்சமுள்ளோரிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்’ என்றார். நிகழ்வை எடுத்துக் காட்டினோர்: இப்னு அப்பாஸ்(ரழி), இப்னு மஸ்ஊத்(ரழி), தகவலாளர்:சுத்தி(ரஹ்), பதிவாளர்: (தாரிக்குத்)தபரி, நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர் (2006) பாகம்:3, பக்கம்110, ரஹ்மத் அறக்கட்டளை, சென்னை.)

அனைத்துப் படைப்புக்களின் எஜமானன் அல்லாஹ் ஒருவனே! படைப்பினங்கள் அனைத் தும் அல்லாஹ்வின் அடிமைகளே! அல்லாஹ் வுக்குச் சரணடைதல், படைப்புக்களின் நீங்கா கடமை. அடிமை, அல்லாஹ்வின் கட்ட ளைக்கு வழிப்படுவதுதான் அல்லாஹ்வுக்கு சரணடைவதின் வெளிப்பாடு. அல்லாஹ்வின் அச்சத்தோடு அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி செய்யப்படுவது தான் நன்மை.
திருமணம் செய்ய அல்லாஹ் அனுமதித்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுதல் நல்லறம். இறை நெறிப்படி இல்லறம் அமைத்து தனி மனித ஒழுக்கம் பேணுவதன் மூலம் மானுடத்தில் ஒழுக்கம் நிலைப் பெறச் செய்யும் இறை வணக்கம்.

துவக்க கால நல்லறம் அல்லாஹ் அருளிய இல்லற நெறிப்படி மணம் செய்வதே அல் லாஹ்வை ஒருமைப்படுத்துதல். அந்த இல்லற நெறிப்படி ஒழுகுவதே இஸ்லாம். இஸ்லாத்தை

நிலைநாட்டுவது அஃதே! அன்றைய மனிதர்கள் ஆதம்(அலை) புதல்வர்களே! அவர்களில் அல் லாஹ்வின் அச்சம் உள்ளவர்தான் அல்லாஹ் வின் ஆணைக்கு வழிப்பட்டு, “உம்மத்தன் வாஹிதா’ ஒன்றுப்பட்ட சமுதாயத்தின் உதா ரண புருஷர், இவர் ஏன் படுகொலை செய்யப் பட்டார்.

முதல் படுகொலை:
ஒழுக்கக் கேட்டைத் தட்டிக்கேட்டுத் தடுக்க முற்பட்ட அல்லாஹ்வின் அச்சமுள்ளவர் ஷஹீதானார். பெண்ணைத் தவறான வழியில் அடைவதற்காக செய்யப்பட்ட முதல் கொலை. அல்லாஹ் தடுத்துள்ள உறவுப் பெண்ணைத் திருமணம் செய்யினும் அதுவும் பகிரங்க ஒழுக்கக்கேடே! இதை இஸ்லாம் மட்டுமே துவக்கத்திலிருந்து மனித இனத்துக்கு அழுத்த மாய் உணர்த்தி வருகிறது. இது விசயத்தில் இறுகக் கட்டப்பட்டுள்ள மனித இன அறிவுக் கண்களை இஸ்லாம் மட்டுமே துணிவோடு திறந்து வைத்துள்ளது. திறக்கப்பட்டும் மீண்டு வம்பாய் மூடிக் கொண்டதால் மணம் செய்யத் தடை செய்யப்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் வழிகேடு தடுக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஒழுக்கக் கேடுகள் மலிவோ மலிவென்று மலிந்து விட்டன. அதைக் காட்டி லும் கூடுதலாய் நேரடி, மறைமுக ஒழுக்கக் கேடுகள் கூடிச் செல்வதால் உலக அளவில் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருக்கும் ஒழுக்கக் கேடுகளைத் தடுக்க முடியவில்லை! அல்லாஹ் காத்தருள்வானாக. ஒழுக்கக் கேடுக ளால் விளையும் பாவங்களில் ஒழுக்கக் கேட் டுக்கு முதன் முதலில் வித்திட்டவனுக்குப் பங்குண்டு.

தீமையைத் தடுத்தவரின் குர்பானியை அல் லாஹ் ஏற்றபோது, தீங்கிழைக்கத் துணிந்தவன் வெகுண்டெழுந்தான்; கொலை வெறியோடு… “நிச்சயமாக உன்னை நான் கொலை செய்து விடுவேன்’ என்று கூறினான்.

(தீமையைத் தடுக்க முனைந்த) அவர் “அல்லாஹ் ஏற்றுக் கொள்வதெல்லாம் பயபக்தியு டையவர்களிடமிருந்துதான்.
(அல்குர்ஆன், அல்மாயிதா : 5:27)

குர்பானி உட்பட அனைத்து நல்லறங்களை யும் “அல்முத்தகீன்’, அல்லாஹ்வின் அச்சமுள்ளோரிடமிருந்துதான் அல்லாஹ் ஏற்றுக் கொள் கிறான். என்பதைத் தெளிவாக உணர்ந்திருந்த தீமையைத் தடுக்க முனைந்த உத்தமர், கொலை செய்ய முனைந்த உடன் பிறந்த தீயவனிடம் அவரின் இறையச்சத்தை வெளிப்படுத்தினார்.

நீ என்னைக் கொலை செய்வதற்காக உன் கையை என்பால் நீட்டினால், நான் உன்னைக் கொலை செய்வதற்காக என் கையை உன்பால் நீட்டுகிறவன் அல்லன்.
திட்டமாக உலகோரனைவரின் இரட்சகனான அல்லாஹ்வுக்குப் பயப்படுகிறேன்.
அல்குர்ஆன் : 5:28

தீமையிலிருந்து தற்காத்துக் கொள்ள அல் லாஹ்வின் அச்சம் அவசியம், “ரப்புல் ஆலமீன்’, படைப்புக்கள் அனைத்தின் இரட்சகன் அல் லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’, எனக் கொலைக் கார பாவிக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஊட்டி னார். மீறின் விளைவின் பயங்கரத்தை எச்சரித் தார்.

என் பாவத்தையும், உனது பாவத்தையும் நீ சுமந்து கொண்டு அல்லாஹ்விடம் வருவதையே நிச்சயமாக நான் விரும்புகிறேன்.
அப்பொழுது நீ நரகவாசிகளில் ஆகிவிடுவாய்.
அதுதான் அநியாயக்காரர்களுக்கு உரிய கூலி யாகும் என்று கூறினார். அல்குர்ஆன்: 5:29
அநியாயமாய் என்னை நீ கொன்று உன் பாவத்தோடு என் பாவத்தையும் சுமந்து அல்லாஹ்வின் நீதிமன்றத்தில் நீ கொடிய குற்ற வாளி ஆகிவிடு. அநீதி இழைப்பவனுக்கு நரக நெருப்பே கடுந் தண்டனை.

தீமையைத் தடுத்தவர்:
கொல்லப்படுவது உறுதியாகிய பின்னரும் இஸ்லாமிய குற்றவியல் சட்டத்தை துணி வோடு எடுத்துக் காட்டி எச்சரித்தார். பலன் செவிடன் காதில் ஊதிய சங்கே!

ஆதலின், அவனுடைய மனம் அவனுடை சகோதரரைக் கொன்றுவிடும்படியாகவே அவ னுக்கு இசைவு காட்டியது. எனவே, அவன், அவரைக் கொன்றுவிட்டான். அப்பால் அவன் நஷ்டவாளிகளில் ஆகிவிட்டான்.
அல்குர்ஆன்: 5:30

அழகி மேல் கொண்ட மோகம், தவறான வழியில் அவளை அடைவதற்காக, அல்லாஹ் வின் கட்டளை மீறினான். இஸ்லாத்தோடு ஐக்கியமாகாமல், இஸ்லாம் விட்டுப் பிரிந்தான். இஸ்லாமிய நெறியை உணர்த்திய உடன் பிறப்பைக் கொலை செய்தான். அவனே அவனுக்கு அநீதம் செய்து கொண்டான். நஷ்ட மடைந்தான். நரகக் கொள்ளியானான். ஆத மின் மகனாய் இருந்தும், இறையச்சத்தை இழந்தவனாய் அல்லாஹ்வால் இனம் காட்டப் பட்டுள்ளான். ஏன்? இதைக் கற்கும் ஒவ்வொரு வரும் மனம் சரிகண்ட, மனோ இச்சைக்கு அடிமையாகிக் கொலை உட்பட எந்த பாதகங் களையும் செய்து இழிந்தவர்களாகக் கூடாது.
இப்படி எண்ணற்றப் பாடங்களை, படிப் பினைகளை உள்ளடக்கிய உண்மை நிகழ்வு.

கொலைக்காரப் பாவி:
கொலை செய்யுமுன், இந்த கொலைகார பாவிக்கு “தக்வா’-இறையச்சமுடைய உடன் பிறப்பு அல்லாஹ்வின் நேர்வழியை வேண்டிய மட்டும் எடுத்துக்காட்டினார். எச்சரித்தார். எனி னும் கொலைகாரப் பாவி (அல்குர்ஆன்: 28:50) அல்லாஹ்வின் நேர்வழியை முற்றாகப் புறக் கணித்தான். அல்லாஹ் அருளியதைப் பின்பற்ற வில்லை. மனோ இச்சையைப் பின்பற்றினான். இம்மை, மறுமையை அவனே நஷ்டமாக்கிக் கொண்டான். வழிகெட்ட கேடுகெட்ட கொலைக்காரப் பாவிக்கு உதாரணமாகி விட்டான்.

தீமையைத் தடுப்பது ஷஹீதாகும் கோர விளைவை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத நியதி. எனினும், அல்லாஹ் தீமையைத் தடுப் பதைக் கட்டாயக் கடமையாக்கியுள்ளான் ஏன்?

ஒழுக்கக் கேடு பெரும் தீமை; ஒழுக்கம் மாபெரும் நன்மை; தீமைத் தடுக்கப்பட்டால் தான் நன்மையை நிலைநாட்ட முடியும்; ஒழுக் கக்கேடு ஒழிக்கப்படுவது பெரும் நன்மையே! அதன் மூலம் ஒழுக்கம் நிலைப் பெறச் செய்தல் மாபெரும் நன்மை. தீமையைத் தடுப்பதால் தான் நன்மை செய்யப் பணிக்க முடியும்.
தனிமனிதன், குடும்பம், சமுதாயம்… மனித  இன அனைத்து நிலைகளிலும் ஒழுக்கம் நிலைப்பது அவசியம். ஒழுக்கக் கேடு விளைவிக் கும் பெரும், பெரும் தீங்குகள் அடியோடு ஒழிய ஒழுக்கக்கேடு தடுக்கப்படுதல் அவசியம். தீமைகளைத் தடுப்பதால் மட்டுமே நன்மையை விளைவிக்க முடியும்.

இவனைத் தொடர்ந்து, இந்த கொடும்பாவி யின் அடிச்சுவட்டில் ஓர் உயிரை அநியாயமாய் படுகொலை செய்பவன் பாவத்தில் இவனுக் கும் பங்குண்டு. அநியாயப் படுகொலை செய் யும் அனைத்துக் கொலைக்காரப் பாவிகளின் பாவங்களைச் சுமப்பது தான் முதல் படு கொலை செய்த படுபாவி அனுபவித்து வரும் கொடும் தண்டனை.

இப்படி எண்ணற்ற பாடம், படிப்பினை களை உள்ளடக்கிய உண்மை நிகழ்வு இது. அல்லாஹ் மனித இனத்துக்கு இதை 5:27, எடுத்துக்காட்டுமாறு நபி(ஸல்) அவர்களைப் பணித்துள்ளான். எத்தனை ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது? தெரியவில்லை. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. நபி(ஸல்) அவர்களின் சமுதாயம் பாடமும் படிப்பினை யும் பெறுவதே முக்கியம்.

“தக்வா’ – அல்லாஹ்விடம் பயபக்தி :
ஷஹீத்-தீமையைத் தடுக்க முனைந்து அநி யாயமாய் படுகொலைச் செய்யப்பட்ட ஷஹீதானவரிடமிருந்து பெறவேண்டிய முக் கியப் படிப்பினை. அவர் வெளிப்படுத்திய அல்லாஹ்வின் பயபக்தி- “தக்வா’. அன்றிலிருந்து இன்றளவும், ஏன் இவ்வுலகு உள்ளளவும் இந் நிகழ்விலிருந்து பெறவேண்டிய பாடம், படிப் பினை ஏராளம், ஏராளம்.

ஷஹீதானவர், அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் வழிப்பட்ட நிலையில் இஸ்லாத் தோடு ஐக்கியமாகியிருந்தார். அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்டு அல்லாஹ்வின் அச்சத் தோடு குர்பானியை நிறைவேற்றினார். அல் லாஹ்வின் அச்சத்தோடு ஆற்றப்படும் நல்லறங் களே அல்லாஹ்வால் ஏற்கப்படும். இந்த, அல்லாஹ்வின் நியதிப்படி ஷஹீதாகு முன் ஷஹீதானவரின் குர்பானியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான்.
இவண், அல்லாஹ்வின் கட்டளைக் கிணங்க,

இஸ்லாம் மணம் புரிய அனுமதித்துள்ள பெண்ணை விவாகம் செய்ய முன் வந்தார். நன்மை செய்வதில் முந்திக் கொண்டார். அல்லாஹ் அனுமதித்த பெண்ணை மணம் புரிவதன் மூலம் மனித இனத்தில் ஒழுக்கம் நிலவ, நிலைக்க வித்திட்டவர்.

உடன் பிறந்தவன் அல்லாஹ்வால் தடை செய்யப்பட்ட பெண்ணை மணக்க துடித் தெழுந்து அல்லாஹ்வின் கட்டளை மீறினான். இஸ்லாம் நெறிப்படுத்திய ஒழுக்கத்தை ஒழுக் கக் கேடாக்கினான். இஸ்லாம் விட்டு பிரிந் தான். அநியாயமாய் அவன் செய்ய முயன்ற படுகொலையைத் தடுத்து நிறுத்த முயன்ற நல்ல வர். நன்மை செய்யப் பணித்த நல்லவர். தீமை யைத் தடுக்க பிரயத்தனப்பட்ட நல்லவர்; ஷஹீதாக்கப்பட்டார்.
திருமணம் செய்யக்கூடாதென அல்லாஹ் தடுத்திருந்த பெண்ணைப் பலவந்தமாய்க் கட்டாயத் திருமணம் செய்ய ஆதம்(அலை) மகன் ஒருவன் துடித்தெழுந்தான். அதைத் தடுத்து நிறுத்த ஆதம்(அலை) மற்றொரு மகன் முனைந்தபோது, கொல்லப்பட்டார்.
காண்க: அல்குர்ஆன்: 5:27-31

தீங்கிழைத்தவனின் ஆத்திரம் அவன் அறிவுக் கண்ணை மறைத்து விட்டது. தடுத்தவர் உடன் பிறப்பாய் இருந்தும் தடுக்கப் பட்டவன் அவரைப் போட்டுத் தள்ளிவிட்டான்.

தீயதைத் தடுத்தல், எத்தனைக் கொடிய, கோர விளைவை ஏற்படுத்தும் என்பதற்கு 5:27-31 அல்குர்ஆனில் பதிவாகியுள்ள, தீமையைத் தடுத்த ஆதம்(அலை) புதல்வர் உடன் பிறந்த மற்றவனால் ஷஹீதாக்கப்பட்டார். நன்மை யைப் பணித்தல் அத்தனை பயங்கர விளைவை ஏற்படுத்தாது. தீயதைத் தடுத்தல் கோர விளைவை ஏற்படுத்தினாலும் அனைத்தும் அறிந்த அல்லாஹ் நல்லறமாய் இனங்காட்டி, நன்மை செய்யப் பணித்து தீயதைத் தடுப்பதை அனைவர் மீதும் கட்டாயக் கடமையாக்கியுள் ளான் என்றால், அதன் முக்கியத்துவம் உணர் வது. உணர்த்துவது அவசியம். முயற்சி செய்க. அல்லாஹ் அருள் செய்வானாக. வெற்றியும் அருள்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.

Previous post:

Next post: