நபிக்கே கடும் எச்சரிக்கைகள் என்றால் !மற்றவர்களின் நிலை என்ன?

in 2016 ஜனவரி

அபூ அப்தில்லாஹ்

(நபியே!) உம்மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கிருபையும் இல்லாதிருந்தால், அவர்களில் ஒரு கூட்டத்தார் உம்மை வழிகெடுக்க முயன்றிருப்பார்கள்; ஆனால், அவர்கள் தங்களையே அன்றி (உம்மை) வழிகெடுக்க முடியாது; மேலும், அல்லாஹ் உம்மீது இறைநூலையும், ஞானத்தையும் இறக்கியுள்ளான்; நீர் அறியாதிருந்தவற்றையும் அவன் உமக்கு கற்றுக் கொடுத்தான்; உம்மீது அல் லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கின்றது.
(4:113)
அல்லாஹ்வின் வசனங்கள்(சிலரால்) நிராகரிக் கப்படுவதையும், பரிகசிக்கப்படுவதையும் நீர் செவியுற்றால் அவர்கள் இதை விட்டு வேறு விபீயத்தில் ஈடுபடும் வரையில், அவர்களோடு நீர் உட்கார வேண்டாம் என்று (இவ்) இறைநூலில் உமக்கு (கட் டளையை அல்லாஹ்வாகிய) அவன் இறக்கியுள் ளான்; (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நீரும் அவர்களைப் போன்றவரே; நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்கள், நிராகரிப்பவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்க்கிறவனாயிருக்கிறான்.(4:140)

இன்னும், அல்லாஹ் இறக்கிவைத்ததைக் கொண்டே அவர்களிடையில் தீர்ப்புச் செய்வீராக! அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றா தீர்; அல்லாஹ் உம்மீது இறக்கி வைத்ததில் சில வற்றை விட்டும், அவர்கள் உம்மைத் திருப்பிவிடாத படி, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பீராக! (உம் தீர்ப்பை) அவர்கள் புறக்கணித்து விடுவார்களானால் சில பாவங்களின் காரணமாக, அவர்களைப் பிடிக்க நிச்சயமாக அல்லாஹ் நாடுகிறான் என்பதை அறிந்து கொள்வீராக! மேலும், நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் பாவிகளாகவே இருக்கின்றனர். (5:49)

தூதரே! உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக் கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறிவிடும்; (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால் அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்று வான்; நிச்சயமாக அல்லாஹ் நிராகரிக்கும் கூட்டத் தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான். (5:67)

(நபியே!) நம் வசனங்களில் (வீண் விவாதம் செய்து) மூழ்கியிருப்போரை நீர் கண்டால், அது அல்லாத வேறு விபீயத்தில் அவர்கள் மூழ்கும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்துவிடும், (இக் கட்ட ளையை விட்டு) çபீத்தான் உம்மை மறக்கச் செய் தால் நினைவு வந்தபின், அந்த அநியாயக்கார கூட்டத்தினருடன் நீர் அமர்ந்திருக்க வேண்டாம். (6:68)

(விபீமங்கள் அடங்க) பூமியில் இரத்தத்தை ஓட்டாத வரையில் (விரோதிகளை உயிருடன்) சிறைப் பிடிப்பது எந்த நபிக்கும் தகுதியில்லை; நீங்கள் இவ்வுலகத்தின் (நிலையில்லா) பொருட்களை விரும்புகிறீர்கள்; அல்லாஹ்வோ (உங்களுக்கு நிலையான) மறுமையை நாடுகிறான்; அல்லாஹ் மிகைத்தோனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கிறான். (8:67)

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னிப்பானாக! (அவர்களில்) உண்மை சொன்னவர்கள் யார் என்பது உமக்குத் தெளிவாகி, பொய்யர்களை நீர் அறியும்வரை (போருக்குப் புறப்படாதிருக்க) அவர் களுக்கு ஏன் அனுமதியளித்தீர்? (9:43)

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியி லுள்ள யாவருமே நம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே மனிதர்கள் யாவரும் நம்பிக்கை கொண்டோராக ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்துகிறீரா? (10:99)

(நபியே!) நம் வசனங்களை அவர்கள் செவிமடுப் பதில்லையே எனச் சடைந்து ”வஹீ’ மூலம் உமக்கு அறிவிக்கப்படுகின்றவற்றில் சிலவற்றை விட்டுவிடு பவராய் நீர் ஆகிவிடுவீர் போலும்! அவர்மீது ஒரு பொக்கிபீம் இறக்கப்பட வேண்டாமா? அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா? என்று அவர்கள் கூறுவதினால் உம்முடைய நெஞ்சம் அது பற்றி நெருக்கடியானதாக ஆகிவிடக்கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே! அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கி றான். (11:12)

ஆனால், நீர் பேராவல் கொண்டாலும் (அம்) மனிதர்களில் பெரும்பாலோர் நம்பிக்கை கொள் பவர்களாக இல்லை. (12:103)

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக சாட்சியை எழுப்பும் நாளில், உம்மை இம்மக்க ளுக்கு எதிராக சாட்சியாக நாம் கொண்டு வரு வோம். மேலும், இந்நெறிநூலை ஒவ்வொரு பொரு ளுக்கும் விளக்கமாகவும், நேர்வழியாகவும், அருளா கவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம். (16:89)

இவையெல்லாம் உம்முடைய இறைவன் ஞானத்திலிருந்து உமக்கு வஹீ(மூலம்) அறிவித்துள் ளவையாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு தெய் வத்தை(இணையாக) ஏற்படுத்தாதீர், (அப்படிச் செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராகவும் (அருளை விட்டும்) தூரமாக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர். (17:39)

(நபியே!) இன்னும், நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதைவிட்டும், அது அல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிடவே அவர்கள் முனைந்தார்கள். (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள். (17:73)

மேலும், நாம் உம்மை(சத்தியப் பாதையில்) உறு திப்படுத்தி வைத்திருக்கவில்லையயனில், நீர் கொஞ் சம் அவர்கள் பக்கம் சாய்ந்திருக்கக்கூடும். (17:74)

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) இவ்வாழ்நாளில் இருமடங்கு (வேதனையையு)ம் மரணத்தில் இரு மடங்கும் நுகருமாறு நாம் செய்திருப்போம். பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர். (17:75)

(நபியே!) நாம் நாடினால் உமக்கு நாம் வஹீயாக அறிவித்ததை (குர்ஆனை) போக்கிவிடுவோம். பின் னர், நமக்கெதிராக உமக்குப்பொறுப்பேற்கக் கூடிய எவரையும் நீர் காணமாட்டீர். (17:86)

அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத் தைக் கொண்டுவந்தாலும், (அதை விடவும்) உண் மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை. (25:33)

ஆகவே, (நபியே!) நீர் இந்த நிராகரிப்பாளர்க ளுக்குக் கீழ்ப்படியாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பலமாக வாதிடுவீராக! (25:52)

(நபியே!) நிச்சயமாக எவன் இந்த குர்ஆனை உம் மீது விதியாக்கினானோ, அவன் நிச்சயமாக உம்மைத் திருப்பிக் கொண்டுவந்து (மக்காவென் னும்) அம்மீளுமிடத்தில் சேர்ப்பிப்பான்; என் இறைவன், நேர்வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? இன்னும், வெளிப்படையான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை நன்கறிந்தவன் என்று நீர் கூறுவீராக! (28:85)

இன்னும் உம்முடைய இறைவனிடமுள்ள அருளினாலன்றி இவ்விறை நூல் உமக்குக் கொடுக் கப்படும் என்று நீர் எதிர்பார்க்கவில்லை, எனவே, நிராகரிப்பவர்களுக்கு உதவியாளராக நிச்சயமாக நீர் இருக்காதீர். (28:86)

இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன்பின், அவற்றை விட்டும் நிச்சய மாக அவர்கள் உம்மைத் தடுத்துவிட வேண்டாம், மேலும், நீர் உம்முடைய இறைவன்பால் (அவர் களை) அழைப்பீராக! நிச்சயமாக நீர் இணை வைப் போரில் ஒருவராகிவிட வேண்டாம். (28:87)

அல்லாஹ்வுடன் வேறொரு தெய்வத்தையும் அழைக்காதீர், அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை, அவனது முகத்தைத் தவிர எல்லாப் பொருட்களும் அழிந்துவிடுபவையேயாகும். அவனுக்கே எல்லா அதிகாரமும் உரியது. இன்னும் அவனிடமே நீங்கள் (யாவரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (28:88)

ஆகவே. நீர் உம் முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கம் முற்றிலும் திருப்பி நிலைநிறுத் துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர் களைப் படைத்தானோ அதுவே, அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும். அல்லாஹ் வின் படைத்தலில் எவ்வித மாற்றமும் இல்லை. அதுவே, நிலையான மார்க்கமாகும், ஆனால், மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (30:30)

நபியே! அல்லாஹ்வையே அஞ்சுவீராக! நிரா கரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்
படியாதீர்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிபவன், ஞானம் மிக்கவன். (33:1)
இன்னும், (நபியே!) உம்முடைய இறைவனிட மிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற் றுவீராக! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்ப வற்றை நன்கறிந்தவனாக இருக்கிறான். (33:2)
கூறுவீராக; நான் வழிகெடுவேனாயின், வழி கேடு எனக்கே நஷ்டமாகும், நான் நேர்வழியில் செல்வோனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு வஹீ மூலமாக அறிவித்ததைக் கொண்டே யாகும். நிச்சயமாக அவன்(மிகச்) செவியேற்பவன்; (மிக) நெருங்கியிருப்பவன். (34:50)

அவர்கள் எத்தகையோரென்றால் (இறைவனிட மிருந்து) தங்களுக்கு வந்த யாதோர் ஆதாரமுமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றி தர்க்கம் செய்கின்றார்கள்; அது, அல்லாஹ்விடத்திலும் நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் கோபத்தால் பெரிதாகி விட்டது; இவ்வாறே, பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வொரு இதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான் (என்றும் அவர் கூறினார்) (40:35)

ஆகவே, அவர்களுடைய தூதர்கள் அவர்களி டம் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது, அவர்கள் தங்களிடமிருந்த கல்வியின் காரணமாக பெரும் மகிழ்ச்சி அடைந்திருந்தார்கள்; எனினும், அவர்கள் பரிகாசம் செய்து கொண்டிருந்ததுவே அவர்களைச் சூழ்ந்து கொண்டது. (40:83)

இது அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும் இதை நீங்கள் நிராகரித்தால், தூரமான பிளவிலுள்ள வனைவிட மிக வழிகெட்டவன் யார்? என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று (நபியே!) நீர் கேளும். (42:52)

(நபியே!) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை (பலமாகப்) பற்றிப் பிடித்துக் கொள்ளும்! நிச்சய மாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.   (43:43)

இதன் பின்னர் (மார்க்கக்) காரியத்தில் (நேரான) ஒரு வழியின் மீது உம்மை நாம் ஆக்கியுள்ளோம்; ஆகவே, நீர் அதனை பின்பற்றுவீராக! அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர். (45:18)

நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக் கிக் கொண்டீர்? மேலும், அல்லாஹ் மிகவும் மன் னிப்பவன்; மிக்க கிருபையுடையவன். (66:1)
அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இவர் இட்டுக்கட்டி(க் கூறி)யிருப்பாரானால்… (69:44)
அவரை வலக்கரப் பிடியாக நாம் பலமாகப் பிடித்து…. (69:45)

பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் துண்டித்து விடுவோம். (69:46)
அன்றியும், உங்களில் எவரும் (நாம்) அ(வ்வாறு செய்வ)தைத் தடுப்பவர்களில்லை. (69:47)

மேலே கண்ட குர்ஆன் வசனங்களை மீண்டும் மீண்டும் படித்து அவற்றின் சத்தும் சாரமும் உள்ளத் தில் பதியச் செய்யுங்கள். இப்போது பக்கச் சார்பு இல்லாமல் நடுநிலையோடு சுயமாகச் சிந்தியுங்கள். உங்கள் சுய அறிவை ஆலிம், அல்லாமா, பேரறிஞர் எனப் பெருமை பேசும் மவ்லவிகளிடம் கடன் கொடுக்காமல் சுயமாக உரத்துச் சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் இறுதித் தூதர், அவனின் மிக மிகப் பிரியத்திற்குரியவர், இறைவனின் கண் காணிப்பிலும் (52:48), வஹியின் தொடர்புடனும் இருந்தவர், இன்னும் இதுபோல் பல சிறப்புக்குரிய வர் முஹம்மது(ஸல்) அவர்கள் ஆவார்கள். அப்படிப் பட்ட மிகமிக உயர் அந்தஸ்துகளுக்குச் சொந்தக் காரரான இறுதித் தூதருக்கே இறைவனளித்த இஸ் லாமிய மார்க்கத்தில் அணுவளவும் கூட்டவோ, குறைக்கவோ அனுமதி இல்லவே இல்லை என்பது மேற்கண்ட வசனங்களின் மூலம் திட்டமாக, தெளி வாக, எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி உறுதி யாகத் தெரிகிறதா இல்லையா? நீங்களே சொல்லுங்கள்.

இந்த நிலையில் இறைத் தூதரோ, வஹியின் தொடர்போ, வஹியின் மூலம் திருத்தப்படும் நேர டிக் கண்காணிப்போ இல்லாத மனிதர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நான்கு கலீஃபாக்களாக இருந்தாலும், நபிதோழர்களாக இருந்தாலும், தாபியி, தபஅ தாபியி, இமாம்கள், அவுலியாக்கள், ஆலிம்கள், அறிஞர் பெருமக்கள் என யாராக இருந் தாலும், இஸ்லாமிய மார்க்கத்தில் புதிதாக ஒன்றைச் சேர்க்கவோ அல்லது இருப்பதில் ஒன்றை நீக்கவோ அதிகாரம் உள்ளவர்கள் என்று நம்புவது ஈமானின் அடையாளமா? குஃப்ரின் அடையாளமா? சிந்தியுங் கள். இந்த உண்மையை 33:36 இறைவாக்கு நெற்றிப் பொட்டில் சம்மட்டியால் அடிப்பது போல் உணர்த் துகிறது. படித்து உணர்வு பெறுங்கள்!

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தில் முடிவு எடுத்துவிட்டால், அதில் வேறு அபிப்ராயம் கொள்வதற்கு நம்பிக்கை கொண்டுள்ள எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, நிச்சயமாக அவர் பகிரங் கமான வழிகேட்டிலேயே இருக்கின்றனர். (33:36)

இந்த இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து உள்ளத்தில் உறைய வைப்பவர்கள் வழி தவ றிச் செல்ல முடியுமா? ஒருபோதும் முடியாது. அப் படி என்றால் குர்ஆன் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் வெறுப்பைக் கக்கி, 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை நேரடியாகப் பார்ப்பதை நிராகரித்து புறக்கணிக்கிற வர்கள். 2:39 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களை நிராகரித்து காஃபிராகி நாளை நரகம் புகுபவர்களே. அவர்களே நரகிற்கு இட்டுச் செல் லும் தாஃகூத்களான மவ்லவிகளை நம்பி அவர் களின் சுய விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள். அந்த
அடிப்படையில் இஜ்மா, கியாஸ் என்ற மனிதக் கற்பனைக்கு அடிபணிந்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற நான்கு மத்ஹபுகள், பல தரீக்காக்களின் பெயரால் வழிகெட்டுச் செல்கிறார்கள். லாஜிக், பாலிஸி என்ற மனித சுயக் கற்பனைக்கு அடிபணிந்து தவ்ஹீத் என்ற பெயரால் எண்ணற்ற இயக்கப் பிரிவு கள். 3:103,105, 6:153,159, 42:13,14, 21:92, 23:52 குர்ஆன் வசனங்களை நிராகரித்து 21:93, 23:53-55 இறைவாக்குகள் எச்சரித்தும் பல பிரிவினர்களாகப் பிரிந்ததோடு, 23:53, 30:32 இறைவாக்குகள் கூறுவது போல் தங்கள் தங்கள் பிரிவுகளைக் கொண்டு மகிழ் வடைவது, சென்னை, கடலூரில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டபோது அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்தது.

குர்ஆன், ஹதீஃத்படி நடக்கிறோம் என்று துணிந்து பொய் கூறிக்கொண்டு இந்த தவ்ஹீத்(?) பிரிவுகள் துணிந்து கடைபிடிக்கும் அடாத செயல் கள், 4 மத்ஹபு பிரிவுகளைத் தங்கமாக்கிவிட்டன. உண்மையிலேயே அவர்கள் குர்ஆன், ஹதீஃத்படி நடப்பவர்காக இருந்தால், இவர்கள் தூக்கிப் பிடிக் கும், விளம்பரப்படுத்தும் பிரிவுப் பெயர்களை குர்ஆன், ஹதீஃத்களிலிருந்து காட்டக் கடமைப் பட்டிருக்கிறார்கள். அப்படிக் காட்டத் தவறினால் 7:71, 12:40, 53:23 இறைவாக்குகள் கூறுவது போல் இவர்களாகக் கற்பனை செய்த பெயர்கள் இவை என்பதை ஏற்றுக் கொள்ளட்டும்.

மார்க்கத்தில் வரம்பு மீறி, 6:87, 10:59, 16:116 இறைவாக்குகள் கூறுவது போல் தவ்ஹீத்(?) மவ்லவி கள் அவர்களாக அவர்களின் உலகியல் ஆதாயங் களுக்காக சுயமாக ஹலாலை ஹராமாக்குகிறார்கள் ஹராமை ஹலாலாக்குகிறார்கள் என்பதை அவர் கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நிர்வாக வசதிக்காக உலகியல் ஆதாயங்களை அரசிடமிருந்து பெறுவதற்காக மக்களுக்குத் தொண்டு செய்ய இப்பெயர்கள் அவசியமாகத் தேவைப்படுகிறது என்று அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பதிலிருந்து, மறுமையை நோக்கமாகக் கொண்டு, அல்லாஹ்வைத் திருப்திப் படுத்த இப்பெயர்களைச் சூட்டியுள்ளதாக அவர் கள் கூறவில்லை. இவை எங்களின் வியாபாரம், தொழில் வசதிக்காக இப்படி வெவ்வேறு பெயர் களைச் சூட்டியுள்ளோம் என்று பகிரங்கமாக அறி வித்து விட்டுப் போகலாம். தூய இஸ்லாமிய மார்க் கம் குர்ஆன், ஹதீஃத் என்று பொய் கூற வேண்டிய தில்லை. அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாக வேண்டியதில்லை.

இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் 29:69 இறைக்கட்ட ளைக்கு முற்றிலும், அடிபணிந்து பெரும் ஜிஹாதாக மீண்டும் மீண்டும் சுய சிந்தனையுடன் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அவனது நேர்வழியை (6:153) நிச்சயமாக எளிதாக்கித் தருவான். அவர்கள் நிச்சயம் அறிந்து கொள்வார்கள். எதை? ஆம்! அல்லாஹ்வால் இறக்கி யருளப்பட்ட தூய இஸ்லாமிய மார்க்கத்தில், அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே கூட்டவோ குறைக் கவோ, புதிதாக(பித்அத்) ஒன்றைச் சேர்க்கவோ அணுவளவும் அனுமதி இல்லாத போது, நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வந்த எவராக இருந்தாலும் மார்க்கத்தில் புதிதாக ஒன்றைச் சேர்க்க அணுவளவும் அனுமதி இல்லை. அது பகிரங்கமான பெருத்த வழிகேடு என்பதைத் திடடமாக அவர்களால் அறிய முடியும். அந்த வகையில் இட்டுக் கட்டப்பட்ட, பலவீனமான இலட்சக்கணக்கான ஹதீஃத்கள் அத்தனையும் பகிரங்க வழிகேடுகள். ஹிஜ்ரி 400க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட நான்கு (4) மத்ஹபுகள், ஹிஜ்ரி 500க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட தரீக்காக்கள் அனைத்தும் வழிகெடுகள், நரகில் சேர்க்கும், ஹிஜ்ரி 1407-1987க் குப் பிறகு மார்க்க அடிப்படையில் கற்பனை செய் யப்பட்ட அனைத்து ஜமாஅத்துகள், கழகங்கள், இயக்கங்கள், அமைப்புகள் ஆக அனைத்து வகை பிரிவுகள் அனைத்தும் பகிரங்க வழிகேடுகள் என்பதை எளிதாக உணர முடியும். இந்த உண்மையை 2:159-162, 33:36 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்து கின்றன. ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக 3:103 இறைக்கட்டளைக்கு அடிபணிந்து, 2:186 இறைக் கட்டளைப்படி மனிதர்களில் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்பி இறுதி இறைநூல் (வேதம் அல்ல) குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடக்காமல், அல் லாஹ்வுடைய இறுதித் தூதருக்குப் பிறகு மனிதர் களில் யாரைத் தங்ளின் நம்பிக்கையாளராக-வழி காட்டியாக ஏற்று நடந்தாலும் அது வழிகேடே என் பதை 7:3, 18:102-106 இறைவாக்குகள் உறுதிப் படுத்துகின்றன. அப்படி மதகுருமார்கள் பின்னால் அவர்களை முழுமையாக நம்பி அவர்களின் வழி காட்டல்படி நடந்தவர்கள் நாளை மறுமையில் நர கில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் திட்டியும், சபித்தும் கதறுவதைக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவை வருமாறு :

7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இந்த இறைவாக்குகளை நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து உணர்வு பெறுங்கள். நேர்வழி பெறுங்கள். இந்த இறைவாக்கு களில் 34:31-33, 40:47,48 வசனங்கள் கூறும் பெரு மையடித்தோர் என்று கூறுவது, நாங்கள் தான் ஆலிம் கள், மவ்லவிகள், மார்க்கம் கற்ற மேதைகள் அவாம் களுக்கு அல்லாஹ் விளக்கிய குர்ஆன் விளங்காது. நாங்கள் விளக்கித்தான் அவர்கள் விளங்க முடியும் என்று உண்மையின்றி பெருமை பேசிய இம்மவ்லவி களையே குறிப்பிடுகின்றன. (பார்க்க : 7:146, 39:72)

இவர்கள் வழிகேட்டில் இருந்து கொண்டு, நேர் வழி நடந்த அதாவது குர்ஆன், ஹதீஃத் போதனை களை மட்டுமே பின்பற்றியவர்களை வஹ்ஹாபி, நஜாத்காரன், வழிகேடன், நரகிற்குரியவர்கள் என்று இழித்துப் பழித்துப் பேசியவர்களை இங்கு நரகில் காணோமே என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பதை 38:62,63 குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. படித்துப் பாடம் பெற்று திருந்தி நேர்வழி வருவோர் உண்டா? மத்ஹபுகள், தரீக்காக்கள், இயக்கங்கள், ஜமாஅத்துகள் என அனைத்துப் பிரிவுகளை விட்டு, தவ்பா செய்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து நேர்வழி நடக்க முன்வருவோர் உண்டா?

இதுவரை நாம் எடுத்தெழுதியது இறுதி இறை நூல் குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களை மட்டுமே; இவற்றில் எமது சுயக்கருத்துக்கள் இருந்தால், அதை யாரும் எடுத்துக் காட்டினால், அது உண்மையாக இருந்தால் அதை ஏற்று எம்மைத் திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். அவர்களுக்காக நற்கூலி கொடுக்க அல்லாஹ்விடம் துஆவும் செய்வோம். அதை விட்டு பாருங்கள் அபூ அப்தில்லாஹ்வின் கேடுகெட்டப் புத்தியை! அவரும் அவருடன் இருக்கும் சிறு கூட்டமும் மட்டும்தான் சுவர்க்கம் போவார்களாம். பாக்கியுள்ள முஸ்லிம்கள் அனைவரும் நரகம் போவார்களாம். இப்படி அவர் தொடர்ந்து எழுதி வருகிறார் என்று தார்ப்பாயில் வழிகெடுத்தப் பொய்யைப் பரப்பித் திரிய வேண்டாம். அந்தப் பாவத்தையும் நாளை நீங்களே சுமக்க நேரிடும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் காட்டுவது மட்டுமே நேர்வழி. மனிதர்கள் குறிப்பாக ஆலிம் என பெருமை பேசும் மவ்லவிகள் காட்டுவது கோணல் வழிகளே. இதையே 7:146 இறைவாக்குக் கூறுகிறது. எனவே மவ்லவிகளையோ, மவ்லவி அல்லாதவர் களையோ நம்பி அவர்களைப் பின்பற்றாமல், குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி மட்டுமே நடந்து மறுமையில் வெற்றி பெறுங்கள் என்று மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறோம்.

இப்படிப் பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள்தாம். இன்னும் அவர்தான் பொய்யர்கள் என்று 16:105 இறைவாக்குக் கூறி எச்சரிக்கிறது. மேலும் இந்த மவ்லவிகள் பற்றி அடுத்து வரும் 16:106 முதல் 109 வரையுள்ள வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின் றன. இம்மவ்லவிகள் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களை வெறுக்கவே செய்கி றார்கள். 39:45 இறைவாக்குக் கூறுவது போல் வழி கேட்டில் சென்ற இம்மதகுருமார்களின் முன்னோர் களின் சுயகருத்துக்களையே வேதவாக்காகிக் கொண்டு மகிழ்வடைந்து அவற்றையே மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். ஆனால் உண்மை என்னவென்று தெரியுமா? 2:38 இறைவாக்குக் கூறு வது போல் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட் டுமே பின்பற்றுகிறவர்கள் மட்டுமே வெற்றியாளர்கள்! அவர்களுக்குப் பயமோ துக்கமோ இல்லவே இல்லை. அதற்கு மாறாக 2:39 இறைவாக்குக் கூறு வது போல் குர்ஆன் வசனங்களை மறுத்து அவற் றிற்கு எவர்கள் சுயவிளக்கம் கொடுக்கிறார்களோ அவர்கள் நரகவாதிகளே. அந்த நரகத்தில் என்றென் றும் தங்கி இருப்பார்கள். இது நாம் சொல்வதில்லை. அல்லாஹ் குர்ஆனில் சொல்லியுள்ளான். படித்துப் பாருங்கள்!

Previous post:

Next post: