ஊருக்கு உபதேசமா?

in 2017 ஏப்ரல்

அபூ அப்தில்லாஹ்

அன்புச் சகோதரர் S.கமாலுத்தீன் மதனி அவர்களே!
இந்த குர்ஆன் வசனங்களைப் பலமுறைப் படித்துப் படிப்பினை பெறுங்கள்.
நம்பிக்கை கொண்டவர்களே நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?
நீஹ்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (61:2,3)

இந்த இரண்டு வசனங்களையும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்ட பின் அல்ஜன்னத் ஜூன் 2008 மற்றும் பிப்ரவரி 2017 இதழ்களில் இடம் பெற்றுள்ள அரிய உபதேசங்கள் இரண்டையும் படித்து நீங்கள் அவற்றின்படி நடக் கிறீர்களா? என உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்! ஜூன் 2008-ல் நீங்கள் எழுதிய மனம் திறந்த மடலுக்கு இதே தலைப்பில் அந்நஜாத் ஜூலை 2008 இதழில் 16 பக்கங்களில் விளக்கம் தந்தோம். அதை நீங்கள் கண்டு கொள் ளவே இல்லை. 1985,86,87களில் ஏற்பட்ட ஒன்று பட்ட ஓர் அணியில் இணைந்து செயலாற்றிய நாட் களில் காணப்பட்ட நற்பண்புகளும், நல்லெண் ணங்களும் இன்றைய அழைப்பாளர்களிடத்தில் காண முடியாததற்கு றீ.கமாலுத்தீன் மதனியாகிய நீங்கள் தான் முழுமுதல் காரணம் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?
1984.10.30 செவ்வாய் அன்று திருச்சி தூய சின்னப்பர் இறையியல் கல்லூரியில் “”சமயங்களால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள சாதக பாதகங்கள் (பல் சமய சிந்தனை) என்ற தலைப்பில் நாம் பேசிய ஆக்கம் நூல் வடிவில் வெளிவந்ததை நீங்கள் பார்த்துவிட்டுத்தான் எம்மைத் தொடர்பு கொண் டீர்கள். அப்போது 43(1985) வயதினனாகிய எம்மை “”சீர்திருத்தப் பெரியார்” என போலியாகப் புகழ்ந்து, உங்களூரில் மவ்லவிகள் அதிகம் இருக்கி றார்கள், அங்கு வந்து அதே உரையை நிகழ்த்த வேண்டும் என்று நீங்கள் அழைப்பு விடுத்து நாம் வந்து பேசியதையும் மறந்திருக்க மாட்டீர்கள். அக் கூட்டத்தில் மவ்லவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி எம்மைக் கடுமையாக எதிர்த்துக் கேள்வி மேல் கேள்வி கேட்டு உரிய பதிலைப் பெற்ற பின், அங்குள்ள அரபு மதரஸா தலைமைப் பொறுப்பலி ருந்தும், சுன்னத் ஜமாஅத் பிரிவிலிருந்தும் தெளபா செய்து மீண்டு குர்ஆன், ஹதீஃத் மட்டுமே ஒரே நேர்வழி என்று ஏற்று வந்ததையும் மறந்திருக்க மாட்டீர்கள். அதற்கடுத்த மாதம் மீண்டும் கடைய நல்லூரிலும் மவ்லவிகள் அதிகம் இருக்கிறார்கள் அங் கும் வந்து அதே உரையை நிகழ்ந்த வேண்டும் என்று நீங்கள் கேட்டு நாம் வந்து உரையாற்றியதை யும், இரு ஊர்களிலும் கேட்ட கேள்விகளுக்கு குர் ஆனில் இருந்தே ஆதாரம் கொடுத்து பதில் அளித் ததையும் மறுக்கமாட்டீர்கள். கடையநல்லூரில் தான் நாம் பீ.ஜை.யை முதன்முதலாகச் சந்தித் தோம் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்.

அந்தப் பல்சமயச் சிந்தனை நூலிலேயே சமுதா யத்தில் ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை. இஸ்லா மிய மார்க்கத்தில் இடைத்தரகர்களான புரோகிதர் களுக்கு இடமே இல்லை. கடமையான மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவே கூடாது என்பதை எல்லாம் தெளிவாகவே குறிப் பிட்டுள்ளோம். அன்று 1984ல் கூறிய குர்ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்திலிருந்து கடந்த 34 வருடங் களாக அணுவளவாவது நாம் மாறி இருக்கிறோமா? தடம் புரண்டிருக்கிறோமா? நீங்களே சொல்லுங்கள்!

அப்படியானால் எந்த “”பல்சமய சிந்தனை” நூலைப் பார்த்து விட்டு எம்மோடு வந்து நீங்களும், பீ.ஜையும் இணைந்து செயல்பட்டீர்களோ, அதற்கு மாறாக அந்நூலிலுள்ள கருத்துக்களுக்கு முரண்பட்டு நீங்கள் இருவரும் தடம் புரண்டு ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தை 1987ல் இரண்டாக உடைக்க என்ன காரணம்? சொல்வீர்களா? ஆம்! ஆலிம்-அவாம் பிரிவினை மார்க்கத்தில் உண்டு என்ற வழிகேட்டை நிலைநாட்ட நீங்கள் பெரும் முயற்சி எடுத்தீர்கள். ஒரு சமயம் உங்கள் ஜமீஆவில் உங்களுக்கும் எனக்கும் இடையில் இது விசயத்தில் விவாதம் நடந்து கொண்டிருந்தது. அப்போது பீ.ஜை. குறுக்கிட்டு அபூ அப்தில்லாஹ் நான் றீ.லு.க்கு விளக்குகிறேன் என்று கூறி சமுதாயத்தில் ஆலிம்- அவாம் வேறுபாடு கூடாது. அதுவே சகல வழிகேடு களுக்கும் காரணம் என்று விளக்கியதை மறந்து விட்டீர்களா? பீ.ஜையும் மறந்துவிட்டாரா?

ஆனால் அதன் பின்னர் நீங்கள், சையது முஹம்மது மதனி இருவரும் பீ.ஜையை மீண்டும் உங்களின் புரோகித வலைக்குள் சிக்க வைத்து விட்டீர்கள். 1986 ஏப்ரலில் அந்நஜாத் ஆரம்பத்திலி ருந்து ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை. இடைத் தரகர்கள் இல்லை, கடமையான மார்க்கப் பணிக் குக் கூலி கூடாது, வீண் ஆலிம் மவ்லவி பெருமை கூடாது என்று தெளிவாக நீங்கள், பீ.ஜை, சையது முஹம்மது மதனி, இதர மவ்லவிகள் அனைவரும் சரிகண்டு அந்நஜாத்தில் எழுதி வந்த நிலையில், நாம் துபை சென்று இக்பால் மதனியுடன் ஸலஃபி விவகாரத்தில் மோத நேரிட்டது. இத்தனைக்கும் ஸலஃபி கூடாது என்பதைப் பற்றிப் பிரசுரம் தயாரித்து அதை உங்கள் அனைவரிடமும் காட்டி விட்டே எடுத் துச் சென்றோம். அதுவரை கே.எம்.ஐ.யுடன் எவ் விதத் தொடர்பும் இல்லாத நீங்கள் மூவரும் பின்னர் அவருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தீர்கள்.

அதன் பின்னர் இக்பால் மதனியின் துர்போத னையை ஏற்று, அந்நஜாத்தை விட்டு எம்மை வெளி யேற்றிவிட்டு மவ்லவிகளாகிய நீங்கள் அந்நஜாத் தைக் கைப்பற்றச் செய்த பெரும் முயற்சிகள், போட்டச் சதித் திட்டங்கள் அனைத்தையும் மீள் ஆய்வு செய்யுங்கள். 1987 ஜனவரியில் கேரளா குட்டிபுரம் முஜாஹித் மாநாட்டில், மவ்லவிகளும் பக்தகோடிகளும் இணைந்து எம்மை அந்நஜாத்திலி ருந்து அகற்றிவிட்டு அதைக் கைப்பற்றச் செய்த சதி யாலோசனைகள், கோவையில் முஜாஹித்களோடு சேர்ந்து மவ்லவிகளாகிய நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எம்மீது எப்படி எல்லாம் பொய்ப் பழிக ளைச் சுமத்தி அந்நஜாத்தை விட்டு எம்மை வெளி யேற்றுவது என முடிவு செய்து, எம்மீது பழி சுமத்திப் பொய்ச் செய்திகளையும், அவதூறுகளையும், அமா னித மோசடி என்றும் அபாண்டமாகச் செய்திகள் பரப்பினீர்கள்.

பீ.ஜை. சையது முஹம்மது மதனி, ஊட்டி கான் மூவரும் திருச்சி வந்து நாம் குர்ஆன் பயிற்சி வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும்போது இடைமறித்து மிரட்டி எம்மை அந்நஜாத்தை விட்டு வெளியேறு மாறு வற்புறுத்தினார்கள். அப்போது பீ.ஜை. நான் அந்நஜாத்தில் ஆசிரியராகப் பணி புரிகிறேன். இப் போது ணூபுளீ காரர்கள் என்னை விலகச் சொன்னால் உடனே விலகிவிடுவேன், அதுபோல் உங்களை வில கச் சொல்கிறார்கள். அதன்படி நீங்கள் விலக வேண் டியதுதானே! என்று கதை கட்டினார். அதற்குரிய பதிலாகத்தான் பீ.ஜையான நீங்கள் சம்பளத்திற்குப் பணிபுரிகிறீர்கள். எனவே அவர்கள் விலகச் சொன் னால் நீங்கள் விலகத்தான் வேண்டும். நான் சம்பளத் திற்கு வேலை செய்யவில்லை; மார்க்கத்தை நிலை நாட்ட அல்லாஹ்வுக்காகப் பணி புரிகிறேன். அவர் கள் சொல்லி நான் விலக வேண்டியதில்லை என்று பதில் கூறினோம். அவர்கள் வாயடைத்துப் போனது மட்டுமில்லாமல், வெளியே போய் நாம் பீ.ஜையை சம்பளம் வாங்குவதாகச் சொல்லி அவரை அவ மானப்படுத்தி விட்டதாகச் செய்தி பரப்பி பீ.ஜை. பக்தகோடிகளுக்கு கொம்பு சீவி விட்டார்கள். நாம் என்றுமே ணூபுளீயின் உறுப்பினராக இருந்ததில்லை. அந்நஜாத் ஆரம்பிக்கும்போது ணூபுளீ என்ற ஒன்று இருக்கவே இல்லை. அன்று எம்மோடும் பீ.ஜை யுடனும் தொடர்பு கொண்டு அந்நஜாத்தை தொடங்குவது பற்றிப் பேசியவர்கள் இஸ்லாமிய இளைஞர் இயக்கம் (இஇஇ) என்ற ஓர் அமைப் பினரே. அதற்குரிய ஆதாரம் எம்மிடம் உண்டு.

1987 பிப்ரவரி 14,15 தேதிகளில் திருச்சியில் நடை பெற்ற இஸ்லாமிய மாநாட்டிற்கு அழைப்புவிடச் செல்கிறோம் என்ற பேரில் அந்நஜாத் செலவில் ஊர் ஊராகப் போய் அங்கெல்லாம் எம்மைப் பற்றி அமானித மோசடி, அந்நஜாத் வரவு செலவு கணக்கு களை மவ்லவிகளாகிய அவர்களே பார்க்கும் நிலை யில் வரவு செலவுகளுக்கு கணக்கு சரியாக வைக் கப்படவில்லை. வரவுகள் முறையாக வரவு வைக்க வில்லை. மவ்லவிகளை மதிப்பதில்லை. அவரது வேலைக்காரர்கள் போல் நடத்துகிறார். இப்படிப் பலவிதமான பொய்ப் பிரச்சாரம், பொய்யுரைகள், வீண் பழிகள் சுமத்தி அந்நஜாத் வாசகர்களிடம் எம்மைப் பற்றி பெரும் கெட்டெண்ணம் ஏற்படுத்தி வந்தீர்கள்.

மாநாட்டுக்காக ஏற்பாடு செய்திருந்த மண்டபத் திற்கு முன் பணம் கொடுத்திருந்ததால் தப்பினோம். மற்றபடி சமையல் பாத்திரங்கள் இவர்கள் தூண்டு தலில் தர மறுத்துவிட்டார்கள். கழிவறைகளில் உள்ள டப்பா முதல் எடுத்துவிட்டார்கள். மவ்லவி களது ஒத்துழைப்பு அறவே இல்லை. மாநாட்டைச் சொல்லி வசூலித்தப் பணத்தையும் தரவில்லை. பெரும் சிரமத்திற்கு இடையே அனைத்து ஏற்பாடு களையும் தனியயாருவனாக செய்ய நேர்ந்தது. சமையலிலும் பல குழறுபடிகளை ஏற்படுத்தி இருந்தீர்கள்.

இப்படிப்பட்டப் பலத் தடுமாற்ற நிலையில் நாம் இருக்கும் போது, சிலரைப் பிடித்து 100, 200, 300, 400, 500 எனப் பணம் கொடுக்க வைத்தீர்கள். அந்தத் தடுமாற்ற நிலையில் ஏதாவதொரு தொகை விடுபட நேரிடலாம். அந்த அற்பத் தொகையைக் கொண்டே பெரும் பழி சுமத்தி எம்மை அந் நஜாத்தை விட்டுத் தூக்கி எறிந்துவிடலாம் எனச் சதித்திட்டம் தீட்டினீர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த தடுமாற்ற நிலையிலும் ஒரு தொகை கூட விடுபடாமல் அனைத்தையும் அந்நஜாத் கணக் கில் சேர்க்க அருள் புரிந்தான். இந்த அனைத்து சதி முயற்சிகளிலும் மூக்கறுபட்டீர்கள். இப்படி மவ்லவிகளாகிய உங்களின் அனைத்து சதி முயற்சி களிலும் மவ்லவிகளாகிய உங்கள் அனைவருக்கும் மூளையாகச் செயல்பட்டவன் பொய்யன் பீ.ஜை. ஆயினும் நீங்கள் அனைவரும் பீ.ஜைக்குத் துணை போனீர்கள் என்பதை மறுக்க முடியுமா?

மவ்லவிகளாகிய உங்களின் சதித்திட்டம் அனைத்தும் தோல்வியுற்ற பின், நிர்வாக பொறுப்பி லிருந்து நாம் விலகி மவ்லவிகளாகிய உங்களிடம் ஒப்படைத்திருந்ததால், தமிழகமெங்கும் உள்ள நஜாத் வாசகர்களைத் திரட்டி அவர்கள் மூலம் எம்மை அந்நஜாத்தை விட்டு வெளியேற்றத் திட்ட மிட்டீர்கள். அதற்காகத் திருச்சியிலுள்ள பெரும்பா லோரை விட்டுவிட்டு, நாகர்கோவில், நெல்லை, கோவை, தஞ்சை என உங்களின் ஆதரவாளர் களையே அதிகமாகத் தேர்வு செய்தீர்கள். அது மட்டுமா? அவர்களிடம் எக்காரணத்தைக் கொண் டும் அபூஅப்தில்லாஹ்வை மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யத் துணை போகாதீர்கள். தலைவர் பதவிக்கு அவர் பெயரைப் பரிந்துரைக்காதீர்கள் என்று ஆளாளுக்குச் சொல்லித் தயார் செய்தீர்கள். மவ்லவிகளாகிய நீங்கள் அனைவரும் பெரும் சதித் திட்டம் தீட்டினீர்கள். அல்லாஹ்வும் திட்டமிட் டான். கடைசியில் உங்கள் சதித்திட்டங்கள் அனைத்தும் தோல்வியுற்று அல்லாஹ்வின் திட்டமே வெற்றி கண்டது.
கடைசியில் உங்கள் நாகர்கோவிலைச் சேர்ந்த ஒருவரே எம்மைத் தலைவராக முன்மொழிந்து மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒருவர் ஆமோ தித்து, வேறு யாரும் போட்டியிடத் துணியாததால் மீண்டும் எம்மையே தலைவராகத் தேர்ந்தெடுக்கும் கட்டாயத்திற்கு ஆளானீர்கள். அத்தோடு விட்டீர் களா? உங்களின் புரோகிதத்தை அந்நஜாத்தில் திணிக்கும் நோக்கோடு தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை என்ற ஒரு வழிகெட்ட, நரகத்திற்கு இட்டுச் செல்லும் ஜமாஅத்தை அமைத்து அரசில் பதிவு செய்து கொண்டு, அதை அந்நஜாத்தில் விளம் பரமாகப் போடச் சொன்னீர்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கவில்லை, மறுத்துவிட்டோம்.

அதைக் காரணம் காட்டியே ஒட்டுமொத்த மவ்லவிகளும் அந்நஜாத்தை விட்டு வெளியேறினீர் கள். மவ்லவிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக அந்நஜாத்தை விட்டு வெளியேறிவிட்டால் அந்நஜாத்தை எம்மால் தொடர்ந்து நடத்த முடி யாது என்ற தப்பெண்ணத்தில் தமிழ்நாடு முழுக்க அந்நஜாத் நின்றுவிட்டது என்று பொய்ச் செய்தி பரப்பினீர்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் அவனது கருணையைக் கொண்டு அந்நஜாத் கடந்த 30 ஆண்டுகளாகத் தொய்வின்றி தொடர்ந்து வெளிவர அருள்புரிகிறான். மவ்லவிகளாகிய உங்கள் அனை வரின் முயற்சிகளும் மண்ணைக் கவ்வின. ஆனால் வேதனைக்குரிய விசயம் இவ்வளவு நடந்தும் மவ்லவிகளாகிய நீங்கள் படிப்பினை பெறவில் லையே என்பதுதான். (பார்க்க: 7:146, 39:72)

கடந்த 1000 வருடங்களாக நான்கு மத்ஹபு களாகப் பிரிந்து கிடக்கும் முஸ்லிம்களை ஒரே மத்ஹபாக, முஸ்லிம்கள் என்ற நிலையில் “”ஜமாஅத் துல் முஸ்லிமின்” என்ற நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் களுக்காக விட்டுச் சென்ற 6:153 வசனம் கூறும் ஒரே நேர்வழி ஜமாஅத்தில் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைக்கும் முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட அந்நஜாத்தில் மவ்லவிகளாகிய நீங்கள் தந்திரமாகப் புகுந்து சதிகள் பல செய்துவிட்டு, தோல்வியுற்று 1987 ஜூனில் வெளியேறி ஆக்ஹ் பின்னர் ஜாக்ஹ் வழி கெட்டப் பிரிவை ஆரம்பித்தீர்கள். அது பல்கிப் பெருகி நீங்கள் எழுதி இருப்பது போல் பல வழி கெட்ட ஜமாஅத்துகள் நாளொரு மேனி, பொழு தொரு வண்ணம் என பெருகிக் கொண்டிருக்கின் றன. சுவர்க்கம் செல்வது ஒரே ஒரு ஜமாஅத்தான். நரகிற்குச் செல்வது 72 ஜமாஅத்துகள் என்று நபி (ஸல்) கூறியுள்ளதை மறந்து விடாதீர்கள். வழி கெட்ட ஜமாஅத்தினர் இந்த ஹதீஃதை மறுக்க லாம். பலகீனமானது எனலாம். ஆனால் பல குர் ஆன் வசனங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.

1984-ல் வெளியிட்ட பல்சமய சிந்தனை நூலி லேயே ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை என்ற கருத்தைப் படித்த நீங்கள் 1986-ல் உங்கள் ஊரில் சு.ஜ.வினருடன் நடந்த விவாத மன்றத்திலிருந்து நாம் வெளியேற்றப்பட்டதால், அந்த ஆத்திரத்தில் மவ்லவிகளைக் கடுமையாக விமர்சிப்பதாக அப் பட்டமானப் பொய்யைப் பரப்பி வருகிறீர்கள். அல்ஜன்னத்தில் எழுதியும் வருகிறீர்கள். அந்த மேடைக்கு நான் வரவும் இல்லை. வெளியேற்றப் படவும் இல்லை என்பதை நன்கு அறிந்துள்ள நீங்கள் பொய் பரப்புவது உங்களின் ஈமான் அற்ற நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது. பொய்யர் களுக்கு வைல் என்ற நரகம் இருக்கிறது என்று குர்ஆன் ஓர் அத்தியாயத்தில் அல்லாஹ் மீண்டும் மீண்டும் கூறுவது உங்களுக்கு பலன் தராது.

ஆக 1987க்குப் பிறகு முஸ்லிம் சமுதாயத்தில் முளைத்துள்ள அனைத்து பிரிவுகளும் வழிகேடுகளே, நரகில் சேர்ப்பவையே. உங்கள் ஜாக் ஜமாஅத் உட்பட. உண்மையில் நீங்கள் மரணிக்கும் முன் உங்கள் தவறை உணர்ந்து நேர்வழி வர நாடி னால் இங்கு நாம் எடுத்து எழுதியுள்ள அனைத்து சம்பவங்களையும் மீள் பரிசீலனை செய்து, உண் மையை உணர்ந்து நேர்வழி பெற விரும்பினால் 1987ல் நீங்கள் பிரிந்து சென்ற அந்த ஆரம்ப ஜமா அத்தில் வந்து சேருங்கள். உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் சகோதர சகோதரிகளையும் அழைத்து வாருங்கள். அதற்கு நல்லதொரு வாய்ப்பு மே, 14, ஞாயிறன்று பெரம்பலூர் துறைமங்களம் J.K  மஹாலில் நடைபெற இருக்கும் ஒரு நாள் இஸ்லாமிய கருத்தரங்கம்.

Previous post:

Next post: