இவர்களா ஷிர்க்கை ஒழிக்கப்போகிறார்கள்?

in 2016 ஜனவரி

முஹம்மது ஸலீம், ஈரோடு

வரும் 2016 ஜனவரி 31 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஒன்றை திருச்சியில் நடத்த இருப்பதாக TNTJ இயக்கத்தினர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்து அந்த மாநாட்டை நடத்துவதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த ஷிர்க் ஒழிப்பு மாநாடு அறிவிப்பு எப்படி இருக்கிறதென்றால் மிகப்பெரிய அளவில் மதுபான ஆலைகளை நடத்திக் கொண்டு அதன் மூலமாக கொழுத்த வருமானம் பார்க்கும் அரசியல் வாதிகள் மதுவை ஒழிக்க வேண்டும், பூரண மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் அதற்காக பற்பல போராட்டங்களை நடத்த வேண்டும் என்று மக்களிடம் பிரச்சாரம் செய்வதை போன்றுள்ளது. நாம் ஏன் இப்படி சொல்கிறமென்றால் ஷிர்க்கை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் இந்த TNTJ இயக்கவாதிகளிடம் ஏராளமான விஷயங்களில் ஷிர்க் உள்ளது.

மதுபானம் அருந்தி கொண்டே, மதுபான ஆலைகளை நடத்திக் கொண்டே ஒருவன் மதுவின் தீமையைப் பற்றி பிரச்சாரம் செய்வது எப்படி சமு தாயத்திற்கு பயன் தாராதோ அதைப் போன்றே ஷிர்க்கில் மூழ்கித் திளைக்கும் TNTJ இயக்கத்தினர்களால் ஒருபோதும் ஷிர்க்கை ஒழிக்க முடியாது. மமதை ஆணவம், தற்பெருமை போன்ற இழி குணங்களால் தாங்கள் செய்யும் இணைவைப்புக் காரியங்களை இவர்களால் உணர முடியவில்லை. நடுநிலையாளர்களும், உண்மையை விரும்பக் கூடிய மக்களும் அறிந்துக கொள்வதற்காக TNTJ இயக்கத்தினர் செய்யும் ஷிர்க்கான விஷயங்களில் ஒருசிலவற்றைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் அண்ணன்மார்கள் :
தீர்ப்புக் கூறும் அதிகாரம் அவனுக்கே (அல்லாஹ்வுக்கே) உரியது.. குர்ஆன் 28:70
மூஸாவுக்குப் புத்தகத்தை வழங்கினோம். அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்காவிட்டால் அவர்களுக்கிடையே தீர்ப்ளிக்கப்பட்டிருக்கும்…
குர்ஆன் : 11:110, 41:45

உமது இறைவனிடமிருந்து விதி முந்தியிருக்கா விட்டால் அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கம். குர்ஆன்: 10:19, 42:14

நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கிடையே கியாமத் நாளில் தீர்ப்பளிப்பான். குர்ஆன் : 22:69, 32:25
சகோதர, சகோதரிகளே! மேற்கண்ட வசனங் களை ஒன்றுக்குப் பலமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள். அல்லாஹ் அருளிய புத்தகத்தை பின் பற்றுவதாக கூறிக் கொள்ளும் மக்கள் அந்த புத்தகத்தில் கருத்து வேறுபாடு கொண்டு செயல்பட்டால் அது பற்றிய தீர்ப்பை மறுமையில்தான் வழங்கு வேன் என்று அல்லாஹ் மிகத் தெளிவாக மேற் கண்ட வசனங்களில் கூறியுள்ளான். ஆனால் இந்த வசனங்களையயல்லாம் TNTJ அண்ணன்மார்கள் நிராகரித்துவிட்டு (தம்பிமார்களையும் நிராகரிக்க வைத்துவிட்டு) தர்கா வழிபாடு, தாயத்து, மெளலிது ஆகியவை மார்க்கத்தில் உள்ளதுதான் என்று பிரச் சாரம் செய்யும் போலிகளின் பேச்சை நம்பி அதனடிப்படையில் செயல்படுகின்றவர்களை நீ காஃபிர் என்று இவ்வுலகிலேயே ஃபத்வா கொடுத்து வருகிறார்கள். மறுமைக்கு என்று அல்லாஹ் நிறுத்தி வைத்த தீர்ப்பை நாங்கள் இந்த உலகத்திலேயே வழங்குவோம் என்று ஆணவமாக அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட்டு தீர்ப்பளிக்கும் இந்த அண்ணன்மார்களா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறார்கள்?

நபியை விட மேலானவர்களா?
(நபியே) அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கு மில்லை (3:128) என்ற வசனத்தை ஆதாரமாக காட்டி நபிக்கே அதிகாரத்தில் பங்கு கிடையாது எனும்போது மனிதர்களில் வேறு எவருக்கும் எந்த அவ்லியாவிற்கும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிட உரிமை இல்லை என்று பிரச்சாரம் செய் வார்கள். ஆனால் அல்லாஹ்வின் அதிகாரத்தைத் தங்களது அண்ணன்மார்கள் கையிலெடுக்கும் போது இது தம்பிமார்களுக்கு ஷிர்க்காகத் தெரியாது. ஏனென்றால் நபி மீதுள்ள பாசத்தை விட அண்ணன் மார்களின் மீதுள்ள பாசம் அதிகமாகி அது பக்தியாக மாறிவருகிறது. நபியை விட தங் களை மேலானவர் களாக காட்டிக் கொள்ளும் இந்த கூட்டமா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறது?

முஸ்லிம்கள் என்ன சொல்ல வேண்டும்?
அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படை யானதையும் அறிந்தவனே! உனது அடியார்கள் முரண்பட்ட விஷயத்தில் நீயே அவர்களுக் கிடையே தீர்ப்பு வழங்குவாய் என்று (நபியே) நீர் கூறுவீராக. குர்ஆன் : 39:46
நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் முரண்பட் டால் அது பற்றிய தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே என் இறைவனாகிய அல்லாஹ்; அவனையே சார்ந்திருக்கிறேன். அவனிடமே திரும்புகிறேன் என(நபியே!) நீர் கூறுவீராக.
குர்ஆன் :42:10

கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது ஒரு முஸ்லிம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என் கின்ற விஷய#2991;த்தை மேற்கண்ட வசனங்களின் வாயி லாக சிறுகுழந்தைகளுக்கும் புரியும் விதமாக கற்றுக் கொடுத்து அல்லாஹ் மிகத் தெளிவாக வழிகாட்டி முஸ்லிம்களுக்கு பேரருள் புரிந்திருக்கின்றான். இந்த வழிகாட்டுதல்களை மக்களிடம் சொல்லாமல் மறைத்துவிட்டு அல்லாஹ்வின் வசனங்களில் சில வற்றை நம்பி வேறு சிலவற்றை நிராகரிக்கும் இந்த சுயநலக் கூட்டமா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறது?

யூத கிறிஸ்தவர்கள் வழியில் :
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய அறிஞர் பேசி னாலும் அந்தப் பேச்சை தூக்கி எறிந்துவிட வேண் டும் என்று மணிக்கணக்கில் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் TNTJவில் உள்ள தம்பிமார் கள் தங்களது அண்ணன்மார்கள் ஹலால் என்று எதை சொன்னாலும், ஹராம் என்று எதை சொன்னாலும் சுயசிந்தனையைத் தொலைத்துவிட்டு அதை அப்படியே கண்மூடி வெறித்தனமாகப் பின் பற்றுவதைப் பெரும்பாக்கியமாகக் கருதுவார்கள். யூத, கிறிஸ்தவர்கள் தங்கள் அறிஞர்களை வழி பட்டதைப் போன்று அண்ணன்மார்களை வழி பட்டுக் கொண்டிருக்கும் இந்த தக்லீத் தம்பிகளா ஷிர்க்கை ஒழிக்கப் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மட்டுமே கட்டுப்பட்டு நடக்க வேண்டும். குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக எவ்வளவு பெரிய அறிஞர் பேசி னாலும் அந்தப் பேச்சை தூக்கி எறிந்துவிட வேண் டும் என்று மணிக்கணக்கில் மக்களுக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் TNTJவில் உள்ள தம்பிமார் கள் தங்களது அண்ணன்மார்கள் ஹலால் என்று எதை சொன்னாலும், ஹராம் என்று எதை சொன்னாலும் சுயசிந்தனையைத் தொலைத்துவிட்டு அதை அப்படியே கண்மூடி வெறித்தனமாகப் பின் பற்றுவதைப் பெரும்பாக்கியமாகக் கருதுவார்கள். யூத, கிறிஸ்தவர்கள் தங்கள் அறிஞர்களை வழி பட்டதைப் போன்று அண்ணன்மார்களை வழி பட்டுக் கொண்டிருக்கும் இந்த தக்லீத் தம்பிகளா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறார்கள்?

அல்லாஹ்வின் சான்றுகளை கேலி செய்வோர்:
அல்லாஹ்வின் சான்றுகளில் ஒனறான பிறை விஷய#2991;த்தில் தெளிவான சான்றுகளை எவ்வளவு தான் எடுத்துக்காட்டினாலும் இந்த TNTJ இயக்க வாதிகள் கேலியும், கிண்டலும் செய்து அல்லாஹ் வின் சான்றுகளை அலட்சியம் செய்கின்றனர். அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்று களைக் கொண்டு வந்தபோது தம்மிடம் உள்ள கல்வியின் காரணமாக பெருமிதம் கொண்டனர். அவர்கள் எதைக் கேலி செய்து கொண்டிருந்தார் களோ அதுவே அவர்களை சூழ்ந்து கொண்டது.
குர்ஆன் : 40:83

இறைத் தூதர்களின் எதிரிகள் நடந்து கொண்ட தைப் போன்று பெருமையடித்து அல்லாஹ்வின் சான்றுகளை அலட்சியம் செய்து வீண் தர்க்கம் புரிந்து தேவையற்ற வீணான கேள்விகளைக் கேட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி நேர்வழியைக் கோணல் வழியாக சித்தரிக்கும் இந்த ஆணவக்கார கூட்டமா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறது?

வழிபாடுகளில் ஷிர்க்:
இரத்ததானம் செய்வது அல்லாஹ்விடம் மகத் தான கூலியை பெற்றுத் தரும் வணக்க வழிபாடு என்று பிரச்சாரம் செய்வார்கள். ஆனால் உண்மை யில் இவர்கள் எதற்காக இரத்ததானம் செய்கிறார்கள்? ஆகஸ்ட் 15 போன்ற குறிப்பிட்ட சில நாட் களைத் தேர்வு செய்து அதிக அளவில் இரத்ததானம் செய்யும்போது அரசாங்கத்தின் பார்வை இவர்கள் மீது பட்டு இவர்களது இயக்கத்திற்கு நற்பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இரத்ததானம் செய்கிறார்கள். (பார்க்க ஏகத்துவம் : ஏப்ரல் 2007 பக்கம் 39) அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செய்ய வேண்டிய இரத்ததானம் என்ற வழிபாட்டை அரசாங்கத்தின் திருப்தியை நாடி செய்யும் இவர்களா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறார்கள்?

“”எனது சமுதாயத்தின் விஷயத்தில் இணை வைப்பை நான் அஞ்சுகிறேன்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் வின் தூதரே! உங்களுக்கு பிறகு உங்கள் சமுதாயத் தார்கள் இணைவைப்பார்களா? என்று நான் கேட் டேன். அதற்கு அவர்கள் ஆம் (இணைவைப்பார் கள்) இவர்கள் சூரியனையோ, சந்திரனையோ, கல்லையோ, சிலையையோ வணங்கமாட்டார்கள் மாறாக(மற்றவர்களுக்கு) காட்டுவதற்காக நற்காரி யங்களைச் செய்வார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பாளர் : ஷத்தாத் பின் அவ்ஸ்(ரழி) நூல்: அஹமத் 16498

இதுபோன்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை யயல்லாம் கூறி அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டுமே நற்செயல்கள் செய்யவேண்டும். பிறர் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ, அல்லது பிறர் நம்மைப் பாராட்டவேண்டும், புகழவேண்டும் என்ப தற்காகவோ நற்செயல்கள் செய்யக்கூடாது. தூய்மையான எண்ணத்துடன் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று ஊருக்கு உபதேசம் செய்வார்கள். ஆனால் இவர்கள் தங்களது இயக்கத்தின் வளர்ச்சிக் காக மேற்கண்ட ஹதீஸ்களையயல்லாம் நிராகரித்து விட்டுத் தங்களது மனோஇச்சைகளின் அடிப்படை யில் செயல்படும் இவர்களா ஷிர்க்கை ஒழிக்கப் போகிறார்கள்?

TNTJ இயக்கத்தினர்கள் சமுதாயப் பணி என்று இவர்களாகவே பெயர் சூட்டிக் கொண்டு செய்யும் செயல்களில் இணைவைப்பதோடு மார்க்கப்பணி என்று சொல்லிக் கொண்டு செய்யும் செயல்களிலும் இணை வைக்கிறார்கள். பொதுக்கூட்டம், தெரு முனை கூட்டம், தர்பியா, தனிநபர் தஃவா என்று இதுபோன்ற இன்னபிற நிகழ்ச்சிகளுக்கு மாநிலத் தலைமை புள்ளிகள் வழங்கி வருகிறது. புள்ளிகளின் அடிப்படையில் தரவரிசை வழங்கி அதிக புள்ளிகள் வாங்குபவர்களுக்கு முதலிடம், இரண்டாமிடம் என தலைமை குருமார்கள் அறிவித்து தொண்டர்களுக்கு பரிசும் வழங்கி கு´ப்படுத்திவருகிறார்கள். தலைமை குருமார்களிடம் புள்ளிகள் பெற்று தலைமையிடம் நெருக்கத்தையும், பாராட்டையும், பாசத்தையும் பெற வேண்டும் என்ற எண்ணத் துடன் புள்ளிகளுக்காக தஃவா செய்யும் இவர்களா ஷிர்க்கை ஒழிக்கப்போகிறார்கள்? ஷிர்க்கை உள்ளத்தில் சுமந்து கொண்டு வெறும் நாவளவில் தவ்ஹீத் பேசி குர்ஆன் வசனங்கள் பலவற்றை மறைத்து, மறுத்து, வளைத்து, திரித்து பேசி முஸ்லிம் களை ஏமாற்றி பிழைக்கும் இந்த சுயநலவாதிகளால் நடத்தப்படும் இந்த மாநாட்டின் மூலமாக உண்மை யான நன்மை ஏதும் முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு போதும் ஏற்படாது.
இப்ராஹீம் நபியின் வாரிசுகள் யார்?

இப்ராஹிம் நபியின் வாரிசுகளே திருச்சியை திணறடிக்க சங்கமிப்போம் சரித்திரம் படைப்போம் என்று சுவர் நெடுகிலும் விளம்பர வாசகத்தை எழுதி யுள்ளார்கள். TNTJ வின் அகராதிப்படி TNTJ வில் உள்ளவர்கள் மட்டும்தான் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று மிகப் பெருமையாக சொல்லி வருகிறார்கள். இவர்கள் எதிர்க்க் கூடிய விஷயமான தர்ஹா வழிபாடு, தாயத்து, பித்அத், வட்டி, வரதட்சணை போன்றவற்றை எதிர்க்கும் TNTJ வை சாராத நபர்களைக் கூட இவர்கள் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று கூறமாட்டார்கள். அப்படியிருக்கை யில் தர்ஹா வழிபாடு, பித்அத் போன்றவற்றையெல்லாம் செய்யும் முஸ்லிம்கள் அனைவரையும் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று கூறி இவர்கள் மாநாட்டிற்கு அழைப்பது அப்பட்டமான நயவஞ்ச கத்தனமாகும். கூட்டத்தை சேர்க்க வேண்டுமென்றால் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியை கூட இவர்கள் இப்ராஹீம் நபியின் வாரிசு என்று கூறுவார்கள். உண்மையில் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று கூறுவதற்கு TNTJ இயக்கத்தினர்களுக்கு சிறிதளவும் உரிமை கிடையாது.

1. TNTJ இயக்கத்தினர்கள் குர்ஆன், ஹதீஸின் பெயரால் செய்யும் மார்க்கத்திற்கு முரணான காரியங்களைத் தகுந்த ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுபவர்களை எதிரிகளைப் போன்று பார்ப்பது
2. TNTJ அல்லாத மற்றவர்கள் நடத்தும் குர்ஆன் வகுப்பு மற்றும் பயான்களுக்கு செல்லவிடாமல் தங்களது தொண்டர்களைத் தடுப்பது
3. பல நூற்றாண்டுகளாக பிரிவினைகளில் சிக்கித் தவிக்கும் முஸ்லிம்களுக்கிடையே மேலும் மேலும் பிரிவினைகளை உருவாக்கிச் சமுதாயத் தைச் சீரழிப்பது
4. முஸ்லிம்களுக்கு காஃபிர் ஃபத்வா கொடுப்பது
5. காஃபிர் என்று இவர்களால் ஃபத்வா கொடுக் கப்பட்ட நபர்களிடம் சென்று ரமழானில் ஸகாத் நிதி, மாநாடு, போராட்டம் இன்னும் இது போன்ற பல விஷயங்களுக்காக நிதி கேட்டுப் பல்லைக் காட்டி கொண்டு நிற்பது
6. ஒரே கொள்கை கொண்ட பள்ளிகளில் அடி தடியை ஏற்படுத்தியது
7. அல்லாஹ்வை வணங்கவிடாமல் முஸ்லிம் களுக்கு இடையூறு செய்து பள்ளியை இழுத்து மூடியது.
8. மார்க்கத்தின் பெயரால் இவர்கள் செய்யும் மோசடிகளை அதற்குரிய ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுபவர்களை மனநோயாளி என்று கூறுவது.
9. இவர்கள் புரிவதை போன்றுதான் குர்ஆன் ஹதீஸை மற்ற எல்லா முஸ்லிம்களும் புரிய வேண்டும் இல்லையயன்றால் இவர்கள் முஸ் லிம்களுக்கு ஸலாம் சொல்லமாட்டார்கள். முஸ்லிம்கள் மீது இரக்கப்படமாட்டார்கள்.

இன்னும் இதுபோன்ற ஏராளமான அநியாயங் களையும், அக்கிரமங்களையும் TNTJ இயக்கத்தினர் கள் செய்து வருகிறார்கள். இதில் எந்தெந்த விஷய#2991;ங் களை இப்ராஹீம் நபி செய்தார்? இப்ராஹீம் நபி செய்யாத விஷயங்களையயல்லாம் செய்து கொண்டு நாங்கள் மட்டும்தான் இப்ராஹீம் நபி யின் வாரிசுகள் என்று கூறுவதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. இப்ராஹீம் நபியின் வாரிசுகள் தொழுகையை நிலைநிஉத்துவோராக இருந்தார்கள் என்று அல்லாஹ் குர்ஆனில் (19:55) கூறுகிறான்.

ஆனால் இந்த இயக்கவாதிகள் ஐவேளை தொழுகைகளைப் பேணுதலாகத் தொழாத நிலையில் நாங்கள் மட்டும்தான் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று சொல்வது இவர்கள் அப்பட்ட மான பொய்யர்கள் என்பதைக் காட்டுகிறது. மதரஸாவில் ஏழு ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற மெளலவி கள் நாங்கள் மட்டும்தான் நபிமார்களின் வாரிசுகள் என்று பெருமையாக சொல்லிக் கொண்டு நபி வழிக்கு எதிராக நடப்பதை போன்று இவர்களும் நாங்கள் மட்டும்தான் இப்ராஹீம் நபியின் வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டே இப்ராஹீம் நபிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள்.

சென்னை ஸ்தம்பித்தது, கோவை குலுங்கியது, புதுவை பொங்கியது என்கின்ற பாணியில் திருச்சியை திணரடிப்போம் என்று கூக்குரலிடுகின்றனர். திணற டிப்பது என்றால் யாரை? இந்துக்களையா? கிறிஸ்தவர்களையா? சுன்னத் ஜமாஅத்தினரையா? அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம்களையுமா? அல்லது அரசியல்வாதிகளையா? வேறு யாரைத்தான் திணற டிக்க போகிறார்கள்; மற்றவர்களைத் திணறடிப்பது தான் மாநாட்டின் நோக்கமா?

மாநாடு எதற்கு பயன்படும் :
ஷிர்க்்கை வேரோடும் வேரடி மண்ணோடும் கிள்ளி எறிவோம் என்று வீரவசனம் பேசும் இந்த TNTJ இயக்கவாதிகளே பல விஷய#2991;ங்களில் ஷிர்க்்கை செய்து கொண்டு, ஷிர்க்்கில் மூழ்கியிருக் கும் இன்னபிற முஸ்லிம்களையும் தங்களது மாநாட் டிற்கு அழைத்து அதன் மூலம் கூட்டத்தைக் காட்டி அரசியல் லாபம் அடையவும், லட்சக்கணக்கில் நிதி திரட்டவும் (கோடிகளையும் தொடலாம்) ஜமாஅத் தின் புகழ்பாடவும், தலைவர்களின் அந்தஸ்தை உயர்த்தவும், எங்களது ஜமாஅத் மட்டும்தான் சத்தி யத்தில் உள்ளது; ஆகையால்தான் எங்களது ஜமாஅத் மிக பிரமாண்ட வளர்ச்சியடைந்துள்ளது என்று பொய்களை அவிழ்த்துவிட்டு அதன் மூலமாக குர்ஆன், ஹதீஸை நேரடியாக எடுத்து படிக்காத மக் களை தங்களது ஜமாஅத்தில் இணைத்துக் கொள்வதற்குமே இந்த மாநாடு பயன்படும்.

Previous post:

Next post: