மவ்லவிகள் மனிதகுலத்திற்கு இழைத்துவரும் மாபெரும் துரோகம்!

in 2014 ஆகஸ்ட்,பொதுவானவை

அபூ அப்தில்லாஹ்

சர்வ வல்லமை மிக்க எல்லாம் வல்ல இறைவன், என்று மனிதனைப் படைத்து இவ்வுலகிற்கு அனுப்பினானோ அன்றிலிருந்தே மனிதனுக்குரிய வாழ்க்கை நெறியை தெளிவாக நேரடியாக இடைத்தரகர்களின் மேல் விளக்கம் தேவைப்படாத நிலையில், அதை நடைமுறைப்படுத்திக் காட்டத் (Practically)  தேர்ந்தெடுத்த நபிமார்களுக்கு வஹி மூலம் அறிவித்துக் கொண்டிருந் தான். அந்த அறிவிப்புகளின்படி தான் மனிதன் நடக்க வேண்டும். அப்படி நடப்பவர்கள் மட் டுமே சுவர்க்கம் நுழைய முடியும். அப்படி வஹி மூலம் தெளிவாக அறிவிக்கப்பட்ட ஒரே நேர் வழியை, இடைத் தரகர்களான மதகுருமார்கள் புகுந்து சுய விளக்கம், மேல்விளக்கம் கொடுத்து மறைக்கிறார்களோ (பார்க்க 2:159) அதாவது நிராகரிக்கிறார்களோ அந்த மதகுருமார்களும், அவர்களை கண்மூடிப் பின்பற்றுகிறவர்களும் (தக்லீது) சென்றடைவது மீளா நரகம் என உறுதிபட அன்றே அறிவித்தும் உள்ளான்! இந்த உண்மையை அல்குர்ஆன் பகரா 2:38,39, 159-162 இறைவாக்குகளை நடுநிலையுடன் சுய சிந்தனை யுடன் நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்ச யம் ஏற்பார்கள். அல்லாஹ்வின் இந்த நேரடிக் கட்டளைகளை விட இம்மவ்லவிகளின் சுய புராணங்களை வேதவாக்காகக் கொண்டு செயல் படுகிறவர்களே இவ்வசனங்களை நிராகரித்து நரகம் புகுவார்கள்.

ஆயினும் ஆரம்பக் காலங்களில் நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட நேர்வழி அறிவிப்புகள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்காகவும், குறிப்பிட்டப் பகுதிக்காகவும், குறிப்பிட்ட இனத்திற்காகவும், குறிப்பிட்ட ஊருக்காகவும் இருந்தன. மேலும் அவை தற்காலிகமாகவும், முழுமைப் பெறாதவையாகவும் இருந்த காரணத்தால் அவற்றை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்க அல்லாஹ் கட்டளையிடவும் இல்லை. அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்கவும் இல்லை. ஆயினும் ஆரம்பத்திலிருந்தே அல்லாஹ்வுக்கு மட்டுமே அடி பணிய வேண்டும், இடைத்தரகர்களுக்கு வழிபடக் கூடாது, மார்க்கத்தை நிலைநிறுத்த வேண்டும், ஒருபோதும் பிரியக் கூடாது, தங்களுக்கிடையே உள்ள பொறாமை காரணமாகவே பிரிகிறார்கள் என்று தெளிவுப்படுத்தி அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதை 2:186, 7:3, 33:36, 42:13,14 குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு முன்னர் ஏகன் இறைவனால் அனுப்பப்பட்டப் பல்லாயிரக்கணக்கான நபிமார்களுக்கு அருளப்பட்ட நேர்வழிப் போதனைகள் முழுமை பெறவும் இல்லை. அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவும் இல்லை. அவை இறக்கியருளப்பட்ட மொழிகளும் செத்த மொழிகளாகி விட்டன. (Dead Language) அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவும் இல்லை என்பது திட்டமாகத் தெரிகிறது.
அதற்கு மாறாக இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட இறுதி நெறிநூல் அல்குர்ஆன் மனித குலத்தினர் அனைவருக்கும் நாடு, இனம், மொழி, மதம், ஜாதி என எவ்விதப் பேதமும் இல்லாமல் அருளப்பட்டுள்ளது. முழுமையும் பெற்றுவிட்டது. எண்ணற்ற மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணியாக பதிவாகியும் விட்டது. அது இறக்கியருளப்பட்ட அரபு மொழி இன்றும் பல நாடுகளில் பேச்சு வழக்கில் உள்ளது. ஐ.நாடுகளின் சபையில் நெறிநூல்கள் அருளப்பட்ட மொழிகளில் அரபு மொழி மட்டுமே பேச அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நபிமார்களுக்குக் குறிப்பாக மூசா (அலை) தாவூத்(அலை) ஈசா(அலை) போன்ற ரசூல்மார்களுக்கு அருளப்பட்ட தவ்ராத், ஜபூர், இன்ஜீல் போன்ற நெறிநூல்களும், அதற்கு முன்னர் அருளப்பட்ட அனைத்து நெறி நூல்களும் ஹிந்து மத நான்கு வேதங்கள் உட்பட அனைத்தும் இரத்து செய்யப்பட்டு, இறுதி நெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே உலகம் அழியும் வரை நடைமுறைப்படுத்த வேண்டியது என்பதை 5:3, 3:19,85 குர்ஆன் வசனங்கள் உறுதியாக அறிவிக்கின்றன. ஆனால் இந்த உண்மையை மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு அதனால் மதகுருமார்கள் என பெருமை பேசும் அனைத்து மதங்களின் மதகுருமார்கள் ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை அவர்கள் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள். குர்ஆனின் நற்போத னைகளை விட்டும் அவர்கள் அல்லாஹ்வாலேயே திருப்பப்படுவார்கள் என்று 7:146 குர்ஆன் வசனம் அறுதியிட்டு உறுதி கூறுகிறது. ஆம்! நாங்கள்தான் மார்க்க அறிஞர்கள், மதகுருமார்கள், மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள், நீங்கள் அனைவ ரும் அவாம்கள்-பாமரர்கள், உங்களால் குர் ஆனை விளங்க முடியாது. மொழி பெயர்ப்பு களைப் படித்தும் உங்களால் குர்ஆனை விளங்க முடியாது என்று பெருமை பேசுகிறார்கள். இந்த மவ்லவிகள் பெருமை பற்றிக் கூறும் 2:34, 74:1-3, 45:37, 59:23, 21:19, 7:146,206, 21:19, 16:49, 32:15, 17:37, 4:36, 57:23, 16:23, 28:83, 16:22, 40:35,56,60, 31:7, 39:49, 11:10, 31:18, 49:13, 25:63 குர்ஆன் வசனங்களையும், முஸ்லிம் 2620, புகாரீ 4918, 6071, 6657, 4850, ஹதீஃத்களையும் நேரடியாகப் படித்து விளங்கினால் அவர்கள் எவ்வளவு பெரிய வழி கேட்டிலும், நாளை நரகை நிரப்பும் நிலையிலும் இருப்பதையும் உணர முடியும்.

அவாம்களான பாமரர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆனைப் படித்து விளங்கினால், இம்மவ்லவிகள் மனித குலத்திற்கு இழைத்து வரும் பெருந்தீங்கை உணர்ந்துத் தங்களைப் புறக்கணித்து நிராகரித்து விடுவார்கள், தங்கள் பிழைப்புக்கு பெரும் ஆபத்து வந்து விடும், தங்களின் கும்பிகள் காயும் என்ற அச்சத்தில்தான் பொதுமக்களுக்கு குர்ஆன் விளங்காது, அவர்களின் தாய் மொழியில் படித்தும் விளங்க முடியாது, அலீஃபுக்கு ஆயிரம் அர்த்தம் உண்டு, அல் என்றால் அப்படி விளங்க வேண்டும், இல் என்றால் இப்படி விளங்க வேண்டும் என்றெல்லாம் அண்டப் புளுகு, ஆகாசப் பொய்களைக் கூறி பொது மக்களை வஞ்சித்து நரகில் தள்ளத் துணிந்து செயல் படுகிறார்கள்.

ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது, மாதவிடாய் பெண்கள் குர்ஆனை தொடக்கூடாது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என அல்லாஹ்வோ, அவனது தூதரோ விதிக்காத விதிகளை (பார்க்க 42:21) விதித்து அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் மேதாவிகளாக (பார்க்க 49:16) இம் மவ்லவிகள் ஆணவம் பேசுகிறார்கள்! இம்மவ்லவிகளின் கேடுகெட்டப் புத்தி என்ன தெரியுமா? பேசப்படும் பொருளுக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டி, 2:159 இறை வாக்குக் கூறுவது போல தெளிவாக நேரடியாக அல்லாஹ்வே தெளிவாக விளக்கி இருக்கும் நிலையில் அதை மறைத்து இவர்கள் தவறாக சுய விளக்கம் கொடுத்து மக்களை வழி கெடுப்பதாகும். அதன் மூலம் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரது பெரும் சாபத்திற்கு இம்மவ்லவிகள் ஆளாவது குறித்து அவர்கள் அஞ்சுவதே இல்லை. உண்மையான இறை நம்பிக்கையுடனும் தக்வாவுடனும் இருந்தால் அல்லவா அல்லாஹ்வைப் பற்றிய பயம் ஏற்படப்போகிறது. (பார்க்க : 2:159-162)

இப்போது இம்மவ்லவிகள் ஒளூ இல்லாமல், மாதவிடாய் பெண்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனைத் தொடக் கூடாது என்பதற்கு கொடுக்கும் குர்ஆன் ஆதாரத்தைப் பாருங்கள். அல்வாக்கியா: 56:79 இறைவாக்குக் கூறும் “”தூய்மையான வர்களைத் தவிர (வேறு எவரும்) இதனைத் தொட மாட்டார்கள்” என்ற வசனத்தை ஓதிக்காட்டி பெருங்கொண்ட மக்களை குர்ஆனை நெருங்கவிடாமல் ஆக்கி, தங்கள் வயிற்றுப் பிழைப்பை ஜாம் ஜாம் என்று நடத்துகிறார்கள். இப்போது இந்த 56:79 வசனத்திற்கு முன்னாலுள்ள வசனங்கள் என்ன கூறுகின்றன என்று பாருங்கள்:

நீங்கள் அறிவீர்களாயின் இது மகத்தான சத்தியமாகும்! (56:76)
இது கண்ணியம் மிக்க குர்ஆனாகும். (56:77)
பாதுகாக்கப்பட்ட ஏட்டில் இருக்கிறது (56:78)
தூய்மையானவர்களைத் தவிர (வேறு எவரும்) இதனைத் தொடமாட்டார்கள். (56:79)
அகிலங்களின் இரட்சகனால் இது இறக்கி அருளப்பட்டது. (56:80)

இந்த ஐந்து(5) வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்! அவை என்ன கூறுகின்றன? குர்ஆன் இறக்கப்படுவதற்கு முன்னர் “”லவ்குல் மஃபூல்” என்னும் பாதுகாக் கப்பட்ட ஏட்டில் பாதுகாப்புடன் இருக்கிறது. தூய்மையான மலக்குகளைத் தவிர தூய்மையற்ற ஷைத்தான்கள் அவற்றைத் தொட முடியாது என்று குர்ஆன் இவ்வுலகிற்கு வஹீ மூலம் இறக்கப்படுவதற்கு முன்னர் உள்ள நிலையையே சொல்கிறது. இந்த உண்மையை “”அகிலங்களின் இரட்சகனால் இது அருளப்பட்டது” என்ற 56:79 இறைவாக்கிற்குப் பின்னுள்ள 56:80 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது.
ஷைத்தான் சில உச்சாடனங்களை இந்த முஹம்மதுக்கு அறிவிக்கிறான். அவற்றை இந்த முஹம்மது மக்களுக்குப் படித்துக் காட்டி மக்களை வழிகெடுக்கிறார் என்று அன்றைய மத குருமார்களான தாருந்நத்வா ஆலிம்கள் அவ தூறாகக் கூறி மக்களை வழிகெடுக்க முற்பட்ட போது, அவர்களின் அவதூறை அம்பலப்படுத்தி அல்லாஹ் இறக்கிய வசனமே 56:79 வசனமாகும். அன்றைய தாருந்நத்வா ஆலிம்களை, அடிக்கு அடி, ஜானுக்கு ஜான் அப்படியே பின்பற்றி ஒளூ என்ற சுத்தமானவர் அன்றி மற்றவர்கள் குர்ஆனைத் தொடக்கூடாது என்ற அண்டப் புளுகைக் கூறி பெருங்கொண்ட மக்களை குர்ஆனை நேரடியா கப் படித்து விளங்குவதை விட்டும் தடுத்து வருகிறார்கள்.

இந்த மவ்லவிகள் எந்த அளவு மூடர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். நபி(ஸல்) அவர்களது காலத்தில் 114 அத்தியாயங்களைக் கொண்ட முழு குர்ஆனும் இன்று நம்மிடம் இருப்பது போல் இருந்ததா? இல்லையே! அப்படி யானால் இந்த மவ்லவிகள் இன்று சொல்லும் இந்த பித்அத்தான ஃபிக்ஹு சட்டம் நபி(ஸல்) காலத் தில் கடைபிடிக்கப்பட்டிருக்குமா? அன்றும் இன்றும் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுகிறதே. அந்தப் பெண்களிலும் முழு குர்ஆனையும் மனன மிட்ட ஹாஃபிழ்கள் இருக்கிறார்களே. அவர்க ளுக்கு மாதவிடாய் ஏற்படுவது இல்லையா? ஆண், பெண் ஹாஃபிழ்களை ஒளூ இல்லாமல் தொட லாமா? இதற்கு என்ன சட்டம் சொல்வார்கள்.

இன்று முழு குர்ஆனும் ஆடியோ(புற்dஷ்லி), விடியோ(Vedஷ்லி) கேசட்டுகள், சிடி டிவிடி பென்டிரைவ் என பல வடிவங்களில் வந்துவிட்டனவே. அவற்றைத் தொடுவதின் ஃபிக்ஹு சட்டம் என்ன? இப்படி ஒரு மூடத்தனமான சட்டம் சொல்கிறோமே அறிவுள்ள மக்கள் என்ன சொல்வார்கள் என்ற வெட்கமான உணர்வாவது இந்த மவ்லவிகளுக்கு இருக்கிறதா? மக்கள் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கக் கூடாது. அப்படி விளங்கி விட்டால் தங்களின் ஹராம்களிலேயே மிகக் கொடிய கொடு வட்டியை விட கொடிய ஹராமான தொழிலுக்கு ஆபத்து வந்து விடும் என்ற அச்சம் காரணமாகவே பொது மக்கள் குர்ஆனை தங்கள் தங்கள் மொழிகளிலேயே நேரடியாகப் படித்து விளங்குவதைக் கடுமையாகத் தடுக்கிறார்கள். அதையும் அவர்க ளின் ஃபிக்ஹு சட்டமே அம்பலப்படுத்துகிறது. அதாவது குர்ஆன் படிக்க முடியாத அளவில் சின்னஞ் சிறிய அளவில் (பாக்கெட் சைஸ்) இருந்தால் அதை ஒளூ இல்லாமல் தொடலாம். அதை பாக்கெட்டில் பரக்கத்துக்காக வைத்துக் கொண்டு பாத்ரூம் முதல் எங்கு வேண்டுமானா லும் செல்லலாம் என்ற மூடச் சட்டமே அவர்க ளின் வக்கிரப் புத்தியை அம்பலப்படுத்துகிறது.
(பார்க்க : இஆனா பாகம் 1, பக்கம் 65)

இம்மவ்லவிகளின் சுயநல குறுகிய புத்தி காரணமாக பெருங்கொண்ட முஸ்லிம்களை குர்ஆனை விட்டும் தூரப்படுத்தி விட்டதால் ஏற்பட்ட பெருங்கேடு என்ன தெரியுமா? 5:87, 10:59, 16:116 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல், மார்க்கம் ஹலாலாக்கியதை ஹராம் என்றும், ஹராமாக்கியதை ஹலால் என்றும் அல்லாஹ் மற்றும் அவனது தூதர் பெயரைச் சொல்லியே மக்களை ஏமாற்றி இம்மவ்லவிகள் வயிறு வளர்க்க முடிகிறது. 42:21 வசனம் கூறுவது போல் இம்மவ்லவிகள் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அல்லாஹ் விதிக்காததை எல்லாம் ஃபிக்ஹ், இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிசி எனக் கூறி ´ஷிர்க், குஃப்ர், பித்அத் போன்ற கொடிய நரகில் கொண்டு சேர்க்கும் பாவச் செயல்களில் தங்களை நம்பியுள்ள அப்பாவி முஸ்லிம்களை மூழ்கடிக்க முடிகிறது. 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டு (நவூதுபில்லாஹ்) அவர்களும் வழிகெட்டு பெருங்கொண்ட மக்களையும் வழிகெடுத்து நரகில் தள்ள முடிகிறது.

´ஷிர்க்கை ´ஷிர்க் அல்ல என்றும், ´ஷிர்க் அல்லாததை ´ஷிர்க் என்றும், குஃப்ரை குஃப்ர் அல்ல என்றும் குஃப்ர் அல்லாததை குஃப்ர் என்றும், பித்அத்தை பித்அத் அல்ல என்றும், பித்அத் அல்லாததை பித்அத் என்றும் துணிந்து அப்பட்டமான பொய்களைக் கூறி பெருங் கொண்ட மக்களை ஏமாற்றி வழிகெடுக்க முடிகிறது. வயிறு வளர்க்க முடிகிறது.
அந்த அடிப்படையில்தான் பிறையைப் புறக் கண்ணால் பார்ப்பது இபாதத்-வழிபாடு என்று இபாதத் அல்லாத-வழிபாடு அல்லாத பிறையை புறக்கண்ணால் பார்ப்பதை இபாதத்-வழிபாடு ஆக்கி தினசரி பிறைப் பார்ப்பதைக் கைவிட்டு, யூதர்களைப் பின்பற்றி 3-ம் பிறையை முதல் பிறை யாகக் கொண்ட கணக்கின்படி 29-ம் பிறையன்று (சரியான கணக்கின்படி 2-ம் பிறையாகக் காலை யில் உதித்து மாலையில் மறையும் பிறை) மாலை யில் மஃறிபுக்குப் பின்னர் கண்ணுக்குத் தெரியும் 2-ம் பிறையைப் பார்த்து விட்டு, முதல் பிறை பிறந்துவிட்டது, நாள் ஆரம்பித்துவிட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது அடுத்த 3-ம் நாளே முதல் நாள் என்று மூடத்தனமாகக் கூறி மக்களை ஏமாற்றி வழிகெடுக்க முடிகிறது. நரகில் தள்ள முடிகிறது.

ஆம்! பாமரர்களுக்கு(அவாம்) குர்ஆன் விளங்காது, மொழி பெயர்ப்புகளைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது என்று பூச்சாண்டிக் காட்டிப் பெருங்கொண்ட மக்களை குர்ஆனை விளங்க முற்படுவதைத் தடுத்து அதைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, மார்க்கத்தை மார்க்கம் அல்லாததாகவும், மார்க்கமல்லாததை மார்க்கம் ஆக்கியும் தங்களின் வயிற்றை நரக நெருப்பால் நிரப்ப முற்படுபவர்களே இம்மவ்லவிகள். இவர்களின் இக்கேடுகெட்ட வழிகெட்டப் புத்தியை அல்குர்ஆன் 2:74, 174-176, 3:187, 31:6 இன்னும் பல குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
அல்லாஹ்வையும், அவனது இறுதித் தூதரை யும், இறுதி நெறி நூல் குர்ஆனையும் மனப்பூர்வ மாக (உதட்டளவில் அல்ல) ஒப்புக் கொண்டுள்ள முஸ்லிம்களை இப்படி வழிகெடுத்து நரகில் தள்ளும் மவ்லவிகள் அத்துடன் விட்டார்களா? இல்லையே! அல்குர்ஆன் முஸ்லிம்களின் வேதம், முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை. அவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று கடைந்தெடுத்த பொய் யான சுயநலச் சட்டத்தை அதாவது ஃபிக்ஹு சட் டத்தைக் கற்பனை செய்து முஸ்லிம்களிடையே பரப்பி வருகின்றனர்.

விளைவு முஸ்லிம் அல்லாதவர்களும் இதை ஏற்றுக் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரிய வேதம்; அதற்கும் நமக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை; ஒட்டும் இல்லை; உறவும் இல்லை; நம் சமூகம் பின்பற்றுவதுதான் நமக்குரிய வேதம் என்ற தவறான எண்ணத்தில், இறைவனால் இரத்து செய்யப்பட்ட வேதங்களில் அதீத பிரிய மும், உலகம் அழியும் வரை நடைமுறையில் இருக்கும் ஒரே வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் (பார்க்க : 5:3, 3:19,85) என்று இறைவனால் மிகத் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ள குர்ஆனில் அதீத வெறுப்பும் அடைகிறார்கள். குர்ஆனில் குற்றம் குறை கண்டுபிடிக்க பெரிதும் முயன்று வருகிறார்கள்.

ஆனால் அல்லாஹ் குர்ஆனில் என்ன சொல்கிறான் என்று பாருங்கள்.
2:159 இறைவாக்கில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித வர்க்கத்திற்கே தெளிவாக விளக்கி இருப்பதாகக் கூறுகிறான். ஹுதன்லின் னாஸ்-மனித வர்க்கத்திற்கே நேர்வழி காட்டி (2:185) என்று அல்லாஹ் கூறுகிறான். இவை அல்லாமல் மனிதர்களைக் குறிக்கும் நாஸ் என்று 241 இடங்களிலும், இன்சான் என்று 65 இடங்களிலும் இன்ஸ் என்று 18 இடங்களிலும் குறிப்பிட்டு அல்லாஹ் கூறியுள்ளான். இவை அல்லாமல் “”யா அய்யுஹன்னாஸ்” “”ஓ மனிதர் களே” என்று 2:21,168, 4:1,170,174, 10:2,3,57, 104,108, 22:1,5,49,73, 31:33, 35:3,5,15, 49:13 ஆகிய 18 இடங்களில் மனிதர்களை அழைத்தே அறிவுரை கூறுகிறான் அல்லாஹ்.

ஆமனு-ஈமான் கொண்டவர்கள் என்று 258 இடங்களிலும் “”யாஅய்யுஹல்லதீன ஆமனூ” “”ஓ ஈமான் கொண்டவர்களே என்று 2:104,153, 172,178,183,208,254,264,267,278,282, 3:100, 102, 118,130,149,156,200, 4:19,29, 43,59,71,94, 135,136,144, 5:1,2,6,8,11,35,51,54,87,90,94,95, 101,105,106, 8:15,20,24,27,29,45, 9:23,28,34, 38,119,123, 22:77, 24:21,27, 33:9,41,49,53,56, 69,70,47:7,33, 49:1,2,6,11,12, 57:28, 58:9,11,12, 59:18, 60:1,10,13, 61:2,10,14, 62:9, 64:9,14, 66:6,8 என சுமார் 86 இடங்களில் அழைத்து அறிவுரை கூறுகிறான்.

நபி என்று 43 இடங்களிலும், ரசூல் என்று 84 இடங்களிலும், யா அய்யுஹன்னபிய்யு” “”ஓ நபியே” என்று 8:64,65,70, 9:73, 33:1,28,45, 50,59, 60:12, 65:1, 66:1,9 சுமார் 13 இடங்களிலும் நபியை அழைத்து மக்களுக்கு அறிவுரைக் கூற கட்டளையிடுகிறான். இவை அல்லாமல் யா அய்யுஹல் உலமாவு” “”ஓ உலமாக்களே” என்று அழைத்து மக்களுக்கு அறிவுரை கூறுங்கள் என ஆலிம்களை அழைத்து ஒரேயொரு இடத்திலாவது கட்டளை யிட்டுள்ளதாக இந்த மவ்லவிக ளால் காட்ட முடியுமா?

ஆலிம் என்று 6:73, 9:94,105, 13:9, 23:92, 32:6, 34:3, 35:38, 39:46, 59:22, 62:8, 64:18, 72:26, ஆகிய 13 இடங்களில் காணப்படுகிறது. இந்த இறை வாக்குகள் அனைத்தும் அனைத்தையும் அறிந்த அல்லாஹ்வைக் குறிக்கின்றனவே அல்லாமல், மனிதர்களில் யாரையும் நிச்சயமாகக் குறிக்கவே இல்லை. இன்னும் 12:44ல் “”கனவின் விளக்கங்களை நாங்கள் அறியமாட்டோம்” என்று பிரமுகர்கள் கூறியதையும், 21:51 இறைவாக்கு இப்ராஹீம்(அலை) குறித்து அல்லாஹ் அறிந்தவ னாக இருந்ததாகவும், 21:81 இறைவாக்கு ஒவ்வொரு பொருள் குறித்தும் அல்லாஹ் அறிந்த வனாக இருப்பதையும் 30:22 இறைவாக்கு கற்ற றிந்தோருக்கு குர்ஆனில் பல சான்றுகள் இருப்ப தாகவுமே கூறுகின்றன. 29:43 இறைவாக்கும் அறிவுடையோர் தவிர வெறெவரும் மனிதர் களுக்காகவே விளக்கியுள்ள உதாரணங்களை விளங்க மாட்டார்கள் என்று கூறுகிறது.

இப்போது சிந்தியுங்கள்! மனிதர்களுக்காக அல்லாஹ்வே தெளிவாக விளக்கியுள்ள குர் ஆனை அந்த மனிதர்கள் விளங்க முடியாது, மவ்லவிகளாகிய நாங்கள் விளக்கித்தான் மனிதர் கள் விளங்க முடியும் என்று கூறும் அவர்கள், மனிதர்களுக்கு விளக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இல்லவே இல்லை. மவ்லவிகளாகிய எங்களுக்கே இருக்கிறது என்று ஆணவம் வீண் பெருமை பேசுகிறார்கள் என்பதுதானே உண்மை. 42:21, 49:16 வசனங்களைப் படித்துப் பார்த்து இம் மவ்லவிகள் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கி றார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் வீண் பெருமை, நியாயமின்றி பெருமையடிப்பது அவர்களை எந்தளவு வழிகேட்டில் இட்டுச் செல்கிறது என்பதை 7:146 குர்ஆன் வசனம் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் சம்மட்டியடியாக அம்பலப்படுத்துகிறது. அது வருமாறு:

நியாயமின்றி, பூமியில் பெருமையடிப்பவர்களை, என் வசனங்களை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் ஒவ்வொரு வசனத்தையும் (தெளிவாக) கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதை ஏற்கமாட்டார்கள். தவறான வழியைக் கண்டாலோ, அதையே (தங்களுக்குரிய வழியாய்) ஏற்பார்கள். ஏனெனில் நம் வசனங்களை அவர்கள் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணித்தும் வருகின்றனர். (7:146)
இப்படி உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றி லிட்டத் தீபமாக அல்லாஹ் விளக்கி இருந்தும் இம்மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் நாளை மறுமையில் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு புலம்புவதை அழுது பிரலாபிப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. படித்துப் படிப்பினை பெறுவோர் தப்பினார்கள். மற்றவர்கள் 32:13, 11:118,119 குர்ஆன் வசனங்கள் கூறும் பரிதாபத்திற்குரிய நிலையிலுள்ளவர்களே!

இதுவரை கடவுள் நம்பிக்கையுள்ள முஸ்லிம்கள், ஆத்திகர்களை இம்மவ்லவிகள் இறையளித்த இறுதி வாழ்க்கை நெறிநூலை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருப்பதால் இழைத்து வரும் மாபெரும் கொடும் துரோகத்தை குர்ஆன் வசனங்களைக் கொண்டே பார்த்தோம்.இப்போது மாற்று மதங்களின் மதகுருமார் களின் சுயநலக் கற்பனையில் உருவான கோடிக் கணக்கான பொய்க் கடவுள்களுடன், தன்னந் தனியனான மனைவி, மக்கள், உணவு, குடிப்பு, இடைத்தரகர் என எவ்விதத் தேவையுமில்லாத ஒரே கடவுளையும் மறுக்கும் நாத்திகர்களுக்கு இம்மவ்லவிகள் இழைத்து வரும் மாபெரும் துரோகம் பற்றிப் பார்ப்போம்.

இறையளித்த இறுதி வாழ்க்கை நெறிநூல் முஸ்லிம்களுக்கு மட்டுமான வேதம்; அதை முஸ்லிம் அல்லாத மற்றவர்களுக்குக் கொடுக்கவே கூடாது. மேலும் அதை மவ்லவிக்குப் படித்து பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விளங்க முடியும். மவ்லவிகள் அல்லாத முஸ்லிம்களாகட்டும், வேற்று மதத்தினராகட்டும், நாத்திகர்களாகட்டும் விளங்கவே முடியாது. மவ்லவிகள் குர்ஆனுக்கு கொடுக்கும் விளக்கத்தையே வேதவாக்காகக் கொண்டு அவற்றை ஏற்றுச் செயல்பட வேண்டும் என்றே இம்மவ்லவிகள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இப்படி இந்த மவ்லவிகள் கூறிவருவதை அல்லாஹ் மீதும் மறுமையிலும் நம்பிக்கையுள்ள முஸ்லிம்களிலுள்ள மருத்துவர், பொறிஞர், வழக்குரைஞர், கணக்காளர் போன்ற படித்துப் பட்டம் பெற்று, அவற்றைத் தொழிலாகக் கொண்டு பொருளீட்டும் பட்டதாரிகளே, வேத வாக்காகக் கொண்டு செயல்படும்போது, கடவுள் மீதும், மறுமையிலும் அறவே நம்பிக்கையற்ற நாத்திகர்கள் உலகியல் நடைமுறைப்படி, படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகள் சொல்வதுதான் குர்ஆனிலுள்ளது என்று நம்புகிறார்கள் என்றால் அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? அவர்கள் குர்ஆனை நேரடியாகப் படிக்க இந்த மவ்லவிகள் அனுமதிப்பதில்லையே!

அதே சமயம் மற்ற மதங்களிலுள்ள மதகுரு மார்கள் போதிக்கும் மூடநம்பிக்கைகள், மூடச் சடங்குச் சம்பிரதாயங்கள், அனைத்து வகை அனாச்சாரங்களையே, இந்த மவ்லவிகளும் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் அப்படியே பின்பற்றி அந்த வழிகேடுகளையே மக்களுக்குப் போதிப்பதால், முஸ்லிம் மதம் உட்பட எல்லா மதங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே, மக்களைக் கடவுள் பெயரைச் சொல்லி ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும் அற்பர்களே! என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்.

எனவே கடவுள் இல்லை என நிலைநாட்டி விட்டால் இந்த அற்பர்களின் கொட்டம் ஒழிந்து விடும் எனத் தப்புக் கணக்குப் போட்டார்கள் இந் நாத்திகர்கள். இது தப்புக் கணக்குத்தான் என்பதை ஈ.வே.ரா. தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் கள்குடி ஒழிந்துவிடும். இல்லாமல், போய்விடும் என்று நினைத்த மூட நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது. ஆயினும் நாத்திகர்கள் வழி தவற இந்த மவ்லவிகளே மூலகர்த்தாக்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஏகன் இறைவன் அளித்த இறுதி வாழ்க்கை நெறிநூலை அந்த மக்களிடம் இருந்து மறைத்தது தான் அவர்கள் வழி தவறக் காரணமாயிற்று.

இந்த மவ்லவிகள் அல்குர்ஆன் நாடு, மாநிலம், இனம், மொழி, ஜாதி, மதம் பேதமில்லாமல் மனித குலத்திற்கே சொந்தமானது. எண்ணற்ற இடங்களில் மனித குலத்தை அழைத்தே இறைவன் அறிவுரை கூறியுள்ளான். அல்குர்ஆன் ஒரு திறந்த புத்தகம். மனிதர்களில் எவரும் எவ்வித நிபந்தனையுமில்லாமல் அதைப் படித்து அதன் போதனைகள்படி நடக்கலாம் என்ற நிலையில் குர்ஆனை மனிதர்கள் படித்து விளங்குவதைத் தடுக்காமல் இருந்திருப்பார்களேயானால், அறிவு ஜீவிகள் வழிதவறிச் செல்லவோ, நாத்திகம் போதிக்கவோ வாய்ப்பே ஏற்பட்டிருக்காது.

காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், பெரி யார், கோவூர், கலைஞர் போன்றோர், குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்க முற்பட்டிருந்தால், இந்த மவ்லவிகள் இஸ்லாமாகப் போதிக்கும், மனித குலத்தில் வேற்றுமைகளைப் புகுத்தும் தர்கா(சமாதி), தரீக்கா சடங்குகள், மத்ஹபுகள், இயக்கங்கள், கழகங்கள், அமைப்புகள் போன்ற பிரிவுகள், கத்தம், பாத்தியா போன்ற கருமாதிச் சடங்குகள், மவ்லூது, ராத்திபு போன்ற பஜனை கள், மீலாது விழா, ஊர்வலம் போன்ற அனாச் சாரங்கள், மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங் கள் போன்றவை அனைத்தும் ஆரிய மத குருமார்களின் துர் போதனைகளால், ஹிந்துப் பெருங்குடி மக்களிடம் காணப்படும் மூடச் சடங்குகளை அப்படியே காப்பி அடித்து அவற்றிற்கு அரபு மொழியில் பெயர் சூட்டி மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்களே அல்லாமல், இவற்றில் எதுவும் குர்ஆன் கூறும் போதனைகள் அல்ல என்பதை விளங்கி இருப்பார்கள்.

இதர மதங்களில் காணப்படும் மதகுருமார் கள் என்ற பெயரில் கடவுள் பெயரைச் சொல்லி அவர்கள் மீது குருட்டு நம்பிக்கை வைத்துள்ள பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பது போல், இந்த மவ்லவிகளும் அவர்களை குருட்டுத்தனமாக நம்பியுள்ள பெருங்கொண்ட முஸ்லிம்களை எமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கிறார்கள். அவர்களின் போதனைக்கும் குர்ஆனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அறிந்து, குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் அசல் போதனைகளை மக்களிடையே பரப்ப முற்பட்டிருப்பார்கள்.

இந்த மவ்லவிகளின் மோசடிகள் வெளிப்பட்டிருக்குமே அல்லாமல், அந்த அறிவு ஜீவிகள் ஒரே கடவுள் மறுப்புக் கொள்கையை நாத்திகத்தைப் பரப்ப முற்பட்டிருக்க மாட்டார்கள். இந்த மவ்லவிகள் மனித குலத்திற்கே சொந்தமான நெறி நூல் குர்ஆனை முஸ்லிம்களின் வேதம், மற்றவர் களுக்கு அதில் எவ்வித உரிமையும் இல்லை. அவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று தடுத்தக் காரணத்தால் என்ன என்ன விளைவு ஏற்பட்டிருக்கிறது தெரியுமா?

குர்ஆன் முஸ்லிம்களின் வேதம், நமக்குச் சம்பந்தமே இல்லை என்ற நிலையில், காக்கைக் கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல், தங்களிடமுள்ள கறைபட்ட, இறைவனால் இரத்து செய்யப்பட்ட வேதங்களைத் தூக்கிப் பிடித்து, யுகம் அழியும் வரை அமுலிலுள்ள, நிறைவு செய்யப்பட்ட இறுதி வாழ்க்கை நெறி நூல் (பார்க்க : 5:3, 3:19,85) அல்குர்ஆனை இழிவுபடுத்தவும் முற்படுகிறார்கள்.

இது மனிதனின் பலகீன சுபாவம்தான். ஆத்தி ரத்துடன் அணுகினால் சரியானது தவறாகவும், அனுதாபத்துடன் அணுகினால் தவறும் சரியான தாகவும் தெரியத்தானே செய்யும். அற்பப் புத்தி கொண்ட இந்த மவ்லவிகள் அல்குர்ஆன் முஸ்லிம் களின் வேதம், முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம். முஸ்லிம் அல்லாதாருக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது என்று சுயநலத்துடன் அற்ப உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு பிதற்றுவதால் இந்தப் பாதக நிலை உருவாகியுள்ளது. குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல மற்ற மதத்தினருக்கும், ஏன் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று குர்ஆன் கூறும் உண்மையை இந்த மவ்லவிகள் மறைக்காமல் சொல்லி வந்திருப்பார்களேயானால், இன்று இந்த உலகம் 1450 வருடங்ளுக்கு முன்னர் அழிவின் விளிம்பில், நரக விளிம்பில் இருந்தது போன்ற படுபாதாளத்தில் ஒருபோதும் விழுந்திருக்காது.

நாத்திகத்தை அதாவது மதகுருமார்கள் சுய நலத்துடன் கற்பனை செய்த கோடிக்கணக்கான பொய்த் தெய்வங்களுடன் அண்ட சராசரங் களையும் அனைத்தையும், மனிதனையும் படைத்தத் தன்னந் தனியனான, சோறு, கறி என எதுவும் தேவையற்ற ஒரே இறைவனையும் மறுக் கத் துணிந்ததற்குக் காரணம் அனைத்து மதங்களி லுமுள்ள மதகுருமார்கள் மக்களை மூட நம்பிக் கைகளைக் கொண்டு ஏமாற்றி வஞ்சித்துத் தொழில் செய்து வயிறு வளர்த்து வருவதுதான். மனித குலத்தை ஜாதிகளாகப் பிரித்து ஒரு சிறு பிரிவினரை உயர் ஜாதியாகவும் பெரும் பிரிவினரைக் கீழ் ஜாதியாகவும், தீண்டத்தகாத ஜாதியாகவும் அவர்களைக் கொத்தடிமைக ளாக்கி உயர் ஜாதியினர் சொகுசு வாழ்க்கை வாழ்வதுதான்.

கடவுள் பெயரைச் சொல்லித்தானே இப் படிப் பெருங்கொண்ட மக்களை அடிமை களாக்கி ஆதிக்கம் செலுத்தி குபேர வாழ்க்கை வாழ்கிறார்கள். இது பெருத்த அநீதியல்லவா? என்று நினைத்து அவர்களின் அறிவுக்கு எட்டிய வகையில் சீர்திருத்தக் கருத்துக்களை முன் வைத்த னர். இந்தக் கபட மவ்லவிகள் அவர்களை குர் ஆனை நெருங்க விடாமல் தடுத்ததால் அதிலுள்ள அவர்களே விரும்பி வரவேற்கும் பொன்னான கருத்துக்களை அறிய முடியாமல் ஆகிவிட்டது. மேலும் இந்த மவ்லவிகள் குர்ஆனிலுள்ளவற் றையே போதிப்பதாக அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யைக் கூறி அவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால், கொயபல்ஸ் கூற்று போல இம் மவ்லவிகள் கூறுவதே குர்ஆனில் உள்ளது என்று தவறாக நம்பி இந்த அறிவு ஜீவிகள் குர்ஆனையும் வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். குர்ஆனை விமர்சிக்கவும் முற்பட்டு விட்டார்கள்.

ஆக மூட மவ்லவிகள் முஸ்லிம்களுக்கு மட்டு மல்ல துரோகம் இழைத்து வருவது; ஆத்திகர்கள், நாத்திகர்கள் என மனித குலம் அனைவருக்கும் மாபெரும் துரோகம் இழைத்து வருகின்றனர். இந்த வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆக கேடுகெட்ட படைப்பு அனைத்து மதங்க ளின் மதகுருமார்கள், அவர்களிலும் ஆகக் கேடு கெட்டவர்கள் கறைபடாத குர்ஆனை கையில் வைத்திருக்கும் இந்த மவ்லவிகளே! பார்க்க : 7:146,175-179, ஆம்! நாளை மறுமையில் மனித குலத்தினர் அனைவரின் பாவங்களையும் சுமக்கப் போவது பெருமை பேசும் இம்மவ்லவிகளே! இதோ குர்ஆன் கூறுகிறது. படித்துப் படிப்பினை பெறுவார்களாக!

மறுமை நாளில் அவர்கள், தங்களின் (பாவ) சுமைகளையும், அறிவில்லாமல் இவர்கள் வழி கெடுத்தவர்களின் (பாவ) சுமைகளையும் முழுமையாகச் சுமக்க வேண்டும். இவர்களின் சுமை மிகவும் கெட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அந்நஹ்ல் : 16:25)
மவ்லவிகளை நாம் மிகக் கடுமையாக விமர் சிப்பது பலரை முகம் சுளிக்கச் வைக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். அவர்களை திருப்திப்படுத்தும் விதமாக நாம் எழுதத் தயாரில்லை. அல்லாஹ்வைத் திருப்திபடுத்துவதுதான் எமது நோக்கம். நம்மீது வெறுப்படைகிறவர்கள் கருத் தூன்றி குர்ஆனைப் படிக்காதவர்களே!

நடுநிலையான ஒரு நல்ல மனிதர் ஒரு வழியாகப் போய்க் கொண்டிருந்தார். ஓரிடத்தில் ஐந்து பேரானாலும் சமாளிக்கக் கூடிய முறுக்கேறிய கைகளை உடைய ஓர் இளம் வாலிபரை ஒரு மரத்தில் கட்டி வைத்து பின்னி எடுக்கிறார்கள். முகம், உடம்பு, கைகள் என இரத்தம் வழிந்தோடுகிறது. அந்த நடுநிலையான மனிதரால் அக்கோரக் காட்சியை ஜீரணிக்க முடியவில்லை. ஏன் ஐயா! ஊரே சேர்ந்து அந்த அப்பாவி இளைஞனை இப்படிச் சித்திரவதை செய்கிறீர்கள் என்று கோபத்துடன் கேட்கிறார். ஐயா! உங்களுக்கு விபரம் தெரியாது.

இவனைப் போய் அப்பாவி என்கிறீர்கள். இவன் செய்த கொடூரச் செயல்கள் உங்களுக்குத் தெரியுமா? ஒரு வீட்டினுள் புகுந்து அங்கிருந்த பெண்களை கற்பழித்துக் கொன்று விட்டு, அங்கிருந்த ஆண்கள், பிள்ளைகள் அனைவரை யும் கொன்று விட்டு, வீட்டிலிருந்த பணம், தங்கம், வெள்ளி நகைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டிக் கொண்டு தப்பி ஓட முற்பட்டான். ஊர்க் காரர்களுக்கு விஷயம் தெரியவந்து ஒன்று சேர்ந்து அவனைப் பிடித்து இந்த மரத்தில் கட்டி வைத்து இப்படி புத்தி வர அடிக்கிறோம் என்று விபரத்தைக் கூறி, அவன் எடுத்துச் செல்லவிருந்த பணம், நகைகளையும் காட்டினால், முன்பு அனுதாபப் பட்டவர், இப்போது எப்படி மாறுவார். கையில் கிடைத்ததைக் கொண்டு அவரும் அவனைத் தாக்க முற்படுவாரா? இல்லையா? அந்த கொலைகாரன் மீது யாருக்கும் அனுதாபம் பிறக்குமா? இல்லையே!

ஆனால் அந்தக் கொலைகாரனை விடப் பெரும் பாவிகள் இந்த மவ்லவிகள். அந்தக் கொலைகாரனோ ஒரு குடும்பத்தினரைக் கொன்று அவர்களின் பொருளை அபகரித்துள்ளான். அதற்கு மாறாக இந்த மவ்லவிகள் மனித குலத்தையே குர்ஆனை விட்டுத் தூரப்படுத்தி, பெருங்கொண்ட மக்களை நாளை நரகில் தள்ளும் பெரும் பாவத்தைச் செய்வதோடு உலக மக்களின் பாவச் சுமையை சுமக்கப் போகிறார்கள் என்பதை 16:25 இறைவாக்கை மீண்டும் படித்து விளங்கலாம்.

மேலும் எவர்கள் இறுதி நெறிநூல் குர்ஆனை அன்றா டம் பொருள் உணர்ந்து படித்து விளங்கி வருகிறார்களோ அவர்கள் மார்க்கத்தை மத மாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள இந்த மவ்லவிகளை நம்மை விட கடுமையாகத் திட்டவே ஆரம்பித்துவிடுவார்கள். குர்ஆனைக் கருத்தூன்றிப் படிக்காத பெருங்கொண்ட மக்களுக்காக நாம் பரிதாபப் படுகிறோம். அல்லாஹ் நேர்வழி காட்ட துஆ செய்கிறோம்.

Previous post:

Next post: