ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2017 ஜனவரி,பொதுவானவை

MTM முஜீபுதீன், இலங்கை
டிசம்பர் 2016 தொடர்ச்சி……
அவன்தான் இரவில் உங்களை மரிக்கச் செய் கிறான். இன்னும் நீங்கள் பகலில் செய்பவற்றை யயல்லாம் அறிகிறான். மீண்டும் உங்களைக் குறிப்பிட்ட தவணை முடிவதற்காக பகலில் எழுப்புகிறான் பின்னர் உங்களுடைய (இறுதி) மீட்சி அவனிடமே இருக்கிறது. அப்பால் நீங்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன்: 6:59-60)

எல்லா உயிருள்ள உயிரற்ற படைப்புகளை யும் படைத்த அல்லாஹ், எல்லாவற்றையும் அறிந்தே வைத்துள்ளான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. சகலவையும் அவன் நிர்ணயித்த கணக்கின்படியே இயங்குகின்றன. அவ்வாறு அல்லாஹ் அமைத்து வைத்திருப்பத னால், மறைவானவற்றை அறியாத மனிதன் அல்லாஹ் படைத்தவற்றின் இயற்கைப் படைப் புகளை அவதானித்து தமது நடைமுறை வாழ்க் கையின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்துக் கொள்ள முடிகின்றது. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மனித படைப்பைப் பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.
உண்மையே பேசிய வரும் உண்மையில் அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படு கிறார். பிறகு வயிற்றிலேயே அதைப் போன்றே (நாற்பது நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப்பற்றிப் பிடித் துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு வயிற்றில் அதைப் போன்றே (மேலும் நாற்பது நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடு கிறது. பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப் படுவார். அவர் அதில் உயிரை ஊதுகிறார். (அதற்குப் பின்பே) அந்த மனிதனின் வாழ்வா தாரம், வாழ்நாள், செயற்பாடு, அவன் நற்பேறற் றவனா அல்லது நற்பேறு பெற்றவனா ஆகிய நான்கு விசயங்களை எழுதுமாறு அவர் பணிக் கப்படுகிறார்.

எவனைத் தவிர வேறு இறைவன் இல் லையோ அந்த ஓரிறைவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் சொர்க்கவாசிகளின் (நற் செயலைச் செய்துகொண்டே செல்வார். அவருக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு முழம் இடை வெளிதான் இருக்கும் அதற்குள் விதியவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயல் களைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்து விடுவார்.

(இதைப் போன்றே) உங்களில் ஒருவர் நரக வாசிகளின் (தீய) செயல்களைச் செய்து கொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையில் ஒரு முழம் இடை வெளிதான் இருக்கும். அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசி களின் செயலைச் செய்து அதன் விளைவாக சுவர்க்கத்தில் புகுந்து விடுவார். (முஸ்லிம்:5145)

இந்த ஹதீஃதில் கருவறையில் நடைபெறும் செயற்பாடுகள் அல்லாஹ்வின் தூதரினால் கூறப்படுகின்றது. அந்த வளர்ச்சி நிலைகளை விஞ்ஞானமும் இன்று உண்மைப்படுத்தியபடி இருக்கின்றது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர் கள் கூறினார்கள்.

அல்லாஹ் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான். (அப்போது) அவனது அரியணை (அர்ஷ்) தண்ணீரின் மேல் இருந்தது. (முஸ்லிம் : 5160)

ஆகவே படைப்பினங்களின் விதிகளை அல்லாஹ் அவற்றைப் படைப்பதற்கு முன்பே நிர்ணயித்து விட்டான். அத்துடன் மனிதன் ஏன் செயற்படவேண்டும் என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு விடை அளிக்கிறார்கள்.

உங்களில் யாரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தமது இருப்பிடம் சொர்க்கத்திலா, அல்லது நரகத்திலா என்று அல்லாஹ்வால் எழுதப்படாமல் இருப்பதில்லை; அது நற்பேரற் றதா, அல்லது நற்பேறு பெற்றதா என்று எழுதப் பட்டிராமல் இல்லை என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நல்லறங்கள் செய்யாமல், எங் கள் (தலை) எழுத்தின் மீது (பாரத்தைப் போட்டு விட்டு) இருந்துவிட மாட்டோமா என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், யார் (விதியில்) நற்பேறு அற்றவராக இருக்கிறாரோ அவர் நற்பேறற்றவர்களின் செயலுக்கு மாறுவார் என்று கூறினார்கள்.

மேலும் அவர்கள், நீங்கள் செயலாற்றுங்கள் (நல்லார், பொல்லார்) எல்லோருக்கும் (அவர வர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது. நல்லவருக்கு நல்லவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும் என்று கூறினார்கள்.

பிறகு யார் (பிறருக்கு) வழங்கி இறைவனை அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறார் களோ அவருக்குச் சுலபமான வழியை எளிதாக் குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற் றவராக தன்னைக் கருதி, நல்லதை நம்ப மறுக் கிறாரோ, அவருக்கு சிரமத்தின் வழியை எளிதாக்குவோம். (அல்குர்ஆனில் 92:5-10) என்னும் வசனங்களை படித்துக் காட்டினார் கள். (முஸ்லிம் : 5150)
ஒரு மனிதன் சுவர்க்கவாசியாக இருப்பின் அவருக்கு அல்குர்ஆன் கூறும் நல்லறங்களின் வழி எளிதாக்கப்படுகிறது. ஒருவன் நரகவாசி யாக இருப்பின் அவனுக்கு தீயறங்களின் வாயில் கள் எளிதாக்கப்படும். ஆகவே மனிதன் தனக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் நிலை யாது என் பதை தெரியாதமையால் அவன் அல்குர்ஆனை அவதானித்து, நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த நல்லறங்களை செய்து, தீயறங்களை விட்டு நீங்கி வாழ்வது அவசியமாகும். அல்லாஹ் எல்லாவற்றையும் படைத்தவன். ஆகவே, அவன் தான் படைத்த படைப்புகளின் தன்மை களை அறிந்தவனாக இருக்கிறான். மறுக்க முடியுமா? சிந்தியுங்கள்.

மனிதன் அல்லாஹ்வின் சில செயற்பாடு களை முன்கூட்டி அறிந்து கொள்வதற்காக படைப்பினங்களை பார்த்து ஆராயும்படி அல்குர்ஆன் கூறுகிறது. இது பல சந்தர்ப்பங் களில் யூக முடிவாக அமைகிறது. சில விசயங் களை மக்களின் தேவைகளுக்கு அமைய அறிந்து கொள்ளக்கூடிய முறையில் படைப்பினங்களை ஒரு கணித முறைக்கமைய வடிவமைத்துள் ளான். ஆகவே அல்குர்ஆன் படைப்பினங்களை சுட்டிக்காட்டி ஆராயவில்லையா? என்று கேட் கின்றது. அவதானியுங்கள்.
நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கி றோம். (அல்குர்ஆன் : 54:49)

அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அளவின்படி படைத்துள்ளதாக குறிப்பிடு கிறான். மேலும் அவதானியுங்கள்.

இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலைச் கழற்றி விடுகின்றோம் அதனால் அவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடு கிறார்கள்.

இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையறைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது. இது யாவற்றையும் மிகைத் தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனு மாகிய (இறை)வன் விதித்ததாகும்.
இன்னும் (உலர்ந்து வளைந்த) பழைய பேரீத்த மட்டையையைப் போலாகும் வரை யில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்கு மிடங்களை) ஏற்படுத்தியிருக்கிறோம்.

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம்(தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (அல்குர்ஆன்: 36:37-40)

அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் ஒரு கணக்கின்படி விதியின்படி படைத்துள்ளான். அவை அதன்படியே செயற்படுகின்றன. அவை மாறுவதில்லை. இதனால் அறிவுடைய மனிதர் களுக்கு அல்லாஹ்வின் விதி எழுதப்பட்டுள்ள பதிவேட்டை அறியமுடியாவிட்டாலும், இயற் கைப் பொருட்களை பார்த்து புதுமைகளை கண்டு கொள்ள முடியும். இதனால் மனிதனு டைய வசதிக்கேற்ப பல கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.

இன்று மனிதன் சூரியனைப் பார்த்து கணக் கிட்டு, தனது கால நேரத்தை அறிய கருவி களைப் பல வடிவில் அமைத்து விட்டான். அன்று பல கஷ்டங்களுக்கும், தவறுகளுக்கும் மத்தியில் நேரங்களை வானத்தையும், சூரிய னையும் புறக் கண்களினால் அவதானித்து, தமது வணக்க வழிபாடுகளை, நடைமுறைச் செயற்பாடுகளை மேற்கொண்டான். ஆனால் மனிதன் இன்று அல்லாஹ் நிர்ணயித்து விதிக் கமைய செயற்படும் சூரியனை அவதானிக்க நவீன கருவிகளை கண்டுபிடித்து விட்டான். இதனால் இலகுவாக சிரமங்கள் இன்றி நேரங் களையும், கோள்களின் மாறும் திசைகளை அறிந்து காலங்களையும், வான விஞ்ஞான உண்மைகளையும் கண்டு கொண்டான்.

அன்று பிறையைப் பார்த்து மாத நாட்க ளைக் கண்டு வந்தார்கள். இது மக்களுக்கு பெரும் சிரமத்தையும், தவறுகளையும், சந்தே கங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்தி யது. ஆனால் அல்லாஹ்வின் விதிக்கமைய சந்தி ரன் தனது வட்டவரையில் மாறாமல் செல்கின்றது. அது அல்லாஹ்வின் கட்டளையை மீறிய தில்லை. அத்துடன் சூரியன், பூமி, சந்திரன் தமது வட்டவரைக்கமைய, விதிக்கமைய, கட்ட ளைக்கமைய இறைவனை வணங்கி வருகின் றன. இதனால் பூமியின் நிழல் சந்திரனை, கணித அளவீட்டில் மறைத்துச் செல்கிறது. இதனால் சந்திரனின் நிழலை கணித அடிப்படையில் கணக்கிட்ட உலர்ந்து வளைந்து பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் பல மன்ஸில்களின்படி செயற்படுவதை மனிதனால் அவதானிக்க முடிகிறது. இதனை அவதானித்த விஞ்ஞானிகள் கணித அடிப்படையில் அல் லாஹ் அமைத்த விதிக்கமைய செயற்படும் சந் திர ஒளிக்கீற்றை பார்த்து, சந்திர மாதங்களைப் பிழைகள் இன்றி கணக்கிட்டுக் காணலாம். அறி வுடைய சமுதாயத்தினர் இந்த உண்மையை அறிந்து அல்லாஹ் விதியாக அமைத்த நாட்க ளைக் கணக்கிட்டுச் செயற்பட முடியும்.

இதேபோல் அல்லாஹ்வின் நிர்ணய விதி முறைக்கமைய உயிரினங்களின் உடல் இயக்க மும், வானங்கள் பூமியின் செயலமைப்பும் இயங்குகின்றன. இந்த அல்லாஹ்வின் விதி முறைக்கமைய இயங்கும் படைப்புகளின் செயற்பாடுகளுக்கமைய மனிதன் விஞ்ஞானம், புவியியல், மருத்துவம், தொழில் நுட்பம், வானவியல், கணிதம் சார்ந்த அறிவுத்துறை களைக் கண்டுகொண்டான். இதன் மூலம் மனித செயற்பாடுகளுக்கு உதவும் பல ஆக்கச் செயற்பாடுகள், உற்பத்திகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதைக் கண்கூடாக நாம் காண்கிறோம். இத்துறைகளைப் படித்துப் பட்டம் பெறும் மனிதர்களை அறிஞர்கள், கல்விமான்கள் என கண்ணியப்படுத்துகிறோம். அவர்களின் அறிவுக் கமைய அவர்களை கல்விமான்கள் என பல பெயர்களில் அழைக்கிறோம். ஒரு துறைகளில் சாதனை படைத்தவர்களையே மனிதன் பெரு மையோடு கண்ணியப்படுத்துகிறான். அவ்வா றாயின் வானங்களையும், பூமியையும், உயிரி னங்களையும் படைத்து பரிபாலித்துப் பாது காத்துகாக்கும், எல்லா செயற்பாடுகளுக்கும், அறிவுக்கும் விதியமைத்த அல்லாஹ்வை அறி வுடைய மனிதன் அவன் பண்புக்கமைய கண் ணியப்படுத்த வேண்டாமா? எல்லாவற்றையும் முன்மாதிரி இன்றி படைத்து, அவற்றை மனிதன் பயன்படுத்த உதவிய அல்லாஹ்வை வணங்கக் கூடாதா? அவனுக்கு நிகராக இந்த பூமியில் ஒரு படைப்பினம் இருக்கின்றதா? இல்லவே இல்லை. அவ்வாறாயின் ஏன் அவனுக்கு நிகராக வானவர் களையும், இறைத் தூதர்களையும், அரசர்களை யும் வெறும் கற்பனைச் சிலைகளையும் மரண மடைந்து புதைக்கப்பட்ட புதைக் குழிகளை யும் தெய்வமாகக் கொண்டு வணங்க வேண்டும்.

அத்துடன் நீங்கள் அல்லாஹ்வின் இறுதி இறைநெறி நூலை மறந்து ஷைத்தானின் தீய வழிமுறைகளை ஏன் பின்பற்றவேண்டும். நீங்கள் அல்லாஹ்வின் விதியை மறந்து செய்யும் பாவங்களைச் சிறிது எண்ணிப்பாருங்கள்.

இன்று மனிதன் விஞ்ஞானத்திலும், தொழில் நுட்பத்திலும் முன்னேற்றம் அடைந் துள்ளான். எனவே இன்றைய விஞ்ஞானிகள் திட்டமிட்டு பல விதிகளை உருவாக்கி ஒரு ரொபோவை உருவாக்கி இருக்கிறார்கள் என வைத்துக் கொள்வோம். அந்த ரொபோவை சந்திரனுக்கும், செவ்வாய்க்கும் அனுப்பிப் பல விஞ்ஞான ஆய்வுகளை முடித்து திரும்பியுள்ள தாகக் கொள்க, இவ்வாறாயின் இதற்குரிய பாராட்டுகளையும் பெருமைகளையும் ரொபோவை உருவகித்து திட்டமிட்டு அனுப் பிய விஞ்ஞானிக்கு வழங்குவீர்களா? அல்லது போய் வந்த ரொபோவுக்கு வழங்குவீர்களா? சிந்தியுங்கள். பாராட்டுகளையும், மலர் மாலை களையும் ரொபோவுக்கு மக்கள் வழங்கினால், அந்த மக்களை அறிவுடையவர்கள் என கூற முடியுமா? சிந்தியுங்கள். இதனை அறிவு குறைந்த கேலிக்குரிய மடமையான செயற்பாடு என சிறிய பிள்ளைகளும் கூறுவார்கள் அல்லவா? அவ்வாறாயின் எல்லாவற்றையும் படைத்துப் பரிபாளிக்கும் ஏக இறைவனை விட்டுவிட்டு மனிதர் தனது கைகளினால் வடி வமைத்த சிலைகளை இறைவனுக்கு இணை யாகக் கற்பனை செய்து வணங்குவது மிகப் பெரிய மடமையாகும். மறுக்க முடியுமா? அத் துடன் உலகில் பல தெய்வங்கள் இயங்க முடியுமா? சிந்தியுங்கள்.

Previous post:

Next post: