பீ.ஜையும்! சூன்யமும்!!

in 2014 செப்டம்பர்,ததஜ

அருளாளன், அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…
பீ.ஜையும்! சூன்யமும்!!

– அபூ அப்தில்லாஹ் செல் : 9345100888
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சூன்யம் பற்றி அல்குர்ஆன் அல்பகரா : 2:102 இறைவாக்கை மீண்டும் மீண்டும் பலமுறை நேரடியாகப் படித்து மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். அதில் “”மேலும், அவர்கள் சுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள். சுலைமான் நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தனர். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சுன்யத்தைக் கற்றுக் கொடுத்தனர்.” இப்பகுதியை மீண்டும் படித்துப் பாருங்கள்.

சுலைமான்(அலை) ஒரு நபி; அவர்களுக்கு இறைவன் மனித அறிவுக்கு எட்டாத சில அற்புதங்களைக் கொடுத்திருந்ததாக 21:81,82, 27:16-44, 34:12,13 ஆகிய வசனங்களில் கூறுகிறான். இவற்றைத் திரித்து அன்றைய மதகுருமார்கள் சுலைமான்(அலை) அவர்களை சூன்யக்காரன், சூனியம் செய்து மக்களை ஏமாற்றுகிறார். அதனால் நிராகரிப்பாளர் ஆகிறார் என்று கூறி மக்களைத் தங்கள் பக்கம் இழுக்க முற்பட்டனர்.

அதற்குப் பதிலடியாகத்தான் அல்லாஹ் சுலைமான்(அலை) நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள்தான் நிராகரிக்கின்றனர். அவர்கள்தான் மனிதர்களுக்குச் சூன்யத்தைக் கற்றுக் கொடுத்தார்கள் என்று கூறி எச்சரிக்கிறான். இதிலிருந்து என்ன விளங்குகிறது. சூன்யக்கலை நிராகரிப்பாளர்களான ஷைத்தான்கள் கற்றுக் கொடுக்கும் காஃபிராக்கும் ஒரு தீய செயல் என்பது தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் ஜின், மனித இனத்தைச் சோதிப்பதற்காகக் குடி, விபசாரம், சூது போல் சூன்யத்தைப் படைத்துள்ளான் என்பதை விளங்க முடிகிறது. இதை அடுத்த பகுதி உறுதிப்படுத்துகிறது; அது வருமாறு :

“இன்னும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (கற்றுக் கொடுத்தார்கள்) ஆனால் அவர்கள் இருவரும் “”நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம் (இதைக் கற்று) நீங்கள் நிராகரிப்பாளர்கள் ஆகிவிடாதீர்கள்” என்று சொல்லி எச்சரிக்காதவரை, எவருக்கும் இதைக் கற்றுக் கொடுக்கவில்லை. அப்படியிருந்தும் கணவனுக்கும், மனைவிக்குமிடையே பிரிவை உண்டாக்கும்(தீய) செயலைக் கற்றுக் கொண்டார்கள்; எனினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது.”

இப்பகுதியைப் படித்து விளங்குகிறவர்கள் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரிவை ஏற்படுத்தும் சூன்யத்தை சோதனையாக அல்லாஹ்வே இந்த இரு மலக்குகளுக்கு இறக்கினான் என்பது “”வமா உன்சில அலல் மலக்கைனி பிபாபில ஹாரூத்தவ மாரூத்த” என்ற அரபு வாசகம் உறுதிப்படுத்துகிறது.

பீ.ஜை. சொல்வது போல் 2:98-ல் காணப்படும் ஜிப்ரீலையும் மீக்காயிலையும் குறிப்பிடுவதாக இருந்தால், “வமா உன்சில ” இறக்கப்பட்டதை என்று அல்லாஹ் குறிப்பிடுவானா? மேலும் “”அலல் மலக்கைனி” என்ற பதத்தை 2:98-ல் குறிப்பிடாமல் 2:102-ல் குறிப்பிட்டு மக்களை குழப்பத்தில் ஆக்குவானா? மேலும் 2:98-ல் “”வமலாயிகத்திஹி” என்று வானவர்களைக் குறிப்பிட்டு, அவர்களில் சிறப்புக்குரியவர்களாக ஜிப்ரீலையும், மீக்காயிலையும் தனித்தும் கூறியுள்ளான். இந்த நிலையில் 2:102 காணப்படும் “”அலல் மலக்கைனி” என்ற அரபி பதம் அடுத்து வரும் ஹாரூத், மாரூத்தைக் குறிப்பிடாது, 2:98-ல் இடம் பெற்றுள்ள ஜிப்ரீலையும், மீக்காயிலையுமே குறிக்கும் என்று சுய சிந்தனையற்ற அறிவீனர்கள் மட்டுமே விதண்டாவாதம் செய்ய முடியும்.

ஹாரூத்தும், மாரூத்தும் ஷைத்தான்களாக இருந்தால் அவர்களுக்கு வஹீ மூலம் அல்லாஹ் செய்தி இறக்குவானா? என்ற சாதாரண சிந்தனையும் பீ.ஜைக்கு இல்லையா? அவர்கள் ஷைத்தான்களாக இருந்தால் “நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம். சூன்யத்தைக் கற்று நீங்கள் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்!” என்று எச்சரித்து இருப்பார்களா? என்ற சாதாரண அறிவும் பீ.ஜைக்கு இல்லையா? ஜின் இனமும், மனித இனமும் மட்டுமே சோதனை வாழ்க்கைக்குரியவர்கள், மலக்குகள் சோதனைக்குரியவர்கள் அல்ல என்று 51:56 இறைவாக்குக் கூறுவதை அறியாதவரா பீ.ஜை? இந்த நிலையில் மலக்குகளையும் சோதனைக்கு உட்பட்டவர்களாக்கி, மலக்குகள் கெட்டவற்றைக் கற்றுக் கொடுப்பார்களா? என்று வினா தொடுப்பவர் அறிவாளியா? அறிவீனரா? சூன்யம் கெட்டது என்று அறிந்த நிலையில் அது வெறும் தந்திரவித்தை என்று பிதற்றும் பீ.ஜை. நேர்வழி நடப்பவரா? வழிகேடரா? சிந்தியுங்கள்!

2:102-ன் இறுதிப் பகுதி:
“”தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எவ்வித நன்மையும் தராததையுமே கற்றுக் கொண்டார்கள். இதனை (சூன்யத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் அறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப் பெற்றுக் கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (2:102)

இந்த கடைசிப் பகுதியை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள். பீ.ஜை. சொல்வது போல், சூன்யம் வெறும் தந்திர வித்தை என்றால் அது பற்றி இந்த அளவு கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஒரு முஸ்லிம் இந்தத் தந்திர வித்தையைக் கற்று அதைத் தொழிலாகக் கொண்டு (MAGIC SHOW)  பிழைக்கிறார். அவற்றிலுள்ள தந்திரத்தை விளக்குகிறார். அதனால் அவர் காஃபிராகி விடுவாரா? 2:102 இறுதிப் பகுதி கூறும் கடும் தண்டனைக்கு ஆளாவாரா? பதில் என்ன? ஆம்! சூன்யக்கலை தந்திரவித்தை மட்டுமல்ல. முஸ்லிமான ஒருவனை காஃபிராக்கும் ஒரு மிகக் கொடுமையான பாவமான செயல். அதில் ஈடுபடுகிறவன், ஈடுபடப்பட 50 லட்சம் ரூபாய் பரிசு கொடுத்துத் தூண்டுகிறவன் ஒருக்காலும் முஃமினாக-உண்மை நம்பிக்கையாளனாக இருக்கவே முடியாது. இதுவே 2:102 இறைவாக்கு அறுதியிட்டு உறுதி கூறும் உண்மை.

இதற்கு மேலும் அல்குர்ஆனில் சூன்யம் பற்றிக் கூறும் கீழ்க்கண்ட சுமார் 52 இறைவாக்குகளை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கினால் சூன்யம் வெறும் தந்திரவித்தை மட்டுமல்ல, எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்குகள் விளைவதாக அல்குர்ஆன் 113,114 அத்தியாயங்கள் கூறும் தீங்குகள் போல் சூன்யத்தினாலும் எவ்விதப் புறச்சாதனமும் இல்லாமல் தீங்கு ஏற்படச் செய்ய முடியும். ஆயினும் அல்லாஹ்வின் நாட்டமின்றி சூன்யம் பலிக்காது. ஆயினும் அப்படிப்பட்ட சூன்யச் செயல்களில் ஈடுபடுகிறவன், ஈடுபடத் தூண்டுகிறவன் காஃபிராகிறான். மறுமையில் அவனுக்கு எவ்விதப் பாக்கியமும் கிடைக்காது. சூன்யக்காரன் ஒருபோதும் வெற்றியடையவே முடியாது. அவன் நாளை நரகில் எறியப்படுவான் என்பதைத் திட்டமாக அறிய முடியும். அந்த வசனங்கள் வருமாறு :

2:102, 5:110, 61:6, 6:7, 7:101,109,112,113,116,120, 10:2, 76,77,79, 80,81, 11:7, 15:15, 17:47, 20:57, 58,63,66,70,71, 73, 21:103, 25:8,47, 26:34, 35, 37, 38, 40,41,49, 153,185, 27:13, 28:36,48, 34:43, 37:15, 38:4, 40:24, 43:49, 46:7, 51:39,52, 52:15, 54:2, 74:24. சூன்யம் வெறும் தந்திரவித்தை மட்டுமே. புறச்சாதனம் இன்றி ஒருவருக்கு சூன்யம் மூலம் தீங்கு விளைவிக்க முடியாது என்ற பீ.ஜையின் மடமை வாதத்தை யார் நம்புவார்கள் தெரியுமா? மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களை 2:186 இறைவாக்குக் கூறுவது போல் இந்த மவ்லவிகளை நம்பாமல் முற்றிலும் முழுமையாக அல்லாஹ்வை மட்டுமே நம்பி 29:69; இறைவாக்குக் கூறுவது போல் அல்குர்ஆனில் நேரடியாகப் பாடுபடாமல், 9:31 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜையை ரப்பாகக் கொண்டு, அவரது சூன்யப் பேச்சில் கட்டுண்டு, அண்ணன் சொன்னால் போதும், அதுவே வேதவாக்கு, குர்ஆனை நேரடியாகப் பார்க்க வேண்டியதில்லை. அரபு படிக்காத, மவ்லவி அல்லாத எங்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற மூட நம்பிக்கையில் மூழ்கி இருப்பவர்களே பீ.ஜையின் மடமை வாதத்தைக் கண்மூடி நம்புவார்கள். பீ.ஜை.யை ரப்பாகக் கொள்வார்கள். மேலே எடுத்து எழுதியுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து 2:39 இறைவாக்குக் கூறுவது போல் காஃபிராகி நிரந்தர நரகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்வார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அவர்களுக்கு மாறாக மேலே எடுத்தெழுதப்பட்ட அனைத்து குர்ஆன் வசனங்களையும் குர்ஆனைப் புரட்டி நேரடியாகப் படித்து விளங்கியவர்கள் மட்டுமே சூன்யம் வெறும் தந்திர வித்தை மட்டுமல்ல, சூன்யத்தில் ஈடுபடுபவர்களை காஃபிராக்கி நரகையடையச் செய்யும் மிகக் கொடிய பாவமான செயல். அல்லாஹ் சோதனைக்காகப் படைத்த குடி, விபச்சாரம், சூது, ஏனைய பாவச் செயல்கள் போல் ஒரு பெரும் பாவச் செயலே சூன்யம். அதில் ஈடுபடுகிறவன் ஒருபோதும் வெற்றிபெற முடியாது. சூன்யம் செய்பவன் நிரந்தர நரகத்தையே அடைவான் என்பதைத் திட்டமாக அறிவார்கள்.

இப்போது பீ.ஜை.யின் 50 லட்ச ரூபாய் சவாலைப் பார்ப்போம் :
தனக்குச் சூன்யம் செய்து பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் ரூபாய் 50 லட்சம் பரிசாகத் தருவதாக பீ.ஜை. பல ஊடகங்களில் சவால் விட்டிருப்பதோடு, நாடு முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டி மலிவு விளம்பரம் தேடியுள்ளார். பீ.ஜை. அற்பமான இவ்வுலக விளம்பரப் பிரியர் என்பதை அவருக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து நிலை நாட்டி வருகிறார். அவரது அண்ணன் P.S..அலாவுத்தீன் “”ஒரு நாடகம் அரங்கேறுகிறது” என்ற தர்கா, தரீக்காக்களுக்கு எதிராக எழுதிய ஆக்கத்தைத் தனது பெயரில் வெளியிட்டு அற்ப விளம்பரம் தேடினார். 1985-ல் காயல்பட்டினம் இருட்டு திக்ர் பேர் வழி ஜலீல் மொஹிதீனுடன் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக “”முபாஹலா” செய்து அற்ப விளம்பரம் தேடினார். 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை, அந்நஜாத் ஆசிரியராக இருக்கும்பொழுது முதல் பக்கத்தில் தனது பெயரைக் கொட்டை எழுத்தில் போட்டு அற்ப விளம்பரம் தேடினார். அக்காலக் கட்டத்தில் இடம்பெற்ற பொது நிகழ்ச்சிகள் அறிவிப்புச் சுவரொட்டிகளில் கொட்டை எழுத்தில் தனது பெயரை நாம் மறுத்தும் போட்டு அற்ப உலக விளம்பரம் தேடினார். நாம் தயாரித்துக் கொடுத்துவிட்டு துபை சென்ற சமயம் அந்த ஆக்கத்தைத் தனது பெயரில் போட்டு அற்ப உலக விளம்பரம் தேடினார்.

1987 ஜூனில் நம்மை விட்டு வெளியேறியதிலிருந்து இன்று 2014 வரை பீ.ஜை என்ற தனது பெயரை விளம்பரப்படுத்தும் புகழ் விரும்பியாகச் செயல்படுவது அவரது பக்தர்கள் அல்லாத அனைவரும் அறிந்த இரகசியம். ஒரு நகைச்சுவையான செய்தி. அவர் நம்மோடு வந்து இணைந்த புதிது. அவர் தமிழில் பீ.ஜே. என்றும் ஆங்கிலத்தில் P.J. என்றும் தன்னைப் பிரபலப்படுத்திக் கொண்டிருந்தார். ஏன் பீ.ஜை. நீங்கள் கையயழுத்திடுவது ஜைனுல் ஆபிதீன் என்று. அப்படியானால் பீ.ஜை என்றுதான் அழைக்க வேண்டும். அதேபோல் தமிழில் ز என்ற அரபி எழுத்துக்கு சரியான உச்சரிப்புக்குரிய எழுத்து இல்லை. அதனால் அதற்கு நெருக்கமான ஜ என்ற எழுத்தைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆங்கிலத்தில் ز-க்கு நெருக்கமான Z இருக்கவே இருக்கிறது. சரியான உச்சரிப்பாக Z இருக்க நீங்கள் ஏன் தவறான J யைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்கப் பட்டதற்கு பீ.ஜே. எவ்விதக் கூச்சமும் இல்லாமல் சொன்ன பதில் என்ன தெரியுமா?

பீ.ஜை. என்று தமிழிலோ, PZ என்று ஆங்கிலத்திலோ சொன்னால் அவை எளிதாக மக்கள் வாயில் நுழையாது. பீ.ஜே. என்று தமிழிலும், P.J என்று ஆங்கிலத்திலும் சொல்லும்போது அவை மக்களுக்கு பெயரை உச்சரிப்பதற்கு, விளம்பரப்படுத்த எளிதாக இருக்கும் என்று பதிலளித்ததிலிருந்து அவரது புகழ் பைத்தியம் எந்தளவு இருக்கிறது என்பதை யாரும் எளிதில் புரியலாம். முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று சொல்வது போல் பீ.ஜையின் அற்பமான இவ்வுலகப் புகழ் பைத்தியம் இன்றளவும் நீடிக்கிறது. அந்த அடிப்படையில்தான் ஒரு நாத்திகன் கடவுளைக் காட்டிவிட்டால் பல லட்சம் தருவதாக சவால் விட்டது போல், பீ.ஜை. தனக்குச் சூன்யத்தால் பாதிப்பை ஏற்படுத்திவிட்டால் 50 லட்சம் தருவதாக சவால் விட்டுள்ளார். பிதற்றி உள்ளார். ஆம்! அவர் அவரது இளம் பிராயத்தில் நாத்திகச் சிந்தனைக்கு அடிமைப்பட்டிருந்தது இன்றும் எதிரொலிக்கிறது. இல்லை என்றால் சூன்யம் செய்வது மிகக் கொடிய பெரும் பாவம், குஃப்ரை ஏற்படுத்தும். நாளை மறுமையில் நிரந்தர நரகம் என்று தெள்ளத் தெளிவாக, திட்டமாக, நேரடியாக குர்ஆன், ஹதீஃத் கூறிக்கொண்டிருக்க, குர்ஆன், ஹதீஃதை நிராகரித்து குஃப்ரிலாகித் துணிந்து தனக்குச் சூன்யம் செய்து பாதிப்பை ஏற்படுத்தி விட்டால் 50 லட்சம் தருவதாக சவால் விட முடியுமா? இறை நிராகரிப்பில் – குஃப்ரில் மூழ்க முடியுமா? ஒரு முஃமின் ஒருபோதும் அப்படி சவால்விட துணியமாட்டார்.

கடவுளைக் காட்டினால் லட்சக் கணக்கில் பரிசு தருவேன் என்று ஒரு நாத்திகன் சவால் விட்டபோது, கடவுளைக் காட்ட முடியவில்லை என்பதால், கடவுள் இல்லவே இல்லை என்ற நாத்திகர்களின் குர்ஆனுக்கு முரணான உளறல் உண்மையாகி விடுமா? அதேபோல் பீ.ஜைக்குச் சூன்யம் செய்து பாதிப்பை ஏற்படுத்தாவிட்டால் சூன்யம் இல்லவே இல்லை என்ற பீ.ஜையின் குர்ஆனுக்கு முரணான உளறல் உண்மையாகி விடுமா? 47:24 இறைவாக்குக் கூறுவது போல் பீ.ஜை. ரசிகர்களுக்கு முரணாக உள்ளத்திற்குப் பூட்டுப் போடாமல் சுயமாகச் சிந்திப்பவர்கள் உண்மையை உணர முடியும்.

இவரது இந்த உளறல் சமூகத்தில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் தெரியுமா? பெரும்பான்மை முஸ்லிம் சமூகம் மதகுருமார்களான மவ்லவிகள் உட்பட நூறு இருநூறுக்காகவே ஈமானை இழந்து குஃப்ரிலாகும் நிலை இருக்க, 50 லட்சம் என்றால் எந்தளவு ஈமானை இழக்க முற்படுவார்கள்! சிந்தியுங்கள்! அவர்களின் அந்தத் தீய முயற்சிக்கு யார் காரணம்? சாட்சாத் பீ.ஜைதானே? அவர்களை விட பீ.ஜைதானே இறை நிராகரிப்பில் அதி முன்னணியில் இருக்கிறார். 16:25 இறைவாக்குக் கூறுவது போல், இவர் வழிகெடுத்த பெரும் கூட்டத்தின் சுமையையும் பீ.ஜைதானே சுமக்கப் போகிறார்!

பீ.ஜை.யே ஒரு சூன்யக்காரராகத்தான் இருக்கிறார். 6:112 இறைவாக்குக் கூறும் மதியை மயக்கும் அலங்கார வார்த்தைகளைக் கொண்டும் (ஜுஃக்ருபல் கவ்ல்), பயானில் சிஹ்ர் உண்டு அதாவது பேச்சில் சூன்யம் உண்டு என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளது போல், தனது சூன்யப் பேச்சால் இளைஞர்களையும், இளம் பெண்களையும் மயக்கி, தான் பேசும் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணான பேச்சையும் வேதவாக்காகக் கொண்டு கண்மூடிச் செயல்படும் பரிதாப நிலைக்கு ஆளாக்கி வருகிறார். சூனியம் என்றால் வசப்படுத்துதல், அதாவது பிறரை தன் வசப்படுத்துதல் என்று பொருள். சிலருக்கு இறைவன் அளித்துள்ள பேச்சுக் கலையின் மூலம் பலரை அவர்கள் வசீகரம் செய்து விடுகின்றனர். உட்கார்ந்த இடத்தை விட்டு எழக்கூட மனமில்லாமல் மக்கள் அவர்களது பேச்சில் கட்டுண்டு விடுகின்றனர். இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் பேச்சுக் கலையில் சூன்யமுள்ளது என எச்சரித்துள்ளார்கள். இத்தகைய திறமை பெற்றவர்களின் தவறான கருத்துக்களும் கூட சரியான கருத்துக்கள் எனக் கொள்ளப்படும். மக்கள் இத்தகைய சூன்ய திறமை பெற்றவர்களின் சொல்லாற்றலில் மயங்கி அவர்கள் கூறுகின்ற தவறானவற்றையும் சரியானவை என நம்பி விடக்கூடாது, அவர்களின் பொய்க் கூற்றுக்களையும் உண்மையானவை என நம்பி ஏமாந்து வழிகெடக் கூடாது என்று எச்சரித்தே “”பயானில் சூன்யம் உள்ளது” என்று நம்மை நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள்.

ஆம்! “பொய்யுடையொருவன் தன் சொல்வன்மையினால் மெய் போலும்மே, மெய் போலும்மே” என்பதைச் சிந்தித்து விளங்கி, அப்படிப்பட்ட பொய்யர்களின் வலையில் சிக்காமல் தவிர்ப்பதே நேர்வழி! இன்று முஸ்லிம்களில் பொய்யுடையவர்களில் ஆக முன்னிற்பது சாட்சாத் பீ.ஜையே! இதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளன. யாரும் நேரில் வந்து அவற்றைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். பீ.ஜை. சூன்யப் பேச்சாளர் மட்டுமல்ல. சூன்யம் செய்யப்பட்டவர் என்று நடுநிலையாளர்கள் சந்தேகம் கொள்ளும்படி தான் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. அவரது சூன்யப் பேச்சில் மயங்கிக் கிரங்கிக் கிடக்கும் அவரது பக்தர்களைத் தவிர, சுயமாக அவரது கடந்த 30 ஆண்டுகள், செயல்பாடுகளை உற்று நோக்குபவர்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்படவே செய்யும். உண்மையில் பீ.ஜைக்கு அல்லாஹ் மீதும், மறுமையிலும் உறுதியான நம்பிக்கை இருந்தால் ஒருபோதும் இப்படிப்பட்ட இழிசெயல்களில், ஈமானைப் பரித்து குஃப்ரிலாக்கும் செயல்களில் ஈடுபடமாட்டார்.

இரண்டு மூன்று மதரஸாக்களில் ஓதி இறுதியில் உலவி பட்டம் பெற்றார். ஓதும் காலங்களிலும் வெளியே வந்த பின்னரும் நாத்திகச் சிந்தனை வயப்பட்டார். இந்தத் தடுமாற்ற நிலையில் ஜ.உ.ச.வில் இணைந்து இளவயதிலேயே அதில் பதவி பெற ஆசைப்பட்டார். அவர் எதிர்பார்த்த பதவி கிடைக்காததால் ஆத்திரப்பட்டு அவர்களுக்கு எதிராக அவரது அண்ணன் எழுதிய “”ஒரு நாடகம் அரங்கேறுகிறது” என்ற பிரசுரத்தைத் தனது பெயரில் வெளிட்டுப் புகழ் தேடினார். குர்ஆன், ஹதீஃத் சரி காணாத நிலையில் காயல்பட்டினம் ஜலீல் முஹைதீனுடன் முபாஹபலா செய்து பெயர் வாங்கினார்.

அப்போது தரீக்கா, தர்கா சடங்குகளை எதிர்த்தாலும் மத்ஹபில் பிடிப்புள்ளவராகத்தான் இருந்தார். 1985-ல் அந்நஜாத் ஆரம்பிக்கு முன்னர் நாம் திருச்சியில் நடத்திய இஸ்லாமிய மாநாட்டிற்கு வருவதாக எம்மிடம் வாக்களித்தார், அந்த வாக்கைக் காப்பாற்றவில்லை. அதற்குக் காரணமாக அவரது ஆப்த நண்பர் முஹைதீன் பாஷாவிடம் சொன்னது “”அவர்கள் மத்ஹபை எதிர்க்கும் கூட்டம். அதனால் கலந்து கொள்ளவில்லை” என்பதுதான். 1986ல் அந்நஜாத் ஆசிரியர் பொறுப்பை ரூபாய் 1000 சம்பளத்திற்கு ஏற்ற பின்னரே மத்ஹபை விட்டு விடுபட்டார். மத்ஹபுகலிலிருந்து விடுபட்டாலும் தனது பெயர் பிரபல்யத்திலிருந்து விடுபடவில்லை. “”அந்நஜாத் மாத இதழ்” என்ற பெயரில் லெட்டர் பேடு அச்சடித்துக் கொடுத்தோம். அதை மூலையில் எறிந்துவிட்டு எமக்குத் தெரியாமல் அச்சகத்தில் தனது பெயரில் லெட்டர் பேடு அச்சடித்து வாங்கியுள்ளார். எமக்குத் தெரிய வந்ததும் ஏன் பீ.ஜை. அந்நஜாத் பெயரில் பேடு இருக்க எம் அனுமதி பெறாமல் உங்களது தனிப் பெயரில், அந்நஜாத்தில் கணக்கில் அச்சடித்தீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா? அதை எனது சொந்த உபயோகத்திற்காக அச்சடித்துள்ளேன். அதற்குரிய செலவை நானே கொடுத்துவிடுகிறேன் என்று வாக்களித்தார். இந்த இரண்டு வாக்குகளிலும் அவர் பொய்யர் என்பது பின்னர் உறுதியாயிற்று.

1) அதற்குரிய பணம் அந்நஜாத்திலிருந்து கொடுக்கப்பட்டது.
2) அவரது பெயரில் உள்ள பேடில் தான் அந்நஜாத்திற்கு வரும் கேள்விகளுக்கு பதில்கள் எழுதிக் கொண்டிருந்தார்.
தனது பெயரை பிரபல்யப்படுத்துவதில் இந்த அளவு வாக்கு மாறி நடந்துகொண்டார் என்றால் அவர் எந்த அளவு அற்ப பேர், புகழில் வெறியராக இருக்கிறார் என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். பேர் புகழிலிருந்த வெறிதான் அவரை இந்த அளவு வழிகேட்டில் இட்டுச் செல்கிறது.

15 மாதங்களில் 22:78, 41:33 இறைக்கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு முஸ்லிம்களிலுள்ளவன் என்று செயல்பட்டால் கூட்டம் சேராது, சமுதாயத்தைப் பிளவுபடுத்தி தனிப் பெயரில் செயல்பட்டால்தான் தனக்கும் பேர் புகழ் கிடைக்கும், பேர் புகழில் ஆசைப்படும் பெருங் கூட்டமும் சேரும் என்ற நப்பாசையில் AQH  என்ற பிரிவுப் பெயரைக் கற்பனை செய்து அதன் தலைவரானார். ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. நிர்வாகத்திறமையின்மை காரணமாக தலைமைப் பொறுப்பை S.K.க்கு விட்டுக் கொடுக்க நேரிட்டது. இயக்கத்தை வளர்ப்பதில் தனக்குத் திறமை இல்லை என்பதை பாக்கர் பற்றிப் பேசும்போது பீ.ஜை. ஒப்புக்கொண்டும் உள்ளார்.

S.K. AQH ஐ JAQH  என்று மாற்றி இருவரும் செயல்பட்டனர். இது சில காலம் நீடித்தது. எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை. மேலும் பேர் புகழுக்கு ஆசைப்பட்ட பீ.ஜை. அரசியலில் நுழைந்தால்தான் அதிகப் பேர் புகழும், உலகியல் ஆதாயங்களையே அசல் குறிக்கோளாகக் கொண்ட பெருங்கொண்ட கூட்டமும் சேரும் என்ற நப்பாசையில் TMMK  ஐ ஒருவரிடமிருந்து இரவல் வாங்கி அதில் நுழைந்தார். இது சில காலம் நீடித்தது. அங்கும் இவர் முக்கிய பொறுப்பில் இருந்தும் TMMKயின் தலைவர், செயலாளருக்கு அதிகப் பேர் புகழ் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் TMMK ஐ வெறுத்து அதிலிருந்து வெளியேறி TNTJ  அமைத்து அதன் தலைவரானார். அவரோடு வெளியேறி TNTJ  பிரிவு பிளவுப் பெயரை பிரபல்யப்படுத்தப் பெரிதும் உழைத்த பாக்கர், பேர் புகழில் தன்னை மிஞ்சி விடுவார் என அஞ்சிய பீ.ஜை. அவரை வெளியேற்றி இன்னொரு பிரிவுப் பெயர் INTJ  அமைய வழி வகுத்தார். அது மட்டுமல்ல. பீ.ஜையை பிரபல்யப்படுத்த பெரிதும் பாடுபட்டவர்கள் சுமார் ஒரு நூறைத் தாண்டும். அவர்கள் அனைவர்மீதும் கடைந்தெடுத்த அவதூறுகளை, பொய்களை அயராது மீண்டும் மீண்டும் பரப்புவதில் பீ.ஜை. அசகாய சூரராக இருக்கிறார். அவரது கண்மூடி பக்தர்களும் அந்த அவதூறுகளை, பொய்களைப் பரப்புவதில் குறியாக இருக்கிறார்கள். அவதூறு பேர்வழிகள், பொய்யர்கள் வெற்றி பெற முடியுமா?

பீ.ஜையின் பேர் புகழுக்கு சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும், உடனே ஏதாவது ஒரு புதுக்கரடி விட்டு, மக்கள் தன்னைப் பற்றிப் பேச வைத்து விடுவார். பன்றியின் கறியல்லாத மற்றவை ஹலால், டிரவுசரோடு பாங்கு சொல்லலாம், தொழலாம், ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறைதான், கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையே முதல் பிறை, சூன்யம் வெறும் தந்திர வித்தைதான், தனக்கு சூன்யம் செய்து பாதிப்பை ஏற்படுத்தினால் 50 லட்சம் பரிசு போன்ற அவரது பொய் சரவெடிகளெல்லாம் தன் இருப்பை நிலைப்படுத்தவே, அற்பமான பேர் புகழுக்காகவே.

பொதுத் தேர்தலில் கட்சி மாறி பாடுபட்டும் பெருத்தத் தோல்வியைச் சந்தித்து பேர், புகழுக்குப் பின்னடைவு ஏற்பட்டதால் இந்த 50 லட்சம் ரூபாய் பரிசு சரவெடி!

தனது பேர் புகழுக்கும்; சுய ஆதாயத்திற்கும் அவசியப்பட்டால் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை பலவீனமானது என்றும், பலவீனமானவற்றை ஆதாரபூர்வமானது என்று துணிந்து பொய் பரப்புவார். பக்தகோடிகளைக் கொண்டு பொய்களைப் பரப்பச் செய்வார். இது அவரது வாடிக்கை!

தற்போதைய பொய் சரவெடிதான் சூன்யம் செய்து அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால் ரூபாய் 50 லட்சம் பரிசு என்பது. சரவெடிக்குப் பின் வெறும் சாம்பல்தானே மிஞ்சும். அல்லாஹ் பாதுகாத்தான். ரூபாய் 50 லட்சத்திற்கு ஆசைப்பட்டு தன்னை நரகில் கொண்டு சேர்க்கும் சூன்யத்தைச் செய்ய எந்த முஸ்லிமும் முன்வரவில்லை. ஒரு முஸ்லிம் அல்ல; நிராகரிப்பாளர்தான், இன்னும் தெளிவாகச் சொன்னால் முன்னர் முஸ்லிமாக சுன்னத் இடப் பெற்று முஸ்லிம்களோடு இருந்து தொழுது வணங்கி முஸ்லிமாக நடித்தவர்தான் இப்போது முர்த்த ஆகி பீ.ஜைக்கு சூன்யம் செய்ய முற்பட்டிருக்கிறார். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

மக்காப் பள்ளி இமாம் காசிமி சொல்வது போல் இது வெறும் நாடகமாகத்தான் தெரிகிறது. அந்த இருசாராரின் ஒப்பந்த நிகழ்ச்சியில் அந்த அகோரி மணிகண்டன் பேச்சுத் தோரணையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் பீ.ஜை. வீசும் ஓரிரு லட்சங்களுக்கு ஆசைப்பட்டு, இந்த நாடகத்தில் நடிக்க முன் வந்திருப்பதாகவே நம்ப இடமளிக்கிறது. ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி பீ.ஜை தற்கொலை செய்யப்போவதில்லை. எனவே நான் சூனியம் செய்வதில் தோற்றுவிட்டேன். சூன்யம் பொய் என்பதை ஒப்புக் கொள்கிறேன். நான் வாக்களித்தபடி முஸ்லிமாகிவிட்டேன் என்று கூறி நாடகமாடப் போகிறார். முன்னர் அவர் அந்த ஒப்பந்த நாடகத்தில் தான் ஏற்கனவே முஸ்லிமாக இருந்தேன். சுன்னத் இடப்பட்டுள்ளது; தொழுது வணங்கினேன் என்று சொல்லியிருப்பது போல், இப்போதும் நடிக்கப் போகிறார். நூறு இருநூறுக்கே ஆலாய் பரப்பவர் ஓரிரு லட்சம் என்றால் கேட்கவா வேண்டும்? ஆக ஒரு மண்டலம். 48 நாட்கள் கழித்து இந்த நாடகம் அரங்கேறப் போகிறது; இதுதான் காசிமி சொன்ன செய்தி. ஆனால் மக்கா பள்ளி இமாம் காசிமி பீ.ஜையைப் போல் இன்னொரு வழிகேட்டில் இருக்கிறார். அவர் முன்னர் சூன்யம் இருந்தது. இப்போது இல்லை. அது செத்துவிட்டது என்று கூறி இருப்பதும் வழிகேடே. ஜின்களை வசப்படுத்துவது இப்போது சாத்தியமில்லையே தவிர 26:221,222 இறைவாக்குகள் கூறுவது போல் பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் மீது ஷைத்தான் இறங்குகிறான் என்பது இன்றும் உள்ளது.

எப்படி சோதனையாக குடி, கூத்து, விபசாரம், இன்னும் பல தீய செயல்கள் அன்றும் இருந்ததோ, இன்றும் இருக்கிறதோ, உலகம் அழியும் வரை இருக்குமோ அதேபோல் சூன்யம் எனும் குஃப்ரை ஏற்படுத்தும் தீய செயலும் சோதனையாக அன்றும் இருந்தது; இன்றும் இருக்கிறது; உலகம் அழியும் வரை இருக்கும். 49:14 இறைவாக்குக் கூறுவது போல் பெயர் தாங்கி முஸ்லிம்களும், 12:106 இறைவாக்குக் கூறும் இறைவனுக்கு இணை வைக்கும் முஸ்லிம்களும் இப்படிப்பட்ட தீய செயல்களில் ஈடுபடுவார்கள். சூனியம் செய்து பாதிப்பை ஏற்படுத்தினால் 50 லட்சம் பரிசு என சவால் விடுவார்கள். இறைவனையும் மறுமையையும் முற்றிலுமாக நம்பாமல், தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் 2:186, 7:3,146, 174:179, 18:102-106 இறைவாக்குகளை நிராகரித்து இந்த மவ்லவிகளை 9:31 இறைவாக்குக் கூறுவது போல் ரப்பாக ஆக்கி அதாவது இடைத்தரகர்களாகக் கொண்டு அவர்களை முற்றிலும் நம்பிச் செயல்படுபவர்களே பில்லி, சூன்யம், தட்டு, தாயத்து என இறை நிராகரிப்பான, குஃப்ரை ஏற்படுத்தும் இத்தீய செயல்களில் ஈடுபட்டு நாளை நரகையடைவார்கள் என்பதே குர்ஆன் கூறும் உண்மை!

அல்லாஹ்வையும், மறுமையையும் உறுதியாக நம்பி, அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு, தக்வாவுடன் நடப்பவர்கள் சூன்யம் எனும் கொடிய தீய செயல் சோதனையாக இருக்கிறது. ஆயினும் அதன் பக்கம் தலை வைத்தும் படுக்கக் கூடாது; அல்லாஹ்வின் சோதனையாக பிறர் தங்களுக்குச் சூன்யம் செய்து அல்லாஹ்வின், நாட்டப்படி பாதிப்பு ஏற்பட்டால், தர்காக்களுக்கோ, மந்திரவாதிகளை நாடியோ, கோவில், குளம் குட்டை என்ற மூட நம்பிக்கைகளில் மூழ்கி ஒருபோதும் போகமாட்டார்கள். ஐங்காலமும் விடாது தொழுகைகளை நிலைநிறுத்தி, தமக்கு ஏற்பட்ட துன்பம் நீங்க அவனிடமே வேண்டுவார்கள். 113,114 குர்ஆன் அத்தியாயங்களை அதிகமதிகம் ஓதி – படித்து அல்லாஹ்விடம் மட்டுமே நிவாரணம் தேடுவார்கள். இவர்களே நேர்வழி நடப்பவர்கள். அவர்களுக்கே அல்லாஹ்வின் நன்மாராயம் கிடைக்கும். இப்படிப்பட்டவர்கள் பீ.ஜையை ஒரு மனிதனாகவே மதிக்கமாட்டார்கள்.
அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூன்யம் மூலம் பாதிப்பை ஏற்படுத்த முடியுமென்றால், ஒருவரைத் தூக்கில் தொங்கவைத்து சாகடிக்க முடியும் என்றால், ஒட்டுமொத்த மவ்லவிகளையும் நாம் கடுமையாகச் சாடும் நிலையில், அவர்களை விட கேடுகெட்ட படைப்பு இல்லவே இல்லை; ஆடுமாடுகளை விட கேடுகெட்டவர்கள் என்று தொடர்ந்து எழுதி வரும் எம்மைக் கடந்த 30 ஆண்டுகளாக விட்டு வைத்திருப்பார்களா? சூன்யத்தின் மூலம் எம்மை ஒழித்துக்கட்டி இருக்கமாட்டார்களா? சூன்யம் என்ற கொடிய தீய குஃப்ரை ஏற்படுத்தும் செயல் இருப்பது உண்மை. ஆனால் அல்லாஹ்வின் நாட்டமின்றி எந்தச் சூனியக்காரனும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது என்பதே குர்ஆன், ஹதீஃத் கூறும் உண்மையாகும். இதை மறுக்கும் நபர்கள் உண்மை முஸ்லிமாக இருக்கவே முடியாது.

சுருக்கம் இதுதான். பீ.ஜை. தனது 50 லட்ச ரூபாய் சவாலின் மூலம் நாத்திகரைப் போல் இறை நிராகரிப்பாளர் ஆகிறார். ரூபாய் 50 லட்சத்திற்கு ஆசைப்பட்டு யாரெல்லாம் அவருக்கு சூன்யம் செய்ய முற்படுகிறார்களோ அவர்களின் பாவச் சுமையையும் 16:25 இறைவாக்குக் கூறுவது போல் இவரே சுமக்கப் போகிறார். 48 நாட்களுக்குப் பின்னர் பீ.ஜை. தூக்குமாட்டி சாகப் போவதுமில்லை. அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் எவ்விதத் தீங்கும் அவரை அணுகப் போவதுமில்லை. ஆனால் நாளை மறுமையில் இந்த அனைத்து பாவச் சுமைகளையும் சுமந்து இறைவனின் கொடுந் தண்டனைகளுக்கு ஆளாகப் போகிறார் என்பதையே குர்ஆன், ஹதீஃத் கூறுகிறது.

அதற்கு மாறாக 48 நாட்களுக்குப் பின்னர் அகோரி மணிகண்டன், பீ.ஜை கொடுக்கும் அற்பக் காசைப் பெற்றுக் கொண்டு, தான் தோற்றுவிட்டதாகவும். சூன்யம் என்று ஒன்று இல்லை. அது பொய் என ஒப்புக் கொள்வதாகவும் ஒப்பந்தத்தில் கண்டவாறு தான் முஸ்லிமாகிவிட்டதாகவும் இருவரும் நடிக்கப் போகிறார்கள். பீ.ஜையின் இரசிகர் மன்றம் அதை குறுஞ் செய்திகளாக (றீனிறீ) உலகம் முழுதும் பரப்பி, பீ.ஜைக்குப் பேர் புகழ் கிடைக்க சகல துர், பொய் செய்திகளைப் பரப்பப் போகிறார்கள். இதுதான் நடக்கப்போகிறது! அல்லாஹு அஃலம்!

1986களில் குர்ஆன், ஹதீஃத் இரண்டு மட்டுமே மார்க்கம் மூன்றாவது ஒன்று இல்லை. மார்க்கம் என்று யார் எதைச் சொன்னாலும் குர்ஆனில் பாருங்கள், ஹதீஃதில் பாருங்கள் இருந்தால் மார்க்கமாக எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையயன்றால் அதைக் குப்பையில் எறிந்துவிடுங்கள் என்று பகிரங்கமாக சொல்லித் திரிந்தவர். 39:17,18 இறை வாக்குகள் சொல்கிறபடி தாஃகூத்களை வணங்குவதை விட்டும் விடுபட்டு, யார் பேசினாலும், எழுதினாலும் கேட்டு, படித்து அவற்றில் உள்ள அழகானதை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பகிரங்கமாக அறிவித்து திரிந்தவர்தான். இப்படி அன்று பேசித் திரிந்தவர் 47:25 இறைவாக்கு சொல்வது போல் நேர்வழி இன்னதுதான் என்று தெரிந்த பின்னர் அதைப் புறக்கணிக்கிறார். 7:175 முதல் 179 வரை இறைவாக்குகள் எச்சரிக்கும் “”பல்ஆம் இபுனு பாவூறா” நிலைக்கு ஆளாகிவிட்டார். 7:146 இறைவாக்குச் சொல்வது போல் அவரது வீண் பெருமை காரணமாக அல்லாஹ்வாலேயே குர்ஆனின் நேர்வழிக் கருத்துக்களிலிருந்து திருப்பப்படுகிறார்.

அன்று யார் பேச்சையும் கேளுங்கள், யார் நூலையும் படியுங்கள் குர்ஆன், ஹதீஃத் படி இருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெளிவாக சொன்னவர், இன்று என் பேச்சை மட்டும் கேளுங்கள், என் நூல்களை மட்டும் பாருங்கள், மற்றவர்களின் குறிப்பாக அபூ அப்தில்லாஹ்வின் பேச்சைக் கேட்காதீர்கள். அந்நஜாத்தைத் தொட்டும் கூட பார்க்காதீர்கள் என்று தனது ரசிகர்களுக்கு மறைமுகமாக கட்டளையிடுவதின் இரகசியம் என்ன? வழிகேடுதானே!
பீ.ஜை. – அகோரி ஒப்பந்த சமயம், பீ.ஜை. படைப் பட்டாளங்களுடன் வீற்றிருப்பாராம், அகோரி எதிரே உட்கார்ந்து சூன்யம் செய்ய வேண்டுமாம். உடனே அந்த சூன்யம் பலித்து, தான் தூக்கில் தொங்க வேண்டுமாம். அப்போதுதான் அகோரியின் சூன்யத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக த.த.ஜா. வினர் ஏற்றுக்கொண்டு ரூபாய் 50 லட்சம் பரிசு கொடுப்பார்களாம். இதுவே பீ.ஜையின் நிபந்தனை! இப்படி நிபந்தனையிடும் பீ.ஜை. சூன்யத்தின் அ, ஆ கூட தெரியாமல்தான் சூன்யம் பற்றி பக்கம் பக்கமாக எழுதி ஊடகங்களில் பரப்பி வருகிறாரா? என்ற ஐயமே ஏற்படுகிறது. அதாவது துப்பாக்கியால் சுட்டுக் கொள்வது போல், கத்தியால் குத்திக் கொள்வது போல், சூன்யத்தால் உடனடியாக மரணிக்கச் செய்யவேண்டுமாம். இந்த அவரின் நிபந்தனையே இவர் உண்மையின் பக்கம், அதாவது நேர்வழியில் இல்லை. பேர், புகழுக்காக நாடகமாடுகிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கவில்லையா?

இவர் ஏற்கனவே கேன்சர்-புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை ஊடகங்களில் பிரபல்யப்படுத்தி மறைமுக யாசகத்திற்கு-பிச்சைக்கு வழிவகுத்தார். எனவே அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது உலகறிந்த இரகசியம். இந்த நிலையில் அல்லாஹ்வின் நாட்டப்படி அப்புற்றுநோய் கடுமையாகி பாதிப்பு ஏற்பட்டால், யாரோ சூன்யம் செய்துதான் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற சந்தேகமே எழுந்து, அறியாத மக்கள் சூன்யத்தில் மூழ்கி வழிகெட, இறை மறுப்பாளராக அது வழிவகுக்காதா? சிந்தியுங்கள்! இப்படி பல விபரீதங்களுக்கும், வழிகேடுகளுக்கும், குஃப்ரிலாவதற்கும் 50 லட்சம் வழிவகுக்கும் என்பதை அறியாமல்தான் பீ.ஜை. இப்படி அறிவீனமான ரூபாய் 50 லட்சம் ரூபாய் சபதத்தை உலகம் முழுக்க பகிரங்கப்படுத்தி இருக்கிறாரா?

நேர்வழியை மறுக்கும் நிலைக்கும், கோணல் வழிகளை ஏற்று மக்களுக்கு அவற்றையே நேர்வழியாகக் காட்டும் நிலைக்கும் ஆளாகியிருக்கிறார். 42:21, 49:16 இறைவாக்குகள் கூறும் இறை நிராகரிப்புக்கு ஆளாகியிருக்கிறார். அவரது 1986 சரியான பேச்சுப்படி தவ்ஹீத்வாதி, தவ்ஹீத் ஜமாஅத் இரண்டும் குர்ஆன், ஹதீஃதில் இல்லை என்பது மட்டுமல்ல, குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு நேர்முரணான ´ர்க்கை ஏற்படுத்தும் பெருங்குற்றம் என்பதை அவரது வீண் பெருமை அவரை உணரவிடாமல் தடுக்கிறது. அவரது வீண் பெருமையை தவ்பா செய்து, அதை விட்டு மீளாதவரை அவர் நேர்வழி பெறவே முடியாது. அவரின் ரசிகர்களில் யார் இந்த பிரசுரத்தில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாக படித்து விளங்குகிறாரோ அவரே நேர்வழி பெறமுடியும். பீ.ஜைக்கும், அவரது ரசிகர்களுக்கும் எடுத்துச் சொல்வது மட்டுமே எமது கடமை. நேர்வழி 6:153 இறைவாக்குப் படி அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவர்களின் நேர்வழிக்காக நாம் துஆ செய்கிறோம்.

இப்பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள குர்ஆன் வசனங்களுடன் பெருமை பற்றிக் கூறும் அனைத்து வசனங்களையும் மேலும் 2:38, 74, 4:78, 5:13,15,16,39, 6:43,125, 10:99,100, 11:19, 15:39, 16:9,105, 17:9,41,45-47,84,89, 20:123,124, 22:72, 27:14, 34:31-33, 35:10, 39:45,72, 40:47,48, 53:16 வசனங்களையும் புகாரீ(ர.அ.) 3348, 3456, 4850, 4855, 5146, 5767, 5780, 7146, 7148, 7149, 7150, 7319, 7320, 6011,7356 ஹதீஃத்களையும், முஸ்லிம்(ர.அ) 3865, 5184 இந்த ஹதீஃத்களையும் நேரடியாகப் பலமுறை சிந்தனையுடன் படிக்க பீ.ஜையையும், அவரது ரசிகர்களையும், இதர முஸ்லிம்களையும் அன்புடன் வேண்டுகிறோம். அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பவர்களே வெற்றியாளர்கள். நாளை சுவர்க்கம் நுழைவோர் என்பதே நேர்வழி உண்மைச் செய்தியாகும்.

அவர்கள் இந்த குர்ஆனை (சுயமாக) சிந்திக்க வேண்டாமா? அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து உள்ளதாக இது இருந்தால், இதில் ஏராளமாக முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

அல்லாஹ்வுக்கும் மக்களுக்குமிடையே சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாகப் புகுந்து உங்களது ஈமானையும், சாமான்களையும் கொள்ளையடித்து, தங்கள் வயிறுகளை ஹராமான வழியில் நரக நெருப்பால் நிரப்புவதோடு(2:174), அற்ப உலக ஆதாயங்களை அடைய உங்களை நரகில் தள்ள முற்படும் இம் மவ்லவிகளின் உண்மை நிலையை அறிந்து, அவர்களின் வசீகர உடும்புப் புடியிலிருந்து விடுபட படியுங்கள்! பரப்புங்கள்! அந்நஜாத்! மவ்லவிகளின் வசீகர, சூன்ய உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டவர்களே நேர்வழி நடப்பவர்கள்.

Previous post:

Next post: