குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை நஞ்சென வெறுக்கும் இரகசியம்!

in 2017 மே,புரோகிதம்

 அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்…

ஒட்டுமொத்த மவ்லவிகள், உலமாக்கள், ஷேக்குகள்,
ஸலஃபிகள் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை
நஞ்சென வெறுக்கும் இரகசியம்!

அபூ அப்தில்லாஹ்

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே, மனிதக் கருத்துக்களை முற்றிலுமாக நீக்கி குர்ஆன் ஆதாரபூர்வ மான ஹதீஃத்கள் மட்டுமே எடுத்து வைக்கும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்து கொண்டு நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள். ஒட்டுமொத்த மவ்லவிகளும், அவர்களது பக்தகோடிகளும் ஏன் மக்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொள்வதை மிகமிகக் கடுமையாகத் தடுக்கிறார்கள் என்ற இரகசியத்தை இங்கு அம்பலப்படுத்தியுள் ளோம். இது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. முஸ்லிம்கள் நரக விளிம்பில் நிற்கிறார்கள். உண் மையை அறிந்து சமுதாயம் ஒன்றுபட வழி ஏற்பட லாம். அல்லாஹ் நாடினால்.

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை ஒரே ஜமாஅத்தாக வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகை வர்களாய் இருந்தீர்கள்; உங்கள் இதயங்களுக் கிடையே அன்பை ஏற்படுத்தினான். அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும் நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் விளிம்பின் மீது இருந்தீர்கள்; அதிலிருந்தும் அவன் உங்களைக் காப்பற்றினான்; நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு, அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகின்றான். (3:103)

இன்னும், அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூத ருக்கும் கீழ்ப்படியுங்கள்; நீங்கள் உங்களுக்குள் முரண்படாதீர்கள், அவ்வாறாயின் நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன் பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமை உடையவர்களுடன் இருக்கிறான். (8:46)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; இன்னும், (அல்லாஹ்வின்) தூதருக் கும், உங்க ளில் (நேரிய) அதிகாரம் உடையவர்களுக் கும் கட்டுப்படுங்கள்;. ஏதாவது ஒரு விஷயத்தில் நீங்கள் பிணங்கிக் கொண்டால் (மெய்யாகவே) அல் லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்புபவர் களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் திருப்பி விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகச் சிறந்ததாகவும், அழகான முடிவாகவும் இருக்கும். (4:59)

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; நம்மில் ஒற் றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே! அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையிலிருந்து நெல்லிக்காய்கள் சிதறுவது போல் உலகளாவிய அளவில், முஸ்லிம் நாடுகள் உட்பட அனைத்து முஸ்லிம்களும் தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம், அமைப்பு, ஜமாஅத் எனச் சிதறுண்டு கிடப்பதை மறுக்க முடியுமா? அதன் விளைவை சமீபத்திய உ.பி. தேர்தல் முடிவுகள் படம் பிடித்துக் காட்டின. இன இழிவுக்கு ஆளாக்கப்பட்ட மக்களை விட, எஸ்.சி, எஸ்.டி. என அடிமைப்படுத்தப்பட்ட மக்களை விட இழிவுபடுத் தப்படும் மக்களாக இன்றைய முஸ்லிம்களின் நிலை இருப்பதை சக்சார் கமி­னே உறுதிப்படுத்தி யுள்ளது.

இந்த இழிவு நிலைக்கு என்ன காரணம்? 3:103 குர்ஆனின் கட்டளைக்கு அடிபணிந்து குர்ஆனை ஒரே ஜமாஅத்தாக பற்றிப் பிடித்து அதன் வழிகாட் டல்படி நடக்க வேண்டிய முஸ்லிம்கள் மதகுருமார் களான பல பிரிவுகளின் மவ்லவிகள் பின்னாலும் அரசியல் குருமார்களான அரசியல் தலைவர்கள் பின்னாலும் கண்மூடிச் செல்வதே (தக்லீது) இத் தனைப் பிளவுகளுக்கும், பிரிவு களுக்கும் காரணம் என்பதை மறுக்க முடியுமா? இந்த இழி நிலையைப் போக்க வழி என்ன? இதோ குர்ஆன் கூறுகிறது, படித்துப் பாருங்கள்!

உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக் கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர் களாக்கி வைப்பதாகவும், இன்னும், அவன் அவர் களுக்காகப் பொருந்திக் கொண்ட அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்காக நிச்சயமாக நிலைப் படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; அவர்கள் என்னோடு (எதையும் எவரையும்) இணை வைக்காது அவர்கள் என்னையே வழிபடுவார்கள். (24:55)

எனவே, நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் தாம் மிக்க மேலான வர்கள். (3:139)

இந்த இரண்டு வசனங்களும் என்ன கூறுகின்றன? முஸ்லிம்களாக மட்டும் இருந்தால் போதாது. இறைவனுக்கு எதையும் எவரையும் இணை வைக்காது அவனுக்கு மட்டுமே வழிபடுகிறவர்களாக, முஃமின்களாக இருப்பது அவசியம். (பார்க்க : 3:68, 9:111, 10:103, 22:38, 30:47)

அதாவது அவர்கள் 2:186 இறைக்கட்டளைப்படி மனிதர்களில் எவரையும் எந்த மவ்லவியையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி 7:3 இறை வாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் (53:2-5) மட்டுமே பின்பற்றுவார்கள். மனிதர்களில் எப்படிப்பட்ட அல்லாமாக்கள், முன்னோர்கள், பின்னோர்கள் (ஸலஃபிகள், கலஃபிகள்) எவரது சுய கருத்தையும் மார்க்கமாக எடுத்து நடக்க மாட்டார்கள். அப்படி மனிதக் கருத்துக்களை மார்க்கம் ஆக்கினால் அவர்கள் நிராகரிப்பாளர்கள், அவர்களது நற்செயல் அனைத்தும் பாழ், நாளை நரகை அடைவார்கள். அதுவே அவர்களின் நிரந்தர இருப்பிடம் என்று 18:102-106, 33:36,66-68 இன்னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் எந்த மவ்லவி அல்லாமா, ஸலஃபுகள் என பெருமை பேசுபவர்கள் பின்னாலும் செல்ல மாட்டார்கள்.

நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், அல்லா மாக்கள் என உண்மையின்றி பெருமை பேசும் (பார்க்க : 7:146, 39:72) மதகுருமார்களான மவ்லவி கள் அனைவரும் மக்களை வழிகெடுத்து நரகில் தள் ளும் மனித ஷைத்தான்கள்-தாஃகூத்கள் என்பதை 2:256, 257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 இந்த வச னங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து அறிந் தால் விளங்கிக் கொள்ள முடியும். இந்த இடங்களில் எல்லாம் மவ்லவிகள் ஷைத்தான் என்றே தாஃகூத் பதத்திற்கு மொழி பெயர்த்து மக்களைத் திசைத் திருப்பியுள்ளார்கள். அந்த இடங்களில் ஜின் இன ஷைத்தான் என்று சொல்வதால் அர்த்தம் சரியாக இருக்கிறதா? மனித இன ஷைத்தான் என்று சொல் வதால் பொருள் சரியாக இருக்கிறதா? என்பதைப் படிப்பவர்கள் சரியாக விளங்கிக் கொள்ள முடியும். 39:17 குர்ஆன் வசனம் கூறும் தாஃகூத் என்ற பதம் மற்றவர்களின் எழுத்தைப் படிக்க விடாமலும், பேச்சை கேட்கவிடாமலும் தடுப்பவர்கள், மவ்லவி களான மனித ஷைத்தான்களா? ஜின் இன ஷைத் தானா? சிந்தியுங்கள்! மற்றவர்களின் எழுத்தைப் படிக்க விடாமலும், பேச்சைக் கேட்கவிடாமலும் அவர்களின் கூட்டங்களுக்குப் போகவிடாமலும் தடுப்பவர்கள் யார்? இம்மவ்லவிகள் தானே? யார் இம்மவ்லவிகளின் பேச்சை வேதவாக்காகக் கொண்டு மற்றவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைத் தவிர்க்கிறார்களோ, அவர்கள் 9:31 இறைவாக்குப்படி அம்மவ்லவிகளை ரப்பாகக் கொண்டு அவர்களை வணங்குகிறார்கள். இது கொடிய ஷிர்க்கு. நாளை நரகில் கொண்டு சேர்க்கும்.

அதற்கு மாறாக தாஃகூத்களான இம்மவ்லவிகள் தடுப்பதைக் கண்டு கொள்ளாமல், பிறரது எழுத்துக்களைப் படித்து, கூட்டங்களில் கலந்து கொண்டு பிறரது கருத்துக்களையும் கேட்டு அவற்றில் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை எடுத்து நடப்பவர்களே அல்லாஹ்வால் சிறப்பித்துச் சொல்லப்படுகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ்வின் நன்மாராயம் கிடைக்கிறது, அவர்களே உண்மையான அறிஞர் கள், அல்லாஹ் 6:153 இறைவாக்கில் கூறும் ஒரே நேர் வழி நடப்பவர்கள். இந்த உண்மைகளையே 39:17, 18 குர்ஆன் வசனங்கள் நெற்றிப்பொட்டில் அடிப்

பது போல் எடுத்துக் கூறுகின்றன. அவற்றைப் படித்துப் பாருங்கள்.

மேலும் இம்மவ்லவிகள் அந்நஜாத்தைப் படிப் பதை விட்டும் எமது கூட்டங்களுக்கு மக்கள் வந்து கலந்து கொள்வதை விட்டும் தடுப்பதற்கு இம் மவ்லவிகள் கூறும் காரணங்களே அவர்கள் அடிமுட்டாள்கள், அபூ ஜஹீலின் நேரடி வாரிசுகள் என்ப தையே உறுதிப்படுத்துகின்றன. அது என்ன காரணம்?

அபூ அப்தில்லாஹ் மவ்லவி இல்லை. அவருக்கு மார்க்கம் சொல்ல தகுதி இல்லை. அவரது கருத்துக்கள் ஏற்கத்தக்கவை அல்ல. அதனால் அந்நஜாத்தைப் படிக்காதீர்கள். அவரது கூட்டங்களுக்குப் போகாதீர்கள் என்று தடுப்பதே அவர்களின் அடிமுட்டால்த்தனமான வாதமாகும். நபி(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் தாருந்நத்வா அரபு மதர ஸாவில் ஓதிப் பட்டம் பெற்றா மார்க்கப் பணி புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்களது நிலையையும், தோழர்களின் நிலையையும் 62:2, 7:157,158 இறை வாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுவதை அறியாத மூடர்களா இம்மவ்லவிகள்? தாருந் நத்வா ஆலிம்களை ஜாஹில்கள்-முட்டாள் கள் என்றும் அதன் தலைவன் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை என்று குறைஷ்களால் வான ளாவப் புகழ்ந்து போற்றப்பட்ட வனை அபூ ஜஹீல்-முட்டாள்களின் தந்தை என்றும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் தமது உம்மத்துக்கு அடையாளம் காட்டியுள்ளதை படித்து விளங்காத இம்மவ்லவிகள் வடிகட்டின ஜாஹில்கள்-முட்டாள்களா இல்லையா?

அரபு மொழி இலக்கணம், இலக்கியம், கவிதை என அனைத்திலும் அன்று கரை கண்டவர்கள் தாருந் நத்வா உலமாக்கள். அதனால்தான் அகந்தையுடன் தங்களை அரபிகள் என்றும் மற்றவர்களை அஜமி கள் என்றும் ஆணவம் பேசினார்கள். படித்துப் பட்டம் பெற்ற அறிஞர்கள், மவ்லவிகள்தான் மார்க்கப் பணி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், அன்று அல்லாஹ் தாருந்நத்வா உலமாக்களை அல்லவா மார்க்கப் பணிக்குத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அபுல்ஹிக்கமை அல்லவா அல்லாஹ் தனது தூதராகத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். அவாமான முஹம்மது(ஸல்) அவர்களை ஏன் நபியா கத் தேர்ந்தெடுத்தான்? சிந்திக்க வேண்டாமா? அப்படி முறையாகச் சிந்தித்ததால், படித்துப் பட்டம் பெறுவது கொண்டு உண்மையின்றி வீண் பெருமை பேசும் மவ்லவிகள் மார்க்கப் பணிக்கு முற்றிலும் தகுதியற்றவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி யாகப் புலப்படும். (பார்க்க: 7:146) பெருமை இல் லாத அவாம்களே மார்க்கப் பணிக்கு மிகமிகத் தகுதியானவர்கள் என்பது தெளிவாக விளங்கும்.

அபூ அப்தில்லாஹ் மவ்லவி இல்லை, ஆதலால் அவர் சொல்லும் கருத்து ஒருபோதும் மார்க்கம் ஆகாது என அப்பட்டமான பொய்யைக் கூறி அவர்களது பக்தர்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறார்களே, 1984லிலிருந்து இன்று வரை, இந்த மவ்லவி களைப் போல் எமது கையிலிருந்தும், மடியிலிருந் தும் போட்டு 33:36 இறைவாக்கை நிராகரித்து

குஃப்ரிலாகி எழுதி இருக்கிறோமா? பேசி இருக்கி றோமா? இம்மவ்லவிகளால் புள்ளி விபரத்துடன் காட்ட முடியுமா? குர்ஆன் வசனங்களை எடுத்து வைக்கிறோம். ஆதாரபூர்வமான ஹதீஃத்களை எடுத்து வைக்கிறோம். அத்துடன் எமது வேலை முடிந்தது. மக்களுக்கு குர்ஆனுடனும், ஹதீஃதுடனும் தொடர்பை ஏற்படுத்தி விட்டோம். இப்போது மக்களாச்சு, அல்லாஹ்வாச்சு. ஆக இவ்வாறு கூறி மவ்லவிகள் குர்ஆனையே நிராகரிக்கிறார்கள்.

இப்போது இந்த மவ்லவிகள் எமது கருத்துக்கள் என்று சொல்லி மக்களை ஏமாற்றுவது கடைந்தெடுத்த பொய் தானே! இப்படிச் சொல்லி முஸ்லிம்களை குர்ஆனையும், ஹதீஃத்களையும் நிராகரிக்கச் செய்து குஃப்ரிலாகி நாளை நரகை அடையச் செய்கிறார்கள் என்பதுதானே உண்மை. உண்மையில் இந்த மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃத் போத னைகளை வெறுக்கிறார்கள் என்பதுதானே உண்மை. (பார்க்க: 17:41, 45-47,89, 22:72, 25:60, 39:45)

1984லிலிருந்து இன்று 2017 வரை கடந்த 34 வருடங்களில் எமது பேச்சிலிருந்து, எழுத்திலிருந்து குர் ஆன், ஹதீஃத் கூறும் நேரடிக் கருத்துக்கு முரணாக நாம் வெளிப்படுத்தியதாக ஒரேயொரு கருத்தையாவது இந்த மவ்லவிகளால் காட்ட முடியுமா? காட்டி இருக்கிறார்களா? இல்லையே!

அதற்கு மாறாக அபூ அப்தில்லாஹ் முனனோர் களை மதிப்பதில்லை. பெரியார்கள், சாதாத்துகள், அகாபிரீன்கள், இமாம்கள், அவுலியாக்களை மதிப் பதில்லை. அவர்களைத் திட்டுகிறார், அவர் வஹ்ஹாபி, நஜாத் எனப் பூச்சாண்டிக் காட்டி இம் மவ்லவிகளை முழுமையாக நம்பி அவர்கள் பின் னால் கண்மூடிச் செல்லும் அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள். (பார்க்க : 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

இந்த அவர்களின் வாக்குமூலங்களே அவர்கள் வடிகட்டின மூடர்கள் என்பதை உறுதிப்படுத்த வில்லையா? 2:186 இறைவாக்கு என்ன கூறுகிறது? அல்லாஹ்வை மட்டுமே நம்பி அவனிடம் மட்டுமே கேட்க வேண்டும். மனிதர்களில் எவரையும் நம்பி அவர்களைப் பின்பற்றக் கூடாது என்று கூறவில்லையா? அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும், ஆதார்பூர்வமான ஹதீஃதையும் மட்டுமே பின் பற்ற வேண்டும். மனிதர்களில் எவரையும் நம்பிப் பின்பற்றக் கூடாது. உங்களில் சொற்பமானவர்களே இதன்படி விளங்கி நடக்கிறீர்கள் என்று 7:3 இறை வாக்குத் தெளிவாகக் கூறவில்லையா? இந்த எச்சரிக் கைகளைக் கண்டு சொள்ளாமல் அல்லாஹ்வின் அடி யார்களான மனிதர்களைத் தங்களின் பாதுகாவலர் களாக, வழிகாட்டிகளாக நம்பி அவர்களைப் பின் பற்றுகிறவர்கள் காஃபிர்கள், அவர்களுக்காகவே நரகம் இருக்கிறது. அவர்களின் அமல்கள் அனைத்தும் பாழ். நிறுக்கப்படமாட்டாது. அவர்களுக்கு நரகமே நிரந்தரம் என்று 18:102-106 குர்ஆன் வசனங்கள் கூறவில்லையா?

முன்சென்ற நல்லடியார்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்படாது. உங்களைப் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்கப்படும் என்று 2:134, 141 குர்ஆன் வசனங்கள் கூறவில்லையா? இத்தனை குர்ஆன் வச னங்களை நிராகரித்து குஃப்ரிலாகி முன்னோர் களைத் தூக்கிப் பிடிக்கும் இம்மவ்லவிகள் நாளை நரகையடைவார்களா? சுவர்க்கம் செல்வார்களா? அவர்களே நரகை அடைவதை உறுதிப்படுத்தவும் செய்கிறார்கள்; எப்படி என்று பாருங்கள்! நாளை நரகை நிரப்ப இருக்கும் பெரும்பான்மை காஃபிர் களே முன்னோர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள் என எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

வஹ்ஹாபி என்று பூச்சாண்டிக் காட்டி அப்பாவி மக்களை வஞ்சிக்கிறார்கள். அரபிப் பண்டிதர்கள் என்று பெருமை பேசுகிறவர்களுக்கு வஹ்ஹாபி என்றால் என்ன பொருள் என்று தெரியவில்லை. வஹ்ஹாப் என்றால் அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று. (பார்க்க : 3:8, 38:9,35) அப்படியானால் வஹ்ஹாபி என்றால் அல்லாஹ்வைச் சார்ந்தவன்-சுவர்க்கவாதி என்பது பொருள். அப்படியானால் இம்மவ்லவிகள் வஹ்ஹாபி இல்லை ஷைத்தானி, ஷைத்தானைச் சேர்ந்தவன்-நரகவாதிகள் என இம் மவ்லவிகளே வாக்குமூலம் தருகிறார்கள். அடுத்து நஜாத் என பூச்சாண்டி காட்டி அப்பாவி முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறார்கள். 40:41 குர்ஆன் வசனத்தை நேரடியாகப் படிப்பவர்கள், நரகிலிருந்து விடுதலை பெறுவதையே குறிக்கிறது. இம்மவ்லவிகள் நரகிலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டாம் நாங்கள் நரகிலேயே இருந்து விடுகிறோம் என்று ஒப்புதல் அளித்து நஜாத் மீது வெறுப்பைக் கக்கு கிறார்கள்.

இவை மட்டுமா? கடந்த 34 வருடங்களாக மவ் லவி அல்லாத நாம் அவர்களின் இதழ்களிலும், பேச்சு களிலும் குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் முரண் பட்டக் கருத்துக்களை குர்ஆன், ஹதீஃத் ஆதாரங் கள் கொண்டே அம்பலப்படுத்தி வருகிறோம. அவற்றிற்கு குர்ஆன், ஹதீஃத் மட்டுமே காட்டி நாம் எடுத்து எழுதியவை, பேசியவை தவறு என்று நிரூபிக்க அவர்களால் முடியவில்லையே! இம் மவ்லவிகளின் குர்ஆன், ஹதீஃத் மொழி பெயர்ப்புகளி லுள்ள பெரும் தவறுகளைத் தொடர்ந்து தெளிவாக, நேரடியாகச் சுட்டிக்காட்டி அந்நஜாத்தில் எழுதி வருகிறோம். அவற்றை உரிய குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கொண்டு மறுக்கும் யோக்கியதை இந்த மவ்லவிகளுக்கு இல்லவே இல்லை.

அதற்கு மாறாக முன்னோர்கள், சாதாத்துகள், அகாபிரீன்கள், ஸலஃபுகள், அவுலியாக்கள், நாதாக் கள் பெயரால் அவர்களின் புரோகித முன்னோர்கள் இட்டுக்கட்டியுள்ள கட்டுக்கதைகளைப் பெரிய ஆதாரமாகக் காட்டித் தங்களின் நரகிற்கு இட்டுச் செல்லும் வழிகெட்டக் கொள்கையை அப்பாவி முஸ்லிம்களிடம் திணிக்க முற்படுகிறார்கள்.   (பார்க்க : 31:6)

ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்றகோணல் வழிகளான சு.ஜ, தர்கா, தரீக்கா, மத்ஹபு, இயக்கம், ஜமாஅத் என எண்ணற்றப் பிரிவுகளாக்கிக் கொடிய ஹராமான வழிகளில் வயிறு வளர்க்கும் ஒட்டு மொத்த மவ்லவிகளும் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகப் புகுந்து கொடிய ´ஷிர்க்கில் மூழ்கி இருக்கிறார் கள். அவர்கள் செய்யும் இந்த இணை வைத்தலை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். (பார்க்க: 4:48,116)

அல்லாஹ் குர்ஆனை மனிதர்களுக்கென்றே தெள்ளத் தெளிவாக எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நேரடியாக விளக்கியுள்ளதாகவும் சிந்திக்க மாட்டீர்களா? ஆராயமாட்டீர்களா? புரிந்து கொள்ள மாட்டீர்களா? விளங்கிக் கொள்ள மாட்டீர்களா? என எண்ணற்ற இடங்களில் குர்ஆனிலேயே கூறி இருப்பதை 2:44,73,76,164, 170,242, 3:65,118, 5:58,103, 6:32,151, 7:169, 8:22, 10:16, 42,100, 11:51, 12:2,109, 13:4, 16:1268, 21:67, 22:46, 23:80, 24:61, 25:44, 26:28, 28:60, 29:35,43,63, 30:24,28, 36:62,68, 37:138, 39:43, 40:67, 43:3, 45:5, 49:4, 57:17, 59:14, 67:10 ஆக இத்தனை இடங்களில் பலவிதமாகக் கூறியுள்ளதைப் பார்க்கலாம்.

குறிப்பாக 54:17,22,32,40 ஆகிய நான்கு இடங் களில் இந்த குர்ஆனைத் தெளிவாக விளங்குவதற்கு எளிதாக்கித் தந்திருக்கிறோம். எனவே குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கி அதன்படி நடப்பவர்கள் உண்டா? என்று அல்லாஹ் மடக்கி மடக்கிக் கேட்கிறான். ஆக ஆதம் (அலை) அவர்களின் சந்ததிகளான ஒட்டுமொத்த மக்களுக்கும் அருளப்பட்ட குர்ஆனை மனித குலத்தினர் அனைவரும் எளிதாக விளங்க முடியும் என்று அல்லாஹ் நேரடியாகக் கூறி இருப்பதை மறுத்து நிராகரித்து, குர்ஆனை அரபி மொழி கற்ற மவ்லவிகள் மட்டுமே விளங்க முடியும். அது அவர்களின் தாய்மொழியில் கொடுக்கப்பட் டாலும் குர்ஆனை அவாம்கள் விளங்கவே முடியாது என்று கூறும் இம்மவ்லவிகள் எப்படிப்பட்ட இறை நிராகரிப்பாளர்களாக இருக்கிறார்கள். அயோக்கியர்களாக அநியாயக்காரர்களாக, கடைந்தெடுத்த பொய்யர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்த வசனங்கள் அனைத்தையும் சிரமம் பாராமல் நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் விளங்க முடியும்.

இந்த மவ்லவிகள் செய்யும் முழு மனித சமு தாயத்திற்கும் அல்லாஹ் மன்னிக்காத மாபெரும் துரோகம் என்ன தெரியுமா? மனித சமுதாயத்திற்கே வாழ்க்கை நெறியைத் தெளிவாக விளக்கும் இறுதி நெறிநூல் குர்ஆன் என்று பல வசனங்களில் தெளிவாகக் கூறியுள்ளான் அல்லாஹ். எழுதப் படிக் கத் தெரியாத பாமரனும் அவனது தாய் மொழியில் குர்ஆன் படித்துக் காட்டப்பட்டால் மிக எளிதாக விளங்க முடியும் என்று பல குர்ஆன் வசனங்கள் கூறு கின்றன. குர்ஆன் கூறும் இத்தனை வசனங்களையும் இந்த மவ்லவிகள் நிராகரித்து குஃப்ரிலாகி, குர்ஆன் முஸ்லிம்களின் வேதம். மாற்று மதத்தினருக்கு குர் ஆனைக் கொடுப்பது ஹராம்-கூடாது. முஸ்லிம்

களும் தங்கள் தாய்மொழியில் தரப்பட்ட குர்ஆனை விளங்க முடியாது. மவ்லவிகள் தங்கள் கையிலிருந்து, மடியிலிருந்து மேலதிகமாகப் போட்டுக் கொடுப்பதையே வேதவாக்காகக் கொண்டு அதன் படி நடக்க வேண்டும் என்று கடந்த 1000 வருடங்களாகக் கூறி வருவதாகும்.

அதன் விளைவு மாற்று மதங்களிலுள்ள சிறந்த சுய சிந்தனையாளர்களும், குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கும் வாய்ப்பைப் பெறவில்லை. முஸ்லிம்களிடையே இந்த மூட முல்லாக்கள் புகுத்தியுள்ள மூட நம்பிக்கைகள், மூடச்சடங்கு சம்பிர தாயங்கள், கபுரு வழிபாடு, ஷிஆ, சுன்னத் ஜமாஅத், ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி, ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி, பல பல இயக்கப் பிரிவுகள் அனைத் தையும் நேரடியாகப் பார்த்து முஸ்லிம் மதமும் ஒரு வழிகேடே, இதர மதங்களை போல் அபின் போல் போதையூட்டுவதே என தூய இஸ்லாமிய மார்க்கத்தையும் வழிகெட்ட இதர மதங்களோடு சேர்த்து இறைவனையும், மறுமையையும் மறுத்து நாத்திகச் சிந்தனையை மக்களிடையே வளர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஆக ஒட்டுமொத்த மனித குலத்தினரும் அழி வின் அதலபாதாளத்தில், நரக விளிம்பில் நிற்பதற்கு இம் மவ்லவிகளே முழு முதல் காரணம்.

மறுமை நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும். மேலும், அறிவில்லாமல் இவர் கள் எவர்களை வழிகெடுத் தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்), அறிந்து கொள் ளுங்கள்! இவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது. (16:25)

இந்த இறைவாக்குக் கூறுவது போல் ஒட்டு மொத்த மனித குலத்தினரின் பாவச் சுமையையும், இவர்களின் பாவச்சுமையோடு சேர்த்தே சுமக்க இருக்கிறார்கள் இம்மவ்லவிகள்! ஆயினும்,

(எவ்வித) நியாயமுமின்றி, பூமியில் பெருமை யடிப்பவர்களை, என் அத்தாட்சிகளை (விளங்கிக் கொள்வதை) விட்டும் திருப்பிவிடுவேன்; அவர்கள் அத்தாட்சிகள் யாவையும் கண்ட போதிலும் அவற்றை நம்பமாட்டார்கள்; அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை (தங்களுக்குரிய) வழியாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்; ஆனால், தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்)வழியாக எடுத்துக் கொள்வார்கள்; அது (ஏனெனில்), அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார் கள்; இன்னும், அவற்றை விட்டும் அலட்சியமானவர்களாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலாகும். (7:146)

மவ்லவிகளின் உண்மை நிலை இதுதான்!

இந்த இறைவாக்குக் கூறுவது போல் இம்மவ்லவிகளின் வீண் பெருமை காரணமாக அல்லாஹ்வே இம்மவ்லவிகளை மேலே கூறியுள்ள குர்ஆன் வசனங்களை விளங்கவிடாமல் தடுத்து விடு கின்றான். வழிகேடுகளையே மக்களிடம் நேர்வழி யாகப் போதிப்பார்கள். நாளை பெரும் நரகில் விழுந்து அவர்களை நம்பி அவர்கள் பின்னால் சென்ற பக்தகோடிகளிடமே கடுமையானத் திட்டு களையும் சபித்தலையும் எதிர்நோக்கி இருக்கிறார் கள் (பார்க்க : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:53-64, 40:47-50, 41:29, 43:36-45) இவற்றில் 34:31-3, 40:47,48 வசனங்கள் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையே குறிப்பிடுகின்றன.

இந்த அனைத்து மவ்லவிகளை விட ஆகக் கொடிய ´ர்க்கில் மூழ்கி இருப்பவன் பொய்யன் மவ்லவி பீ.ஜையே. குர்ஆன், ஹதீஃத் மட்டுமே ஒரே நேர்வழி, ஒரே மார்க்கம் என்று சரிகண்டு, ஒப்புக் கொண்டு வழிகேட்டிலி ருந்து கரையேறி வந்த முஸ்லிம் ஆண், பெண்களை மீண் டும் தன்னையே 9:31 குர்ஆன் வசனம் கூறுவது போல் ரப்பாகக் கொண்டு வழிபட வைத்துள்ளான். 42:21 இறை வாக்குக் கூறுவது போல் அல்லாஹ் விதிக்காததை எல்லாம் விதித்து பொய்யன் பீ.ஜை. அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாக முற்படுகிறான். 49:16 இறை வாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறான்.

பொய்யன் பீ.ஜையின் இன்றைய இழி நிலையை அல்குர்ஆன் 7:175-179 மற்றும் 27:14 வசனங்களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளலாம். ஆம்! 1985ல் எமது பல்சமய சிந்தனை நூலைப் படித்துப் பார்த்து குர்ஆன், ஹதீஃத் காட்டும் நேர் வழிக்கு வந்து அந்நஜாத்தில் 15 மாதங்கள் ஆசிரியராக இருந்து நேர்வழியை, புரோகித மற்ற தூய இஸ்லாமிய மார்க்கத்தை தெளிவாக எழுதியவன்தான், உலக ஆசைகளில் சிக்கித் தடம் புரண்டு போனவன்தான். இந்த உண்மையை 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரையுள்ள 15 மாத அந்நஜாத் இதழ்களைப் படிப்பவர்கள் அறிய முடியும். அது மட்டுமா? அந்நஜாத் இதழ்களைப் படிக்க விடாமலும் எமது கூட்டங்களுக்கு வரவிடாமலும் தடுப்பதில் மற்றப் பிரிவுகளின் மவ்லவிகளை விட மிகக் கடுமையாக எதிர்ப்பவனும் பொய்யன் பீ.ஜையே.

பொய்யன் பீ.ஜை. 1986-87களில் அந்நஜாத் ஆசிரியராக எம்மோடு இருந்த போது அன்றைய ரஹ்மத் ஆசிரியருக்கு எழுதிய மறுப்பு அந்நஜாத் ஜன.-பிப். 1987 இதழ் பக்கம் 101-ல் இடம் பெற்றுள்ளது. அது வருமாறு.

“”நஜாத் வாட்சு ரிப்பேரர் சொன்ன அர்த்தங்கள் சரியில்லையாம்! எந்த அர்த்தம் சரியில்லை என்று புள்ளி விபரத்துடன் விளக்கம் தருவாரா? வாட்சு ரிப்பேர் செய்து ஹலாலான முறையில் சாப்பிடக் கூடியவர் மார்க்கத்தைச் சொல்லக் கூடாதா? மார்க்கம் என்ன குடும்பச் சொத்தா? மக்களிடம் யாசகம் பெற்று தீனை அடகு வைப்பவர்கள் தான் மார்க்கத்தைச் சொல்ல வேண்டுமா? இவர்களைக் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு முஸ்லிம் சமுதாயத் தினுடையது என்கிறார் (ரஹ்மத் ஆசிரியர்)

மக்களைத் தூண்டி விடுகிற இவர் போன்றவர் களின் எழுத்துக்களைக் கவனிக்க வேண்டியது ரகசிய போலிசாரின் பொறுப்பு என்று சொல்லி வைக்கிறோம் என்று பொய்யன் பீ.ஜை. அன்று எழுதினார். ஆனால் பாவம்! பீ.ஜை. அன்றைய ரஹ்மத் ஆசிரியரின் வழிகெட்ட நிலைக்கு இன்று ஆளாகி இருப்பது பொய்யன் பீ.ஜை. தான். சு.ஜ. மவ்லவிகளை விட பெரும் வழிகேட்டில், கொடிய ´ஷிர்க்கில் மூழ்கி இருக்கிறான் என்பதை அவனே உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதில் ஐயம் உண்டா?

2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 இறைக்கட்ட ளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து மார்க்கத்தில் புகுந்துள்ள மனிதக் கருத்துக்களை முற்றிலும் நீக்கி, குர்ஆன் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கும் எங்களின் நிகழ்ச்சிகளுக்கு, கூட்டங்களுக்கு மக்களை வர விடாமல் தடுக்கும் மவ்லவிகளை, குறிப்பாகப் பொய்யன் பீ.ஜையை மக்களுக்கு அடையாளம் காட்டும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம். அதனால்தான் இந்த நெடிய விளக்கம்.

இங்கு தரப்பட்டுள்ளவை அனைத்தும் குர்ஆன் வசனங்கள் மற்றும் குர்ஆனின் அத்தியாய எண்கள் வசன எண்கள். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக குர்ஆனிலேயே பார்த்து குர்ஆன் கூறுவதை நேரடியாக அறிந்து, புரிந்து செயல்பட அதன்படி நடக்க வலியுறுத்துகிறோம். இதற்காக எம்மீது ஆத்திரப்படும் மவ்லவிகள் உண்மையில் எம்மீது ஆத்திரப்படவில்லை. அல்லாஹ் மீதே ஆத்திரப்படு கிறார்கள். எதுபோல் என்றால் அன்று நபி(ஸல்) அவர்கள் இந்த வசனங்களை மக்கள் மன்றத்தில் வைத்தபோது நபி(ஸல்) அவர்கள் மீது ஆத்திரப் படுவதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ்வின் மீதே ஆத்திரப்பட்டு, நரகிற்கு இரையானார்களோ அந்த தாருந்நத்வா நாற்றக் குட்டை உலமாக்கள் போல் இன்றைய அரபி மதரஸா மவ்லவிகளும் எம்மீது ஆத்திரப்படுவதாக எண்ணிக் கொண்டு அல்லாஹ் மீதே ஆத்திரப்படுகிறார்கள். இதன் பலனை நாளை நரகையடைந்து அனுபவிக்கத்தான் போகிறார்கள். (பார்க்க : 33:66-68, 34:31-33, 40:47-50)

அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே, சகோதரர்களே, சகோதரிகளே இந்த மவ்லவிகளின் மாய, வசீகர, உடும்புப் பிடியில் சிக்கி, நேரடி குர்ஆன் ஹதீஃத் போதனைகளைக் கேட்கவிடாமல் தடுக்கும் இம்மவ்லவி களை வணங்காமல் (பார்க்க : 39:17,18) 14.05.2017 ஞாயிறு அன்று நடை பெறும் இஸ்லாமிய கருத்தரங்கில் அவசியம் கலந்து கொள்வதன் மூலம் எம்மையோ மனிதர்களில் எவரையுமோ நம்பாமல், இறைவனை மட்டுமே நம்பி, நேர்வழி (6:153) நடந்து நாளை சுவர்க்கம் செல்ல முன்வாருங்கள். அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: